எது தேவை:
மநுநீதியா? மார்க்சியமா?
✨✨✨✨❇🌟❇❇❇🌌🌌🌌🌌🌌✴✴
வலைதள நண்பர் ஒருவரின் " மநுவை கொளுத்துவோம்" என்ற பதிவுக்கு "மனுநீதி என்றால், மானுடம் உய்யும் நீதி; அது ஏன் கொளுத்த வேண்டும் என்று பதிவிட்ட இன்னொரு நண்பருக்கு என் எளிய பதிவு இது! சரியா? எப்படி இருக்கு?
மனு அல்ல மநு; மானுடம்... நீதி என்றெல்லாம் கப்ஸா வேண்டாம்! மநு என்பவன் மனிதரை 4 நிறங்களாக பிரித்து வைத்தான்; அந்த நிற பேதத்தைத்தான் கொளுத்துவோம்! மனிதரை அல்ல! அந்த 4 (பிராமணன், வைசியன், சத்ரியன், சூத்திரன்) நிறங்களோடு இன்னொரு நிறத்தையும் (பஞ்சமன்) என்று 5 நிறம் (அடையாளம்) வேண்டாம் என்பதே மார்க்சீய அணுகுமுறை!
மனிதர் என்ற ஒற்றை அடையாளத்தில் உள்ள ஏழை, பணக்காரன் அதாவது சுரண்டுபவன், சுரண்டப்படுபவன் என்ற பேதத்தை ஒழிப்பதைத் தடுப்பதே அந்த 5 நிறம் என்பது! மனிதர் சமநிலை அடைய வேண்டுமென்றால்...
ஆம், மேடு-பள்ளம் இவற்றை சமம் படுத்த வேண்டுமென்றால், மேட்டை உடைத்து, பள்ளத்தில் போடு என்பது மார்க்சீயம்; இல்லை இல்லை பள்ளத்தைத் தோண்டி மேட்டில் போடு என்பது முதலாளி தத்துவம்; அதிலே... முதல் நிறத்தவனுக்கு (பிராமணன்) போடு என்பது மநுநீதி. இப்பொழுது புரிகிறதா? மநுநீதி! சொல்லுங்கள் நம் நாட்டுக்கு தேவை எது மார்க்சீயமா? மநுநீதியா?
----\\\\
கருமலைக்கூடல் காவல்நிலையத்தில் கோகுலகண்ணன் லாக்அப் மர்டர்!
மாநில மனித உரிமை ஆணையம் முன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
இன்று 20.10.15 சேலத்தில் சாட்சியம்!
???????///////????///??///////?????///
சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம் கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் கடந்த 5.7.15 இரவு விசாரனைக்கு அழைத்து சென்ற நடேசன் மகன் கோகுலகண்ணன் கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் காவல் அதிகாரிகளால் அடித்து, உதைத்து, கால்களை உயிர்நாடி பகுதியில் பிளந்து கொன்று விட்டனர். இதை மறைக்க ரூ12 லட்சம் குடும்பத்தாரிடம் கட்டபஞ்சாய்த்து பேசி கொலையை மூடி மறைத்து விட்டனர்.
ஆனால் சிபிஐஎம் சார்பில் மக்களைத் திரட்டி போராடியதோடு, மாநில மனித உரிமை ஆணையத்திற்கு , கோகுலகண்ணன் கொலைக்கு காரணமானவர்கள் மீதும், கட்டப்பஞ்சாய்து செய்து மூடி மறைத்த காவல் உயர் அதிகாரிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் தரப்பட்டது.
அதனை விசாரிக்க சேலம் வந்திருந்த மனித உரிமை ஆணைத்திடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழுச் செயலாளர் பி.தங்கவேலு சாட்சியம் அளித்தார். அதன் நகல் இத்துடன் உள்ளது. விசாரணையின் போது, கட்சியின் மாவட்டசெயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், மாவட்டக்குழு உறுப்பினர் என்.பிரவீன்குமார், வழக்குரைஞர் எம்.வெற்றிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
காவல்துறையால் காவல் நிலையத்தில் கொலைச்செய்யப்பட்ட கோகுலகண்ணன் உறவினர்களை காவல்துறையினர் பலத்தப்பாதுகாப்புடன் அழைத்து வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-----\\\\
விலைவாசி உயர்வுக்கு காரணம் மூன்றுமேதான்!
