"ஓவரா கூவாதீங்க அறிவுகடல்களே..!"
#
தேமுதிக மக்கள் நலக் கூட்டணியுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டதில் இருந்து அறிவுகடல் சுப.வீரப்பாண்டியனின் விவாதம் அனர்த்தத்தின் உச்சியில்! அதாவது இவரது வேலை தேமுதிகவுக்கும் மக்கள் நலக் கூட்டணிக்கும் சிண்டு முடிந்துவிடும் வேலை போலும்!
இதுவரை- 'எல்லாரும் இன்னாட்டு மன்னர்கள்' என்று கூறிக் கொண்டு ஒரு குடும்பமே மன்னராகி வரும் திமுகவுக்கு ஆதரவாக பல்லாக்கு தூக்கும் சுபவீ- 'தேமுதிக தலைவர் (கிங்) "மன்னர்" ஆகிவிட்டால், தொண்டர்கள் "என்னா"வது?' என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்! 'குதிரைபேரம் ஆரம்பம்' என்றால், அப்ப தேமுதிக குதிரை என்கிறீர்களா? மக்கள் நலக் கூட்டணியில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசுகிறார்கள்... திருமா அப்படி சொல்கிறார்; கம்யூனிஸ்ட்கள் இப்படி சொல்கிறார்கள்; வைகோ அப்படி சொல்கிறார் என்பன போன்ற 'குதர்க்கம்' பேசுகிறார்!
இதன்மூலம் ஒரு 'மன்னர்' குடும்பம் மட்டும் கொள்ளை அடிக்கவில்லை தமிழகம் முழுவதும் சிறுகுறு 'மன்னர்'களும் திமுகவில் ஆட்சியில்
கொள்ளை அடித்தார்கள் என்பதையும்-- அதுபோல் யுவராஜ், சந்திரக்குமார் வகையறாக்களுக்கும் "ஆகலாம்" (சிறுகுறு மன்னர்) என வலையை திமுகதான் விரித்திருக்கிறது என ஒப்புதல் வாக்குமூலமும் தந்துவிட்டார்! நன்றி சுபவீ..!
#
இன்னொரு அறிவுகடல் பழ.கருப்பையா- தேமுதிக க்கு இவர்கள் (மக்கள் நலக் கூட்டணி) ஏன் 'வக்காலத்து போடுகிறார்கள்; பதறுகிறார்கள்' என புத்திக் கூர்மையைத் தீட்டுகிறார்! அறிவுகடலே...
தேமுதிக- திமுகவுடன் சேராமல், மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்ததுதான் இங்கு பிரச்சனை... இதற்கு மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் கருத்து சொல்லாமல் வேறுயாரு சொல்வார்கள் ஒபாமாவா? மேலும் தேமுதிக உயர்மட்ட கூட்டம் உடனே நடத்தப்பட்டு- இதற்கு தேமுதிக எதிர்கட்சி துணைத்தலைவர் அழகாபுரம் மோகன்ராஜ் பதில் அளித்தெல்லாம் தெரியவில்லை போலும்!
ஓவரா கூவாதீங்க அறிவுகடல்களே!
#
----\\\\
முதல் கோணல்
முதல் கோணல்; முற்றும் கோணல்! அதிமுக வியூகம் அமைப்பதில், அதாவது வேட்பாளர் தேர்வில் அறிவிப்பில் கோட்டை விட்டு, "கோட்டையை" இழந்துவிட்டது! ஆம் இந்து தமிழ் வாசகர்கள் கருத்து இதோ-
முதல் கோணல்
முதல் கோணல்; முற்றும் கோணல்! அதிமுக வியூகம் அமைப்பதில், அதாவது வேட்பாளர் தேர்வில் அறிவிப்பில் கோட்டை விட்டு, "கோட்டையை" இழந்துவிட்டது! ஆம் இந்து தமிழ் வாசகர்கள் கருத்து இதோ-
*இயல்பு... அந்த நிமிட பிரதிபலிப்பு; இது தூண்டுதலே!
*நேற்று சிபிஎம் சிபிஐ மதிமுக... திமுக தூண்டுதல் என்றன! இன்று தேமுதிக..!
*'சந்திர'க்குமார் 'சூரிய'க்குமாராகிய பின் பிரேமலதாவை குற்றம்சாட்டலாமா?
#thistime4mnk
----\\\\
"கருப்பைய்யா...
"கருப்பைய்யா...
கருத்து கூறய்யா..!"
#
தேமுதிக வின் முடிவுக்கு எதிராக, மக்கள் நலக் கூட்டணியை விமர்சித்து, திமுக கூட்டணியை ஆதரித்து பேசிய சந்திரக்குமார் வகையறாக்களை பற்றி மக்கள் நலக்கூட்டணி நிர்வாகிகள் கருத்து கூறியபோது- பழ.கருப்பைய்யா கர்ஜித்தார்... 'தேமுதிக கம்முனு இருக்கும்போது இவர்கள் ஏன் கத்துகிறார்கள்' என்று.
தற்போது அவர் அடக்கலம் புகுந்துள்ள காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் அவர்கள்- வைகோ திமுக தலைவர் பற்றி சொன்ன சர்சைக்குரிய கருத்துக்கு அடுத்த கணமே மன்னிப்பு கேட்ட பின், 'திமுக தலைமையே கம்முனு இருக்கும் போது, இவர் (இளங்கோவன்) ஏன் கருத்து தெரிவித்து உள்ளார்' என கருப்பையா கூறுவாரா? அல்லது கேட்பாரா?
#
இதோ
இன்றைய 7.4.16 தினமணியில்...
இவரின் போக்கில் மக்கள் நலனோ, குறைந்தபட்சம் கட்சி நலனோ இல்லை என்கிறார்கள் மக்கள்..!
எனவே சந்திரகுமாரையோ, அவரை இயக்கும் 'சக்தி'யையோ மக்கள் நிராகரித்துள்ளார்கள்! தேமுதிக மக்கள் நலக் கூட்டணி வெல்வது உறுதியே என்பதையே காட்டுகிறது!
----\\\\ இன்று 7.4.16 PTTV புதுப்புது அர்த்தங்களில் மக்கள் நலக் கூட்டணிக்கு... குறிப்பாக சிக்கந்தர் தந்த ஆலோசனை சரி என்றே படுகிறது! இதை பார்த்தவர்களும், பார்க்காதவர்கள் இன்று காலை 9 மணிக்கு பார்த்தும் பதிவிடுங்களே!
#thistime4mnk
----\\\\
"மக்களே ஏமாந்து விடாதீர்!"
"மக்களே ஏமாந்து விடாதீர்!"
எந்த லோகத்தின் பழக்கமய்யா இது? தலைவர் உள்ளிட்டு யாருமே மேடையில இல்ல; ஒரே ஒருவர் மட்டும் மதபோதகர் மாதிரி கண்ணுக்கு தெரியாத மைக்க காதுலையோ, கழுத்துலையோ, சட்டையிலையோ மாட்டிக்கிட்டு போதிக்கிறார்; முன்னாலே... 'ஆ' வென வாய் பிளந்து பார்த்துக் கொண்டியிருக்கிறார்கள்! எதற்கு இந்த பிரமாண்டம்? யாரை ஏமாற்ற?
திண்ணைப் பிரசாரத்தில் நம்பிக்கை இழந்து டிஜிட்டல் பிரச்சாரத்தில் மூழ்கிவிட்டதோ தமிழகத்தின் ஜாதீயவெறி!
எம்ஜிஆரை மக்கள் பூஜித்ததைப்போல் தன்னையும் பூஜிப்பார்கள் என்ற பேராசை பிம்பமோ? எந்த தனிநபர் துதி மாயை எதிர்ப்பதாக (மக்கள் டிவியில் நாளது வரை சினிமாவுக்கு முக்கியத்துவம் தராமல்) கூறி வந்தார்களோ, அந்த துதி இந்த தேர்தலில் தூக்கலில்... தனிநபர் சர்வாதிகாரத்தின் மறுபிம்பமாக... தமிழக மக்களே ஏமாந்து விடாதீர்! தேமுதிக மக்கள் நலக் கூட்டணி ஆட்சியே இன்றைய தேவை!
#thistime4mnkdmdk
---\\\\"சமஸ் பற்றிய பொதுபுத்தி"
#ஒரு அரசு ஊழியர். இடதுசாரி அமைப்பைச் சார்ந்தவர். அவர் இந்து தமிழில் வந்துள்ள (20.3.16) சமஸ் கட்டுரையைப் படித்தார். அவர் படித்து முடிக்கும் வரை நான் பொறுமை காத்தேன்.
அதன்பின், "கட்டுரை எப்படி?" என்றேன். "நல்லா இருக்கு தோழர்" என்றார். "அப்படியா? கட்டுரை என்ன சொல்லுது" என்றேன்.
"இந்துமதத்தைப் பாதுகாக்க ஆர்எஸ்எஸ் சாதிய ஒழிக்கனும்; அதால்தான் முடியும் என்கிறது" என்றார்.
"அப்புறம்..!" என்றேன்.
"ஆர்எஸ்எஸ் பண்பாட்டு அமைப்பு என்கிறது; அதுதான் செரியில்ல" என்றார்.
"மற்றபடி..!"என்றேன். "மற்றபடி கட்டுரை நல்லா இருக்கு" என்றார்.
#அவர்மேலும்தொடர்ந்தார்-
"சமஸ் நம்மல பத்தி நல்லா எழுதுவார் தோழர்; இந்துலயே நெறையா வந்திருக்கு தோழர்" என பேச ஆரம்பித்தார்.
"சரி- சாதிக்கு அடிப்படை எது?" என்றேன்.
"இந்துமதம்" என்றார்.
"அப்புறம் எப்படி இந்து மதமும் அதன் முதலாளி ஆர்எஸ்எஸ் சாதிய ஒழிக்கும்" என்றேன்.
"ஆமா தோழர்" என்றார்.
"கொக்குத்தலையில் வெண்ணெய்ய வச்சி, அது உருகி, கொக்கு கண்ண எப்ப மறைப்பது; கொக்க நாம எப்ப புடிப்பது" என்றேன்.
"ஆமா தோழர்" என்றார்.
"சாதிய ஒழிப்பது- கம்யூனிஸ்ட்கள் (சமதர்மவாதிகள்) வேலையா? சாதிய உருவாக்கனவன் வேலையா?" என்றேன்.
"என்னா தோழர் கொழப்பறீங்க" என்றார்.
