Sunday, 20 March 2016

"பார்ப்பனிய திமிர்;  பாசிச குரல் என்பது ..!"
"... கம்யூனிஸ்கம்யூனிசி கம்யூனிஸ்ட்சித்தாந்தம் என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. வன்முறையை தூண்டுவது. எதிரான கருத்துகள் சொல்பவர்களை கேரளா உள்பட அவர்கள் ஆளும் மாநிலங்களில் காணலாம். என்னை
பொறுத்தவரைமா.கம்யூனிஸ்ட்கள் என்பது, மர்டர் கம்யூனிஸ்ட்கள் ஆகும்".
 "இந்த கம்யூனிஸ்ட்கள், தமிழகத்தில் மதிமுகவுடன் இணைந்து ஒரு மக்கள் விரோத (நல) கூட்டணியை உருவாக்கி உள்ளனர். இந்த கூட்டணியில் வைகோ இருப்பதால், இன்னும் 30 நாட்களில் இந்த கூட்டணி நிச்சயம் உடையும். ஏனென்றால் வைகோ ஒரு நிலையற்றவர்..!"
இப்படி சாக்கடை நாற்றத்தைவிட மோசமாக பேசியிருக்கிறார்...
எச்(சில்).ராசா..! (தினத்தந்தி 19.03.16)
இதற்கு பெயர்தான் பார்ப்பனிய திமிர் என்பது! பாசிச குரல் என்பது! இதுதான் தேசவிரோதக் கருத்து என்பது! இந்த ஆர்எஸ்எஸ் இந்துத்துவா வெறியின் உச்சம் என்பது!
2002 இல் குஜராத்தில் அரசு உதவியுடன், இன்றைய பிரதமர் அன்று முதல்வராக இருந்தபோது 3000 சிறுபான்மை இஸ்லாமியர் நரவேட்டை (கொன்று குவித்தார்களே) அது என்ன தேசக்தியா? தேசபிதா வை சுட்டு கொண்டார்களே ஆர்எஸ்எஸ் வெறியன் நாதுராம் கோட்சே அது என்ன தேசபக்தி..?  நாடு சுதந்திர போரிலும், அதன் பின் இன்று வரை நாட்டு மக்கள் நலனுக்கு தன் இன்னுயிரையும் ஈந்து வருகிறார்களே கம்யூனிஸ்ட்களே... அது தேசபக்தியா? ஆர்எஸ்எஸ் பஜாக வின் நரவேட்டை தேசபக்தியா?
முள்ளை முள்ளால் எடுப்பது என்பார்களே... அந்த கலையில் நான் ப்ரிக்கேஜ்; இதில் பட்டம், பட்டயம், முனைவர் பட்டம் பெற்றவர்கள் பொருத்தமான "ஆப்" வைக்கலாமே! இம்... நடக்கட்டும்..!
---\\\

"திமுகவுக்குள்...
ஏ டீம்... பீ டீம் என்பதா?"
#இன்று 20.3.16 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கே.கனகராஜ், மமக அப்துல்சமது, இவர்களுடன் நெறியாளர் ஜென்ராம்...
#மமக அப்துல் சமது-




