கெய்லுக்கு "பெய்யிலா?"
சேலத்தில் விவசாயிகள் ஆவேசம்!
👊👊👊
மத்திய அரசின் கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் பதிப்புக்கு தடையில்லை என (கேரளா 310 கிமீ; மேற்கு தமிழகம் 510 கிமீ; கர்னாடகா 7கிமீ கொண்டு சென்றிட) "கெயிலுக்கு பெய்யில்" கொடுத்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து... இன்று 3.2.16 இல் சேலம் மெய்யனூர் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் ஆவேச ஆர்ப்பாட்டம் நடந்தது!
தவிச நிர்வாகிகள் எ.பொன்னுசாமி, எஸ்பி.தங்கவேல், ஆர்.குழந்தைவேல், பி.அரியாக்கவுண்டர் உள்ளிட்டு ஏரளமானோர் பங்கேற்றனர். பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயிகள் ஆண்களும், பெண்களும் கலந்துக் கொண்டனர்!
-----\\\\
"கெயில்" க்கு சுப்ரீம் கோர்ட் "பெயில்" (எரிவாயு குழாய் விவசாயிகள் விளை நிலத்தில் பதிக்க அனுமதி) வழங்கியது முழுக்க விவசாயிகளுக்கு விரோதமானது! மத்திய மாநில அரசுகளையும், சுப்ரீம் கோர்ட் டையும் மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல், விவசாயிகள் வெகுண்டெழுந்து விரட்டி அடிக்க வேண்டும் கெயில் ஐ!
கேரளத்தில் நெடுஞ்சாலையில் "கெயில்" எரிவாயு குழாய் பதிக்கும்போது மேற்கு தமிழகத்தில் மட்டும் விவசாயிகள் விளை நிலத்தில் கொண்டு போக துடிப்பதேன்?
தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யுமோ, அல்லது தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன் படுத்தி பேசுமோ, அல்லது கடிதம் எழுதுமோ... எதையோ உருப்படியாக செய்து, நமது விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்! இல்லையென்றால் இதுவரை இதில் தமிழக அரசு "போராடியது" பொய் என்றாகிவிடும்!
"கெயில்"லும், மத்திய அரசும் அழுகிற குழந்தைக்கு வாழைப்பழத்தைக் காட்டுவதுபோல், ஜல்லிக்கட்டில் "ஜகா" வாங்கியதுபோல், தமிழக விவசாயிகள் வாயில் மண்ணைப் போட்டுவிடும்! வயிற்றில் அடித்துவிடும்!அப்புறம் தமிழக அரசு வெறுங்கையைத்தான் பிசைந்துக் கொண்டு இருக்க வேண்டியிருக்கும்!
இன்று 3.2.16 PTTV நேர்படபேசு! இதன் ஒருபகுதி பதிவேற்றம் ஆகியுள்ளது!
----\\\\
"இல்லாத ராமருக்கு இருக்கிற நியாயம்;
இருக்கிற ராமருக்கு இல்லையா?"
🙆🙆🙆
இன்று 3.2.16 PTTV நேர்படபேசுவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் "கெயில் எரிவாயு குழாய் பதிவை நாங்கள் எதிர்க்கவில்லை; மாற்று வழியில் நெடுஞ்சாலை வழியே கொண்டு போங்க; விளை நிலத்தில் வேண்டாம் என்றுதான் சொல்கிறோம்!" என்றார்!
அதைவிட ஒரு போடு போட்டார் பாருங்கள்; அதற்கு அரங்கில் பதிலே இல்லை... "கண்ணுக்கு தெரியாத ராமர் பாலம் மாற்றுவழியில் கொண்டு போக சொன்ன சுப்ரீம் கோர்ட்... இதயும் மாற்று பாதையில் கொண்டு செல்ல சொல்லலாமே! ஏன் சொல்லல?" என்றார் நெத்தியடியாக!
(இரவு 11-12 மணி... மறு ஒளிபரப்பு பார்த்தபோது, லேசா சொக்கிய தூக்கம் எங்கே போனதென்றே தெரியல; சண்முகம் போட்ட இந்த போட்டில்)
இப்ப தெரியுதா? சுப்ரீம் கோர்ட் யார் கையில் இருக்கிறதென்று! பெ.சண்முகம் கேட்ட கேள்விக்கு நீங்களாவது சொல்லுங்களேன்!
நல்ல விவாதம் பாராட்டுக்கள்! கந்தசாமி, வெற்றிச்செல்வன், சண்முகம் ஆகியோரின் அர்த்தமுள்ள ஆதாரமுள்ள விவாதத்திற்கு, தொழில் ஆலோசகர் வெங்கட்ராமனால் எதிர் கொள்ள முடியாமல் திணறினார்; பாவம்!
----\\\\
கெயில் நிறுவனத்திற்கு "பெயில்"
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரங்களை சீரழிக்கும் மத்திய அரசின் கெயில் நிறுவனத்திற்கு "பெயில்" கொடுத்த உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தும்... இதற்கு ஆதரவு தந்த விவசாயிகள் விரோத மோடி அரசை கண்டித்தும்...
நாளை 03.02.16 அன்று காலை 10.30 மணிக்கு சேலம் புதிய பேருந்து நிலையம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்! விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்பீர்!
----\\\\
வெற்று பேச்சு..!
அதிமுக அரசு விமர்சனங்களுக்குப் பதிலளிக்க வில்லையென்பது ஒருபக்கம் இருந்தாலும், செவி சாய்ப்பதில்லை என்பதுதான் கடந்த 5 ஆண்டு சாதனைகளில் பிரதான ஒன்று!
அதிமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளைத் தவிர வாக்குறுதி தராத டாஸ்மாக் விற்பனையிலும், லஞ்ச-ஊழலிலும், கொடிக்கட்டி பறப்பதில்தான் கண்ணும் கருத்துமாக இருந்து வந்துள்ளது!
அதிமுக அரசு தொடர மக்கள் விருப்பம் என சட்டச்சபையில் முதல்வர் ஜெயலலிதா பேசுவது ஏற்புடையதல்ல என்பதுமல்ல, வெற்று பேச்சும், வெற்றுப்பிதற்றலுமே!
இன்று 23.1.16 PTTV நேர்படபேசு!
----\\\\
தோற்கடித்தே தீர்வார்கள்!
"இடதுசாரிகளும், காங்கிரஸ்கார்களும் சகிப்பின்மையை உருவாக்கு கின்றனர்" (தினமணி: 25.1.16) -மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி உதிரித்த முத்துக்கள்!
இது எப்படி இருக்கு பாருங்க! மிக சமீபத்திய உதாரணம் ஹைராபாத் தலித் மாணவர் ரோகித் தற்கொலையே போதும்! பாஜகவின் மாணவர் அமைப்பான ஏவிவிபி யின் , மத்திய மனிதவள அமைச்சகத்தின் "டார்ச்சர்" தாங்க முடியாமல் தான் தன் உயிரை மாய்த்துள்ளார்! இதற்கு பெயர் என்ன? இதை செய்தது யார்? மோடி ஓடோடி வருந்துவதுபோல் ஆக்ட் கொடுத்துள்ளாரே ஏன்? இதுதான் பாஜக கடைபிடிக்கும் சகிப்பின்மையா?
உமாபாரதியே... சகிப்பின்மைக்கு உலகம் அறிந்த ஒரிரு உதாரணம்... 1992ல் பாபர் மசூதியை இடித்தது! 2002 குஜராத்தில் நடந்த நடவேட்டை! இப்படி ஆயிரமாயிரம் அடுக்கிக் கொண்டே போகலாம்! இதுமாதிரி இடதுசாரிகள் மீது ஒன்று சொல்லுங்கள்?
ஒரிசாவில் பாதிரியார் குடும்பத்தை நரவேட்டை ஆடிய போது, அனைவரும் அடைக்கலமாக வந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமும், தோழர்களின் குடும்பங்களுமே என்பதை வரலாற்று பக்கங்கள் புரட்டினால் இதை சொல்லும்...!
வரலாற்றைப் புரட்டிப் பார்க்காமல் வாய்க்கு வந்த புரட்டல், புருடாக்களை அவிழ்த்து விடுவதை நிறுத்தாமல், பச்சைப்பொய்யையே பரப்புவதுதான் பாசிசம் என்பதோ? அதைதான் பாஜக செய்திட துணிந்து விட்டதோ? செய்யுங்கள்... செய்யுங்கள்...