"நான் கொழப்பறனா; சமஸ் கொழப்பறாரா" என்றேன்.
மறுபடியும் அவர் அந்த கட்டுரையை படித்தார்.
"ஹெட்கேவர் ஜாதிய ஒழிக்க பாடுபட்ட புனிதர் என்கிறார்; வாழப்பழத்தல ஊசிய ஏத்தறமாதிரி ஆர்எஸ்எஸ்க்கு வக்காலத்து வாங்கிறார் தோழர்" என்றார்.
#இது கற்பனையல்ல; நிஜம். இன்று மாலை 7 மணிக்கு அலுவலகம் வந்தார்; அப்பொழுது இது நடந்தது!
ஆக- சமஸ் பற்றிய "பொதுபுத்தி" எப்படி கட்டமைக்கப்பட்டு உள்ளது என்பதற்கும், அவரின் "தெளிவான குழப்பம்" பற்றியும் இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா?
---\\\
சூழலே..!
விஜய்காந்த் பலமும் அல்ல; அழைப்பவர் பலவீனமும் அல்ல; சூழலே!
விஜய்காந்த் பலமும் அல்ல; அழைப்பவர் பலவீனமும் அல்ல; சூழலே!
மாற்றத்தை விரும்பினால் விஜய்காந்த் சேரும் அணி, மக்கள் நலக் கூட்டணி!
'புலிக்குப் பயந்தவர்கள் என்மீது படுத்துக் கொள்' என்பதே திமுகவின் 'தந்திரம்!'
தேமுதிக- திமுக பாஜக வுடன் போவதில் மக்கள் நலனுக்கு பயன்படாது!
#21.3.16 PTTV நேர்படபேசு!
--//
தேமுதிக
தேமுதிகவை யாரும் வட்டமிடவில்லை; அதற்கு வாட்டமாக யாரும் அமையவில்லை!
தேமுதிகவை யாரும் வட்டமிடவில்லை; அதற்கு வாட்டமாக யாரும் அமையவில்லை!
அதன் ஆசை அபரிமிதம்; பேராசை பெரு நஷ்டத்தில் முடியும்!
தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியில் இணைவதே மாற்றம் விரும்புவதற்கு அர்த்தம்; அதை விடுத்து வேறு எந்த முடிவு எடுத்தாலும் அதற்கும், தமிழக மக்களுக்கும் பயனில்லை!
#21.3.16 news 7 ?கேள்வி நேரம்!
--//
"பாரத மாதாகீ ஜே; பாஜகவின் பசப்பல்!"
தேசபக்தி பற்றி... "பாஜகவிடம் பாடம் கற்க வேண்டியதில்லை; அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் குரலே அது! (நீங்கள் எங்களை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? ஆதரித்தால் தேசபக்தன்; எதிர்த்தால் பயங்கரவாதி அல்லது தேசவிரோதி)"
-யெச்சூரி.
"...அதை எப்போது எழுப்புவது என்பதை நானே தீர்மாணிப்பதான் ஜனநாயகம்! - சசி தரூர்.
பாஜக குரல்... பாசிச குரல் என்பதற்கு வேறென்ன வேண்டும்?
---\\\
"அது அப்படியா?
அல்லது அந்த நாட்டின் சுதந்திரமான உணர்வா?"
88 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்காவின் அதிபர் ஒபாமா... கியூபா என்ற சின்னஞ்சிறிய நாடுக்கு 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் சென்றார். "சிவப்பு கம்பளம் விரிப்பு இல்லை; குடுவிக்கொண்டு வரவேற்பில்லை!"
இதுவும் செய்தி!
அதோடு ஆச்சரியம் அளிக்கும் செய்தி... ஒபாமா ஹவானா வில் கால் பதிக்கும் போது வரவேற்பும் இருந்தது; சிறு எதிர்ப்பும் இருந்தது! இருந்தாலும், படைபட்டாளத்தோடு அந்த நாட்டின் ஜனாதிபதி கையைக் கட்டிக்கொண்டு, துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு, வாய்ப்பொத்தி, "கியூபா உங்களின் அடிமை" என ரவுல் காஸ்ரோ விமான நிலையத்தில் இல்லை!
அவர் "மானஸ்த்தர்" என்று நீங்கள் நினைப்பதையே நானும் நினைக்கிறேன்!
ஆனால், தற்போதைய அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னணியில் இருக்கும் குடியரசு வேட்பாளர் ரொனால்டு டிரம்ப், "ஒபாமாவை இழிவு படுத்தி விட்டார் ரவுல் காஸ்ரோ" என்கிறார்.
"அது அப்படியா?
அல்லது அந்த நாட்டின் சுதந்திரமான உணர்வா?"
----\\\
எந்த கட்சி?
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது வீர மரணம் எய்திய கார்கில் ராணுவ வீரர்களை அடக்கம் செய்திட வாங்கிய சவப்பொட்டியில் ஊழல் செய்தது யார்? எந்த கட்சி?
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது வீர மரணம் எய்திய கார்கில் ராணுவ வீரர்களை அடக்கம் செய்திட வாங்கிய சவப்பொட்டியில் ஊழல் செய்தது யார்? எந்த கட்சி?
ஊழல் வழக்கில் கர்னாடகாவில் லோக்அயுக்தா நீதிமன்ற தீர்ப்பால் முதல்வர் பதவியை இழந்த எடியூரப்பா எந்த கட்சி?
அகில இந்திய தலைவராக இருந்த பங்காரு லட்சுமணன் லஞ்சம் வாங்கிய காட்சி விக்கிலீக்ஸ் வெளியிட்டதே, அவர் எந்த கட்சியின் தலைவர்?
லஞ்சம்-ஊழல் அற்ற ஆட்சி அமைக்கத் தகுதியான அணி- மக்கள் நலக் கூட்டணியே! மநகூ தான் கரைபடியாக் கரங்களுக்கு சொந்தம் கொண்டாட முடியும்.
திமுக அதிமுக லஞ்ச -ஊழலில் ஊறித்திளைத்தக் கட்சிகள் என்றால், பாஜக லஞ்ச - ஊழலில் பழம் தின்று கொட்டைப் போட்டக் கட்சி!
லஞ்சம்-ஊழல் பிரச்சனைதான் இந்த தேர்தலில் பிரதானப் பிரச்சனை! மக்கள் நொந்து வெந்து கிடக்கிறார்கள்! தீர்மாணிக்கும் காரணியாக லஞ்ச-ஊழல் இருக்கும்!
---\\\
ஓங்குக ஊடக 'சொதந்திரம்'
ஓங்குக ஊடக 'சொதந்திரம்'
நம்ம 'மகாஜனம்' பெரும்பாலும் அவங்கவங்க 'அறிவ' வளர்த்துக் கொள்ள படிக்கும் தமிழ் நாளிதழ்களில்...
அப்ப தினமணி...
இந்த ரெண்டிலும்,
இன்று 23.3.16 விடுதலைக்கு 'தூக்கு கயிறை முத்தமிட்ட'
அந்த மூவர்...
'பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்' பற்றி எந்த நினைவு குறிப்பும் இல்ல!
ஆனா...
ஒன்னு வந்திருக்கு தினமணியில...
மத்திய அரசின் 'வெளம்பரம்'
ஓங்குக ஊடக 'சொதந்திரம்'
---\\\
"இன்று முதல் தூக்கம் கோவிந்நா கோவிந்தா..!"
"இன்று முதல் தூக்கம் கோவிந்நா கோவிந்தா..!"
'பூஜியத்தோடு பூஜியம் சேர்ந்தால் புரியோஜனம் இல்லை' என்கிறார் பாஜக தமிழிசை! அவர் டாக்டர் ஆயிற்றே! அதனால் அவர் கணக்குல கொஞ்சம் வீக் போலும்! (குமாரசாமி போல)
மக்கள் நலக் கூட்டணியில் 4 தலைவர்களோடு, தேமுதிக தலைவர் விஜய்காந்த் 5வது தலைவராக இணைந்தார்! நம் கண்களுக்கு அவர்கள் 5 ஆக தெரிகிறார்கள்.
கணக்குலத்தான் வீக் என்றால், கண் பார்வையிலும் வீக்கா? டாக்டரம்மா ஆச்சே..! சீக்கிரம் கண்களை செக் அப் செய்து, கண் கண்ணாடி போட்டு பாருங்கள்... "பஞ்ச பாண்டவர்கள்" உங்கள் முன் நிற்பது தெரியும்!
எப்படியோ தமிழிசைக்கு இன்று முதல் தூக்கம் கோவிந்நா கோவிந்தா..!
தமிழிசைக்கு மட்டுமா??????
----\\\\
மனதை வருடிய.. அழகு ராஜா..
மனதை வருடிய.. அழகு ராஜா..
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றிய அமைப்பு கூட்டத்திற்கு இன்று சென்றேன். 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற அக்கூட்டத்தில் ஒரு துரு துரு குழந்தை என் மனதை ஆழ வருடிக்கொண்டிருந்தான்.
விசாரித்ததி்ல்.. பிறக்கும் போதே 2 கைகள் இல்லை. இடது கால் மட்டும் தரையில்.. அதுவும் கோணலாக.. வலது காலும் கோணலாக.. பாதியில்..! ஏழை விதவை தாய்.. அரசின் எந்த உதவியும் இல்லை.. அவனிடம் பேசினேன்.. படிக்கிறியா..? ..ம்ம் 1-ஆவது..!
பேரென்ன..? .. அழகு ராஜா..!!
----\\\\
சேலம்: உற்சாக கொண்டாட்டம்-ஆர்ப்பரிப்பு!
சேலம்: உற்சாக கொண்டாட்டம்-ஆர்ப்பரிப்பு!
மக்கள் நலக் கூட்டணி-தேமுதிக தேர்தல் தொகுதி உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று மாலை 23.3.16 சேலம் மாநகரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில்... மக்கள் நலக் கூட்டணியினர்... அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டம்-ஆர்ப்பரிப்பு!
சிபிஎம் மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு, சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ.மோகன், மதிமுக மாநகர மாவட்டச் செயலாளர் ஆ.ஆனந்தராஜ், விசிக மாநகர பொருளாளர் சுஹைல் ரகுமான்... மற்றும் சிபிஎம் வடக்கு, மேற்கு மாநகர செயலாளர்கள் எம்.முருகேசன், எம்.கனகராஜ் உள்ளிட்டு நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்!
