‘கபாலி’ விளிம்புநிலை மக்களுக்கு ‘வேலி!’
கபாலி திரைப்படம் குறித்து ஏராளமாக பேசப்பட்டு விட்டது; இன்னும் பேசப்படக்கூடும்; பேசப்படவும் வேண்டும்! நான் நேற்றுதான் (ஆகஸ்ட் 02 இல் செகன்ட் ஷோ) கபாலி காண நேர்ந்தது. உண்மையிலேயே சமீப காலத்தில் அதுவும் ரஜினி நடித்த படங்களிலேயே வர்க்கம்-சமூகம்-முன்னேற்றம்-விடுதலை குறித்த பிரச்சனைகளில் ‘எழுச்சி’ வேண்டுமென்றால், ‘அமைப்பாகப்போராடு’ என்ற செய்தியை இந்த கபாலி ‘கணீர்’ என ஒலித்திருக்கிறது; இது நான் சற்றும் எதிர்பாராதது. ‘வர்த்தக’ நோக்கில் ‘வர்க்கப்’ பிரச்சனையைப் பேசுவதால், வானம் ஒன்றும் ‘பொழிந்து’ விடாது என இடதுசாரி மற்றும் முற்போக்கு வட்டாரங்களிலும்கூட அலசப்படுகிறது. தமிழக அரசியல் சூழலில் சினிமா என்ற ‘அமைப்பு’க்கு ஒரு முக்கிய பாத்திரம் உண்டு என்பதை யாரும் மறுக்க இயலாது.
அப்படி ஒரு ‘தாக்கம்’ சினிமாவுக்கு மக்களிடம் இல்லையெனில், அன்று துவங்கிய ‘பாதை தெரியுது பார்’ முதல் சமீபத்தில் வந்த ‘நினைவுகள் அழிவதில்லை’ வரை எதற்காக அந்த ‘பெரு’ முயற்சிகள் எடுக்கப்பட்டன என்ற கேள்வி எழுவதை நிராகரிக்க முடியுமா? தெரியவில்லை! எனவே தினமணியின் ‘உச்சம்’ தாண்டிய ‘எச்சம்’ நியாயமே என படம் பார்த்தப்பின் யாராலும் முடிவுக்கு வரமுடியும். இந்திய சமூகத்தின் ‘இருப்பை’ கேள்விக்கு உள்ளாக்கும் குறிப்பாக வர்ண-வர்க்க வேறுபாடுகளை கேள்விக்கு உள்ளாக்கும் ‘அவசர அவசிய’த்தை மிக பெரிய ரசிகர் வட்டத்தை வைத்திருக்கும் ரஜினியின் வாயிலாக ‘வாகணம்’ ஏற்றப்படுகிறபோது, ஆளும் சுரண்டல் வர்க்கத்தின்… வர்ணாசிரமத்தின்… வேறுபாடுகளுக்கு ‘பால்’ வார்த்துக்கொண்டு இருக்கும் தினமணி போன்ற ஊடகங்களுக்கும், அதன் சார்ந்த அமைப்புகளுக்கும் ‘எரிச்சலை’ ஏற்படுத்தாமல் இருக்க முடியுமா? முடியவேமுடியாது! அதுதான் தினமணி போன்ற ஊடகங்களின் கோபக் கொப்பலங்கள் கொப்பளிப்பதற்குக் பிரதானக் காரணம் என்பதைப் பார்க்க முடிகிறது.