இட்லர் பாசிசத்தையும், முசோளினி நாசிசத்தையும் தோற்கடித்த உழைப்பாளிகள் உங்களையும் தோற்கடித்தே தீர்வார்கள்!
-----\\\\
பிளீனம் முடிவுகள் விளக்கி...
சிபிஐஎம் சேலம் மாவட்ட இடைக்குழு உறுப்பினர்கள் மற்றும் உப குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று 24.1.16 சேலம் சிறைத்தியாகிகள் நினைவகத்தில் நடைபெற்றது!
இதில்-- 2015 டிசம்பர் 27-31 முடிய கொல்கத்தாவில் நடைபெற்ற சிறப்பு மாநாடு (பிளீனம்) முடிவுகள் விளக்கி, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் பேசினார். மாவட்டச்செயற்குழு உறுப்பினர் ஆர்வெங்கடபதி தலைமை தாங்கினார். மாவட்டக்குழு செயலாளரும், மாநிலக்குழு உறுப்பினருமான பி.தங்கவேலு, மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜோதிலட்சுமி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
----\\\\
"இடதுசாரிகள் (சிபிஎம் சிபிஐ) சாதி பார்ப்பதில்லை"
இன்று 25.1.16 PTTV புதுப்புது அர்த்தங்கள் மார்க்சிஸ்ட் கே.கனகராஜ், சமூக ஆர்வலர் சுமத் சி ராமன், நெறியாளர் ஜென்ராம்... அமித்ஷாக்கு அன்புமணி, விஜய்காந்த் ஆகியோர் வாழ்த்து குறித்தும், தர்மபுரியில் ஜி.ராமகிருஷ்ணனின் "திமுக அதிமுக பெரியாருக்கு பின் ஜாதிய எதிர்ப்பு ஆயுதத்தை ஓட்டு அரசியலுக்காக கீழே போட்டு விட்டன" என்ற பேச்சு குறித்தும் விவாதம் இருந்தது!
சி.ராமன்-- மக்கள் நலக்கூட்டணி நிலைக்காது என்ற "ஆரூடத்திற்கு" அருமையாக பதில் தந்தார் கனகராஜ். அதுபோல் "திமுக அதிமுக மட்டுமா ஜாதியை வைத்து அரசியல் செய்யுது? பெரும்பாலான கட்சிகளும்தான்" என்றதற்கு ... ஜென்ராம் குறுக்கிட்ட பின் "ஆம், திமுக அதிமுக ஜாதிய விவகாரத்தில் நழுவுகின்றன என்றும், அவைகள் முன்கை எடுத்தாலே அந்த விவகாரம் கட்டுப்படுத்தப்படும்" என்றும், கனகராஜ் குறுக்கீடுக்கு பின் "இடதுசாரிகள் (சிபிஎம் சிபிஐ) சாதி பார்ப்பதில்லை" என ஒப்புக்கொண்டார்!
ஸ்டாலின்... நமக்கு நாமே பயணத்தின் போது "விஷ்ணுபிரியா வீட்டுக்கும், கோகுல்ராஜ் வீட்டுக்கும் ஏன் போகவில்லை" என்ற கனகராஜ் கேள்வி நச்! ஜிஆர் பேச்சும், அது விவாதப் பொருளானதும் அதைவிட நச்! காலப்பொருத்தம்! நன்றி PTTV க்கு!
[08:48, 1/25/2016] +91 94865 96641: இது இன்றைய 25.1.16 தினமணியின் மக்கள் கருத்து..! தினமணி யாருக்கு ஆதரவானது.. யாருக்கு எதிரானது.. என்பதற்கு இதைவிட ஒரு மெய்சாட்சி வேண்டுமா? இடதுசாரிகளிலும், காங்கிரசாரும் சகிப்பின்மையை உருவாக்குகிறார்களா நாட்டில்..?
(இது குறித்த என நேற்றைய பதிவு இணைக்கப்பட்டு உள்ளது). ஆக தினமணியும், அதன் வாசக பெருமக்களும் யார் என்ற முகவிலாசம் இதன்மூலம் கிழிந்து விட்டது அல்லவா?
----\\\
பச்சைப்பொய்யையே பரப்புவதுதான் பாசிசம்!
"இடதுசாரிகளும், காங்கிரஸ்கார்களும் சகிப்பின்மையை உருவாக்கு கின்றனர்" (தினமணி: 25.1.16) -மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி உதிரித்த முத்துக்கள்!
இது எப்படி இருக்கு பாருங்க! மிக சமீபத்திய உதாரணம் ஹைராபாத் தலித் மாணவர் ரோகித் தற்கொலையே போதும்! பாஜகவின் மாணவர் அமைப்பான ஏவிவிபி யின் , மத்திய மனிதவள அமைச்சகத்தின் "டார்ச்சர்" தாங்க முடியாமல் தான் தன் உயிரை மாய்த்துள்ளார்! இதற்கு பெயர் என்ன? இதை செய்தது யார்? மோடி ஓடோடி வருந்துவதுபோல் ஆக்ட் கொடுத்துள்ளாரே ஏன்? இதுதான் பாஜக கடைபிடிக்கும் சகிப்பின்மையா?
உமாபாரதியே... சகிப்பின்மைக்கு உலகம் அறிந்த ஒரிரு உதாரணம்... 1992ல் பாபர் மசூதியை இடித்தது! 2002 குஜராத்தில் நடந்த நடவேட்டை! இப்படி ஆயிரமாயிரம் அடுக்கிக் கொண்டே போகலாம்! இதுமாதிரி இடதுசாரிகள் மீது ஒன்று சொல்லுங்கள்?
ஒரிசாவில் பாதிரியார் குடும்பத்தை நரவேட்டை ஆடிய போது, அனைவரும் அடைக்கலமாக வந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமும், தோழர்களின் குடும்பங்களுமே என்பதை வரலாற்று பக்கங்கள் புரட்டினால் இதை சொல்லும்...!
வரலாற்றைப் புரட்டிப் பார்க்காமல் வாய்க்கு வந்த புரட்டல், புருடாக்களை அவிழ்த்து விடுவதை நிறுத்தாமல், பச்சைப்பொய்யையே பரப்புவதுதான் பாசிசம் என்பதோ? அதைதான் பாஜக செய்திட துணிந்து விட்டதோ? செய்யுங்கள்... செய்யுங்கள்...
இட்லர் பாசிசத்தையும், முசோளினி நாசிசத்தையும் தோற்கடித்த உழைப்பாளிகள் உங்களையும் தோற்கடித்தே தீர்வார்கள்!)
----\\\\
Dyfi Aidwa சார்பில் நடந்த முற்றுகை!
சேலம் அஸ்தம்பட்டி டாஸ்மாக் கடை 7220 ஐ வேறு இடத்திற்கு மாற்றக் கோரி 17.1.16 அன்று Dyfi Aidwa சார்பில் நடந்த முற்றுகை போராட்டத்தின் போது, காவல் துறையின் காட்டுமிராண்டித் தனத்தைக் கண்டித்து... இன்று 25.1.16 சேலம் கலெக்டர் அலுவலகம் முன் ஆவேச ஆர்ப்பாட்டம்!
அமைப்பின் மாநிலத்தலைவர்கள் வாலண்டினா, செந்தில் கண்டன உரை! அய்நூறுக்கும் மேற்பட்டோர் "வேகாத வெயிலில்" ஆட்சியாளர்களின் டாஸ்மாக் கொள்கைகளை "வேகவைக்கும்" ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு!
----\\\
கல்வியும், வேலையும் அரசு மயமாவதே..!
🙈🙉🙊
மலர்களே...
ஏன் இப்படி மடிகிறீர்கள்... உயிரை மாய்க்கிறீர்கள்..? பெற்றோரின் போதாமையா..?
இந்த ஆட்சியாளர்களின் கையாளாகாதத் தனமா? கல்வியை கடைச்சரக்காக்கிய, ஆக்கிக் கொண்டிருக்கும் ஆள்வோரின் கொள்கையே..!
அதை எதிர்த்து போரிடாமல்,
ஆயுளை இழக்கலாமா?
மலர்களே...
மன்னிக்கவும்...
நீங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளவில்லை... உங்களின் உயிரை...
இந்த சுரண்டல் அமைப்பு குடித்திருக்கிறது...