விலைவாசி உயர்வுக்கு காரணம் மூன்றுமேதான்!
மத்திய அரசு அதானி பிடியில்! அதானியிடம் நாட்டின் தேவையில் 40% பருப்பு "பத்திரமாக" பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாம்!
மாநில அரசு சசிகலா வகையறாக்கள் மடியில்! 40ரூ பருப்பை 210ரூ க்கு கொண்டு போய்விட்டு, 110ரூ (அது என்ன 110?; எங்கும் எதிலும் 110தோ?) க்கு ரேசன் கடையில் போடுறாங்களாம்!
(ஏன், அம்மா பருப்புக்கடை கொடைநாட்டில் இருந்து வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் திறக்கலாமே!)
நேற்று ஒரு சிறு ஓட்டலில் சாப்பிட போனபோது, இட்லி என்னமோ குஷ்பு இட்லிதான்; ஆனால் பருப்பு சாம்பாருக்குப்பதில் பருப்பு ரசம் ஊத்தினார்கள்; அது ஓடி வந்து என் மடிமீது படுத்துக்கொண்டது!
ஓமலூர் காமலாபுரம் கடைக்காரர் சொன்னார்..."சாரி சார்!" ஆம், என் மடியில் விழுந்ததும் 'சாருதான்; பருப்புச்சாரு!'
இன்று 20.10.15 PTTV மக்கள் மேடையில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
----\\\\
அமைதியை கெடுப்பதே சங் பரிவாரம்தான்!
காஷ்மீர் எம்எல்ஏ மீது மை ஊற்றப்பட்டதும், மகாராஷ்ட்ராவில் சிவசேனாவின் வன்முறை போக்கும், தனித்து பார்க்க முடியாது!
இந்த இரண்டு நிகழ்வுமே பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் செயல்!
இது இந்துத்வா அமைப்புகளின் அத்துமீறல்; இதற்கு வெறும் எச்சரிக்கை எந்தவித பயனும் தராது; நடவடிக்கைதான் தேவை!
ஆனால் அதை அருண்ஜெட்லியால் செய்யமுடியாது! அவரது பேச்சு சும்மா!
அமைதியை கெடுப்பதே சங் பரிவாரம்தான்! அதன் பிரதிநிதி அருண்ஜெட்லியா நடவடிக்கை எடுக்கப்போகிறார்?
இன்று 20.10.15 PTTV நேர்படபேசுவில் இதன்ஒரு பகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
----
இன்று 20.10.15 PTTV நேர்பட பேசு வில், மூத்த பத்திரிக்கையாளர் ஞானி, காங்கிரஸ் கோபண்ணா, பாஜக சுப்ரமணிய பாலாஜி, சிவசேனா ராதாகிருஷ்ணன், இவர்களுடன் நெறியாளர் தியாகச்செம்மல்..!
காஷ்மீர், மகாராஷ்ராவில் இந்துத்வா வெறி குறிப்பாக காஷ்மீர் எம்எல்ஏ மீது மைவீச்சு, பாக்கிஸ்தான் கிரிக்கட் அணிக்கு எதிர்ப்பு கணை வீசும் சிவசேனா போக்கை எதிர்த்து பேசியபோது... இந்துக்கு எதிராக, இந்துத்வாவுக்கு எதிராக, இந்துஸ்த்தானுக்கு எதிராக யார் பேசினாலும், அது ஞானியாக இருந்தாலும் மைவீசுவோம் என சிவசேனா ராதாகிருஷ்ணன் மிரட்டியது மிகவும் கண்டிக்க தக்கது. நெறியாளர் அனுமதிக்க முடியாது என்று நிலைமையை அமைதியாக்கியது பாராட்டுக்குரியது.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை மாநில பிரச்சனையாக இருந்தாலும், மத்திய ஆட்சியாளர்கள் மத அடிப்படை பேசி தூண்டுவது ஏன்? என்றும், சிவசேனாவும், பாஜகவும் அடிப்படையில் ஒன்றுதான் என்றும் அம்பலபடுத்தியது அருமை; பாராட்டுக்குரியது! ஆனாலும், இன்று வந்த பாஜக, சிவசேனா காரர்கள் திமிராகத்தான் பேசினார்கள்; மதவாதவெறியை தூண்டியே பேசியது கொடுமைமிக்கது; மீண்டும் கண்டிக்கத்தக்கது!
