Sunday, 24 July 2016

விலைவாசிஉயர்வு

விலைவாசிஉயர்வு...
வேலையின்மைக்கு எதிராக... 
சிபிஐஎம் நாடு தழுவிய பிரச்சார இயக்கம்..
சேலம் மாநகரில் துவக்கம்!

சேலம் மேற்கு மாநகர குழு சார்பில் ஜங்சனில் மாவட்டக்குழு செயலாளர் தோழர். பி தங்கவேலு அவர்கள் துண்டறிக்கை வினியோகம் நிகழ்வை இன்று 13.7.16 மாலை தொடங்கி வைத்தார்.
#
சேலம் மாநகரம்: விலைவாசி உயர்வு... வேலையின்மை எதிர்ப்பு...   
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்டோ பிரச்சாரம்!

சேலம் மாநகரம் வடக்கு சார்பாக கோரிமேடு பகுதியில் இன்று 14.7.16 காலை 11.30க்கு சேலம் மாவட்ட  செயலாளர் பி.தங்கவேலு அவர்கள் ஆட்டோ பிரச்சாரத்தைத் துவக்கி வைத்து உரையாற்றினார்!
#
விலைவாசி உயர்வுக்கு எதிராக... வேலை வாய்ப்புகளை உருவாக்கிட...
வாழ்க்கை தரம் பாதுகாத்திட...
மார்க்சிஸ்டகம்யூனிஸ்ட்கட்சி நாடுதழுவியபிரச்சாரஇயக்கம்!

பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மாவட்டக்குழு சார்பில் 15.07.16  இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு... 
சேலம் மாவட்டக்குழு செயலாளர்
பி. தங்கவேலு அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. 

மாநில குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து மாவட்டச்செயற்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, மாவட்டக்குழு உறுப்பினர் ஐ.ஞானசௌந்திரி ஆகியோர் விளக்கவுரையாற்றினார். 

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு, இடைக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிஐடியூ, மாதர், வாலிபர் சங்கத்தினர் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

[15:08, 7/15/2016] Vemala Vitha Nkl: Good mobilisation...Great..
.vimala
[15:11, 7/15/2016] +91 94441 40563: Good!!!
[15:19, 7/15/2016] +91 94865 96641: Thanks Comrades!
[16:52, 7/15/2016] +91 94420 60775: 👏👏👏
#
••விலைவாசி உயர்வு... வேலையின்மை.. ஆனால் மோடி அரசு ஈராண்டு கொண்டாட்டம்..! லேடி அரசோ வெற்றிவிழாவில்..! 

••ஆம் மோடியோ வெளிநாட்டில்..! லேடியோ கொடைநாட்டில்..! தமிழ் மக்கள் கையில் மதுபாட்டில்..! வாக்களித்த மக்களோ நடுரோட்டில்...! விளக்கி 

••சிபிஎம் நங்கவள்ளி மற்றும் சேலம் மாநகரம் மேற்கு 17.7.16., மேட்டூர் 18.7.16 தேதிகளில் தெருமுனை பரப்புரை..!
----\\\\
மக்கள் மன்றம் சென்றால்...
*திமுக அதிமுக மீதும், அதிமுக திமுக மீதும் இப்படி குற்றம் சாட்டுவது வாடிக்கையே!
அதுவும் திமுக வலுவாக உள்ள நிலையில் அதிமுக தொகுதி மேம்பாடு நிதியில் பாகுபாடு காட்டுமா? என்பது கேள்விக்குறியே! திமுக நீதிமன்றம் சென்றால் உண்மை வெளியாகும். 
*திமுக நீதிமன்றம் செல்வதைவிட மக்கள் மன்றம் சென்றால் அதிமுகவை அதிகமாக அம்பலப்படுத்தலாமே... 
ஏன்? என்ன? தயக்கம் திமுகவுக்கு!
---\\\
யாரும் வையாதீர்! 

இன்று 13.7.16 காலை சிபிஐ சேலம் மாவட்டச் செயலாளர் தோழர் ஏ.மோகன் அவர்கள், சிபிஐஎம் சேலம் மாவட்டக்குழு அலுவலகமான சேலம் சிறைத்தியாகிகள் நினைவகம் வந்திருந்தார்.

அப்போது ஆளுக்கொரு தேநீர் குடித்துவிட்டு, நானும் (சிபிஐஎம் மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு) அவரும் அலுவலக சுற்றுச்சுவர் பகுதியில் நின்று கொண்டு, மேட்டூர் முதியோர் கண்சிகிச்சையில் ஏற்பட்ட பாதிப்போருக்கு ஆதரவாகவும், சேலம் மாநகராட்சி மற்றும் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) ஆகியவற்றின் அலங்கோலங்கள் குறித்தும் இயக்கம் நடத்தலாமா? என்று பேசிக் கொண்டிருந்தபோது... 

தீக்கதிர் நிருபர் தோழர் எழில் கேமிராவின் குறும்புத்தனத்தில்..! சரி... போடுவோமே... என போட்டுள்ளேன்! 
யாரும் வையாதீர்! சரிங்களா?
----\\\
நிச்சயம் சீர்திருத்தம் வேண்டும்...
*அத்துமீறலா? அராஜகம்! சட்டமீறலும்கூட! நீதிமன்றம் கண்டனம் மிகச் சரியானது! காவல்துறை... அதிமுக ஆட்சியில் ஈரலும் கெட்டுவிட்டது. 
*தற்போது இருக்கும் போலீசை அனைவரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, புதிய இளைஞர்களை கொண்டு நிரப்ப வேண்டும். 
*காக்கிச்சட்டை அணிந்த ரவுடிகள் போல்தான் காவல்துறை செயல்பாடு இருக்கிறது. 
*இவர்களின் ஜம்பம் பூராவும் சாதாரண அப்பாவி மக்கள் மீதுதான். சமூக விரோத கும்பல்களுடனோ, பணக்கார பேர்வழிகளுடனோ பவ்வியமாக நடந்துக் கொள்வதுதான் தமிழ்நாடு காவல்துறை.
இதில் நிச்சயம் சீர்திருத்தம் வேண்டும். இதுபோன்று காட்டுமிராண்டி போலீசுகளை வேலையை விட்டு நீக்கினால் மட்டும் போதாது; கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் சட்டத்தின் ஓட்டையில் இருந்து தப்பி த்து விடாமல்! 
*இதற்கெல்லாம் காரணம் அரசும், அதன் கொள்கைகளும்தான்! தமிழத்தில் ஆட்சிகள் மாறியதே தவிர கொள்கைகள் மாறவில்லையே! 
*அதிகாரம் துஷ்ப்பிரயோமும், லஞ்ச ஊழலும் தலைவிரித்தாடும் துறை காவல்துறையே! 
*அந்த வீடியோ காட்சி மட்டும் இல்லையென்றால் ஊத்தி மூடியிருப்பார்கள் காவல்துறையும், ஆட்சியாளர்களும்!
*இன்று 14.7.16 PTTV நேர்படபேசுக்கு! இதில் ஒரு வரி பதிவேற்றமானது!
[22:43, 7/14/2016] Vemala Vitha Nkl: Your comment is 100000%correct comrade...vimala Vidya
[23:18, 7/14/2016] +91 94865 96641: Thanks Comrade!
----\\\
எதை அளவுகோலாக...
தோழரே, வணக்கம்! 
எதை அளவுகோலாக வைத்து இந்த முடிவுக்கு வந்தீர்? அல்லது தாங்கள் நகர்புற கட்சிக்காரர்களாக பணியாற்றியதால், அல்லது தொழிற்சங்க அரங்கம் சார்ந்து பணிகளை செய்து வந்ததால், இந்த நிலைபாட்டுக்கு வந்தீர்களா? என்றும் தெரியவில்லை. இன்னொருத்தர் அந்த 7% பேர்தான் லெவி தருகிறார்கள் என கேலி செய்கிறார்.

இந்தியாவில் 'புரட்சி' பாதை எது? என்பதில் இருந்தே தங்களுக்கு இருக்கும் நிலைபாட்டில் இருந்து, இவ்வண்ணம் நிலை எடுக்கிறீர் போலும்! அது உங்கள் இஷ்டம்! இந்தியாவில் முதலில் துவங்கிய வெகுஜன அமைப்பு அஇவிசவும், மாணவர் அமைப்பும் தான்! இது ஒரு புறம். இன்னொரு புறம் தற்போது நாடு முழுவதும் நடந்துவரும் பிரச்சார இயக்கம் யாருக்கானது? கடந்த செப் 2ல் 10 கோடி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனரே! அதே இன்னும் கொஞ்சம் கூடுதலாக பங்கேற்றிருந்தால்... ஒரு நாள் என்பது பல நாட்களாக தொடர்ந்திருக்க முடிந்திருக்குமேயானால், என்ன நடந்திருக்கும்? 

இதைதான் மாமேதை லெனின் இவ்வாறாக கூறுகிறார்... "இந்த சமுதாயத்தில் நடக்கும் ஒவ்வொரு சிறு சிறு போராட்டங்களும் புரட்சிக்கான ஒத்திகைகளே". 

ஆம், அதைதான்-- இதற்குமுன் எந்த முன்மாதிரியும் இல்லாத இந்தியாவில் சிபிஐஎம் மும், இடதுசாரி அமைப்புகளும், தங்களின் புரிதலில் இருந்து செய்து வருகின்றன. ஏகடியம் செய்வது எளிது! இந்தியா போன்ற நாடுகளில் பல்வேறு மதம், சாதி, இனம், மொழி என தன்னகத்தே கொண்டுள்ள நாட்டில் உழைப்பாளி மக்கள் ஆட்சி அதிகாரம் வருவது அவ்வளவு எளிதா? மக்கள் பங்கேற்காத எந்த போராட்டமும் இலக்கை எட்டாதென தெரிந்துதான் சிபிஐஎம் செயலாற்றி வருகிறது! அந்த தளராத நம்பிக்கையுடன்தான் பயணித்து கொண்டிருகிறோம்! 