"மேற்கு வங்கத்தில் இஸ்லாம் மக்களுக்கு ஒ என்ன செய்துவிட்டீர்?" என்று திமுகவை திருப்தி படுத்தவே என்பதை தவிர வேறொன்றுமில்லை; இது மார்க்சிஸ்ட் கே.கனகராஜ்- " சரி, எங்களது ஆட்சியில், எங்களது நிலைபாட்டில் கடந்த காலத்தில் சில குறைபாடுகள் இருந்தது; ஆனால், முஸ்லீம் மக்களுக்கு மேற்கு வங்கத்தில் இருந்ததைபோல், நிலமற்ற முஸ்லீம்களுக்கு நிலம் பகிர்ந்தளித்து; அரசு பணிகளில்போன்றவற்றில் தமிழகத்தில் திமுக என்ன செய்துவிட்டது?" என்றதும் கையறு நிலைக்கு போய்விட்டார்! பொதுவாக இதுமாதிரியான விவாதங்களில் அதிமுக, திமுக வுடன் அணி சேரும் வளரும் கட்சிகள் 'அவர்களுக்கு' வக்காலத்து போடுவது நெருடல்; துரதிஷ்டம்!
#மீண்டும் கைரிக்சா என கலைஞர் டோனை சமது சமர்பித்தார்; அதற்கு- "எந்த நவகாளியில் இருந்து காந்தி கண்ணீர் வடித்தாரோ... அந்த நிலையிலா இப்போது..? தலித் தலித் அல்லாதவர் மோதல் இதர மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் நடப்பது போலவா அங்கு நடக்கிறது? மனிதர் மலத்தை மனிதர் அள்ளும் 'புனிதம்' இன்னும் அங்கு நடக்கிறதா?" என கனகராஜ் கேள்விக்கு சமதுவிடம் மவுனமே பதிலாக இருந்தது!
#நேற்றுவரைஅதிமுகவுடன்இன்று திமுகமதசார்பற்ற அணியாஇடதுசாரிகளுடன் இணைந்து பணியாற்றாமல் எப்படி இடதுசாரி சக்திகளை பலப்படுத்து? என்ற அர்த்தமுள்ள ஜென்ராம் கேள்விக்கு சமது நழுவினார்! எனக்குள் ஒரு கேள்வி வேறு வந்து தொலைக்கிறது... "அதென்ன மகனிடம் மமகவும், அப்பாவுடன் எஸ்டிபிஐயும் ஒரே நாளில் உடன்பாடு?; ஓ... இரு திமுகவா? அல்லது திமுகவுக்குள் ஏ டீம்... பீ டீம் என்பதா?" எல்லாம் அவர்களுக்கே வெளிச்சம்!?
---\\
"மார்ச் 28 முதல் ஏப்ரல் 3 முடிய சேலம் மாவட்டத்தில்  வீடுவீடாக துண்டறிக்கை தந்து ஆதரவு திரட்டல்!"
##
சேலம் மாவட்ட மக்கள் நலக் கூட்டணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று 19.3.16 மாலை 7 மணிக்கு, சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது.
தலைமை: ஆ.ஆனந்தராஜ் மதிமுக மாநகர மாவட்டச் செயலாளர், சேலம் கோ. ஜெயச்சந்திரன் விசிக மாநகர மாவட்டச் செயலாளர், ஏ.மோகன் சிபிஐ மாவட்டச் செயலாளர், பி.தங்கவேலு சிபிஎம் மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்!
முடிவு:
1).வரும் 28.3.16 அன்று மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும்-- தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய \ நகர \ பேரூர் நிர்வாகிகள் கூட்டம் நடத்திடல் வேண்டும்; இதற்குள் வாக்குச்சாவடி ஒன்றுக்கு 40 பேர் வீதம் "பூத் கமிட்டி" அமைத்திடல் வேண்டும்.
2). 3.4.16 அன்று மாவட்டம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் "மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல் திட்டம்" விளக்க துண்டறிக்கையை வீடுவீடாக கொண்டு சென்று, மக்களிடம் ஆதரவு திரட்டிடல் வேண்டும்.
3). தொகுதிக்கு குறைந்தபட்சம் 25 ஆயிரம் துண்டறிக்கை வெளியிடல் வேண்டும்.
##
சிபிஎம்  டிகேஆர் எம்பி நிதியில் கொல்லிமலையில் உயர்ந்து நிற்கும் ஆரம்ப சுகாதார மருத்துவமனை..!
##
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வாழவந்திநாடு கிராமத்தில் ரூ31 லட்சத்தில் சிபிஎம் மாநிலங்களவை உறுப்பினர் டிகே.ரங்கராஜன் எம்பி நிதியில் கட்டப்பட்டு, இயங்கி வரும் ஆரம்ப சுகாதார மருத்துவமனையை இன்று 19.3.16 பார்வையிட்டார்;
அப்போது... உடன் நாமக்கல் மாவட்ட செயலாளர் ஏ.ரங்கசாமி, மாநிலக்குழு உறுப்பினர் என்.சீனிவாசன், டிகேஆர் உதவியாளர் எஸ்ஆர்எஸ்., மருத்துவர்கள், மலைவாழ் மக்கள் மற்றும் தோழர்கள்...
##
மக்கள் நலக் கூட்டணி,  அதிமுக, திமுக, பாஜக  ஆகிய  கூட்டணிகளே இருக்கும்! பாமக பாஜகவுடன் போகும்!
தமாக விற்கு அதிமுக வில் இடம் கிடையாது; அதற்கு பொருத்தமானது மக்கள் நலக் கூட்டணியே!  பாஜக பாமக வுடன் போனால், அசிங்கம்!
தேமுதிக மக்கள் நலக் கூட்டணியில் சேராவிட்டால், தனியாக ஒருபோதும் நிற்காது; பாஜக வுடன் சாய்ந்திடவே வாய்ப்பு அதிகம்; திமுக வுடன் போனால் அசிங்கம்!
இன்று 18.3.16 PTTV நேர்பட பேசு!
--\\
#சிறுசிறு அமைப்புகளை பெரிய கட்சிகள் தேடுவது  தோல்வி பயம்!
#பெரிய கட்சிகளை சிறு கட்சிகள் நாடுவது ஓரிரு சீட்டுக்கு(ம்,
நோட்டுக்கும்!)
#தேர்தலில் சிறுசிறு அமைப்புகளால் மாற்றம் நிகழாது!
#மக்கள் நலக் கூட்டணி மட்டுமே 'உண்மை' மாற்று; மற்றவை 'பொம்மை' மாற்று!
--\
சிபிஎம் தேர்தல் நிதி-அளிப்பு!
தென் சென்னை மாவட்டம் மின்னரங்கம் இடைக்குழு  சிபிஎம் தேர்தல் நிதி வழங்கும் நிகழ்வு-17.02.2016.
##
கிண்டி விபி சிந்தன் நினைவகத்தில் வி.பங்குனியான் தலைமையில் இடைக்குழு செயலாளர் ஏ.பழனி...
தமிழ் மாநிலக்குழு உறுப்பினரும், சேலம் மாவட்ட செயலாளருமான பி.தங்கவேலு விடம் ரூ1 லட்சம் 2வது தவணையாக வழங்குகிறார்...
உடன் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்எஸ். சுப்ரமணியன் மற்றும் தோழர்கள்..!
##
வரலாற்றில்...
இதொரு
அரிய...
அதிசய...
நிகழ்வு...!
ஆம்,
காயித் மில்லத் விருது தனக்கு பெருமையைச் சேர்த்துக் கொண்டதன் மூலம்...
"சுயநலவாதி" ஆகிவிட்டது! 
வாழ்க!
எம்மான்...
தோழர் என்எஸ்..!
---\
"நாட்டில் லட்சம் பிரச்சனை இருக்கு; அத தீர்க்க துப்பில்ல..! செல வக்கிறாங்களாம் செல..!"
???
மோடிக்கு லண்டனில் மெழுகு சிலையாம்! அதற்கு இப்படி அனைத்து டைரக்சனிலும் இளம் பெண்கள் அளவெடுப்பதை அனைத்து டிகிரியிலும் படமெடுத்து போடுவதன்மூலம் ஆட்சியாளர்கள் எதை நிறுவிட நினைக்கிறார்கள்?
மோடிக்கு மெழுகு பொம்மை வைத்தால் என்ன...
களிமண் பொம்மை வைத்தால் என்ன... அப்படியே...
அதில் "2002இல் குஜராத்தில் முதல் அமைச்சராக இருந்த அரசு எந்திரத்தை ஏவி, 3000 அப்பாவி முஸ்லீம் மக்களை நரவேட்டை ஆடிய நரேந்திர நரவேட்டை மோடி" என தவறாது எழுதி வையுங்கள்!
அப்பொழுதுதான் வரலாறு காறி துப்பும் அந்த மெழுகு சிலைமீது! அதுதான் சிறப்பு சேர்க்கும் மரியாதையாக இருக்கும்! செய்வீர்களா?
த்தூத்தேறி..!
அளவு எடுக்கறாங்களாம்... அளவு..!
அதை படம் பிடிக்கிறார்களாம்... படம்! கெடக்கறது கெடக்கட்டும் "கெழவியத்  தூக்கி மலமீது வை" யின்னானாம்  ஒருத்தன்!
நாட்டில் லட்சம் பிரச்சனை இருக்கு; அத தீர்க்க துப்பில்ல..! செல வக்கிறாங்களாம் செல..
???
# காவல்துறையின் காட்டுமிராண்டி போக்கு மாறணும்! மாற்றணும்!
# இது விசாரனை முறையல்ல; ஒருவரை 'மேலோகம்' அனுப்பும் அராஜகமுறை!
# இது 101% மனித உரிமை மீறல்!
# சிறுவன் காதோடு போச்சே என சந்தோசப்படுக!இதுதான் இன்றைய நிலை!
# கொடுமையிலும் கொடுமை சிகிச்சை இன்றி அங்கும் இங்கும் அலைகழித்தது!
# தலைநகர் சென்னையே இப்படி என்றால், மற்றபகுதி அதோகதி!
# உயிரை எடுப்பதில் காவல்துறையும், மருத்துவத்துறையும் மன்னாதி மன்னர்கள்!
# காவல்துறை, மருத்துவத்துறை அராஜகத்திற்கு தீர்வு- மக்கள் நலக் கூட்டணி ஆட்சியே!
# இன்று 16.3.16 PTTV நேர்படபேசு!
--//
"கொழுப்பையும், கொட்டத்தையும் அடக்குவோம்! மநகூ ஆட்சியை அமைத்திடுவோம்!"
ஒருவர் கொலுசுலே கொளுத்து போகிறார்... இன்னொருவர் மழைவெள்ள நிவாரண பொருள்களில் மிதந்து போகிறார்! அவருக்கு கொலுசுலே கொழுப்பு! இவருக்கு டிரஸ்லே கொழுப்பு! எதிலே கொழுப்பு வெளிப்பட்டாலும் கொழுப்பு கொழுப்புத்தான்!
கொழுப்பெடுத்து திரியும், அதிமுக திமுக கொழுப்பை சுண்ட வைப்பது... ஒன்றே ஒன்றுதான்... ஆம், அது-- மக்கள் நலக் கூட்டணிதான்! அது-- கையில் ஆட்சி அதிகாரம் வரும்போதுதான், அல்லது வந்தால்தான்-- இவற்றின் கொழுப்பையும் (பணத்தையும்), கொட்டத்தையும் (சொத்தையும்) பறிமுதல் செய்து-- அதை அனைவருக்கும் பறிமாற முடியும்!
இவங்க கொலுசும் தருவாங்க! கொலையும் செய்வாங்க! இவங்க ஸ்டிக்கரும் ஒட்டுவாங்க! ஸ்டீரீட்டிலும் நிறுவாங்க! ஆகவே அங்கங்கள... (திமுக அதிமுக) ஸ்டீரீட்ல நிறுத்துவோம்! இவங்கள... (மக்கள் நலக் கூட்டணியை) பவர்ல அமர்த்துவோம்! அதுக்கு நம்ம பவரக் காட்டுவோம்!
ஸ்டிக்கரை ஸ்டீரீட்டில் நிறுத்துவோம்! கொலுசு கொழுப்பை அடக்குவோம்!
--//
"பாரத மாதா வாழ்க என சொல்லாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறலாம் என பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறி உள்ளாரே..." என இன்று 16.3.16 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் நெறியாளர் ஜென்ராம் கேட்டார்... உடனே பாஜக தேசிய செயலாளர்களில் ஒருவரான வானதி சீனிவாசன்-- "யாரும் அப்படி செல்லவில்லை" என மிக இயல்பாக கூறிவிட்டார். அதுபோலத்தான் உடுமலை தலித் சங்கர் படுகொலை விவகாரத்திலும் "ஆளுக்கும் முன் கண்டித்தார்; ஆர்எஸ்எஸ் சில் தலைகீழ் மாற்றம் வந்துவிட்டது; எங்களின் லட்சியமே சமதர்ம சமுதாயம் மாற்றமே" என்பதுபோல் விளாசி தள்ளினார். அசந்து போனது விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரும், ஜென்ராமும் மட்டுமல்ல... நாமும்தான்! இனிமே பொதுடைமை இயக்கத்திற்கு வேலை இல்லையோ?!
---///
#காவல் துறையா?
தலித் பிணங்களை எரிக்கும் துறையா? 
மிக சமீபத்தில் நாகையில் தலித் பெரியவர் பிணத்தை உறவினர்களின் விருப்பத்தை மீறி, போலீசே  'அடக்கம்' செய்தது; தடியடி செய்து அராஜகம் செய்தது?
#அதுபோல் உடுமலை சங்கர் உடலையும், பெற்றோர் விருப்பத்தை மீறி, தடியடி நடத்தி, கைது செய்து, அராஜகமாக போலீஸ் 'அடக்கம்' செய்தது சங்கர் பிணத்தை!
#அடக்கம் செய்யப்பட்டது வெறும் பிணமா? அல்லது அடக்கம் செய்ய வேண்டியது அதிமுக அரசின் தலித் விரோத குணமா?
#எது... எது..?!
---///
"ஒழிகஅதிமுகவின் கள்ளச்சாராய ஆட்சி!"
??
வட சென்னையில் கள்ளச்சாராய கும்பலால் சிபிஎம் முகிலன் படுகொலை! வன்மையாக கண்டிப்போம்! இதென்ன படுகொலை நாடா? தமிழ்நாடா? 
அதிமுகவின் டாஸ்மாக் ஆட்சியில் கள்ள சாராய சாம்ராஜ்யம் ஒழிக! அம்மா வந்ததும் ஆந்திரா ஓடிப் போனவர்கள் அம்மா  இருக்கும்போதே மீண்டும் வந்துவிட்டார்களா? கள்ளச்சாராய ரவுடிகள் ஓடியிருந்தால்தானே ஓடி வருவதற்கு என்கிறீர்களா? அதுவும் சரிதான்!
ஆம், மம்மி மாற்று டாடி அல்ல; மக்கள் நலக் கூட்டணிதான்; அதுதான் இந்த கள்ளச்சாராய ரவுகளுக்கு மரண அடி கொடுக்கும் ஒரே மாற்று!  களப்பலியான எழிலனுக்கு வீர வணக்கம்!
அதிமுக அராஜக ஒழியும் நாள் குறிக்கப்பட்டு விட்டது! ஒழிகஅதிமுகவின் கள்ளச்சாராய ஆட்சி!
??
//ஏன் மம்மி நலக் கூட்டணிக்கு பலமில்லையா?//
என்ற எதிர்வினைக்கு...
###
"டாடி" நலக் கூட்டணியின் பேடித்தனம் கண்டு அழுவதா? சிரிப்பதா? தெரியவில்லை!
இப்பவே 29 மிகப்பெரிய அமைப்புகள் அணிவகுத்து வந்துள்ளதே...
எதற்காக "டாடி நலக் கூட்டணிக்கும், உபி க்களுக்கும்" வயிற்றாலும், வாயாலும் போகுகிறது! போற போக்கப் பார்த்தால் தேர்தலுக்குள்ளேயே டாடி நலக் கூட்டணி "வெலவெலத்து போய்விடும்" போலிருக்கு! பாவம்..! பரிதாபம்..!
###
#பாமக: சாதியும்,  பாஜக: மதமும் சேருவது சகஜம்! ஒன்று ஜாதி வெறி; இன்னொன்று மதவெறி!
#பாமகவும், பாஜகவும் இணைவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை! இரண்டும் தமிழகத்தின் சாபக்கேடு!
#தேமுதிக, தமாக மக்கள் நலக் கூட்டணியில் தாமதமின்றி இணைதல் தமிழகத்திற்கு நன்மை; இல்லையேல் தீமை!
#மக்கள் நலக் கூட்டணி திறந்த மனதுடன் இருப்பது தமிழக மக்கள் நலன் கருதியே!
#இன்று 15.3.16 PTTV நேர்படபேசு!
###
படிப்பதா? பழைய செருப்பை தைப்பதா?
ஏனிந்த அவலம்?
யாரால் இந்த கேவலம்?
அதிமுக திமுக  அலங்கோலங்களை அகற்றுவோம்!
மக்கள் நலக் கூட்டணியை ஆட்சியில் அமர்த்துவோம்!
அதிகாரம் பகிர்வு-2016.
---////
#பாமக: சாதியும்,  பாஜக: மதமும் சேருவது சகஜம்! ஒன்று ஜாதி வெறி; இன்னொன்று மதவெறி!
#பாமகவும், பாஜகவும் இணைவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை! இரண்டும் தமிழகத்தின் சாபக்கேடு!
#தேமுதிக, தமாக மக்கள் நலக் கூட்டணியில் தாமதமின்றி இணைதல் தமிழகத்திற்கு நன்மை; இல்லையேல் தீமை!
#மக்கள் நலக் கூட்டணி திறந்த மனதுடன் இருப்பது தமிழக மக்கள் நலன் கருதியே!
#இன்று 15.3.16 PTTV நேர்படபேசு!
---///
#சமூகநீதிக்கு முன்னோடி மாநிலத்தில் ஜாதிவெறி ஆணவ கொலை... தோல்வி அல்ல; பின்னடைவு!
#சமூகநீதியை நிலைநாட்ட மார்க்சிய-பெரியாரிய-அம்பேத்கரிய அமைப்பு முனைப்புடன் கைகோர்த்தல் அவசியம்!
#திமுக அதிமுக சமூகநீதியை மறந்த, ஜாதிவெறி கொலையை கண்டு கொள்ளாத கட்சிகளாகி விட்டன!
#(பாமகவின்) வன்னியர் சங்கத்தின் தாக்கமே இதர ஜாதிகளும், தலித்கள் மீது வன்கொடுமை... ஆணவ கொலை செய்வதற்கு 'களம்' அமைத்துவிட்டது!
#ஆணவ கொலை எந்த ரூபத்தில் வெளிபட்டாலும், அது தமிழகத்திற்குத் தலைகுனிவே!
---///
"உடுமலையில் குலைநடுங்கும்  ஜாதிவெறி கொலை!"
😈
ஆம், ஜாதிவெறியின் பேய்த்தனத்தால், இளம் ஜாதி மறுப்பு திருமண ஜோடிகள் மீது நேற்று (13.3.16) பட்டபகலில் கொலைவெறி தாக்குதல்!
களப்பலி ஆனது (இறந்து போனது) தலித் சங்கர் அல்ல; இந்த தமிழகத்தின் மனிதம்! கண்டிக்கத்தக்க ஜாதிவெறியல்ல இது... அழித்தொழிக்கப்பட வேண்டிய காண்டுமிராண்டிதனம்!
இந்த முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் சீழ்இது! இதை மாற்றுவதே இதற்கு நிரந்தர தீர்வு! அதற்கு மார்க்சீயம்-பெரியாரியம்- அம்பேத்கரியம் கைகோர்த்து வீறு கொண்டெழுவதே தீர்வு!
தண்டவாளங்களை தாண்டி தார்சாலையில் தாண்டவமாடிய ஜாதிவெறியை அழித்தொழிப்போம்! அனுமதியோம்!
👊
"மனிதகுலம் இருக்கும் வரை மார்க்சின் பெயர் நிலைத்து நிற்கும்"
-ப்பிடெரிக் ஏங்கெல்ஸ் 
👊
"இதுவரையிலும் உருவான தத்துவங்கள் எல்லாம் உலகை விளக்குகின்றன; ஆனால் உலகை எவ்வாறு மாற்றுவது என்பதே இப்போதைய பிரச்சனை!"
"இதுவரை நடந்த போராட்டங்களின் வரலாறு அனைத்தும் வர்க்க போராட்டங்களின் வரலாறே!"
-மாமேதை காரல் மார்க்ஸ்
👊
"...19 ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த ஆளுமையான மார்க்ஸின் வாழ்நாளில் 2 சம்பவங்கள் அவரை பெரிதும் பாதித்தன. 1.அவரின் மனைவி ஜென்னி மரணம்; 2.அவரின் மூத்த மகள் மரணம். நிலைகுலைந்து இருந்த மார்க்ஸ் 1883 மார்ச் 14 இல் சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறே தனது சிந்தனையை நிரந்தரமாக நிறுத்திக் கொண்டார்...!"