முஸ்லீம், கிருத்துவர் நல்லவர்கள்தான்; அவர்களுக்கு ஒரு 10 வருசத்திற்கு ஓட்டு இல்லையின்னு சொன்னா போதும் இவங்க (சிவசேனா, பாஜக அல்லாத கட்சிகள்) அடங்கிருவாங்க; கிரிக்கெட் (பாக்-இந்தியா) விளையாட விடமாட்டோம என வாய்யைத் திறந்தாலே வன்முறையாக பேசினார் சிவசேனா ராதாகிருஷ்ணன்; நெறியாளரை எல்லாம் அவர் பொருட்படுத்தவே இல்லை; நிகழ்ச்சியும் வழக்கத்திற்கு மாறாக சற்று முன்னரே முடிக்க பட்டுவிட்டது! சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொண்டது புதிய தலைமுறை இன்று என்றே தோன்றியது எனக்கு!
-----\\\\
இதுவும் ஆக்கிரமிப்பே..!
இதுவும் ஆக்கிரமிப்பே..!
ஆக்கிரமிப்பு என்பது ஆயுதங்கள் சகிதமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை மட்டுமல்ல; ஒரு மாயையை உருவாக்கி, உளவியல் ரீதியாக மேற்கொள்ளப்படும் தாக்குதலும் ஆக்கிரமிப்புத்தான். உண்மையில், இதை உளவியல் போர் என்று சொல்லலாம். கனடிய பேராசிரியர் மார்ஷல்மெக் லூகான் ஊடகங்களின் இப்படியான செயல்பாட்டைத்தான் கூறுகிறார்-- "முதலில் நாம் கருவியை வடிவமைக்கிறோம்; பின்னர், கருவி நம்மை வடிவமைக்கிறது."
(இன்று 21.10.15 தமிழ் இந்து: சமஸ்)
----\\\\
சிபிஐஎம் சேலம் மாவட்டக்குழு உறுப்பினர்
ஐ.ஞானசௌந்தரியைத் தாக்கியவர் மீது நடவடிக்கை எடு!
சேலம் மாநகர காவல் ஆணையரிடம்
சிபிஐஎம் வலியுறுத்தல்!
சேலம் மாநகரம் திருவாக்கவுண்டனூர் அம்மாசி நகரில் வசிப்பவர் தோழர் ஐ.ஞானசௌந்தரி. இவர் எங்கள் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரும், அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத்தலைவரும் ஆவார்.
இவர் அப்பகுதியில் வசிக்கும் கணேசன்-கண்மணி ஆகியோர் திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்து, கண்மணியை திருமணம் செய்திட கணேசன் மறுத்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண்னுக்கு உதவிடும் பொருட்டு, கடந்த 15.10.15ஆம் தேதியன்று மதியம் 2 அளவில் சூரமங்கலம் காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அப்பொழுது மேற்படி கணேசன் என்பவர் ஆட்டோவில் சிலருடன் வந்து தோழர் ஐ.ஞானசௌந்திரி அவர்களை காவல் நிலையம் முன் தாக்கி, தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு ஓடிவிட்டனர்; மேலும் அன்றே அவரின் வீட்டுக்குச் சென்று அவரது மகனையும் மிரட்டிவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து 15.10.2015 அன்று சூரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இவர் எங்கள் கட்சியின், அமைப்பின் முக்கியத்தலைவர். சம்மந்தப்பட்ட கணேசன் என்பவர் தொடர்ந்து அடியாட்களை வைத்து இவரை மிரட்டி வருகிறார். எனவே இனியும் காலம் கடத்தாமல் உடனடியாக சம்மந்தப்பட்ட கணேசனை கைது செய்து சட்டப்படியான நடவடிக்கை எடுத்திடவும், மேற்படி எங்கள் தோழரின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு கொடுத்து உதவுமாறும் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.