அதற்கு குடை பிடித்திருக்கிறது...
குடைப் பிடிக்கிறது... "கொலைகார" அரசுகள்!இதற்கு ஒரே தீர்வு கல்வியும், வேலையும் அரசு மயமாவதே..!
ஆம்,
தனியார்மயத்தை ஒழிப்பதே!
அதுதான் இந்திய இடதுசாரிகளின் லட்சியம்!உங்களுக்கெங்கள் வீரவணக்கம்!
-----\\\\\
தனியார் மோகம் தலைவிரித்தாடுவதே!
சித்த மாணவிகள் துயர மரணம்... பொறுப்பேற்க வேண்டியது அரசுதான்! அதன் கல்வியை தனியார் மயமாக்கிய அரசின் கொள்கைகள்தான் இதற்கு காரணம்!
அன்று ஒரு கும்பகோணம் ... மழலைகள் தீவிபத்தில் மடிந்தனர்; இன்று இந்த இளம் மாணவிகள் மடிந்தது!
மாட்டுக் கொட்டாய்களுக்கெல்லாம் கல்விக்கூடம் நடத்திட, எந்த சட்டத்தையும் பின்பற்றாதவர்களுக்கு அரசு அனுமதி தந்ததே இந்த துயரத்திற்கு காரணம்!
தனியார் நிறுவனத்தின் தரத்தை சிறிதும் பொருட்படுத்தால், பிள்ளைகளை கொண்டு சென்று இந்த "லக்கான் கோழிப்பண்ணை"யில் சேர்க்கும் பெற்றோர்களும் பொறுப்பாளர்களே!
தனியார் மோகம் தலைவிரித்தாடுவதே இந்த துயர மரணத்திற்கு காரணம் என்றால் மிகையன்று!
இன்று 25.1.16 PTTV நேர்படபேசு! இதன் ஒருபகுதி பதிவேற்றமாகி உள்ளது!
----\\\\
"மோடியின் மோசடியிசம்!"
🙇🙇🙇
"திறன்மிகு விவசாயி, வளமான இந்தியா" -இது இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு மோடி அரசின் அச்சு ஊடக விளம்பரம்!
இதை படித்ததும் மனதில் தோன்றியது என்ன தெரியுமா? "ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு விவசாயி இந்திய குடியரசில் தற்கொலை செய்து கொள்கிறார்; இதை தடுக்க துப்பில்லாத அரசின் கொள்கை (காங்கிரஸ்க்கும் பொருந்தும்) யை மாற்றிட வழியேதும் சொல்லாமல்... சாத்தான் வேதம் ஓதுவது போல் திறன்மிகு விவசாயி... என்பது எங்கே எப்படி சாத்தியம்? என்று!
நில கையகச் சட்டத்தைக் கொண்டு வந்து விவசாயிகளை வீதியில் தள்ள எத்தனித்த இந்த மோடி வித்தைகளில் இந்த விளம்பரம் தான் சூப்பர்! இருக்கும் நிலத்தை பிடுங்கி பன்னாட்டு முதலாளிகளுக்குக் கொடுப்பதைத்தான் "வளமான இந்தியா" என வாய் கூசாமல் பேசுவதுதான் பாசிசம்! அதை மோடியின் மோசடியிசம் என்றுகூட சொல்லலாம்!
----\\\\\
"பாவம்... பதவிசுகம்!"
🙏🙏🙏
"குண்டு மழைக்கு மத்தியில் அமைதிப் பேச்சு சாத்தியமில்லை"
-இது நமது குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் இன்றைய 26.01.2016 உரையின் தினமணி தலைப்பு!
இது எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கிறது எனக்கு!
உங்களுக்கு..!?
பாவம்...
பதவிசுகம் பாரம்பரியத்தை பகடையாக்கி விட்டதுபோலும்!
அய்யோ...
பிரணாப்..!
சாட்சாத்...
இது பாஜக வின் குருகுலமான ஆர்எஸ்எஸ் பேசிவரும் இந்துத்துவாவிற்கு தோதான பேச்சே!
----\\\
5 லட்சம் பேர் சூளுரை!
👊👊👊
மக்கள் நலக் கூட்டணி ... மாற்று அரசியல் மாநாடு.. மதுரையில் 5 லட்சம் பேர் சங்கமம்! வரும் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி ஆட்சியைப் பிடிப்போம் என சூளுரை!
வரலாறு காண மக்களை மதுரை கண்ணார கண்டது இன்று 26.1.16இல் 67 வது குடியரசு தினத்தில்... மீண்டும் தமிழகத்தில் 1967 ஆண்டு போல் பேரெழுச்சி! வரலாறு மீண்டும் திரும்புகிறது...
விளிம்புநிலை மக்கள் கையில் ஆட்சி அதிகாரம் கைமாறப் போகிறது என்பதற்கான அச்சாரம் அமைத்த மாநாடாக மதுரை மாநாடு..!
----\\\\
"மக்கள் நலக் கூட்டணி செய்யும்; செய்து காட்டும்!"
🙌👊🙏
இன்று 27.1.16 PTTV நேர்படபேசு காலை 9 மணிக்கு பார்த்தேன். அதுவும் காலை 7 மணிக்கு பார்த்த ஒரு தோழர் பதறிபோய் எனக்கு போன் செய்தார்! நானும் பார்த்தேன்; அவர் பதறிய அளவுக்கு ஒன்றும்இல்லை!
நியாயமான ஒரு விமர்சனத்தை ஏற்கத்தான் வேண்டும்! அதில் கலந்துக்கொண்ட பானுகோம்ஸ் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து பேசினார்! மூத்த பத்திரிக்கையாளர் மணி... இடதுசாரிகளை அப்படி பார்க்க முடியாதென்றும், பெண் தலைவராக இருந்துவிட்டால் மட்டும் "சமம்" வந்து விடாது, சட்ட ரீதியாக இதற்கு தீர்வு காண வேண்டும்; அதுவரை கட்சிகள் பொறுப்புகளில் உரிய பங்களிப்பு தரவேண்டும் என்றார். அது உண்மையே!
இதிலே 2 விசியம்...
1. மக்கள் நலக் கூட்டணியில்... நேற்று நடந்த அந்த பொதுநாட்டில் பெண்ணை முன் நிறுத்தாதது குறையே! ஆனால், அதற்காக அது திட்டமிட்டு பெண்ணை முன் நிறுத்தக்கூடாது என்ற ஆணீய சிந்தனையில் இருந்து அல்ல! அப்படியென்றால்... அந்த நிகழ்ச்சியை ஆரம்பம் முதல் பார்த்தவர்களுக்குத் தெரியும்; கூட்டம் துவங்குமுன் அந்த லட்சோப லட்ச மக்கள் மத்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில நிர்வாகிகளில் ஒருவருமான மதுரை தோழர் பொன்னுதாயி பேசினார்; பேச்சாளராக அல்ல (இவர் நல்ல பேச்சாளர்; அது வேறு விசியம்; சிபிஎம் ஏராளம் தோழர்கள் உள்ளனர்!) "பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் இருக்கைகளை காலி செய்து தரவேண்டும்" என உள்ளிட்டு சில அறிவிப்புகளை செய்தார்!
(இதிலே இன்றொன்றும் நடந்தது; பேச்சாளர் அறிவிப்பில், விளம்பரத்தில் தோழர் நல்லகண்ணு இல்லை; இருந்தாலும் அவர் மேடையில் இருந்ததால், சமயோசிதமாக வைகோ அவரை பேச அழைத்தார்! இப்படிதான் பெண் பேச்சாளர் விடுப்பட்டிருக்க கூடும்!)
2.மக்கள் நலக் கூட்டணி குறைந்தபட்ச செயல்திட்டம் 21இல் தேர்தல் சீர்திருத்தம் தலைப்பில், "பெண்களுக்கு நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்றங்களில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு நிறேவேற்ற போராடுவோம்!" என வாக்குறுதியை தந்துள்ளதை சுட்டிட விரும்புகிறோம். மணி சொன்ன கள யதார்த்தம் இதுதான்; போராடும் சூழலில்தான் நாடு உள்ளது! வளரும் கட்சிகள் நிலை தற்போது இதுதான்!