முன்னதாக கொடிகள் பிடிக்கக்கூடாதென காவல்துறை தடைவிதித்தனர்; அதனால் அவர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் பதட்டம் நிலவியது...!
----\\\\
தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியோடு உடன்பாடு எட்டிருப்பது வரலாற்று திருப்பம்!
தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியோடு உடன்பாடு எட்டிருப்பது வரலாற்று திருப்பம்!
ஆம், தமிழகம் மாற்று அரசியலுக்கு தயாராகி விட்டது! அதற்கு இன்று கால்கோல்விழா இனிதே நிறைவேறியது!
இனி, திமுக அதிமுக அரசியலுக்கு விடை கொடுக்கும் காலம்... அந்திமகாலம்... ஆரம்பம்!
அடுத்த ஆட்சி தமிழகத்தில் கூட்டணி ஆட்சியே; அது தேமுதிக-மநகூ ஆட்சியே!
----\\\\
"ஆறுதல்! அருமை! நன்றி!"
"ஆறுதல்! அருமை! நன்றி!"
இன்று 24.3.16 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் எதிர்பார்த்த மாதிரி... ஞானி, பத்ரி, ஜென்ராம்... முதல் பாகத்தில் பத்ரியின் ஆய்வு அருமை; ஞானியின் சங்கடமும் அவரை, ஜென்ராம் கன்வின்ஸ் (பத்ரியும் கூட) செய்ய முயற்சி அல்லது கள யதார்த்தை எடுத்து இயம்பிய விதமும் அதைவிட அருமை! சபாஷ்!
2வது பாகத்தில் அதிமுக... சரத்குமாருக்கு மீண்டும் 'இடம்' தந்ததும், திமுக முஸ்லீம் லீக் க்கு '5இடம்' ஒதுக்கியதும், மநகூ க்கு இவர்கள் 'இடம் பெயர்ந்து' விடக் கூடாதென அவசரம் தவிர வேறென்ன? அதற்கு பதிலாக அவர்களின் 'தாராள மனது' என்பது போல் விவாதம் இருந்தது பொருந்தவில்லை!
3வது பாகத்தில்... 'சந்தர்ப்பவாதம், சமரசம் போன்ற நாமகரணங்கள் சூட்டப்பட்டிருக்கிறதே... அது அப்படியா?' என தலைவர்களின், பிரமுகர்கள் கருத்து அலசப்பட்டத்தில், மிகவும் 'அடி' வாங்கியது, 'இது எங்கள் கொள்கை'க்கு கிடைத்த வெற்றி' என தமிழிசை கருத்துதான்!
இறுதியாக--
மநகூ-தேமுதிக இணைந்தது குறித்து... இந்த 3 ஆளுமைகளிடம் சிறுசிறு கருத்து இருந்தாலும், பொதுவாக ஆதரவு இருப்பதை வெளிப்படுத்தியது ஆறுதலே! அதிலும் பத்ரியின் 'இது சந்தர்ப்பவாதம் அல்ல; ஆரம்பம் முதலே தேமுதிக, தமாக வை மநகூ அழைத்தே வந்தது; ஓரிரு சமரசம் இருக்கலாம்; ஆனால் இது வரவேற்க தக்கதே' என்றதற்கு மற்ற இரு ஆளுமையும் மவுனம் மூலம் ஆதரவு தந்தது ஆறுதல்! அருமை! நன்றி!
---\\\
"பாண்டவர் அணி... வெல்வது உறுதி..!"
"பாண்டவர் அணி... வெல்வது உறுதி..!"
##
"தமிழக அரசியல் வரலாற்றில் இது ஒரு புதிய திருப்புமுனை; எங்கள் அணிக்கும் அதிமுகவுக்கும் நேரடி போட்டி..!"
-ஜி.ராமகிருஷ்ணன்.
"திமுக அதிமுகவை எங்கள் கூட்டணி வீழ்த்தும்; மக்கள் நலக் கூட்டணி அதிமுகவுக்கு சாதகமானது என்ற விமர்சனம்- அதிமுகவை கடுமையாக எதிர்க்கிற தேமுதிகவுடன் உடன்பாடு கண்டதன் மூலம் வீழ்ந்தது; மநகூ க்கும் அதிமுகவுக்கும் தான் தேர்தலில் போட்டி"
-திருமாவளவன்.
"அந்த பக்கம், இந்த பக்கம் சாய்ந்து விட்டேன் என்றார்கள்; ஆனால் மக்கள் நலக் கூட்டணியுடன் என்னை தெய்வம் இணைய வைத்துள்ளது"
-விஜய்காந்த்.
"மக்கள் நலக் கூட்டணிக்கும், தேமுதிக தொகுதி பங்கீடு உடன்பாடு; விஜய்காந்த் முதல்வராக பொறுப்பேற்றார்; தமிழகத்தில் அப்போது கூட்டணி மந்திரி சபை அமையும்"
-வைகோ.
"விஜய்காந்த் தர்மர்; வைகோ அர்ச்சுனர்; திருமாவளவன் பீமன்; முத்தரசன் சகாதேவன்; ஜி.ராமகிருஷ்ணன் நகுலன் என நாங்கள் பஞ்ச பாண்டவர்கள்; 100 கவுரவர்கள் எதிர்த்தாலும் எங்கள் அணி வெல்லும்"
-இரா.முத்தரசன்.
----\\\\
மக்கள் நலக் கூட்டணிக்கு சாதகம்!
மக்கள் நலக் கூட்டணி+ தேமுதிக கூட்டணிக்கு சாதகம்! அதிமுக + திமுக கூட்டணிக்கு பாதகம்!
மக்கள் நலக் கூட்டணிக்கு சாதகம்!
மக்கள் நலக் கூட்டணி+ தேமுதிக கூட்டணிக்கு சாதகம்! அதிமுக + திமுக கூட்டணிக்கு பாதகம்!
பாமக + பாஜக களத்தில் காணாமல் போகும்; மக்கள் ஜாதி-மதம் வெறிச்சக்திகளை நிராகரிப்பர்!
மாற்றங்களை உருவாக்கும் கட்சிகள்... மக்கள் நலக் கூட்டணி + தேமுதிக கூட்டணியே! இதன் பலம் இந்த தேர்தலில் நிறுவப்படும்!
ஆம், மக்கள் நலக் கூட்டணி + தேமுதிக கூட்டணி ஆட்சி அமைக்கும்! மக்கள் இக் கூட்டணியே தெரிவு செய்வர்!
களத்தில் மநகூ+தேமுதிக; அதிமுக; திமுக மட்டுமே! ஆம், மும்முனை போட்டியே!
தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்பே இல்லை! மநகூ + தேமுதிக கூட்டணி உறுதியாக அறுதி பெரும்பான்மை பெறும்! ஆட்சி அமைக்கும்!
----\\\\
"ஏன்... எரிச்சலை உமிழ்கிறார்கள்?"
"ஏன்... எரிச்சலை உமிழ்கிறார்கள்?"
கூட்டணி பலன் எத்தகையது? என
இந்து தமிழ் 24.3.16 வாசகர் கருத்துகளில்...
#மிகுந்த பலன் தரும்..... 37%
#ஓரளவு பலன் தரும்....... 26%
#பலன் இருக்காது .......... 37%
ஆம், மக்கள் நலக் கூட்டணி-தேமுதிக இடையிலான உடன்பாடு, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும்
வாசகர்கள் வாக்களித்திருக்கிறார்கள்!
இப்பொழுது தெரிகிறதா..? ஏன் அதிமுக, திமுக, பாஜக, பாமக கட்சிகளும், ஓரிரு அமைப்புகளும் "மநகூ+தேமுதிக அணி" மீது தங்களது "எரிச்சலை உமிழ்கிறார்கள்" என்று!
வெல்வதும், ஆளப்போவதும் மநகூ+தேமுதிக அணியே..! முன்னேறுவோம்!
காலம் பொன் போன்றது! நன்றி... இந்து தமிழ்..!
#
----\\\\
சாபகேடு!
தலைவர்களை முன்நிறுத்தியே அரசியல் நகர்வு தமிழகத்தின் சாபகேடு!
சாபகேடு!
தலைவர்களை முன்நிறுத்தியே அரசியல் நகர்வு தமிழகத்தின் சாபகேடு!
தனிநபர் துதி ஆபத்தானதல்ல; ஆனால் ஆரோக்கியமற்றது.
கொள்கைகள் முன் நிறுத்தப்படும் காலமே பொற்காலம்!
கொள்கையை முன் நிறுத்தும் சிறு வெளிச்சரேகையாக மக்கள் நலக் கூட்டணி.
மக்கள் நலக் கூட்டணி தேர்தலுக்கு பிறகும் தொடர்ந்து பயணித்தால் நன்று!
இன்று 25.3.16 PTTV நேர்படபேசு!
----\\\\
இருமுனைஅரசியலைதூக்கிஎரிந்தாலேஒழிய!
இருமுனைஅரசியலைதூக்கிஎரிந்தாலேஒழிய!
#
இன்று 25.3.16 இரவு 9 மணிக்கு News 7 ?கேள்வி நேரத்தில் சிபிஐஎம் தமிழ்மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ருணன் நேர்காணல் (மின்சாரம் விட்டு விட்டு வந்ததால், விட்டு விட்டுத்தான்)பார்த்தேன்!
மாற்று அரசியலை தமிழகத்தில் முன்னெடுத்து சென்றதில், செல்வதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான பங்களிப்பை மிக அருமையாக எடுத்துரைத்தார்.
மேற்கு வங்கத்தில் நிலவும் மார்க்சிஸ்ட்களை ஒழித்துக் கட்டும், மம்தாவின் அரசியலை ஒழித்துக் கட்டவேண்டிய கள பணிகளையும் எடுத்து இயம்பினார்!
தமிழகத்தில் திமுக அதிமுக என்கிற இருமுனை (இரு துருவ) அரசியலை தூக்கி எரிந்தாலே ஒழிய.. ஜனநாயக மற்றும் இடதுசாரி சக்திகள் வளர்ச்சிக்கு வழியில்லை என்பதை ஆய்வு பூர்வமாக அடுக்கினார். இதுதான் ஹைலைட்!
நெறியாளர் செந்திலும்கூட மிக பொருத்தமான பொறுமையான கேள்விகளை அய்யங்களை முன் வைத்ததும் அருமை!
#
பாஜக...