சிபிஐஎம் மாவட்டக்குழுச் சார்பில், சேலம் மாநகர ஆணையர் திரு.அமல்ராஜ் ஐபிஎஸ்., அவர்களிடம் மாவட்டக்குழுச்செயலாளர் பி.தங்கவேலு, மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் எம்.சேதுமாதவன், ஆர்.குழந்தைவேல் ஆகியோர் நேரில் இன்று (21.10.2015இல்) சந்தித்து விண்ணப்பம் தந்து பேசினர். மாநகர காவல் ஆணையரும் உடனே நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
-----\\\\\
"மாவட்டம்" "மாநிலம்" என்ற குரூப்
கலைக்கப்பட்டு விட்டது!
தோழர்களே, வணக்கம்!
என்னிடம் வாட்ஸ்அப் இணைப்பில் உள்ள சிலரை விடுத்து, பலரை உள்ளூர் (வெண்மணி), வெளியூர் (தாரைப்பிதா) என 2 குரூப் உருவாக்கி உள்ளேன்.
பலரும் உள்ளனர்!
ஆரோக்கியமான பகிர்வுக்கு மட்டுமே இது;
இது, சுமையாக கருதுவோர் எந்த நேரத்திலும் வெளியேறிக் கொள்ளலாம்!
வருத்தம் ஏதும் கிடையாது!
நேற்று முதல்...
20.10.15 இவை செயல்படுகிறது;
ஏற்கனவே நான் உருவாக்கி இருந்த "மாவட்டம்" "மாநிலம்" என்ற குரூப் கலைக்கப்பட்டு விட்டது! நன்றி!
-----\\\\
ரமேஷ் பேச்சு தேவையற்ற ஒன்று
ரமேஷ் பேச்சு தேவையற்ற ஒன்று; பாஜக அரசின் மதவாத அரசியல், பன்னாட்டு சுரண்டல் எதிராக போராடுவதற்கான வழியை தேடுவதை விட்டுவிட்டு, 60 வயது ஓய்வு என்பதெல்லாம் வீண் பேச்சு; மட்டும் அல்ல, திசைத்திருப்பலும்கூட!
இன்று 21.10.15 PTTV மக்கள் மேடைக்கு!
திமுக அப்பாவு வடகொரியாவை உதாரணத்திற்கு குறிப்பிட்டார்; உடனே வேங்கட பிரகாஷ் "அந்த காட்டாட்சியையா சொல்கிறீர்கள்" என்றார் பாருங்கள்; அவருக்கு என்ன ஆனதென்று நினைக்கத் தோன்றுகிறது; சோசலிச ஆட்சியை காட்டாட்சி என்கிறாரே; ஏனென்று விளங்கவில்லை.
ஞானியின் வாதம் இந்த விசயத்தில் அபத்தமானதாக தெரிகிறது;
இடதுசாரிகளை பொறுத்தமட்டில் நம் நாட்டில் தலைமையில் இருக்கிறார் சுமார் 40% பேர்; வேறெந்த கட்சியிலும் இவ்வளவு கிடையாது; மட்டுமல்ல பதவி மோகம் கொண்டவர்கள் அல்ல கம்யூனிஸ்ட்கள் என்பதை காஸ்ட்ரோ, சாவோஸ், ஜோதிபாசு, அச்சுதானந்தன் உள்ளிட்டோரை நேயர்கள் குறிப்பிட்டனர்;
வேங்கடபிரகாஷ்க்கு அதுவே போதுமென நினைக்கிறோம்! இந்த தலைப்பே வேலையற்றவர்களின் வேலை; ஒருவேளை அது காங்கிரஸ்க்கு தேவையாக இருக்கலாம்)
----\\\\
நிச்சயம் சர்வதேச விசாரணை வேண்டும்
இலங்கை போர் குற்றம் நடந்திருக்கிறது என்பதை உள்நாட்டு விசாரணையே உறுதிப்படுத்திறதென்றால், நிச்சயம் சர்வதேச விசாரணை வேண்டும். அதற்கு இந்தியாவை தவிர வேறு யாராலும் நிர்பந்தம் தர முடியாது! அந்த நிர்பந்தம் தமிழகத்தில் தான் முளையிட்டாக வேண்டும்!
