Monday, 7 December 2015

வெள்ள நிவாரண (களப்) பணிகளில் கம்யூனிஸ்ட்கள்..!
👫👫👫 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் இன்று (03.12.15) ரத்து! வெள்ள நிவாரண பணியில் களத்தில் இறங்கிட..! 

இதோ... ஒரு களப்பணி..! 

திருவள்ளூர் மதுராந்தகத்தில் உயிர் காக்கும் உணவு தயாரிப்பு... 

சேலம் சிஐடியு சார்பில் உடல் காக்கும் உடை அனுப்பி வைப்பு...! 

ஆதரவு கரங்கள் விரியட்டும்! நிவாரண பணிகள் வெள்ளமாக பாயட்டும்!

-----\\\\

3 மணி நேரத்தில் ரூ2 லட்சம் வெள்ள நிவாரணம்!
☝☝☝☝ 
சேலம் மாவட்டம் நங்கவள்ளி சிபிஐஎம் சார்பில் ரூ48,275 மற்றும் உணவு பொருட்கள், டிரஸ் (புதிய புடவைகள் 141; ஜீன்ஸ் பேண்ட் 90; சுடிதார், சர்ட், வேஷ்டி மற்றும்  பிஸ்கட் 50 கிலோ, அரிசி 100 கிலோ உள்ளிட்டு) சுமார் ரூ 1.5 லட்சம்   மதிப்பில் சேகரித்து இன்று (5.11.15) சென்னை அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் மாவட்டக்குழுச் செயலாளர் பி.தங்கவேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினரும், ஒன்றிய செயலாளருமான எஸ்பி.தங்கவேல், மாவட்டக்குழு உறுப்பினரும், ஒன்றிய சேர்மேனுமான பழ.ஜீவாணந்தம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.கதிர்வேல், ஆர்.சுப்ரமணி, ஜி.சுந்தர்ராஜன், பொன்.பீட்டர் கே.நிருபன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

3 மணிநேரத்தில் நிதியும், பொருட்களுமாக சுமார் ரூ2 லட்சம் சேகரிப்பட்டது;  அவற்றை ஒன்றிய சேர்மேன் பெயரில் ஃபுரபஸ்னல் கூரியர் இலவசமாக எடுத்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சேகரிக்கப்பட்ட நிதி மற்றும் பொருட்களை உடனே சென்னை அனுப்பி வைக்கப்பட்டது!

-----\\\\\

இதிலே சிறு திருத்தம் ... இந்த பதிவுக்குப் பின் சுமார் ரூ50,000 மதிப்பில் ரெடிமேட் டிரஸ் சிறுவர்களுக்கு வந்தது; அதையும் சேர்த்து தற்போது (இரவு 10 மணி) பொருட்களாக ரூ2.25 லட்சம்; பணமாக ரூ50,000 என ரூ2.75 வசூல்! நங்கவள்ளி ஒன்றியக்குழுக்கு பாராட்டுக்கள்!

-----\\\\

கடலூருக்கு நிவாரண பொருட்கள்... 
சேலம் மாவட்டம் சார்பில் 2வது தவணையாக 
CPIM, AIDWA, DYFI சார்பில் பயணம்!
☝👊☝👊☝ 
சேலம் மாநகரம் வடக்கு  மற்றும் ஓமலூர் வட்டக்குழுக்களின் CPIM, AIDWA, DYFI சார்பில் ரூ2 லட்சம் மதிப்பில் உணவு பொருட்கள் (சப்பாத்தி, பிஸ்கட்) துணி வகைகள், குடிநீர், மருந்து போன்ற 2 வாகணங்களில் கடலூர் வெள்ள பாதிப்பு மக்களுக்கு 2வது தவணையாக செல்கிறது. 

சிபிஐஎம் மாவட்டக்குழு உறுப்பினரும், DYFI சேலம் மாவட்ட செயலாளருமான என்.பிரவீன்குமார், DYFI மாவட்ட பொருளாளரும், சிபிஐஎம் சேலம் வடக்கு மாநகரக்குழு உறுப்பினருமான வி.வெங்கடேஷ், துணை செயலாளர் சசிக்குமார், மாநகரக்குழு உறுப்பினர் சக்திவேல், பிரகாசம், சேகர், வேலன், மேகராஜ், செந்தில், சுரேஷ், சுசைமணி உள்ளிட்டோர் உடன் செல்கின்றனர்.  

அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி 06.12.15 மதியம் 2.30 மணி அளவில்  சிபிஐஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடந்தது. 

இதில் மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு, மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜோதிலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குழந்தைவேல், மாநகர வடக்கு செயலாளர் எம்.முருகேசன், வடக்கு மாநகரக்குழு உறுப்பினர்கள் செந்தில், ராஜேஷ் மற்றும்  மாநகர வடக்கு தலைவர் சதீஷ்குமார், ஆர்.வெங்கடேஷ், மார்க்ஸ் என்கிற அபுதாகீர் உள்ளிட்டு ஏராளமானவர் பங்கேற்றனர்.

-----\\\\\

"நீளும் உதவிக்கரங்கள்!" சேலம் மாவட்டத்தில்... 