(தி இந்துதமிழ் 2016 மார்ச் 14)
👊
"ப்பிளாஷ் நியூஸ்!" அடிமைகளின் அணிவகுப்பு! போயாஸ் கார்டனில் போலீசு குவிப்பு!
நாராயணன், வேல்முருகன், தமிழரசன், கதிரவன், தணியரசு, பார்க்கர் போன்ற அகில உலக, அகில இந்திய கட்சி தலைவர்களுடன் பேச்சு போயாஸ் கார்டனில் நடந்து வருகிறது!
கூட்டணி தலைவர்களை நேரில் சந்தித்து அஇஅதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சு கடைசி சுற்றுக்கு  முன்னேறி இருக்கிறதாம்!
6,7 கட்சி தலைவர்களும் கேட்ட அனைத்து சீட்டுகளும் கிடைத்து விட்டதாகவும்,  கிடைக்கவில்லை என்றும், என்றாலும்-- இந்த எஃகு கூட்டணியில் இருந்து வெளியேறும் எண்ணம் ஏதும் இருந்தால், திரும்பி வர முடியாதெனவும்-- ஏஜன்சி செய்திகள் கூறுகின்றன!
இன்றே "எல்லாம் முடிந்துவிடும்" என அரசியல் நோக்கர்கள் உறுதியாக கருத்து தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது! இன்று 13.3.16 மதியம் 3 மணிக்கு துவங்கி 3.01 மணிக்கு முடிந்து விட்டதாகவும் ஒரு தொலைதூர செய்தி கூறுகிறது!
---///
"சிந்திப்பதா? நிராகரிப்பதா?"
🙏
இன்று 13.3.16 PTTV காலை புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில்... ஞானி--
"விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர் அல்ல; குறைந்தபட்ச செயல்திட்டத்தை ஏற்கிறது தேமுதிக" என வந்தால் மட்டுமே,  இந்த நிபந்தனையோடு, அவரை மக்கள் நலக் கூட்டணியில் ஏற்றால் மட்டுமே, நான் மநகூ யை ஆதரிப்பேன்" என்றதோடு, "விஜய்காந்த் தின் 5% ஓட்டுத்தான் முக்கியம் என்றால்.... அதிமுக திமுக 40% 30% ஓட்டைக்கூட பார்க்கலாமே" என்றாரே...! அது கொஞ்சம் நெருடல்!
"மக்கள் நலக் கூட்டணிக்கு... அது ஆட்சியில் அமர 5% ஓட்டு கிடைத்தால் போதுமென்றால்... செயல்திட்டத்தை ஏற்றுக் கொண்டால் ... பரிசீலிக்கலாம்!" என சொன்ன ஞானி, சொன்ன இன்னொரு அர்த்தமுள்ள கருத்து-- "வைகோ உள்ளிட்டு மநகூ தலைவர்கள் கூறுவதைபோல், 65% புதிய வாக்காளர்களை ஈர்க்க யோசிக்கலாமே!" என்பதை சிந்திப்பதா? நிராகரிப்பதா?
🙏
"குடும்பத்துடன் படையெடுப்போம்!"
👊
தண்டவாள மரணங்கள் மர்ணித்து போக...
ஒரு சீரிய... அரிய முயற்சியே...
"என்று தணியும்?"
என்கிற திரைப்படம்!
இப்படம் வெற்றி பெறுவது... தமிழகத்தில்... ஆணவக்கொலைக்கு ஆப்பு அடித்த மாதிரி இருக்கும்!
சேலம் மாவட்டத்தில் இப்படம் வெற்றி பெறுவது கூடுதல் முக்கியத்துவம் பெறக்கூடியதாக அமையும்!
குடும்பத்துடன் படையெடுப்போம்!
ஒரு வாரம் திரையரங்கம் ஜாதி மறுப்பாளர்,
ஜாதி ஆதிக்கத்தை எதிர்பாளர்கள் ஆக்கிரமிப்பில் திணறட்டும்!  
முற்போக்கான முயற்ச்சி வெற்றி பெற உதவுவோம்!
👊
#கூட்டணி ஆட்சி வரவேற்கதக்கதே! மக்களுக்கு கூடுதல் பயன் அதுவே!
#மக்கள் நலக் கூட்டணி 'மலர்ந்த கணமே' கூட்டணி ஆட்சி 'மனம் கமழ' தொடங்கியது!
#கருணாநிதியிடம் தற்போது இருக்கும் ஒரே ஆயுதம் 'கூட்டணி ஆட்சி' என்ற "தூண்டிலே!"
#ஒரு கட்சி ஆட்சியிலும் பிரச்சனை உண்டு! அதில் விளைந்ததுதான் அதிமுக!
#இன்று 12.3.16 PTTV நேர்படபேசு!
--//









 

Friday, 11 March 2016


"எளிமையே உன் பெயர்தான்... உ.வாசுகியா?"
இன்று 8.3.16 சர்வதேச பெண்கள் தினம். இதனை முன்னிட்டு... PTTV வில் காலை புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சி, இரவு நேர்படபேசு நிகழ்ச்சி ... இவை இரண்டிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி விவாதத்தில் பங்கேற்றார்! அதுசரி, அதில் என்ன செய்தி என்கிறீர்களா?

இன்றைக்கு ஒரு புகைப்படம் எடுக்கவே ஏராளமான அலங்காரம் பார்க்கிறோம்! அதுவும் உலகம் முழுவதும் நேரலை தொலைக்காட்சி என்றால் கேட்கவே வேண்டாம்! அந்தளவுக்கு தடபுடல் நிறைந்த உலகம் இது! இந்த உலகத்தில்தான் அதிலும் மகளிர் தினத்தில், காலையும், இரவும் ஒரே உடையை அணிந்து வந்த ஒரு தலைவரின் எளிமை எங்காவது நாடு கண்டிருக்கிறா? ஆம், இன்று நடந்தது! அதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வார்ப்பாம்... அதன் தலைவர்களில் ஒருவருமான  உ.வாசுகி..! எளிமையே உன் பெயர்தான் வாசுகியா?