சண்டையில் கிழியாத சட்டை ஏதென தமிழ் திரைப்படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி உண்டு; அதுபோல் குற்றம் குறை இல்லாத புரட்சிகர இயக்கம் எங்கும் இருந்தது இல்லை; இருக்கப்போவதுமில்லை! வரலாற்று அனுபவங்கள் நிச்சயம் அதை சரி செய்யும்; புரட்சிகர சக்தி  நிச்சயம் இலக்கை எட்டும்! அதுவே சிபிஐஎம் ன் நம்பிக்கை! நன்றி! 

(இன்றைய 14.7.16 தோழர் ஜிஆர் அறிக்கையை ஒட்டியும், வெட்டியும் அதாவது-  "7% உள்ள தொழிற்சங்கத்தையே கட்டிப்பிடித்துக் கொண்டும், மீதமுள்ள 93% பேரை கண்டு கொள்ளாமலும் இருப்பதாக" முகநூலில் பதிவிட்ட ஒரு தோழருக்காக..!)
----\\\\
உரிமை பெற்றவர்களே... பெண்கள்..!
இப்பூலகில் அனுபவிக்க உரிமை பெற்றவர்களே... பெண்கள்..!
#
••மீண்டும் பழைய நூறாண்டுகளுக்குப் போகச் சொல்லி ஒரு பழைய புகைப்படத்தை பதிவேற்றம் செய்திருக்கிறீர்களா?
••பெண்களை  தாய்வழி சமுதாயத்தைத் தவிர (நானறிந்த வகையில்) போகப்பொருளாக, அதாவது ஆணின் உடமையாகத் தான் பார்க்கப்பட்டு வந்துள்ளது. 
••எல்லா கால உடையிலும் கவர்ச்சியாகவோ, கவர்ச்சியின்றியோ இருப்பதென்பது நாம் பார்க்கும் பார்வையில் இருந்தே வந்துள்ளது. ••ஆகவே பெண்களும் ஆசா பாசம் கொண்ட ஒரு உயிரினம். ஆணுக்கு இருக்கும் அனைத்து குணாதிசயங்களும் உண்டு. 
••ஆனால் ஆண்களைப் போன்ற 'சுதந்திரமாக' இருக்க அதாவது விருப்பப்பட்ட உடை அணிதல் உள்ளிட்டு அனைத்தையும் இப்பூலகில் அனுபவிக்க உரிமை பெற்றவர்களே! 
••ஆகவே உடையில், நடையில் இல்லை ஆபாசம்;  அவர்களைப் பார்க்கும் பார்வையில்தான்!
••பிச்சை எடுத்து பிழைக்கும் பெண்ணைக் கூட 'பழுதான' பார்வையில் பார்த்து கொடுமை படுத்தும் உலகம் இது! 
••ஆம், இது சுரண்டல் அமைப்பின் கோளாறு! ஆண்களின் அடிமை பெண் என்று பார்க்கும் கோளாறு! நன்றி! 
#
(இந்த இரு இமேஜ் ல் ஒன்றை முதலில் போட்டு, இரண்டையும் இழுத்து மூடினால்தான் நாடு உருப்படும்! என்கிற அர்த்தத்தில் வலைதள நண்பர் ஒருவர் பதிவிட்டிருந்தார்! 'அது தவறான பார்வை' என்ற அர்த்தத்தில் பதில் பதிவை நான் உள்ளிட்டு, சிலர் போட்டிருந்தோம்! அதற்கு அவர், நான் பெண்மையைப் போற்றுபவனே என்ற அர்த்தத்தில் பதிவு ஒன்று மீண்டும் போட்டுவிட்டு, இன்னொரு பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்! அதனை தொடர்ந்து இந்த பதிவு; அவரின் வலைப்பக்கத்தில் பதிவிட அவரின் பெயர் நினைவிலில்லை! அதனால்..!)
---\\\
காவிமயக் கொள்கையே!
#புதிய கல்விக் கொள்கை காவிமயக் கொள்கையே! அது ஏற்கவோ ஆய்வு செய்வோ தேவையில்லை; நிராகரிக்க வேண்டியதே!
#காங்கிரஸ் ஆட்சியில் உலகமயம், தாராளமயம், தனியார்மயத்திற்கு ஏற்ற மாதிரி அப்பொழுது புதிய கல்வி கொள்கை வகுத்தனர். #தற்போது அந்த மூன்று பீடைகளோடு, நான்காவது பீடையாக காவியை புகுத்துகின்றனர்; அதற்கு தோதாக சமஸ்கிரதத்தைப் பயன்படுத்துகின்றனர்! ஆகவே இது காவிமயத்தின் ஒரு பகுதியே! 
#ஆம், இது- பிஞ்சிலே நஞ்சைக் கலக்கும் களவாணித்தனம்! #இதன்மூலம் நாட்டை நாசமாக்கும், இந்துத்துவமயமாக்கும் ஆர்எஸ்எஸ் பாஜகவின் மறைமுக அஜண்டா தற்போது நேரமுக அஜண்டாவாக மாறியுள்ளது.
#தாய்மொழிக் கல்விக்கு சாவுமணி ஓசையே இந்த சமஸ்கிரதத்துடன் கூடிய காவிமயக்கல்வி! இது புதிய மொந்தையில் 'பழங்கள்ளு!' இந்திய இளைஞர்களை பாழும் கிணற்றில் தள்ளும் ஏற்பாட்டின் 'புதியவடிவம்!'
----\\\\
பயிற்சி முகாம் 

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னணி ஊழியருக்கான ஒருநாள் பயிற்சி முகாம் இன்று 16.7.16 சேலத்தில் நடைபெற்றது. 

மாவட்டம் தழுவிய இந்த பயிற்சி முகாமில் என்.குணசேகரன் (மார்க்சிஸ்ட் மாத இதழ் ஆசிரியர், சிபிஐஎம் மாநில செயற்குழு) சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் வேல்முருகன், Dyfi மாநில தலைவர் செந்தில்குமார் பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனர். 

மாவட்ட செயலாளர் என்.பிரவீண்குமார், மாவட்டத் தலைவர் கே.கிருஷ்ணன், மாவட்டப் பொருளாளர் வி.வெங்கடேஷ் உள்ளிட்டு பங்கேற்றனர்!
---\\\
குற்றச்சாட்டு சரியே!
••கருணாநிதியின் குற்றச்சாட்டு சரியே! ஆனால் ஒன்று- 'ரைட் மேன் ராங் பார்ட்டி' என்று அன்று வாஜ்பாய் பற்றியும், பாஜக பற்றியும் சொன்னாரே... அதை தற்போதாவது திரும்ப பெறுவாரா?
••பாஜகவின் குருகுலமான ஜனசங்கம் மற்றும் ஆர்எஸ்எஸ் அன்று முதல் என்றுமே நாட்டின் 'மதச்சார்பற்ற நிலை'யின்  அர்த்தத்தை மாற்றுவதில் குறியாகத்தான் இருக்கிறது; இருந்தும் வருகிறது!
••கருணாநிதி விமர்சனம் இரண்டிற்கும்தான்! ஆம், மதச்சார்பின்மை க்காகவும், அரசியலுக்காகவும்தான்!
••பாஜக அரசின் மதவாத விஷக்கொடுக்கு மிகுந்த வேகத்தில் இந்த மக்களின் மதச்சார்பற்ற தன்மையைத் தாக்கி வருகிறது! அதுதான் ஒருபகுதிதான் கங்கைக் (கழிவு) நீரை மோடி அரசு மூடிப்போட்டு தபால் ஆபீசில் விற்கத்துடிப்பது! 
••அரசு இயந்திரத்தை இப்படி பட்டவர்த்தனமாக இந்துத்துவாக்குப் பயன்படுத்துவது மிகவும் கண்டிக்கத் தக்கது! அடுத்தடுத்து பூஜை புனஸ்காரம் என்று ஒவ்வொன்றாக விரைவில் அரங்கேற்றும்; அதற்கான 'படி'யும் வழங்கக்கூடும்!
---\\\\
சோரகை தியாகி பெருமாள் நினைவாக... 
இன்று 16.7.16 (ஆடி 1) நிலமீட்பு போராளி சோரகை தியாகி பெருமாள் 
68 வது நினைவுநாள்!
சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், நங்கவள்ளி ஒன்றியம், சோரகை கிராமம். இதில் 1948 ஆம் ஆண்டு, கந்துவட்டிக் கொடுமைக்கு ஆளாகி, தங்களின் துண்டு துக்காணி நிலத்தை, தாங்கள் பட்டக்கடனுக்கு அன்றைய கந்துவட்டி கும்பலிடம் பறிகொடுத்து விட்டு மைசூர் போன்ற பகுதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