54 தொகுதிக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிட்டு விட்டாங்கோ..! வாக்காளர்களே..! உஷாருங்கோ..! உஷார்..! எச்.ராஜா, தமிழிசை, வானதி எல்லாம் இருக்கிறாங்கோ..!
முதல்ல பட்டியல் வெளியிட்டு "சாதனை" படைத்திட்டாங்கோ..! டெப்பாசிட்..? டெப்பாசிட்..? டெப்பாசிட்..? டெப்பாசிட்..?
மதவெறி..! மதவெறி..! மதவெறி..! மதவெறி..! அனுமதியோம்..! அனுமதியோம்..!
----\\\\
'92 வயசு'
'கிள்ளிக்கிள்ளி' கொடுப்பாரு...
'92 வயசு'
'கிள்ளிக்கிள்ளி' கொடுப்பாரு...
அப்புறம் இதயத்துல எடம்பாரு...
இப்ப 'அள்ளி அள்ளி' கொடுக்குறாரு...
இதற்கு பேருதான்...
'பழுத்த பழங்கிறதா?' இருக்கும் இருக்கும்!
'92 வயசு'
அனுபவ பழமில்லையா?
எல்லா ருசி யும் தெரியும்! ஆனா...
கணக்கு என்னவோ...
'தப்பு' கணக்குத்தான்!
----\\\\
'கண்ணுக்கு எட்டிய தூரம்'
'கண்ணுக்கு எட்டிய தூரம் எதிரியே இல்ல' ன்னு சொன்னவருக்கு...
'கண்ணுக்கு எட்டிய தூரம்'
'கண்ணுக்கு எட்டிய தூரம் எதிரியே இல்ல' ன்னு சொன்னவருக்கு...
இப்ப காண்பதெல்லாம் எதிரியாக தெரிகிறதோ? எப்படியம்மா இதெல்லாம்..!?
இப்பவே '473' ன்னா..!?
இஸ்...சப்பா..!
இப்பவே கண்ணக்கட்டுதே..!
எத்தன 'கோடி' படையோடு வந்தாலும் இந்த முறை...
'அவுட்... நோ டவுட்டு'
----\\\\
மாலை முரசு கருத்து கணிப்பு.
மாலை முரசு கருத்து கணிப்பு.
எந்த கூட்டணி 2016 தேர்தலில் வெற்றி பெரும்.
1. ம.ந.கூட்டணி - 53%
2. தி.மு.க. கூட்டணி - 17%
3. அ.தி.மு.க. கூட்டணி - 25%
4. பா.ம.க - 1%
5. நாம் தமிழர் கட்சி - 2%
6. பி.ஜே.பி. கூட்டணி - 2%
----\\\\
கருத்துக் கணிப்பு
கருத்துக் கணிப்பு
இன்று NDTV INDIA கருத்துகணிப்பு
#திமுக கூட்டணி -26
அதிமுக கூட்டணி -74
ம.ந. கூட்டணி- 132
பா.ம.க- 2
மற்றவை- 3
அதிமுக திமுக காங்கிரஸ் பாமக பாஜக ஆகிய கட்சிகள் வாயிலும் வயிற்றிலும் "லபோ" "லபோ" ன்னு அடித்துக் கொள்வதற்கு காரணம் தெரிகிறதா?
இதோ மேலே இரு கருத்து கணிப்பு...
#
#பதவி சுகம் சகல பேரத்திற்கும் காரணம்!இடதுசாரிகள் விதிவிலக்கு!
#சமரசம் கட்சிக்கு மட்டுமல்ல (ஊடகம் உள்ளிட்டு) அனைத்திற்கும் பொருந்தும்!
#கூட்டணிக்காகவோ, பொருளீட்டுவற்காகவோ சிலர், சில அமைப்புகள் கொள்கையை விட்டுவிடுவதும் உண்டு!
#அதிமுகவை 474 (கட்சிகள் உள்ளிட்டு) அமைப்புகள் ஆதரிக்கிறதென்றால்... 'விலை'யே; திமுகவும் இதற்கு விதிவிலக்கல்ல!
----\\\\
நெருப்பின்றி புகையுமா?
#'நோட்டீஸ்' என்ன 'போஸ்டரே' விட்டாலும், நெருப்பின்றி புகையுமா? அப்படி பார்த்தால் கருணாநிதி மீதும் ஆயிரம் 'நோட்டீஸ்' விடலாமே! அவர் சொல்வது அனைத்தும் உண்மையா?
நெருப்பின்றி புகையுமா?
#'நோட்டீஸ்' என்ன 'போஸ்டரே' விட்டாலும், நெருப்பின்றி புகையுமா? அப்படி பார்த்தால் கருணாநிதி மீதும் ஆயிரம் 'நோட்டீஸ்' விடலாமே! அவர் சொல்வது அனைத்தும் உண்மையா?
#உண்மையை தவிர சூதேதும் இருப்பதில்லையா கருணாநிதியின் பேச்சில் பேட்டியில்?
#ஆதாரங்கள் அனைத்தையும் விரல் நுனியால் வைத்துக் கொண்டுதான் பேசுவாரா?
#அதுசரி, குற்றமில்லா நெஞ்சம் ஏன் குறுகுறுக்குது? பாஜகவுக்கும் சேர்த்துத்தான்!
#இன்று 26.3.16 news 7 ?கேள்வி நேரம்!
"அதிமுகவிற்கு வாக்கு கேட்கும் TV விளம்பரம்..!"
#
-----\\\\\
"பொதுவுடமை பொக்கிஷம்!"
"பொதுவுடமை பொக்கிஷம்!"
#
தற்செயலாக இன்று 26.3.16 இரவு 10.30 முதல் 11.30 முடிய PTTV இல் "கொடி பறக்குது" என்கிற நிகழ்ச்சி அதிஷ்டவசமாக காண நேர்ந்தது.
அதில் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தோற்றமும், வளர்ச்சியும், அதன் தியாகம், சாதனை என அனைத்து கோணங்களிலும் மிக எழுச்சிமிக்க எபிசோடாக இருந்தது; அது அருமை பெருமை!
இதில் தோழர்கள் என்.சங்கரய்யா, டிகே.ரங்கராஜன், ஜி.ராமகிருஷ்ணன், தா.பாண்டியன், சி.மகேந்திரன், லெனின், அருணன், கே.கனகராஜ், கே.வரதராஜன், ஆறுமுகநயினார் போன்றோர்களின் அனுபவச்செரிவுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மிக அருமையாக, நேர்த்தியான விளக்குரையுடன் தந்திருக்கிறார்!
இப்படி வரலாற்று சிறப்பு நிகழ்வுகள் பெட்டகமாக தந்துள்ள புதிய தலைமுறை டிவிக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை!
குறிப்பு: இந்த பெட்டகத்தை தனி CD யாக வந்தால், அல்லது ஏதேனும் வகையில் மேலும் மேலும் மக்களிடம் கொண்டு செல்வது அவசியம்! அதற்கான ஏற்பாடுகளை செய்தால் தமிழகம் எழுச்சி கொள்ள உதவும்... குறிப்பாக இளையதலைமுறைக்கு..!
#
-----\\\\
"நட்டுக்கொள்பவையல்ல!"
"நட்டுக்கொள்பவையல்ல!"
#
சீரழிவுகளில் இருந்து பேரழிவுக்கு! என இன்று 27.3.16 இந்து தமிழில் சமஸ்... இடதுசாரிகளுக்காக குடம்குடமாக கண்ணீர் வடித்துள்ளார்! அவரின் இந்த கண்ணீருக்கு முதலில் நன்றியை உரித்தாக்குவோம்!
மக்கள் நலக் கூட்டணியை எப்பொழுது இடதுசாரி கூட்டணி என்று சொன்னோம்; சொல்லாத ஒன்றை சொல்லி புலம்புவதேன்? மநகூ குறைந்தபட்ச செயல்திட்டத்தை வெளியிட்ட... அன்றே இந்த அணியில், தேமுதிக தமாகா வர வேண்டும் என்றே மார்ச் 23 வரை சொல்லியே வந்தோம்!
அப்படியிருக்க, தேமுதிக வந்தவுடன்... தற்போது போச்சி போச்சி எல்லாம் போச்சி இடதுசாரிகள் நெருப்பு கோழியாக நட்டுக்கொண்டு விட்டார்கள் என்று நடுப்பக்கம் கட்டுரை ஏன்?
"இடதுசாரிகள் தங்களது உயரம் என்ன என்பதை எண்ணாமல்--- இப்படி ஆகி விட்டார்கள்; மக்களவை தேர்தல் முடிவில் இருந்து இவர்கள் பாடம் கற்கவில்லை"
என சட்டபேரவை தேர்தல் முடிவுக்கு பின் எழுத முடியாமல் போய்விட்டதே... இந்த மாற்று அணி (தேமுதிக+மநகூ) ஆட்சியை பிடித்து விடும்போல தெரிகிறதே என்ற எதிரிகளின் புலம்பலை-- இன்னொரு கோணத்தில், சமஸ் சும் இந்த அணி வெற்றியை பறைச்சாற்றி உள்ளார் என்றே தோன்றுகிறது! அதற்காக சமஸ் க்கு மீண்டுமொரு நன்றி!
ஆம், சமஸ் போல், ஒரு வெளிநாட்டு (சீனா)தலைவர் மாவோ சொல்வதை இங்கே பதிவிடுவோம்-- "எப்பொழுதெல்லாம் நீ வெ(தி)ட்டப் படுகிறாயே... அப்பொழுது நீ வளர்கிறாய் என்றர்த்தம்!"
#
---\\\\
"லோட்டஸ் டிவியின் லேட்டஸ் நியூஸ்!"
"லோட்டஸ் டிவியின் லேட்டஸ் நியூஸ்!"
#
தமிழில் பாஜக சார்பில் லோட்டஸ் டிவி இயங்கி வருவது ஓல்டு செய்தி! லேட்டஸ் செய்தி என்னவென்றால்... அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த சேலம் புகைபட கலைஞர் ரமேஷ் (38) சமீபத்தில் சாலை விபத்தில் அகால மரணமானார்.