ரஜினி என்ற பிம்பத்தின் மீது ரஞ்சித் என்ற சிற்றுளி கபாலி என்ற காவியத்தை செதுக்கி இருப்பது அபாராம்; அற்புதம்! அதற்காக அந்த இருவரையும் எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டிக் கொண்டே போகலாம். ஆம்! ‘கபாலி’ பேசும் கதாப் பாத்திரத்தின் மேல் கட்டமைக்க வேண்டிய விமர்சனங்கள் ‘கள்ளடிக்கெட்’ மீது பாய்ந்தது ஏன் என்பதற்கான காரணத்தைப் புரிந்துக் கொள்வது மிக எளிதே. ஆம், சமுதாயத்தின் அடிநாதமான வர்க்கம்-வர்ணம் பற்றி இந்தளவுக்கு எந்த திரைப்படமும் பேசியதாக எனக்கு தெரியவில்லை. அதுவும் ரஜினி என்ற பெரும் பிம்பத்தின் மீது அதை ஏற்றியதான்... அதன்மூலம் கோடான கோடி மக்களின் மனதில் வீசப்பட்டு இருக்கும் ‘வித்தாக’யாக கபாலி இருப்பதனால்தான்… ஆளும் வர்க்கத்தின் இத்தகைய ‘வெறுப்புணர்ச்சி’க்கு காரணம் என நினைக்க இடமிருக்கிறது. இந்தளவுக்கு பிரபலம் இல்லாத நடிகர் நடித்திருந்தால் கபாலி நன்றாக ‘உறங்கி’க் கொண்டு இருப்பான் யாரையும் குத்தாமல் குடையாமல்! அல்லவா?
‘கத்தி’ முதல் ‘கபாலி’ வரையான திரைப்படங்கள் மீது ‘மயக்கம்’ வேண்டாமென கூட கருத்து நிலவுகிறது. அது கருத்து; அதுக்கு மதிப்பு அளிக்கபடும்; ஆனால்… அது அப்படிதானா? மனிதனின் வாழ்வில் எவ்வித தாக்கத்தையும் கலை, இலக்கியம், ஊடகம் போன்றவை ஏற்படுத்தாதா? அப்படியென்றால், அது சார்ந்த அமைப்புகளை நடத்தி வருவதேன்?. ஆம், கலை என்பது இருமுனை கொண்ட கத்தி. அதை பயன்படுத்துவோரின் நோக்கங்களை பொருத்தே அது பயன்படும் என்பதுதான் ‘மார்க்சீயம்’! அல்லவா? அதை மிக அற்புதமாக ரசிஞ்த் கையாண்டு இருக்கிறார்; அதற்கு மிக வலிமையாக ரஜினி கை கொடுத்து இருக்கிறார். இதற்கெல்லாம் உந்துவிசையாக நடிகர் தனுஷ் மனைவியும், ரஜினியின் மகளுமான சௌந்திரியா இருந்திருக்கிறார் என்ற செய்திகள் உலாவுவது இதில் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதோடு கலைப்புலி தாணு களமிறங்கி கரம் கோர்த்து இருக்கிறார். இவர்கள் எல்லாரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்களே!
ஆம்! பெண்மையை எவ்வளவு பெருமை படுத்த முடியுமோ (சிறுமை படுத்தாமல் இருப்பதே பெருமை படுத்துவது போன்றது தானே) அவ்வளவு பெருமை படுத்தப்பட்டு இருக்கிறது கபாலியில்!. தன் மகள் தனக்கு ஒரு ராணுவ வீராங்கனைப்போல் செயல்பட வைத்திருப்பது ரஜினி பார்முலாவே கிடையாது. அதுபோல் நிறைய ரஜினி பார்முலா இதில் மீறப்பட்டு இருக்கிறது; அதுபோல் இளம் கதாநாயகர்கள் ரஜினிக்கு உதவுவது; உயிர் கொடுப்பது எல்லாம் எந்த படத்தில் வந்திருக்கிறது? அதற்கு அவரும் உடன்பட்டு இருக்கிறார்; இதெல்லாம் தற்செயலானதல்ல; திட்டமிட்ட வேலையே; ஆம், அது ‘சமூகசேவை’யும்கூட!