அவர்களை செங்கொடி அமைப்பு ஒன்று திரட்டி, செங்கொடியின் நிழலில் போர் முழக்கமிட்டு, சுமார் 3000 ஏக்கர் நிலத்தை மீட்டனர். அந்த வீரம் செரிந்த போரில் சுதந்திர இந்திய போலீசு குண்டுக்கு பலியானவர் தியாகி பெருமாள்!
••
இன்று 16.7.16 நங்கவள்ளி ஒன்றியத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்பி.தங்கவேல், ஒன்றிய தலைவர் எம்எஸ்.வெங்கடாசலம், செயலாளர் எஸ்வி.வேம்பன் உள்ளிட்டோர் தியாகி பெருமாள் நினைவகத்தில் அஞ்சலி செலுத்தி 11 கிளைகளில் செங்கொடி ஏற்றி, நினைவு கூர்ந்தனர்! 
••
அந்த கால தியாகிகளின் புகைப்படம் கூட இல்லாமல் தங்கள் இன்னுயிரை ஈந்தவர்கள் ஏராளம்! அந்த வரிசை பட்டியலில்தான் இவரும்!
••
சோரகை தியாகி பெருமாள் நினைவைப் போற்றுவோம்! தியாகி சோரகை பெருமாள் போன்ற எண்ணற்ற வீரத்திருமகன்கள் கட்டிக் காத்த இந்திய மண்ணை, இன்று அன்னிய கம்பெனிகளிடம் அடகுவைக்கும் பாஜக அரசை வீழ்த்திட சபதமேற்போம்!
---\\\
காவி அரசே... மோடியரசு..!
••டவுசர் பாய்ஸ்... 
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் (சாராயம்) விற்பனை செய்வது...
1. காசு கள்ளாப்பெட்டி நிரப்புவதற்கு!
2.மக்களை போதையின் பிடியில் சீரழிப்பதற்கு! அதுமாதிரிதான் கங்கைநீரையும் விற்கிறீர்களா?
••அப்படி என்றால் சரி! அதைத்தான் மதச்சார்பற்ற வாதிகளும் கூறுகிறார்கள்! 
••ஆனால், 'டாஸ்மாக்'கால் (நீரால்) மக்கள் மதரீதியாக பிளவுபடுத்தும் சதி இருப்பதாக தெரியவில்லை; 'கங்கைநீரால்' நாடு முழுவதும் கலகம் மூட்டும் களவாணித்தனம் இருக்கிறது தெரிகிறதே! 
••ஓட்டுக்கும், நோட்டுக்கும் கங்கைநீரா?  கங்கைநீரை விற்பதற்குத்தான் மத்திய அரசா? அதற்கு ஒரு பிரதமரா? காவி அரசே... மோடியரசு என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும்?
••(இன்று 16.7.16 PTTV நேர்படபேசு விவாதத்தை ஒட்டிய பதிவு!)
----\\\\
மெய்யான தவவாழ்வு 
வாழ்பவர்கள் கம்யூனிஸ்ட் ஊழியர்கள்..! 
முனியாண்டி செல்லப்பன் அவர்களே.! (முகநூல் நண்பர்)...
••எம்எல்ஏ சம்பளத்தை முழுவதும் அவரே (ஒரு வாதத்திற்காக) வைத்துக் கொண்டிருந்தாலும், இந்த முதலாளித்துவ சமுதாயத்தில் "வறுமையின் பிடி" யாரை வேண்டுமாலும் தாக்கும்! அது எந்த ரூபத்தில் வருகிறதென்று தெரியாது! ஆகவே தோழர் என்.என்., அவர்கள் சந்திக்கும் நெருக்கடியில் இருந்து அதற்குரிய உபாயத்தைக் கட்சி தேடி தரும்; அவரை கைவிடாது!

••அதற்காக தாங்கள் நீலிக்கண்ணீர் வடிப்பதுபோல் கம்யூனிஸ்ட்களின் மக்கள் தொண்டை "எதோ உலகமகா சுரண்டல்" போல் சித்தரிக்க முயலாதீர்! இதர முதலாளித்துவ-மதவாத-சாதிவாத கட்சிகள் போன்றதல்ல கம்யூனிஸ்ட் கட்சி! 

••உங்களுக்கு ஒன்று தெரியுமா? நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நானும்கூட வேட்பாளராக நிறுத்தப்பட்டேன்; எனக்கு ஒரு பைசா கூட செலவு கிடையாது; எல்லாம் கட்சி பார்த்துக் கொண்டது; பல லட்சம் செலவானது; நான் ஜெய்த்தாலும், தோற்றாலும் அது கட்சி ஜெயித்தது அல்லது தோற்றதென அர்த்தம்! அன்றும், இன்றும் எனக்கு கட்சி தரும் அலவன்ஸ் தந்துக் கொண்டு தான் இருக்கிறது! என்னை ராஜினாமா செய்யச் சொல்லி கேட்கவில்லை! இப்படிப்பட்ட கட்சி சிபிஐஎம்; மனதில் பதியுங்கள்! இதுதான் கம்யூனிஸ்ட்கள்! இருப்பதைக் கொண்டு சிறப்பு வாழும் சாதாரண குடிமக்கள்! 

••ஆம், 10 ஆண்டுகள் முதல்வராக இருந்த திரிபுரா நிருபன் சக்கரவர்த்தி 2 தகர பெட்டிகளுடன் (ஒன்றில் உடை இன்னொன்றில் புத்தகங்கள்) கட்சி அலுவலகத்திற்கு வந்தாரே ஒழிய "பங்களா"விற்கு போகவில்லை! என்னை எதிர்த்து நின்ற அமைச்சர் ரூ40 கோடி செலவு செய்ததாக தகவல் இருக்கிறது! அவர் மக்களுக்கு சேவை செய்வாரா? கை காசு செலவு செய்யாத கம்யூனிஸ்டுகளா? யார்?

••கம்யூனிஸ்ட் கட்சியின் (முழுநேர) பணியாளர்கள் தான் உண்மையான தவ வாழ்வு வாழ்பவர்கள்; அந்த தவப்புதல்வர்களில் ஒருவர்தான் அன்பு தோழன் என்என்! மக்களுக்காக கம்யூனிஸ்ட்கள்; மக்களுக்காகவே கம்யூனிஸ்டகள்! மக்களை சகலத்திலும் சுரண்டும் இன்றைய முதலாளித்துவ சமுதாயம் முடியட்டும்; மக்களுக்கான அரசாக நாளைய பொழுது விடியட்டும் என கைமாறு கருதாது உழைப்பவர்கள் கம்யூனிஸ்ட்கள்! நன்றி!

(தோழர் என்.நன்மாறன் அவர்கள் சொந்த வீட்டை விற்றுவிட்டு, வாடகை வீட்டில் குடியேறியதாக முகநூல் பதிவுக்கு, ஒருவரின் நீலிகண்ணீர் பதிவுக்கு, பதிவு இது!)
---\\\
வாய்ப்பு மிக குறைவு! 
••சுவாதிக்கொலை ஆணவக் கொலையாக இருப்பதற்கு வாய்ப்பு மிக குறைவு!
••அதற்காக திருமா கூற்றையும் புறம் தள்ளிடவும் முடியவில்லை!
••ஆனால் சம்பவங்களைப் பார்க்கிறபோது, சுவாதிக் கொலையில் மர்மமுடிச்சு இருப்பதுபோலவும் தெரிகிறது!
••வழக்கம்போல் இந்த மர்மமுடிச்சைச் சென்னை உயர்நீதி மன்றம்தான் அவிழ்க்க வேண்டும்!
••ஆனால் ஒன்று- இந்த சுவாதி கொலையை வைத்து இந்துத்துவா வாதிகள் குழம்பியக் குட்டையில் மீன் பிடிக்க பார்ப்பது மட்டும் நன்கு தெரிகிறது. 
••ஆம், இதன்மூலம் தமிழகத்தில் ஒரு மதமோதலுக்கு பாஜக தூபமிட முயற்சிக்கிறது.
---\\\
வாழ்த்துக்கள் DYFI க்கு!
••சேலம் மாநகரின் இதயமான லீ பஜாரில் தினந்தோறும்... 
••பனிரெண்டாயிரம் வாகணம் (பஸ், லாரி, டெம்போ) கடந்து போகிறது! ஆனால் மக்களும் நடந்து போக முடியவில்லை; டூ வீலரும் ஓடமுடிய வில்லை! 
••ஆனால் மாநகராட்சி அதிமுக நிர்வாகமோ ஆழந்த உறக்கத்தில்..! 
••18.7.17ல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், வர்த்தகர்கள் சங்கம் நடத்திய வாய்மூடி மௌனி போராட்டத்தால், கண் திறந்தது காவல்துறையும், மாநகராட்சியும்! உடனே சாலை செப்பனிடப்பட்டது! 
••ஆம்! போராட்டமே புதுவழியை பெற்றுத்தரும்!
----\\\
மங்கி மறைந்துவிடுமென...

மக்கள் நலக் கூட்டணி மங்கி மறைந்துவிடுமென
ஆரூடம் செய்தவர்களுக்கு ஆப்பு!
தொடருமென அறிவிப்பு! ஆம் மக்கள் நலக் கூட்டணி நிரந்தரம்...
மாற்றை விரும்பும் ஜனநாயக சக்திகள் யாரும் வரலாமென அழைப்பு! உள்ளாட்சி தேர்தலில் ஆதரிப்பீர் மக்கள் நலக் கூட்டணியென அறைகூவல்!
---\\\
நிதிநிலை சீராக இல்லை!

••தமிழகத்தில் நிதிநிலை சீராக இல்லை! ஏற்கனவே ரூ2 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது!
••ரூ2,470 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது!
••போக்குவரத்து, மின்சாரம் என அனைத்து துறையும் நட்டத்தில் இயங்குவதாக கூறப்படுகிறது.
••இந்த நிலையில் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் என்பது மக்கள் மீது சுமையை சுமத்தும் என்றே தோன்றுகிறது!
---\\\
இது சாட்டை அடியா..?
செருப்படியா..?
[21:00, 7/21/2016] +91 94437 76263: 👍
[21:01, 7/21/2016] +91 94882 60401: 👍🏻
---\\\
உள்ளாட்சி தேர்தலுக்கான...
••உள்ளாட்சி தேர்தலுக்கான நிதிநிலை அறிக்கையே இது.
••நிர்வாக உத்தரவு மூலம் விலைவாசிகளை ஏற்றி, மக்களை ஏமாற்றி விடுவார்கள்.
••வரியில்லா பட்ஜெட் என்பது மக்களின் மதியை மயக்கவே! 
••ரூ2.50 கோடி கடனை வைத்துக் கொண்டு வளர்ச்சியா? அது கானல்நீரே! ••இது வழக்கமான தேர்தல் பட்ஜெட்! 12 மாநகராட்சி என்பது பாதி தமிழகம் அல்லவா? 
••அதனால்தானே தேர்தல் முறையில் தனக்கு சாதமாக மாற்றம் கொண்டு வந்தது அதிமுக சென்ற சட்டமன்றத்தில்! 
••அப்படி நிலவரம் இருக்கும்போது வரி போட்டு பட்ஜெட் போடு தைரியம் இந்த ஆண்டில் இல்லை ஜெயலலிதாவுக்கு!
---\\\

ஊது ஊதுன்னுஊதுகின்றன..!