வெள்ள நிவாரண உதவியாக கடலூர் மற்றும் சென்னைக்கு...
இன்றுவரை 6.12.15... (2.30pm)

சிபிஐஎம் நங்கவள்ளி சென்னைக்கு நிதி:ரூ49,000; பொருள்: ரூ2.5லட்சம்.  

ஓமலூர் சென்னைக்கு நிதிரூ6000; கடலூருக்கு பொருள்: ரூ27000. 

சேலம் மாநகரம் வடக்கு CPIM, DYFI, AIDWA ரூ2 லட்சம்; DYFI DC ரூ2 லட்சம் கடலூர்... 

CITU DC ரூ2 லட்சம் கடலூர்... 

என சுமார் ரூ10லட்சம் நிதி-பொருள் அனுப்பப்பட்டு உள்ளது!

"உதவிகரங்கள் இன்னும் தொடர்கின்றன...!

-----\\\\\

பெரும்பாலும் ரேசன் அரிசியே இன்றும்! நம்புவீர்களா?

இன்று 29.11.15 PTTV இல் மாலை 7.30-8.30 உரக்கச் சொல்லுங்கள் நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது கொஞ்சம்! 

அப்பொழுது இரண்டு விசியம்... 
1. மக்கள் பணம் பெற்று ஓட்டு போடக்கூடாது என்று விஜயதரணி சொன்னதும், பத்திரிக்கையாளர் மணி சீறினார் பாருங்கள்... "இப்படி சொல்லுவது அய்யோக்கியதனம்" என்றார்; இந்த வார்த்தையை நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை! 

விஜயதரணி பாவம் சமாளித்து, பயந்து மாற்றி பேசி, இதொன்டா வம்பா போச்சி; இவரு இப்படி பேசறாரு" ன்னு ஒதுங்கிவிட்டார்! மக்களும் பணம் வாங்கக்கூடாது என்பதையே நானும் கூறுகிறேன்; 

என் வீட்டில் ஒரு உள்ளாட்சி  தேர்தலில், "அண்ண வாங்க மாட்டாரு, அக்கா வாங்கிக்கிங்க" என்று ஓட்டுக்கு ரூ100வீதம், ரூ200; அவரின் சின்னமான தெங்கன்னு ரெண்டும் கொடுத்தார்கள்; "வாங்கினா உனக்கு ஓட்டு இல்ல; வாங்காம இருந்தா உனக்கு ஓட்டு உண்டு; எப்படி சவரியம்?" என்றேன்; திரும்பி பார்க்காமல் போய்விட்டார் அவர்! இத்தனைக்கும் எங்கள் உணவு பெரும்பாலும் ரேசன் அரிசியே இன்றும்! நம்புவீர்களா?

2. அடுத்து ஸ்டாலின் பிரச்சாரத்தை ஜெயராஜ் உலக சாதனைபோல் உல்டா விட்டார்! 5 முறை முதல்வராக இருந்த, 93 வயது அனுபவமுள்ள தலைவர் உள்ள கட்சிக்கு... இப்படி போய்தான், 2லட்சம்  மனுக்களை பெற்றுதான், மக்கள் பிரச்சனை தெரிந்து வருகிறோம் என்பதைவிட வெட்கக்கேடு வேறெதுவுமில்லை! இதிலே பெருமைபீத்த ஒன்றுமில்லை! 

பாவம் திமுக..! பரிதாபமே மிஞ்சுகிறது..! கார்பரேட் விளம்பரக் கம்பெனியை நம்பி, தம்பிகளை நம்பாமல், தளபதியின் நாடகதனப் பிரச்சாரத்தை நம்புவதைப் பார்த்தால்..!

----\\\\

உள்நோக்கம் ஒளிந்திருக்கிறது

பொதுசிவில் சட்டம் தேவை என்பதில் உள்நோக்கம் ஒளிந்திருக்கிறது; பாஜக வாயில் இது வருவதால்தான் சந்தேகம் வலுக்கிறது! 

370 சட்டப்பிரிவுகூட ஜம்மு-காஷ்மீர் மட்டுமே பொருந்தும்; எதோ நாடு முழுவதும் அமலாக்கப்படுவதுபோல் பாஜக விஷம பிரச்சாரம் செய்கிறது! 

மதங்களுக்குள் நெறிபடுத்திட அந்தந்த மதங்களுக்குள் இருக்கும் மதச்சட்டங்கள் அரசின் பொதுச்சட்டங்களாக்கிடுவதுதான் பிரச்சனையை உருவாக்குகிறது! 

பொதுசிவில் சட்டம் என்பதன் உள்ளார்ந்த அர்த்தம், இந்துமத சட்டத்தைத் திணிப்பதற்கான ஒரு உத்தியே! இது ஆபத்தானது! 

மேலும் இது (பொதுசிவில் சட்டம் என பாஜக சொல்லுவது) மக்கள் ஒற்றுமையை சீர்குலைப்பதோடு, சிறுபான்மை மக்கள் மட்டுமல்ல, பெரும்பான்மை மக்களையும் பதட்டத்தின் விளிம்பிளிலேயே வைத்துவிடும் என்பதுதான் கடந்த கால அனுபவம்!