இன்று 21.10.15 PTTV நேர்படபேசு வில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
(இலங்கை எம்பி ஸ்ரீதரன், பாஜக வானதி, காங்கிரஸ் நாராயணன், தியாகு, மே11 காந்தி, இவர்களுடன் கார்த்திகைச்செல்வன்... ஸ்ரீதரன் மோடி எங்களின் எதிர்ப்பார்ப்பு ஈடேறவில்லை என்கிற அர்த்தம் தொணிக்க கூறியது குறிப்பிடத்தக்கது; சர்வதேச விசாரணை தேவை என்றே பேசினார்.
அமெரிக்கை நாராயணன் மற்றும் வானதி ஆகியோர் எதோ உலறி வைத்தனர்; ஆனால் நாராயணன் விடுதலைபுலி மீதும் குற்றசாட்டு வைத்தது ஏன்? மே 11 காந்தி இதுமாதிரி அறிக்கை வீண் என்பதுபோல் பேசினார். தியாகு ஏற்கனவே பல சமயங்களில் பேசியதையே பேசினார்)
-----\\\\
நிரந்தரத் தீர்வாக..!
இன்று 21.10.15 NEWS 7 கேள்வி ? நிகழ்ச்சி தற்செயலாக பார்க்க நேர்ந்தது. பொருளாதார பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேய்யா, வங்கி அமைப்பு வெங்கடாசலம், கல்வியாளர் மாலதி, ஆய்வாளர் பெருமாள் (இவர் இதற்காக மதுரையில் இருந்து விமானத்தில் வந்தாராம்!) இவர்களுடன் நெறியாளர் செந்தில்..!
கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வசதி எல்லாருக்கும் கைவசப்பட என்ன செய்வதென்பதே கேள்வி ? இட ஒதுக்கீடு ஒரு பெரும் காரணியே என்றாலும், அது தற்காலிக ஏற்பாடுதான்! நிலசீர்திருத்தம் மற்றும் மக்கள் நலன்சார்ந்த பொருளாதார மேம்பாடுதான் நிரந்தரத் தீர்வாக இருக்குமென்ற அர்த்தத்தில் ஆத்ரேய்யா வாதிட்டார். நன்று!
வெங்கடாசலம் இட ஒதுக்கீட்டால் பொருளாதாரம் சீர்கெடுகிறது என்ற அர்த்தத்திலும், இட ஒதுக்கீட்டால் ஒரு உடைக்கு மறு உடை இல்லாதவர் கோடீஸ்வர் ஆகியதைப் பார்த்த ஜாட், பட்டேல் போன்ற சமூகத்தினர் இட ஒதுக்கீடு கோரி போராடுவதாக பெருமாள் மணியும் வாதிட்டனர். கல்வியாளர் மாலதி வாதத்தை கவனிக்க முடியவில்லை.
கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம் போன்றவைகளில் எளியவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிடும் வகையில் அரசுகளின் போக்கு இருக்க வேண்டுமென்ற அர்த்தத்தில் நெறியாளர் செந்தில் பேசி முடித்தது ஆரோக்கியமே! கூச்சலில்லாமல் நிகழ்ச்சி போனது! நன்று!
----\\\\
சைத்தான் வேதம் ஓதுவது போல்தான்!
சங்பரிவாரான ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு அலச்சியமானது மட்டுமல்ல, சைத்தான் வேதம் ஓதுவது போல்தான்!
நாட்டின் அனைத்துவிதமான ஜாதிய-மத சிறுபான்மையினர் வாழ்வு அச்சுறுத்தல்களுக்கும், படுகொலைகளுக்கும் காரணமே ஆர்எஸ்எஸ் சின் இந்துத்வாவின் கொள்கைகளே காரணம்!
உலகில் இந்தியாவின் மதிப்பு குறைந்து போவாதென பகவத் கூறிகிறார் என்றால், அதற்கு காரணம் அவரின் சீடர் மோடியும்தான்!
இன்று 22.10.15 PTTV மக்கள் மேடையில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
(ராமசுப்ரமணியன் பாஜக; 'சிபிஐஎம் பேசுவதற்கு யோகியதை கிடையாது' என "நாய்போல் குரைத்து" தனது கம்யூனிச எதிர்பைக் கக்கினார்).