நேர்படபேசு விவாதத்தில் மதுவின் கொடுமையை, அதனால்  ஏற்படும் பெண் விதவைகள் அதிகரிப்பதை தடுக்காததேன் என ஒரு தீ குச்சியை உரசிப்போட்டார் உ.வாசுகி பாருங்கள்... சூப்பர்! அதுபோல் நெறியாளர் பூங்குழலி நெறியாளுகை அருமை! சபாஷ்!
----\\\
"எமது மகளிர் தின வாழ்த்துகளும்!"

இன்று 8.3.16 PTTV புதுப்புது அர்த்தம் நிகழ்ச்சியில் சர்வதேச மகளிர் தினம் முன்னிட்டு மார்க்சிஸ்ட் வாசுகி, திமுக சல்மா, இவர்களுடன் நெறியாளர் ஜென்ராம்... PTTV வோடு எமது மகளிர் தின வாழ்த்துகளும்!

மேற்குவங்க இடதுமுன்னணி காங்கிரசுரன் புரிந்துணர்வோடு தேர்தலில் பணியாற்றுவது குறித்த விளக்கத்தை மிக தெளிவாக, சுருக்கமாக வாசுகி விளக்கியது அருமை! குறிப்பாக அங்கு ஒரு அசாதாரண நிலை... சிபிஎம் தோழர்கள் 275 பேர் படுகொலை; 5,00,000 பேர் அகதிகளாக; அலுவலகம் -வீடுகள் சூறை; ஜனநாயகம் படுகொலை என இருப்பதுபோல் இங்கில்லை என சல்மா வுக்கு மட்டுமல்ல... அது அனைவருக்குமான பதிலாக இருந்தது  வாசுகி சரமாரியாக பட்டியலிட்டது!

உழைக்கும் பெண்கள் தினமாக 1910 இல் அது அனுசரிக்க துவங்கினாலும், ஒட்டு மொத்த மகளிர் ஒடுக்குமுறைக்கு எதிரான உரிமைகுரல் தினமாகவே அனுசரிக்கப்பட்டு வருகிறது என்பதை வாசுகி கடகடவென அடுக்கி தள்ளிவிட்டார் அவருக்கே உரித்தப்பாணியில் சபாஷ்! ஆம், சல்மா... வாசுகியின் பதிவு அனைத்தையும் மறுக்காமல் ஆதரித்தது... நல்ல புரிந்துணர்வே! என்றாலும் இதை முழுவதும் அதிமுக ஆட்சியின் அவலங்களோடு இணைக்க முயற்சித்ததையும் லேசாக பார்க்க முடிந்தது! 

உலக மகளிர் தினத்தை உரிய முறையில் கொண்டாடும்,  முன்னுதரணமாக முடிந்தமட்டும்
நடைமுறையாக்கி வரும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கும் எமது வாழ்த்துக்கள்! 
----\\\\
சேலத்தில்... 02.03.2016... 
மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன்... இரவு 8.30 மணி முதல் 11.30 முடிய எழுச்சி உரை...

15 ஆயிரம்பேர் பங்கேற்ற மாற்று அரசியல்-தேர்தல் விளக்கப் மாபெரும் பொதுக்கூட்டம்! 
##
விசிக மாநகர மாவட்டச் செயலாளர் கோ.ஜெயச்சந்திரன் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில்... 

சிபிஎம் மாவட்டக்குழு செயலாளர்
பி.தங்கவேலு, சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ.மோகன், மதிமுக மாநகர மாவட்டச்செயலாளர் ஆ.ஆனந்தராஜ், மேற்கு மாவட்டச் செயலாளர் ந.மகேந்திரவர்மன், கிழக்கு மாவட்டச் செயலாளர் வ.கோபால்ராஜ், விசிக கிழக்கு மாவட்ட செயலாளர் சிக.முத்து, மேற்கு மாவட்ட செயலாளர் செ.அய்யாவு, வடக்கு மாவட்டச் செயலாளர் ஆ.வசந்த் ஆகியோர் உள்ளிட்டு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேலானோர் பங்கேற்றனர்! 

முன்னதாக ஒரத்தநாடு கோபி குழுவின் இயக்கப்பாடல் இசைநிகழ்ச்சி... சாத்தப்பாடி பெருமாள் தப்பாட்டம்... மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி முடிய நடைபெற்றது!
---\\\
சுயநலமின்றி செயல்படும் ஒரே அணி!
ஏழு தமிழர் நலனைவிட இவர்களின் (அதிமுக, காங்கிரஸ், பாஜக, திமுக)  சுய நல அரசியலே மேலோங்கி இருக்கிறது!

ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தும் சுய நல அரசியலில் இருந்து தமிழகம் விடுபட, 7 பேர் விடுதலை விவகாரத்தில், அரசியல் சுயநலமின்றி செயல்படும் ஒரே அணி, "மக்கள் நலக் கூட்டணி"யே!
----\\\
எது தேச பற்று..?
வாலிபர்-மாணவர்-எழுத்தாளர் கருத்தரங்கம்!சேலம்-03.03.2016. 
சேலம் சாமிநாதபுரத்தில் கே.கிருஷ்ணன் தலைமையில் மாலை 7 மணிக்கு துவங்கி நடந்தது! 
தீக்கதிர் முதன்மை மேலாளர் கே.கனகராஜ்,   சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி பேராசிரியர் சி.லட்சுமணன், டிஒய்எப்ஐ மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, எஸ்எப்ஐ மாநிலத்துணைத் தலைவர் எம்.காமாட்சி, டிஒய்எப்ஐ மாவட்ட செயலாளர் என்.பிரவீண்குமார், மாவட்டப் பொருளாளர் வி.வெங்கடேஷ், தமுஎகச  மாவட்ட கவுரவ தலைவர் இலா.வின்சென்ட், மாவட்ட தலைவர் மதுரபாரதி,  மாவட்ட  செயலாளர் நிறைமதி, மாவட்ட பொருளாளர் சேக்அப்துல்லா உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்!
----\\\\
கட்சிகளின் அடுத்த நகர்வு...!
கட்சிகளின் அடுத்த நகர்வு கூட்டணிகளை இறுதிபடுத்துவது!

விரும்பும் கூட்டணியை உருவாக்க அனைத்து பேரங்களும் வெட்கமின்றி அரங்கேறும்! 

திமுக... அதிமுக... சிறிய கட்சிகளுக்கு "பெரிய" வலைவீசும்!

மக்கள் நலக் கூட்டணிதான் மக்களிடம் நேர்மை திறனுடன் செல்லும்! வெல்லும்!
-----\\\\
மகிழ்ச்சி! நடக்குமா? 
தேர்தல் விதிமுறைகள்...
செயல்வடிவம் பெற்றால் மகிழ்ச்சி! நடக்குமா? சந்தேகமே...!

பணபட்டுவாடாவை தடுத்துவிட்டால் ஆட்சி மக்கள் நலக் கூட்டணி கையில் தவழும் மிக எளிதாக! 

அதிமுக திமுக பாமக வாக்காளர்களுக்கு பணமும், பரிசும் கொடுத்தே தீரும்! 

பணம், பொருள் எல்லாம் திமுக, அதிமுக, பாமக கட்சிகள் பூத் அளவில் 
தற்போதே தயார் நிலையில்! 

வணிகர்கள் பொதுமக்கள் தான் இனி தேர்தல் கமிசன் சோதனையில் சிக்குவர்! 

ஒருநாளில் 106 விதி மீறல் சுசுபி! போகபோக பாருங்கள் நிமிடத்திற்கு ஓராயிரம் விதிமீறல் வரும்!
---\\\
"பல் இல்லாத பாம்பா தேர்தல் கமிசன்?
இன்று 5.2.16 PTTV இல் நேர்பட பேசு... விவாதத்தில் முன்னாள் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி... 
"3 மாதத்தில் தேர்தல் கமிசன் ஒன்றும் மாயமந்திரம் செய்திட முடியாது; தேர்தலுக்கு பலபல மாதங்களுக்கு முன்பே பணத்தைக் கொண்டு சென்று பதுக்கி வைத்துக் கொள்கிறார்கள்; மக்கள்தான் விரட்டி அடிக்க முடியும்; 100 பேரில் 99 பேரும் திருடும்போது ஒருவர் என்ன செய்ய முடியும்; கேரளாவில் அது நடக்காது; மக்கள் அப்படி நடந்தால் அங்கு விரட்டி அடிக்கிறார்கள்; நான் தமிழனாக இருப்பதில் தலைகுனிவாக இருக்கிறது" எனஅங்கலாய்த்தார்!  

ஆனால் அவரிடம் இதை யாரும் எதிர் பார்த்திருக்க வாய்ப்பில்லை! ஆம்! நெறியாளர்  குணாகூட அதிர்ந்து போனார்! 

தேர்தல் ஜனநாயகத்தில் இருக்கும் மாபெரும் ஓட்டை! இதை அடைக்க என்னவழி என்றால்... அதை சொல்லாமல் அரசியல்வாதிகளை குறைகூறிவிட்டு என்.கோபால்சாமி... நழுவிவிட்டார்! 

திமுக பரந்தாமன் அதிகாரிகள் மீது பழியைப் போட்டுவிட்டு பறந்துவிட்டார்; அதிமுக சமரசம் இந்த தேர்தலில் பணம் பட்டுவாடா இருக்காது என பதுங்கிக் கொண்டார்! பத்திரிக்கையாளர் கார்த்திகேயனும் முன்னாள் ஆணையர் கருத்தை ஆதரித்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார்! 

அப்படி என்றால், தேர்தல் ஆணையம் பல்லைப்புடுங்கிய பாம்பா? நிச்சயமாக  இல்லை! "முடியும்" என்பதற்கு இன்று நடந்த இரு நிகழ்வு... ஒன்று இதே டிவி விவாதத்தில் அனைவரின் பேச்சிலும் சென்சார் இருந்தது! 