இன்று 29.11.15 News 7 ?கேள்வி நேரம்..!

----\\\\

நேர்காணல் கோணல் இன்றி போனது 'மகிழ்ச்சி'யே!

இன்று 29.11.15 PTTV இல் இரவு 9-10 மணியில் 'அக்னி பரிட்சை' பார்க்க நேர்ந்தது; மக இக தோழர் கோவன் நேர்காணல் ... நிர்வாக செய்தியாளர் ஷண்முகநாதன் உரையாடினார்...

கோவன் பதில்கள் மிகவும் பண்புடன் அமைந்தது; இவர் மீதா தேச துரோக வழக்கு? என கேட்க தோன்றுகிறது! விளம்பரத்திற்கு இப்படி செய்தீர்களா? என்ற போது, 'கிடையாது; சமூக அக்கறையுடன்தான்' என கம்பீரமாக கூறியது பாராட்டுக்குரியது. 

அதிமுக மதுவிலக்கு கொண்டு வந்தால், ஆதரித்து பாடுவீர்களா? என்ற கேள்வி அபத்தமாக இருந்தாலும், அமைதியாக 'மகிழ்ச்சி!' என்றது 'நச்!' 

காலை இந்த நிகழ்ச்சியை பார்த்து பதிந்த, முகநூல் நண்பருக்கு பதிவு செய்தேன்; அது 'ஓவர்!' என தோன்றுகிறது! 

நன்றி தெரிவிக்கும் பண்பாடு நிமித்தமாக திமுக உள்ளிட்ட கட்சிகளை சந்தித்தது (இது குறித்து தோழர் அ.மார்க்ஸ் ஆரம்ப பதிவு சரியே) தவறில்லைதான்! 

ஆம், மற்ற கட்சிகளையும் மதித்திடும் பண்பாடு நிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் வரவேற்க தக்கதே!

பாமகவை சந்தித்தாலும், "சாதீயம்" "வகுப்புவாதம்" எதிர்ப்பதில் பின்வாங்கலோ, சமரசமோ கிடையாது என்கிற பொருள்பட நேர்காணல் இருந்தது. இந்த "மனமாறுதல்"  இடதுசாரி ஒற்றுமைக்கு வழிவகுக்கட்டும் என நம்புவோமாக!  

நேர்காணல் கோணல் இன்றி போனது 'மகிழ்ச்சி'யே! அவரது அமைப்பு நிலைப்பாட்டில் இருந்து அவரின் நேர்காணல் இருந்தது! நன்று!

----\\\\

எதற்கு இந்த கோயாபல்ஸ் வேலை? 

இன்று 30.11.15 PTTV புதுப்புது அர்த்தங்கள்... எழுத்தாளர் ஞானி, பாமக பாலு, இவர்களுடன் நெறியாளர் ஜென்ராம்... பாலு பாமக சாதி கட்சி அல்ல என்பதை நிறுவிட படாதபாடு பட்டது பாவமாக இருந்தது! 

அதிலே அவர்கள் சொல்லி வருவது முதல் அமைச்சர் தலித்க்கு தருவோம் என்பதற்கான விளக்கம்தான் உலகமே வியக்க வைக்கும் விளக்கம்! முதலமைச்சர் என்றால், தமிழ்நாடு முதல் அமைச்சர் இல்லையாம்; கட்சிக்கு கிடைத்த முதல் முறையாக கிடைத்த அமைச்சராம்! எதற்கு இந்த கோயாபல்ஸ் வேலை? 

ஞானி சொன்னதுபோல் கிளை அளவில் தலித்களை சேர்ப்பதும், பொறுப்புக் கொடுப்பதும் கூட ஒரு பக்கம் இருக்கட்டும்; வன்னியர் சங்கம் துவங்கிய நோக்கம் ஓவர்; ஆகவே இனி இச்சங்கம் தேவையில்லை; கலைக்கப் பட்டுவிட்டது என்று ஒரே ஒரு அறிக்கை விட்டாலே போதுமே! செய்வார்களா? 

பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ் என்றால் பாமகவுக்கு வன்னியர் சங்கம் என்றால் ... அது மிகைபோல் தோன்றினாலும்  அது மறுக்க முடியாத உண்மை! வேறெந்த கட்சி தமிழகத்தில்... ஏன் இந்தியாவில் இப்படி இருக்கிறது? பாமகவை தவிர! 

தலித் மற்றும் பழங்குடி மக்கள் தங்களின் உரிமை போராட்டத்திற்கு ஒன்று திரண்டு இருப்பதும், இதர சாதி சங்கங்களும் ஒன்றல்ல என்ற ஞானி வாதம் டாப்! அதுபோல் இப்பொழுது நினைத்தால் கூட அரசியலை அப்படியே புரட்டி போட்டுவிடுவோம் என்ற பாலுக்கு, ஜென்ராம் ஆதாரங்களோடு, பாலுவுக்கு கொடுத்த பதிலடி டாப்!
----\\\\

தினமணியில் ஒரு சண்டமாருதம்! 
😈😈😈😈😈😈😈😈😈
'அட டே மதி' என்று புகழ்பெற்ற கார்டூனிஸ்ட் டை அறியாதவர் யாரும் இருக்க வாய்ப்பு இல்லை வாசிப்பு வட்டத்தில்! 

