Sunday, 4 September 2016

மூச்சு போய் போய் வந்தது!?

மூச்சு போய் போய் வந்தது!?


ஒரே மூச்சில் அல்ல; இரு மூச்சில் வாசித்து முடித்தேன்! ஆனால் எனக்கு பலமுறை மூச்சு போய் போய் வந்தது! என்னமோ நானே ரானா ஆயூப்வுடன் பயணத்தைப் போன்ற பய உணர்வு! இன்னும் எனக்கு எடுத்த நடுக்கம் அடங்கவில்லை! அது எப்போது அடங்குமோ தெரியவில்லை!

ஒருவேளை மோடியோடு எடுத்த நேர்காணல் வெளியாகி, அவரும் அமிர்த்ஷா போல் உள்ளே போய் வந்தால் அடங்குமோ!? என்னவோ!?

ஜாடிக்கேற்ற மூடிகள்தான் மோடியும் அமிர்த்ஷாவும் என்றால் மிகையல்ல! அமிர்த்ஷாவை பாஜக தலைவராக ஏன் ஆக்கப்பட்டார் என்பதை இந்நூலை வாசித்தால் உணருவீர்! ஆம்! இந்தியாவையே குஜராத் ஆக்கும் சதி புலப்படும்! அதுதானே நடந்தும் வருகிறது!?

குஜராத் மாடல் என்பது என்ன என்பதை அறிந்திட வேறெதுவும் தேவையில்லை ரானா ஆயூப் வின் குஜராத் கோப்புகள் ஒன்றே போதும்!

ரானா ஆயூப்க்கு ஆயிரம் சல்யூட்! அதோடு, ரானா ஆயூப் என்னமோ தமிழில் எழுதியதுபோல், அள்ளி வழங்கிய வீரமணிக்கு அதைவிடவும் ஒரு சல்யூட் அதிகம்!

யாரிந்த நரேந்திர தாஸ் மோடி..?
கேள்வி: ஆனாலும் பாருங்க, மோடி... கலவங்களின் மூலமாகத்தான் மோடியாக உருவாகி இருக்கிறார். சரிதானே?
பதில்: ஆமாம். அதற்கு முன்பு யாருக்கு அவரைத் தெரியும்? மோடி யார்? அவர் தில்லியிலிருந்து வந்தார். அதற்கு முன்பு, இமாசலப் பிரதேசம். அவர் அரியானா அல்லது இமாசலப் பிரதேசம் போன்ற முக்கியத்துவமற்ற மாநிலங்களுக்குப் பொறுப்பாக இருந்தார்.
கேள்வி: இது துருப்புச் சீட்டு போன்று இருக்கிறது இல்லையா?
பதில்: அப்படித்தான் ... ...

இப்படி சொன்னவர் 2002 இல் முஸ்லீம் களுக்கு எதிராக படுகொலை நடந்த போது குஜராத்தின் காவல்துறை ஆணையராக இருந்த பி.சி.பாண்டே!

இப்படியான திடுக்கிடும் மெய்களுடன் திருப்பங்களுடன் விஹெச்பி; ஆர்எஸ்எஸ் ஆகியவற்றின் முகத்திரைகளை நாறுநாறாக கிழித்து தோரணம் போடுகிறது இந்த நூல்!

இதை தீக்கதிரில் தினசரி பிரசுரிக்க எடுத்த முடிவு மிகச் சரியான முடிவு! இந்துத்துவாவின் கோர முகத்தைப் புரிந்துக் கொள்ள இன்றைய இளம் தலைமுறைக்கு இதொரு ஆயுதம்! இதை வெளிட்டப் பாரதி புத்தகாலயம் மிகுந்த பாராட்டுக்குரியது!
                                                                                                                             -தாரைப்பிதா... 
----\\\
பிள்ளையார் ஸ்பெஷல்..!
(படித்ததில் சுட்டது; நாளைய பிள்ளையார் தினத்திற்காக!)

"பிள்ளையாரைப்போட்டுடைத்த பெரியார் கைது..!"

பெரியார் பிள்ளையாரைப் போட்டுடைத்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று கூண்டில் நிறுத்தப்பட்டார்!
#
கைது செய்து வந்த காவலரிடம்:
நீதிபதி: இவர் என்ன குற்றம் செய்தார்?
காவலர்: இவர் பிள்ளையாரைப் போட்டுடைத்தார்!
நீதிபதி: பிள்ளையாரைப் போட்டுடைத்தீர்களா?
பெரியார்: ஆமாம், போட்டுடைத்தேன்!
நீதிபதி: ஏன் அப்படி செய்தீர்கள்?
பெரியார்: கடைவீதிக்குப்போனேன்; அங்கு பிள்ளையார் சிலையை விலைக்கு வாங்கினேன்; யாருக்கும் இடையூறு இல்லாமல் தெரு ஒரமாகப் போட்டுடைத்தேன்!
நீதிபதி: ஒரு மதத்தவர் வணங்கும் கடவுளைப் போட்டுடைப்பது அவர்களது மனதை புன்படுத்தாதா?
அது தவறல்லவா?
பெரியார்: நான் பிள்ளையார் சிலையை வாங்கும்போது பலரும் அதேபோல வாங்கினார்கள்; அவர்கள் எல்லாம் என்ன செய்தார்கள் என்று கேளுங்கள்!
நீதிபதி: (காவலரிடம்) மற்றவர்கள் என்ன செய்தார்கள்?
காவலர்: அவர்களும் போட்டுடைத்தார்கள்!
நீதிபதி: அவர்களை ஏன் கைது செய்யவில்லை?
காவலர்: அவர்கள் கடவுள் உண்டு என்று சொல்லி உடைத்தார்கள்; ஆனால் இவரோ கடவுள் இல்லவே இல்லை என்று சொல்லி உடைத்தார்!
நீதிபதி: இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? கடவுள் இல்லை என்று சொல்பவர் உடைப்பதில் அர்த்தம் உண்டு; கடவுள் உண்டு என்று சொல்பவர் அவர்கள் வணங்கும் கடவுளையே உடைப்பது நியாயமா? என்று சொல்லி, "அய்யா நீங்கள் போகலாம்" என்றார்!
பெரியார்: "நன்றி" என
சொல்லிவிட்டு வெளியே வந்தார்!
#
----\\\\                                                                                                
பெருந்தாடியும், குறுந்தாடியும்!

