Tuesday, 20 October 2015

கருமலைக்கூடல் காவல்நிலையத்தில் கோகுலகண்ணன் 'லாக்அப் மர்டர்!'
மாநில மனித உரிமை ஆணையம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 
சேலத்தில் சாட்சியம்!
???????///////????///??///////?????///

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம் கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் கடந்த 5.7.15 இரவு விசாரனைக்கு அழைத்து சென்ற நடேசன் மகன் கோகுலகண்ணன் கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் காவல் அதிகாரிகளால் அடித்து, உதைத்து, கால்களை உயிர்நாடி பகுதியில் பிளந்து கொன்று விட்டனர். இதை மறைக்க ரூ12 லட்சம் குடும்பத்தாரிடம் கட்டபஞ்சாய்த்து பேசி கொலையை மூடி மறைத்து விட்டனர்.

ஆனால் சிபிஐஎம் சார்பில் மக்களைத் திரட்டி போராடியதோடு, மாநில மனித உரிமை ஆணையத்திற்கு , கோகுலகண்ணன் கொலைக்கு காரணமானவர்கள் மீதும், கட்டப்பஞ்சாய்து செய்து மூடி மறைத்த காவல் உயர் அதிகாரிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 8.7.15இல் புகார் தரப்பட்டது. 

அதனை விசாரிக்க சேலம் வந்திருந்த மனித உரிமை ஆணைத்திடம், இன்று 20.10.2015 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழுச் செயலாளர் பி.தங்கவேலு சாட்சியம் அளித்தார். அதன் நகல் இத்துடன் உள்ளது. விசாரணையின் போது, கட்சியின் மாவட்டசெயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், மாவட்டக்குழு உறுப்பினர் என்.பிரவீன்குமார், வழக்குரைஞர்  எம்.வெற்றிவேல்  ஆகியோர் உடன் இருந்தனர். 

காவல்துறையால் காவல் நிலையத்தில் கொலைச்செய்யப்பட்ட கோகுலகண்ணன் உறவினர்களை காவல்துறையினர் பலத்தப்பாதுகாப்புடன் அழைத்து வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
----\\\\
தோழர் ஜிஆர் 'நேர்காணல்' 
விவாதக்'கனலாக' மாறியது! நன்று!

தோழரே, வணக்கம்!

இன்று 19.10 நேர்பட பேசு பார்த்தேன். ஓரளவு நடுநிலையாக போனீர்கள்; ஆனால், மத்திய அரசின் கொள்கைகளை, போக்குகளை விமர்சிக்கிற களமா சட்டமன்ற தேர்தல் களம் என்றீர். நன்று. இதை தங்களிடம் எதிர்ப்பார்க்கவில்லை! 


ஏனென்றால் இன்றைய சூழலில் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை அதிமுக, திமுக முழுமையாக ஆதரிக்கின்றன; திமுக மதவாதம் சம்மந்தமான விசயத்தில் தற்போது சிறிதளவு எதிர்க்கிற மாதிரி ஒரு பாவணைக் காட்டுகிறது; அதிமுகவை கேட்கவே வேண்டும் பாஜக ஆளும் மாநிலங்களை எடுத்து விழுங்கிடும் அளவுக்கு சென்றுக் கொண்டிருக்கிறது; இதை எல்லாம் எப்படி புறம்தள்ளி தமிழக தேர்தல் களம் காணுவது? 

எல்லாவற்றிக்கும் மேலாக இலங்கை தமிழர் பிரச்சனைகள் எல்லாம் பிரதிபலித்தையெல்லாம் எண்ணிப் பார்க்கிறேன்! 

எது எப்படியோ தோழர் ஜிஆர் நேர்காணல், விவாதக்கனலாக மாற்றியமைக்கு நன்றி! 

நெறியாளராகிய தாங்கள் (குணா) சாணிப்பால், சாட்டையடிக்கு எதிரான கம்யூனிஸ்ட்களின் களப்பணியை தற்போது, இதிலே கொண்டு வந்தது, மனத்திற்கு மகிழ்வைத் தந்தது! மீண்டுமொரு நன்றி! 