ஏன் ஒரு குறிப்பிட்ட கட்சி குறிப்பிட்ட ஒரு தொலைகாட்சியை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறது என்பதை எல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது! 

ஆர்எஸ்எஸ் ஊடுருவல் கலைஞர் சொன்ன மாதிரி 'ஆக்டோபக்ஸ்' கணக்காக ஊடுருவல் இருக்கிறதென்பதற்கு தினமணி மதியின் கார்டூன் கட்டுரையே சாட்சி! 

ஏற்கனவே அதன் ஆசிரியரின் மதியும் ஆர்எஸ்எஸ்; மதியின் மதியும் ஆர்எஸ்எஸ் என்றால்... வாசிப்பவர் மதியும் ஆர்எஸ்எஸ்  (ஏற்கனவே ஆகாமல் இருந்திருந்தால்) ஆகிவிடும்! 

"இதையும் சகித்துக்கொள்கிறேன்" "ப.சி.,யின் கவிதைகள்" என்று பாடம் எடுத்திருக்கிறார்! 

அந்த கடுமையின் ஒரு கீற்று இதோ...  "அப்புறமென்ன மூடிக்கிட்டு போக வேண்டியதுதான் மோடி!" என சென்ற சனியும், இன்றும் (28,30-11-15) அங்காலாய்திருக்கிறார். 

(இதையே வேறொருவர் சொல்லி இருந்தால் இந்நேரம் பூமியையே புரட்டி போட்டிருப்பார்கள் தமிழக பாஜக காவிகள் அல்லவா?; காவிகள் என குறிப்பிடுவதற்கு சென்னையில் அவர்களின் கட்சி அலுவலகத்திற்குள் காவி கொடிதான் பாரதமாதா கையில் தரப்பட்டு இருக்கிறது!) 

"மோடி ஆட்சி ஆர்எஸ்எஸ் என்ற இந்துத்துத்வா ஆட்சியே" என நாளுக்கு நாள் அதன் 'முகமூடி' கிழிந்து தொங்குவதை "சகிக்க" முடியாமல், சண்டமாருதம் செய்கிறார் ஜடாமுனி கணக்கா 'மதி'

-----\\\\

மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும்! 

சகிப்பின்மை விவாதம் திருப்பத்தையும் ஏற்படுத்தும், சகிப்பின்மை கடைப்பிடிப்பவர்களையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும்! 

ராஜ்நாத்சிங் மீது  அல்ல பாஜக அரசின் மீது மார்க்சிஸ்ட் கொண்டு வந்த தீர்மாணத்தை விவாதிக்கக்கூட விடாமல் 'அமளி' யில் ஈடுபடுவதும் 'சகிப்பின்மை'யின் ஒருபகுதியே!

இன்று 30.11.15 PTTV மக்கள் மேடைக்கு! இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
-----\\\\

காங்கிரஸுக்கு சகஜம்!

காங்கிரஸ் கட்சியில் உட்பூசல் இல்லை என்றால்தான் ஆச்சரியப்பட வேண்டும்! இதெல்லாம் காங்கிரஸுக்கு சகஜம் மட்டுல்ல அல்வா சாப்பிடுகிற மாதிரி! 
என்னா..! 
சத்தமில்லாமல் வாசன் கோஷ்டி கட்சி ஆரம்பித்தார்கள்! மற்ற கோஷ்டிகள் சத்தமாக சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்!  

போலீசு, கேசு ன்னு கொஞ்சம் ஓவராக போய்விட்டது விஜயதாரணிக்கும் இளங்கோவனுக்கும்!அவ்வளவுதான்!

இன்று 30.11.15 News 7 ?கேள்வி நேரம்..! இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

------\\\\\

பழிவாங்கலும்தான்!

அவதூறு என்ற பெயரில் தமிழக அரசு செய்வது அடாவடிதனமும், பழிவாங்கலும்தான்! அத்துமீறல் எல்லாம் தமிழக அரசுக்கு "ரஸ்க்" சாபிடுகிற மாதிரி! 

உயர்நீதி மன்ற கேள்வி எல்லாம் தமிழக அரசுக்கு "கொசு" கடித்த மாதிரிகூட இருக்காது என்பதுதான் உண்மை! வரும் தேர்தலில் மக்கள் மன்றம்தான் இதற்கு சரியான தீர்ப்பு தரவேண்டும்! 

அந்த தீர்ப்பும் தலைவலி போய் திருகுவலி வந்த மாதிரி அல்லாமல், தலைவலி நிவாரணியான "மக்கள் நலக் கூட்டணி" வந்திட வேண்டும்!

இன்று 30.11.15 PTTV நேர்பட பேசுக்கு! இதன்ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

-----\\\\

முதலுதவியும், மீட்பு பணியும்!