சினிமா என்று வந்து விட்டாலே அதிலே கற்பனைக்கு பஞ்சமிருக்காது; நிஜ வாழ்க்கையில் செய்ய இயலாத பிரமாண்டம் இருக்கும். அது இல்லையென்றால் அது நாடகம் ஆகிவிடும். நாடகங்களே (சீரியல்) இன்று நிஜமில்லா சினிமா போல் ஆகிவிட்டது. இன்றைக்கு பல திரைப்படங்கள் தோல்வியை தழுவுவதற்கு சீரியலில் நிலவும் பிரமாண்டங்களும், புனைவுகளுமே! ஆகவே ரஜினி போன்றோர் நடிக்கும் படங்களில் புனைவிற்கு சற்றுத் தூக்கலாகத்தான் இருக்கும். கபாலி என்ற பாத்திரம் தனிமனித வீரசாகசம் பேசினாலும், இதிலே நிறைய துணைக் கதாப்பாத்திரங்கள் கதையின் நாயகன்-நாயகிகளாக இருப்பது வியக்கவே வைக்கிறது. இதெல்லாம் ரஜினியின் இன்றைய பார்முலாவே கிடையாது. இது இளம் இயக்குனர் ரஞ்ஜித் பார்முலா போலும்! (இவரின் இதற்கு முந்திய எந்த படமும் நான் பார்க்கவில்லை; அட்டக்கத்தி, மெட்ராஸ் பேசப்பட்டதை ரசித்திருக்கிறேன்! அவ்வளவே!) தமிழ் திரை உலகம் தலைநிமிரும் காலம் போலும் இக்காலமும், இனி வருங்காலமும்! ஆம், கபாலியும்தான்!
கதைக்குள் அது பயணிக்கும் பாதைக்குள் புகுந்து எதையும் நான் பகிரப்போவதில்லை. ஒன்று—படம் வந்து பத்து நாட்கள் ஆகிவிட்டது; இன்னொன்று-- அனைவரும் திரையரங்கம் சென்று கபாலியை காண வேண்டும் என்பது! என்றாலும் ஆண் தான் பெற்றோரை காப்பான்; பெண் காக்க மாட்டாள் என்ற ஆண் ஆதிக்கச் சிந்தனையை, கருத்தைக் கபாலியில் அடித்து நொறுக்கப்பட்டிருப்பதும், கபாலியின் மகள் ‘அப்பா’ என அழைக்கும் அந்த நொடி… என்னை அதிர வைத்து விட்டதும்; எல்லா தீங்குகளுக்கும் இந்த ‘சமூக அமைப்பே’ காரணம் என ஆணி அடித்தாற்போல் நிறுவுவதும் அருமை! ஆனந்தம்! அதைப் பகிராமல் என்னால் இருக்க முடியவில்லை! (மீதியை வெண்திரையில் காண்!)
அதோடு கபாலி படத்தின் முடிவை பார்வையாளர்களே தீர்மாணித்துக் கொள்ளட்டும் என்று கூறப்பட்டிருப்பதால்… கபாலியைச் சுட்டுக் கொல்ல இரு காவலர்கள், ஒருவரிடம் துப்பாக்கி கொடுத்து அனுப்புவது நிச்சியமாக அது, அந்த காவல்துறையின் முடிவாகவோ, அந்த அரசின் முடிவாகவோ இருக்காது; அதாவது, அது அவர்கள் இருவரையும் ‘விலை’க்கு வாங்கிய வேறொரு கேங்க் ‘வேலை’யாக இருக்கும்!
அனேகமாக, காவலர்களின் அந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, தன்னை போர்வையால் போர்த்திக் கொண்டு போகும் அந்த நபர் அப்படியே கபாலியைக் கடந்து சென்றுவிடத்தான் வாய்ப்பு அதிகம்! காரணம் அந்த நாட்டின் மூத்தவர், மதிக்கத்தக்கவர் நூற்றாண்டு கொண்டாடும் விழாவில், அந்த ‘பெரும்தலை’யே கபாலிக்கு தனது தள்ளாத வயதில், தன் துணைவியாருடன் எழுந்து நின்று வரவேற்கிறபோது, மக்கள் மனதில் கபாலி நிற்கிறார் என்றர்த்தமே மேலிடுகிறது; ஆதலால் பெரும் கொள்ளை, கொலை செய்யும் ‘கேங்க்’குகளின் ஆதிக்க தேசமாக, சூதுமிக்க தேசமாக அது இருக்கிறபடியால், கபாலி என்கிற மனிதநேயம் மிக்க, சமத்துவக் கொள்கை பேசும் ஒரு ஜீவன் இருக்க கூடாதென கருதி கபாலியைத் தீர்த்து கட்டவும் வாய்ப்பு இருக்கிறது!