ஈஷாகுரு விடம் தந்தி டிவி குரு 'கேள்விக்கென்ன பதில்' நடத்தினார்! குருவின் தாடி மீசை தலைமுடி எல்லாம் இயற்கை தந்தது என்றார். அதற்கு ஒரு நேர்மையான திறமையான பேட்டியாளர் என்ன கேள்வியை அடுத்து கேட்டிருக்க வேண்டும்?
"அப்படி என்றால் அந்த பெண்கள் உள்ளிட்டு மற்றவர்களுக்கு மட்டும் ஏன் மொட்டை அடிக்கப்பட்டனர்" என்றல்லவா கேட்டிருக்க வேண்டும்? ஆனால்... அப்படியே தாவிவிட்டார் குறுந்தாடிக்காரர் அந்த பெருந்தாடிக்காரரிடமிருந்து..!?                      
-----\\\\
தங்க ஊசியாற்றே!?                                                
இன்று 4.9.16 இரவு 9 முதல் 10 மணி வரை PTTV அக்னி பரிட்சை பார்த்தேன்! Cpi மூத்தத் தலைவர் தா.பா., நேர்காணல்..! ஏன்டா பார்த்தோம் என்றாகிவிட்டது.
1925 முதல் கம்யூனிஸ்ட்கள் நேற்று வரை எடுத்து வந்த அனைத்தையுமே சுயவிமர்சனம் செய்து கொண்டார்! எல்லாமே சரியில்லை என்றார்! வருத்தமாக இருந்தது!
தற்போதைய கட்சி முடிவைக்கூட (மக்கள் நலக்கூட்டணியுடன் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது என்பதை) அது ஆக்கபூர்வமான முடிவா? அழிவுபூர்வமான முடிவா? அறியேன்! ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர்களில் நானும் ஒருவன்! அவ்வளவுதான் என்கிறார்!
மொத்தத்தில் விரக்தியின் விளிம்பில் அவரது 'அக்னி பரிட்சை' இருந்ததுதான் சோகத்திலும் சோகம்! வருத்தத்திலும் வருத்தம்! வேறென்ன சொல்ல? தங்க ஊசியாற்றே!?                                                
-----\\\\
அடுத்த குடியரசு தலைவரும்... 
*எல்லாம் அரசியல் தான்!
*அது ஆளுனராக இருந்தாலும், ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தாலும் ஆளும் கட்சியின் அரசியல் ஆதரவாளர்களைத் தானே நியமிக்கப்படுகிறார்கள்!
*ஆம், நியமனங்கள் அனைத்துமே ஆளும் கட்சியின் அரசியல் அடிப்படையில் தான் நடக்கிறது!
*ஆனால் ஒன்று... ஆர்பிஐ கவர்னர் நிச்சயம் அமெரிக்க சொல்படிதான் நடக்கும்! அது ரகுராமும் சரி உர்ஜித் பட்டேலும் சரி!
*ஆளும் கட்சியிலும் ராஜ விசுவாசிகளுக்குத் தான் முதலிடம் கிடைக்கும்! அப்படிப்பட்டவர் தான் உர்ஜித் பட்டேலும்!
*நீதிபதிகள் நியமிப்பதில் அதுதானே நடக்கிறது! அதனால் தானே நூற்றுக்கும் மேலான நீதிபதிகள் காலி இடமாக இருக்கிறது!
*அவ்வளவு ஏன் அடுத்த குடியரசு தலைவரும் அப்படித்தான் வருவார்!
-----\\\\\                                              
பகத்சிங் வாரிசுகள் மூலமே...
*இதிலும் முதலிடம் கிடைக்கவில்லையா? தங்கம் நழுவிவிட்டதா? வெள்ளித்தானா? நமக்கு எதில்தான் முதலிடமும் தங்கமும் கிடைக்கும்?
*இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை! பொருளாதார ஏற்றத்தாழ்வு முதலாளித்துவத்தின் உடன்பிறப்பு!
*பொருளாதாரத்தில் மட்டும் நாம் ஏற்றத்தாழ்வாக இல்ல; சமூக அந்தஸ்த்திலும்தான்!
*முதலாளித்துவம் அரசின் கொள்கையாக இருக்கையில் பொருளாதார ஏற்றத்தாழ்வு தான் மிஞ்சும்!
*சமூகத்தில், சமத்துவம் நிலவ தடையாக இருப்பதற்கும், இந்த ஏற்றத்தாழ்வான பொருளாதார கட்டமைப்பே!
*இந்த ஏற்றத்தாழ்வு நீக்கி சமத்துவத்தில் முதலிடம் வந்திடவே நமது அவா!
*ஆக பொருளாதாரச் சமத்துவம், சமூக சமத்துவம் பெறும் போராட்டம் ஒன்றோடு ஒன்று இணைந்தது!
*இந்த போரைத்தான் மாவீரன் பகத்சிங் வாரிசுகள் (கம்யூனிஸ்ட்கள்) நம் மண்ணில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்!
*இவர்களின் கரம் பலப்படும்போதுதான் பொருளாதாரத்திலும், சமூகத்திலும் சமநிலை உண்டாகும்!                      
-----\\\\\
காலப்போக்கில் காவிரி...
*நதிநீர் பிரச்சனையில் உச்சநீதி மன்றம் என்று ஒன்று இல்லை எனில் தமிழகம் ஒன்று காவிரியின் வடிகால்; இன்றொன்று தார்பாலைவனம் தான்!
*நீதிமன்றம் தீர்ப்பை கர்னாடக முதல்வர் மதிப்பளித்திருப்பது நல்ல துவக்கம்!
*காங்கிரஸ்க்கு எதிராக பாஜக கர்னாடகத்தில் வரிந்து கட்டுவது அதன் இரட்டை நிலையையே உணர்த்துகிறது!
*மத்திய அரசென்று ஒன்று இருப்பதாக தெரியவில்லை! அதுபோல் தமிழ்நாடு அரசும் சுய விளம்பரத்திற்காகவே செயல்படுகிறது!
*தமிழக கட்சிகளையும் விவசாயிகள் சங்கங்களையும் இணைத்து தமிழகத்தின் ஒற்றுமையை மத்திய அரசிற்கும், கர்னாடக அரசுக்கும் பறைச்சாற்ற வேண்டும்!
*ஆனால் அதிமுகவும் அரசும் தமிழக கட்சிகளின் பால் காட்டும் வெறுப்பு அரசியலை விட்டொழிக்க வேண்டும்!
*எந்த அரசு மத்தியில் வந்தாலும் காவிரி நதி நீர் பங்கீட்டில் குரங்கு அப்பத்தைப் பகிர்ந்தளிப்பதைப் போல் இருக்கிறது!
*காலப்போக்கில் காவிரி என்றொரு ஆறு தமிழகத்தில் ஓடியதென வரலாற்று மாணவர்கள் படிக்கும் நிலை வந்திடுமோ என அச்சம் நம்மை வாட்டுகிறது!
7.9.16 PTTV நேர்படபேசுக்கு!                      
[10:28 PM, 9/7/2016] +91 97912 62154: Unmaiyana lines... Vimalavidya                      
[10:33 PM, 9/7/2016] +91 94865 96641: Thanks Comrade! How r u?                      
[10:49 PM, 9/7/2016] +91 97912 62154: Fine..with due care I am reading your comments all... fantastic and you r touching the centre point of issue... Vimalavidya                                                        -----\\\\\
இந்துத்துவா மயத்தை நோக்கி...
*சாத்தியமே இல்லை!
இதொரு சர்வாதிகாரக் குரல்!
*ஒரே நேரத்தில் தேர்தல் அல்ல இன்றைய தேவை! நேர்மையான தேர்தலே தேவை!
*ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குதிரைக்குக் கொம்பு முளைப்பதற்கு சமம்!
*ஆட்சி அமைப்போரிடையே பூசல் வந்து அரசு கவிந்து, மறுதேர்தல் நடத்தும் நிலை வந்தால், அப்பொழுது தேர்தல் ஆணையம் என்ன செய்யும்!?
*ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் வாக்கை விலைக்கு வாங்கு போக்கும், கட்டற்ற செலவும் தடுக்கப்படுமா?
*தேர்தலில் பணம், சாதி, மதம், மொழி, இனம் போன்ற வெறியூட்டல் இருக்காதா?
*இன்றைய தேவை தேர்தல் சீர்திருத்தமே! அந்தந்த கட்சிகள் வாங்கிய வாக்குக்குரிய சீட் கிடைப்பதும், பணபலம் பகட்டு பலம் தடுக்கப்பட்டு ஜனநாயகம் தழைக்கச் செய்வதே!
*தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத அரசுகள் மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுத்தாலே, வானளாவிய வாக்குறுதிகள் ஒழிந்து, மக்களுக்கு காரிய சாத்தியமான வாக்குறுதிகளைக் கட்சிகள் வைப்பர்!
*தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத நபர்களை திரும்பப் பெறும் குரல் ஒளித்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், ஒரே நேர தேர்தல் என்ற அறிவிப்பின் மர்மமென்ன?
*ஒரே தேசம் ஒரே பட்ஜெட் ஒரே கல்வி ஒரே வரி ஒரே மொழி ஒரே மதம் ஒரே ஆட்சி ஒரே சாமி... என்கிற தடத்தில்தான் ஒரே நேரத்தில் தேர்தலும்!
*ஒற்றை வாழ்வியலை நோக்கி போகும் பாசிச பாணி அரசின் செயலோ என நினைக்கத் தோன்றுகிறது!

