"இப்படியும் பொருள் கொள்ளலாம் அல்லவா?
இதை ஏன் "ஹைலைட்" செய்யவில்லை?"
##
புதிய தலைமுறை டிவி, ஏபிடி கருத்து கணிப்பில்...குறிப்பிட்டுள்ள ஒரு அம்சம்..."எந்த தலைவரின் கரங்களில் தமிழகம் பாதுகாப்பாக இருக்கும்?" என்ற கேள்விக்கு... ஜெயலலிதா-24.09; கருணாநிதி-12.67; ஸ்டாலின்-12.90; விஜய்காந்த்-3.85 சதவீதம் பேர் கூறி உள்ளார்கள்!
இது உண்மையெனில், எப்படி திமுக அதிமுக சமபலத்தில் இருக்க முடியும்? ஆகவே முதலாளித்துவ கட்சி தலைவர்களுக்குத்தான் மக்கள் வாக்கு அளிப்பார்கள்; சாதனையைப் பார்த்து அல்ல!
எனவே-- ஜெயலலிதா-75.01% மக்களும்; கருணாநிதி-87.33% மக்களும்; ஸ்டாலின்-87.10% மக்களும்-- தமிழகம் இவர்களின் கையில் பாதுகாப்பாக இருக்காது என சொல்லி இருப்பதே... இனி-- "மக்கள் நலக் கூட்டணி கையில் தான் தமிழகம் பாதுகாப்பாக இருக்கும்" என்று கூறுகிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?
இது தான் தமிழக மக்களின் மனநிலை; இதுதான் தேர்தலில் பிரதிபலிக்க போகிறது-- அதாவது... அதிமுக திமுக வுக்கு எதிராக... மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவாக... மக்கள் தீர்ப்பளிக்க போகிறார்கள் எனலாம்!
----\\\
கருத்து கணிப்பு எப்படி வந்தாலும்..!
புதிய தலைமுறை ஏபிடி கருத்து கணிப்பு எப்படி வந்தாலும், தமிழக மக்கள் புதிய மாற்றத்தை விரும்புகிறார்கள்...
அந்த விருப்பம் மக்கள் நலக் கூட்டணி யே என்பதை சமீபத்திய இந்த அணியின் தலைவர்கள் பரப்புரையை கேட்க நல்லிரவையும் தாண்டி மக்கள் காத்திருந்ததில் இருந்தே தெரிகிறது!
திமுக காங்கிரஸ் பொருந்தா கூட்டணியாகி விட்டது; பாஜக யாரை கூட்டணி வைத்தாலும் அது தமிழ் மண்ணில் எடுபடாது! பாமக எதாவது ஒரு அணியில் ஐக்கியம் ஆகி விடும்!
அதிமுக ஊழல் லஞ்ச லாவண்யம் அராஜகம் டாஸ்மாக் கால் சீரழித்துவிட்டதால் தமிழ்நாட்டு மக்கள் அதை தூக்கி எறிய காத்திருக்கிறார்கள்!
பண பலம், படை பலம் இந்த தேர்தலில் மண்ணைக் கவ்வும்! மக்கள் பலம் கொண்ட மக்கள் நலக் கூட்டணியே வெல்லும்!
இன்று 15.2.16 PTTV நேர்படபேசு! இதன் ஒருபகுதி பதிவேற்றம் ஆகி உள்ளது!
----\\\
கள நிலைமையை பிரதிபலிக்க வில்லையே!
ஏன்? எதனால்?
##
திமுகவின் கூட்டணி "குதிரை" பேரத்திற்கு ஆதரவான ஒரு கருத்து கணிப்பையே இன்று (15.2.16) புதிய தலைமுறை டிவி & ஏபிடி இணைந்து நடத்தியதாக ஒரு கருத்து கணிப்பு... அவசர அவசரமாக வெளியிட்டு உள்ளது என்றால்... அது மிகையல்ல! (திணிப்பு போலிருக்கிறது)!
ஆம்! இதுவும் திமுகவின் "நமக்கு நாமே" என்பதை போல் கள நிலைமையை கணக்கில் கொள்ளாமல் "முன்கூட்டியே" தயாரிக்கப்பட்டதை போல் அமைந்துள்ளது! இன்றைய தமிழக மக்கள் "மனநிலையை" பிரதிபலிப்பதாக இது இல்லை!
ஆம்! கள நிலைமை "மக்கள் நலக் கூட்டணி" க்கு ஆதரவு என்பதைக் காட்டிலும் அதிமுக திமுகவுக்கு எதிராகத்தான் இருக்கிறது என்பதே யதார்த்தம்! இந்த யதார்த்தம் தான் மக்கள் நலக் கூட்டணி வெற்றியின் பலம்!
"ஏபிடி" என்ற தனியார் நிறுவனத்துடன் புதிய தலைமுறை டிவி இணைந்து நடத்த வேண்டும் ஏன்? இந்த நிறுவனத்திற்கு சார்புத்தன்மையே கிடையாதா? அப்படி ஒன்று நாட்டில் இருக்கிறதா? (இது ஊடகங்களுக்கும் பொருந்தும்) இந்த கருத்து
கணிப்பை புதிய தலைமுறை டிவி தனியாக நடத்தாதது ஏன்? என்ற வினா மனதில் எழுகிறது!
----\\\\
சபாஷ்..! ஜென்ராம்..!
👍🙌🙆
ஆர்எஸ்எஸ் பாஜகவின் "தேசபக்தி" யை இன்று 16.2.16 PTTV புதுப்புது அர்த்தங்களில்... சிபிஎம் கனகராஜ், நெறியாளர் ஜென்ராம்... கிழிகிழியென கிழிக்கின்றார்கள்; பாஜக ராமசுப்ரமணியன் திணறு திணரென திணறு அடித்தனர்! அருமையான விவாதம்... இடதுசாரிகள்தான் உண்மையான தேசபக்தர்கள் என்பதை குன்றின்மீது நின்று விவாதம் போனது! சபாஷ்..! ஜென்ராம்..! செம்மார்ந்த வணக்கம்! இன்று காலை 9 மணிக்கு மறு ஒளிபரப்பு தவறாது பாருங்கள்!
-----\\\\
திரைமறைவில் "குதிரைபேரம்"
ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை! அதுபோல் இருக்கிறது காங்கிரஸ்சைப் பார்த்து பாஜக சு.சாமி சொல்வது! அப்படி என்றால் பாஜக, தேமுதிக வுடன்தான் திமுக கூட்டணி என்பது பகிரங்கமாக அறிவிக்கப் பட்டுவிட்டதா? அல்லது திரைமறைவில் "குதிரைபேரம்" திமுக, தேமுதிக, பாஜக க்குள் நடந்து முடிந்து விட்டதா?
யார் யாரோடு போனாலும், மக்கள் நலக் கூட்டணியை யாராலும் பிளக்கவோ, பிரிக்கவோ முடியாது! ஏனென்றால், அது இயற்கையான, இயல்பான மக்களால் அங்கிகரிக்கப் பட்ட கூட்டணி! இந்த கூட்டணியோடு தேமுதிக, தமகா இணைந்தால் மட்டுமே இக்கட்சிகளின் "மக்கள் நலம்" என்கிற லட்சியம் நிறைவேறும்! தமிழக மக்களும் இப்படிப்பட்ட புத்தம் புதிய ஊழலற்ற மாற்றையே விரும்புகிறார்கள்!
திமுக, தேமுதிக, பாஜக கூட்டணி உருவாகும் என சுப்ரமணியசாமி கருத்து ஒருவேளை நிஜமானால், அது இதுவரை தமிழகம் காணாத மாபெரும் சந்தர்ப்பவாத... சுயநலன்மிக்க கூட்டணியே தவிர தமிழக மக்களுக்கான "நலம் பேணும்" கூட்டணி அல்ல! அதோடு-- அது, அதிமுக விற்கு "பீ டீம்!" என்றால் மிகையன்று!
இன்று 5.2.16 PTTV நேர்படபேசு!
----\\\\
சேலம் மாவட்ட மக்கள் நலக் கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டத்தை பிப் 14 இல் வெற்றிகரமாக நடத்திடும் பொருட்டும், தேர்தல் தயாரிப்பு பணிகளை துரிதமாக முன்னெடுத்து செல்லும் பொருட்டும்--
இன்று 5.2.16 காலை 11 மணி... ஓமலூர், மேட்டூர் சட்டப்பேரவை தொகுதிகளின்-- ஒன்றிய / நகர / பேரூர் நிர்வாகிகள் கூட்டம்... ஓமலூரிலும், மாலை 4 மணி... எடப்பாடி, வீரப்பாண்டி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளின்-- ஒன்றிய / நகர / பேரூர் நிர்வாகிகள் கூட்டம்... சங்ககிரியிலும் நடைபெற்றது!