// பள்ளி தீ விபத்தில் கருகி இறந்த குழந்தைகளுக்கு இன்னும் ஒழுங்கா நீதி கிடைக்கவில்லை.
நேற்று போட்ட காபாலி வழக்குக்கு தீர்ப்பு வந்துருச்சி..!
நாடாடா இது......😡😡 //

(-வாட்ஸ்அப் பில் தோழர் விமலா வித்யா பகிர்ந்தது!)

இதுதான் முதலாளிகளின் நீதி என்பது..! இதைத்தான் மாற்ற வேண்டும் என்கிறது மார்க்சீயம்! நீதி என்று வந்தால் பொதுவில் வைப்போம்!

இப்படித்தான்... முதலாளிகளின் ஒரு சமூக சேவகருக்கு அநீதி நேர்ந்து விட்டதாக ஊடகங்கள் ஊது ஊதுன்னு ஊதுகின்றன சேலத்தில்..!
---\\\
சந்துல சிந்து..! 

//....தமிழர்களும் காசுமீரிகளும் இந்தியர்களல்ல. காசுமீர் போலவே தமிழ்நாடு தமிழருக்கே என்று ஒருமித்து முழங்கினால் நாமும் அவர்களும் ஒருமைப்பாடு கொள்வோம். அதன் வழி இந்தியா அண்டை நாடாகும். விடுதலைத் தேசங்கள் பிறக்கும். இதற்கு தமிழகத்தைத் தொடர்ச்சியான கருத்துப் பரப்புரை மூலம் அணியப்படுத்தும் பொறுப்பிலுள்ள போராட்ட ஆற்றல்களுக்கு உடனடியாக அதற்கான பணியைத் தொடங்கும் பொறுப்பைத் தந்தது நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் ஆகச் சிறந்த பயன். - தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்//  

(-வாட்ஸ்அப் இல் படித்தது! பார்த்தது!)

இதற்கு பெயர்தான் சந்துல சிந்து பாடறது என்பது! தனிநாடு பிரச்சனைக்கு தீர்வாகாது! சோவியத் ஒன்றியத்தில் இப்படித்தான் கூத்தாடித் கூத்தாடிப் போட்டு உடைத்தார்கள்! உடைந்துபோன அந்த நாடுகள் எல்லாம்... எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து எல்லாம் செல்வச் செழிப்புடன் வாழ்கிறார்களா தற்போது?

இந்த மாதிரியான குரல்கள் எல்லாம் ஏகாதிபத்திய சுரண்டலுக்கே வழி வகுக்கும் என்பதற்கு சோவியத் ஒன்றே போதுமான சான்று! ஆனால், இதை- தோழர் தியாகு போன்ற தமிழ்தேசியவாதிகள் ஏற்க மாட்டார்கள்! இவர்கள் எல்லாம் "தனிநாடு பைத்தியங்கள்!" வேறென்ன சொல்ல? மார்க்சீயத்தை "ராவா" (எதையும் கலக்காமல் முழு வீரியத்துடன் அப்படியே சாப்பிடுவது; ஆம் மண்ணுக்கேத்த மார்க்சீயத்தை மறுதளிப்பது) உட்கொண்டவர்கள்! அல்லது உட்கொள்ளத் திணிப்பவர்கள்! திணிப்பு சரியான வினையாற்றாது!
----\\\\
சேலம் மாநகரத்தில் இருப்பது காவல் துறையா? 
கொலைவெறி பிடித்த வெறிநாய் துறையா?
#
••17.7.16 இரவு 11 மணி அளவில் ஹெல்மெட் பிடிப்பதாக  மரவனேரி பகுதியில் ஒரு இளைஞனை (வெங்கட்ராஜ் வயது 25 வீராணம்) சேலம் மாநகரம் போலீசும், ஹோம் காடு போலீசும், இரண்டே அடியில் கொன்றே விட்டார்கள்!

••வேகத்தடையில் விழுந்து செத்துவிட்டான் என கதையை ஜோடித்து விட்டார்கள்! ஆனால் அந்த ஹோம் காடு போலீசை வீட்டிற்கும், அந்த காவலரை ஆயுதப்படைக்கும் அனுப்பி விட்டார் சேலம் காவல் ஆணையர்! இந்த கொலைவெறி பிடித்த போலீசுக்கு ஆயுதபடையல்ல புகழிடம் சேலம் மத்திய சிறைச்சாலையும் அதிகபட்ச தண்டனையும்தான்! 

••இதற்கான நேர்மையான விசாரனை தேவை! தமிழக
அரசு செய்யுமா? சேலம் போலீசின் கொலைவெறியை கண்டிப்போம்! கொலைக்கு நியாயம் பெறுவோம்! குடும்பத்திற்கு உதவுவோம்!

••இன்று 22.7.16 மதியம் வெங்கட்ராஜ் பெற்றோரை Dyfi மாவட்டச் செயலாளர் என்.பிரவீண்குமார், மாவட்ட பொருளாளர் வி.வெங்கடேஷ் உள்ளிட்டு தோழர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியபோதுதான் அமுக்கப்பட்ட இந்த அதிர்ச்சியான உண்மை வெளியே தெரிய வந்துள்ளது!
---\\\
வரமல்ல சாபமே!
••சந்தேகம் வேண்டாம் வரமல்ல சாபமே! 
••இது மாதிரியான ராஜஷப்படம் எதற்கு? யாருக்கு பயன்?
••கள்ள டிக்கெட் கொள்ளை பெரும் கொள்ளை! 
••விடிய விடிய திரையரங்களில் கூட்டம் அலைமோதும் காட்சியைப் பார்த்தால் பெரும் கவலை தருகிறது.
••நாடு எங்கே போகிறது! 12000 பிரிண்டா? இது உலகமகா கொள்ளையன்றோ!
••விடியற்காலை 4 மணிக்கு திரை அரங்குகளில் திரைப்படம் (விடிய விடிய காத்திருந்து) பார்க்கும் கேவலம், அவலம் உலகில் வேறெங்கும் உண்டா? 
••என்ன போதை இது? டாஸ்மாக் போதையைவிட கொடியது அல்லவா? 
••இதற்கு யார் எங்கே விழிப்புணர்வு பரப்புரை செய்வது? 
••ரூ2.50 லட்சம் கடனிருக்க, ரூ40 ஆயிரம் கோடி நிதி பற்றாக்குறை பட்ஜெட் தமிழத்தில் தாக்கல் ஆகி இருக்கிறது. இதற்கு சிறு எதிர்ப்புகூட இல்லை. ••ஆனால் தியேட்டர் முன் உள் ரகளையோ ரகளை! 
••ஏ..! தமிழகமே உன் வீரம் எல்லாம் எங்கே? ஏன் இப்படி விரயம் ஆகிறது? 
••'விளங்க முடியாத தமிழன்' நானாகி போனதற்கு யார் காரணம்? 
••ரூ20 கோடி 'ஒயிட் மணி' சம்பளத்தில் அப்படி என்ன உழைப்பை உழைத்து விட்டார் கபாலி ரஜினிகாந்த்!?
----\\\
நினைவேந்தல்..!

மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கல்வராயன் மலை (சேலம்) இடைக்குழு உறுப்பினர் அர்ச்சுணன் நினைவேந்தல் நிகழ்ச்சி...

இன்று 23.7.16 மதியம் இடைக்குழு செயலாளர் ஏ.பொன்னுசாமி தலைமையில் கருமந்துரையில் நடைபெற்றது. சேலம் மாவட்டக்குழுச் செயலாளர் பி.தங்கவேலு அர்ச்சுணன் புகைப்படத்தைத் திறந்து, அவரின் பணிகளை நினைவு கூர்ந்தார்! 

மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிஆர்.மாதேஷ்வரன், ஆத்தூர் வட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ராமசாமி, என்.கிருஷ்ணமூர்த்தி, பழனியம்மாள் அர்ச்சுணன் உள்ளிட்டு ஏராளமான மலைவாழ் மக்கள் மலரஞ்சலி செலுத்தினர்...
---\\\
தலித் விரோத இந்துத்துவா...
மக்கள் ஒற்றுமை காப்போம்! சேலத்தில் ஆர்ப்பாட்டம்!
••குஜராத்தில் மாட்டுத்தோல் வைத்திருந்ததாக கூறி தலித் இளைஞர்களை தாக்கிய இந்துத்துவா வெறியர்களைக் கண்டித்தும்... 
••உ.பி முன்னால் முதல்வர் மாயாவதியை இழிவாக பேசிய BJP எம்பியைக்  கண்டித்தும்... 

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று 23.7.16  மாவட்ட தலைவர் A.கலியபெருமாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   
---\\\
அரசியலின்றி வேறென்ன?
••நூலக பராமரிப்பில் அரசியலின்றி வேறென்ன? எல்லாம் அரசியலே! ••அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகம் சர்சை அய்ந்து வருடத்தை கடந்து அரசியலாகி வருவதுதான் வேதனை! 
••நீதிமன்றம் ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறதோ என எண்ணும் அளவுக்கு அதிமுக ஆட்சி போய் கொண்டு இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை!
••'அம்மா' ஆட்சியில் 'அண்ணா'வுக்கு என்ன வேலை? பேசாமல் அம்மா நூலகம் என மாற்றி விட்டால், தற்போதைக்கு சரியாக இருக்குமோ?
••டாஸ்மாக் கடை பிரச்சனையில் விரைந்து செயல்படும் அதிமுக அரசு, நூலகம் பிரச்சனையில் தள்ளாடுவதில் ஆச்சரியமோ, அதிர்ச்சியோ ஒன்றுமில்லை!
••இன்று 23.7.16 PTTV நேர்படபேசுக்கு!
---\\\

Tuesday, 12 July 2016

மேட்டூரில்..!