*எல்லாம் இந்துத்துவா மயத்தை நோக்கிய காய் நகர்த்தல் போலிருக்கிறது!      ----\\\                
ஆர்ப்பரித்தெழுவீர்! 
களம் காண்பீர்! 

02 செப்டம்பர் 2016 இந்திய வானில் பறவைகளைத் தவிர பாதசாரிகள் உள்ளிட்டு வேலைநிறுத்தம் செய்திடும் 15வது வேலைநிறுத்தம்!சிலர் சொல்கிறார்கள் இவர்களுக்கு வேறு வேலை கிடையாதென்று! 

ஆம்! உண்மை வேறு வேலை இல்லைதான்! எங்களின் ஒரே வேலை இந்திய தேசத்தை இடதுபாதையில் செலுத்திடுவதே! எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற ஒரே வேலைதான்! 

இதற்காக சென்ற ஆண்டு நடந்த வேலைநிறுத்தத்தில் இறங்கியோர் 10கோடி! இந்த வேலைநிறுத்தத்தில் இறங்க இருப்போர் 33கோடி என மதிப்பிடப்படுகிறது! இந்தியா விடுதலை பெற்ற போதிருந்தோர் நாளைய வேலைநிறுத்தத்தில்!

மோடி அரசே கண்மூடித்தனமாக சென்று உழைப்பாளிகளை ஏழை எளியோரை வஞ்சிக்காதே! "நீ இந்த மதம் நான் அந்த மதம் நீ இந்த சாதி நான் அந்த சாதி" என உழைப்போரைப் பிளவுபடுத்தாதே! எரிகிற நெருப்புக்கு சாதி மதம் தெரியாது! அதுபோல் பசிக்கிற வயிறுக்கு பேதம் கிடையாது! 

ஆம்! எம் மூதாதையர் 30கோடியினர் போராடி அன்னிய கொள்ளையன் என்ற ஒருவனிடம் இருந்து விடுதலை பெற்றனர்! அதே எண்ணிக்கைக்குச் சற்று அதிகமானோர் அன்னிய இந்திய கொள்ளைக்கு சுரண்டலுக்கு சாவுமணி அடிப்போமென நாளை எச்சரிக்கை மணியடிக்க உள்ளனர்! 