ஓமலூரில் விசிக வடக்கு மாவட்டச் செயலாளர் அ.வசந்த் தலைமையிலும், சங்ககிரியில் மதிமுக மேற்கு செயலாளர் ந.மகேந்திரவர்மன் தலைமையிலும் கூட்டம் நடந்தது! இதில் சிபிஎம் மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு, சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ.மோகன், விசிக மேற்கு மாவட்ட செயலாளர் செ.அய்யாவு உள்ளிட்டு பலரும் கருத்து தெரிவித்தனர்! ஆயிரமாயிரவர் மாவட்ட செயல் வீரர் கூட்டத்தில் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது!
-----\\\\
"பாலினம் சமத்துவ தீர்வு..!?"
😁😁😁
"சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க முடியாது" என கேரள காங்கிரஸ் அரசு-- உச்சநீதி மன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்து இருக்கிறதே! இதென்ன கொடுமை? அரசே இவ்வாறு செய்தால் என்ன செய்வது?
அதுசரி, ஷாபானு விவாகரத்து வழக்கில், முஸ்லீம் ஷரியத் சட்டப்படி "ஜீவனாம்சம் பெண்களுக்கு தரவேண்டியது இல்லை" என ராஜீவ் அரசு சட்டம் இயற்றியது அன்று...
இப்படிப்பட்ட காங்கிரஸில் பெண் சமத்துவம் எதிர்பார்ப்பது வீண்தான் என்றாலும்-- இன்று ஒரு பெண் தலைவராக இருக்கிறாரே... என எதிர்பார்த்தால்... "சமத்துவம் சாமி கும்பிடுவதிலாவது கிடைக்கும்" என்று..!?
இம்ம்..இம்..! இருந்தென்ன பயன் பெண் தலைவராக காங்கிரஸில்? அன்றும், இன்றும் பெண்கள் வாழ்நிலை, சமத்துவம் குறித்த பார்வையில் காங்கிரஸ் பத்தாம்பசலியே!
இதைதான் மாற்றி "ஆண்-பெண் சமத்துவம் வேண்டும்" என்று கம்யூனிஸ்ட்கள் போராடி வருகிறார்கள்; அது அவர்கள் நம்பாத கடவுள் நம்பிக்கை சம்மந்தப்பட்ட பிரச்சனையாக இருந்தாலுமே!
ஆம்! அது-- காங்கிரஸ்சோ, பிஜேபியோ எல்லா சுரண்டல் கட்சிகளும், பெண்னே தலைவராக இருந்தாலும், அங்கு பாலினம் சமத்துவம் வெறும் பேச்சில் மட்டுமே! ஆனால் கம்யூனிஸ்ட்கள் மட்டும்தான் பாலினம் சமத்துவத்தை நடைமுறையாக்கி இருப்பவர்கள்!
ஆம்! மேற்கு வங்கம் இடதுசாரி அரசுதான் இந்தியாவில் முதன் முதலாக ஆண், பெண் இருவர் பெயரிலும் சொத்துரிமையிலும் (நிலப்பட்டா) சமத்துவம் வழங்கியது மறந்துபோன வரலாறு!
---\\\
"பாலின சமத்துவ சித்தாந்தம் கிடையாது!"
🙇🙇🙇
ஷாபானு விவாகரத்து வழக்கில், முஸ்லீம் ஷரியத் சட்டப்படி "ஜீவனாம்சம் பெண்களுக்கு தரவேண்டியது இல்லை" என மத்திய காங்கிரஸ் ராஜீவ் அரசு சட்டம் இயற்றியது அன்று...
இன்று...
"சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க முடியாது" என கேரள காங்கிரஸ் உமன்சாண்டி மாநில அரசு-- உச்சநீதி மன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது!
காங்கிரஸ் முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ- பன்னாட்டு முதலாளிகள் ஆதரவு கட்சி என்பதால், அதனிடம் பாலினம் சமத்துவம் எதிர்பார்க்க முடியாது! பாரம்பரியம் என்கிற பெயரில் பாலினம் வேற்றுமையை ஏற்க முடியாது; அதை தீயிட்டு கொளுத்த வேண்டும்!
காங்கிரஸ்சோ, பிஜேபியோ எல்லா சுரண்டல் கட்சிகளும், பெண்னே தலைவராக இருந்தாலும், அங்கு பாலினம் சமத்துவம் வெறும் பேச்சில் மட்டுமே! ஆனால் கம்யூனிஸ்ட்கள் மட்டும்தான் பாலினம் சமத்துவத்தை நடைமுறையாக்கி இருப்பவர்கள்!
மேற்கு வங்கம் இடதுசாரி அரசுதான் இந்தியாவில் முதன் முதலாக ஆண், பெண் இருவர் பெயரிலும் சொத்துரிமையிலும் (நிலப்பட்டா) "பாலினம் சமத்துவம்" வழங்கியது என்பது மறந்துபோன வரலாறு!
இன்று 6.2.16 PTTV நேர்படபேசு!
---\\\
"அரசியல் கொள்ளையர்"
அதிமுகவில் எம்எல்ஏ சீட் கேட்டு 26,174 பேர் மனு கொடுத்திருக்கிறார்களாம்; இதன்மூலம் ரூ28 கோடியே 40 லட்சம் வசூலாம்! மக்களுக்கு "சேவை" செய்ய போட்டியை பார்த்தீர்களா? இப்படிப்பட்ட "அரசியல் கொள்ளையர்களிடம்" இருந்து, தமிழகத்தை பாதுகாக்க ஒரே வழி... "மக்கள் நலக் கூட்டணி"யே!
---\\\
மக்கள் நலக் கூட்டணி ஒன்றிய நிர்வாகி கூட்டம்
##
இன்று 07.02.2016... சேலம் மாவட்டம் ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி சட்டபேரவை தொகுதி--மக்கள் நலக் கூட்டணி ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கூட்டம் காலை 11 மணிக்கு ஆத்தூரில் நடைபெற்றது.
தலைமை: வ.கோபால்ராஜ் மதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர்; சிறப்புரை: பி.தங்கவேலு சிபிஎம் மாவட்டக்குழு செயலாளர், ஏ.மோகன் சிபிஐ மாவட்டச் செயலாளர்; சி.க.முத்து விசிக கிழக்கு மாவட்டச் செயலாளர் மற்றும் பலர்!
##
இக்கூட்டத்தில் ஆத்தூர் காலைக்கதிர் நிருபர், மாவட்ட ஆட்சித்தலைவரின் உதவியாளராக தாக்கப்பட்டதைக் கண்டித்தும், தாக்கியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.
##
மாலை 5.00 மணி... சேலம் மேற்கு, சேலம் தெற்கு, சேலம் வடக்கு சட்டப்பேரவை தொகுதிகள் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. தலைமை: கோ.ஜெயச்சந்திரன் விசிக மாநகர மாவட்டச் செயலாளர்; சிறப்புரை: பி.தங்கவேலு சிபிஎம் மாவட்டக்குழு செயலாளர்; ஏ.மோகன் சிபிஐ மாவட்டச் செயலாளர், ஆ.ஆனந்தராஜ் மதிமுக மாநகர மாவட்டச் செயலாளர் மற்றும் பலர்!
##
மாவட்டம் முழுவதும் 4 மையங்களில் நடந்த 11 தொகுகளின் நடந்த நிர்வாகிகள் ஆலோசணை கூட்டத்தில் 14.2.16 மாவட்ட செயல்வீரர் கூட்டத்தில் தொகுதிக்கு 1000 க்கு குறையாமல் 11000 பேர் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது.
---\\\
அச்சத்தின் அடிப்படையில்..!
கமல்ஹாசன் பேச்சு மிக அவசியமான ஒன்றே! அச்சத்தின் அடிப்படையில் அர்த்தம் கொள்ள இடம் இல்லாமல் இல்லை!
பாஜக ஆட்சிக்கு வந்ததன் முதல் நடக்கும் "இந்துத்தவா சக்திகளின் அத்துமீறல், அடாவடிதனம், அச்சுறுத்தல்" போன்றவைகளை மனதில் கொண்டுதான் "மதம் அரசியலில் கலக்கக் கூடாது" என கமல் பேசியதாக தோன்றுகிறது!
ஜனநாயகத்தை பாதுகாக்க ஆட்சி, நிர்வாகம் கருத்து சுதந்திரத்தில் தலையீடு கூடாது என்பது
தற்போதைய பாஜக ஆட்சியில் தான் தலைவிரித்தாடுகிறது!
