Saturday, 10 October 2015

கண்களில் 'கடகட' வென வந்துவிட்டது கண்ணீர்!

இன்று 4.10.15 இரவு 8 முதல் 9 மணி முடிய தந்தி டிவி "கேள்விக்கென்ன பதில்" நிகழ்ச்சி தற்செயலாக பார்க்க நேர்ந்தது.  கேள்வியாளர் ஹரிஹரன்... இவருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்...

ஜெனிவாவில் நடந்து கொண்டே உரையாடல்... அது எதார்த்தமாக இல்லை என்பது வேறு விடயம்..! ஆனால் செல்வம் அடைக்கலநாதனின் பதில் ஓர் எதார்த்தப்பதிவு என்றால் அது மிகையல்ல!

மாமேதை லெனின் வீரியமிக்க வரிகள்..."ஓரடி முன்னால் ஈரடி பின்னால்" இதற்கு உயிர் கொடுத்தார் செல்வம் கமலநாதன்.

தமிழகத்தில், தமிழீழ ஆதரவாளர்களும் சரி, தமிழ் மக்கள் ஆதரவாளர்களும் சரி... உணர்ச்சியின் வெள்ளத்தில் மூழ்கவோ மூழ்கடிக்கப்படவே பற்பல முயற்சிகள் நடக்கிறதைப் பார்க்கிறோம். ஆனால் செல்வம் சொல்கிறார்...

"சர்வதேச விசாரனை தற்போது இல்லை என்பது வருத்தம்தான்; ஆனால் முதல் கட்ட வெற்றியை அடைந்துவிட்டோம்; இந்த விசாரனைக்கு இலங்கை அரசு ஒத்துக்கொண்டதே... போர் குற்றம் நடந்திருக்கிறது என்று ஒப்புக்குக் கொண்டதற்கு சமம்; இதற்கு பின்னால் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இருக்கிறது; இதன்மூலமும், ஐநாவில் மனித உரிமை அறிக்கை சமர்பித்திட 130 நாடுகள் ஏற்றுக்கொண்டதன் மூலமும், சர்வதேச சமூகத்தின் பிரச்சனையாக இது மாறிவிட்டது; இனி அடுத்தக்கட்டத்திற்கு இந்த பிரச்சனையை எடுத்து செல்வது இந்த 25 நாடுகளின் பொறுப்பாகிவிட்டது; இதற்காக இந்தியா, தமிழகம் அரசுக்கும் நன்றி!" என்று அவர் பகிர்ந்தபோது கண்களில் 'கடகட' வென வந்துவிட்டது கண்ணீர்!

இதற்கு பெயர்தான் மனிதமென்பதா? அல்லது தொப்புள் கொடி உறவென்பதா? உரையாடல் அனைத்தும் உணர்வுபூர்வமாக, கள, தள நிலைமைகளை எதார்த்தமாக பதிவு செய்தார் செல்வம்! ஹரிஹரனும் கவனமுடன் அடியெடுத்து வைத்தும் மிகையின்றி இருந்தது எதார்த்தமாக! 

நாளைய பொழுது நமக்காக, இலங்கைவாழ் தமிழர் நலனுக்காக புலரும்; மலரும்! நம்பிக்கை ரேகை செல்வம் கமலநாதன் முகத்தில் படரவில்லை; இந்நிகழ்ச்சியை பார்த்த கோனாடகோடி தமிழ்மக்கள் முகங்களிலும்தான்! நன்றி தந்தி டிவிக்கும், ஹரிஹரனுக்கும்!

------\\\\\\

அப்ப..! மீண்டும் மொதல்ல இருந்தா?

"இலங்கை தமிழர் பிரச்சனை நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்து விலகினால், தீர்வு ஏற்படும் என்றால் விலகுகிறோம்" 

இப்படி சொன்னது யாரு? அவர்தான் மாற்றம், முன்னேற்றம் புகழ் மருத்துவர் அன்புமணி. எவ்வளவு விவரம் பாருங்க!


இவர்கள்தான் 50 ஆண்டு கால திராவிட ஆட்சிக்கும், ஊழலுக்கும் முடிவு கட்டுறாங்களாம். 

தைத்தான் திமுக, அதிமுக தலைமைகள் காங்கிரஸ், பாஜக வோடு கடந்த காலத்தில் கூட்டணி ஆட்சியில் பங்குபெற்ற போதும், ஆட்சி பங்கு பெறாமல் ஆதரவளித்தபோதும்.... 