நாட்டோரே! நல்லோரே ஆதரிப்பீர்! இந்திய தேசம் காக்கும் போரில் ஆர்ப்பரித்தெழுவீர்! களம் காண்பீர்!                                                                                        ----\\\\                                     
பாராட்டுக்கள்! மகிழ்ச்சி! 
*பயனுள்ள மக்கள் மீது அக்கரையுள்ள விவாதம்! பாராட்டுக்கள்! நான் எதிர்ப்பார்க்காத தலைப்பும் விவாதமும்! மகிழ்ச்சி!
*12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 33கோடி பேர் பங்கேற்கும் மகத்தான வேலைநிறுத்தம்! தொழிலாளர் கோரிக்கை மட்டும் அல்ல; அனைவரின் கோரிக்கைகளையும் முன்வைத்தே இது நடக்கிறது!
*வேலைநிறுத்தமும், அன்று நடக்கும் மறியலும் வெற்றி பெறுவதன் மூலம் மத்திய அரசின் மக்கள் விரோத அசுர வேகத்திற்கு கடிவாளமிட முடியும்!
*காங்கிரஸ் உலமயத்தைப் போற்றியது! இது ஒருமுனை கொண்ட கத்தியாக தலைக்குமேல் தொங்கியது! ஆனால் பாஜகவோ மதவாதம் என்கிற சிறுபான்மை தலித் கம்யூனிஸ்ட்கள் மற்றும் உள்நாட்டு நலன் விரும்பிகள் உள்ளிட்டு ஆபத்து மிக்க இருமுனை கொண்ட கத்தி!
*எல்லாம் உலகமயம் சாதித்து விடும் என்றார்கள் அன்று! இன்று உலகமயம் தான் உள்ளூர் தொழில் அழிய காரணம் என்கிறார்கள்! இதைத்தான் அன்று கம்யூனிஸ்ட்களும் உள்நாட்டு நலன் விரும்பிகளும் எடுத்தியம்பினார்கள்!
*காங்கிரஸைவிட பாஜக ஆபத்து மிக்கது! அதனை ஓரளவு உணர்ந்ததால்தான் சுதந்திர இந்தியா இதுவரை காணாத அளவில் 33 கோடி பேர் பங்கேற்கும் ஸ்டிரைக்காக இது உருவெடுத்து உள்ளது!
*திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மட்டுமல்ல இதை ஆதரிப்பது... பாஜகவின் ஒரு பிரிவும் ஆதரிக்கும் ஸ்டிரைக் இது!
*அனைவரும் ஆதரிக்க வேண்டும் முகநூல் நட்புகள் உள்ளிட்டு!
*ஒன்றுபட்ட வலுவான போர் மூலம்தான் உலகமய மதவாத பாஜக மத்திய அரசை பணிய வைக்க முடியும்! ஆம்! இதன் எதிரொளிதான் நேற்று ஒருநாள் குறைந்தபட்ச சம்பளம் ரூ 350 என மத்திய அரசு அறிவித்து உள்ளது!
*செப்-2 வேலைநிறுத்தம் எதற்கு? மத்திய அரசே! மாநில அரசே!
1. இரத்தம் சிந்தி பெற்ற தொழிலாளர் சட்டங்களை லாப வெறிக்காக திருத்தாதே!
2. குறைந்தபட்ச ஊதியம் ரூ.18000/- ஐ உறுதிபடுத்து!
3. புதிய பென்ஷன் திட்டத்தை வாபஸ் வாங்கு!
4. காண்ட்ராக்ட் சுரண்டல் முறையை ஒழித்து தொழிலாளர்களை நிரந்தரம் செய்!
5. முறைசாரா தொழிலாளர்களின் 
நலவாரியங்களை முடக்காதே, ஓய்வூதியம் ரூ.4000/- வழங்க நடவடிக்கை எடு!
6. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து!
7. சாலை பாதுகாப்பு மசோதாவை ரத்து செய்!
8. நூறு நாள் வேலை திட்டத்தை முறையாக அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்து!
9. போனஸ் உச்சவரம்பு சட்டத்தை நீக்கிடு!
10. மத்திய மாநில பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாத்திடு!
11. தொழிற்சங்க அங்கீகார சட்டம் இயற்று!
12. தொழிலாளர் நல அலுவலங்களில் காலி இடங்களை பூர்த்தி செய், தொழிற்சங்க பதிவை 45 நாட்களில் முடித்திடு!
#
(மேலே முழுக்க வேலைநிறுத்ததிற்கு ஆதராகவேதான் என் பதிவு இருக்கிறது! ஆனால் நிகழ்ச்சியில் எப்படி வந்திருக்கு பாருங்க! இது எதன் கோளாறோ?) 
---\\\
சிறுபிள்ளைத்தனம்!
*சட்டமன்ற ஜனநாயகமா? 
கிலோ என்ன விலை?
*அதிமுக திமுக ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்களில்லை!
*சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது திமுகவின் போட்டி சட்டமன்ற நடவடிக்கை!
*இவர்களின் கையில் இனி சட்டமன்ற சனநாயகம் சட்டினி தான்!
*திமுக போட்டி சட்டமன்றம் உத்தி எதை சாதிக்கப் போகிறது? அசிங்கமாக இருக்கிறது தயவு செய்து கைவிடுங்கள்!
*முள்ளை முள்ளால் எடுக்கும் உத்தி இதுவல்ல! இன்னும் ஆக்கபூர்வமாக திமுக செயல்படவே மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்!                                                       ----\\\\                    
வீரமங்கைகளே..!
உங்களுக்கெங்கள் செவ்வணக்கம்! 
புரட்சி வாழ்த்துக்கள்! 
வெங்கல-வெள்ளி பதக்கம் வென்ற வீராங்கனைகள்... 
உலகத்திற்கும்! ஒலிம்பிக் விழாவுக்கும்! 
ஆனால்... 
நம் தாய்திரு நாட்டிற்கு... 
நீங்கள் "தங்கங்கள்!"  
மானம் காத்த "மாமணிகள்!"                         
----\\\
மகிழ்ச்சி!
*முதலில் வாழ்த்துக்கள்!
*இரண்டும்தான்! 
*மாறி வரும் சமூக சூழலில்... 
*சமூகத்தை நெறிபடுத்தும், சமூகத்தை சமூகநீதிக்கு ஆதரவாக, சமத்துவத்திற்கு ஆதரவாக மக்களைப் பக்குவப்படுத்துவதும், பலப்படுத்தும் ஊடகங்களின் பிரதான பணி!  
*அந்த திசைவழியில்  புதிய தலைமுறை தொடர் நடைபோட்டால் மகிழ்ச்சி!

இன்று 24.8.16 PTTV நேர்படபேக்கு!
இதன் ஒருபகுதி FB க்கிலும் Whatsapp பிலும் பதிவேற்றம் ஆகி உள்ளது!                    ----\\\                                                                                                         
காவியாகும் கல்வி?!
லேடியா மோடியா என்றவர் இப்பொழுது என்ன செய்ய போகிறார்? கல்வியாளர்  பிரின்ஸ் கஜேந்திரபாபு கர்ஜனை!

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில் இன்று 24.8.16 இல் நடந்த கருத்தரங்கில் சரமாரியான கேள்வி!

தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஆரம்பக்கல்வி முதல் ஹையர் கல்வி வரை ஐயர்கல்வி ஆக்கும் முயற்சியை ஆதரிக்கிறாரா? எதிர்கிறாரா? 

"மக்களவை தேர்தலில் மோடி வேண்டாம்; லேடியே தேர்ந்தெடுக்கள் என்றார் ஜெயலலிதா... லேடியும் வேண்டாம் மோடியும் வேண்டாம் டாடிதான் வேண்டும் என்றார் ஸ்டாலின்..."

"டாடிக்கும் லேடிக்கும் தமிழகத்தில் எழுபது சதவீதம் மக்கள் ஆதரித்துள்ள தற்போதைய சூழலில் என்ன செய்ய போகிறார்கள்?"

"ஏழை எளியோரை ஓரளவேனும் ஏற்றம் கொள்ள செய்யும் இந்த கல்வியை காக்கப் போகிறார்களா? அல்லது காவி மற்றும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை ஆதரிக்கப் போகிறார்களா?" 

"சாமானியனைக் கைத்தூக்கிவிடும் காமராஜரின் கல்வியா? காவி மற்றும் கார்ப்பரேட்டர்களின் நலன் காக்கும் கல்வியா? எதை ஆதரிக்கிறார்" காமராஜரின் பேத்தியார் தமிழிசை! 

என அரங்கமே அதிர அடுக்கடுக்கான கேள்விகளை தொடுத்தார் கல்வியாளர் கஜேந்திரபாபு!?