இந்துத்துவா அச்சுறுத்தல், கருத்து சுதந்திரம் அச்சுறுத்தல் யாவும் பாஜக ஆட்சியில் தான் மிகுந்த ஆபத்தை நோக்கி பயணிக்கிறது! இன்று கமல் சொல்லும் "இதை" அன்றே இடதுசாரிகள் சொன்னார்களே!
இன்று 8.2.16 PTTV நேர்படபேசு! இதன் ஒருபகுதி பதிவேற்றம் ஆகி உள்ளது!
----\\\\
மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
சேலம் மாவட்ட மக்கள் நலக் கூட்டணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 8.2.16 மாலை விசக சேலம் மாநகர மாவட்ட செயலாளர் கோ. ஜெயச்சந்திரன் தலைமையில் நடந்தது!
#
அதில்-- மதிமுக மாநகர மாவட்ட செயலாளர் ஆ.ஆனந்தராஜ், மேற்கு மாவட்ட செயலாளர் ந.மகேந்திரவர்மன், விசிக வடக்கு மாவட்ட செயலாளர் ஆ.வசந்த், கேற்கு மாவட்ட செயலாளர் செ.அய்யாவு, மாநகர மாவட்ட பொருளாளர் சுஹில் ரகுமான், சிபிஐ மாவட்ட செயலாளர் ஏ.மோகன், மாவட்ட பொருளாளர் ராமன், சிபிஎம் மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.சேதுமாதவன், ஆர்.குழந்தைவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
#
இதில்--
# 14.2.16 நடைபெற இருக்கும் செயல்வீரர் கூட்டத்தை சிறப்பாக நடத்துவதென்றும், மக்கள் நலக் கூட்டணியின் செயல்வீரர்கள் பல்லாயிரமவர் பங்கேற்க செய்வதென்றும்--
# வாழப்பாடி எம்.பெருமாபாளையம் அம்பேத்கர் சிலையைக் காவல்துறை அகற்றியதைக் கண்டித்தும், மீண்டும் அதே இடத்தில் வைத்திட கோரியும்--- தீர்மாணம் நிறைவேற்றப் பட்டது!
---\\\
குடியரசு தலைவர் யாரின் பிரதிநிதி?
???!!!
கேரளாவில் பிளாச்சிமடா கிராம மக்கள் கோககோலா வின் நீர் சுரண்டலால், தங்கள் நிலம் வறண்டு போனதற்கு நட்ட ஈடு கேட்டு முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் சிபிஎம் முயற்சியால், சிறப்பு நடுவர் நீதிமன்றம் அமைத்திட, மசோதா ஒன்று சட்டசபையில் நிறைவேற்றி, குடியரசு தலைவருக்கு அனுப்பி, 10 ஆண்டுகளுக்கு மேலாக ஊறுகாய் பானையில் வைத்திருந்து, திருப்பி அனுப்பிவிட்டார் குடியரசு தலைவர்! பன்னாட்டு முதலாளிகளின் விசுவாசியே குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜியும், காங்கிரஸும்!
---\\\
மாற்றுப் பாதையில் "கெயில்" திட்டம்
###
வழக்கம்போல் கடிதம் எழுதி, கடனை முடித்துக் கொண்டார் முதல்வர்! அதுசரி, விவசாயிகளை திரட்டி எதிர்த்து போராடினால், கழுத்தை இறுக்கக் கூடும் சொத்து குவிப்பு வழக்கு! வம்பு எதுக்கு? ஏழு மாவட்ட பிரச்சனை தானே இது... என்ற இறுமாப்புக்கு ஒரே முற்றுப்புள்ளி... "மக்கள் நலக் கூட்டணி"யை ஆட்சியில் அமர்த்துவதே! இதன்மூலம் மட்டுமே விவசாயிகள் நலன் காக்க முடியும்!
----\\\\
"மக்கள் நலக் கூட்டணி" மட்டுமே!
இன்று 9.2.16 PTTV புதுப்புது அர்த்தங்கள் பார்த்தீர்களா? அய்யநாதன், சிக்கந்தர் ஆகியோர்... அதிமுக திமுக காங்கிரஸ் பாஜக தேமுதிக போன்ற கட்சிகளின் "தேர்தல் உத்தி; கொள்கை" பற்றியதை போட்டு "கிழிக்கிழி"ன்னு கிழித்துவிட்டார்கள்! பாராட்டுகள்! அதேசமயத்தில் கொள்கை அடிப்படையில் அமைந்துள்ள கூட்டணி... "மக்கள் நலக் கூட்டணி" மட்டுமே என அய்யநான் அவர்கள் சொன்னதற்கும், அதை மௌனமாக ஆதரித்த சிக்கந்தர் அவர்களுக்கும் நன்றி!
----\\\\
திமுகவுக்கு...
திமுகவுக்கு... காங்கிரஸும், பாஜகவும் ஒன்றுதான்; இதன் இரண்டுடனும் தேர்தல் கூட்டு வைப்பதில் திமுகவுக்கு எந்த "கொள்கை" பிரச்சனையும் குறுக்கே கிடையாது!
திமுகவுக்கு 'தான்' ஆட்சி வரவேண்டும்; அதற்கு அதிமுக ஆதரவு கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ள எந்த "தன்மானமும்" தடை இருக்காது என்பதுதான் திமுகவின் கடந்த கால செயல்பாடும், நிகழ்கால நிலைபாடும் உணர்த்துகிறது!
ஆளும்கட்சி வெற்றி "மனப்பால்" குடித்துக் கொண்டிருக்கிறது; திமுக கூட்டணி அமைப்பதை பொறுத்து, அதிமுக கூட்டணி அமைக்கும்; அதிமுகவுக்கும்... காங்கிரஸ், பாஜக இரண்டுமே ஒன்றுதான்! பாஜக - காங்கிரஸ் இவற்றில் ஒன்று அதிமுகவுடனும், இன்னொன்று திமுகவுடன் இருக்கும் என்றே தோன்றுகிறது!
தேமுதிக க்கு மக்கள் நலக் கூட்டணியே சரியான எதிர்காலத்தை அரசியல் ரீதியாக தரும்! இதை விடுத்து திமுக அல்லது பாஜக வுடன் போனால், அதன் அரசியல் எதிர்காலம் சூன்யம் ஆகிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை! திமுக-பாஜக வுடன் சென்றால் ஒருவேளை "வேறு ஏதேனும் ஆதாயம்" கிடைக்கலாம்; அவ்வளவே!
இன்று 9.2.16 PTTV நேர்படபேசு!
----\\\\
போராட்டம் வெல்லட்டும்!
சென்ற தேர்தலின்போது அதிமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை அமலாக்கம்... புதிய பென்சன் திட்டத்தைக் கைவிடல்... உள்ளிட்டு கோரிக்கைகளை முன்வைத்து... அரசு ஊழியர்கள் இன்று 10.2.16 முதல் காலைவரையற்ற வேலைநிறுத்தம்!
##
முழுமையாக பங்கேற்பு! அலுவலகங்கள் வெறிச்சேடின! சேலத்தில் போராட்டக் குழு மற்றும் அங்கன்வாடி பணியாளர் மற்றும் அனைத்துத்துறை ஓய்வூதியர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!
சேலம்: 3 ஆவது நாளாக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக தொடருகிறது! இன்று 13.2.16 பல்லாயிரவர் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் மறியல்-கைது! ஜெயலலிதா அரசு செவிப்பறை கிழியட்டும்! கோரிக்கைகள் வெல்லட்டும்!
----\\\
தமிழகம் நிம்மதி அடையும்!
நல்ல முடிவு அதை செய்யுங்க முதலில்..! நிகழ்ச்சி பார்க்கிறவர்கள் நிம்மதியாக ஏதாவது தெரிந்துக் கொள்ளட்டும்! தெருச் சண்டைகளை வீட்டுக்குள் பார்க்காமல் இருக்கட்டும்! ஊடகவியாளர் யாமுகன் கேள்வி கேட்கிறார்... பிரச்சன்னா பிரசன்டம் செய்கிறார்!
நேற்று தந்தி டிவியில் வந்த அப்பாவு, புதிய தலைமுறையில் வந்த பிரசன்னா, நியூஸ் 7 இல் வந்த சரவணன்.. எல்லாமே "கத்துக்கத்துன்னு" கத்தறாங்க! ஏன் நிதானமாக பேசவேண்டியதுதானே! இதிலிருந்தே தெரிகிறது இவர்களின் தோல்வி "ஜன்னி!".