இலங்கை தமிழர் பிரச்சனை வரும்போதெல்லாம், "நாங்க வெளியே வந்தா, தீந்திருமா?" ன்னு வீரவசனம் பேசினாங்க! 

அப்ப மீண்டும் மொதல்ல இருந்தா? திமுக அதிமுக வுக்கு மாற்று லட்சணத்தை தமிழக மக்களுக்கு 'உணர்த்தியதற்கு' நன்றி சின்னய்யா அவர்களே, நன்றி. 

ஆம்! பாமக வும், திமுக அதிமுக வும் ஒன்னு; ஜனங்க வாய்ல மண்ணுன்னு  ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தமைக்கு நன்றி. (செய்தி: தினமணி 6.1015)

----\\\\

மக்கள் நலக் கூட்டியக்கம் தமிழகத்தை ஆளுவதுதான் இதற்கு ஒரே தீர்வு!

ஒரு வழியாக பொறியாளர் தலித் மாணவன் கொலைக் குற்றவாளி யுவராஜ் இன்று 04.10.15 காலை 08 மணி செய்தியில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் 'காட்சியும், பேச்சியும்' தந்துவிட்டான்.

ஸ்காலாந்து போலீஸ்க்கு மீறிய தகுதி படைத்த தமிழக போலீஸ்,  அதுவும், சிபிஐ யை எடுத்து சாப்பிட்டுவிடும் தமிழக சிபிசிஐடி போலீஸ் 3 படை, சொறி, சிரங்கு அமைத்து இரவு பகலாக தேடி வருகிறது.

சேலத்தில் தினம் தினம் யாரையாவது பிடித்து விசாரி விசாரின்னு 8 மணி நேரம் 10 மணி நேரமுன்னு விசாரித்து தள்ளுகிறது. அனேகமாக இந்நேரம் 10,000 பக்கம் விசாரனை அறிக்கை தயாரித்து இருப்பர். அம்மா போலீஸ் சும்மா இருக்குமா?

வீரப்பனுக்கு மோருல விஷம் கொடுத்து பொணத்த சுட்டு புடித்த அம்மாவின் டீம் அடிவருடி  வெள்ளதொற கம்யூனிஸ்ட் உள்ளிட்டோர் நடத்திடும் ஜனநாயக போராட்டத்தையே சகிக்காமல் உள்ளே போடுங்கன்னு ஓப்பன் ஓயர்லஸ் ஓங்காரமிட்டானே, இப்ப என்னா பண்ணுவீங்க? மீசைய முறுக்கிட்டு பேட்டி கொடுக்கிறானே கொலைக்குற்றவாளி!

ஊடக தர்மம் வாழ்க! ஊடக உரிமை ஓங்குக! ஆம்மாம்..! அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் ஆந்திராவுக்கு ஓடிப்போனது யாரு? தமிழ்நாட்டு போலீசா? திருட்டு பயல்களா? யாரு?

தமிழகத்தில் கிரிமினல்கள் ஆட்சித்தான் நடக்கிறது என்பதற்கு வேறு சாட்சி வேண்டுமா?

இன்னும் எத்தனை கோகுல்ராஜ்களை, விஷ்ணுப்பிரியாக்களை தமிழகம் காவுக் கொடுக்க வேண்டுமோ தெரியவில்லை; தமிழகத்தின் ஆதிக்க ஜாதிகளின் ஜாதிவெறி கொலைகளைத் தடுக்க! தலித் மக்களின் சம உரிமைகளை நிலைநாட்ட?

இன்னேரம், தமிழகத்தில் நான் போலீசு மந்திரியாக இருந்திருந்தால் ராஜினாமா செய்திருப்பேன்; டிஐஜி யாக இருந்திருந்தால்....   அதற்காக டிஎஸ்பி போல் தூக்கில் தொங்கிருக்க மாட்டேன்; ராஜினாமா செய்திருப்பேன்; குறைந்தபட்சம் தமிழக மக்களிடம் மன்னிப்பாவது கேட்டு இருப்பேன்! 

-----\\\\\

சிபிசிஐடி விசாரனையில் 
முன்னேற்றம் கிடைக்காது.

இது எதும் நடக்காது இந்த ஆட்சியில்! ஆனால் 2016இல் சட்டபேரவை தேர்தலில் முடிவு கட்டவில்லையென்றால், தமிழத்தை கிரிமினல்கள் தான் ஆளுவார்கள்! ஆம் மக்கள் நலக் கூட்டியக்கம் தமிழகத்தை ஆளுவதுதான் இதற்கு ஒரே தீர்வு!