மேட்டூரில்..!
சிறுமியை வன்புணர்ச்சி செய்து கொலை! 
முக்கிய கொலையாளியை போலீஸ் விடுவிப்பு! 
மேட்டூரில்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!
#
மேட்டூர் வட்டம், கொளத்தூர் ஒன்றியம் தெலுங்கனூரில் குடியிருக்கும் ராஜா (எ) குருநாதன் மோகவள்ளி மகள்   தர்ஷிணியை, (6 வயது) அதே ஊரில் இருக்கும் திருமூர்த்தி (17), ராமன் (55) ஆகியோர் 2.7.16 இரவு பாலியல் வன்புணர்ச்சி செய்து, கொலை செய்து, சமையல் பாத்திரத்தில் அடைத்து, மறைத்து விட்டனர்.

இந்த கொடூர செயலை கண்டித்தும், கீழ்காணும் கோரிக்கையை முன் வைத்தும், சிபிஐஎம் மேட்டூர்-கொளத்தூர் ஒன்றியக்குழு சார்பில், இன்று 11.07.2016 திங்கள் கிழமை காலை 11 மணிக்கு மேட்டூர் தாசில்தார் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிபிஐஎம் சேலம் மாவட்டக்குழுச் செயலாளர் பி.தங்கவேலு தலைமையில் நடந்த  ஆர்ப்பாட்டத்தில்,
கே.ஜோதிலட்சுமி மாநிலக்குழு உறுப்பினர், கே.ராஜாத்தி அஇஜ.மாதர் சங்க மாவட்டச் செயலாளர், என்.பிரவீண்குமார்  DYFI மாவட்டச் செயலாளர், 
லட்சுமி சிதம்பரம் இடைக்குழு செயலாளர், வழக்குரைஞர் எம்.வெற்றிவேல், 
சி.கருப்பண்ணன் CITU மாவட்ட துணைச்செயலாளர் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

கோரிக்கைகள்:

1. கொலையாளி ராமன், உடந்தையாக இருந்த ரூபா ஆகியோரை உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
2. கொலையாளி ராமனை விடுவித்த கொளத்தூர் போலீஸ் இன்பெக்டர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. நீதி கேட்டு போராடிய, தன் மகளையே பலி கொடுத்த ராசா, மோகனவள்ளியை முதல் குற்றவாளியாக போட்டு 64 பொதுமக்கள் மீது போடப்பட்டுள்ள அராஜக மான வழக்கை வாபஸ் வாங்க வேண்டும். 
4.சிறுமி தர்ஷினியை இழந்து வாடும் குடும்பத்திற்குக் குறைந்தது ரூ10 லட்சம் இழப்பீடு அரசு வழங்கிட வேண்டும். 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வி.இளங்கோ மாவட்டக்குழு உறுப்பினர், எல்.செல்வநாதன் மின்னரங்க இடைக்குழு செயலாளர், இடைக்குழு உறுப்பினர்கள ஏ.அருணாசலம், கே.ஆர்.வேல்முருகன், நா.வேணுகோபால், வி.ஸ்டாலின், பி.வசந்தி, சி.அண்ணாதுரை,  வழக்குரைஞர் எம்.வெற்றிவேல், 
எஸ்எம்.தேவி அஇஜ.மாதர் சங்க இடைக்குழு செயலாளர் மற்றும் தர்ஷிணி குடும்பத்தார் உள்ளிட்டு ஊர் பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 
----\\\\
திறமை இருக்கிறது..!
#டிஎஸ்பி விஷ்ணுபிரியா வழக்கு சிபிஐ நடத்தினால் மட்டுமே நியாயம் கிடைக்கும். தமிழக காவல்துறை விஷ்ணுபிரியாவுக்கு நிச்சயம் நியாயம் வழங்காது! 
#காரணம் தன்னுக்குத்தானே தண்டனையை யாரும் விதித்துக் கொள்ளவே மாட்டார்கள்! 
அப்படி நடந்தால் அது அபூர்வம்; அந்த அபூர்வமோ, அதிசயமோ நடக்க வாய்ப்பு துளி கூட கிடையாது! தமிழக காவல்துறை ஆரம்ப கட்டத்தில் நடந்து கொண்ட முறையே இதற்கு சாட்சி!
தமிழக காவல்துறைக்கு திறமை இருக்கிறது; நேர்மையோ மனசாட்சியோ இல்லை! 
#மனசாட்சி காவல்துறைக்கும், அன்றைய அரசுக்கும் இருந்தால், குற்றம் ஏதும் நடக்கவில்லை என்ற நேர்மை இருந்திருந்தால் அப்பொழுதே அரசு சிபிஐக்கு இந்த வழக்கை தந்திருக்கலாமே! ஆம், மடியில் கணமில்லாதபோது வழியில் பயமேன்?
#உயர்நீதி மன்றம் சிபிஐக்கு இதை மாற்றியதன் மூலம் தமிழக அரசும், காவல்துறை குற்றவாளி கூண்டில்! உயர்நீதி மன்றம் இதை தள்ளுபடி செய்யாததே இதில் குளறுபடி நடந்திருக்கிறது; அல்லது உண்மை மூடி மறைக்கப்பட்டு இருக்கிறதென்பது ருசு ஆகிவிட்டது!
----\\\\
புதிய தலைமுறை டிவி கருத்தா? 
நெறியாளரின் கருத்தா?

இன்று 2.7.16 புதுப்புது அர்த்தங்களில் அதிர்ச்சியான கேள்வியை முன் வைத்தார் நெறியாளர். சுவாதியை கொலை செய்த குற்றவாளியை பிடித்திட அளவுக்கு அதிகமான அழுத்தம்... அரசியல் கட்சிகள், நபர்கள், சமூகவலைதளம், ஊடகம் போன்ற கொடுத்தது சரியா? இப்படிப்பட்ட நிர்பந்தம் உதவுமா? போன்ற கேள்விகளை வைத்தை விவாதத்தை நடத்தினார். வழக்கத்துக்கு மாறாக இந்த ஒரே தலைப்பில் ஒரு மணிநேரம் நிகழ்ச்சியை கொண்டு சென்றார். 

அரசு மற்றும் காவல்துறை மீது நம்பிக்கை வைத்து, அவர்கள் மீது பாரத்தை இறக்கி வைத்துவிட்டு, கொலையை வேடிக்கைப் பார்த்ததைப்போல் வேடிக்கைப் பார்ததுக்கொண்டோ, வீட்டில் தூங்கிக் கொண்டோ இருக்க வேண்டியதுதானே என்கிற "அர்ததத்தில்" கொண்டு போனது ஏன்? எதற்கு இந்த அபத்தமான முன்னெடுப்பு? 

இதிலே பிஜபி சேகர், கொலையை மதச்சாயம் பூசியது அவரது பிறப்புரிமை (இந்து மதத்தின்) போல் வாதிட்டது கண்டிக்கத்தக்கது; இந்து மதத்தை குத்தகை எடுத்துக் கொண்டதற்காக முஸ்லீம் மதத்தின் மீதோ, கிருத்துவ மதத்தின் மீதோ துவேசம் கிளப்ப சில விசமிகளைப் பயன்படுத்தியதை அவரை அறியாமல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மாதிரியே இருந்தது. 

இதற்கு காங்கிரஸ் கோபண்ணா தக்க பதிலடி தராதது துரதிஷ்டமே! ஆம், நெறியாளர் கார்த்திகேயனும்தான்! 

இத்தனை அழுத்தம்தான் (PTTV உள்ளிட்டு) இத்தனை விரைவில் காரியங்கள் நடந்திருக்கு. அழுத்தம் இல்லாமல் போயிருந்தால், இதை அமுக்கி இருக்கும் நிலைதான் ஏற்ப்பட்டிருக்கும் என்பதற்கு இதற்கு முன் ஏராளமான உதாரணங்கள் உண்டு! அதை அறியாமல் போனதுதான் நெறியாளரின் சோகம்!
---\\\
இன்று 2.7.17 இந்து தமிழ் நாளிதழில் டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மரணம் குறித்த வழக்கு சிபிஐ க்கு மாற்றிட உயர்நீதி மன்றம் உத்தரவு குறித்து...
----\\\
எங்கடா... அந்த ஒய்ஜிஎம் என்ற ஓநாய்..?! எஸ்வி.சேகர் என்ற சோதா..! பார்ப்பனியம் ஒரு பார்த்தீனியம்
----\\\
*வணக்கம்..! 
'தோழர்' ஜென்ராம்..!*

ஊடகத் துறையில் ஆளுமை என்பதன் அடையாளமாக, அதுவும் இடதுசாரி கருத்துகளுக்கு இதமான நிலையில் நின்று, வாதிட்டவர்களில் புதியப்புதிய அர்த்தங்களுடன் கொண்டு சென்றவர் விடுவிக்கப் பட்டு உள்ளார் என்ற செய்தி எனக்கு வருத்தமே! அந்த நிகழ்ச்சியில் என்னை இழுத்துப் போட்டவர் தோழர் ஜென்ராம்! அன்று முதல்... அவருடன் எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் என நான் பல்வேறு கருத்துக்களை பரிமாறி உள்ளேன்! அந்த நினைவுகள் என்னை உசுப்பிக் கொண்டே இருக்கும்!  வணக்கம் தோழர் ஜென்ராம் அவர்களே!

(PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்ற வலைத்தளம் பதிவிலிருந்து..!)
----\\\
இனி..!
PTTV யின் புதுப்புது அர்த்தங்கள் 'ரெகுலராக' பார்ப்பதற்கான கதவு அடைக்கப்பட்டுவிட்டது..! எனக்கு..! 
ஏற்கனவே..! 
தந்தி டிவியின் ஆயுத எழுத்து இழுத்து மூடப்பட்டு விட்டது! என்ன்ன்னச் சொன்னே..! 
'நடுநிலை' போதும்டா சாமி! 
மிஞ்சி இருப்பது PTTV யின் நேர்படபேசு..! இதுவும் எத்தனை நாட்களுக்கோ..!? 
ஏதாவது 'நடுநிலை'யா இருந்தா சொல்லுங்கப்பா..!? 
பூனை கண்ணை மூடிக் கொண்டால் பூலோகம் இருட்டு விடாது! ப்பீகேர்புள்..! 
என்ன்ன்னச் சொன்னே..!
[19:41, 2/7/2016] +91 94441 40563: Super Thaaraipitha
----\\\\
 சமூக அமைப்பே!
#இளைஞர்கள் பாதை மாறுவதற்கு இந்த சமூக அமைப்பே காரணம்! லாபவெறி கொண்ட இந்த  சமூகம் பலவிதமான தவறான பாதையில் இளைஞர்கள் (ஆண், பெண்) பயணிக்க, பலவிதமான "கருத்துரு"க்களை உருவாக்கி விதைக்கிறது! அதற்கான காரணிகள்... காதல், வேலையின்மை, கல்வியின்மை, வறுமை, வக்ர குணம்... என இப்படி ஏராளம் இருக்கிறது! 

#இளைஞர்கள் நல்வழி நோக்கிய பாதையும் பயணமும் அரசுகளிடம் இல்லாததே காரணம்! எல்லா சமூக  தீமைகளையும் கட்டமைப்பது அரசுகளின் கொள்கைகளே! இதற்கு தீர்வு காணாமல், மேம்போக்காக புண்ணுக்கு புணுகு தடவுவதால் சமூக கொடுமைகள் தீராது! #ராம்குமார்கள் அரசுகளால், சமூகத்தால் உற்பத்திச் செய்யப் படுகிறார்கள்! இளைஞர்கள் சீர்கெட்டு போவதையே அரசு விரும்புகிறது. அப்பொழுதுதான் அரசுகளின், அதன் சூத்தரதாரிகளின், சுரண்டலை கண்டுக் கொள்ளாமல் இருப்பார்கள் விதியே கெதியென்று!

#ஆம், இந்த கொலையைக்கூட விதியின் பயனென கற்பிதம் செய்யப்படுகிறது; அதாவது இது இருவரின் தலையெழுத்து என பேசுவதை காதால் கேட்கிறோமே! இதுதானே அனைத்து சாதி, மதத்தினரையும் சுரண்டுவதற்கு அஸ்திவாரம்; பலம்! இதை எல்லாம் ஒதுக்கிவிட்டு ஒரு வரியில் பதில் தேடுவதும் ஒருவகையான திசைத்திருப்பல்; இதையெல்லம் விடுத்து, சமூக குற்றங்களைத் தடுக்க விடைதேடுவது பேதமையே!
 ----\\\\
இவர்கள் என்ன கிழித்தார்கள்?

ரோல் மாடல் ன்னு யாருமே இல்லையாம் இந்த பானு ஆன்டிக்கு..! பாவம், பரிதாபம், பானு கோம்ஸ் இன் வாதம்..! எல்லாரும் சினிமாவையே 'போட்டு' எடுத்தனர்! சினிமாவின் ஹீரோ தான் காரணமா? அப்படிப்பட்ட சினிமாவை ரிலீஸ் செய்ய அனுமதிக்கும் அரசு காரணமில்லாயா? அப்படிப்பட்ட சினிமாவை எதிர்த்து இவர்கள் என்ன கிழித்தார்கள்? குறைந்தது அந்த போஸ்டரையாவது கிழித்தார்களா? என்றே கேட்டேன்! ஆம், இன்று 2.6.16  புதிய தலைமுறை டிவியில் விவாதத்தில் வந்த கருத்து முத்துக்கள்! இத்தகைய சமூக கொடுமைகளுக்கு அரசு எந்த வகையிலும் பொறுப்பே இல்லை என்பதுபோல் போனதுதான் சோகம்!
----\\\
சிஐடியூ 
சேலம் மாவட்ட 11வது மாநாடு ஊர்வலம்-பொதுக்கூட்டம்!

சேலம் மாவட்டம் சிஐடியூ வின் 11வது மாவட்ட மாநாடு 2,3.7.16 தேதிகளில் சேலம் மாநகரில் சிறப்பாக நடைபெற்றது. 

மாநாட்டில் தலைவராக பி.பன்னீர்செல்வம், செயலாளராக டி.உதயக்குமார், பொருளாளராக வி.இளங்கோ உள்ளிட்டு 21 நிர்வாகிகளுடன் 46 பேர் மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டனர்.

மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்குகளைக் எதிர்த்து நடைபெறும் செப் 02 அகில இந்திய மாநாட்டை வெற்றிகரமாக்குவது உள்ளிட்டு பல தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மாநாட்டை ஒட்டி இன்று நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர். மாநாட்டை ஆதரித்து மாதர்-விவசாயிகள்- விவசாயத் தொழிலாளர்கள்-அரசு ஊழியர் சங்கங்கள் தங்களது சகோதர ஆதரவை தெரிவித்து வாழ்த்து முழக்கமிட்டனர். 

பி.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆர்.வெங்கடபதி, டி.உதயக்குமார் மற்றும் மாநில தலைவர் அ.சௌந்திரரான் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
----\\\\
வலுவான இயக்கத்தை முன்னெடுப்பீர்!

சேலம் மாநகரம் DYFI சார்பில் உள்ளூர் மக்களின் சாலை வசதி உள்ளிட்டு அடிப்படை பிரச்சனைகளைத் தீர்க்கக் கோரி, சின்னேரி வயக்காடு கிளை சார்பில், சேலம் மாநகராட்சியை வலியுறுத்தி, நடந்த கையெழுத்து இயக்கம் நடத்தியத் தோழர்களுக்குப் பாராட்டுக்கள்! மக்களைத் திரட்டி வலுவான இயக்கத்தை முன்னெடுப்பீர்!
-----\\\\
கேள்விக்குறியே!
#மறைக்கப்பட்ட  முயற்சியே! நடைமுறை சிக்கல் ஏதுமில்லை! 
#இதிலே மத்திய அரசும் சம்மந்தப்பட்டதால், சிபிஐ எந்தளவு விசாரித்து உண்மையை வெளியே கொண்டு வரும் என்பது கேள்விக்குறியே!
#மறைக்கப்பட்ட உண்மையை வெளியே கொண்டு வந்தால் சிபிஐயை பாராட்டலாம்! சிக்கலே 570 கோடி சம்மந்தமான உண்மை மறைக்கப்படுவதுதான்!
#மறைக்கும் முயற்சி நடந்ததை அறிந்தே உயர்நீதி மன்றம் சிபிஐ க்கு உத்தரவிட்டு உள்ளது.
----\\\\
இதென்ன முரண்?
மக்களை மதிக்காத சேலம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மக்கள் விரோத போக்கு! 

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கொளத்தூர் ஒன்றியம், தெலுங்கனூர் சிறுமி வர்ஷிணி யை பாலியல் பலாத்காரம் செய்து கொலைசெய்தவர் மீதும்,  அவனுக்கு உதவிய அவனது தாத்தா அம்மா ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் இன்று 4.7.16 சேலம் மாவட்ட ஆட்சியர் அவலுவகம் முன் மாதர் வாலிபர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்  நடத்தப்பட்டது. 

அதன்பின் மாவட்ட ஆட்சியரிடம் மகஜர் கொடுக்க, சிபிஐஎம் மாவட்டச் செயலாளர் பி.தங்கவேலு, மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜோதிலட்சுமி, மாதர் சங்க நிர்வாகிகள் கே.ராஜாத்தி, ஐ.ஞானசவுந்தரி, ஜெயலட்சுமி வாலிபர் சங்க நிர்வாகிகள் வெங்கடேஷ், கிருஷ்ணன் உள்ளிட்ட குழுவினர் சென்றனர். 

ஆட்சியர் அறையில் ஏனென்று கேட்பதற்குகூட ஒருவரும் இல்லை; நேமுக உதவியர் (பொது) பார்ககச் சென்றால், "வா வா பெட்டிசனா? இன்ஸ்பெக்சனில் இருக்கேன்; கொடு கொடு; நடவடிக்கை எடுகிறேன்" என்று நெய்காரப்பட்டி ஜமீன்தார் போல் கால்மேல் கால்போட்டு அமர்ந்து ஆட்டிக் கொண்டு என்று அவரது "மக்களைக் காக்கும்" மகத்தான பணியில் மூழ்கி விட்டார்! 

இதுதான்-- "அம்மா ஆட்சியில் அம்மா ஆணைப்படி மழைப் பெய்ய வைத்த" கலெக்டர் சம்பத்தின் சீரய நிர்வாகத்தின் லட்சணம்! உலகையே உலுக்கும் சம்பவம் கொளத்தூர் சிறுமி தர்ஷிணி பாலியல் கொலை! இதுவரை இந்த ஆட்சியரோ, கோட்டாசியரோ கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்யக்கூட செல்லவில்லை என்பது எவ்வளவு கொடுமையான நிகழ்வு. கொலையில் கூட பணக்கார கொலை ஏழைக்கொலை என்பதற்கு இதுவும், வினுப்ரியா தற்கொலை சம்பவங்களே சாட்சி. மாவட்ட நிர்வாகத்தின் இத்தகைய மக்கள் விரோதப் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது! 

இதிலே மெச்ச தக்க ஒன்றும் இதே மாவட்டத்தின் இன்று நடந்தது! ஆம், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நாங்கள் நேரில் சந்தித்து, "நீங்கள் விரைந்து செயல்பட்டு கொலைக்குற்றவாளி கைது செய்தது பாராட்டத்தக்கது" என கூறி, தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, "கலங்கிய கண்களுடன் அந்த பிரச்சனையை விடுங்க; அடுத்தது பேசுவோம்" என்றது ஒரு நெழ்ச்சியான நிகழ்வு. அப்படி ஒரு கலெக்டர் தமிழ் தெரிந்த ஆர்டிஓ..! இப்படியொரு தமிழ் தெரியாத காவல் கண்காணிப்பாளர்! 