இவர்கள் மட்டும் மக்கள் நலக் கூட்டணியை அதிமுகவின் "பிடீம்" ன்னு சொல்லலாம்! ஆனால் இவர்களை மட்டும் யாரும் எதுவும் சொல்லக்கூடாது! இவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள்! சுமந்த சி ராமன் மக்கள் நலக்கூட்டணி அதிமுக வாக்குகளையும் வாங்கும் என்கிறார்! அவரை அய்யாவு பேசவே விடமாட்டேன் என குதிக்கிறார்!
ஆகவே உங்கள் யோசனையை திமுக தலைமை ஏற்றால் தமிழகம் நிம்மதி அடையும்! ஆம், அதிமுக திமுக தோற்றாலும்தான்! மக்கள் நலக்கூட்டணி வென்றாலும்தான்!
##
(முகநூலில் ஒருவர் திமுக ஊடக விவாதங்களுக்கு போக வேண்டாமென பதிவு போட்டதற்கு!)
யார் மீது அதிக கவனம்?
எனக்கு வலுவான சந்தேகம்!?
"யார் மீது அதிக கவனம்?" என்கிற இந்து தமிழ் வாக்கெடுப்பில்... காலையில் 3ஆம் இடத்தில் இருந்த தேமுதிக மதியத்திலிருந்து 1ஆம் இடத்திற்கு வந்திருக்கிறதே (பாமக வை தள்ளிவிட்டு) இதற்கு திமுக பாஜக வாக்களித்திருக்குமா? என எனக்கு வலுவான சந்தேகம்!?
நியாயமாக... மக்கள் நலக் கூட்டணி தான் 1 ஆம் இடம் வர வேண்டும்! இரவு 12 மணிக்கு மேலும் மக்கள் கடல் போல் திரண்டு காட்சி அளிக்கிறார்கள் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களை பார்க்க... அவர்களின் பேச்சைக் கேட்க...! கள நிலவரம் அப்படியிருக்க... வலத்தளத்தில் மட்டும் ஏன் இப்படி?!
ஆம், மக்கள் நலக் கூட்டணி வலைதளம் உள்ளிட்டு மின்னனு தளங்களில் முன்னேற வேண்டியதையே காட்டுகிறது! "குயிக்!"
----\\\\
திமுகவின் தோல்வி ஜுரம்!
தேர்தலில் சரியான நேரத்தில் கூட்டணி அமைத்து, சரியான நேரத்தில் பரப்புரையை துவங்கி உள்ள மக்கள் நலக் கூட்டணி வாக்குகளைப் "பிரிக்காது" மொத்தமாக பெற்று, வெற்றிக்கனியைப் பறிக்கும்! வரலாறு படைக்கும்! ஆட்சியை அமைக்கும் தமிழகத்தில்!
இதன் ஒருபகுதி PTTV நேர்படபேசுவில் பதிவேற்றம் ஆகி உள்ளது!
##
இரண்டும் நடக்காது!
'கூட்டணி ஆட்சி கிடையாது' என திமுக வும், 'மகத்தான வெற்றி பொறுவோம்' என அதிமுக வும் சொல்வது-- இரண்டும் நடக்காது!
நடக்க போவதோ--
மக்கள் நலக் கூட்டணியின் ஆட்சியே! தற்போது தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுக்கு நல்லிரவிலும் மக்கள் தரும் எழுச்சி வரவேற்பு அதைத்தான் காட்டுகிறது!
இன்று 10.2.16 News 7 ?கேள்வி நேரம்!
##
மனுஷ்புத்திரன் சிண்டு முடிந்து விடுவதிலும்...
இன்றும் 10.2.16 PTTV., News 7 இரவு விவாதத்தில் மனுஷ்புத்திரன்... அய்யாவு ஆகியோர் குதித்தனர். இவர்களின் "குதி" ஆட்டத்தில் இருந்து, இவர்களே தங்களின் தோல்வியை ஒப்பு கொண்டு விட்டார்கள் என்று தெளிவாகிவிட்டது!
மனுஷ்புத்திரன் சிண்டு முடிந்து விடுவதிலும் (விசிக தான் பெரியக் கட்சி என்று), ஊடகங்கள் மீது சீறி பாய்வதிலும், (ஒன்றுமே இல்லாத மக்கள் நலக் கூட்டணியை ஊடகங்கள் ஊதி பெரிது படுத்துவதாக) கண்ணும் கருத்துமாக செயல்பட்டார்; நேற்று ரகசியம் காத்த அய்யாவு இன்று அதை "போட்டு உடைத்தார்" (?!) (வைகோ ராமானுஜத்தைச் சந்தித்தாராம்) இதோடு தந்தி டிவியில் வந்த கண்ணதாசன் திமுக குதி ப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போனாலும் கநகூ மீது எரிச்சலை தெரிவிக்காமலும் இல்லை!
திமுக வின் தோல்வி ஜுரத்தை திமுகவினரே உறுதிப்படுத்தி வருவதற்கு நன்றி!
---\\\
PWA-LDF-LF என்றால்...?!
இன்று 10.2.16 PTTV நேர்படபேசு வில் நெறியாளர் குணா... மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா வில் இருக்கும் கூட்டணியும், மக்கள் நலக் கூட்டணியும் ஒன்றா? என்றார் தோழர் சுப்பராயன் சிபிஐ மாநில துணைச்செயலாளர் அவர்களிடம்... அதற்கு அவர் "ஆம்" என்றார்! நேரம் கருதி கூட அப்படி ஆம் என்றிருக்கலாம்! ஆனால்... அவையும் இதுவும் ஒன்றல்ல; வித்தியாசம் இருக்கிறது!
மேற்கு வங்கம், திரிபுராவில் இருப்பது: இடது முன்னணி (Left Front); இடதுசாரி கட்சிகள் மட்டுமே இருப்பது! கேரளாவில் இருப்பது: இடது ஜனநாயக முன்னணி (Left Democratic Front); இடதுசாரி கட்சிகள், ஜனநாயக கட்சிகள் இருப்பது! அதாவது இதன் (LDF) முதிர்வில் இது (LF)!
மக்கள் நலக் கூட்டணி... (Peoples Welfare Alliance)குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில், இடதுசாரி கட்சிகள், ஜனநாயக கட்சிகள் இணைந்த ஒரு கூட்டணி; இதன் முதிர்வில் ஒருவேளை இடது ஜனநாயக முன்னணி (LDF)கேரளாவைப் போல் வரலாம்! மேற்கு வங்கம், திரிபுரா போல் இடது முன்னணி (LF) வர வாய்ப்பு மிகமிக குறைவு; இல்லை!
இந்தளவுக்கு விவரிக்க வாய்ப்பு இல்லாத சூழலில் இரண்டும் ஒன்றுதான் என தோழர் சுப்பராயன் அவர்கள் கூறிவிட்டார் போலும்!
##
----\\\
நெத்தியடி!
இன்று 11.2.16 PTTV புதுப்புது அர்த்தங்கள்... ஜென்ராமுடன் எழுத்தாளர் முத்துகிருஷ்ணன், பத்திரிக்கையாளர் மணி... முத்துக்கிருஷ்ணன் தேர்தலில் பணத்தாலும், இலவசத்தாலும் ஏழை எளியவர்கள் "பிச்சைக்காரர்கள்" ஆக்கி விட்டார்கள் என்பது நெத்தியடி மட்டுமல்ல... இது திமுக அதிமுக வின் மிகப்பெரும் சாதனை! மேலும் கலைஞரின் பச்சோந்தி பேச்சை விளாசினார்! பாருங்கள் காலை 9.30 மணிக்கு..!
---\\\\
மகிழ்வுற்றேன்!
தம்பி எஸ்.விஜய்குமார், இந்து தமிழ் சிறப்பு செய்தியாளர்... மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர்களுக்கு... வணக்கம்!
🙏🙏
இன்று 11.2.16 சேலம் சிறைத்தியாகிகள் நினைவு நாளில் இந்து தமிழில், அது குறித்து சிறப்பு செய்தி கட்டுரை கண்டு மகிழ்வுற்றேன்! அனேகமாக, படுகொலை நடந்த ஆண்டு 1950 ஆம் ஆண்டு மட்டுமே, இந்த படுகொலையை கண்டித்தும், எதிர்த்தும், மறைமுகமாக ஆதரித்தும் தமிழ் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன!
அதன்பின் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பான பத்திரிக்கைகளில் (தீக்கதிர், ஜனசக்தி) மட்டுமே... சேலம் சிறைகளில் கம்யூனிஸ்ட்கள் படுகொலைச் செய்யப்பட்டதை நினைவு கூறி வந்துள்ளன.