விஷ்ணுப்பிரியா சந்தேக மரணம் குறித்த தனிப்பட்ட விசியங்களை கசிய விடுவது தமிழக காவல்துறைதான். வேறு யாரு? விஷ்ணுப்பிரியா இறந்த தகவல் கிடைத்ததும், பூட்டிய வீட்டை உடைத்து உள்ளே போய் " அனைத்து ஆவணங்களை" கைப்பற்றியது காவல்துறைதானே! அவர் எழுதியதாக கூறப்படும் கடிதம் உள்பட முதலில் தந்ததும் காவல்துறைதானே! 

பெண்கள் மட்டுமல்ல தலித் மக்கள் பிரச்சனைகளை அணுகுவதில் குறைபாடு உள்ளது. சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பதில் அரசியல் எல்லாம் கிடையாது. மரணம் நிகழ்ந்த காவல்துறை அதிகாரிகளே விசாரித்தால் நிச்சயம் நியாயம் கிடைப்பது மட்டுமல்ல உண்மை வெளியவே வராது. 

யுவராஜ் சரணடைந்தாலோ, உயிரோடு பிடிக்கப்பட்டாலோ தான் கோகுல்ராஜ் கொலை வழக்கில் முன்னேற்றம் கிடைக்கும். ஆனால்  வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். சிபிசிஐடி விசாரனையில் முன்னேற்றம் கிடைக்காது.

இன்று 10.10.15 PTTV நேர்பட பேசு க்கு.

----\\\\

தர்மம் மறுபடியும் வெல்லும்!'

இன்று 6.10.15 காலைக்கதிர் செய்தி தாளில் ஒரு செய்தியை உற்பத்தி செய்து இருக்கிறார்கள். இருந்தாலும் ஒரு உண்மையை ஒத்துக்கொண்டு இருக்கிறார்கள். 

அதாவது நடந்து முடிந்த செப் 2 வேலைநிறுத்தம், "... எப்படியோ தப்பித்து பெரும் வெற்றி பெற்றது" என்று. இதற்கு நன்றி.

'அரசியல் சதுரங்கம் ' என்பதில், 'புகைச்சல் கிளம்பியிருச்சு' தோழர் புத்ததேவ் வை ஓரம் கட்டிவிட்டார்கள் என்று அவரது ஆதரவாளர்கள் குமுறுகிறார்களாம்... 

அட கூறு கெட்ட கூவே... செப் 2 ஸ்டிரைக் மட்டுமல்ல... சமீபத்தில் நடந்த மாணவர் சங்க தேர்தலில் மாபெரும் வெற்றி. அதுமட்டுமல்ல நடக்க இருக்கிற உள்ளாட்சி  தேர்தலில் இடதுசாரிகளுக்கு வெற்றி உறுதியின்னு தெரிந்து, இப்ப வன்முறை வெறியாட்டத்தில் மம்தா கட்சி அரசே இறங்கியுள்ளது. இந்திய மாநிலங்களில் எதிலும் நடந்திராத வன்முறை நடக்கிறது. தேர்தலை ரத்து செய்ய கோரிக்கை வலுத்துள்ளது. 

ஓரளவாவது நியாயமாக நடத்தினால் இடதுசாரி வெற்றி உறுதி. ஆம், உள்ளாட்சி தேர்தலில் மட்டுமல்ல, சட்டமன்ற தேர்தலிலும்தான்.
'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மறுபடியும் வெல்லும்!'

-----\\\\\

ஆடிட்டர் வகையறாக்களே.. நிறுத்தும்!

இன்று 6.10.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் தோழர் கே.கனகராஜ் சிபிஐஎம், ஆடிட்டர் பிரபாகர் இவர்களுடன் நெறியாளர் ஜென்ராம். முழுதும் பார்க்க முடியவில்லை. பார்த்தவரை....

சிபிஎம் எம்பி கேட்டு ஜெயலலிதா காலில் விழுந்ததாம்; கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு கோடான கோடி மக்கள் பார்க்கிறார்கள் என்றுகூட 'அவைஅடக்கம்' இல்லாத கோமகன் வகையறாக்கள் ஜெயலலிதா காலிலும், சங்கராச்சாரியார் காலிலும் வேண்டுமானால் விழுந்து இருக்கலாம்; அந்த பழக்க தோஷசத்தில் சொல்கிறார் வெகுதிமிராக! 