அன்று- வினுப்ரியா சாவுக்கு கையெடுத்து கும்பிட்டார்; இன்று- தர்ஷிணி சாவுக்கு கண்கலங்கி போகிறார்! மனிதம் இன்னும் சாகவில்லை!

தமிழ் தெரிந்த மாவட்ட வருவாய் அலுவலருக்கு காது கொடுக்கக்கூட நேரமில்லை; திமிரில் திளைக்கிறார்!தமிழ் தெரிந்த இந்த அதிகாரி பெட்டிசனைக் கூட ஏரேடுத்து பார்க்கவில்லை! ஆனால் தமிழ் தெரியாத காவல் கண்காணிப்பாளர் தமிழில் உள்ள பெட்டிசனை வாங்கி, பின்பண்ணி, கையெழுத்து போட்டு, "தத்க்கா..." "புத்தக்கா..." ன்னு தமிழில் பேசி கண் கலங்குகிறார்! இதென்ன முரண்?
-----\\\\
சிக்கல் செய்வதே பாஜகதான்! 
#முன்னுரிமை அவசியம் என்பதை வரலாறு தெரிந்தவர் ஒப்புக்கொள்வர். சிக்கல் செய்வதே பாஜகதான்! 
#பாஜக தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் பொதுவான சட்டத்தை ஏற்கவில்லை என்பதுதான் உண்மை!  
#ஏற்றத்தாழ்வான சமுதாயத்தில், மிகவும் பின்தங்கிய பகுதியினருக்கு சிறப்பு கவனமும், தனித்தனியான சட்டமும் தேவையே! 
#சமுதாயம் சமத்துவப்பட்டு விட்டால், தானாகவே பொது சிவில் சட்டத்தை நோக்கி நகர்ந்துவிடும்!  
#தனித்தனி சட்டங்கள் என்பது மதம் சார்ந்த வகையில் தானிருக்கிறது ஜம்மு-காஷ்மீரைத் தவிர்த்து! #நாட்டில் உள்ள யாவருமே, குறிப்பாக இந்து, முஸ்லீம், கிருத்துவர் உள்ளிட்டோர் நமது அரசியல் சாசணத்தை ஏற்றுக் கொண்டே வாழ்ந்து வருகின்றனர். இதிலே சிக்கல் செய்வதே பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் தான்! 
#முஸ்லீம், கிருத்துவர், தலித் என்பனர் இல்லையெனில் பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் செத்த இடத்தில் என்றோ புல் முளைத்து இருக்கும்!
#இன்று 5.7.16 PTTV நேர்படபேசுக்கு!
----\\\\
புரியாத புதிர்!
 #அந்த சமயத்தில் மத்திய அரசு எப்படி முடிவில் தலையிட முடியும்? முடிவை எப்படி மாற்றி அமைக்க முடியும்? தொண்டர்களை உற்சாக படுத்தவே கருணாநிதி கூறுகிறார்! 
பழம்பெரும் அரசியல்வாதி இப்படி பேசுவது புரியாத புதிர்! 
#எப்படி? எதை வைத்து சில மாதங்களில், சில வருடங்களில் ஆட்சி மாறும்? குதிரைபேரம் நடந்துக் கொண்டு இருக்கிறதா? விலை படியும்போது முடிந்துவிடும் விடிந்துவிடும் போலும்!
#சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்புக்கு ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டு இருப்பது நன்றாக தெரிகிறது! ஜெயலலிதா தண்டனை பெற்றால், குதிரைபேரம் முடிவுக்கு வந்து, திமுக ஆட்சிக்கு வருமோ? அதைத்தான் அப்படி சொல்கிறாரோ?
----\\\\
டவ்வுசர் பாய்ஸ்? 
கல்வியில் அரசியல் கட்சிகளின் தலையீடு கூடாது மத்திய மனதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் (தினமணி 7.7.16) வாய் மலர்ந்துள்ளார்! 

பாஜக அரசியல் கட்சியல்ல; அது ஆர்எஸ்எஸ் சின் ஒரு அங்கம் என இவ்வாறாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து உள்ளார் என்றே எடுத்துக் கொள்வோம்! அவருக்கு நமது நன்றியை யும் தெரிவித்துக் கொள்வோமாக! 

ஆர்எஸ்எஸ் ஆதிக்கத்தை இதைவிட  இன்னும் எப்படி வெளிப்படையாக சொல்ல முடியும்? அரசியல் கட்சிகளை என்ன வேலை செய்ய சொல்கிறீர் டவ்வுசர் பாய்ஸ்? 

சிறுபான்மை மக்கள், தலித் மக்கள், கம்யூனிஸ்ட்களைக் வேட்டையாட சொல்கிறீர்களா? டவ்வுசர் பாய்ஸ்!
----\\\\
அய்யா வைத்திய'நாரதரே'..! 

ஏமாற்றம் அளிக்கும் மாற்றம் என இன்று 7.7.16 தினமணி தலையங்கம் வந்திருக்கிறது. அது குறிப்பிடும் ஏமாற்றம் ஏழு கோடி தமிழர்களுக்கு ஒரு கேபினட் அமைச்சர் கூட 78அமைச்சர்களில் வழங்கப்பட வில்லையாம்! இதுதான் பாஜக! இதை எழுதிய திருவாளர் வைத்தியநாதன் பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளரைப் போல் செயல்பட்டுக் கொண்டு இருப்பவர். 

முதலில் மதம்; அடுத்து மொழி; அடுத்து இனம், அடுத்து நிறம், அடுத்து பாலினம்,அடுத்து ஜாதி; அடுத்து ஊர்; அடுத்து தெரு; அடுத்து என் வீடு என பாகுபாடுகளை விதைப்பதே இவர் போன்றவர்களும், ஆர்எஸ்எஸ் சித்தாந்தமும்தான்! மொத்தத்தில் மக்கள் ஒற்றுமையாக, நிம்மதியாக வாழவிடாமல் செய்வது; சகோதர்களாக இருக்கும், வாழும் மக்கள் மத்தியில் வேற்றுமையை விதைத்துவிட்டு, ஒற்றுமைக்கு குரல் கொடுப்பதுபோல் நடித்து, நாடகமாடுவதே இந்துத்துவா..! 

இதிலே இவர் உதிர்த்துள்ள முத்துக்கள் ஏராளம்! அவற்றில் ஒன்றிரண்டு-- அதன் சாரம்... மன்மோகன்சிங் சுயமாக செயல்பட முடியாமல் இருந்தாராம்; ஆனால் மோடி அவ்வாறு இல்லையாம்;  எல்லா அதிகாரமும் பெற்றிருந்தாரம்; அப்படி இருந்தும் ஏன் இவ்வளவு கால தாமதம்? அமைச்சரவையை மாற்றி அமைக்க என ப்பிரிக்கேஜ் குழந்தைபோல் பிதற்றுகிறார்! 

அய்யா வைத்திய'நாரதரே'... ஒன்னும் தெரியாத பாப்பா போல்... தினமணி வாசகர்களை வேண்டுமானால் ஏமாற்றலாம்! ஆனால் ஒட்டு மொத்த மக்களையும் ஏமாற்ற முடியாது. 

திருவாளர் நரேந்திர மோடி தனிமனிதன் கிடையாது; ஆர்எஸ்எஸ் என்கிற ஆக்டோபஸ் (விஷ சிலந்தி) யின் ஆயிரமாயிரம் விஷக் கால்களில் (கொடுக்குகளில்) ஒன்று! அங்கே மன்மோகன்சிங்கை, காங்கிரஸும், கார்ப்பரேட்டும் இயக்கியது; இங்கே ஆர்எஸ்எஸ்ஸும், அதன் அரசியல் பிரிவு பாஜகவும், கார்ப்பரேட்டும் சேர்ந்து முப்படையாக இயக்குகிறது என்பதை இலை சோற்றிலில்லை... ஒரு சோற்றில் இன்னும் எத்தனை நாட்களுக்கு மறைப்பீர் வைத்திய'நாரதரே'!?
----\\\\
அதிர்ச்சியே!
#திருப்பூரில் ஐஎஸ் தீவிரவாதி கைது அதிர்ச்சியே! தீவிரவாதிகளின் பாதுகாப்பான இடம் தமிழகமா? கவலையளிக்கிறது; மனது கனக்கிறது! 
#தமிழக அரசும், காவல்துறையும், உளவுத்துறையும் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டியதையே இது காட்டுகிறது. #எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டை நிராகரித்து விடவும் முடியாது. #ஒவ்வொரு வினையும், அதற்குரிய எதிர்வினையை தந்துவிடுகிறது; அதுதான் இது! ஆம், இந்துத்துவா துளிர் விடுகிறபோது, அதோடு ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளும் கூடவே முளைவிடுகிறது!
#தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்திச் சிரிக்கிறது. பாஜக ஆட்சியைவிட பாதுகாப்பான இடம் மத அடிப்படை வாதிகளுக்கு அதிமுக ஆட்சிதானோ?
#இன்று 8.7.16 PTTV நேர்படபேசுக்கு!
----\\\\
கொள்கை நிலைப்பாடும்!
#அரசின் தலையீடும், அதன் கொள்கை நிலைப்பாடும்! 
#வாரக்கடன் 8லட்சம் கோடியை விட்டுவிட்டு, ஆயிரமும், அய்யாயிரமும் வாங்கிய  அப்பாவியின் கடனுக்குத் தான் அரசு வங்கிகளும், கூட்டு வங்கிகளும் அரசுகளும் "குய்யோ முய்யோ"ன்னு  கூச்சலிடும்! போலீசைக் கொண்டு தாக்கும்! 
#இது அரசின் வர்க்க நிலையில் இருந்துதான் நடக்கிறது. அதைத்தான் சிபிஐஎம் பொதுச் செயலாளர் அம்பலப்படுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். 
#உண்மையிலேயே இது வளர்ச்சிக்கான அரசாக இருந்தால், இந்த 8 லட்சம் கோடி வாராக் கடனை வசூலித்து, மக்களுக்கு அதை மடைமாற்றம் செய்யட்டும்! #எது எதற்கோ கடிதம் எழுதும் தமிழ்நாடு முதல் அமைச்சர் இதற்கும் ஒரு கடிதம் எழுதினால், பெரும் புண்ணியமாக இருக்குமல்லவா? செய்வாரா ஜெயலலிதா? 
#பாஜக தனது அஸ்தீரத்தைப் பயன்படுத்தி வசூலித்திடுமா? அதற்காக போராடுமா? வாராக் கடன் ரூ8 லட்சம் கோடியை வசூலித்தால் மோடி புலி; இல்லையெனில் எலி! 
#நாட்டுக்காக குடம் குடமாக கண்ணீர் வடிக்கும் கோமகன்கள் இதற்கு என்ன செய்ய போகிறார்கள்? அல்லது என்ன சொல்லப் போகிறார்கள்?
#விவசாயிகளின் பட்டினி சாவை, தற்கொலை தடுக்க எளிய வழி இந்த 8லட்சம் கோடியை வசூலித்து விவசாயிகளுக்கு தந்திடுவதே!
----\\\
கண்ணிருந்தும் குருடர்களாய்..! 