-----\\\\\
பருப்புவிலை உயர்வுக்கு..!
பருப்புவிலை உயர்வுக்கு பதுக்கலும், மத்திய-மாநில அரசுகளின் பதுக்கலுக்கு ஆதரவான கொள்கைகளும்தான்!
இந்த பதுக்கல் கொள்கையில் இடதுசாரி கட்சிகள் தவிர மற்ற காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக போன்ற கட்சிகளின் கொள்கை ஒன்றுதான்!
இவர்கள் பருப்பு விலை உயர்வைப் பற்றி தற்போது பேசுவது அரசியலே தவிர அக்கரையில் அல்ல!
பதுக்கலுக்கு ஆதரவான கொள்கைகளை வைத்துக் கொண்டு விலைவாசி உயர்வுக்கு எதிராக பேசுவது மக்களை ஏமாற்றுவதற்கு சமம்!
இன்று 22.10.15 PTTV நேர்படபேசு வில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
----\\\\\
சேலத்திலேயே ரூ10 கோடி..!
சேலத்திலேயே ரூ10 கோடியில ஆர்எஸ்எஸ் க்கு அலுவலகம் என்றால், இவர்களின் நாடு முழுவதுமான 'சொத்து' எவ்வளவு இருக்கும்? இவர்களின் 'வேர்கள்' எந்தளவுக்கு 'ஊடுருவி' இருக்கும்? ஜனநாயக, மதசார்பற்ற, பெரியாரிய, தலித்திய, இடதுசாரிய சக்திகளின் பயணம் எத்தகைய 'கவனம்' உடன் செலுத்த வேண்டியுள்ளதையே இது காட்டுகிறதல்லவா?
[10/23/2015, 10:04] Senthan Chennai: Usefull group
-----\\\\
துறந்த விருதுகளை திருப்பப் பெறலாம்..!
சாகித்ய அகடாமி செயற்குழு-- "படுகொலைக்குக் கண்டனமும், இறந்தோருக்கு அஞ்சலியும் செலுத்தியதோடு, மத்திய மாநில அரசுகள் எழுத்தாளர், அறிவார்ந்த அறிஞர்களுக்கு உரிய பாதுகாப்பு தரவேண்டும்" என 3 தீர்மாணம் நிறைவேற்றியது...
விருதைத் திருப்பி தந்தும், மாற்று வழிகளிலும் போராடிய எழுத்தாளர்களுக்கும், அவர்களுக்கு ஆதரவாக போராடிய மதசார்பற்ற, இடதுசாரி, ஜனநாயக சக்திகளுக்கும் கிடைத்த வெற்றி இது!
இந்நிலையில், இனி போராட்டங்கள் தவிர்க்கலாம்; துறந்த விருதுகளை திருப்பப் பெறலாம் என்றே தோன்றுகிறது!
இன்று 23.10.15 PTTV மக்கள் மேடை யில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 200 ஆவது மக்கள் மேடையில் எனது கருத்தும் பதிவேற்றம் ஆகியிருப்பது மகிழ்ச்சி! நன்றி!
----\\\\
அதிமுக அச்சத்தின் பிடியால்தான்..!
அதிமுக அச்சத்தின் பிடியால்தான் இணையதள பரப்புரையை துவங்கியுள்ளதே தவிர துணிச்சல் ஒன்றும் கிடையாது!
திமுக ஸ்டாலின் தெருக்கூத்து நடத்துவதைப் பார்த்தால், தயார் மாதிரி தெரியவில்லை; அது மக்கள் நலக் கூட்டியக்க வளர்ச்சி அவரையும், திமுகவையும் உலுக்கி வருகிறதையே காட்டுகிறது.
பாமக இறங்கி வர காரணம், சாதிவெறியும், மதவெறியும் என்றும் ஒன்றிப்போகும் வாய்ப்பு உள்ளது.
மக்கள் நலக் கூட்டியக்கமே 2016 தேர்தலில் நட்சத்திர அணியாக இருக்கப் போகிறது; இதன் குறைந்தபட்ச செயல்திட்டம் வெளியாகும்போது தெரியும் இதன் பிரகாசமன 'ப்பியூச்சர்!' (எதிர்காலம்).