கம்யூனிஸ்ட்கள் காலில் விழும் கலாச்சாரத்தை மாற்றி, சரிநிகர் சமுதாயத்திற்கு பாடுபடுபவர்கள். இது போன்று வாய் புளித்ததா? மாங்காய் புளித்ததா? மாதிரி பேசுவதுதான் பார்ப்பனியமோ? ஆம்! ஆதிக்க மனோபாவம்! 

பசுவதை என்பதைத் தடுக்க வேண்டுமென சட்டம் சொல்லுதாம் ஆடிட்டர் சொல்கிறார். இவர் பாஜக அல்ல; ஆனால் பாஜகவுக்கு கூஜா தூக்குபவர். சரி, 
மனிதனை வதை செய்யலாமென சட்டம் சொல்லுதா? 

மூஸ்லீம் என்பவர்களை கொத்துக் கொத்தாக குஜராத்தில் மோடி அரசே கொன்று குவித்தே அன்று. சாமியார்கள் மரணத்திற்கு காரணமானவர்களை பிடித்து சட்டத்தின் முன் அல்லவா நிறுத்திருக்க வேண்டும்? இந்த பீலாவிடுற வேலையெல்லம் நிறுத்தும்மய்யா ஆடிட்டர் வகையறாக்களே.. நிறுத்தும்!

------\\\\\

பசு கறி வேறு, மாட்டுக்கறி வேறு?!

இன்று 7.10.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சி காலை 9 மணிக்கு அதன் சுருக்கம் பார்த்தேன்.

'துறவரம்' முடித்து மீண்டும் பாஜக வின் மாநில பொருளாளர் சேகர் அவர்களின் பிரவேசம் பார்க்க முடிந்தது  போலும்! 


இதுதான் மீடியாவின் பலமோ? அல்லது பாஜகவின் பலவீனமோ? 

எது எப்படி இருப்பினும் பாஜக வின் அதிகாரபூர்வ மானவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பு நன்று. வரவேற்கதக்கது. 

நித்தியானந்தன், நாராயணன், பிரபாகர் என 'பாஜக ஆதரவாளர், சமூக ஆர்வலர், ஆய்வாளர்' சில முகமூடிகள் வந்து விழி பிதுங்கி, சிக்கி திணறி போவதைவிட இது மேல்; மட்டுமல்ல, விவாதங்களில் ஒரு 'பொறுப்பு' இருக்கும். (அவர்களின் பொறுப்பும், நீங்களும்  என்று என்னை நீங்கள் மனதுக்குள் திட்டுவது தெரிகிறது) 

பிரபல எழுத்தாளர் நயன்தாரா அவர்களின் தனது 88 வயதில் தான் பெற்ற சாகித்திய அகாடமி விருதை திருப்பி அனுப்பிவிட்டு, "பாரத தேசமே... பாசிச தேசமாகாதே!" என்ற அவரின் குமுறலை, மனுஷ் ம், ஜென்ராமும் கவலையுடனும், ஆரோக்ரோசத்துடனும் விவாதித்தனர். 

சேகர் பசு கறி வேறு, மாட்டுக்கறி வேறு ன்னு புதுகரடி ஒன்றை விட்டார். அடபாவிகளா? அண்ட புளுகு, ஆகாச புளுகு என்பது இதுதானோ?

------\\\\\

எந்த மகாபாரதம் 
இன்று நமக்கு தேவை?
??????//////??????//////
மகாபாரதப் போரில் அர்ச்சுணனுக்குத் தேர் ஓட்டியாக கிருஷ்ணனுக்குப் பதிலாக புத்தர் இருந்திருந்தால் என்னவாயிருக்கும் என்று வரலாற்றியல் அறிஞர் ரொமிலா தாப்பர் வேடிக்கையாக வினா எழுப்பினர். புத்தர் அர்ச்சுனனிடம், "இந்த போர் தேவையா?" என்றுதான் கேட்டிருப்பார் என்றும் அவர் கூறுகிறார்.

அவர்கள் ஒவ்வொரு முறை தேரில் ஏறும் போதும் நமக்குப் பிரச்சனைதான். அத்வானியின் தேர்தானே இந்த நாட்டின் மத ஒற்றுமையின் மேலேறி ஓடியது!