ஆனால்-- கபாலி யின் கடந்த கால சேவையை, பணியை, அவரின் கொள்கைப்பற்றை மனதில் கொண்டு, நான் பார்க்கிறபோது, இதுபோன்ற ‘கேங்க் தலைவர்கள்’ வேண்டுமென மனதுக்குள் பூஜித்து, திரும்பி வந்து துப்பாக்கிக் கொடுத்தவர்களையே தீர்த்துக் கட்ட வேண்டும்; ஏனென்றால் இப்படிப்பட்டவர்கள் தான் நாட்டில் கிரிமினல்கள் வளர்க்கப்படுகிறார்கள் என்பதனால்!? ஆக இந்த இடத்தில் நான் பதிய விரும்புவது… ‘மகிழ்ச்சி!’. அதுபோல் நடிப்பில் யாரும் குறை வைக்காமல் போட்டிப் போட்டு நடித்துள்ளது அதைவிட ‘மகிழ்ச்சி!’. கபாலி விளிம்புநிலை மக்களுக்கு வேலி!
-பி.தங்கவேலு.
----\\\\
வாழ்த்து மழை பொழிந்த...
தோழர்களே, 2, 3 நாட்களாக எனது நோக்கியா வின்டோ கைபேசி என்னுடன் தகராறு... அதனால் இப்ப சாம்சங் ஆன்ராய்டு கைபேசி என் மகனின் உதவியால் வாங்கி விட்டேன்! இனி இது தகராறு செய்யும் வரை... உங்களுடன் தொடர்ந்து உரையாடல் இருக்கும்! ஆம் கடந்த 28.7.16 அன்று எங்களின் 33வது திருமண நாளை முன்னிட்டு மகள் கைக்கடிகாரமும், மகன் கைபேசியும் அன்பாக வாங்கி தந்துள்ளனர்! அவர்களுக்கும், வாழ்த்து மழை பொழிந்த தோழமைகளுக்கும் நன்றி!
----\\\
சுடுகாட்டில் பயமில்லை;
சுதந்திர தேசத்தில்தான் பயமே..! -சகாயம்!
நான் செய்த ஒரே தவறு... கலெக்டராக நான் இருந்தபோது, கிராம நிர்வாக அலுவலர்களை கிராமங்களுக்கு செல்லுங்கள்; என்றேன்!
இதுக்கு மேல்தான் அவரின் வீரிய வார்த்தைகளே இருக்கிறது!
ஆம்... என் இடத்தை மாற்ற முடியுமே தவிர என் கொள்கைகளை யாராலும் மாற்ற முடியாது!
அத்தனை மாவட்ட ஆட்சியரும், அதாவது அனைத்து IAS., IPS அதிகாரிகளும் இது மாதிரி உப்புப்போட்டு சோறு தின்றால்... நாட்டுக்கு எதுக்கு கஷ்டம் வருதூங்கிறன்..!
அல்லது இப்படி ப்பட்ட அதிகாரிகளை எந்த அரசியல் வாதிகள்தான் என்ன புடுங்கிப்புட முடியூங்கிறன்..!?
-----\\\\
நாடகமும் நடிப்பும்
*இருவரும் (கிளாரி; கில்லாடி) லேடி என்ற ஒரு பொருத்தம் இருப்பதை ஏற்கலாம்!
*இருவரும் விளிம்புநிலை மக்களுக்கு அவரவர் ஆட்சி பரிபாலணத்தில் ஓரிரு சலுகைகள் வழங்கலாம்!
*ஆனால் அடிப்படையில் இருவரும் பெண்ணாக இருந்தாலும், உழைப்பாளிகளை சுரண்டும் கொள்கையில் ஒன்னாக இருப்பவர்களே!