அப்பொழுது தான் தெரிந்தது லோட்டஸ் டிவியின் லேட்டஸ் நியூஸ்! 8 மாதம் சம்பளமில்லை; மரணமடைந்த அவரையோ, அவரது குடும்பத்தையோ இன்றுவரை கண்டுக் கொள்ளவில்லை! டிவி நிறுவனம் இதுவரை வந்து பார்க்கவும் இல்லை; ஒரு பைசாவும் கொடுக்கவில்லை! என்ன கொடுமை! இரண்டு பெண்குழந்தை உள்ளனர்; ஏழ்மையான குடும்பம்; இவர் தலித் சமூகத்தை சார்ந்தவர் என்பது குறிப்பிட தக்கது. இதுதான் பாஜக சார்பு டிவி நிறுவனத்தின் ஊழியரை பாதுக்காக்கும் லட்சணம்!
மாவீரன் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவுநாள் அனுசரித்து, இன்று 27.3.16
டிஒய்எப்ஐ ரத்ததானம் மூலம் கிடைக்கப் பெற்ற நன்கொடை ரூ 10,000 யை ரமேஷ் குடும்பத்திற்கு சேலம் பிரஸ் கிளப்
நிர்வாகி ரத்தணகுமாரிடம், DYFI மாவட்ட செயலாளர் N.பிரவீன்குமார் வழங்கினார். உடன் மாவட்ட பொருளாளர் வி.வெங்கடேஷ் மற்றும் வடக்கு மாநகர நிர்வாகிகள் கதிர்வேல், சசிக்குமார், சதீஷ்குமார் உள்ளிட்டோர்...
இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட செய்தியாளர்களும், கேள்வி பட்ட செய்தியாளர்களும் வாலிபர் சங்கத்தின் "குருதி தானம்" பெற்ற நன்கொடையை ரமேஷ் குடும்பத்திற்கு தந்துதவியதை போற்றி பாராட்டினர்!
#
-----\\\\
"வர்க்கப் போராட்டம் 2 கால்களில் நிற்கிறது..!"
"வர்க்கப் போராட்டம் 2 கால்களில் நிற்கிறது..!"
#
சமஸ்: இன்றைய சூழலில், சமூக விடுதலையில் சாதிய விடுதலைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறீர்கள்?
யெச்சூரி: இந்தியாவில் வர்க்கப் போராட்டம் 2 கால்களில் நிற்கிறது. 1. பொருளாதார ஒடுக்குமுறை ஒழிப்பு. 2. சாதிய ஒடுக்குமுறை ஒழிப்பு. இந்த 2 கால்களில் நடக்காமல், இங்கு வர்க்கப் போராட்டம் நகராது. ஆகவே சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான செயல்பாட்டை எங்கள் அடிப்படைகளில் ஒன்று.
#
(இதுபோல் இன்னும் பல வினாக்களும், விடைகளும் இந்து தமிழில் இன்றும் 28.3.16 நாளையும்..!)
----\\\
"பியூஸும் கோயால்ஸும்!"
"பியூஸும் கோயால்ஸும்!"
பியூஷ் கோயல் அணுக முடியாத முதல்வரை, அருண்ஜெட்லி, ரவி சங்கர் பிரசாத், நரேந்திர மோடி எல்லாம் அணுகினரே அது எப்படி?
ஆட்சி மாறினால் மட்டும் மின்சாரம் கிடைக்கும் என்பது மாற்றாந்தாய் மனப்போக்கே தவிர வேறென்ன?
அதிமுக பாஜகவுக்கு பத்து சீட்டு கொடுத்தால், மின்சாரம் கிடைக்குமா? எளிதில் அணுகலாமா?
பியூஸ் கேயால் குற்றச்சாட்டு மாநில நலனுக்கல்ல; தேர்தல் நலனுக்கே! மாநில நலனுக்கு என்றால், ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளாக எங்கே போனார்கள்!
மத்திய தொகுதிப்பில் இருந்து 'கம்மி' விலைக்கு மின்சாரம் தந்தும், அதை மாநில அரசு வாங்க மறுத்ததா? என்பதையும் சேர்த்தே சொல்லலாமே!
இந்த குற்றசாட்டு சொல்ல, பாஜக திமுக பாமக அருகதை அற்றவைகளே! காரணம்-- இவர்கள் எல்லாம் மத்தியிலோ, மாநிலத்திலோ ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, மின்சாரத்திற்கு சிறு துரும்பும் அசைக்காமல்-- அதிமுகவை போல் 'வாளாவெட்டி'யாக இருந்தவர்கள்.
குற்றசாட்டு சொல்ல தகுதி படைத்தது-- தேமுதிக+மக்கள் நலக் கூட்டணியே!
----\\\\
பயமா?
"வைகோவை கூட்டணியில் இருந்து விஜய்காந்த் வெளியேற்ற வேண்டும்" -எச்.ராஜா.
பயமா?
"வைகோவை கூட்டணியில் இருந்து விஜய்காந்த் வெளியேற்ற வேண்டும்" -எச்.ராஜா.
"ஏன்? உங்க குட்டு ஒடஞ்சி போயிருமின்னு பயமா? மொதுலு ஊ வேலய பாரு; மூக்க நொலைக்கிறத விடு! நாயி மூக்குத்தான் போப்பம் புடிக்கும்! மனுசன் மூக்கு வாசனயத்தான் புடிக்கும்!"
"மனிதன் மலத்தை மனிதன் அள்ளுவது ஆன்மீக பணி என்றால், அதை அய்யா மோடியாரும் செய்யலாமே!"
---\\\
அருகியது- அரசு மின்சாரம்!
பாஜக, அதிமுக அரசுகள் மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள் அல்லது ஏமாற்றுகிறார்கள்.
அருகியது- அரசு மின்சாரம்!
பாஜக, அதிமுக அரசுகள் மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள் அல்லது ஏமாற்றுகிறார்கள்.
மின் திட்டங்கள் நிறைவேற்ற மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படும் மக்கள் நலக் கூட்டணி+தேமுதிக ஆட்சி தேவை!
மக்கள் நலக் கூட்டணி+தேமுதிக ஆட்சி தான் மத்திய அரசை தட்டிக்கேட்கும்!
அதிமுக, திமுக காகிதபுலிகள்!
இனி, அதிமுக திமுக அரசுகளால் தமிழகத்தின் மின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது!
திமுக அதிமுக ஆட்சியில் பெருகியது- தனியார் மின் முதலாளிகள்! அருகியது- அரசு மின்சாரம்! சுருங்கியது- மக்கள் தேவை!
-----\\\\
ஆட்சியை பிடிக்கும்!
அதிமுக திமுக பலவீனம் என்பது கண்கூடு!
இனி பிரதான கட்சிகள் ஜம்பம் எடுபடாது!
அதிமுக திமுக கட்சிக்கு இனி இறங்குமுகம்!
இந்த தேர்தலில் அதிமுக திமுக ஆட்சிக்கு வர முடியாது! மக்கள் நலக் கூட்டணி + தேமுதிக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் அதிசயம் நிகழத்தான் போகிறது!
ஆட்சியை பிடிக்கும்!
அதிமுக திமுக பலவீனம் என்பது கண்கூடு!
இனி பிரதான கட்சிகள் ஜம்பம் எடுபடாது!
அதிமுக திமுக கட்சிக்கு இனி இறங்குமுகம்!
இந்த தேர்தலில் அதிமுக திமுக ஆட்சிக்கு வர முடியாது! மக்கள் நலக் கூட்டணி + தேமுதிக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் அதிசயம் நிகழத்தான் போகிறது!
#இன்று 29.3.16 news 7 ?கேள்வி நேரம்!
----\\\\
"வெற்றிப் பாதை" யில் யார்?
இங்கு- "வெற்றிப் பாதை" யில் யார்? எதுங்க "சாமியோவ்!"
இங்கு- "வெற்றிப் பாதை" யில் யார்? எதுங்க "சாமியோவ்!"
வெற்றிப் பாதையில் மம்தா பானர்ஜி என்று இன்று 30.3.16 மட்டுமல்ல, தொடர்ந்து இந்து தமிழ்- வாரக்கணக்கில், குதூகலமாக தினம் தினம் அரை செய்தி கட்டுரை தந்து புழகாயுதம் அடைந்து வருகிறது. இது- "தேசிய நாளிதழ்" என்பதை ஒத்துக் கொள்கிறோம்!
ஆனால்- மற்ற ஐந்து மாநிலங்களை பற்றியோ, அதைவிட இதற்கு முன் பீஹார் மாநில தேர்தல் நடந்தபோதோ, இந்தளவுக்கு செய்திகளை முந்தி தரவில்லையே ஏன்? எல்லாம் "வர்க்க அரசியலுங்கோ!"
அங்கு மீண்டும் இடது முன்னணி ஆட்சி நிச்சயம் ஆகிவிட்டது; அது பிடிக்காமல் இந்து செய்தியாளர் எம்.சண்முகத்திற்கு இருக்கும் போலிருக்கு! இருக்கட்டும்!
தமிழ்நாட்டிலும் தேர்தல் நடக்கிறது என்பதையும் இங்கே பதிவு செய்து வைப்போம்! தெம்பும், தைரியமும் இருப்பின், இங்கு- "வெற்றிப் பாதை" யில் யார்? என தினம் தினம் பக்க கணக்கில் எதுங்க "சாமியோவ்!"
----\\\\
குயில்!
காக்கைக்கும், கழுகுக்கும் மாற்று குருவி அல்ல; குயில்!
குயில்!
காக்கைக்கும், கழுகுக்கும் மாற்று குருவி அல்ல; குயில்!
ஆம், திருடருக்கு மாற்று திருடர்தான்! திருடருக்கு மாற்று யோக்கியர் அல்லர்! இது திமுக அதிமுக அகராதி போலும்!
ஆம், கலைஞர் கனவானே... செவிடருக்கு மாற்று, குருடர்! குருடருக்கு மாற்று ஊமையர்! இப்படி எதையாவது 'ரீல்' விட்டுக்கிட்டே இருங்க! மக்கள் ஏமாளிங்க என்று!
காலம் மாறிவிட்டது! மீண்டும் உங்களுக்கு மட்டுமல்ல, அம்மாவுக்கு சேர்த்தேதான் 18 ஆண்டு வனவாசம் உறுதி! உறுதி! காக்கைக்கும், கழுகுக்கும் மாற்று குருவி அல்ல; குயில்! ஆம் தேமுதிக + மக்கள் நலக் கூட்டணி என்கிற குயில் கூட்டமே!
----\\\\
"மாற்று!"
"மாற்று!"
##
அரசியல் கட்சிகள்-- ஒருவகை முதலாளிகளுக்கு ஆதரவு! இன்னொரு வகை உழைப்பாளிகளுக்கு ஆதரவு! இவை இரண்டும்தான் ஒன்றுக்கொன்று மாற்று! இது அடிப்படை!