அவர்கள் எதிரிகளாய் காண்பவர்கள்தாம்  நம் குருட்சேத்திரப் போரின் நம் அணி!

இந்த முறை நாம் தேர் ஏறுவோம்! மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் தான் நம்முடைய தேர் ஓட்டிகள்! மனித மனங்களை வெல்லும் மகாபாரதப் போர் தொடங்கட்டும்!

(நன்றி: அக்: 2015 செம்மலர்)

------\\\\\

அடங்கா பணப்பசியுமே காரணம்! வேறென்ன? 

விஜய்காந்த் சொல்லுவது புரியவில்லை. மற்ற கட்சிகளை வளர வைப்பதா திமுக அதிமுக வேலை? 

இவர்களின் மக்கள் விரோத போக்குகளை மக்களிடம் சொல்லி, மக்களை தங்களுக்கு ஆதரவாக திரட்டுவதுதான் புதிதாக வரும், அல்லது சிறிய கட்சிகளின் பணியாக இருக்க வேண்டும். 

தேர்தல் நேரங்கள் உள்ளிட்டு மற்ற எல்லா நேரங்களிலும், சிறிய கட்சிகள் தமிழகத்தில் உடைவதற்கு பெரிய கட்சிகளின் (திமுக அதிமுக)  பதவி மோகமும், தாங்களே ஈரேழு ஜென்மத்திற்கும் ஆளவேண்டும் என்ற அடங்கா பணப்பசியுமே காரணம். வேறென்ன? 

மக்கள் நலன் என்பது சிறு கொறுசுதான் அதிமுக திமுகவுக்கு!

இன்று 7.10.15 PTTV நேர்படபேசுக்கு!

----\\\\

இதற்கு என்ன சொல்லப்போகிறது 'காவிக்கூட்டம்?'

எழுத்தாளர் நயன்தாரா சேகல் சாகித்ய அகடாமி விருதை திருப்பி தந்தபோது 'அவர் நேரு குடும்பம்' என சாயம் பூச முற்பட்டனர். 

இன்று மீண்டுமொரு பிரபல எழுத்தாளர் அசோக் வாஜ்பாய் சாகித்ய அகடாமி விருதை துறந்துள்ளார். நயன்தாரா சொன்னது நூற்றுக்கு நூறு சரி; 

சகிப்புத்தன்மை கிடையாது; பாசிச ஆட்சி முறையே ஆளுமையில் இருக்கிறதென்கிறார். இதற்கு என்ன சொல்லப்போகிறது 'காவிக்கூட்டம்?'

-----\\\\\

குடும்ப அட்டை போதுமானது!

ஆதார் அட்டை அரசு திணிப்பதுதான் மர்மத்திலும் மர்மமாக இருக்கிறது. 

கண்கண்ணாடி அணிந்திருந்தால் அதை கலட்டச்சொல்லி போட்டோ எடுத்தார்கள்; கை ரேகைகள் எல்லாம்  எடுத்தார்கள்; என்னமோ 'இந்திர லோகத்திற்கு ' அனுப்புவதுபோல் செய்தார்கள்! 

இருக்கிற குடும்ப அட்டையை இந்திய துணைக்கண்டத்திற்கு போதுமானது! 

ஏன்தான் இப்படி கொடுமை படுத்துகிறார்கள் என்று யோசித்தால், நமது அத்தனை ரகசியங்களையும் 'ஆன்லைன்' போட்டு, நவீன அடிமை ஆக்கும் முயற்சியோ என தோன்றுகிறது. 

ஏகாதிப்பத்திய அடிமை நாடாக மாறும்போது நம்மை 'மாடுகள்' ஆக்கி  அடகு வைத்துவிட்டு,  120 கோடி மனிதர்களை அடகு வைக்கும் வேலையோயென பாமர மக்கள் அஞ்சுவதில் நியாயம் இல்லாமலில்லை என்றே தோன்றுகிறது இதில் அரசு அழுத்தம் தருவதைப் பார்க்கிறபோது!

இன்று 8.10.15 PTTV மக்கள் மேடைக்கு!

-----\\\\

"பேய் ஆட்சிச் செய்தால்..!

சாகித்திய அகாடமி விருதை நயன்தாரா சஹல் மட்டும் திருப்பித் தரவில்லை; அசோக் வாஜ்பாய் என்ற எழுத்தாளரும் திருப்பி தந்துவிட்டார்; தந்ததோடு மட்டுமல்ல சஹல் சொன்ன பாசிச ஆளுமையே இன்று கோலோச்சுகிறது என்பதையும் ஆதரித்துள்ளார். 