வரலாறு காணா கன மழையால், தத்தளிக்கும் கடலோர மாவட்ட மக்களுக்கு முதலுதவியும், மீட்பு பணியும் உடனடி நிவாரணமும்தான்! 

இதற்கு தமிழக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக போர்கால அடிப்படையில் உதவிட வேண்டும். மாநில அரசும், மாநிலம் முழுவதுமுள்ள அரசு இயந்திரங்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவிட வேண்டும். 

அனைத்து கட்சிகள், அமைப்புகளும் தங்களாலான உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும்; மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்திடல் வேண்டும்! 

இன்று 1.12.15 PTTV மக்கள் மேடைக்கு! இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

-----\\\\
இரட்டிப்பு மகிழ்ச்சியே!

நூறாண்டு சாதனையை எட்டிய சென்னை பெருமழை என்பது ஒருபக்கம் மகிழ்ச்சியையும், இன்னொரு பக்கம் அதிர்ச்சியையும் தந்துள்ளது. 

பருவநிலை மாறியிருப்பது என்பது எதந்தளவுக்கு உண்மையோ, அந்தளவுக்கு அரசின் நீர்நிலையை பாதுகாக்கும், பராமரிக்கும் கொள்கை இல்லாததும் ஒரு காரணம் என தோன்றுகிறது! 

பாரீஸ் மாநாட்டில் இந்தியாவின் நிலைபாடு ஏற்கப்பட்டால், இரட்டிப்பு மகிழ்ச்சியே!

இன்று 1.12.15 PTTV நேர்படபேசுக்கு!

-----\\\\

குஜராத்: பாஜக 'புட்டுக்கிச்சாமே!

குஜராத் மாநிலத்திலும் பாஜக 'புட்டுக்கிச்சாமே!' உள்ளாட்சி தேர்தலில்..! 

மொத்த உள்ள 31 மாவட்ட பஞ்சாய்த்தில் 20 காங்கிரஸ் முன்னிலை... மொத்தம் உள்ள 230 ஒன்றியங்களில் 130 காங்கிரஸ் முன்னணிலை... பிரதமர் சொந்த மாவட்டம் மெசானா மாவட்ட பஞ்சாய்த்தும் காங்கிரஸ்  முன்னிலை... 6 நகராட்சிகளை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும் நிலை...
 (தீக்கதிர்: 03.12.15)

எத்தனை காலம் தான் மக்களும் மதவெறி அரசியலில் மயங்கி கிடப்பார்கள்..? 

எல்லாவற்றையும் தாண்டி 'வயிறு' என்று ஒன்று இருக்கிறதல்லவா? ஆம், வசதி படைத்தவன் தரமாட்டான்; வயிறு பசித்தவன் விடமாட்டான்! 

இந்த வர்க்கப் போரை யாரால் எத்தனை நாள் தடுக்க முடியும்?


----\\\\

 "தேர்தல் பாதை திருடர்கள் பாதை" என்பதே நானறிந்த அளவில்..! இனி..!? 
👊👊👊👊👊👊 

தோழர் ஆர்.ஸ்டாலின்... வணக்கம். 
ம க இ க., பற்றி கேட்டிருந்தீர். 

அதன் தலைமை நிர்வாகி தோழர் கோவன், புதிய தலைமுறை டிவி அக்னி பரிட்சை நிகழ்ச்சியில்... 'பண்பாட்டு தளத்தில் இயங்கும் அமைப்பு இது' என்றார். ஆம், இத்தளத்தில் இவர்களின் இசைப்பாடல்கள் ஏராளம்! 

அதில் பெரும்பகுதி தலித் விடுதலை; சாமன்ய மக்கள் விடுதலை; கம்யூனிச கருத்துக்கள் என விரவி இருப்பதைக் கேட்க முடிகிறது; பார்க்க முடிகிறது! 

ஆனால் அவர்கள் அவர்களை தவிர வேறு யாரையுமோ, அமைப்பையும் உண்மையான கம்யூனிஸ்ட் என்ற ஏற்காமல் இருந்தனர் '...ஊத்திக் கொடுத்த உத்தமி..." பாடலால் ஏற்ப நிகழ்வு வரை! 

அதில் கட்சி வித்தியாசமின்றி தமிழக அரசை கண்டித்தும், கோவன் அவர்களை ஆதரித்தும் 'அரசியல்' சுழன்ற பிறகு, அவர்களின் நிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டிருக்குபோல் தெரிகிறது! அவ்வளவுதான்! 

மக்கள் நலக் கூட்டணி உறுப்பு கட்சிகளுடன் (சிபிஐஎம் தவிர்த்து)நெருக்கம் இருப்பதுபோலவும் தெரிகிறது! இவர்களின் கடந்த காலம் சிபிஐஎம் யோடு கசப்புகள் மிக்கதுதான்! 

இருந்தாலும் இவர்களின் பாதையில் எத்தகைய மாற்றம் வரும் என்பதை பொறுத்தே  இனி சொல்ல முடியும்! 

இதுவரை இவர்கள்- "தேர்தல் பாதை திருடர்கள் பாதை" என்பதே நானறிந்த அளவில்..! இனி..!? 