*இதைவிட (தமிழக சட்டச்சபையில் நடப்பது) கோமாளித்தனமும், அடிமைபுத்தியும் வேறெதுவுமில்லை!
*நடப்பது நாடகமும் நடிப்பும் கூத்தும்!
----\\\\
புறம்தள்ள முடியாது!
*ஜிஎஸ்டி தமிழகத்திற்கு பாதிப்பு என்கிற தமிழக அரசின் ஆதாரப்பூர்வ வாதத்தை, அறிவிப்பைப் புறம்தள்ள முடியாது! கவனத்தில் கொள்ளத்தான் வேண்டும்! ரூ9 ஆயிரம் சொச்சம் கோடி நட்டம் என்பது சாதாரணமா?
*மாநில உரிமை பாதிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், இந்த நட்டம் தமிழக மக்கள் தலையில் ஏற்றவே வாய்ப்பு உள்ளது. உற்பத்தி வரி என்றால் ... அது ஏற்கனவே மக்கள் தலையில் தான் சுமத்தப்பட்டு இருக்கும்!
*உற்பத்தி வரி தானே குறைகிறது என்று மேலோட்டமாக பார்த்தால்... அது மக்களுக்கு சாதமாக தோன்றும் இந்த ஜிடிபி வரிவிதிப்பு! ஆனால் அது உண்மையா?
*இன்று 4.8.16 PTTV நேர்படபேசு க்கு!
*(விவாதத்தைப் பார்த்தபோது ஜிஎஸ்டி தமிழகத்திற்குப் பாதிப்புபோல் தான் தெரிகிறது. அதிமுக திமுக வின் நாடகமும் புரிந்தது! திமுக 'எதிர்ப்பு' தெரிவித்து ஆதரித்ததாம்; அதிமுக 'எதிர்ப்பு' தெரிவித்து வெளிநடப்பு செய்ததாம்!)
----\\\\
அப்பட்டமான சமூகநீதி மீறல்!
*கோட்டாச்சியரா? வன்கொடுமை ஆட்சியரா? தமிழக அரசின் சமூகநீதி சந்திச் சிரிக்கிறது!
*சந்தேகமே வேண்டாம் இது தீண்டாமையை ஊக்குவிப்பதே!
*அப்பட்டமான சமூகநீதி மீறல்! இதை அனுமதிக்கலாகாது!
*வெவ்வேறு நாட்களில் விழா வை வெவ்வேறு சாதிகள் நடத்திக் கொள்ளட்டும் என்பது அரசியல் சாசனம் வழங்கிய உரிமையை மறுப்பதாகும்!
*சமரச முயற்சி, அமைதிக்குழு, சர்வக்கட்சி குழு என எல்லாம் அரசாங்கம் செய்வது தலித் மற்றும் இடைச்சாதி என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்படும் அநீதியே!
----\\\\
மேற்கு வங்க மக்களைக் காப்போம்!
மம்தா அரசின் கொலைவெறித் தாக்குதலை முறியடிப்போம்!
7.8.16 காலை சங்ககிரியில் எஸ்கே.சேகர் தலைமையில் சங்ககிரி ஜோதிபாசு நினைவகத்தில் நடைபெற்றது. மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு விளக்கி பேசினார். இதில் சங்ககிரி, எடப்பாடி, கொங்கனாபும் இடைக்குழுவை சேர்ந்தோர் பங்கேற்றனர்.
7.8.16 காலை ஆத்தூர் கட்சி அலுவலகத்தில் பிஆர்.மாதேஷ்வரன் தலைமையில் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜோதிலட்சுமி விளக்குரை ஆற்றினார். ஆத்தூர், கெங்கவள்ளி, வாழப்பாடி இடைக்குழுக்கள் பங்கேற்றன.
7.8.16 மாலை சேலம் சிறைத்தியாகிகள் நினைவகத்தில் எம்.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் கே.துரைராஜ் விளக்குரை ஆற்றினார். இதில் சேலம் மாநகரம் கிழக்கு, மேற்கு, வடக்கு, தாலூக்கா, பனமரத்துப்பட்டி, ஓமலூர், ஏற்காடு, மின்னரங்கம் இடைக்குழுக்களும், மத்தியதர அரங்கங்களும் பங்கேற்றன.