இடதுசாரிகள் தான் இன்றைய அரசியல் கட்சிகளுக்கு மாற்று! ஆம், உழைப்பாளிகள் நலன் முன்னிட்டு இடதுசாரிகள் இதர அரசியல் கட்சிகளுடன் தேர்தலில் உடன்பாடு காணும்; இதுவும்கூட தனது சொந்த பலத்தை அதிகரித்து, அதன்மூலம் உழைப்பாளின் நலனை பாதுகாக்கத்தான்!
அரசியல் கட்சிகள் தற்போது கொள்கையை மாற்றாக வைக்காமல், நபர்களையே மாற்றாக வைக்கின்றன! அது தமிழகத்தில் நடக்கிறது! இடதுசாரிகள் வலுவாக உள்ள மேற்கு வங்கம், கேரளா, திரிபுராவை தவிர நாடு முழுவதும் நபரை முன்னிருத்தியே "மாற்று" என்கின்றனர்!
அங்கே காங்கிரஸ், பாஜக; இங்கே திமுக, அதிமுக இவற்றின் கொள்கை (உழைப்பாளிகளை சுரண்டுவது; முதலாளிகளை வாழவைப்பது) ஒன்றே! தலைவர்களும், கட்சி பெயர்களும்தான் வேறுவேறு!
#இன்று 30.3.16 PTTV நேர்படபேசு!
----/////
நொறுங்க போகிறது!
திமுகவுக்கு மாற்று அதிமுகதான் என்பதும், அதிமுகவுக்கு மாற்று திமுகத்தான் என்பதும் இந்த தேர்தலில் நொறுங்க போகிறது!
திமுகவுக்கு மாற்று அதிமுகதான் என்பதும், அதிமுகவுக்கு மாற்று திமுகத்தான் என்பதும் இந்த தேர்தலில் நொறுங்க போகிறது!
கருணாநிதி, ஜெயலலிதா கனவு தகரப்போகிறது! மக்கள் நலக் கூட்டணி+தேமுதிக அணி வீழ்த்தப்போகிறது அதிமுக திமுகவை! திமுக அதிமுக வுக்கு வலுவான மாற்று உதயமாயிற்று!
#இன்று 30.3.16 news 7 ?கேள்வி நேரம்!
#
"திமுக அதிமுக ஆட்சிகளில் தமிழகம் முன்னேறவில்லை; மாறாக கீழிறங்கியே வந்துள்ளது! இரண்டும் ஒன்றுதான்!"
என்பதற்கு 'புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்' வெளியிட்டுள்ள இந்த விபரமே சாட்சி!
இது ஒன்றே போதும் அதிமுக திமுக ஆட்சிகளை வீட்டுக்கு அனுப்புவதற்கு அல்லவா?
எனவே இதிலிருந்து-- தமிழகம் வளர்ச்சி பாதையில் முன்னேற்றம் காண ஒரே வழி... ஒரே அணி-- "தேமுதிக+மக்கள் நலக் கூட்டணி"யே தவிர வேறெதுவும் கிடையாது!
ஆதரிப்போம் தேமுதிக+மநகூ அணியை! இதுவே தமிழகத்தின் இன்றைய விடிவெள்ளி!
#
"திமுக எந்த வகை ட்டீம்?"
#
தேமுதிக+மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ மீது, ஜாமீனில் வெளிவராத அளவில் வழக்கு பதிவு செய்து உள்ளது அதிமுக அரசு!
சிறுதாவூர் ஜெ மாளிகையில் கன்டெய்னர் லாரிகளில் பணம் கொண்டு சென்று பதுக்கினர் என்ற வைகோ சொல்லி, ஒருவாரம் கழித்து "விரைந்து" சென்று "சோதனை" நடத்தியதில், அவ்வாறு ஏதுமில்லை என உதடுகளை பிதுக்கிய, போலீஸ் வைகோ மீது வழக்கு போட்டு உள்ளது!
"பீ ட்டீம்... பீ ட்டீம்..." என ஓயாது ஓதினார்களே அவர்கள் அதுதான் திமுக பெருமகனார்கள் எல்லாம் இப்பொழுது என்ன சொல்லப் போகிறார்கள்?
எங்கே போனார்கள்?
அவர்கள் இந்த அராஜக வழக்கை கண்டித்து அறிக்கையாவது விடுவார்களா?
திமுக எந்தவகை ட்டீம்? அதிமுகவின் ஏ ட்டீமா? (எதிரி ட்டீமா?) அல்லது பீ ட்டீமா? (புரோ ட்டீமா?) விளக்குவார்களா? சன் டிவி மீதும் வழக்கு போட்டுள்ளதால், திமுக அறிக்கை விட்டாலும் விடுவார்கள் என்றும்கூட "அரசியல் நோக்கர்கள்" கூறுகிறார்கள்!
#
---\\\\
ஊழல் படிந்த கரங்களே!
அதிமுக: சொத்துக் குவிப்பு, திமுக: 2ஜி அலைக்கற்றை ஆகிய ஊழல் வழக்குகள்- தேர்தல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்; பாஜக தனியாக நிற்பதால் அதை வேகப்படுத்தும்! சந்தேகம் வேண்டாம்!
ஊழல் படிந்த கரங்களே!
அதிமுக: சொத்துக் குவிப்பு, திமுக: 2ஜி அலைக்கற்றை ஆகிய ஊழல் வழக்குகள்- தேர்தல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்; பாஜக தனியாக நிற்பதால் அதை வேகப்படுத்தும்! சந்தேகம் வேண்டாம்!
அதிமுக திமுக மீதான ஊழல் வழக்குகள்- "தேமுதிக+ மக்கள் நலக் கூட்டணி" வெற்றிக்கே வித்திடும்! காரணம்- பாஜக பாமக வும் ஊழல் படிந்த கரங்களே; கட்சிகளே!அதனால் இக்கட்சிகளை மக்கள் ஏற்க மாட்டார்கள்!
----\\\\
"ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுவுது!"
"ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுவுது!"
வெக்கத்தப்பத்தி பேசுனுமின்னா... மொதல்ல ராமதாஸ் தூக்குல தொங்குட்டும்... அப்புறம் பேசட்டும்! நான் சொல்றது அவரே சொன்னதுதான்-- 'ஏங் குடும்பத்துல யாராவது தலைமைக்கு வந்தா... நான் கரண்டு கம்பத்தல தூக்குல தொங்குவேன்' ன்னு அவரு சொன்னதுதான்!
அப்புறம், ஜெயலலிதா கட்சியோட கூட்டு சேந்தா, 'பெத்த தாயிகிட்ட போனதுக்கு சமம்' ன்னு சொல்லிபுட்டு, போன கட்சி வெக்கம் கெட்ட கட்சியா? எது வெக்கம் கெட்டது?
தலித் தலைமைப் பொறுப்புள இல்லன்னு செந்தில்க்கு தெரியுமா? தெரிஞ்சா பேசனும்; தெரியலன்னா கேட்டு தெரிஞ்சிக்கிட்டு பேசனும். அதவிட்டுட்டு ஒளறக்கூடாது குடிகாரனாட்டம்! கம்யூனிஸ்ட்களை வம்புக்கு இழுப்பதும், கண்ணாடி கூண்டுக்குள் இருந்த கல்லெறிவதும் ஒன்னு!
எதோ மத்திய மந்திரியா இருந்தபோது அடிச்ச கொள்ளைய வைச்சி, வெளம்பர கம்பெனி காரங்கிட்ட பணத்தைக் கொட்டி சினிமா சூட்டிங் நடத்திக்கிட்டு இருக்கிறீங்க; செய்யுங்க! தேர்தல் முடிஞ்சதும் மெரினாவுல சுரண்டல் விற்கக்கூட முடியாத நெலமத்தா ஆகப்போவுது; அதுக்குள்ள வீணா துள்ளாதீங்க!
கம்யூனிஸ்ட்களோடு தேவயில்லாம வம்புக்கு வரவேண்டாம்! திமுக அதிமுக வே தனியா நிக்க தாளம் போட்டுக்கிட்டு இருக்காங்க! இந்த சூழல்ல உங்களுக்கு 'முதல்வரு' பகல் கனவு வேற! அய்யோ! அய்யோ!
-----\\\\\
'தேசபக்த' பணி!
பிரமுகர்கள் கட்சி மாறுவது சுத்தச் சுயலாபமே! சிறிய கட்சிகள்- "ஆசை" காட்டி உடைக்கப் படுகிறது!
'தேசபக்த' பணி!
பிரமுகர்கள் கட்சி மாறுவது சுத்தச் சுயலாபமே! சிறிய கட்சிகள்- "ஆசை" காட்டி உடைக்கப் படுகிறது!
திமுக அதிமுக 'ஆழமரமாக' இருக்கும் வரை சிறிய கட்சிகள் உடைக்கப்படும் 'தேசபக்த' பணி நடந்துக் கொண்டே இருக்கும்!
இன்று 1.4.16 PTTV நேர்படபேசு!
----\\\\
ஓரவஞ்சனை ஊடகங்கள்..!
ஓரவஞ்சனை ஊடகங்கள்..!
##
இன்று 1.4.16 டைம்ஸ் நவ் இல் அதிமுக 130 சீட்டு மட்டுமே பிடிக்கும் என்ற கருத்தை விழுந்து விழுந்து போடும் ஊடகங்கள்- அன்று 26.3.16 இல் தேமுதிக+மக்கள் நலக் கூட்டணி அணி 132 சீட்டு பிடிக்கும் என்று என்டிடிவி; மாலை முரசு 53% என கருத்து போட்டதை கமுக்கமாக அமுக்கிவிட்டனவே ஏன்?
##
மீண்டும் அந்த பதிவு இதோ...
[3/26, 14:35] +91 98840 13761: மாலை முரசு கருத்து கணிப்பு.
எந்த கூட்டணி 2016 தேர்தலில் வெற்றி பெரும்.
1. ம.ந.கூட்டணி - 53%
3. அ.தி.மு.க. கூட்டணி - 25%
4. பா.ம.க - 1%
5. நாம் தமிழர் கட்சி - 2%
6. பி.ஜே.பி. கூட்டணி - 2%
[3/26, 18:48] +91 90476 66676: NDTV (india) 25-03-2016 கருத்துக் கணிப்பு
##
இன்று NDTV INDIA கருத்துகணிப்பு
#திமுக கூட்டணி -26
அதிமுக கூட்டணி -74
ம.ந. கூட்டணி- 132
பா.ம.க- 2
##
----\\\\
"முயற்சித்தால், முடியும்!"