(வாட்ஸ்அப் தோழருக்கான ஒரு மிக எளிய பதிவு!)

-----\\\\

"சக்திமான்" சாமார்த்தியத்தைக்  காட்டினாரா?

"பிரதமர் மோடி வந்தார்!
சென்னை வெள்ளச்சேதத்தைப் பார்த்தார்! ரூ1000 கோடி தந்தார்! சென்றார்!" 
-இது செய்தி..!

சந்தோசம்! நன்றி! 
அதே சமயத்தில், மக்களவை தேர்தல்போது, உத்தரகாண்ட் இல் இதே போன்று ஏற்பட்ட வெள்ள பெருக்கு போது, இதேபோல் சென்று... 

சுமார் 18 லட்சம் மக்களை 'விரல் சொடுக்கும்' நேரத்தில் உயிரோடு காப்பாற்றிய மோடி, தற்போது அவரது "சக்திமான்" சாமார்த்தியத்தைக் காட்டினாரா? எடுபட்டதா? எடுபடவில்லையா? யாரவது தெரிந்தால் சொல்லுங்களே!

சென்னை மட்டும்தான் தமிழ்நாடா? கடலூர், தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வெள்ளம் பாதித்த இதர மாவட்டங்கள் தமிழ்நாடில்லையா? ஏன் அங்கெல்லாம் CMமும் போகல!  PMமும் போகல! 

தேர்தல் என்று ஒன்று இல்லையென்றால்... நம் நாடு என்ன ஆகுமோ..? நினைத்து பார்த்தால்... "நெஞ்சம் பொறுக்குதில்லையே... இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்...!?

அன்று முதல் இந்த நிமிடம் வரை களத்தில் இருப்பவர்கள்... "மக்கள் நலக் கூட்டணி"யும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் சார்பு அமைப்புகளுமே!

----\\\\

[12/3/2015, 21:43] கிருஷ்ணசமி திண்டுக்கல்: தோழர் தாரைப்பிதா செய்தி அன்றாடம் படித்தால்தான் வாடசப் பார்த்த திருப்தி வரும்

----\\\\ 

தோழர் கிருஷ்ணசாமி அவர்களுக்கு, வணக்கம் . நன்றி! என்றாலும் அப்படி ஒன்றும் நான் செய்திடவில்லை!  தங்களை போன்றவர்களின் "பராமரிப்பு" என்மீது படர்ந்துக் கொண்டிப்பதற்கு மீண்டும் நன்றி!

-----\\\\

மந்திர, தந்திர ஆலோசனை நடந்திருக்குமோ?!

ஜம்மு-காஷ்மீர் மீது அதிக அக்கறை காட்டிய ஒரே பிரதமர் மோடிதான்: முஃப்தி முகமது... (தினமணி: 4.12.15) 

யாரிந்த முஃப்தி முகமது... காங்கிரஸுடனும் கூட்டணி மந்திரி சபை நடத்தியவர், தற்போது பாஜகவுடனும் கூட்டணி மந்திரிசபை நடத்திக் கொண்டிருப்பவர்! 

50 வருடமாக அரசியலில் இருக்கிறாராம்; இப்பத்தான் வெளிப்படையாக ஆட்சி நிர்வாகம் நடக்குதாம்! இவர்களின் கூட்டணி ஆட்சி முடிவதற்குள் ஜம்மு-காஷ்மீர் மக்களின் சகல பிரச்சனையும் தீர்ந்து, பாக்கிஸ்தானுடன் கைக்குலுக்கி, எல்லையோரம் இருக்கிற இரு நாட்டு ராணுவமும் அதனதன் பாசறைக்கு சென்று விடும்; ஜம்மு-காஷ்மீருக்கு தனி அந்தஸ்த்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370க்கு வேலையே இல்லாமல் போய்விடும்; 

எல்லாவற்றிக்கும் மேலாக... வாஜ்பாய்க்கு ஒரு அப்துல் கலாம்; மோடிக்கு ஒரு முஃப்தி முகமதோ... "அந்த கனவு" காண்கிறாரோ? எதாவது திரைமறைவில் "வருங்கால முதல் குடிமகன்" மந்திர, தந்திர ஆலோசனை நடந்திருக்குமோ?!

-----\\\\

வேகுகிற வீட்டில்..!

ஆம்னி என்கிற தனியார் 'சொகுசு' ( பெயருக்குத்தான் சொகுசு) சென்னையில் இருந்து சேலம், மதுரைக்கு கட்டணம் ஏரோபிளேனைவிட அதிகமாம்... ரூ3000 மாம்! தனியார் துறையா? கொள்ளைக்காரத் துறையா?


அரசு துறையை யாசிப்போரே... இப்பொழுதாவது தனியார்துறையை, அதன் கொள்ளைச் சுரண்டலைப்பற்றி யோசிப்பீரா? வெள்ளச்சேதத்தைவிட வேதனைசேதமல்லவா இது? 

ஆள்வோரே இதில் கவனம் செலுத்துவோராக மாறுவீரே..! மக்களை இந்த கொள்ளையில் இருந்து காத்திடுவீரே..! வேகுகிற வீட்டில் புடுங்கிறது லாபம் என்பது இதுதானோ..?