அடுத்து சிபிஎம் கட்சி உறுப்பினர்களில் பெண் தற்போது சராசரி 15.6% எனவும், அதை 2018 குள் 25% மாக உயர்த்த வேண்டும் எனவும் (டெல்லி 26.4%; திரிபுரா 24.6%; கர்னாடகா 24.4%; அசாம் 20.2%; ஆந்திரா 19.6% தற்போது இருப்பதாகவும்) சென்ற 27-31 டிசம்பர் 2015 இல் கொல்கத்தாவில் நடத்த சிறப்பு மாநாடு (பிளீனம்) அறிக்கை கூறியுள்ளது. இதுதான் மணி சொன்ன மாதிரியான கள நிலமை!
ஆகவே பானுகோம்ஸ் போன்ற "பெண்ணீய போராளிகள்" தைரியமாக மக்கள் நலக் கூட்டணியை ஆதரிக்கலாம்! சிபிஎம் என்றுமே பெண்களுக்கு உரிய பங்களிப்பில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறது! ஒரு பக்கம் யெச்சூரி பேச்சையும் குறிப்பிடுகிறீர்; இன்னொரு பக்கம் இந்த கூட்டணியை விரிவுப்படுத்தணும் என்கிறீர்; என்ன செய்வது? தமிழக அரசியல் கட்சிகளின் ஊசலாட்டமான இந்த சூழலில்..!? அவ்வளவு ஏன்? இப்பொழுதும் மணி என்ன வாதிடுகிறார்... "வரவேற்கிறேன்; ஆனால், மக்கள் நலக் கூட்டணி நிலைக்குமா?" என்று! இந்த சந்தேகம் தீர, ஒரே வழி... அதிமுக, திமுக என்கிற பிரதான கட்சிகளை வீழ்த்துவதில் அது அடங்கி இருக்கிறது! நிச்சயம் அதை மக்கள் நலக் கூட்டணி செய்யும்; செய்து காட்டும்!
----\\\
பாவம் தமிழன்!
"சுய நலம் கருதாவிட்டால் புகழ் வரும்!" யார் இப்படி சொல்லி இருப்பார்?
ஆம், சாதாரண விவசாயி குடும்பத்தில் பிறந்து, தற்போது ஆசியா கண்டத்தில் முதல் பத்தாவது "சாதாரண ஏழை" குடும்ப பட்டியலில் (முதல் 10 பணக்காரர் பட்டியலில்) இருக்கும் தற்போதும் ரேசன் அரிசி வாங்கி சமைத்து சாப்பிடும் ஏழை பங்காளன் கருணாநிதி தான் இவ்வாறு நேற்று 26.1.16 குடியரசு தினத்தில், மாணவர்கள் மத்தியில் திருவாரூரில் பேசி உள்ளார்!
நம்புங்கள் கேழ்வரகில் நெய் வடிகிறதாம்! இவர் பேரும், புகழும் பெற்றது சுயநலமின்றி பொதுநலன் பேணியதாம்! பாவம் தமிழன்!
----\\\\
பாவம் "தமிழினம்!"
🙈🙉🙊
பகுத்தறிவு பகலவனின் பகுத்தறிவு பிரச்சாரத்தைப் பார்த்தீர்களா? மஞ்சள் துண்டின் மகிமை இப்பொழுது புரிகிறதா? இவர் சொல்கிறார்... "பெரியாரும் அண்ணாவும் பிறக்காமல் இருந்திருந்தால், சங்கரய்யா நல்லக்கண்ணு நடுவில் இருந்திருப்பேன்" என்று! நல்லவேளை தப்பித்தவர்கள் சங்கரய்யாவும், நல்லக்கண்ணும் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் கட்சிகளும்தான்! பாவம் தமிழினம்!
-----\\\\
ஊழல் சொத்துக்கள் பறிமுதல் சாத்தியமே! அதற்கு அரசியல் "தில்" வேண்டும்; அது மக்கள் நலக் கூட்டணியில் நிரம்பி இருக்கிறது; ஆகவே மக்கள் சக்தியால் அதிமுக, திமுக வை வீழ்த்துவோம் என்று மக்கள் நலக் கூட்டணி சொல்வது நிச்சயம் சாத்தியம்; எள்ளளவும் அது மிகையல்ல! சந்தேகம் வேண்டாம்!
கூட்டணி ஆட்சி நடத்திய அனுபவம் இடதுசாரிகளுக்கு நிறைவே இருக்கிறது; மேற்கு வங்கம், கேரளம் போன்ற மாநிலங்களில்! ஆகவே ஊழலை ஒழிக்கவும், ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வது எப்படி என்பதையும் இடதுசாரிகள் நன்கு அறிவார்கள்!
மக்கள் நலக் கூட்டணி... "ஊழலை ஒழித்துவிடும்; மது அரக்கனை அழித்துவிடும்" என்ற அச்சத்தினால் தான், இவற்றில் ஊறித் திளைக்கும் அதிமுக, திமுக போன்ற கட்சிகள் இக்கூட்டணியை பார்த்து அலறுகின்றன! பயப்படுகின்றன!
அதிமுக, திமுக, பாமக, காங்கிரஸ், பாஜக... நாட்டின் ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் ஊழல் வழக்கில் நடையாய் நடந்து கொண்டிருப்பவைகளே! அப்படி மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் எதுவும் கிடையாது!
தமிழக மக்களுக்கு... மக்கள் நலக்கூட்டணி மீது நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது என்பதற்கான அச்சாரமே மதுரையில் நடைபெற்ற பொதுவெளிமாநாடும், அதில் தானாக திரண்டு வந்து பங்கேற்ற 5 லட்சம் மக்களும்! ஆகவே தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி; அதை தமிழ்நாடு பார்க்கத்தான் போகிறது!
இன்று 27.1.16 PTTV நேர்படபேசு!
-----\\\\
"வெற்றியின் அறிகுறி!"
இன்று 27.1.16 நம்மூர் தொலைக்காட்சிகளில் அனேகமாகஎல்லாவற்றிலும், நேற்று நடந்த மதுரை மக்கள் நலக் கூட்டணி மாநாடு பற்றிய விவாதமாக இருந்தது; இது, இந்த அணியின் வெற்றியின் அறிகுறியாக தோன்றுகிறது!
தந்தி டிவி யில் இரவு 8 முதல் 9.30 மணி வரையில்... மக்கள் நலக் கூட்டணி "கார்மேகமா? கானல் நீரா?" என்ற தலைப்பில் விவாதம் இருந்தது! புதிய தலைமுறை டிவியில் "ஊழல்வாதிகளின் சொத்துக்கள் பறிமுதல் சாத்தியமா? மிகையா" என விவாதம் இரவு 9-10 மணி துளிகளில் நடந்தது. நியூஸ் 7 தொலைக்காட்சி இரவு 9-10 மணி துளிகளில் "மாநாடுகளில் கூடுவோர் ஓட்டுகளாக மாறுமா?" என விவாதம் இருந்தது!
எல்லா விவாதங்களிலும் திமுக வினர், மக்கள் நலக் கூட்டணி யினர் இருந்தனர். அனைத்திலும் திமுக சொன்னது "இது அதிமுக வின் பி ட்டீம்" என்று மக்கள் நலக் கூட்டணியின் மீது ஆதாரமற்ற அவதூறையே சொல்லி வைத்தார் போல் "கோரஸ்" பாடினர்! இது இனி இந்த தேர்தல் முடியும் வரை நீடிக்கும்! மேலும் எரிச்சலின் உச்சியில் இருந்தனர்; அதோடு இந்த கூட்டணி நீடிக்காது என தங்களுக்கு தாங்களே ஆறுதல் தெரிவித்துக் கொண்டனர்.
சிபிஐ சிபிஎம் இடையே ஒற்றுமை இல்லை எனவும் கூறிக்கொண்டனர்! (கருணாநிதி மீது கொண்டு வந்த தீர்மாணத்தில் இவ்விரு கட்சிகளும் வேறு வேறு நிலை எடுத்ததாக கூறினர்) இந்த மாதிரி அற்பசொற்பவிசியங்களைக் கூறி திமுக இன்பம் காண்பது அது அவர்களின் ஆசையில் குறுக்கிட நாம் யார்? மனப்பால் நன்றாக குடியுங்கள்!
"ஊழல்வாதிகளின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்..!" இது அதிமுக, திமுக, பாமக வை இனிதூங்கவிடப்போவதில்லை... மக்கள் நலக் கூட்டணியின் இந்த கொள்கை பிரகடனமும், உறுதியான, இறுதியான நேற்றைய மாநாடு முடிவும் என்பது மட்டும் இன்றைய விவாதங்களில் இருந்து தெரிந்தது!