இன்னொன்று, ஏற்கனவே அனுமதி பெற்றிருந்தும் கூட, தேர்தல் ஆணையத்தின் ஆன்லைன் அனுமதி இல்லாததால், சேலம் மாவட்டம் ஒரு கிராமம் பகுதியில் நடக்கவிருந்த சிஐடியு விசைத்தறி மாநாட்டு பொதுக்கூட்டம் நடத்த முடியவில்லை; மாநில தலைவரும் சிபிஎம் சட்டமன்ற குழு தலைவருமான ஏ.சௌந்திரராசன் எவ்வளவோ விளக்கம் கொடுத்தும் போலீஸ் ஏற்கவில்லை! 

பணம் பட்டுவாடா நடக்கிறது என்பதை தெரிந்தும், தடுக்க முடியவில்லை என்பது கையறு நிலை அல்லவா? என குணா சரியாகவே தனது கவலையை பதித்தார்; நன்று! 

ஒவ்வொரு வீட்டுக்கும் ஆள் போடவேண்டியதில்லை; பணம் பட்டுவாடாவை தடுக்க, ஒரு 10 தொகுதிகளில் குறி வைத்து ஆளும் கட்சி, எதிர் கட்சி என கணக்கிட்டு, கையும் களவுமாக பிடித்து, அதன்பின்-- "அந்த கட்சியின் தேர்தல் அங்கீகாரத்தை ரத்து செய்தால்... அந்த வேட்பாளர் இனி வாழ்நாள் முழுதும் தேர்தலில் நிற்க முடியாதென" தேர்தல் சட்ட சீர்திருத்தம் எவ்வளவோ செய்ய முடியும்! அதை விடுத்து "முடியாது என்பதை எப்படி ஏற்பது" என்.கோபால்சாமி அவர்களே! சொல்லுங்கள்?  பல் இல்லாத பாம்பா தேர்தல் கமிசன்? சொல்லுங்கள்!
???
----\\\\
"வாய்கொழுப்பு" 
"தேர்தல் வரை மக்கள் நலக் கூட்டணி இருக்காது" 
(தினமணி: 6.3.16)

பாஜக மாநில (பறட்டை பன்னாடை 'தலை'வி) தமிழிசை சௌந்திரராஜன்.
----\\\\

பாஜகவின் தேசபக்தி"
மாவீரன் கண்ணய்யாவின் நாக்கை அறுத்தால் ரூ5 லட்சம்; ஆளைக் கொன்றால் ரூ11 லட்சம் தரப்படும்"
!!!
என பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினர் குல்தீப் வார்ஷ்னே (இவர்  பாரதிய ஜனதா யுவமோர்ச்சா (இளைஞர் அணி) உத்தப்பிரதேச மாநில தலைவர்) திருவாய் மலர்ந்து உள்ளார். (இந்து தமிழ்: 6.3.16) 

இதுதான் பாஜகவின் தேசபக்தியும் பாரம்பரியமும்கூட! 

ஆம்! நவீன இந்தியாவில் தேசபிதாவை கொன்றவர்கள் மட்டுமல்ல; புராதான இந்தியாவில் தனக்கு நிகராக வில் வித்தையை கற்று கொண்டதற்காக ஏகலையவனின் கட்டை விரலை காணிக்கையாக பெற்றவர்கள்தானே இவர்களின் முன்னோர்கள்!  

அன்று கேட்டார்கள்; பெற்றார்கள்; இலவசமாக! இன்றும் அதே வேலையை செய்கிறார்கள்... இலவசமாக அல்ல... காசு தருகிறோம் என்கிறார்கள்! 

குல்தீப் வர்ஷனே போன்ற கொலைவெறியனை பிடித்து உள்ளே போட நாதியில்லையா?
???
"மிஸ்ஸிங்" ஏன்?
மாவீரன் கண்ணய்யா உயிருக்கு விலை நிர்ணயம் (நாக்கு வெட்டி தந்தால் ரூ5 லட்சம்; தலையை வெட்டியோ... அல்லது ஆளை சுட்டோ தந்தால் ரூ11 லட்சம்) என   தனது நரவேட்டை பாசிச வெறியை பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினர் குல்தீப் வார்ஷ்னே (இவர்  பாரதிய ஜனதா யுவமோர்ச்சா (இளைஞர் அணி) உத்தப்பிரதேச மாநில தலைவர்)   வெளியிட்டு இருந்தான். 

அந்த செய்தியை இன்று (6.3.16) நம்மூர் செய்தி தாள்களில் வெளிட்டும், வெளியிடாமலும் இருக்கின்றன! 

ஆனால்... தன்னை 'நடுநிலை நாளிதழ்' என தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தினமணியில் "மிஸ்ஸிங்" ஏன்? (தர்மபுரி பதிப்பு) ஒருவேளை நேற்றே வந்திருக்குமோ? அல்லது நாளை, நாளை மறுநாள்  வருமோ? தமிழக பாஜகவின் ஊதுகுழல் ஆகிவிட்டதோ... தினமணி!
???
பிஞ்சு நெஞ்சில் சாதி நஞ்சா? 
!?!?!?
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆதிவெறி சாதிகளின் சங்கமம் ஆகி வருகிறதோ? ஜாதி மறுப்பு போராளிகள் வாழ்ந்த தமிழ் மண்ணில் பிஞ்சு நெஞ்சில் சாதி நஞ்சு விதைக்கப்பட்டிருக்கும் அவலம் கண்டு மனம் பதைப்பதைப்பு நம்மை வாட்டி வதைக்கிறது!

திருசெங்கோடு கோழிக்கால்நத்தம் அரசு ஆரம்ப பள்ளியில் 4, 5 வது படிக்கும் மாணவர்கள் சூர்யா, ராமசந்திரன்; இவர்கள் தாய்-தந்தை பாப்பாத்தி-பழனிசாமி; அருந்ததியர் சமூகம்! இதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் லத்தீஸ், சஞ்சய்;  இவர்கள் தலித் அல்லாத சமூகம்! இந்த மாணவர்களுக்கு இடையே பள்ளிக்கூடத்தில் தகராறு ஏற்பட்டு உள்ளது! 

இது பிப் 29 அன்று மதியம் வகுப்பில் நடந்துள்ளது. தலித் மாணவர்களை சாதியை சொல்லி கடுமையாக அடித்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது வகுப்பு ஆசிரியரிடம் தலித் மாணவர்கள் புகார் சொல்லி உள்ளார்கள்! அந்த ஆசிரியை தலித் பசங்கத்தானே என்று அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது!

பள்ளியில் தொடங்கிய தாக்குதல் பள்ளி முடிந்த பின்னும் தொடர்ந்து உள்ளது; தலித் மாணவ சகோதர்கள் சூர்யா, ராமசந்திரன், விஸ்வநாதன் ஆகியோர் லத்தீஸ், சஞ்சய் ஆகிய மாணவர்களால் குச்சிக்கிழங்கு குச்சியின் வேர்பகுதியால் விரட்டி விரட்டி சாதி ஆதிக்க மனநிலையில் ஓட ஓட தலையின் பின்புறம் மீண்டும் மீண்டும் அடித்து உள்ளனர். (சூர்யா சகோதர்கள் தலையில் அடிப்பட்டதற்கான கட்டிகள் இன்னும் இருக்கிறது)

அடிப்பட்ட மாணவர்கள் வீட்டில் சொல்லியும் பெற்றோர் கவனிக்கவில்லை! 3 நாள்கள் கழித்து சூர்யா ரத்த வாத்தி எடுத்துள்ளான். அதன் திருசெங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளான். அங்கு முடியாதென்று சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி, அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டான் சூர்யா.

சூர்யா உயிருக்கு ஆபத்து என்ற சூழலில் லித்தீஸ், சஞ்சய் கைது செய்து, நீதிமன்ற ஜாமீனில் விட்டு உள்ளது; சூர்யா இறந்த பின் எப்ஐஆர் ஆல்ட்டர் செய்ததாக கூறப்படுகிறது. காவல் துறை சாமார்த்தியமாக சூர்யா அம்மா கையெழுத்து பெற்று பிரேத பரிசோதனை செய்துவிட்டது. 

தகவல் அறிந்ததும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஆதிதமிழர் பேரவை, அருந்தமிழர் பேரவை, தலித் சேனா அமைப்பு சேலம் அரசு மருத்துவமனை சென்று, சூர்யா பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். 

அதோடு சூர்யா மரணத்திற்கு காரணமான பள்ளி ஆசிரியைகளையும் இவ்வழக்கில் சேர்த்திட வேண்டும்; இவ்வழக்கை வன்கொடுமை தடுப்பு வழக்கில் பந்திட வேண்டும்; சூர்யா குடும்பத்திற்கு உரிய நட்ட ஈடு வழங்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு தந்துள்ளனர்! அதுவரை சூர்யா பிரேதத்தை வாங்க மாட்டோம் என அறிவித்து உள்ளனர்! 

கோழிக்கால் நத்தம் தலித் கிராமமே சோகத்திலும், பதட்டத்திலும் இருந்து வருகிறது! திருசெங்கோடு என்றாலே... அது ஜாதிவெறிகாடு என்றாகி வருகிறது!