"முயற்சித்தால், முடியும்!"
##
நண்பர்களே, வணக்கம்! நேற்று 1.4.16 தொலைக்காட்சி விளம்பரங்களில் கீழ்காணும் விளம்பரம் மாற்றப்பட்டு இருப்பதாக தெரிகிறது!
ஆமாம், எதையும்- முயற்சித்தால், செய்ய முடியும் என்பதற்கு இதொரு அனுபவம்! இதை எல்லாம் கவனிக்கவா போகிறார்கள்? என்ற சந்தேகத்தில் தான் ' வலை' யில் பதிவிட்டேன் கடந்த 26.3.16இல்! ஆனால்...
##
இதோ- அந்த பதிவு மீண்டும்..!
##
"அதிமுகவிற்கு வாக்கு கேட்கும் TV விளம்பரம்..!"
#
"தூய்மை வெண்மைக்கான தேர்தலில் உங்கள் ஓட்டு யாருக்கு? MCR...க்கு! MCR... 234 தொகுதிகளிலும் முதலிடம்!" என TV விளம்பரம் வருகிறது.
"MCR... MCR... MCR..." என்பது
என உச்சரிப்பில்
"MGR... MGR... MGR..."
என மறைந்த முதல்வர் MGR பெயரை நினைவு படுத்துகிறது.
இது அதிமுகவிற்கு வாக்கு கேட்கும் விளம்பரம் போல் வருகிறது.
ஆகையால் இதை (TV விளம்பரம்) உடனடியாக தடைச் செய்யப்பட வேண்டும்! செய்யுமா? தேர்தல் கமிஷன்..!
#
----\\\
பலமுனை போட்டி!
பலமுனை போட்டி!
பலமுனை போட்டி அதிமுக திமுக இரண்டையும் பலவீனப்படுத்தும்! அதிமுக ஆட்சியை இழக்கும்; தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி ஆட்சியை பிடிக்கும்! ஸ்டாலின் பாஷையில் சொன்னால்- இது "தானா" நடக்கும்!
திமுகவின் திமிரான (கூட்டணிக்கு வராதக் கட்சிகளை உடைக்கும்) போக்காலேயே தோல்வியைத் தழுவும்! ஆம், தன் கையாலே தன் தலைமேல் மண்ணைப் போட்டுக் கொண்டிருக்கிறது!
வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி விவாதங்களிலேயே அதிமுக திமுக- மக்களின் உச்சகட்ட எரிச்சலுக்கு ஆளாகி உள்ளது; ஆம், அது இவர்களின் தோல்விக்கான அறிகுறி!
அதிமுக 130 ஜெயிக்கும் என்ற கருத்துக் கணிப்புக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழ் ஊடகங்கள் கடந்த 26.3.16 அன்று- தேமுதிக+மக்கள் நலக் கூட்டணி 132 எம்எல்ஏ ஜெயிக்கும் என வந்த கருத்துக் கணிப்பைக் கண்டும் காணாமல் போனதேன்?
இன்று 2.4.16 PTTV நேர்படபேசு!
#
----\\\\
"ஸ்டாலினே..! 'ச்சீப்' அரசியல் செய்யாதே..!"
"ஸ்டாலினே..! 'ச்சீப்' அரசியல் செய்யாதே..!"
#
இரும்பு கோட்டை! இதை யாரும் அசைக்க முடியாது! ஸ்டாலினே..! 'ச்சீப்' அரசியல் செய்யாதே..!"
-தேமுதிக மகளிர் அணி தலைவர் பிரேமலதா விஜய்காந்த் ஆவேசம்!
சேலம் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி பொதுக்கூட்டம்-2.4.16.
தலைமை: நா.ராதாகிருஷ்ணன் மாநகர மாவட்டச் செயலாளர் தேமுதிக; முன்னிலை: ஆர்.மோகன்ராஜ், எஸ்.ஆர்.பார்த்தீபன், சுபா தேமுக எம்எல்ஏக்கள்; உரை:
பிரேமலதா விஜய்காந்த் மகளிர் அணி தலைவர், தேமுதிக; ஏஆர்.இளங்கோவன் பொருளாளர் தேமுதிக; பி.தங்கவேலு சிபிஎம் மாவட்டக்குழு செயலாளர், ஏ.மோகன் சிபிஐ மாவட்டச் செயலாளர்; ஆ.ஆனந்தராஜ் மதிமுக மாநகர மாவட்ட செயலாளர்; கோ. ஜெயச்சந்திரன் விசிக மாநகர மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர்...
----\\\\
"தந்தையை மிஞ்சிய தனையன்!"
"தந்தையை மிஞ்சிய தனையன்!"
#
ஆம், தாய் எட்டடிப் பாய்ந்தால், குட்டி பதினாறடி பாயும் என்பது கருணாநிதி-ஸ்டாலின் காமினேசன் கச்சிதமாக பொறுந்துகிறதல்லவா? ஆம், தனக்கு 2 கண்களும் போனாலும் பரவாயில்லை; எதிரிக்கு ஒரு கண்ணாவது போகனும் என்பது 'அரசியல் சாணக்கியன்' கருணாநிதியின் தத்துவம்!
ஆனால், 'அந்த கட்சியே இருக்கக்கூட்டாது' என பகிரங்கமாக தானாக கரையும் என்பது தந்தையின் தத்துவத்தையே தாண்டிவிட்டார் தனையன் என்பதே இன்று 3.4.16 தினமணி மக்கள் கருத்தே சாட்சி!
ஆம், பழிவாங்கும் நடவடிக்கை என 59% பதிவாகி உள்ளது! ஆம், அவர்களுடன் கூட்டணிக்கு வராதக் கட்சிகளை ஆலிங்கணம் செய்வதில் திமுக ஸ்டாலின் வெற்றி பெற்று முதலில் இருக்கிறார்! அன்று மதிமுக, இன்று தேமுதிக! இதுவே அவரின், அவர் கட்சியின் படுதோல்வியை வேறொரு கோணத்தில், மக்கள் கருத்தாக எடுத்துக் கொள்ளலாம்!
ஆம், இந்த 'தேசபக்த' பணிக்கு அப்பாற்பட்டவர் அல்ல அதிமுகவும், ஜெயலலிதாவும்! ஆக, பழிவாங்கும் அரசியலை தமிழக மக்கள் 'நிராகரிப்பர்' என்பதே இந்த கருத்து என்றால் மிகையல்ல!
#
----\\\\
"தமிழ் தாயா?"
"தமிழ் தாயா?"
பாரத (தாயா) மாதாவா? எது? எது? எச்.ராஜா..!"
#
தமிழ் தாய் மீதான 'கரிசனம்' கண்டு பூரித்துப் போனேன்! அதைவிட 81 ஆணவக் கொலை பதிவு அபாராம்! 'மநுநீதி'யை என்ன செய்யலாம்? அதையும் சொல்லி இருக்கலாமே! ராசாவே! நீலி கண்ணீருக்கு இன்னொரு பெயர் மநுநீதியின் ஆர்எஸ்எஸ்ஸா?
தங்கர்பச்சன் நடிப்பும் சூப்பர்! இப்ப இருப்பவங்க எல்லாம் கம்யூனிஸ்ட் அல்லவாம்! அப்படியால், நல்லா ஆகுறத்துக்கு என்ன செய்யறதுன்னும் சொல்லி இருக்கலாமே!
திருமாவின் தொகுப்பு அருமை! அறுவரில் அய்வர் மாற்றம் கேட்டனர் என்ற ஆய்வு நச்! பாண்டே... மாற்றம் வேண்டும் என்றவர்- அது தனிநபரே மாற்று சொல்வதுதான் சோகம்! இருந்தாலும் தேமுதிக மக்கள் நலக் கூட்டணி மாற்றாக அவருக்கு தோணாதது அதைவிட சோகம்!
அது எப்படி அதை சொல்வார்? பட்டிமன்றம் நடுவர்போல் இருந்தாலும், டிவி விவாத நெறியாளர் போல் நச் என தீர்ப்பு வழங்காமல் ஒளிந்ததேன்?
(தந்தி மக்கள் மன்றம்-3.4.16)
#
----\\\\
அதிமுக அராஜகம்!
சிபிஎம் கண்டனம்! சட்டப்படி நடவடிக்கை எடு!
அதிமுக அராஜகம்!
சிபிஎம் கண்டனம்! சட்டப்படி நடவடிக்கை எடு!
சேலத்தில் 2.4.16 அன்று தேமுதிக தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டத்தில் பரப்புரையாற்றி விட்டு, இன்று 3.4.16 ஈரோடு பொதுக்கூட்டம் சென்றிட சேலம் 5 பகுதி தனியார் தங்கும் விடுதியில் பிரேமலதா விஜய்காந்த் தங்கி இருந்தார்.
இன்று காலை 11.30 அளவில், அதிமுக வழக்குரைஞர் அணியை சேர்ந்தவரும், வீரப்பாண்டி தொகுதி யில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவருமான மணிகண்டன் 10, 15 வயதான பெண்கள் கையில் அதிமுக கொடியை கொடுத்து, பிரேமலதா விஜய்காந்த் தங்கி இருந்த விடுதியின் நுழைவாயில் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி அச்சுறுத்தி உள்ளனர்!
இதை காவல்துறையின் கைகட்டி , வாய் பொத்தி வேடிக்கை பார்த்தனர்! அவர்களை கைதுகூட செய்யாமல், அவர்கள் வந்த டாடா ஏசி வேனில் ஏற்றி, பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்ததும் சேலம் மாவட்டக்குழு உறுப்பினரும், வடக்கு மாநகரக்குழு உறுப்பினருமான என்.பிரவீண்குமார் மற்றும் மாநகர வடக்கு குழு தோழர்கள் சம்ப இடத்திற்கு விரைந்து சென்று, காவல் துறையில் கையாலாகாதத் தனத்தைக் கண்டித்தனர்.
தேமுதிகவின் உயர்மட்ட தலைவருக்கே பாதுக்காப்பு கொடுப்பதில் இவ்வளவு பாராகமுக இருந்த சேலம் மாநகர காவல்துறையையும், உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியபோது "எனக்கு அதிகாரம் இல்லை" என மறுத்த மாவட்ட ஆட்சித் தலைவரையும் சிபிஎம் மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது! மேலும் அத்துமீறி, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் என்கிற பெயரில் அராஜகம் செய்தவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்டக்குழு கேட்டுக் கொள்கிறது!