நேற்று 27.1.16 news 7கேள்வி நேரம்...
----\\\\
திமுக பிரமுகர் சரவணனிடம் நெறியாளர் செந்தில், "மக்கள் நலக் கூட்டணியை அதிமுகவின் B Team என்கிறீர்களே... பாமகவும் திமுகவை எதிர்க்கிறதே அதை ஏன் அப்படி சொல்வதில்லை?" என்றார். ஒரு கோடி "கொலக்கட்டையை" வாயில் வைத்திருப்பவரைப்போல், வக்கில் சரவணன் வாயடைத்துப்போனார். அதேபோல் தந்தி டிவி யில் பாஜக ராகவன், "திமுக வை ஆட்சியில் அமர்த்துவதற்காக மற்ற கட்சிகள் இருக்கு?" என்றார். இதற்கும் திமுக வக்கில் ஜெயராஜ் வாயில் "கொலக்கட்டை"த்தான் இருந்தது! அய்யோ... அய்யோ...!
----\\\\
உள் கட்சி ஜனநாயகம்..!
அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, பாமக உள்ளிட்டு முதலாளிகள், நிரப்பிரபுகளுக்கு ஆதரவான கட்சிகளில் உள் கட்சி ஜனநாயகம் இல்லை என்பது உண்மையே! உள் நோக்கம் எதும் இருப்பதாக கூற முடியாது!
எல்லாமே நியமனமயம்! இந்த வகையில் பழ.கருப்பைய்யா சொன்னது உண்மையே! ஆனால், சிபிஎம், சிபிஐ உள்ளிட்டு இடதுசாரி கட்சிகளில் உள்கட்சி ஜனநாயகம் இருக்கிறது என்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது!
அதிமுக, திமுக உள்ளிட்டு முதலாளித்துவ கட்சிகளின் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கூட்டு கொள்ளை என்பது உண்மையே! ஆதாரம் இருக்கும் இல்லாமலும் இருக்கும்; ஆனால் அது அசைக்க முடியாத உண்மை; நம்பக்கூடியதே!
ஆனால் இதற்கு சிபிஎம், சிபிஐ, சிறுத்தை கட்சி, மதிமுக உள்ளிட்டு மக்கள் நலக் கூட்டணி கட்சி சார்ந்தவர்கள் இதற்கு விதிவிலக்கு!
இன்று 28.1.16 PTTV நேர்படபேசு! இதன் பகுதி பதிவேற்றம் ஆகியுள்ளது!
-----\\\\
மக்கள் நலக் கூட்டணியின் வீச்சு மக்கள் மத்தியில் போய் கொண்டிருந்ததை தற்காலிக மடைமாற்றத்திற்காக, ஜெயலலிதா பழ.கருப்பய்யாவை தற்போதைக்கு களப்பலி தந்துள்ளதாக தோன்றுகிறதே! சரியா? இந்த மாதிரியான நரித்தந்திரம் மிக்கவையே அதிமுகவும், திமுகவும் என்றால் மிகையா? சரியா?
---\\\
RAC கன்ஃபான்மா? மாஃபா..!
"அஇஅதிமுக ஜனநாயகம் நிறைந்த கட்சி; அதை இரும்புக்கோட்டையாக அம்மா அதை வைத்து உள்ளார்!" - மாஃபா பாண்டியன்.
இரும்புக் கோட்டையும், ஜனநாயகமும் ஒன்றா? இரும்புக் கோட்டைக்குள் எப்படி அய்யா ஜனநாயகம் இருக்க முடியும்? பாண்டியரே..!
"ஜனநாயகம் எங்கே?" என்று மதுரையை எரித்த அந்த பெண்மணி எங்கே? இரும்புக் கோட்டைக்குள் ஜனநாயகம் இருப்பதாக வாதிடும் பாண்டியரே... இந்த பெண்மணி எங்கே..?
கண்ணகியாக குரல் எழுப்பிய கருப்பையா எங்கே? பாண்டியனாக இருக்கும் ஜெயலலிதா எங்கே? மாஃபா பாண்டியரே! "பாண்டியன்" என்ற பெயரை தாங்கி இருப்பதாலேயே சர்வாதிகாரம் தங்களுக்கு ஜனநாயகமாக தெரிகிறதோ?
(இன்று 29.1.16 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியை ஒட்டி எழுந்த
ஜனநாயகம் குறித்த சந்தேகம்! இன்னொரு சந்தேகம் பாண்டியரே... தங்களின் RAC கன்ஃபான் ஆகி விட்டதா மாஃபா?)
----\\\
"எதிரிகளுக்கு இடம் தரலாமா?"
🙇👊🙏
விடுதலை சிறுத்தை கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார்-- "திருமாவளவனை மக்கள் நலக் கூட்டணியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்" என்றது விவாதத்திற்கு வந்தது இன்று PTTV 30.1.16 புதுப்புது அர்த்தங்களில்...
அதற்கு ஆளூர் ஷாநவாஸ், எங்கள் பொதுச்செயலாளர் "இன்று நேற்று சொல்லவில்லை, அவர் நீண்ட காலமாக சொல்லி வருகிறார்" என்று சமாளித்தார்! அதற்கு ஜென்ராம் சொன்னது-- "இது வேறு எதாவது ஆப்ஷனுக்காதாக இருந்து விடுமோ?" என்றது அர்த்தமிக்கதே! மதுரை மாநாட்டில் திருமா சொன்ன பாம்பு கதைக்கு வருத்தம் தெரிவித்தோடு யாராவது இணைத்தால்... அது..?! என்ன செய்வது?
"பெண் முதல்வரானால் பெண்கள் பிரச்சனை தீர்ந்துவிடும்; தலித் முதல்வரானால் தலித் பிரச்சனை தீர்ந்துவிடும் என்றெல்லாம் சொல்லும் வாதம் சரியாகுமா?" என்றும் விவாதத்தை நீட்டிய, நெறியாளர்-- "எங்களிடத்தில் இல்லாதது பணம்தான்" என்று ஷாநவாஸ் சொன்னதும், "அதுக்குத்தான் ஆட்சிக்கு வரணும் என்றீர்களா?" என்கிற அர்த்தத்தில் குறுக்கிட்டது நெருடலாக இருந்தாலும்-- அதற்கு ஷாநவாஸ் பதிலளிக்காததும் நெருடலே!
எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் அவரவர் அணிகளை எழுச்சிப்படுத்த கூறுவதுதான் இதெல்லாம் என்று சொன்னாலும், மென்மையாக கடந்து சென்றுவிட்டார்; வேறு யாராகவோ இருந்திருந்தால், குறிப்பாக திமுக அங்கிருந்தால் "பாத்தாய்யா" பராசக்தி வசனம் பேசியிருப்பார்கள்! எனவே மக்கள் நலக் கூட்டணியினர் உள்ளே பேசுவதை உள்ளேயும், வெளியே பேசுவதை வெளியேயும் பேசுவதுதான் எதிரிகளுக்கு "இடம்" தராமல் இருக்கும் அல்லவா?
----\\\\
வைகோ வை வரவேற்பு..!
இன்று 30.01.16 சேலம் வருகை தந்த மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ அவர்களை வரவேற்று...
சிபிஎம் மற்றும் சிபிஐ சார்பில்.... சேலம் சிபிஎம் மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு,
சேலம் சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் முனுசாமி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.சேதுமாதவன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் என்.பிரவீன்குமார், சேலம் வடக்கு மாநகரச் செயலாளர் எம். முருகேசன் மற்றும் சிபிஐ, சிபிஎம் தோழர்கள்...
----\\\\
"அம்மா ஸ்டிக்கர்"
பழ.கருப்பைய்யா வீட்டில் கல்வீச்சு தாக்குதல் நடத்தியவர்கள் வாகணங்களில் "அம்மா ஸ்டிக்கர்" ஒட்டப்பட்டு இருந்ததாக, அவரே சொல்கிறார்! அதை கருணாநிதி அய்யா கண்டிக்கிறார்! இதுதான் தமிழகத்தின் சாபக்கேடு!
திமுக ஆட்சியில் அழகிரி எதிராக கருத்து கணிப்பு வெளியிட்ட மதுரை தினகரன் அலுவலகதை எரித்து சாம்பல் ஆக்கிவிட்டு, அந்த சாம்பலில் மூன்று மனித உயிர் சாம்பலையும் கலக்க வைத்தவர் இப்போது கண்டன முழங்குவதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை!