-----\\\\

என்னது... டுமீலா..? ஓகே ஓகே..!

"இனி வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்க முடியாது"  என்கிறார் மத்திய  நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா... 

இதை படித்ததும் நான் கூட நினைத்தேன்... "என்னடா இது... நமக்கு தெரியாமலே, கறுப்பு பணத்தை எடுத்து, எல்லாத்துக்கும் தலைக்கு ரூ15 லட்சம் கொடுத்திட்டாங்க போலிருக்கு; நாம ஏமாந்துட்டம் போலிருக்கு!"ன்னு. 

அப்புறம் பார்த்தால், வரி-வர்த்தகம் சிஸ்டத்தில் என்னமோ மாற்றம் வர போவுதாம்; கறுப்பு பணத்த பதுக்க முடியாதாம்; 

போங்கடா இவுங்கள..! யாருகிட்ட... இந்திய முதலாளிங்ககிட்டையா..? ஒன்னும் புடுங்கமுடியாது பாஜகவும், காங்கிரஸும்! சும்மா இந்த 'உடான்ஸ்' உடுறத நிறுத்துவிட்டு, வேனா ஒன்னு சொய்யலாம்...

"ஏன் அவ்வளவு கஷ்ட்டப்பட்டு வெளிநாட்டுல பதுக்குறீங்க..இங்கேயே அதுக்குரிய ஏற்பாட்டை செய்து தருகிறோம்; எங்களுக்கு (பாஜக, காங்கிரஸ்) கட்டுகிற "கப்பத்தை" மட்டும் இன்னும் கொஞ்சம் 'பர்சென்டேஜ்' சேர்த்து கொடுங்க" ன்னு வேண்டுமானா கேளுங்க!  

என்னது... அதுக்குத்தான் இந்த டுமீலா..? ஓகே ஓகே..!

-----\\\\

ஆதாயமின்றி அணுவும் அசையாதவர்..!

கருணாநிதி அவர்கள், மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி வழங்கியதற்கு நன்றி தெரிவித்து உள்ளார்! இது பண்பாடா? பரமபதமா? 

தற்போது இவர் முதல்வரும் இல்லை; எதிர் கட்சி தலைவரும் இல்லை! ஏனிந்த நிலை? கூட்டல் பெருக்கல் கணக்கு சரியாக வரவில்லையோ?! 

ஆதாயமின்றி அணுவும் அசையாதவர் அன்றோ கலைஞர் அவர்கள் என்பதுதான்  வெளிடைமலை!

-----\\\\
அண்ணல் அம்பேத்கர்...
 59 வது நினைவுநாள் அனுசரிப்பு!

ஓமலூரில் அம்பேத்கர் சிலைக்கு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு மற்றும் சிபிஐஎம் சார்பில், ஆம் ஆண்டு நினைவாக மலர்மாலை அணிவிப்பு! சிபிஐஎம் சேலம் மாவட்டச் செயலாளர் பி.தங்கவேலு, வட்டச்செயலாளர் பி.அரியாக்கவுண்டர், மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.கணபதி மற்றும் சிபிஐஎம் வட்டக்குழு உறுப்பினர்கள் மோகன், சின்ராஜ், ஈஸ்வரன் மற்றும் பலர் பங்கேற்றனர்!

-----\\\\

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், வீரனூரில் கிளை செயலாளர் சாமிநாதன் தலைமையில் 6 டிச 2015 அம்பேத்கர் 59 நினைவு நாளில் சிபிஐஎம் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. 

அரூர் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு கொடியேற்றினார். 

இதில் சேலம் மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு, மாவட்டச்செயற்குழு உறுப்பினர் எஸ்பி.தங்கேவல், மேட்டூர்-கொளத்தூர் ஒன்றியக்குழு செயலாளர் எஸ்.லட்சுமி சிதம்பரம், மாவட்டக்குழு உறுப்பினர், நங்கவள்ளி ஒன்றிய சேர்மேனுமான பழ.ஜீவாணந்தம், மாவட்டக்குழு உறுப்பினர் அரியாக் கவுண்டர், லிக்காய் மண்டல தலைவர் வெங்கடாசலம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வேல்முருகன், நா.வேணுகோபால், வசந்தி, ஸ்டாலின் மற்றும் பலர் பங்கேற்றனர்!

----\\\

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், நங்கவள்ளி ஒன்றியம், ஜலகண்டாபுரம் பேருந்து நிலையத்தில் இன்று 6.15.15 காலை 11 மணியளவில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு சார்பில் அம்பேத்கர் 59வது நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. 