ஊடகவியாளர் மணி, மதிமுக சத்யா,மார்க்சிஸ்ட் பாக்கியம் நல்லப் பங்களிப்பு தந்தனர்; மனுஷ் விவாத்தில் சாரம் இருக்கவில்லை!

(புதிய தலைமுறை டிவி 19.10.15 நேர்படபேசு விவாதம் ஒட்டிய பதிவு)

----\\\\\

ஒரே அணி 'மக்கள் நலக் கூட்டியக்கம்' மட்டுமே!

ஜி.ராமகிருஷ்ணன் விமர்சனம் ஏற்கத்தக்கதும், அடிப்படை உள்ளதும் ஆகும். 

ஸ்டாலினின் நமக்கு நாமே பிரச்சாரம் முழுக்க சினிமாபாணி நடிப்பே! தற்போதுதான் விண்ணுலகில் இருந்து வந்தவர்போல் கோழிமுட்டை போடுவதையெல்லாம் பார்த்து வருகிறார் என்றால், என்ன கூத்து இது? 


ஐந்துமுறை தமிழகத்தை ஆட்சி செய்த திமுகவின் பிரதிநிதி, துணை முதல்வராக வீற்றிருந்த ஒருவர், சென்னை மேயர் பெருமகனாக இருந்தவரின் நடிப்பை ரசிக்கக்கூட முடியவில்லையே. 

விலைவாசி, ஊழல்-லஞ்சம், தீண்டாமை கொடுமை, வேலையின்மை, கல்வி வியாபாரம், விவசாயிகள் விளைப்பொருட்களுக்கு நியாயவிலை, நாடு காவிமயமாவது குறித்த கவலை... இப்படி மக்களின் துயரங்களுக்கு திமுகவிடம் என்ன மாற்றுக் கொள்கை இருக்கிறது? 

இந்த 'ரோடுஷோ'வில் திமுகவிற்கு கிடைக்கபோவதென்னமோ 'ப்ராய்லர் கோழிமுட்டை'யே! 

தமிழக மக்கள் இந்த மாலைநேர ஸ்டாலினின் நடிப்பை நிச்சயம் நம்ப மாட்டார்கள்! 

தமிழகத்தில் மாற்றுக் கொள்கை உள்ள ஒரே அணி 'மக்கள் நலக் கூட்டியக்கம்' மட்டுமே!

இன்று 19.10.15 PTTV நேர்படபேசுக்கு!

-----\\\\\

அச்சு ஊடக சங்கத்தை 
ஜனநாயகப்படுத்துவது எப்போது?

இன்று 19.10.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் மூத்த ஊடகவியலாளர்கள் ஞானி, சுபவீ., ஜென்ராம்..!

நிகழ்ச்சி சுயவிமர்சனமாக அமைந்தது, அமைத்து கொண்டது அருமை; ஆம், அருமை மட்டுமல்ல, இது ஒரு புதுத்தடம்! ஆம், தடுமாற்றம் எங்குதான் இல்லை; மனித வாழ்வில்? என்றாலும், அந்த தடுமாற்றத்தை "தடுமாற்றம்" நடந்துவிட்டது என்று இலை மறைவு தலைமறைவாகவாது ஒத்துக்கொள்வதும், அதற்கான மனநிலையை காண்பதும் எல்லாம் ஊடகத்துறையில் காண்பது அதிசயம்; அந்த அதிசயத்தைப் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்த்து என்பது பாராட்டக்கூடியது; இதர தொலைக்காட்சிகளும் (அரசியல் கட்சிகள் சார்ப்பற்ற; அரசியல் சார்ப்பற்ற என்று சொல்ல மாட்டேன்; அப்படி ஒன்று இருக்க முடியாது) பின்பற்றத்தக்கது!
அதேசமயத்தில் அது பாவமன்னிப்பு போன்றும் அமைந்துவிடக்கூடாது.

ஞானி சொன்னதுபோல் அச்சு ஊடகத்திலும் அதன் சங்கம் ஜனநாயக படுத்திவதிலும் கவனமிடுவது மிக அவசியமே!