அதன்பின் இன்றுதான் 66 ஆவது நினைவு நாளில் சுதந்திர போராட்ட பாரம்பரியம் கொண்ட கம்யூனிஸ்ட் தியாகிகளை... அதுவும் காங்கிரஸ் அரசால் ஈவு இறக்கமின்றி, பிரிட்டீஷ் ஜெனரல் கொடூரன் டயர் போல் சுட்டுக் கொள்ளப்பட்ட கம்யூனிஸ்ட்களை நினைவு கூர்ந்து-- இந்து தமிழில் தங்களது சிறப்பு செய்தி கட்டுரை கண்டு பூரித்துப்போனேன்! ஆம், நான் மட்டுமல்ல, ஆயிரமாயிரம் கம்யூனிஸ்ட்களும்தான்! நன்றி!
மகிழ்வுடன்,
பி.தங்கவேலு,
மாவட்டக்குழு செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,
"சேலம் சிறைத்தியாகிகள் நினைவகம்" சேலம்-7.
---\\\
சேலம் சிறைத்தியாகிகள் 66 ஆவது நினைவு நாள் 11.2.2016 அனுசரிப்பு!
சிபிஐஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில்... அலுவலக செயலாளர் வி.சம்பத், சேலம் மத்திய சிறை முன்... மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு செங்கொடி ஏற்றுகிறார்கள்.
அருகில் மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜோதிலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.சேதுமாதவன், ஆர்.குழந்தைவேல், மாவட்டக்குழு உறுப்பினர் என்.பிரவீன்குமார், வடக்கு மாநகர செயலாளர் எம்.முருகேசன், மாநகரக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், தமிழ்செல்வன், 7ஆவது டிவிசன் கிளை செயலாளர் எம்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர்..!
---\\\
குறிப்பிட்ட குடும்பங்கள் மட்டுமே!
தமிழகம் 50 ஆண்டு திராவிட கழகங்களின் ஆட்சியில் குறிப்பிட்ட குடும்பங்கள் மட்டுமே செழிப்படைந்திருக்கிறது! ஆனால்... கோடான கோடி மக்கள் இலவசங்களில் உயிர் வாழ்ந்துக் கொண்டும் இருக்கிறது! இருந்த காணி நிலத்தை இழந்துவிட்டு, அரசு தரும் "ஒரு முழம்" கரும்புக்கு ரேசன் கடைகளில் அடிதடிப்பட்டுக் கொண்டிருக்கின்றது!
அதிமுக, திமுக வின் வித்தாரப் பேச்சுக்குப் பஞ்சமில்லை! ஆனால் தமிழகத்தில் மட்டும் 39% நிலங்களில் "நெல்" விளைந்ததற்குப் பதிலாக தற்போது "கல்" (முளைத்து) விளைந்து கொண்டிருக்கிறது! இதைத்தான் செல்வ செழிப்பு என்கிறார்கள் போலும் அதிமுகவும், திமுகவும்!
கருணாநிதி குடும்பம் ஆசியாவில் 10ஆவது செல்வ செழிப்பு மிக்க குடும்பம்; இதுபோல் ஜெயலலிதா தனக்கு தமிழகம்தான் "இல்லமும் உள்ளமும்" என்றாலும் அவரின் குடும்ப (சார்பு) சொத்து மதிப்பு அனேகமாக கலைஞர் குடும்பத்தைத் தாண்டி செல்வ செழிப்புடன் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது!
சீரழிந்ததோ இல்லையோ... கொள்ளை போய் உள்ளது தமிழகத்தின் ஒட்டு மொத்த மக்களின் சொத்துக்களும்-- திமுக அதிமுக வின் 50 ஆண்டு ஆட்சியில்..! இந்த கொள்ளையில் இருந்து தமிழகத்தையும் "தமிழர்"களையும் காக்க ஒரே வழி... 'மக்கள் நலக் கூட்டணி'யை ஆட்சியில் அமைத்தப்படுவதுதான்!
இன்று 11.2.16 PTTV நேர்படபேசு! இதன் ஒரு பகுதி பதிவேற்றம் ஆகி உள்ளது!
----\\\\
நினைவு நாள் பொதுக்கூட்டம்!
சேலம் சிறைத்தியாகிகள் நினைவு நாள் பொதுக்கூட்டம்! 11.2.16 மாலை 6 மணி; சேர்மேன் சடகோபன் தெரு, 34வது டிவிசன், சேலம் மாநகரம்; தலைமை: ஜி.சுல்தான் மாநகரக்குழு. சிறப்புரை: பி.தங்கவேலு மாவட்டக்குழு செயலாளர்; ஆர்.வெங்கடபதி, பி.ராமமூர்த்தி மாவட்டச்செயற்குழு; ஆர்.வைரமணி மாவட்டக்குழு; பொன்.ரமணி கிழக்கு மாநகர செயலாளர்; ஆர்.ராஜீ மாநகரக்குழு; நன்றி: கே.பச்சமுத்து..!
---\\\
மிகப்பெரிய கேடு; சீரழிவு!"
50 ஆண்டில் தமிழகம் திராவிட கட்சிகளின் ஆட்சியில் செழிப்படைந்ததா? சீரழிந்ததா? என்ற விவாதம் இன்று புதிய தலைமுறை நேர்படபேசுவில் நடந்தது! இதில் 2 விசியம்... திமுக, அதிமுக ஆட்சியை எடைபோடவே விவாதம்... ஆனால் மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா, குஜராத், பிகார் என ஏன் சென்றது? இதுதான் திசைத்திருப்பல் என்பதைவிட இடதுசாரிகள் மீது சீறி பாய்தல் என்பது! அடுத்து, நெறியாளர் குணா முடிக்கும் போது, "சீரழிந்து தான் இருக்கு என்கிறீர்; ஆனால் அந்த 2 கட்சிகளும் தானே 60 70% வாக்குகள் பெறுகின்றன" என முடித்தார்!
##
குணா அவர்களே... இதுதான் பிரதான சீரழிவு என்பது மட்டுமல்ல... சீரழிவின் உச்சமும்கூட! ஆம், "ஏழ்மையை திட்டமிட்டு வளர்ப்பதும், அதன்மூலம் இலவசம்-வாக்குக்கு துட்டு கொடுப்பது, மது போதையிலே மயங்கி கிடக்க வைத்திருப்பதே--இந்த இரு கட்சிகளும் தமிழகத்திற்கு செய்திருக்கும் மிகப்பெரிய கேடு; சீரழிவு!"
----\\\
இன்று 12.2.16 காலை 9மணிக்கு புதிய தலைமுறை புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியை பாருங்கள்! பாவம் பாஜக சேகர் "எப்படியெல்லாம் சமாளிக்கிறார்!?"
----\\\
"தலையாட்டி பொம்மைகளாக"வே...
தேமுதிக 6 எம்எல்ஏக்கள் இடைநீக்கத்தை உயர்நீதி மன்றம் ரத்து செய்திருப்பது-- சட்டமன்றத்தின் வானளாவிய அதிகாரத்தை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது!
எதிர்கட்சி எம்எல்ஏக்களுக்கு "ஒரு சட்டப்பாதுகாப்பு" கிடைத்துள்ளது!
ஆளும் கட்சியின் "தான்தோன்றித் தனத்திற்கு" கடிவாளமிடப்பட்டு உள்ளது!
தமிழ்நாட்டு சட்டமன்ற சபாநாயகர்கள்-- அது திமுக அதிமுக எதுவானலும், முதல் அமைச்சரின் கைப்பாவையாக, "தலையாட்டி பொம்மைகளாக"வே செயல்பட்டு இருக்கிறார்கள் என்பதற்கு இந்த தீர்ப்பு ஒன்றே "சாட்சி!"
இன்று 12.2.16 PTTV நேர்படபேசு! இதன் ஒருபகுதி பதிவேற்றம் ஆகி உள்ளது!
----\\\\
உருப்படியான எதிர்காலத்தை அமைத்து தர..
பாஜக என்னமோ திமுக பாஜக கூட்டணிக்கு முயற்சிக்காத மாதிரியும், பாஜக வுடன் டஜன் கணக்கில் 'கமலாலய'த்தில் கால்கடுக்கக் கட்சிகள் கூட்டணிக்கு வரிசையில் நிற்பது போலவும் தமிழசை-- "ச்சீசீ இந்த பழம் புளிக்கும்" என்கிறார்!
திமுக காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி மட்டுமல்ல இலங்கை தமிழ் மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் நம்பிக்கை துரோகம் இழைத்த கூட்டணி! இதை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்! இது தமிழ்நாட்டு மக்களை முட்டாள்கள் ஆக்கும் அப்பட்டமான சுயநலக் கூட்டணி!