ஆகவே இந்த பாஜக ஆட்சியில் பாசிசப்பாணி தலையெடுக்க ஆரம்பித்து விட்டதையே இது காட்டுகிறது. மேலும் அறிவுஜீவிகள் முதல் அன்றாடம் காச்சிகள் வரை உயிருக்கு பாதுக்காப்பு இல்லை என்பது கொஞ்சம் கொஞ்சமாக நிரூபணமாகி வருகிறது. 

இதைத்தான் மகாகவி பாரதி, "பேய் ஆட்சிச் செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்றாரோ?

விருதை திருப்பித் தருவது அரசியலாக பார்க்காமல், அரசும், அரசை வழிநடத்தும் பாஜகவும் 'கொலை' அரசியலில் இருந்து வெளியே வந்து, மாடுகள் உயிர் மீது செலுத்தும் கவனத்தில், ஒரு கடுகளவாவது கவனம் செலுத்தி மனித உயிர்களை காத்திடல் வேண்டும். 

இன்று 8.10.15  PTTV நேர்படபேசுக்கு!

-----\\\\\

உரிய கவசங்களை அணிந்து செல்வது நன்று.

ஸ்டாலினின் 90% இந்துக்கள் திமுகவினர் என்பது, அதன் மத நல்லிணக்கம் என்பதன் கோட்பாட்டில் அரிப்பு ஏற்பட்டிருப்பதைதே காட்டுகிறது. 

இதில் ஆச்சரியப் படவோ, அதிர்ச்சி அடையவோ ஒன்றுமில்லை. திமுக தலைவர் கருணாநிதிக்கு மஞ்சள் துண்டு வந்து, நிரந்தரமானபோதே திமுகவின் பகுத்தறிவு கொள்கைக்கு வேட்டு வைக்கப்பட்டுவிட்டது. 

தலைவர் எவ்வழியோ அவ்வழி பொருளாளர் வழியும்; பொருளாளர் எவ்வழியோ அவ்வழியே உடன்பிறப்புகளின் வழியும் என்றாகிவிட்டது. 

ஓட்டுக்காக, ஒன்றிரண்டு சீட்டுக்காக ஆட்சிக்காக எந்தவித சமரசத்திற்கும் அஞ்சாதவர் கலைஞர்!

இன்று 9.10.15 PTTV நேர்பட பேசுக்கு!

----\\\\

பிரசன்னாவின் ஆத்திரமும், 
நாராயணனின் ஆதரவுமே சாட்சி. 

நிகழ்ச்சியில் தோழர் அருணன் மார்க்சிஸ்ட், பிரசன்னா திமுக, நாராயணன் பாஜக, கோவி.லெனின் பத்திரிக்கையாளர், இவர்களுடன் கார்த்திச்செல்வன் நெறியாளர்...

அருணன் வைத்த தர்க்க ரீதியான வாதத்திற்கு பதில் சொல்ல முடியாமல், இஎம்எஸ், ஜோதிபாசு, நாயனார் ஆகியோரை வம்புக்கு இழுத்தற்கு காரணத்தை அவர் மிக தெளிவாக சொல்லிவிட்டார். 

அதாவது  ஆர்எஸ்எஸ் வேறாம்; பாஜக வேறாம்! உடனே நாராயனன் சொன்னார் இரண்டு ஒன்றென்று!  இதற்கு பதில் அளிக்காமல் கம்யூனிஸ்கள் மீது விஷம் கக்குகிறார். ஆகவே ஸ்டாலின் கும்பிட்டார் என்பதற்கு ஆதாரம் பிரசன்னாவின் ஆத்திரமும், நாராயணனின் ஆதரவுமே சாட்சி. 

தோழர் அருணன் இனிமேல் சட்டமன்றத்திற்கு போவதுபோல் இதுபோன்ற மன்றத்திற்கு போகும்போது உரிய கவசங்களை அணிந்து செல்வது நன்று.

என்னமோ நடக்குது; மர்மமாக இருக்குது! திமுக பாஜக  க்குள்! ராமானுஜம் தொடர் வரும்போதே சந்தேகங்கள் எழுந்தன. அது கொஞ்சமாக நிருபனமாகி வருகிறதென்பதே இன்றைய இந்த நிகழ்ச்சி உணர்த்துகிறது.

-----\\\\

No comments:

Post a Comment