கொலை செய்யப்பட்ட மாணவன் சூர்யா வின் தாய் பாப்பாத்தி, தம்பிகள் ராமசந்திரன், விஸ்வநாதன் ஆகியோர் புகைப்படம்...3:04
-----\\\\
அங்ககூட போலாமே!
காங்கிரஸ்தான் மாற்றுக் கருத்துக்கு இடம் தருகிறது!
-பழ.கருப்பையா. 
பாஜகவில் சு.சாமியைவிடவா? 
#அங்ககூட போலாமே!
----\\\\\
தேமுதிகவின் இறுதி முடிவே...
#ரெக்கைக் கட்டியது  வாஸ்தவம்; வதந்தியல்ல! வாஸ்தவம்!
#சுயநலத்தின் உச்சமே வதந்தி! 
#கூட்டணி குழப்ப முடிவு... வேட்புமனு திரும்ப பெரும் வினாடி! 
#தேமுதிகவின் இறுதி முடிவே குழப்பத்திற்கு முடிவு!
#உலா வரும் ஊகங்கள் ஊடகங்களின் மெய்பாதி பொய்பாதி!
----\\\\
#தேமுதிக கூட்டணி வேட்புமனு திரும்ப பெறும் வரை முடிவாகாது! 
#தேமுதிக விற்கு ஏன்தான் இந்த கிராக்கியோ? 
#குழப்பத்தில் தேமுதிக தொண்டர்கள் மட்டுமல்ல தலைவர்களும்தான்!
#இன்று 7.3.16 news 7 ?கேள்வி நேரம்!
---\\\\
மகளிருக்காக இட ஒதுக்கீடு கோரும் கட்சிகளில்... 
#உண்மையான அக்கறை கொண்டவை கம்யூனிஸ்ட் கட்சிகளும், இடதுசாரி கட்சிகளுமே!
#மக்கள் நலக் கூட்டணி கட்சிகளும் உண்மையான அக்கறை கொண்டவைகளே! 
#காங்கிரஸ், பாஜக, அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் நேற்றும், இன்றும் ஆட்சியில் இருந்தபோது இதற்காக ஒரு துரும்பும் அசைக்காதவைகளே!
மொத்தத்தில்...
#உண்மையான அக்கறை கொண்டவர்கள்-- கம்யூனிஸ்ட் கட்சிகள்;  நாடகம் ஆடுபவர்கள்--முதலாளித்துவ கட்சிகள்!

# (இன்று 8.3.16 PTTV நேர்படபேசு... பெண்கள் தினத்தை முன்னிட்டு நெறியாளர் பூங்குழலி மு.ச., மார்க்சிஸ்ட் உ.வாசுகி, திமுக சல்மா, அதிமுக சிஆர்.சரஸ்வதி, பாஜக லட்சுமி சுரேஷ்... மகளிர்களே அமர்ந்து விவாதம் பாராட்டுக்குரியது! நன்று!)
----\\\\
"ஒரு சிறு" சிராவைகூட...!
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களின் கெயில் நிறுவனம்...  விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிப்பதில் இருந்து... பாதுகாக்க தவறிய, மாநில -மத்திய அரசுகளின் விவசாயி விரோத போக்கை அம்பலப்படுத்தி...

தமிழக அரசின் சீராய்வு மனு-- "ஒரு சிறு" சிராவைகூட சுப்ரீம் கோர்ட்டில் செய்யாத அவலத்தை... விளக்கி குமுறுகிறார்... தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட துணைத்தலைவர் பி.தங்கவேலு... அருகில் மாவட்டப் பொருளாளர் ஆர்.குழந்தைவேல்... (8.3.16 12.30 PM Sun News)0:27
----\\\\
"காதுல பூ..!" ?! 
#திமுக வேட்பாளர் நேர்காணலில்...
ஸ்டாலினிடம் துரைமுருகன் கேள்வி கேள்வி கேட்டாராம்! துரைமுருகனிடம் ஸ்டாலின் கேள்வி கேட்டாராம்!
#அதுசரி...  அவரிடம் (?) யார் கேள்வி கேட்டாங்கய்யா? ஸ்டாலினா? துரைமுருகனா? கனிமொழியா? அன்பழகனா?  ராஜாவா?  பாலா?  யார்... யார்... யார்...?  
#இல்ல...  அவரு நிக்கமாட்டாரா..? அன்பு மகனுக்கு விட்டு கொடுத்து விடுவாரா? 
#ஆடேய் சாமி உலகமகா நடிப்புப்புடா சாமி..! #தமிழ்நாடு வாக்களர்கள் காதுகளில் டன் கணக்கில் பூ..!
----\\\\
வறட்டு கூச்சல்!
 "போதும் மனுஷ்...  
போதும் மனுஷ்..!" 
நானல்ல..!  
நெறியாளர் ஜென்ராம்! 
இன்று 9.3.16 PTTV புதுப்புது அர்த்தங்களில் மனுஷ்...  
#வறட்டு கூச்சல்!
---\\\
செல்லப்பிள்ளைகளே! 
#நாடு கண்ட அரசுகள் யாவுமே செல்வந்தர்களின் செல்லப்பிள்ளைகளே! #எளியவர்கள் மீது  புலிபோல் பாய்வதுதான் இந்திய அரசுகள்! 
#வரி வசூலிக்க தவறியதும், மல்லய்யா தப்பிக்க உடந்தையும் மோடி அரசே! #9000 கோடி ஏப்பம்
விடுவது மிக எளிது! எளியவர் கரண்ட் பில் கட்டாமல் தப்பிப்பது எளிதல்ல!
----\\\
#சாதிக்கும்! சறுக்கும்!
தேமுதிக மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்தால் சாதிக்கும்! தனியாக நின்றாலோ, பாஜகவோடு இணைந்து நின்றாலோ சறுக்கும்!  இன்று 10.3.16 PTTV நேர்படபேசு!












----\\\\

----\\\\

Tuesday, 1 March 2016

'உல்டா, புல்டா' வுட்ட ராகவனே..! 
சுதந்திர இந்தியாவில் ஆர்எஸ்எஸ் "பொறக்கவே இல்லை" என 'உல்டா, புல்டா' வுட்ட ராகவனே...
#
1930 இல் இங்கிலாந்து ராணிக்கு 'அரடவுசர் அணிவகுப்பு மரியாதை' செலுத்தும் இந்த "சிப்பாய் கள்" யாரய்யா..? இந்த... நீங்கத்தான் அன்னிக்கு 'கொழந்தையா..?'
இங்கிலாந்து ராணிக்கு சல்யூட் அடிக்கும் டவுசர்கள்... தூக்குக்கயிற்றை முத்தமிட்ட பகத்சிங் வாரிசுகளைப் பார்த்து தேச துரோகி என்பதா? வழக்கு போடுவதா? 

காலம் மாறும்;  கம்யூனிஸ்ட் தேசப்பக்தியை தேசம் உணரும்! அரடவுசர்களின் 'அரைநாண்கயிறு' அறுக்கப்படும்!
----\\\\
[10:21, 2/27/2016] Senthan Chennai: ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு செய்தி தவறு
[10:22, 2/27/2016] Senthan Chennai: புகைப்படம் உண்மையில்லை
----\\\\
புதிய தலைமுறை TV க்கு... கோடி புண்ணியம்! 
21.2.16 PTTV இல் மாலை 4 மணி முதல் 5 மணி முடிய "தலைவர்களுடன்" நிகழ்ச்சியை பார்த்தேன்! மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, ஜிஆர், முத்தரசன், திருமா இவர்களுடன்...

முதல் கட்ட பரப்புரையின் போது சிறப்பு தொகுப்பாளராக கார்த்திச்செல்வன் உடன் சென்று... தலைவர்களுடன் அளவலாவிதோடு, அவர்களின் உள்ளங்களை தோண்டியது அலாதி! அருமை! அற்புதம்! 

தலைவர்களின் உருக்கு போன்ற ஒற்றுமை... தமிழகத்தின் ஓர் அரிய அதிசயமே! ஆம், அந்த அதிசயப் பதிவை கண்டு புல்லரித்துப் போனேன்! என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்!
புதிய தலைமுறைக்கு கோடி புண்ணியம் உரித்தாகட்டும்! 

அதன் கருத்து கணிப்பு எப்படி வந்திருந்தாலும், திமுக அதிமுக வுக்கு "மாற்று" மக்கள் நலக் கூட்டணி என்கிற வகையில், இதுவரை "உரிய இடம்" தந்தே வருகிறது! நன்றி PTTV க்கும், தோழர் தொகுப்பாளர் கார்த்திச்செல்வன் க்கும்! தொடரட்டும் PTTV யின் மக்கள் நலக் கூட்டணிக்கான ஆதரவு!
---\\\\
 "தொல்லைமணி" ஆகிய நான்...
#தமிழகத்தில் சாதிவெறி காடாக மாற்றுவேன்...
#ஒரு பக்கம் மரங்களை வெட்டுவேன்; இன்னொரு பக்கம் மரங்களை நடுவேன்...
#தேர்தல் பணிகளைகூட திமுக பாஜக போல் அன்னிய கம்பெனிகளிடம் ஒப்படைத்திருப்பதைப் போல் தமிழகத்தின் வளங்களையும் ஒப்படைத்து விடுவேன்...
#கட்ட பஞ்சாய்த்துகளை கட்டவிழ்த்து விடுவேன்...
#தலித்துகளை அவர்களது வாழ்வாதாரங்களை அழிப்பேன்...
#குறிப்பாக சமத்துவமாக மக்கள் வாழ விடாமல் 'நாடக காதல்' என 'நாமகரணம்' சூட்டி தண்டவாளங்களுக்கும், தீ சூவாலைகளுக்கும் தலித்க்களை பலிகொடுப்பேன்...
#சாதி மத துவேசங்களை விசிறி விடுவேன்....
#இந்த தேர்தல் முடிந்தபின் நிச்சயமாக மெரினாவில் சுண்டல் விற்க போய்விடுவேன்...
#பாஜகவுடன் ஒருவேளை சேர்ந்துவிட்டால், மத்திய மந்திரி ஆகி, சொந்தங்களை தெருவில் விட்டு போய்விடுவேன்....

"மாற்றம்" "காட்டுமனிதனை நோக்கி பின்னேற்றம்" "தொல்லைமணி"
----\\\\
மக்கள் ஆதரவு... 
மக்கள் ஆதரவு... லஞ்ச-ஊழல் அற்ற மக்கள் நலக் கூட்டணிக்கே!

மக்கள் ஆதரவு... மாசு மறுவற்ற மக்கள் நலக் கூட்டணிக்கே! 

மக்கள் ஆதரவு... ஜாதி மத பாகுபாட்டை ஏற்காத மக்கள் நலக் கூட்டணிகே!

மக்கள் ஆதரவு... ஊழல் வழக்குகளில் நீதிமன்ற வாசலை மிதிக்காத மக்கள் நலக் கூட்டணிக்கே!

மாற்று அரசியலை முன் வைக்கும் சமூக ஆர்வலர்களுக்கு.. இசைவான மாற்று... மக்கள் நலக் கூட்டணியே!