அன்றைய அம்மாவுக்காக கோவை கல்லூரி இளம் மாணவிகளை பேருந்தோடு கொளுத்திய வர்கள் தானே அம்மாவின் விசுவாசிகள்! இவர்கள் ஆட்சியில் தேர்தல் நெருங்குவதால் தற்போது கல்வீச்சோடு போய் இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது; இல்லையென்றால் அனேகமாக இந்நேரம் கருப்பையா கருகிய அய்யா ஆகி இருப்பார்!
திமுகவும், அதிமுகவும் தமிழகத்தை மிருகங்கள் வாழும் காடாகி வைத்திருப்பதுதான் இவர்களின் அரை நூற்றாண்டு சாதனை! இதற்கு முடிவு கட்டி மனிதர்கள் வாழும் நாடாக தமிழகத்தை மாற்ற வேண்டுமானால், அதற்கு ஒரே ஒரு தீர்வு... வரும் தேர்தலில், "மக்கள் நலக் கூட்டணி"யை ஆட்சியில் அமர்த்துவதுதான்! இல்லையென்றால் மீண்டும் அதிமுக, திமுக ஆட்சி தப்பித்தவறி வந்துவிட்டால், தமிழகம் "மகா பெரும் மிருகங்கள்" வாழும் காடாகிவிடும்!
30.01.16 PTTV நேர்பட பேசு..!
----\\\\
மாற்று கருத்துக்கு மதிப்பு..!
அதிமுக திமுக க்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அதிகாரத்தை தமிழகத்தில் கைப்பற்றும்போதுதான் மாற்று கருத்துக்கு மதிப்பளிக்கப்படும்;
அதுவரை மாற்று கருத்துக்கு கருப்பையாவுக்கும், மதுரை தினகரன் அலுவலக ஊழியர்களுக்கும், கோவை கல்லூரி மாணவிகளுக்கு நேர்ந்த (பேருந்தோடு கொளுத்தப்பட்ட) கொடுமைகளும் தான் அரங்கேறும்!
30.01.16 News 7 ?கேள்வி நேரம்..!
----\\\\
"மாற்று அரசியல் பொதுக்கூட்டம்"
மதிமுக சார்பில் 30.1.16 இல் சேலத்தில் "மாற்று அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம்" நடைபெற்றது!
மாநகர மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார்; கிழக்கு மாவட்ட செயலளார் கோபால்ராஜ் வரவேற்றார்; மேற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரவர்மா நன்றி கூறினர்!
மக்கள் நலக் கூட்டணி கட்சிகளான சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.தங்கவேலு; சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் முனுசாமி; விடுதலை சிறுத்தை கட்சி முன்னாள் புறநகர மாவட்ட செயலாளர் நாவரசு பேசினர்!
இறுதியாக மதிமுக பொதுச்செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ எழுச்சி உரையாற்றினார்! பல்லாயிரவர் பங்கேற்றனர்!
----\\\\
"வைகோ வாழும் ஒரு எளிய மனிதர்!"
🙆🙆🙆
நேற்று 30.1.16 சேலம் வைகோ நிறைவுரை ஆற்றிய மதிமுக மேடையில் ஒரு காட்சி... பொதுக்கூட்டம் துவங்கும் முன் மேச்சேரி சாத்தாப்பாடி கிராமிய கலைக்குழுவினரின் சாகச நிகழ்ச்சிகளைக் கண்ணுற்ற வைகோ அவர்கள்-- அவர்களை பாராட்டி கௌரவித்தார் அனைவரும் 'சால்வை' அணிவித்து..! அப்பொழுது கலைக்குழுத் தோழர்கள் இளைஞர்கள் வைகோ காலைத் தொட்டு வணங்கிட கீழே குழுவாக குனிந்தனர்; "அய்யய்யோ" என்று அலரி அடித்து, பின்னாடி ஓடி விட்டார்; இந்த "காலில் விழும் கலாச்சாரம் எனக்கு பிடிக்காத ஒன்று" என்று அன்பாக கடிந்தும் கொண்டார்!
உண்மையிலேயே என் உள்ளம் சிலிர்த்து போனது! இன்னொரு காட்சி... விசிக சார்பில் பெண் தோழர் ஒருவர் வைகோ அவர்களை வரவேற்று சால்வை அணிவித்தார்; அப்போது அனுசரித்த இடைவெளி அலாதியாக இருந்தது! இன்னொரு சம்பவம்... காலை நானும், சிபிஎம்-சிபிஐ தோழர்களும் அவர் தங்கி இருந்த இடத்தில் சென்று சந்தித்தோம்! அவரின் உபசரிப்பு, எங்களுடன் அளவிலாவியது மெய் சிலிர்க்க வைத்துவிட்டது.
இது இவருடனான 2வது சந்திப்பு! காந்தியவாதி சசிபெருமாள் இரங்கல் நிகழ்வுபோது-- மாநிலச் செயலாளர் தோழர் ஜிஆர் அவர்களுடன் சந்தித்தேன்; "அன்று நம் மாநில செயலாளருடன் சந்தித்தோம்; இன்று நம்மை எப்படி பாவிப்பாரோ..?" என்ற அச்ச உணர்வோடுதான் சென்றேன்; ஆனால், அவரின் உபசரிப்பு பாங்கு என்னை என்னுள் வெட்கி தலைகுணிய வைத்துவிட்டது போங்கள்!
----\\\\
சிபிஐஎம் கொல்கத்தா பிளீனம் (27-31 டிச2015) முடிவுகள் விளக்க மண்டல பேரவை இன்று 31.01.2016 சேலத்தில் சேலம் சிறை நினைவகத்தில் (சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில்) நடைபெற்றது .
முதல் அமர்வு-- தலைமை: ஏ.ரங்கசாமி நாமக்கல் மாவட்டச்செயலாளர்; விளக்க உரை: பி.சம்பத் மத்தியக்குழு; இரண்டாம் அமர்வு-- தலைமை: கே.ஜோதிலட்சுமி மாநிலக்குழு;
விளக்க உரை: எம்என்எஸ்.வெங்கட்ராமன் மாநிலச்செயற்குழு... நிகழ்வை--
சேலம் மாவட்டக்குழு செயலாளரும், மாநிலக்குழு உறுப்பினருமான பி.தங்கவேலு துவக்கி வைத்தார்.
இதில் மாநிலக்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து மற்றும் கரூர் மாவட்டசெயலாளர் கே.கந்தசாமி, கிருஷ்ணகிரி மாவட்டச்செயலாளர் ஜி.சேகர்; தர்மபுரி மாவட்டச்செயலாளர் ஏ.குமார், அரூர் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு உள்ளிட்டு கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்
----\\\\
"அம்பலப்படுத்தினால், ஆத்திரம்..!"
😎😎😎
அது என்னவோ தெரியலிங்க... மனுஷ்புத்திரன் உள்ளிட்டு, திமுக காரங்க வரும் விவாதம் கூச்சல் குழப்பத்தில் முடியுதுங்க! திமுகவின் தலைமை முடிவோ? ஆத்திரக் காரனுக்கு புத்திமட்டு என்பார்கள் எங்கள் பகுதியில்..! இதுதான் இதுவோ?
இன்று எவ்வளவு நாகரிகமாக PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில்... திமுகவின் நல்ல சில நடவடிக்கைகளை ஆதரித்து அ.குமரேசன் பேசினார்; (அதில்கூட நெறியாளர் ஜென்ராம் குறிக்கிட்டார் சரியாகவே!) அந்த பாங்கு மனுஷ் யிடம் இல்லையே! இடதுசாரிகளின் நல்ல பங்களிப்பு ஒன்று கூட இல்லையா? சொல்வதற்கு!
இன்று தமிழகத்தின் பெருமைக்கு திமுக (மற்றும் அதிமுக) காரணம் என்றால், சிறுமைக்கு (ஊழல், மது அரக்கன், வளங்கள் கொள்ளை, தீண்டாமை கொடுமை, கல்வி கொள்ளை, வேலை இல்லாமை.... போன்றவை) இவர்கள் காரணம் இல்லையா? அதை கேட்டால், நேராக மேற்கு வங்கத்திற்கும், கேரளாவிற்கும் சென்று விடுகிறார்கள்; சீறுகிறார்கள்! இதிலே திமுக வேகம் வெட்கம்! அதுதான் இன்றும் நடந்தது!