இந்த கருத்தரங்கில் தாளாளர் சிறுமலர் பள்ளி அருள்திரு ஐ.கிரகோரி ராஜன், தலைவர் இமாம் பேரவை தமிழ்நாடு ஹாஜி எம்ஜி.ஷிகாபுதின், மதர் சுப்பீரியர் தூய மரியன்னை இல்லம் அருள் சகோதரி கார்மலினா உள்ளிட்டோர் கருத்துரைத்தனர்.                         
----\\\\
என்றோ வந்து விட்டது!
*வறட்சியின் பிடியில் என்றோ வந்து விட்டது! இனியாவது தமிழகம் விழித்துக் கொண்டால் நன்று!
*புயல் வெள்ளம் வந்தால் தான் தமிழகத்திற்கு நீர் ஆதாரம் என்றாகிவிட்ட நிலையில், இதுகாறும் தமிழகத்தை ஆண்ட கட்சிகளின் நிலைபாடும், செயல்பாடும் அமைந்திருந்தது என்பதும் ஒரு கசப்பான உண்மை!
*ஒரு பக்கம் பன்னாட்டு குளிர்பானம் ஆலைகளும் பன்னாட்டு ரசாயன ஆலைகளும் தமிழகத்தைப் பங்கு போட்டு நிலத்தடி நீரை உறிஞ்சி வறட்சியை வளர்த்து வருகிறார்கள்!
*இன்னொரு பக்கம் தமிழகத்தின் அண்டை மாநிலங்களின் சுயநலனால் தமிழகத்திற்கு நியாயமாக வரவேண்டிய நீர் ஆதாரங்களும் அரிக்கப்பட்டு வருகிறது!
*இன்றைய அதிமுக திமுக இதை மனதில் (நிலத்தடி நீர் பாதுகாப்பு) கொண்டு செயல்பட்டால் கோடி புண்ணியம் செய்தவர்களாக இருப்பர்! *இதிலும் சொந்த ஆதாயம் தேடும் அரசியல் நடத்தினால் தமிழகம் ராஜஸ்தான் பாலைவனம் ஆகிவிடும் அபாயம் எதிர்நோக்கி இருக்கிறது!
*தற்போதைய அரசும் இனிவரும் அரசும் எதிர்கால சந்ததினர் எதிர்காலத்தை மனதில் கொண்டு தமிழகத்தில் நிலத்தடிநீர் பாதுகாக்கும் நடவடிக்கையை வல்லுந‌ர் குழு அமைத்து அதன் சிபாரிசு படி செயல்பட்டால் நல்லது! செய்வார்களா?                                                  
----\\\\
நாறுநாறாக்கதே! 
அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சேலம் மாவட்டத்தில் இன்று 26.8.16 "நூறு நாள் வேலையை நாறுநாறாக்கதே!
தொடர்ந்து வேலை கொடு!  மாதக் கணக்கில் சம்பளம் தராமல் கொல்லாதே! ரூ203 கூலியை ஏப்பம் விட்டு ரூ100 ஆக வெட்டி திருடாதே!" போன்ற கோரிக்கைகளை முன்வைத்து எடப்பாடி யில் முற்றுகை போராட்டமும், ஓமலூர், வாழப்பாடி, சங்ககிரி ஆகிய மையங்களில் ஆர்ப்பாட்ட மும் நடைபெற்றது! இதில் விதொச மாவட்ட நிர்வாகிகள் ஜி.கணபதி, விகே.வெங்கடாசலம், சின்ராஜ், தவிச மாவட்ட நிர்வாகிகள் ஆர்.குழந்தைவேல், பி.அரியாக்கவுண்டர், சிபிஐஎம் மாவட்டக்குழுச் செயலாளர் பி.தங்கவேலு உள்ளிட்டு ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்!   ---\\\                                               
எம் தேசமே..!
உலகில் எங்காவது இந்த அவமானம் நடந்திருக்கிறதா இந்த நூற்றாண்டில்?  
தந்தை தோள் மீது தாய் உடல் பிணமாக!
தாய் பராமரிப்புக்கு ஆஸ்பத்திரியில் வைத்திருந்த பழைய துணிமணி பண்டப்பாத்திரங்களுடன் மகள் ஆறாக அழுத கண்ணீர் பெருக்கெடுத்து ஓட..!
ஆருயிர் மனைவியின் பூத உடலை சுமந்து அவன் ஓட..! 
அனாதைகளாக அந்தோ..! 
இதயங்கள் எல்லாம் ஈரம் இழந்து விட்டதோ..?! 
எந்த கற்பனைக்கும் எட்டாத இந்த நிஜம் இனி எம் எதிரிக்குக்கூட வரக்கூடாது..! இதுதான் இன்றைய இதயமற்ற இந்திய முதலாளித்துவ ஆட்சி பரிபாலணம்..! 
தேவையா இந்த ஈரமற்ற அரசாட்சியும் ஆளும் வர்க்கமும் அதன் எடுபிடிகளும்..! 
எம் தேசம் வளர்ச்சியில் திளைக்குதாம் எம் தேச சுதந்திர தின உரையில் எம் பிரதமரின் பித்தலாட்டப் பிரகடனம்!                                                  
----\\\
நல்ல நடிப்பு!
*சட்டம் வேற... நீதிமன்றம் வேறா? 
நடுவர் நீதிமன்றம் சொன்ன மாதம் 15 TMC தண்ணீரைத் தந்துவிட்டு, சட்டப்படி செய்ய வேண்டியது தானே கர்னாடக முதல்வர் சீத்தாராமையா!