இன்று23.10.15 PTTV நேர்பட பேசு க்கு!
(அதிமுக அதரவு பாண்டிராஜன், திமுக பிரசன்னா, பாமக செந்தில், மார்க்சிஸ்ட் எஸ்.கண்ணன் இவர்களுடன் நெறியாளர் தியாகச்செம்மல்..!
அதிமுகவின், "ஒளிரும் நிகழ்காலம்; மிளிரும் எதிர்காலம்" பற்றி பாண்டியன் பேசியது எடுபடல. திமுகவின், "நமக்கு நாமே; முடியட்டும்; விடியட்டும்" டிராமாவில் 3லட்சம் மனுக்கள் வந்ததாம்; அதனால் ஆட்சியைப் பிடிப்பது மிக எளிதாம் பிரசன்னாவின் பிரசங்கம் இருந்தது; பாமகவின், "மாற்றம் முன்னேற்றம்" பிசுபிசுத்து, நமத்து போனதை செந்தில் டாக்டர் என்பதால், கொஞ்சம் ஒத்துக்க மறுத்தார். தியாகசெம்மல், " தனியாக நிற்கலாமே" என்ற கேள்வியை எதிர்பார்க்கவில்லை என்பதை உணர முடிந்தது.
மக்கள் நலக் கூட்டியக்கம் மட்டும்தான் சரியான மாற்று என்பதை தோழர் கண்ணன்"அதிமுக, திமுக ஊழலலின் உறைவிடம், கல்வி, வேலை, விலைவாசி என பல பிரச்சனைகள் தீர, சாதிய பாமக மாற்றாகாது; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட, மக்கள் நலக் கூட்டியக்கமே... இன்றைய தேவை" அழுத்தமாக பதிந்தது நன்று!).
-----\\\\
அதென்னமோ இவங்க நடுநிலை..!
வலைதள நண்பரின் இன்று 24.10.15இல் வந்த, புதிய தலைமுறை அக்னி பரிட்சை யில் அர்ஜுன் சம்பத் நேர்காணல் குறித்த கண்டன பதிவுக்கு என் ஆதரவு பதிவு இது...!
அன்று ஒரு நாள் அதாவது ஞாநி கடிதம் எழுத காரணமாக இருந்தாரே ஒரு சிவசேனா காரர்... அவரு பேச்சைவிட இந்த சூராதி சூரன் பேச்சு படுமோசம்!
என்னமோ தெரியல இந்த டிவி க்கு கிறுக்கு புடுச்சிக்கிச்சோன்னு தோணுது! அப்பட்டமான இந்துமதவெறி ஊட்டும் வெறிப்பேச்சு அர்ஜுன் சம்பத் பேச்சு இருந்தது! இதை சமம் செய்ய வேண்டுமென்றால் ஐஎஸ்ஐ, ல்க்ஷ்சரி தொய்பா.. என முஸ்லீம் மத அமைப்புகளையும் கூட்டு "அக்னி பரிட்சை" நடத்தினாத்தான் சரிபடும்! செய்வார்களா?
எனக்கென்னமோ இந்த டிவி தனது மதிப்பை இழக்க எங்காவது "பெட்" (பந்தயம்) கட்டிரிச்சோன்னு தெரியுது! அதை அடுத்து வந்த நேர்பட பேசு லக்கூட பாஜக வானதியும்கூட "அங்கொன்றும், இங்கொன்றும் நடக்கிற பெரிசா பேசுறிங்களே"ன்னு தலித் மற்றும் சிறுபான்மை படுகொலைகளை அவரது தலைவர்களைப்போல் எந்த கூச்சமும் இன்றி மிக சந்தோசமாக பேசுகிறார்!
அதுசரி கல்லைக் கட்டிக் கொண்டு கிணத்தில் குதிப்பவர்களை நாம என்ன செய்ய முடியும்? தமிழ் தாமரை டிவி ய எவ்வளவுபேர் பார்க்கிறார்கள் என்பதை இந்த தொலைக்காட்சி கணக்கெடுத்து பார்த்துக் கொள்ளட்டும்! நன்றி!..."
-----\\\\\