----\\\\
கொடி பிடிக்க தடை!
கோஷம் போட தடை! காவல் துறையா? ஏவல் துறையா?
கொடி பிடிக்க தடை!
கோஷம் போட தடை! காவல் துறையா? ஏவல் துறையா?
#
சேலம்: வக் போர்டு சம்மந்தப்பட்ட இடத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக வசித்துவரும் சுமார் 2000 குடும்பங்கள் தங்களது வீடுகளுக்கு பட்டா கேட்டு இன்று 4.4.16 மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்!
தலைமை: பொன்.ரமணி கிழக்கு மாநகர செயலாளர்,
உரை: பி.தங்கவேலு மாவட்டக்குழு செயலாளர், ஆர்.வெங்கடபதி, பி.ராமமூர்த்தி மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள்...
சுமார் ஆயிரத்திற்கு மேலானோர் பங்கேற்பு! "அனுமதி இல்லை; கோஷம் போடக்கூடாது; கொடி பிடிக்கக் கூடாதென" காவல்துறை ஆளும் கட்சியின் ஏவல்துறையாக மாறியதால், சிறிது நேரம் பதட்டம் நிலவியது!
#
பலமுனை போட்டி தேமுதிக மக்கள் நலக் கூட்டணி வெற்றிகே உதவும்!
-----\\\\\
இந்திரா இந்தியா; இந்தியாதான் இந்திரா என்றதைப்போல்தான் இருநூற்று முப்பத்திநான்கு தொகுதியிலும் இரட்டை இலைதான் சின்னம் என்பதும்! ஆம், அழிவின் விளிம்பில் அதிமுக!
இந்திரா இந்தியா; இந்தியாதான் இந்திரா என்றதைப்போல்தான் இருநூற்று முப்பத்திநான்கு தொகுதியிலும் இரட்டை இலைதான் சின்னம் என்பதும்! ஆம், அழிவின் விளிம்பில் அதிமுக!
#thistime4mnk
[09:26, 5/4/2016] +91 94423 16893: 👌👌👌
---\\\
#விவசாயிகள் கடன் அனைத்தும் ரத்து செய்!
#விவசாயி பட்ட கடனுக்கு ஜப்தி செய்யாதே; அடித்து கொலை செய்யாதே! #தற்கொலைக்கு தூண்டாதே!
#விவசாயிகள் கடன் அனைத்தும் ரத்து செய்!
#விவசாயி பட்ட கடனுக்கு ஜப்தி செய்யாதே; அடித்து கொலை செய்யாதே! #தற்கொலைக்கு தூண்டாதே!
தேமுதிக மக்கள் நலக் கூட்டணி மற்றும் அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு 5.4.16 சேலம் ஜங்ஷனில் மறியல்-கைது!
விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகி கோபாலகிருஸ்ணன், சிபிஎம் மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு, சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ.மோகன், மதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆ.ஆனந்தராஜ், மகேந்திரன், விசிக வடக்கு மாவட்ட செயலாளர் வசந்த், தவிச மாவட்டச் செயலாளர் எஸ்பி.தங்கவேல், மாவட்ட நிர்வாகிகள் அரியாக்கவுண்டர், மணிமுத்து உள்ளிட்டு நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்!
இதற்கு பெயர்தான் பழம் கனிந்துக் கொண்டிருக்கிறது என்பதன் அர்த்தமா? பழுத்த பழம் கலைஞரே! #thistime4mnk
----\\\\
"முகத்தில் 'கலை' இல்லை!"
"முகத்தில் 'கலை' இல்லை!"
#
சேலத்தில் 02.04.16 அன்று நடந்த தேமுதிக தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டத்தில், எஸ்ஆர்.பார்த்தீபன் எம்எல்ஏ திமுகவை தனது பேச்சில் தொடக்கூட வில்லை! முகத்தில் 'கலை' இல்லை; 'பேய்' அறைந்த மாதிரி இருந்தார்!
இவரை மனதில் வைத்துத்தான் பிரேமலதா விஜய்காந்த் இவ்வாறு பேசியிருப்பாரா?
"நான் அண்ணி மட்டுமல்ல; அன்னையும் கூட! அன்னையாக இருந்து இப்படி செயாதே; அப்படி செய்! அது குழி விழுந்து விடாதே; என்றுதான் சொல்ல முடியும்! அதையும் மீறி விழுந்தால் நான் என்ன செய்ய முடியும்? தேமுதிக இரும்பு கோட்டை; ஆம்! எஃகு கோட்டை இதை யாரும் தகர்க்க முடியாது!"
குறிப்பு: மறுநாள் சேலத்தில் அதிமுகவின் ரகளை செய்தபோது கூட இவர் மிஸ்ஸிங் என்பது கூடுதல் செய்தி!
#
----\\\\\
தேள் என்றால்- கொட்டணும்;
முடிவை பொதுவெளியில் மீறியோர் மீதான நடவடிக்கை சரி!
தேள் என்றால்- கொட்டணும்;
முடிவை பொதுவெளியில் மீறியோர் மீதான நடவடிக்கை சரி!
பின் இருந்தல்ல; முன்னிருந்து இயக்குகிறது திமுக! 'தேமுதிக தானாக கரையும்' என ஸ்டாலின் சொல்லியதன் பொருள் என்ன? அதுதான் இன்று நடந்து உள்ளது!
தேமுதிகவை பலவீனப்படுத்த செய்ய வேண்டியதை எல்லாம் செய்துவிட்டு, தற்போது- "அது உள்கட்சி பிரச்சனை" என ஸ்டாலின் பேசியது உலகமகா நடிப்பு!
தனிநபர் 'தலைமை' கட்சிகளில் தொண்டர்கள் கருத்து என்பதெல்லாம் சும்மா! அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, பாமக என எதுவும் இதுக்கு விதிவிலக்கல்ல; இடதுசாரி கட்சிகளைத் தவிர!
100% கருத்து ஒற்றுமையுடன் எந்த கட்சியும், குடும்பமும் இருக்காது! பெரும்பான்மை கருத்துக்கு கட்டுப்படுவதே ஜனநாயகம்!
இன்று 5.4.16 PTTV நேர்பட பேசு!
##
சுயநலமே!
தேமுதிக அதிருப்திக்கான காரணம் சுயநலமே என்பது, அவர்களின் பேட்டியிலேயே வெளிப்பட்டு இருக்கிறதே!
தேமுதிக அதிருப்திக்கான காரணம் சுயநலமே என்பது, அவர்களின் பேட்டியிலேயே வெளிப்பட்டு இருக்கிறதே!
திமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தால், அது இரண்டு தற்கொலைக்கு சமம் எனலாம்!
நகை, நட்டுகளை விற்று மக்கள் நலனுக்கா இவர்கள் செயல்பட்டார்கள்? இது மக்களை ஏமாற்றும் நாடகம்!
இன்று 5.4.16 news 7 ?கேள்வி நேரம்!
---\\\
"அதிமுக அன்று "அதை" செய்ததால், இன்று..!"
"அதிமுக அன்று "அதை" செய்ததால், இன்று..!"
#
நான் சுத்தமான பட்டிக்காட்டான்! நான் 'முட்டாய்' கடையை பார்த்தாலே நின்றுவிடுவேன்! அப்படிப்பட்ட நான் இன்று 5.4.16 இரவு 8-10 மணி துளிகளில் விவாதங்களை 3 தொலைகாட்சிகளில் பார்த்தேன்! தேமுதிக விவகாரம்- சந்திரக்குமார் உள்ளிட்டோர் பேட்டி; நீக்கம் குறித்து இருந்தது!
திமுகவின் தூண்டுதல்- 'சந்திரக்குமாரின் ஞானோதயத்திற்கு காரணம்' என மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் கருத்து கூறினர்! உடனே திமுக சார்பில் வந்த சவுண்ட் பார்ட்டிகள்- பிரசன்னா, ஜெயராஜ், சுபவீ, எஸ்ரா.சற்குணம் போன்றோரும், சந்திரக்குமார் போன்ற 'ஓடுகாலி முன்னோடி' பழ.கருப்பையா போன்றோரும் மாறி மாறி லாவனி பாடுகிறார்கள்! அதாவது திமுக மீது அதிமுகவும், அதிமுக மீது திமுகவும் 'பல்லைக்குத்தி குத்தி' முகந்து பார்க்கிறார்கள்!
அதிமுகவுக்கு தேமுதிக எம்எல்ஏக்கள் உள்ளிட்டு போனபோது, ஏன் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் இவ்வண்ணம் 'பதற'வில்லையே என பதறுகிறார்கள்! ஒரு வாதத்திற்க்காக எடுத்துக் கொண்டால் கூட, 'ஒருவர் மனித மலத்தை சாப்பிடுகிறார்' என்றால், இன்னொருவரும் சாப்பிட வேண்டுமா? ஆம், அதிமுக அன்று "அதை" செய்தால், அல்லது செய்ததால், இன்று திமுகவும் "அதை" செய்யணுமா?
#
----\\\\
----\\\\
"என்னா அர்த்தம்?"
கட்சிய காபாத்த முடியும்; கட்சி காப்பாத்த முடியும் திமுகவுடன் சேர்ந்தாத்தான் என்கிறார்களே... அப்புறம் சொத்துபத்தெல்லாம் வித்துபுட்டோம் என்கிறார்களே... அதுக்கு என்னா அர்த்தம்?
ஏய்யா ஊங் கட்சி தலைவரு முதல்வர் வேட்பாளருன்னு சில கட்சிகள் ஆதரவு தந்து உழைக்கிற போது, நீ வேண்டாமின்னு இப்படி கூத்து பண்ணினா என்ன அர்த்தம்?
அதுவும் "கலைஞர்தான்" முதல்வரு ஆவாருன்னு தேமுதிக பொதுச்செயலாளரு சொன்னா என்னா அர்த்தம்? நாங்க எல்லாம் உங்க தலைவர முதல்வராக்க பாடுபடணும்; நீங்க இன்னொரு தலைவரு முதல்வரா வரணுமின்னா என்னா அர்த்தம்?
அப்ப- "இழந்த சொத்துபத்தெல்லாம் கெடச்சிருச்சின்னு அர்த்தம்!"
----\\\\