இங்கே அமர்ந்திருப்பவர் முகமூடி கொள்ளையர் என பயந்து விடாதீர்கள்! பாவப்பட்ட 'ஜென்மங்கள்' என்று சொல்லுவதற்கும் நா கூசுகிறது! வேறெப்படி அழைப்பது? அம்மா ஆட்சியின் அவலங்கள் என்றால், சிலர் கோபித்துக் கொள்வர்! 

கடந்த ஒரு மாதத்திற்கு முன் சேலம் மாவட்டம் தலைமை அரசு மருத்துவமனை (மேட்டூர்) யில் கண்சிகிச்சைச் செய்து "கண்" போனவர்கள். அமைச்சர் துறைமார்கள் அலறியடித்து ஓடி வந்து கண்களை திருப்பி தந்து விடுவோமென பறை கொட்டினர். 

ஆனால் நேற்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக படிக்கட்டுகளில் பரிதாபமாக  எங்களுக்கு "கண்" வேண்டுமென அமர்ந்தனர். ஆட்சியரே வீடு தருகிறேன்; 2 சென்ட் நிலம் தருகிறேன் என்று உதார் விட்டு ஒப்பேற்றி அனுப்பி விட்டார். இவர்கள் கேட்டது ரூ20 லட்சம் இழப்பீடு! அது அரசுதான் தர வேண்டுமாம்; இவரால் முடியாதாம்! அரசு கவனிக்குமா? இந்த அவ்வை அம்மையார்கள் 22 பேருக்கு "அம்மா" கண் தருவாரா? அல்லது இழப்பீடு தருவாரா? அம்மாவுக்குத்தான் 'வெளிச்சம்!'. 

ஆப்ரேசன் செய்து, இருந்த கண்ணையும் எடுத்தவிட்ட மருத்துவர்கள், மருந்து மீது பழிபாவத்தை போட்டுவிட்டு, கண்ணிருந்தும் குருடர்களாய் உலா வந்துக் கொண்டிருக்கிறார்கள்! ஆம், அம்மாவும், அமைச்சர் பெருமக்களும்தான்!
----\\\\
CPI(M) பெண் கட்சி உறுப்பினர்கள் கூட்டம்! 

சேலம் மாவட்ட CPI(M) பெண் கட்சி உறுப்பினர்கள் கூட்டம் இன்று 9.7.16ல் சேலம் சிறைத்தியாகிகள் நினைவகத்தில் நடைபெற்றது. இதை சிபிஐஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் விகே.வெங்கடாசலம் துவக்கி வைத்தார். 

இதில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.ஜோதிலட்சுமி, மல்லிகா, வாலண்டினா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.ராஜாத்தி, ஐ.ஞானசவுந்திரி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தினர்.
---\\\
ஐவர் கால்பந்து போட்டி..!
சேலத்தில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு ஐவர் கால்பந்து போட்டி..!

சேலம் மாநகரம் வடக்கு சார்பில்,  Dyfi விளையாட்டு கழகம்., 'சே' கால் பந்துக்குழு இணைந்து போதைக்கெதிராய் ஊரை திரட்டுவோம்; போதையில்லா இளைஞர்களை உருவாக்குவோம்..!  என்ற முழக்கத்துடன் ஐவர் கால்பந்து போட்டி 9,10.716 இரு தினங்கள் சேலம் மாநகர் ஜெய்ராம் மேனிலை பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 

ஐவர் கால்பந்து விளையாட்டு போட்டியை Dyfi மாவட்டச்செயலாளர் என்.பிரவீண்குமார் துவக்கி வைத்தார். இரு தினங்களில் 25  கால்பந்து விளையாட்டு குழுவினர் பங்கேற்று விளையாடினர். இன்று 10.7.16 மாலை 6 மணிக்கு நிறைவுற்றது. 

வெற்றிப் பெற்ற அணிகளுக்கு, முதல் பரிசு கோப்பை மற்றும் ரொக்க பரிசு சிபிஐஎம் சேலம் மாவட்டக்குழு செயலளார் பி.தங்கவேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.சேதுமாதவன் 2 ஆம் பரிசு  கோப்பை மற்றும் ரொக்க பரிசு, 3 ஆம் பரிசு  கோப்பை மற்றும் ரொக்க பரிசு ஆர்.தர்மலிங்கம் ஆகியோர் வழங்கினர்! 

மாவட்டப் பொருளாளர் வி.வெங்கடேஷ், வடக்கு மாநகர நிர்வாகிகள் சதீஷ்குமார், கதிர்வேல்,  சசிக்குமார், அம்ஜத்கான், வெங்கடேஷ்,  நாகராஜ், காமராஜ், ரம்யா உள்ளிட்டு ஏராளமானோர் பங்கேற்றனர்.
----\\\\

---\\\
அடிப்படை வசதிகள் கேட்டு...
குடிநீர், சுகாதாரம், சாலை வசதிகளை முன்வைத்து சேலம் மாநகரம் மேற்கு Aidwa சார்பில் இன்று 11.7.16 சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டல அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது!

இதில் Aidwa மாவட்டத் தலைவர் ஐ.ஞானசவுந்தரி, மாநகர செயலாளர் ஜெயமாலா, Dyfi மேற்கு மாநகர செயலாளர் கணேசன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் கண்ணன், மேற்கு மாநகர செயலாளர் எம்.கனகராஜ், மாநகர குழு உறுப்பினர் பி.பாலகிருஷ்ணன், உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இறுதியில் மண்டல அலுவலரிடம் மனு கொடுத்தனர்.
----\\\ 
*சாரு வின் ஜெட்ஜ்மெண்ட்... 
ஆர்க்கியூமெண்ட்... ரொம்ப பேடு!*

#படைப்பாளிகளின் 'கருத்து' சுதந்திரத்திற்கும்  எல்லைகள் வேண்டும்; அதுபோல் ஜாதி-மத வெறியர்களின் 'தொல்லை'   சுதந்திரத்திற்கும் எல்லைகள் வேண்டும்! 
#மாதொருபாகன் எல்லைத் தாண்டியதைவிட, அதில்- அரசும், ஜாதி ஆதிக்க சக்திகளும் எல்லைத் தாண்டியதுதான் அதிகம்; அதுதான் உண்மை; அதைத்தான் ஹைக்கோர்ட் இடித்துரைத்துள்ளது!
#எல்லையற்ற கருத்து சுதந்திரம் எங்கும், எதற்கும், யாருக்கும் இல்லை! எல்லையற்ற வாழ்க்கை வாழும் உரிமை மனிதனுக்கு இல்லை; மிருகத்திற்கு மட்டுமே!
#இன்று 11.7.16 நேர்பட பேசுக்கு!

#விவாதத்தின் போது இருவகை திரிபுகளை பார்க்க நேர்ந்தது. 1. ஜாதிய-மதவா சக்திகளின் அராஜகம்; அதற்கு வளைந்து கொடுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு... இதன் எல்லை மீறல் குறித்த பதிவு மருந்துக்கூட இல்லை. 2. அருணன் பெண்ணீயத்திற்காக பேச வேண்டியவர், இப்படி பேசுகிறாரே என சாரு நிவேதிதா கேட்டதுதான் வியப்பைத் தருகிறது நமக்கு! (மற்ற இருவரின் சேகர், மணிகண்டன் பற்றி நமக்கு கவலையில்லை! அவர்கள் அப்படித்தான் பேசுவர்!). 

#சாரு வின் ஜெட்ஜ்மெண்ட் ஆர்க்கியூமெண்ட் ரொம்ப பேடு! (பிராமண சாதி போன்று மென்மையான குணம் கொண்டதாம் வேளாளர் சாதி; வேற சாதியாக இருந்திருந்தால்  என்னென்னமோ நடந்திருக்குமாம்!? என்னா நடக்காம போயிற்று..?  இவர் சாதுவென சர்ட்டிபிகேட் கொடுக்கும் சாதிமத வெறி சக்திகளிடமிருந்து கூற முடியுமா? உச்சத்தில் இருந்ததே அவர்களின்  வெறியாட்டம்? மறந்துவிட்டாரா? மறைக்கிறாரா சாரு சார்..!?)
#
சபாஷ்! சரியான நெத்தியடி! அண்ட புளுகு... ஆகாச புளுகு... முதல்வரை அம்பலப்படுத்தியது அருமை தோழர்களே..! வாழ்த்துக்கள்!
---\\\
இதெப்படியிருக்கு..!?