"ஊழலை ஒழிக்க வேண்டும்; தமிழ்நாட்டு மக்களுக்கு உருப்படியான எதிர்காலத்தை அமைத்து தர வேண்டும்" என்றால்-- தேமுதிகவும், தமாகவும் உண்மையிலேயே இனியும் காலம் தாழ்த்தாமல், மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து, ஊழல் மற்றும் சுய நலக் கூட்டணிகளான அதிமுக மற்றும் திமுக-காங்கிரஸ் கூட்டணிகளை-- மதவாத-சாதியவாத பாஜக, பாமக ஆகியவற்றை வீழ்த்த வேண்டும்!
இன்று 13.2.16 PTTV நேர்படபேசு! இதன் ஒருபகுதி பதிவேற்றம் ஆகி உள்ளது!
----\\\\
"கருணாநிதியின் "ஆப்பு" டீம்-- AAPPU TEAM ?!"
"... கூட்டணியிலிருந்து வெளியேறியபோது, நன்றி கெட்டர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். இப்போது நன்றி உள்ளவர்கள் ஆகி விட்டார்களா?.."
"... முக.ஸ்டாலின் நடத்தி முடித்துள்ள நமக்கு நாமே பயணம் காமெடி பயணம். ஆளைக் கூப்பிட்டு, இந்த கேள்வியைக் கேளுங்கள் என்று சொல்லி அரங்கேற்றப்படும் நாடகம். இதனால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை.."
"... திமுக-காங்கிரஸ்க்கு கொள்கையே இல்லை!..."
##
இப்படி சொன்னவர் யார்? இவர் என்ன டீம் உபிகளே? கருணாநிதியின் "ஆப்பு" டீம்-- AAPPU TEAM என்று கொல்லலாமா? புண்ணாக்குகளா?
இந்த முத்துக்களை உதிர்த்த முன்னாள் உபி முக.அழகிரி மீது இன்நாள் உபிகளின் உளரல் வருமா?
##
----\\\\
சேலம் மாவட்ட "மக்கள் நலக் கூட்டணி" யின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று 14.2.16 நேரு கலை அரங்கில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்பு! 11 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடுவோம் என சபதமேற்பு!
---\\\
ஆர்எஸ்எஸ் கொலைவெறி தாக்குதல்...
புதுதில்லி சிபிஎம் அலுவலகம் மீது...
#ஆர்எஸ்எஸ் கொலைவெறி தாக்குதல்...
#சிபிஎம் பொதுச்செயலாளர் யெச்சூரிக்கு கொலை மிரட்டல்...
#கருத்து சுதந்திரம் கேட்பது தேச துரோகமா?
#தேசபிதாவை கொன்ற கோட்சே RSS கும்பல்...
#தேசவிடுதலை வீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் வாரிசுகளின் தேச துரோக வழக்கா?
#யாருக்கு தேவை நரவேட்டை ஆர்எஸ்எஸ் சர்ட்டிபிகேட்?
##
சேலத்தில் 15.2.16 தலைமை தபால் நிலையம் முன் ஆவேச ஆர்ப்பாட்டம்!
தலைமை: பி.தங்கவேலு மாவட்டக்குழு செயலாளர், மாநிலக்குழு உறுப்பினர்...
கே.ஜோதிலட்சுமி மாநிலக்குழு உறுப்பினர், ஆர்.சிங்காரவேல் மாநிலக்குழு சிறப்பு அழைப்பாளர், மாநகர செயலாளர்கள் பொன்.ரமணி கிழக்கு; எம்.முருகேசன் வடக்கு; எம்.கனகராஜ் மேற்கு; ஏ.சுந்தரம் சேலம் தாலூக்கா செயலளார் கண்டன உரை ஆற்றினர்...
##
----\\\\
மக்கள்நலக்கூட்டணி மாவட்டசெயலாளர் கூட்டம்!
இன்று 15.2.16 சிபிஎம் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குழந்தைவேல்; மதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆ.ஆனந்தராஜ் மாநகரம், ந.மகேந்திரவர்மன் மேற்கு; சிபிஐ மாவட்ட செயலாளர் ஏ.மோகன், மாவட்டப் பொருளாளர் ஏ.ராமன்; விசிக மாவட்டச்செயலாளர்கள் அ.வசந்த் வடக்கு, செ.அய்யாவு மேற்கு, சிக.முத்து கிழக்கு, மாநகர மாவட்ட பொருளாளர் சுகைல் ரஹ்மான், உள்ளிட்டோர் பங்கேற்றனர்!
மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் கீழ்கண்டபடி தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடத்திடுவது என முடிவு செய்யப்பட்டது.
25.2.16 மேட்டூர்-ஓமலூர்; 26.2.16 சங்ககிரி -எடப்பாடி; 27.2.16 கெங்கவல்லி- ஆத்தூர்; 29.2.16 சேலம் தெற்கு; 1.3.16 வீரப்பாண்டி-சேலம் வடக்கு; 2.3.16 ஏற்காடு-சேலம் மேற்கு... நடைபெறும்! இதற்கான தயாரிப்புக் கூட்டங்கள் 18,19,20.2.16 ல் ஓமலூர், சங்ககிரி, ஆத்தூர், சேலம் ஆகிய மையங்களில் நடைபெறும்!
----\\\\
"தேர்தல் கூட்டு" நிவாரணமா?
மத்திய அரசுக்கு (அதிமுகவுடன் தேர்தல் கூட்டணிக்கு) தந்ததாக வெளியாகி உள்ள ரூ1,774 'வெள்ள நிவாரணமா? வறட்சி நிவாரணமா? வெள்ள நிவாரணம் என்றால் 4,5 மாவட்டத்தோடு நின்றுவிடும்; வறட்சி நிவாரணம் என்றால் தமிழகம் முழுவதும் வரும்! இது எதுக்கு, என்ன நிவாரணம்? யாருக்காவது தெரிந்தால், சொல்லுங்கப்பா..! எனக்கென்னமோ "தேர்தல் கூட்டு" நிவாரணமா தெரியுதுங்கோ..!
----\\\\
பச்சைபொய்!
நம் தேசபிதாவை சுட்டு கொன்ற இந்துத்வா ஆர்எஸ்எஸ் வெறியன் நாதூராம் கோட்சே வுக்கும், பாஜகவுக்கும் சம்மந்தம் இல்லையாம்! இன்று PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் கூசாமல் பச்சைபொய் சொல்கிறார்... பாஜகவின் ராமசுப்ரமணியன்...! அப்படி என்றால் இங்கே யாரின் புகைபடத்திற்கு முன்நின்று கும்புடு போடுகிறார் நரவேட்டை புகழ் நரேந்திர மோடி.. ஆம், நாட்டின் பிரதமர் நமோ..!
---\\\
“கேட்டது வாழ்வு; கிடைத்தது சாவு”
சுதந்திர தேசமாம் பாரத தேசம் தனது 67 வது குடியரசு தினத்தை கோலாகலமாக கொண்டாடி உள்ளது. பன்னாட்டு சுரண்டலுக்கு ஆதரவாகவும், தங்களது மதவாத மறைவு (Hide) அஜண்டாவை நிறைவேற்றிக் கொள்வதற்கு வெளிப்படையாகவும் (Open) அனைத்து காரியங்களையும் கச்சிதமாக ஆற்றி வருகிறது பிஜேபி அரசு!
அதன் உச்சம்தான் மோடி அரசு பதவி ஏற்ற முதல் குடியரசு தின அரசு விளம்பரத்தில்கூட “மதசார்பின்மை; சமத்துவ சோசலிச குடியரசு” என்கிற வார்த்தைகள் காணாமல் போக செய்துவிட்டது. கேட்டால் தவறு நேர்ந்துவிட்டது என்று ஒரு குரலும், ஏன்? எதற்கு? இனி அந்த வார்த்தைகள்? என்று இன்னொரு குரலும், அது வேண்டுமா என்று விவாதிக்கலாமே? என்று மற்றொரு குரலும், சோசலிசம்தான் இல்லாமால் போய்விட்டதே இனி நாம் ஏன் அதை தூக்கிப்பிடிக்க வேண்டும்? என்று கட்டக்குரலும் என பிஜேபி “பலகுரலில்” பேசியதை நாடு கண்டது!