மேற்கு வங்கத்தில்... கேரளத்தில் இருந்து வந்து, தமிழகத்தில் பேசவில்லை; தமிழகத்தில் உள்ள கம்யூனிஸ்ட்கள் தமிழகம் வளர்ச்சி, வீழ்ச்சி பற்றி பேசுகிறார்கள் என்பதை அன்போடு சுட்டுவோம்! மேற்கு வங்கம், கேரளம் இடதுசாரிகள் ஆட்சியை விமர்ச்சிக்கும் திமுக, அதிமுக கட்சி அடலேறுகளுக்கு அன்பு வேண்டுகோள்... உங்களின் அந்தந்த மாநில உங்கள் கட்சிக்காரர்களை அந்தந்த மாநில விவாதங்களில் கலந்துக் கொண்டு பேச சொல்லுங்கள்; அவர்கள் "திருப்தியான" பதிலை தருவார்கள்! தமிழ்நாட்டை சீரழித்த உங்களை (திமுக, அதிமுக) அம்பலப்படுத்தினால், ஆத்திரம் உங்கள் கண்களை மறைக்கிறதா?0:01
----\\\\
திராவிடர் விடுதலைக் கழகம்
# பார்ப்பன "துரோணாச்சாரி"களின் வாரிசுகளா...
உயர்கல்வி நிறுவனங்களா?
# "ஏகலைவன்"களாக இனியும் இருக்க மாட்டோம்!
"ரோகித் வெமுலா" மரணத்திற்கு நீதி கேட்டு...
சேலத்தில் 01.02.16 இல் திராவிடர் விடுதலைக் கழகம் ஆர்ப்பாட்டம்!
தலைமை:
சக்திவேல் மாவட்டத்தலைவர்.
முன்னிலை:
இரா.டேவிட் மாவட்டச் செயலாளர்;
ஏற்காடு பெருமாள் மாவட்ட பொருளாளர்;
பா.முருகன் தமிழ்நாடு மாணவர் கழகம்.
கண்டன உரை:
பி.தங்கவேலு சிபிஐஎம் மாவட்டக்குழு செயலாளர்;
ஏ.மோகன் சிபிஐ மாவட்ட செயலாளர்;
அ.ஆனந்தராஜ் மதிமுக மாநகர மாவட்ட செயலாளர்; கே.ராமச்சந்திரன் எஸ்எப்ஐ மாவட்டச் செயலாளர்; இ.ஞானவேல் ஏஐஎஸ்எப் மாநகர செயலாளர்...
நன்றி உரை:
ஜோ.பிரபு மாநகர செயலாளர்
மற்றும் பலர்..!
----\\\\
தசரதேவ் முதல் ஆதிவாசி முதல்வர்
நியூஸ் 7 கேள்வி நேரம் 1.2.16 ..மறு ஒளிபரப்பு இரவு 12-01 மணிக்கு 12.30 மணிமுதல் 1 மணி முடிய அரை மணி நேரம் பார்க்க நேர்ந்தது.
சிபிஎம் இல் விளிம்பு நிலை மனிதன் முதல்வர் ஆனார்களா? என அ.குமரேசனை நோக்கி நெறியாளர் கேள்வி கணை தொடுத்தார்... அதற்கு பொது தொகுதியில் தலித் நிற்கவைத்து ஜெயிக்க வைத்தோம் என்றார். அவருக்கு சட்டென்று நினைவுக்கு வரவில்லை போலும்!
திரிபுராவில் தசரதேவ் முதல் ஆதிவாசி முதல்வர் ஆனார் என்பது வரலாறு! சிபிஎம் தலித்துகளுக்கு கொடுத்த வாய்ப்பு (அதிகாரத்தில்) மட்டுமல்ல... வாழ்வாதாரத்தில் முதன்மையான கட்சியே!
மேற்கு வங்கத்தில் நிலமீட்பு போராட்டம் மற்றும் நில சீர்திருத்தம் சட்டம் மூலம், 1977 க்கு முன், பின் கையகப்படுத்தி, தந்த நிலங்களில் 16 லட்சம் ஏக்கருக்கு மேலான நிலங்கள் அனைத்தும் தலித், இஸ்லாம், ஆதிவாசி மக்களுக்கே என்பதும் வரலாறு!
----\\\\
உச்சநீதி மன்றம் சாட்டையடி!
"உணவு பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தாதது ஏன்?" என்று குஜராத் பாஜக அரசை நோக்கி உச்சநீதி மன்றம் சாட்டையடி!
குஜராத் இந்தியாவின் அங்கம் இல்லையா? என்றும் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளது! மேலும் மக்களவை என்ன செய்து கொண்டிருக்கிறது? என்று கேட்கிறது!
நாளை, "இந்திய குற்றவியல் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் போன்றவற்றை அமல்படுத்த மாட்டோம்" எனவும் எச்சரித்து உள்ளது! உ.பி., கர்நாடகா, ஆந்திரா வும் இந்த பட்டியலில் உள்ளது; என்றாலும் பாஜக ஆளும் மாநிலம், அதுவும் இன்றைய பிரதமர் மோடி, முதல்வராக இருந்த மாநிலத்தில் உணவு பாதுகாப்பு சட்டம் விட்டத்தில் தொங்குகிறது என்றால், இவர்களின் மேக் இந்தியா வின் முகவிலாசத்திற்கு இது ஒன்றே போதும்!
ஆனால் பன்னாட்டு, இந்நாட்டு முதலாளிகளுக்கு ஆதரவான நில கையக சட்டம் உள்ளிட்ட சட்டங்களை மட்டும் அமலாக்குவதில் காட்டும் புயல்வேகம் ஏழைகளை காப்பதில் இல்லை என்பதற்கு இதுவே சாட்சி!
பாஜகவின் மோடியின் குற்றவியல் அமலாக்கம் சட்டத்தை அமலாக்கும் யோகியதையை நாடு... குஜராத்தில் 2002 டிலும், உ.பி யில் 1992 யிலும் பார்த்ததே! இவர்களின் தலையாய சட்டம் மநுநீதியே! இதை அமலாக்கி இந்தியாவை சூறையாடுதே என்பதுதான் பாஜக ஆர்எஸ்எஸ்!6:42
---\\\\
"தமிழகத்தில் அரசென்று ஒன்று இருக்கிறதா?"
இந்த கேள்வி இத்துடன் உள்ள ஆடியோ (வாட்ஸ்அப் மூலம் பரவி வருகிறது இது) கேட்ட பின் முடிவுக்கு வந்தால் மட்டுமே மனிதன் என்றர்த்தம்!
பீப் பாடல் ஒன்றை சமூக வலைத்தளத்தில், நான் போடவில்லை என்ற கூறிய பின், போட்டது யார் என்றும் கண்டு பிடித்ததாக தெரியவில்லை!
"யுவராஜ்" என்ற ஜாதிவெறி, கொலைவெறி சக்திகள் தங்களது மனிதவேட்டைக்கு எப்படி பயன்படுத்தின; பயன் படுத்துகின்றன என்பதற்கு இதுவும் ஒரு சாட்சியாக உள்ளது! இந்த கொலைவெறி, தலித்க்கு எதிராக வெறியை இப்படி விசிறிவிடும் சமூகவிரோத சக்திகளை இந்த அரசு கட்டுப்படுத்துமா? அனைத்து மக்களின் உயிருக்கும் பாதுகாப்பு தருமா?இன்னும் எத்தனை இளவரன், கோகுல்ராஜ், விஷ்ணுப்பிரியா க்களை பலி கொடுக்க போகிறோம்?
-----\\\\\
சேலத்தில் பிப்: 14- மக்கள் நலக் கூட்டணியின்
மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்!
மக்கள் நலக் கூட்டணியின் சேலம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 1.2.16 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மாவட்டக்குழு அலுவலகத்தில் மகேந்திரவர்மன் (மதிமுக மேற்கு மாவட்ட செயலாளர்) தலைமையில் நடைபெற்றது. இதில் மதிமுக மாநகர மாவட்ட செயலாளர் அ.ஆனந்தராஜ், விடுதலை சிறுத்தை கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சி.க.முத்து, மேற்கு மாவட்ட செயலாளர் வசந்த், மாநகர மாவட்ட பொருளாளர் க.சுகய்ல் ரகுமான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஏ.மோகன், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு ஆகியோர் கலந்துக் கொண்டனர். அதில் கீழ்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டது.