#
6.8.16 இல் புதுச்சாம்பள்ளி பி.ராமமூர்த்தி நினைவகத்தில் ஏ.அருணாசலம் தலைமையில் நடந்தது. சிபிஐஎம் சேலம் மாவட்டக்குழுச் செயலாளர் பி.தங்கவேலு விளக்குரை ஆற்றினார். மேட்டூர்-கொளத்தூர், மேச்சேரி, நங்கவள்ளி சிபிஎம் இடைக்குழுக்கள் பங்கேற்றனர்.
----\\\\
ஒன்று 'காவிப்பற்று!'
இன்னொன்று 'கார்ப்பரேட் பற்று!'
"பசு வேறு; பசுவைப் பாதுகாப்பது என்ற பெயரால் நடைபெறும் வன்முறை வேறு!" என்கிறார் பிரதமர் மோடியார்! மகிழ்ச்சி! இவரின் இந்த காலம் கடந்த ஞானோதயம் எதனால்? ஏன்? இதற்கு பின்னால் ஒளிந்திருப்பது என்ன?
தலித் மக்கள் கிளர்ச்சி குஜராத் முதல்வரையே மாற்ற வைத்தது; இது செய்தி! இதிலிருந்து திசைத்திருப்பவே பிரதமரின் இந்த நீலிக்கண்ணீர்! இது ஒருபுறம்!
இன்னொரு புறம் பட்டேல் சாதியினரின் வன்முறைக்கு பிரதிபலனாக பட்டேல் சாதியினரின் ஒருவருக்கு துணை முதல்வர் பொறுப்பு! அப்படியென்றால் தலித் பிரிவினரில் ஏன் துணை முதல்வர் பொறுப்பு தரவில்லை என கோரிக்கை வந்துவிட கூடாதென்ற சூழ்ச்சி, சூது ஆகியவற்றின் வெளிப்பாடே பிரதமரின் இந்த தலித் மீதான பாசம்!
ஆர்எஸ்எஸ் சேவகர் மோடியார்...
ஒன்றும் "சைவ"ப்பூனை அல்ல!
அடுத்து பிரதானமானது உபி வர இருக்கிற சட்டமன்ற தேர்தலும், ராஜஸ்தானில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக மண்ணைக் கவ்வியதும்! மோடியின் ஒவ்வொரு "மூவ்"க்குப் பின்னாலும் ஒளிந்திருப்பது காவிப்பற்றே தவிர தேசப்பற்றல... தலித் பற்றல்ல... சிறுபான்மை மக்கள் பற்றல்ல... ஒன்று 'காவிப்பற்று!' இன்னொன்று 'கார்ப்பரேட் பற்று!'
இதை மறந்தோமென்றால் புலி புல்லைத் தின்றக் கதையாகி விடும்! ஆம், பசித்தாலும் புலி புல்லைத் தின்னாது ... அது புலால்தான் தின்னும்! ஆம் பசு தோல் போற்றிய புலியே மோடியும், காவிக்கும்பலும்!
நான் சொல்வது சரியா "டவ்வுசர்பாய்ஸ்!?"
----\\\\
வாங்கய்யா வாங்க..!
வாங்கய்யா வாங்க..! போனா கெடைக்காது..! பொழுது விடிஞ்சா கெடைக்காது..! என்ன சுட்டுத் தள்ளுங்கய்யா..! என்ன சுட்ட அமிர்ஷா இலவசம்..! அமிர்ஷாவைச் சுட்டா அத்வானி இலவசம்..! அத்வானியைச் சுட்டா ஆர்எஸ்எஸ் இலவசம்..! ஆர்எஸ்எஸ் ஐ சுட்டா... இந்த நாட்டுக்கு பரவசம்..! நம்ம நாட்டுக்கு சுபிட்சம்..! வாங்கய்யா... வாங்க..! (கருத்துபடம்: இன்றைய 9.8.16 ஜனசக்தி)
----\\\\