*சட்டத்தையே மதிக்காத உங்களுக்கு சட்டம் ஒரு கேடா?
*கேரளா சட்டத்தை மதித்து முல்லை பெரியாறு விவகாரத்தில் நடந்துக் கொண்டுதானே, தனது தரப்பு வாதங்களை எழுப்பி வருகிறது! அதுமாதிரி கர்னாடகமும் செய்யலாமே!
*என்னமோ போகங்க தமிழகம் காவிரியை மறந்து விட வேண்டியதுதான் இனிமேலும்!
*தமிழகத்திற்கும் கர்னாடகத்திற்கும்  காவிரி அரசியல் நடத்த உதவுகிறாள்!
*தஞ்சை இனி தார்பாலைவனம் தான்!
*திமுக அதிமுக ஒன்றுபட்டு செயல் பட்டால்தான் காவிரி இனி தமிழகம் பக்கம் வருவாள்! இல்லையெனில்..?
*இதிலே வேடிக்கை என்னவெனில் உச்சநீதி மன்றம் நடுவர் நீதி மன்றம் மத்திய அரசு தமிழ்நாடு அரசு என அனைத்தையும் பாய்போல் சுருட்டி கக்கத்தில் வைத்துக் கொண்டு திரியும் கர்னாடக அரசிடம் திடீரென திமுக முன்னாள் எம்பி ராமலிங்கம் ஒரு பத்து பதினைந்து பச்சத்துண்டுகளை போட்டுக்கிட்டுப் போய் நேற்று ஆடிய நாடகம் அபாரம்! அற்புதம்! 
*திமுக திருந்தவே திருந்தாதா? இவர்களின் ஆட்சியிலேயே ஒன்னும் செய்ய முடியல! நல்ல காமெடி! 
நல்ல நடிப்பு!
*இன்று 26.6.16 PTTV நேர்படபேசுக்கு!                                                  
----\\\\
"தீக்கதிரும், ஜனசக்தியும்"
 'யாராக' இருந்தாலும்... 
தவறு தவறுதான்! சரி சரிதான்! 
இன்றைய ஊடகங்கள் பெரும்பாலும் 'யோக்கிவான்' கையிலோ கட்டுப்பாட்டிலோ கிடையாது! 
அது 'பச்சை'யாக இருந்தாலும், 'புளு'வாக வந்தாலும், 'கறுப்பு-சிவப்பாக' தெரிந்தாலும்! 
"தீக்கதிரும், ஜனசக்தியும்" மட்டுமே நேர்மையான உழைப்பின் ஒரே ஊடகம் இன்றைய தமிழ் சூழலில்! 
அதே சமயத்தில், பொதுவுடமை இயக்கம் தன் வர்க்க நலன்களுக்காக வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும்! அவ்வளவே!
சுரண்டுவோர்களுக்கிடையே ஏற்பட்ட, ஏற்படும் இது போன்ற 'வேடிக்கை'களை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!
ஆம், அதோடு 'மறந்து'க் கொண்டும் இருக்கிறார்கள்!                                                  
----\\\\
சட்டத்திருத்தமல்ல!
*மதச்சார்பற்ற இந்தியா வளர்ச்சிக்கு தேவை தூய்மையான நிர்வாகமே "ஒழிய சட்டத்திருத்தமல்ல!
*இருக்கிற சட்டத்தை செம்மைப்படுத்தினாலே தூய்மையான நிர்வாகம் வந்துவிடும்!
*மதவாத இந்தியாவிற்கு தற்போதைய சட்டம் இடையூறாக இருக்கிறதென பிரதமர் மோடியின் அனுபவமாக இருக்கலாம்!
*பல்வேறு மதவாத நடவடிக்கைகளுக்கு தற்போதைய சட்டமும் நீதிமன்றமும் இடையூறாக இருப்பது பல்வேறு சூழலில் பார்த்திருக்கிறோம்!
*தொழிலாளர் நலன்களுக்கு எதிராக கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக சட்டங்களை திருத்தியதைப்போல் மதசார்பான இந்தியாவிற்கு சட்டங்களை திருந்தவே பிரதமர் மோடியின் கூப்பாடு என்பதில் ஐயமில்லை!
*குஜராத்தில் மோடி முதல்வராக இருக்கும்போது அன்றைய குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த இன்றைய அமிர்ஷாவை முஸ்லீம் மக்களை கொன்று குவித்ததற்கு சட்டம் அவரை தண்டித்தை தற்போது மாற்றாமல் விடுவது மோடி பிரதமராக இருப்பதற்கு அர்த்தமில்லை அல்லவா?
*இந்துத்துவா மதவாத நடவடிக்கைகளுக்கு அதன் அஜண்டாக்களுக்கு சட்டம் தடையாக இருப்பதை ஆர்எஸ்எஸ் உணர்ந்தே இருக்கிறது!
*இன்றைய சட்டத்தில் சிற்சில ஓட்டைகள் இருப்பினும் இதை பாதுகாப்பதே இந்தியாவில் சிறுபான்மை மற்றும் தலித் மக்களுக்கு பாதுகாப்பைத் தரும்!      ---\\\                  
ஹோராமா? ஜெய்ஸ்ரீராமா?
எது உங்கள் கல்விக் கொள்கை?