1.மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்: பிப்ரவரி 14இல் சேலம் நேரு கலையரங்கில் மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் கூட்டம் நடத்திடுவது; அதில் மாநில தலைவர்களை அழைத்து பங்கேற்க செய்வது. இதில் 2000 செயல்வீரர்களை பங்கேற்க செய்திடுவது.
2.ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கூட்டம்: இந்த செயல்வீரர்கள் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்திடும் பொருட்டு மாவட்டத்தின் 11 சட்டப்பேரவை தொகுதிகளில் 4 மையங்களில் ஒன்றிய, நகர, பேரூர் அளவிளான நிர்வாகிகள் கூட்டத்தை நடத்திடுவது.
மேட்டூர், ஓமலூர் சட்டப்பேரவைக்கு உட்பட்ட நிர்வாகிகள் கூட்டம் 5.2.16 காலை 10 மணிக்கு ஓமலூர் சிபிஎம் அலுவலகத்திலும்; சங்ககிரி, வீரப்பாண்டி, எடப்பாடி சட்டப்பேரவைக்கு உட்பட்ட நிர்வாகிகள் கூட்டம் 5.2.16 வெள்ளி மாலை 3 மணிக்கு சங்ககிரி மதிமுக அலுவலகத்திலும், கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு சட்டப்பேரவைக்கு உட்பட்ட நிர்வாகிகள் கூட்டம் 7.2.16 ஞாயிறு காலை 10 மணிக்கு ஆத்தூர் சிபிஎம் அலுவலகத்திலும், சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு சட்டப்பேரவைக்கு உட்பட்ட நிர்வாகிகள் கூட்டம் 7.2.16 ஞாயிறு மாலை 3 மணிக்கு சிபிஐ சேலம் மாவட்டக்குழு அலுவலகத்திலும் நடத்திடுவது.
3.பங்கேற்கும் மாநில தலைவர்கள்: மு.செந்திலதிபன் மதிமுக அரசியல் ஆய்வு மையச் செயலாளர், கே.தங்கவேல் எம்எல்ஏ., சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர், கே.சுப்ராயன் ExMP., சிபிஐ மாநில நிர்வாகக்குழு உறுப்பினர், வி.ரவிக்குமார் Ex MLA பொதுச்செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.
இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் மக்கள் நலக்கூட்டணியின் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள செயல்வீரர்கள் அனைவரும் தவறாது பங்கேற்ற வேண்டும். முன்னதாக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலையில் இருந்து ஊர்வலம் புறப்படும்.
-----\\\\\
வடிகட்டிய பொய்யே மோசடியின் பேச்சு!
தலித்துகளுக்கு உறுதியாக பாஜக இருக்கும் என்று மோடியின் கோவை பரப்புரை ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யே மோசடியின் பேச்சு!
பாஜக தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான கொடுமைகளை கண்டு தன் சுண்டு விரலைக்கூட அசைக்கவில்லை!
தலித்துகளுக்கு கொஞ்சமாவது பாதுகாப்பாக இருக்கும் "வன்கொடுமை தடுப்பு சட்டத்தை" எடுக்க வேண்டும் என்று கலகம் செய்யும்... வன்முறை வெறியாட்டம் செய்யும்... தலித் உயிர்களை எடுக்கும்... ஆதிக்க சாதிகளுடன் சேர்ந்து கொண்டா பாஜகவும் மோடியும் தலித்துகளை பாதுக்காக்க போகிறார்கள்?
நால்வர்ண வர்ணாசிரம குருகுலமான ஆர்எஸ்எஸ் சின் அரசியல் பிரிவான... தலித்துகளை புழுப்பூச்சியைவிட கேவலமான நடத்தும் இவர்களா (பாஜக, மோடியா) தலித்துகளை காக்கப்போகிறார்கள்? சும்மா... இதெல்லாம் தேர்தல் ஸ்டென்ட்! அவ்வளவே! தமிழ் மக்கள் குறிப்பாக தலித் மக்கள் நிச்சயம் ஏமாற மாட்டார்கள் என்பது திண்ணம்!
அதிமுக திமுக மீதான விமர்சனமோ, கருத்தோ தெரிவிக்காமல், நைசா நழுவி சென்றது... தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டாளி வேண்டுமென்ற "தேசநலன்" கருதியே!
இன்று 2.2.16 PTTV நேர்படபேசு! இதன் ஒருபகுதி பதிவேற்றம் ஆகி உள்ளது!
-----\\\\\
மதவாதத்திற்கு இரையாகாது!
மோடியின் வருகை தமிழக தேர்தலில் எதிரொலிக்கும் என்பதெல்லாம் பகல்கனவு! தமிழ் மண் ஒருபோதும் மதவாதத்திற்கு இரையாகாது!
இன்றுகூட தமிழக விவசாயிகளுக்கு எதிரான தீர்ப்பு உச்சநீதி மன்றத்தில் வந்திருப்பதற்கும், மோடி அரசுக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறிவிட முடியாது!
ஆக தமிழக மக்களுக்கு பாஜக இதுவரை எதுவும் செய்யவில்லை; மதவாத-ஜாதிய வாதத்திற்கு ஆதரவாக செயல்பட்டதைத் தவிர! அப்புறம் எப்படி அது தேர்தலில் எதிரொலிக்கும் பாஜகவுக்கு ஆதரவாக?
இன்று 2.2.16 News 7 ?கேள்வி நேரம்!
-----\\\\
"ஆட்சிக்கு வருமா? சந்தேகமே வேண்டாம்; வரும்!"
இன்று 3.2.16 PTTV புதுப்புது அர்த்தங்களில் வழக்குரைஞர்கள்... அஜிதா, ராமைய்யா இவர்களுடன் நெறியாளர் ஜென்ராம்... மக்கள் நலக் கூட்டணி தனது மாற்று கொள்கையான குறைந்தபட்ச செயல் திட்டத்தை வலுவாக மக்கள் முன் வைத்து முன்னேறுவதுதான் பொருத்தமாக இருக்கும், அதுதான் "மாற்று" என்பதற்கு அர்த்தமாக இருக்க முடியும்; "கவன சிதறல் கூடாது" என்று "அர்த்தம் பொதிந்ததாக" இருந்தது; அதேசமயத்தில் ராமைய்யாவின் "இது ஆட்சி வருமா?" என்ற சந்தேகம் எழுப்பியதுபோல் தெரிந்து; நிச்சயம் உங்களை போன்ற கோடான கோடி மக்களின் பெரும் ஆதரவுடன் மக்கள் நலக் கூட்டணி ஆட்சியை பிடிக்கும்! சந்தேகமே வேண்டாம்!
கெயில் குறித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஒட்டி கொஞ்சம் விவாதம் நீட்டி இருக்கலாம்! சாலை வழியே கொண்டு செல்லலாம் என்ற மாற்றை நோக்கியும், மத்திய அரசு இதில் ஏன் இதில் மாற்றை நோக்க மறுக்கிறது? அதன் நோக்கம் சரியா? என்கிற கோணத்திலும், சட்டரீதியாக அடுத்த என்ன வாய்ப்புகள் இருக்கு என்ற கோணத்திலும் கொண்டு சென்றிருக்கலாம் என்று தோன்றியது!
ஓரினம் சேர்க்கை, திருநங்கைகள் போன்றோர் உரிமைகள் குறித்த தீர்ப்பு போன்றவற்றில் விவாதம் போனது; அதில் ஏராளம் விபரங்கள் வெளிபட்டன!
----\\\\
சரிங்க அம்னி...
"20 கோடி ஏழைகள் வங்கி கணக்கு துவங்கி உள்ளார்கள்!"
-பாஜக தமிழிசையின் ஓசை இது!
சரிங்க அம்னி...
ரூ16 லட்சத அதாவது கறுப்பு பணத்த வெள்ளையாக்கி தரேன் சொன்ன... அந்த பணத்த எப்ப இந்த ஏழைகளின் வங்கி கணக்குல போடப் போறீங்க?
எலெக்சனுக்குள்ள போட்டிட்டீங்கனா... "ஆச்சிய" புடிச்சிறாலாமில்ல..!
செய்வீங்களா?
----\\\
No comments:
Post a Comment