3000 சொச்சம் உறுப்பினர்களின் சங்கத்தேர்தலை 125 கோடி மக்களின் பொதுத்தேர்தல்போல் "போட்டு எடுத்ததைப்" பொறுத்துக் கொள்ளமுடியாமல் புலம்பிய கோடானகோடியவர்களில் நானும் ஒருவன் எதையும் இங்கே பதிவு செய்கிறேன். இருந்தாலும் இந்நிகழ்ச்சியின் போக்கும், நோக்கும் பிடித்த கோடானகோடியவர்களில் நானும் ஒருவன்! நன்று! நன்றி தோழர் ஜென்ராம்!

----\\\\

ஜனநாயக நாட்டில் நாடாளுமன்றமே உயர்ந்தது!

ஜனநாயக நாட்டில், ஜனநாயக நடைமுறையில் இயங்கும் நாடாளுமன்றமே உயர்ந்தது. 

மற்ற அனைத்து துறையும் அதற்கு கீழானதே! இதிலே நீதித்துறைதான் நாடாளுமன்றத்தை விஞ்சப் பார்க்கிறது. அதை ஜனநாயகத்தில் ஏற்க முடியாது. 


ஆனால் ஒன்று... நாடாளுமன்றம் யார் கையில் இருக்கிறது என்பதை பொறுத்தே அதன் செயல்பாடு இருக்கிறது. 

எது எப்படி இருந்தாலும், இந்துத்துவாவாதிகளிடம் தற்சமயம் நாடாளுமன்றம் சிக்கி இருப்பதால், தமக்கு ஆதரவாக நீதிதுறையின் மாண்புகளையும் அது அரித்து விடாமல் பார்த்துக் கொள்வதும் இடதுசாரி, ஜனநாயக சக்திகளின் கடமையாக உள்ளது. 

பாசிசம் என்பது பழுதுபோல் கிடக்கும் பாம்பு; அதை கவனித்தே கையாள வேண்டியுள்ளது.

இன்று 19.10.15 PTTV மக்கள் மேடைக்கு!

----\\\\
கலைஞருக்கு சொத்து... 
2 தகர பெட்டியும், கட்சி ஆபீசுமா?

இன்று 20.10.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கண்ணன், திமுக கண்ணதாசன் நெறியாளர் கார்த்திகேயன்..!

முழுக்க ஸ்டாலின் நாடகம் குறித்து இருந்தது விவாதம்;  நாடகத்தில் ஆட்சியில் நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவிக்கிறாராம் ஸ்டாலின். 

அதாவது திமுகவை ஆதரித்தால், அல்லது எதிர்க்காமல் இருந்தால் கம்யூனிஸ்ட்கள் கொள்கை இவர்களுக்கு டாப் பாக தெரியும்; கலைஞர்கூட சங்கரய்யா, நல்லக்கண்ணு க்கு நடுவில் வந்து அமர்ந்துக் கொண்டிருப்பேன் என உச்சி குளிர்வார்; இல்லையென்றால் உடைந்துபோன ஓட்டை இசைத்தட்டையே உயிர் உள்ளவரை , கல்கத்தாவில் சைக்கிள் ரிக்ஷா வை இசைத்துக் கொண்டே இருப்பார்கள்! 

மேற்குவங்க ஜோதிபாசு ஆட்சியில், அவரது குடும்பத்தில், கட்சியில் ஒருவரை சன் டிவி குழுமம் அளவுக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் காட்ட முடியுமா? கண்ணதான் அவர்களே! தோழர் கண்ணன் தர்க்கரீதியாக வைத்த எதற்கும் பதில் அளிக்காமல், கைரிக்ஷாவிற்கு போய்விட்டார் பாவம் கண்ணதாசன்!

நிருபன் சக்கரவர்த்தியை பேசினார், கலைஞர் கருணாநிதி அவர்களின் அவரது குடும்பங்களின் சொத்து இரண்டு தகர பெட்டிகள்தானா? அதில் ஒன்றில் துணிகள், இன்னொன்றில் புத்தங்கள்தானா? கருணாநிதி கட்சி ஆபீசில்தான் தங்குகிறாரா? கட்சி தரும் அலவன்ஸ்சில்தான் வாழ்கிறாரா?

இந்த தகிடுதத்தம் வேலைகள் இனி தமிழகத்தில் எடுபடாது திமுகவே; எடுபடாது! உண்மை சுடுகிறதோ? சுடட்டும்; நன்றாக சுடட்டும்!

----\\\\

No comments:

Post a Comment