குழப்பத்தின் உச்சியில் தேமுதிக தமாக... குழப்பம் களைந்து, மக்கள் நலக் கூட்டணியில் சேரட்டும்!
----\\\\\
நன்று... அருமை... அன்பு..!
இன்று 28.2.16 PTTV புதுப்புது அர்த்தங்கள்... ஞானி, பத்ரி, ஜென்ராம்... விவாதம் ... திருமா செய்திதாள் நேர்காணல்; கட்சிகளின் செய்திதாள் விளம்பரம் பற்றியதாக இருந்தது. மக்கள் நலக் கூட்டணி தலைவர்களின் நேர்காணல்... "இன்னும் கவனமாக இருக்க வேண்டும்" என்பதை உணர்த்தியதாக இருந்தது.

குறிப்பாக "குறிப்பிட்ட ஒரு கட்சி ஓட்டைதான் பிரிப்போம் என்று கூறாமல்... அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, பாமக ஆகிய கட்சிகளை விரும்பாதவர்கள், எங்களின் செயல்திட்டத்தை விரும்புபவர்கள் ஓட்டையே கேட்கிறோம் என்ற பாணியில் இருத்தலே நன்று" என்று கருத்து தெரித்தது மிகுந்த நன்று! 

மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுக்கு அன்பான வேண்டுகோளாக இருந்தது... நன்று... அருமை... அன்பு..!

பத்திரிக்கையில் வரும்  விளம்பரம்... எதற்கு? என்று கூற வேண்டியதை கூறாமல் விட்டுவிட்டனர். அதாவது, அந்த பத்திரிக்கைகள் "வரிந்துக் கட்டிக் கொண்டு விழுந்து விழுந்து ஆதரிக்க வேண்டும்" என்றதை தவிர வேறெந்த 'பொடலங்காய்' யும் கிடையாது அல்லவா?

நேற்று நடந்த பாமக மாநாடு மற்றும் அதன் விளம்பரம் குஜராத் விளம்பர கம்பெனி (மோடியை முதல்வராக பிரதமராக ஆக்கியவற்றில் ஒன்றை) பயன்படுத்தி, மத்திய மந்திரியாக இருந்தபோது "சம்பாதித்த" பணத்தை கொட்டுகிறார்கள். திமுகவை கேட்கவே வேண்டும்; அதிமுக வை பற்றி சொல்வது கொல்லர் தெருவில் ஊசி விற்ற கதையே! எப்படியோ விளம்பம் குறித்த விவாதம் துணிச்சலே!
----\\\\
பாமகவின்... மது, ஊழல் அற்ற ஆட்சி... லட்சணம்..!
குஜராத் விளம்பரக் கம்பெனியிடம் தேர்தல் செலவுகள் உள்ளிட்டு அனைத்தையும் பாஜக மோடி பாணியில்...
திமுக ஸ்டாலின் பாணியில்... ஒப்படைத்து விட்டு, கோடிக்கோடியாக கொள்ளையடித்தைக் கொட்டிக் கொண்டிருக்கும் இவர்களா ஊழல் அற்ற ஆட்சியை தர போகிறார்கள்?

மது கடை மாநாடு நடக்கும் பகுதியில் விடுமுறை விட்டுவிடப் போதும், தாங்கள் கொண்டு வந்த அந்த மதுவை மிக அருமையாக ருசித்து அருந்திக் கொண்டிருக்கும் இவர்களா மது இல்லா ஆட்சி தர போகிறார்கள்?
----\\\\
எது? எது? எது?
"கிங்"தான்... முக்கியமா?

"பேடு கிங்ஸ்" அன்டு 
"பேடு குயின்ஸ்" களை அகற்றுவதும்... 

மீண்டும் 'அவர்கள்' ஆட்சியில் அமராமல் பார்த்துக் கொள்வதும்... முக்கியமா? 
#
என்னய்யா... 
இப்டி லேட் பன்றீயேய்யா..!
----\\\\

 "நாங்க கல்லூரியில அரசியல் செய்தா..''
 "அதானியும் அம்பானியும் வியாபாரத்தில் அரசியல் செய்யலாம்..."

"அத்வானியும், மோடியும் அரசியலில் வியாபாரம் செய்யலாம்..."

ஆனா... "நாங்க கல்லூரியில அரசியல் செய்தா... அது தேச துரோகமாப்பா..?"

இப்ப... 
"உங்க மேல... ராகுல் மேல... யெச்சூரி மேல... தேசாய் மேல... ன்னு 9 பேரு மேல தேச துரோக வழக்கா? 
என்னங்கப்பா அவுங்க நியாயம்?"   

"அதுதாம்மா பாசிசம்..!  அத விரட்டறது தாம்மா இந்திய மக்கள் முன்னுள்ள தேசபக்த பணி..!" 

-அபரஜிதா-ராஜா 
(மகளும் தந்தையும்)
----\\\
ஏழைகளுக்கு ஏமாற்றமே! 
ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் ஒரு விவசாயி சாவதைத் தடுக்க ஒன்றுமில்லையே!

கடனை தள்ளுபடி செய்தாலே ஒழிய விவசாயிகளைக் காக்கும் பட்ஜெட்டாக இது இருக்காது!

வருமான வரி வரம்பில் உயர்வில்லாதது நடுத்தர மக்களை நடுதெருவில் நிறுத்தவே வகை செய்யும்!

மான்யத்தை வெட்டிவிட்டு 5 ஆண்டில் இரட்டிப்பு வருமானம் விவசாயிக்கு கிடைக்கும் என்பது வாய்பந்தல்!

பட்ஜெட் முழக்கம் முதலாளிகளுக்கு சாத்தியம்; ஏழைகளுக்கு ஏமாற்றமே! வழக்கமான வெற்று முழக்கமே இந்த பட்ஜெட்டும்!

இன்று 29.2.16 PTTV நேர்பட பேசு!
----\\\\
ஓ..!
"பரீட்சையில் பிரதமர் மோடி பாஸாகி விட்டார்" என கருணாநிதி பாராட்டு! 
அப்புறம்... "இது அமலாகுவது குறித்து வைத்தே கூற முடியும்" என்றும் லேசா கூறியுள்ளார்! 

ஒரு பக்கம் காங்கிரஸ்வுடன் உறவு; இன்னொரு பக்கம் பாஜக வுடனும், அதன் பட்ஜெட் மீதும் காதல்! எப்படி முடியுது கருணாநிதியால்... இரண்டு குதிரையில் சவாரி..!? 

பட்ஜெட் டில் "பெரு முதலாளிகளுக்கு ரூ1,060 கோடி வரிச்சலுக்கை; ஏழை மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீது மறைமுக வரி ரூ60,600 கோடி!" என உள்ளதே! 

இதுதான் மோடி பாஸான லட்சணமா? கருணாநிதியாரே! ஓ..! இதுதான் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மனமுண்டு என்பதா? 

முதலாளிக்கான பட்ஜெட் தருவதில் வேண்டுமானால் மோடியும், ஜெட்லியும் பாஸாகி இருக்கிறார்கள் எனலாம்! அதுசரி... சன் குழுமம் நிறுவனரான இவர் இவ்வாறு கூறுவதில் ஆச்சரியமடைய ஒன்றும் இல்லை
----\\\\
கறுப்பு கண்ணாடியை கலட்டி வைத்துவிட்டு...
தமிழ்நாட்டின் நாடி கணிப்பு முடிவுகள் (?!) உணர்த்துவது-- கணிப்பு நடத்துபவர்கள் - நிறுவனங்கள் யாவும்-- "திமுக - அதிமுக ஆகியவைகளையே இதர வளரும் கட்சிகள் சுத்திக் கொண்டிருக்கட்டும்; தனித்துவமான மாற்று எதுவும் தப்பித் தவறியும் வந்துவிடக் கூடாது" என்பதைத்தான்!

ஊழலுக்கு எதிரான மனநிலை மட்டுமல்ல, டாஸ்மாக், கனிமம் உள்ளிட்டு இயற்கை வளம் கொள்ளை, தொடரும் தீண்டாமை போன்றவையும் நிச்சயம் மக்கள் மனநிலையில், மாற்றத்தை ஏற்படுத்தியே தீரும்; அதற்கான வலுவான மாற்று வாகணமாக...  சாரதியாக... நாளுக்கு நாள் மக்கள் மத்தியில், "மக்கள் நலக் கூட்டணி" பரிணமித்துக் கொண்டே வருகிறது!

மாற்று சக்தியை தீர்மாணிக்க முடியாதது ஏன்னென்றால்... ஊடகங்கள் அணிந்திருக்கும் கறுப்பு கண்ணாடியும், அதிமுக, திமுகவின் அய்ம்பது ஆண்டுகள் ஆட்சியால், வேறோடி போய் கிடக்கும் சுயநலவெறியும் தான்!

ஊடகங்கள் (செய்தி-காட்சி) தனது கறுப்பு கண்ணாடியை கலட்டி வைத்துவிட்டு, சரியான மாற்று இதுதான் என்று சொல்லும் இடதுசாரிகள் உள்ளிட்டு இருக்கும், வாராத வந்த மாமணி போல் வந்திருக்கும் "மக்கள் நலக் கூட்டணி" குறைந்தபட்ச செயல்திட்டத்தை மக்களிடம் சேர்க்க வேண்டும்; அதிமுக-திமுக போதையில் மயங்கி கிடக்கும் மக்களை தட்டி எழுப்பி, துணிவுடன் நெஞ்சை நிமிர்த்தி பரப்புரை செய்தாலே... அதை செய்வோருக்கு... குறிப்பாக  மக்கள் நலக் கூட்டணிக்கு உதவினாலே போதும்...! எல்லாவற்றிக்கும் மேலாக திமுக, அதிமுக வுக்கு ஆதரவாக கருத்து கணிப்பு என்கிற பெயரில் .. கருத்து திணிப்பு (கட்சி சார்பற்ற ஊடகங்கள் என சொல்லிக் கொள்பவை) செய்யாமல் இருந்தாலே போதும்.... மாற்றம் வந்துவிடும்!