கஷ்டப்பட்டவர்களுக்குதான் தெரியும்..! அந்த கஷ்டத்தால் கிடைத்த அந்த பொருளின் அருமையைப்பற்றி! ஆம்! பெற்றவருக்குத்தான் தெரியும் பிள்ளையின் அருமை என்பார்கள் அல்லவா? அதுபோல் இந்தியா சுதந்திரம் பெற போராடியவர்களுக்குத்தான் தெரியும் அதன் அருமை பெருமை! இந்திய சுதந்திரத்தைக் காட்டிக்கொடுத்த பாஜக வுக்கு அதன் அருமைப் பெருமை எப்படி தெரியும்? என்றாலும் இடதுசாரிகள் உள்ளிட்டு ஜனநாயக சக்திகளின் போராட்டத்தால், அடுத்தடுத்து வந்த குடியரசு தின விளம்பரங்களில் அடக்கி வாசித்துள்ளதை காணமுடிந்தது. ஒற்றுமையுடன் பாசிச தாக்குதலை எதிர்கொண்டால், ஜனநாயகத்தை பாதுகாக்க முடியும் என்பதற்கு இதுவும்-- நில கையப்படுத்தும் சட்டத்தை தற்காலிகமாக திரும்ப பெற்றதும் நாடு கண்ட ஒரு ஒற்றுமை உதாரணம்!.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் “இந்திய நாடு குடியரசு நாடாக வேண்டும்; அதில் ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும்; மக்கள் ஜனநாயகம் மலர வேண்டும்; அதன் ஊடே மதசார்ப்பற்ற சமத்துவ குடியரசு நாடாக... இந்திய திருநாடு மாற்றப்பட வேண்டும்” என்று தன் இன்னுயிரை ஈய்ந்தவர்கள் எண்ணிலடங்கா! இதன் பாரம்பரியத்தில் வந்தவர்கள்தான் கம்யூனிஸ்ட்கள்! அவர்கள் வாய்ச்சொல் வீரர்களல்ல; அன்றும் இன்றும களப்பணி ஆற்றியவர்கள்; ஆற்றிவருபவர்கள்! அதற்கு இதோ ஒரு தமிழகத்தில் நடந்த “ரத்த சா(கா)ட்சி!”
1950 பிப்ரவரி 11. இந்திய துணைக்கண்டம் தன்னை குடியரசு நாடாக பிரகடனப்படுத்திய 16வது தினம்; முதல் குடியரசு தினம் கொண்டாடிய ஆண்டு. அதாவது இந்தியாவில் சுதந்திர காற்று வீசத்தொடங்கி ஏறக்குறைய இரண்டரை வருடம்! நாடெங்கும் சுதந்திரக்காற்று வீசிக் கொண்டிருக்கின்றது. ஆனால் அந்த சுதந்திரக் காற்று இந்திய கம்யூனிஸ்ட்களுக்கு மட்டும் சுவாசிக்கக் கிடைக்கவில்லை. என்ன கொடுமை இது? ஆம்! 1948-1951 ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட தடை! நம் விடுதலை மண்ணில்!
விடுதலைக்காக- வெள்ளையனை விரட்டியடித்து, பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை இந்திய மண்ணில் இருந்து அதன் சுவடுகூட தெரியாத அளவுக்கு வேரோடு பிடுங்கி எரிந்த தேசபக்த போரில் கம்யூனிஸ்ட்கள் பங்கு மகத்தானது; அளப்பரியது! அப்படிப்பட்ட தேசபக்தர்களுக்கு விடுதலை இந்தியாவில் விருப்பம் போல் செயல்படவிடவில்லை அன்றைய காங்கிரஸ் அரசு. கம்யூனிஸ்ட்கள் மீது வழக்குமேல் வழக்கு போட்டது; ஆம்! அவை யாவும் மெய்யான வழக்கல்ல, பொய்யான வழக்குகள். இதன் விளைவு நாடு முழுவதுமுள்ள சிறைச்சாலைகளில் கம்யூனிஸ்ட்கள் அடைக்கப்பட்டனர். ஏன்? எதற்காக?
“யாதும் ஊரே, யாவரும் கேளீர்” என்றதற்காக! ஆம்! அந்த சமத்துவ கொள்கையை விடுதலை சமவெளிகளில் விதைத்ததற்காக! விடுதலை இந்தியாவில் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக செங்கொடியை உயர்த்திப் பிடித்ததற்காக! அதற்காகத்தான் அன்று கம்யூனிஸ்ட்கள் வேட்டையாடப் பட்டார்கள் விலங்குகளைப்போல!
சேலம் மத்திய சிறையில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த (அன்றைய மதராஸ் ராஜஸ்தானி) 350க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட்கள் அடைக்கப்பட்டார்கள். இவர்களுக்கு 6 மாதம் முதல் 20 ஆண்டுகள் வரை தன்டனை விதிக்கப்பட்டிருந்தது. இவர்களில் பெரும்பகுதி 20 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் யாவரும் அரசியல் கைதிகளே! இவர்களை கொள்ளை, கொலை, திருட்டு போன்ற சமூக விரோத, சட்டவிரோத காரியங்களை செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த ‘கிரிமினல்’ கைதிகளோடு ‘சி’ பிரிவு சிறையில் அடைக்கப்பட்டார்கள். விடுதலை போரின் வீரர்களுக்கு அன்றைய காங்கிரஸ்சும், ஆளும் வர்க்கமும் அளித்த பரிசு இது!
இன்று- இந்திய சுதந்திரத்தை பாய்போல் சுருட்டி பவ்வியமாக பன்னாட்டு முதலாளிகளுக்கு பட்டப் பகலில் பட்டாப்போட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆர்எஸ்எஸ் வகையறாக்கள். இன்று இந்திய மக்களின் செல்வங்களை ஒட்ட உருஞ்சிட, துடியாய் துடித்துக்கொண்டிருக்கும் அன்னிய-இந்திய முதலாளிகளுக்கு நாட்டையே காவுக் கொடுக்கும் திருப்பணியை நரோந்திர மோடியும் அவரது மந்திரிமார்களும் குளுகுளு அறையிலே “ஆவி” போக “பரிமாறி”க்கொண்டார்கள்! இதற்கு காங்கிரஸ் விதிவிலக்கல்ல; பொருளாதார கொக்கையில் காங்கிரஸ் செய்ததைத்தான் அப்படியே பாஜகவும் செய்து வருகிறது. சுதந்திர போராட்ட தியாகிகளின் கனவுகளை எல்லாம் காலில் போட்டு மிதித்துவிட்டார்கள்!
அன்று- “... நாங்கள் சுதந்திர போராளிகள்; எங்களை ‘பிக்பாக்கெட்’ கைதிகள் போல் நடத்தக்கூடாது; அதை எங்கள் உயிர் போனாலும் ஏற்கமாட்டோம்!” என்று வீரசமர் புரிந்தார்கள் சிறைகளில் நாடெங்கும் கம்யூனிஸ்ட்கள். அதுதான் சேலம் சிறையிலும் நடந்தது. கம்யூனிஸ்ட்களுக்கு ‘அரசியல் கைதி’ என்கிற உரிமையைக்கூட வழங்க மறுத்தது அன்றைய காங்கிரஸ் அரசு. ‘எங்களை அரசியல் கைதிகளாக’ நடத்த வேண்டும் என்று குரல் கொடுத்த கம்யூனிஸ்ட்களைக் காக்கைக் குருவிகளைச் சுடுவதுபோல் சுட்டுக் கொன்று குவித்து, தனது முதலாளிவர்க்க பாசத்தைக் காட்டிக்கொண்டது. ஆம்! ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத நிலபிரபுத்துவ-முதலாளித்துவ அரசு தானே அன்று முதல் இன்று வரை இருக்கிறது; போதாக்குறைக்கு தற்பொழுது மதவாத “பிஜேபி பிசாசு” வேறு ஆட்சியில் அமர்ந்துள்ளது.
சேலம் சிறையில் அன்று நடந்த ‘நரவேட்டை’ ஏன்? எதற்கு?
“...கிரிமினல் கைதிகளை போல் தொப்பியும், நம்பர் அட்டையும் அணிய வற்புறுத்தினர். ஒவ்வொரு நாளும் வற்புறுத்துதல் அதிகமானது. 1950 பிப்ரவரி 7 ஆம் நாள் 15 தோழர்களை ‘அனெக்ஸ்’ பகுதியிலிருந்து தலைமை சிறைக்கு கொண்டு சென்றனர். மாட்டு நுகத்தடியில் பூட்டி நீர் இறைக்க வைத்தனர். இதை கேள்விப்பட்ட எங்களுக்கு ரத்தம் கொதித்தது. பிப்ரவரி 11இல் நெம்பர் அட்டை அணிய மறுத்ததால் ஜெயிலர் கிருஷ்ணன் நாயர் கொக்கரித்தான். முதலில் தடியடி நடத்தினர். சேகரித்து வைத்திருந்த கற்களில் நாங்களும் தாக்கினோம். ஜெயிலர் மீது ஒருகல் விழுந்து விட்டது. அவ்வளவுதான். உடனே துப்பாக்கியால் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். அப்பொழுது முன்னனி தோழர்கள் எங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு, துப்பாக்கி குண்டுகளுக்கு அவர்கள் தங்களின் நெஞ்சை நிமிர்த்தி காட்டினர்...!” என்கிறார் அன்று அந்த சிறையில் இருந்து உயிர் பிழைத்து வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்டாக வாழ்ந்து மறைந்த உத்தமலிங்கம்.