காந்தி சொன்னது...
சாகும் தறுவாயிலும் ஹோராம்! காந்தியை சுட்டுச்கொன்ற ஆர்எஸ்எஸ் பரிவார் நாதுராம் கோட்சே காந்தியை சுட்டதும் சொன்னது... ஜெய்ஸ்ரீராம்!

ஆர்எஸ்எஸ் சொல்வது எந்த ராம்? 

காந்தியும் தீவிர ராமபக்தர்! 
கோட்சேவும் தீவிர ராமபக்தர்! 
மோடியாரே நீங்கள் எந்த ராம்பக்தர்?

கோட்சேவுக்கு கோவில் (நினைவிடம்) வைத்து பூஜிக்கும் நீங்கள் கொலைகாரன் உச்சரித்த ஜெய்ஸ்ரீராம் பக்தர்தானே!? 

அத்தகைய கொலைக்காரக் கல்விக் கொள்கையைத் தானே இன்று அமல்படுத்த துடியாய் துடிக்கிறீர்!?
இதை நாங்கள் ஒருபோதும் அனுமதியோம்! 
  
-கேரளா கே.கே. ராகேஷ் எம்பி.,
காட்டமான சாடல்!

(இன்று 28.8.16 சேலத்தில் மத்திய அரசின் கல்விக் கொள்கையை எதிர்த்து நடந்த Dyfi மாநில கருத்தரங்கம் துவக்கி வைத்து உரை..!)
கல்வி கொள்கையா? காவிக்கொள்கையா? நூல் ஒன்றும் வெளியிடப்பட்டது.    ----\\\                                              
நல்லத்தொடக்கம்!
*ஊரடங்கு உத்தரவு விலக்கியது நல்லத்தொடக்கம்!
*தீவிரவாத சக்திகளின் பிடிகளில் இருந்து விடுபடும் வகையில் அரசுகளின் நடவடிக்கைகள் இருத்தல் வேண்டும்!
*பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வேலை வாய்ப்பு புனர்வாழ்வு என போர்கால அடிப்படையில் துவங்கி செய்திடல் வேண்டும்!
*மத்திய மாநில அரசுகள் காஷ்மீர் மக்கள் மனதில் நம்பிக்கையை விதைக்கும் வண்ணம் செயல்படல் அவசியம்!
*மக்களின் மனங்களை வென்றால் தான் தீவிரவாதச் சக்திகளை வெல்ல முடியும்!
மக்களுக்கு அச்சமற்ற வாழ்வை உறுதிபடுத்துவதே மத்திய மாநில அரசுகளின் உடனடி கடமை!
*பாகிஸ்தான் அரசுடன் உடனடியாக தனது ராஜீய உறவை பயன்படுத்தி அர்த்தமுள்ள பேச்சு வார்த்தைகள் மூலம் தீவிரவாத சக்திகளை மக்களிடமிருந்து தனிமை படுத்திட வேண்டும்!                         
----\\\
பிரபலங்களும் பொறுப்பு!
*விளம்பர உண்மை தன்மைக்கு நடிகர்கள் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பிரபலங்கள் கட்டாயம் பொறுப்பேற்க வேண்டும்!
*பொருள் உற்பத்தியாளர்களுக்கு அதன் உண்மை தன்மைக்கு பொறுப்பற்றவர்கள் என்பதல்ல இதற்கு அர்த்தம்!
*அரசும் பொறுப்பை உணர்ந்து செயலாற்றிட வேண்டும் என்பதும் இதன் உள்ளீடாக இருக்க வேண்டும்! சட்டம் மட்டும் இதை சாதித்து விடாது! 
*பன்னாட்டு உற்பத்தி நிறுவனங்களையும் கட்டுப்படுத்திடும் வகையில் இருக்க வேண்டும்!
பன்னாட்டு உள்ளாட்டு நலன் பேணும் இந்த அரசுகள் (மத்திய மாநில) இதில் எந்தளவுக்கு சட்டத்தை மக்களுக்கு நலன் பயக்கும் விதத்தில் நடந்திடும் இன்றைய உலகமய சூழலில் என்பது தெரியவில்லை! 
*புதிர் நிறைந்ததாகவே இந்த மசோதா தெரிகிறது!
*ஒழுங்கு படுத்தினால் பருத்தி புடவையாக மாறியதற்கு சமம்! அரசுகள் நினைத்தால் ஒழுங்கு படுத்துவது சாத்திமே! அரசுகளால் முடியாதது எதுவுமில்லை! அதந்தளவுக்கு தில் வேண்டும் அரசுகளுக்கு! அது இருக்குமா? அல்லது திசைத்திருப்பலா? என்பது போகப்போகத்தான் தெரியும்! 
*முதலில் இந்த மசோதா சட்டமாகுமா? ஆனால் மகிழ்ச்சியே!                                    ---\\\                                       
டவுசர் பேன்டாகலாம்! 
தொன்னூற்றொரு ஆண்டுகளாக இருந்த டவுசர் பேன்ட் ஆகவிட்டதாம்! இனிமே என்ன செய்வீங்க!? டவுசர் பேன்டாகலாம்! ஓகே! காவி ஒயிட்டாகுமா? ஆகாது... ஆக்கணும்! அதுதான் இன்றைய தேவை!                                                         ----\\\                                           
ஜாதீயமே!
*ஜாதீயமே கொலைக்கு காரணம்! ஜாதீயம் இருக்கும் வரை ஒரு காதல் என்கிற பெயரால் கொலைகள் இருக்கும்!
*பெண் அதிகமாகவும் ஆண் குறைவாகவும் கொலைச் செய்யப்படுகிறார்கள்!
*ஜாதீயத்திற்கு அடிப்படை மதவாதம்! மதவாதத்திற்கும் ஜாதீயத்திற்கும் அடிப்படை வர்ணாசிரம தத்துவம்!
*வார்ணாசிரமம் ஒழியாமல் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது!
*நிலப்பிரபுத்துவமும் முதலாளித்துவமும் கைகோர்த்து இதை ஆதரிக்கிறது!
*சாதி மத நிற இன கண்ணோட்டம் நிலவ உலாவ காரணம் அரசுகளின் இத்தகைய பார்வையும் காரணம்!
*சட்டம் மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பை பெற்று தந்திடாது! 
*மனித மனங்கள் பண்பட வேண்டும்! அதற்கு அரசுகள் உரிய விழிப்புணர்வு பரப்புரை செய்வதும் அதை கடைபிடிக்க வைப்பதும் முக்கியம்!
*ஓட்டு அரசியலும் ஜாதீயத்திற்கு அடிப்படை! அரசியல் வாதிகள் மக்களுக்கு செய்யும் பெரும் தீங்கு இது! 
*ஓட்டுக்காக அரசியல் அதிகாரத்திற்காக காதலை பகடைக்காய் ஆக்குவதை தடுப்பது ஒரு நல்ல அரசின் கடமை!           
 ---\\\                                                                                                                
சா(வே)தனை?!
'அம்மா'வின் நூறாவது நாள் சா(வே)தனை தமிழகத்தில் மூன்று பெண்கள் மீது காதல் என்கிற பெயரால் கொலைவெறி தாக்குதல்! 
இதில் இருவர் (ஆசிரியை பிரான்சினா, மாணவி சோனாலி) பரிதாபச்சாவு! ஒருவர் (மாணவி மோனிகா) கவலைக்கிடம்! அம்மாவின் ஆட்சியில் சட்டம் -ஒழுங்கு சந்திச்சிரிக்கிறது! மரணமானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்! கொலைவெறி தாக்குதலையும், வேடிக்கை பார்க்கும் தமிழக அரசையும் கண்டிப்போம்!
#
(நேற்று ஒரு தொலைக்காட்சி விவாத்திற்கு பதிவிட்டதையும் மேலே காணலாம்!) 
---\\\
சரியா? தவறா?
வலைதளம் ஸ்டிரைக் சரியா? தவறா? "முகநூலும் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக ஸ்டிரைக் செய்வோம்" என நேற்று தோழர்களின் பதிவைப் பார்த்து லைக் கொடுத்தேன்.

அதோடு நேற்று இரவு புதிய தலைமுறை டிவி விவாதத்திற்கும் பதிவிட்டு ஆதரவும் திரட்டினேன்! அதன்பின் தோழர்கள் இந்த முகநூல் ஸ்டிரைக் சரியில்லை என பலர் தங்களது நிலையை மாற்றிக் கொண்டனர். அவ்வண்ணம் என்னால் மாற்ற முடியவில்லை!

'சரியோ தப்போ ஆராய்ந்து பார்த்தோ பார்க்காமலோ' அறிவித்த முடிவை மாற்றிக் கொள்ள மனம் இடம் தரவில்லை! இன்று (2.9.16) காலை 8 மணி முதல் மாலை 6மணி முடிய வலைதளம் பணியில் ஈடுபடாமல் இருந்து விட்டேன்!

இதுமாதிரியான போராட்டக் காலங்களில் நாம் நம்மை ஏன் முடக்கிக் கொள்ள வேண்டும் என்ற கேள்விக்கு ஸ்டிரைக் க்கு கால் கொடுத்த வலைதளம் குழு பதிலளிக்கும் என நம்புகிறேன்!                                                             ---\\\\              
அசிங்கம்: எப்போது தெரியும்?
"அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம்!" "அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம்" இப்படி எல்லாம் "அம்மா வெறி" பிடித்து அரசு அதிகாரிகள் அலைகிறார்களே!

அர்த்தத்தைக்கூட உணராமல் இப்படி அடிமைகளாக அரசு அதிகாரிகள் இருக்கிறார்களே... என்ன செய்வது? அம்மா சிறப்பு கழிவறை திட்டத்தை எதிர்ப்பார்க்கலாமா விரைவில்!? 

அதுசரி... நானும் பார்த்துக் கொண்டேதான் வருகிறேன்; அம்மா டாஸ்மாக் கடை என்று இல்லாமல் அதுமட்டும் தமிழ்நாடு அரசு மதுபான கடை என்று இருப்பது ஏன்? 