சிபிஐஎம் கிளை செயலாளரும் ஒன்றியக்குழு உறுப்பினருமான நிருபன் குமார் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் 
சிபிஐஎம் சேலம் மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினரும், ஒன்றிய செயலாளருமான எஸ்பி.தங்கவேல், மாவட்டக்குழு உறுப்பினரும், நங்கவள்ளி ஒன்றிய பெருந்தலைவருமான பழ.ஜீவாணந்தம், ததீஒமு மாவட்டக்குழு உறுப்பினர் சிவபெருமாள், பாலாஜி, DYFI ஒன்றிய பொருளாளர் ஆளவந்தான், சிபிஐஎம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கதிர்வேல், பீட்டர், வேம்பன், சுப்ரமணி, சுந்தர்ராசன் உள்ளிட்டு ஏராளமானவர் கலந்துக் கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

-----\\\\\\

இன்று 6.12.15 சேலம் மாநகரம் வடக்கு  மற்றும் ஓமலூர் வட்டக்குழுக்கள் சேகரித்தவைகளை CPIM, AIDWA, DYFI சார்பில்
ரூ  2 லட்சம் மதிப்பில் உணவு பொருட்கள் (சப்பாத்தி, பிஸ்கட்) துணி வகைகள், குடிநீர், மருந்து போன்ற 2 வாகணங்களில் கடலூர் வெள்ள பாதிப்பு மக்களுக்கு அனுப்பும் பணி தற்போது சிபிஐஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில் ஜரூராக நடந்துக் கொண்டிருக்கிறது!

-----\\\\
கள்ளுக்குடித்தவன் ஏப்பம் விட்டால்.... 
😈😈😁😁😌😌😠😠😝😝 

"... அரசுக்கு மக்களிடம் அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும், அதன்மூலம் அரசியல் சுயலாபம் பெற வேண்டும் என்று முனையும் தீயசக்திகளுக்கு கமலஹாசன் விலை போய்விட்டாரா என்பதை அவர்தான் தெளிவு படுத்த வேண்டும்; மலிவான விளம்பரம் தேடுகிறார்; நன்றி மறந்து விட்டாரே; திரைப்படம் அல்ல இது!..." 

இப்படி பொறிந்து தள்ளியிருக்கும் முன்னாள் முதல்வர் ஓபசெ அவர்கள் கட்சியினர் அம்மா திரு உருவ படத்தை ஓடி ஓடி ஒட்டுகின்றனரே டன் கணக்கில் அச்சிட்டு வைத்துக் கொண்டு அதற்கென்ன அர்த்தம்? 

சென்னையிலே காரில் இருந்து கொண்டு, வெள்ள நீரில் கால் வைக்காமல் "வாக்காள பெருமக்களே" "அண்ணா நாமம் வாழ்க" என்பன போன்ற பொன் முத்துக்களை முதல்வர் உதிர்த்தாரே... அதற்கு என்ன பெயர்? 

கர்னாடகா முதல்வர் முதன்முதலில் வெள்ள நிவாரண நிதி ரூ5 கோடி அறிவித்தாரே... அதற்கு பின் அறிவித்த முதல்வர்களுக்கு நன்றி தெரிவித்த தமிழக இந்நாள் முதல்வர், சீத்தாரமையா என்ற கர்னாடக முதல்வருக்கு இந்த நிமிடம் வரை நன்றி சொல்ல வில்லையே அதற்கு என்ன அர்த்தம்? 

மாமியார் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தால் பொன்சட்டி! 

ஒரு குடிமகன் என்கிற முறையில், ஒருவர் கருத்து தெரிவித்தால், அதற்கு பொறுப்பாக பதில் சொல்லு; சொல்லாமல் இரு! அதற்கு நன்றி கெட்டவரே என சாபம் இடுவது; சினிமா அல்ல என்பது; தீயசக்திக்கு துணை என்பது; தனிபட்ட முறையில் தாக்குவது... இதுதான் அழகா? 

அதுசரி, கள்ளுக்குடித்தவன் ஏப்பம் விட்டால் புளிச்சநாத்தம் தான் வரும் நேற்றைய கூவத்தைப்போல

------\\\\

நூதன தட்டியால் நொடியில் எதிர்வினை!

சேலம் மாநகரம் 5வது டிவிஷன் பெரிய புதூர் படையப்பா நகரில் 10 ஆண்டு காலமாக நடுரோட்டில் மின்வாரிய கம்பம் ஒன்று யாருக்கும் பயப்படாமல் நின்று கொண்டு இருந்தது. பல பேர்களை கீழே விழ வைத்து தலை கை கால் ஆகியவற்றை உடைத்து பழிதீர்த்து கொண்டிருந்தது. யார் சொல்லியும் கேட்க வில்லை. சில நாட்களுக்கு முன் DYFI சார்பில் தட்டி வைக்கப் பட்டது.


இன்று அந்த கம்பத்திற்கு மரணம் சம்பவித்து விட்டது. மின் கம்பம் அகற்றப்பட்டு ரோடு ஓரம் பணி இன்று 7.12.15 தற்போது நடந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டனர். DYFI க்கு நன்றியை தெரிவித்தனர்! நூதன தட்டியால் நொடியில் மின்கம்பம் அகற்றப்பட்டதைக் கண்ட மக்கள் மகிழ்ச்சியில் இனிப்பு பரிமாறி கொண்டாடினர்!

[12/7/2015, 14:14] Vemala Vitha Nkl: Great A CTION...CONGRATES TO DYFI COMTADES..VIMALA VIDYA

----\\\\