17 தோழர்கள் துப்பாக்கி சூட்டிலும், 5 தோழர்கள் அடித்தும் கொல்லப்பட்டனர்; பிப்ரவரி 11 இல் 22 சுதந்திர போராளிகள் (கம்யூனிஸ்ட்கள்) சேலம் சிறையில் ரத்த வெள்ளத்தில் மிதக்க வைத்தனர்; 22 கம்யூனிஸ்ட்கள் வீரமரணம் எய்தினர்; 105 ரவுண்ட் சுட்டு, கம்யூனிஸ்ட்களின் செங்குருதியை குடித்தது காங்கிரஸ் காட்டுமிராண்டி அரசு!
அந்த வீரதியாகிகள் திருபெயர்கள் வருமாறு-
1. ஆறுமுகம், 2. காவேரி, 3. சேக்தாவூத் (ஆகியோர் இன்றைய தமிழ்நாடு); 4. எம்.கே. கோபாலன் நாயர், 5. பி. கோபாலன் நாயர், 6. நீலஞ்சேரி நாராயணன் நாயர், 7. பரம்பிக்கடாரம் குஞ்சிப்பா, 8. குஞ்சிராமன், 9. நந்தாரி குஞ்சம்பு, 10. கலாத்தொக்கோயில் ஏதேன், 11. மரோலிகோரன், 12. எம்.நாராயண நம்பியார், 13. புல்லாக்ஜி ஏதேன் கோவிந்தன் நம்பியார், 14. குஞ்சப்ப நம்பியார், 15. வடகோறையின் மான்ஆசாரி, 16. என்.கண்ணன், 17. காட்டூர் நடுவலப்பிறையில் கோரன், 18. உடையாமாடத்து பலக்கல் நம்பியார், 19. தாளன் ராமன் நம்பியார், 20. எம்.கோபாலக்குட்டிநாயர், 21. நடுக்காண்டி பத்மநாபன், 22. நலப்பறக்கல் பாலன் ஆகியோர் இன்றைய கேரளா. இவர்கள் யாவரும் ஏழை உழைப்பாளி மக்களே!
“...சுட்டேன் சுட்டேன் குண்டுகள் தீரும் வரை சுட்டேன்” என்றான் வெள்ளை பரங்கி ஜெனரல் டயர் பஞ்சாப் ஜாலியன்வாலாபாக் கில் சுதந்திர போரின் போது கொக்கரித்தான்! அதுபோல் அன்று சேலம் சிறையில் அரங்கேற்றப்பட்டதைக் கேட்கிற போது, நெஞ்சம் வெடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அன்று ‘விடுதலை’யில் தந்தை பெரியார்- “நினைக்க நினைக்க நெஞ்சம் வெடிக்கிறது” என்றும், ‘திராவிட நாடு’வில் அறிஞர் அண்ணா- “கேட்டது வாழ்வு; கிடைத்தது சாவு” என்றும் தலையங்கம் தீட்டினர்! ஆனால் ‘தினத்தந்தி’ மட்டும் “22 செம்பிடாரிகள் சாவு” என்றது!
சேலம் சிறைத்தியாகிகள் அன்று சிந்திய செங்குருதி வீண்போகவில்லை; அவர்களின் சாம்பல்களில் இருந்து இன்று ஆயிரமாயிரமாய் பீனிக்ஸ் பறவைகள்போல் கம்யூனிஸ்ட்கள் எழுந்து வந்திருக்கிறார்கள்; வருகிறார்கள்! ஆம்! சேலம் சிறைத்தியாகிகள் எந்த லட்சியத்திற்காக தங்களின் இன்னுயிரை ஈய்ந்தார்களோ அந்த சோசலிச சமுதாயம் அமைத்திடும் பணி இன்றும் தொடர்ந்துக் கொண்டுதானிருக்கிறது இந்திய தேசத்திலும், தமிழகத்திலும்!
பெற்ற சுதந்திரம் பன்னாட்டு முதலாளிகளின் ஆக்கிரமிப்பால் பறிபோகும் நிலை ஒருபக்கம். இன்னொருபக்கம் மதவாத ஆட்சி அதிகாரத்தில்! அது, இன்று என்றுமில்லாத அளவுக்கு மிருகபலத்துடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கிறது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக இந்துத்துவா என்கிற மதவாத அஜண்டாவை அசுர வேகத்தில் அமலாக்கி வருகிறது ஆர்எஸ்எஸ் பரிவாரம் வழிக்காட்டுதலில்! ஆர்எஸ்எஸ் அரிதார புருஷர் ஒருவர்... அதன் முழுநேர ஊழியர் தான் இன்று நம் நாட்டின் பிரதமர்! சகல அதிகாரங்களும் இன்று அவரது ‘‘கை’’யில்! காங்கிரஸ் “கை”யின் மக்கள் விரோத செயல்பாட்டால் ஏற்பட்ட வினை இது!
இத்தகைய காங்கிரஸ் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கெதிரான போரும், பாஜகவின் மக்கள் ஒற்றுமைக்கு துரோகமிழைக்கும் மதவாத கொள்கைகளுக்கெதிரான போரும், இந்திய சுதந்திரத்தையும், இறையாண்மையையும் பேணி பாதுகாக்கும் போரும் ஒன்றோடொன்று இணைந்ததே! வேறுவேறு அல்ல! பாரதத்தைக் காக்கும் குருசேத்திரப் போரைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இம்மண்ணில் சேலம் சிறைத்தியாகிகள் திசைவழியில் செய்து வருகிறது!
இதனை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்லவே... ஆம்! மக்கள் ஜனநாயக புரட்சி நடத்திடவே... சோசலிச சமுதாயத்தை படைக்கவே... ஏகாதிபத்திய சக்திகளுக்கு சாவு மணியடிக்கவே... என்றென்றும் போர் பரணி பாடி வருகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி! அத்தகைய வீரமிகு பயணத்தின் ஊடேதான்-- சென்ற ஆண்டு சென்னையில் நடந்த கட்சியின் 21வது மாநில மாநாட்டு முடிவின் அடிநாதமாக-- தற்போது தமிழகத்தில் ‘மக்கள் நலக் கூட்டணி’ அமைத்து தமிழகத்தில் திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக பாமக வுக்கு மாற்றாக ‘மாற்றுக் கொள்கை’யை முன்நிறுத்தி-- செயலாற்றி வருகிறது.
“மதவாத பிஜேபியையும், (மற்றும் காங்கிரஸ்சின்) பன்னாட்டு, இந்நாட்டு முதலாளிகளின் சுரண்டலையும் இந்தியாவிலும், தமிழ் மண்ணிலும் மண்ணைக் கவ்வச் செய்வோம்! அதிமுக திமுக ஊழல் உள்ளிட்ட மக்கள் விரோத கொள்கைகளை இனி அனுமதியோம்! அதிமுக ஊழல் மற்றும் மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவோம்! இடதுசாரி-ஜனநாயக-அம்பேத்கரிய-பெரியாரிய-சமத்துவ-சமதர்ம கொள்கைகளை தமிழ்நாட்டு மக்கள் மனதில் விதைப்போம்! ஆட்சி அதிகாரத்தைக கைப்பற்றுவோம்” என்று குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டணி பவனி வருகிறது!
தற்போது எதிர்வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலையும் அது சந்திக்க இருக்கிறது! தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் மடைமாறிட சூளுரைத்து, வெஜபேரிகையிட்டு, அது-- தமிழகத்தை வலம் வந்து கொண்டிருக்கிறது... அந்த வரலாற்று சிறப்பு மிக்க மக்கள் நலக் கூட்டணி! ‘மக்கள் நலக் கூட்டணியை ஆட்சியில் அமர்த்துவோம்! சேலம் சிறைத்தியாகிகளின் கனவை தமிழகத்தில் நனவாக்குவோம்’ என சேலம் சிறைத்தியாகிகள் நினைவு நாளில் (11 பிப்ரவரி 2016) சபதமேற்போம்!
சேலம் சிறைத்தியாகிகளே! நீங்கள் வீழ்த்தப்பட்ட மரங்களல்ல; வீரிய வித்துக்கள்! உங்களிலிருந்து ஆயிரமாயிரமாய் எழுவோம் பினீக்ஸ் பறவைபோல்! சுரண்டும் இந்த அமைப்பை சுக்கு நூறாக்குவோம்! விளிம்புநிலை மக்களின் கையில் அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்போம்!
-பி.தங்கவேலு