அடிமை அதிகாரிகளுக்கும், அம்மா விசுவாசிகளுக்கும் அது (அம்மா டாஸ்மாக் கடையென இல்லாமல் இருப்பது) அசிங்கமாக தெரியவில்லையா? 
எப்போது அது தெரியும்?
-----\\\\                         
மோடி ஜீ கிட்ட சொல்லுங்க பாஸ்!

செப்டம்பர் 2ஆம் தேதி வேலைநிறுத்தம் காரணமாக நாட்டுக்கு ரூ.18 ஆயிரம் கோடி இழப்பு என்று அசோசெம் எனப்படும் முதலாளிகள் அமைப்பு புலம்பியுள்ளது.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக ஏற்றுமதி, உள்நாட்டு உற்பத்தி முடங்கிவிட்டது என்று அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.

ஆக, இந்த வேலைநிறுத்தம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது என்பதற்கு நாட்டின் பெருமுதலாளிகள் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

அதெல்லாம் சரி, இந்த புலம்பலை விட்டுவிட்டு, தொழிலாளி வர்க்கத்தின் 12 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு உங்கள் அடிமை விசுவாசி மோடி ஜீ கிட்ட சொல்லுங்க பாஸ்! 
(படித்ததில் பிடித்தது!)                                                  
----\\\
பொம்மை!
*காலம் கடந்த பேச்சு மட்டுமல்ல, காலத்தே தலையிடாத பொம்மை!
*ஐநா சபை என்பது அமெரிக்க நலன் காக்கும் சபையே என்பதை இப்பொழுதாவது உலகம் உணர்ந்தால் நன்று!
*இதற்கு மேலாவது உயிருடன் இருப்போருக்கு உதவிட ஐநா பொதுச்செயலாளர் உருப்படியாக ஏதாவது செய்தால் பரவாயில்லை!
*தமிழர்களின் நில உரிமை வேலை உரிமை சம உரிமை போன்ற உரிமைகளை நிலைநாட்டி, வாழ்வாதாரத்தைப் பாதுக்காத்தால் நன்று!
*இத்தகைய போர் குற்றமிழைத்த இலங்கை அரசு அதிகாரிகள், ஆட்சியாளர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பாரா?
*இலங்கை மண்ணில் தமிழர்கள் அரசால் கொன்று குவித்ததை அதே மண்ணில் நின்று குற்றம் சாட்டியது துணிவான ஒன்றுதான்! அதுவும் ஐநா பொதுச்செயலாளர் செல்வது அர்த்தமிக்கது! இதை சர்வதேச சமூகம் குறிப்பாக இந்தியா உணர்ந்து செயல்பட்டால் நன்று!
*இன்று 3.9.16 PTTV நேர்படபேசுக்கு!                                                                           
----\\\\
இழப்பும் ஊழலும் ஒன்னா பாஸ்..!?

கூவத்தத் தூய்மை படுத்த ரூ500 கோடி இழப்பு... மோனோ ரயில் திட்டத்தில் ரூ200 கோடி இழப்பு... உலக முதலீட்டாளர் மாநாடு ரூ100இழப்பு... பொதுத்துறை நிறுவனங்கள் தினமும் ரூ40 கோடி இழப்பு... 173 மின் காற்றாலைகளில் மின்சாரம் வாங்கியதில் ரூ60.59கோடி இழப்பு...

தானே வீட்டுவசதித் திட்டத்தில் ரூ100 கோடி மாயம்... அம்மா உணவகத்தில் ரூ5.69 கோடி இழப்பு... மருத்துவ காப்பீடு திட்டத்தில் ரூ7கோடி இழப்பு... நிலக்கரி சாம்பல் பயன்பாடுத்தாததால் ரூ5.85 கோடி இழப்பு... சிமெண்ட் கலவை குளறுபடியில் ரூ1.78கோடி இழப்பு... 724 லேப்டாப் வேற திருட்டு போன வகையில்  சிலபல கோடி ரூ இழப்பு...

இப்படி எது எதலையோ ஒரு வருசத்தில் (2014 -15) மட்டும் ரூ14,869 கோடி இழப்பாம்..!? நம்ப முடியலயா பாஸ்? 

தமிழ்நாடு முதல்வர்... அதாவது அம்மா... அவுங்க பிள்ளைகளுக்கு வந்து சேர வேண்டிய ரூ14,869 கோடி பணத்தை ஏப்பம் விட்டுவிட்டதாக மத்திய தலைமை கணக்காயர் (சிஏஜி) ஆதாரத்துடன் அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்குது!

என்னா பாஸ்... ஒரு வருசத்துல இவ்வளவு தான் ஊழல் பண்ண முடியுமா கேக்கிறிங்களா? ரொம்ப கம்மிய இருக்குதே பாக்கிறிங்களா? அம்மாவுக்கு இது கட்டுபடியாகுமா யேச்சிக்கிறிங்களா? இழப்புன்னா என்னா பாஸ்..? ஊழலா பாஸ்..? 

2ஜி அலைகற்றையில் துவங்கிய இந்த இழப்பு எலவுக்கு இன்னும் எத்தனை நாளைக்கு நாம கைக்கொடுக்கணுமோ தெரியல... போங்க பாஸ்!                        ----\\\\ 
என்னையும்! 
என்னையும் கவந்தவை வேறொரு வாட்ஸ் அப் குரூப்பில் இருந்தது..!

என்னைக் கவர்ந்த வாசகங்கள்...
✳பேசி தீருங்கள்.
பேசியே வளர்க்காதீர்கள்.
✳உரியவர்களிடம் சொல்லுங்கள்.
ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.
✳நடப்பதைப் பாருங்கள்.
நடந்ததைக் கிளறாதீர்கள்.
✳உறுதி காட்டுங்கள்.
பிடிவாதம் காட்டாதீர்கள்.
✳விவரங்கள் சொல்லுங்கள்.
வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.
✳தீர்வை விரும்புங்கள்.
தர்க்கம் விரும்பாதீர்கள்.
✳விவாதம் செய்யுங்கள்.
விவகாரம் செய்யாதீர்கள்.
✳விளக்கம் பெறுங்கள்.
விரோதம் பெறாதீர்கள்
✳சங்கடமாய் இருந்தாலும்
சத்தியமே பேசுங்கள்.
✳செல்வாக்கு இருந்தாலும்
சரியானதைச் செய்யுங்கள்.
✳எதிர் தரப்பும் பேசட்டும்.
என்னவென்று கேளுங்கள்.
எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள்.
✳நேரம் வீணாகாமல்
விரைவாக முடியுங்கள்.
✳தானாய்த்தான் முடியுமென்றால்,
வேறு வேலை பாருங்கள்.
யாரோடும் பகையில்லாமல் புன்னகித்து வாழுங்கள்....
----\\\\