இன்று 16.2.16 PTTV நேர்படபேசு!
-----\\\\
நமோ வாய் திறக்க மறுக்கிறதே ஏன்?
தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் 12 க்கு 7 இல் வெற்றி பெற்றதற்கு-- "வளர்ச்சிக்கு கிடைத்த வெற்றி" என்கிறார் பிரதமர் நமோ! அப்படி யென்றால் பிகாரில் நடந்த பொதுத்தேர்தலில் 30 க்கும் மேற்பட்ட பிரச்சார பிரமாண்ட கூட்டம் நடத்தி, அதில் நமோ பரப்புரை செய்தும் படுதோல்வி அடைந்ததே பாஜக..! அதற்கு பெயர் என்ன?

பரவாயில்லை... சட்டமன்ற  இடைத்தேர்தல் முடிவுகளுக்குக்கூட கருத்து சொல்ல நேரம் இருக்கிறதே! ஆனால்... உயர் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் பாசிச தாக்குதலுக்கு எதிராகவோ, மக்கள் ஒற்றுமையை குலைக்கும் இந்துத்துவா பாசிச தாக்குதலுக்கு எதிராகவோ நமோ வாய் திறக்க மறுக்கிறதே ஏன்?
---\\\
"அழகிரி பேச்சை அவரது மகனே கேட்க மாட்டார்" என்கிறார் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன்! அதுசரி... கருணாநிதி பேச்சை அவரது 'மகன்' 'மகள்'கள் கேட்கிறார்களா? கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள் அய்யா?
----\\\\ 
கொஞ்சம் சொல்லுங்க... சாமிகளா..! சொல்லுங்க..!
"நடிகர் சங்கத்தில் வாக்களிக்கும் உரிமை கொண்ட ஆயுள் கால உறுப்பினராக கருணாநிதி சேர்ப்பு!"  (இது செய்தி: 19.2.16)
##
ஆயுள் காலம் முழுவதும் நடிப்பை தொழிலாக கொண்டிருப்பது ஒருவகை! ஆயுள் காலம் முழுவதும் தொழிலிலே நடிப்பாக கொண்டிப்பது இன்னொருவகை! இவர் எந்த வகை நடிகரென்று நடிகர் சங்கத்தில் ஆயுள் உறுப்பினராக்கி உள்ளீர்கள்..? 

கொஞ்சம் சொல்லுங்க... சாமிகளா..! சொல்லுங்க..!
---\\\
சொல்வதும் பல்டியடிப்பதும்தான்...!? 
"விவசாயிகள் தற்கொலை பேஷன் ஆகிவிட்டது"  என்று பாஜக MP கோபால் ஷெட்டியின் திமிரான பேச்சு! வலுவான எதிர்ப்பு கிளம்பியவுடன், "விவசாயிகளுக்கு இழப்பீடு தருவதில் அரசுகள் போட்டா போட்டி போடுவது பேஷனாகி விட்டதென என்றுதான் சொன்னேன்" என ஷெட்டி பல்டி அடித்துள்ளார்! சொல்வதும் பல்டியடிப்பதும்தான் பாஜகவும் பாசிச குணமும்!
---\\\
'மநு' வை கொளுத்தாமல்.. எப்படி..? 
"ஜாதி,மத கலவரத்திற்கு முற்றுப்புள்ளி ஆன்மிகவாதிகளால் தான் முடியும்!" என வாழும் கலை குருஜி (?) ரவிசங்கர் கும்பகோணம் துறவிகள் மாநாட்டில் திருவாய் மலர்ந்துள்ளார்! 

இவருக்கும் 'மநு' தர்மத்திற்கும், பாஜகவுக்கும், இந்துத்துவாக்கும், மோடிக்கும் உள்ள உறவு உலகறிந்த ரகசியம்! அப்படி இருக்க ஜாதி, மத மோதலுக்கும் துவேசத்திற்கும், தீண்டாமை கொடுமைக்கும் ஊற்றுக்கண் எது? யார்? என்பது ஊரறிந்த ரகசியம்! 

'மநு' தர்மத்தை தீயிட்டு கொளுத்தாமல், எப்படி சாமி ஜாதி, மத மோதல்களுக்கு உங்களால் முடிவு கட்ட முடியும் வாழும் கலை வாத்தியாரே... காவி வாத்தியாரே..!
----\\\
ஏவல் துறையே... 
அரை நிர்வாணமாக வந்தாங்க... DYFI போராட்டக்காரங்கன்னு... எங்க தோழர்கள போட்டு மிதித்ச்சி எடுத்தீங்களே... 
சேலம் காவல் ஏவல் துறையே... 

நீங்க சரியான "மானங்காக்கும்" துறைகளாக இருந்தா... அம்மா கிட்ட கேட்டோ, கேட்காமலோ... நேராக நாக்பூர் போய் இந்த "அரடவுசருகள" புடிச்சி, எங்க DYFI தோழர்கள 'கவனிச்ச' மாதிரி 'கவனிச்சிங்கனா...' நீங்க..... "முழு டவுசரு" போட்ட மவுனங்க... செய்வீங்களா? 

ஆமா.. உங்க போலீஸ்சு தொறைங்க வூட்டுல படிச்சிபுட்டோ... படிக்காமலோ... பசங்களே...(ஆண்,பெண்) இல்லையா மூதேவிங்களா..? அதுக்கும் சேதுத்தான் இவிங்க 'அரை நிர்வாண நூதன போராட்டம்' தெரியுதா புண்ணாக்குங்களா?
----\\\\
"மநு"வும் "மது"வும்!
மக்களை போதையில் ஆழ்த்தி, புத்தியை பேதலிக்கச் செய்வது... "மநு"வும் "மது"வும்! 

இவை இரண்டும் ஒழிக்கப்படுவதில் தான் எதிர்காலமே இருக்கிறது! இதில் ஒன்றை (மது) ஒழிக்க அரிய வாய்ப்பு "மக்கள் நலக் கூட்டணி" தமிழகத்தில்..! 

மதுவை ஒழிப்போம்.. மக்களை நலக் கூட்டணியை ஆட்சியில் அமர்த்துவோம்! மநு வை ஒழிக்கும் போரும் இதில் இணைந்தே இருக்கிறது!
----\\\\
ஆர்எஸ்எஸ் 'நீசத்தனம்' சாம்பலாக்கப்படும்!
"மாவோஸ்ட்களுடன் பேச்சு நடத்த தயார்" என நீட்டி முழங்கி உள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்... நாட்டின் பாதுகாப்பைக் கருதியாம்! 

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலே... ஆர்எஸ்எஸ்தான்! அதன் பாசிச குணமும் கோலோச்சும்தான்! அதுசரி, பாசிசத்தையும், பன்னாட்டு-இந்நாட்டு சுரண்டல் வர்க்கத்தையும் எதிர்ப்பவர்கள்... உங்களுக்கு "அப்படி"தான் தெரியும்! 

இருந்தாலும் நாட்டின் பாதுகாப்பு மீது ராஜ்நாத்சிங்குக்கும், ஆர்எஸ்எஸ்க்கும் பொங்கி வழியுற "பாசத்தை"ப் பார்த்தால் அப்படியே புல்லரித்து போகுது போங்க!  

மாவோஸ்ட்களுடன் பேச வேண்டாமென்று யாரு உங்க கையையும், காலையும் புடிச்சிக்கிட்டாங்க..? உங்க காவி கும்பல்தானே..? 

அய்யா சாமி.. நீர் மாவோஸ்ட் கூட பேச்சும் நடத்துவீர்; மாவோஸ்ட்டாக கூட மாறுவீர்! ஏனா... 'தேச பக்தன் இவன்; தேச விரோதன் இவன்' என குத்தும் "முத்திரை"யை 'லீசு'க்கு  இப்ப நீங்க எடுத்திருக்கிறீங்க  இல்லிய்யா..!?

அதனால... இதையும் பேசுவீங்க; இதுக்கு மேலேயும் பேசுவீங்க! எந்த வேசமும் போடுவீங்க; உலக மகா நடிகர்கள் அல்லவா ஆர்எஸ்எஸ் அடலேறுங்க...! இதெல்லாம் மக்களுக்கு தெரிஞ்சதுதாங்க..!

தேசபிதாவை சுட்டு கொன்ற நீங்க பேசுறீங்க...தேசபக்தியைப் பற்றியும், தேச நலன் பற்றியும், தேச பாதுகாப்பைப் பற்றியும்! 

இந்த 'தில்லாலங்கிடி' வேலையை மக்கள் மௌனமாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று நினைத்து விடாதீர்! ஒருநாள்... எரிமலை வெடிக்கும்! அதில் உங்களின் 'நீசத்தனம்' சாம்பலாக்கப்படும்!
---\\\
தினமணியா? ஆர்எஸ்எஸ் ஊதுகுழலா?

இன்று (20.2.16) 'மக்கள் கருத்து'... 

"அடிப்படைவாதிகளின் புகலிடம்தான் ஜேஎன்யூ என ஆர்எஸ்எஸ் கூறியிருப்பது.." 

#ஏற்கலாம்-70%; 
#திசை திருப்பல்-15%; 
#வீண் புகார்-15% 

என பதிவிட்டு உள்ளது. 
அதுவும் தமிழகத்தில்... தமிழ் பத்திரிக்கையில்...  இது தான் தினமணி! 

இதைதான் நடுநிலை நாளேடு என வாங்கி தொலைத்துக் கொண்டிருக்கிறோம்! இதைவிட ஒன்று... இந்தியாவில் ஆர்எஸ்எஸ் ஊதுகுழல் இருக்க முடியுமா..?
----\\\\
தொகுதி நிர்வாகிகள்..
மக்கள் நலக் கூட்டணி வீரப்பாண்டி தொகுதி நிர்வாகிகள் கூட்டம் இன்று  20.2.16 திவ்யா தியேட்டர் அருகில் விகே.அருணாசலம் மதிமுக பனை ஒன்றிய செயலாளர் தலைமையில் நடைபெற்றது!  

இதில் சிபிஎம் மாவட்ட குழுச்செயலாளர் பி.தங்கவேலு, சிபிஐ மாவட்டச் செயலாளர் எ.மோகன், விசிக மேற்கு மாவட்டச் செயலாளர் செ.அய்யாவு மற்றும்  சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.ராமமூர்த்தி, எம்.சேதுமாதவன் உள்ளிட்டோர்... 

மார்ச் 1ந்தேதி தொகுதி செயல்வீர்கள் கூட்டம் நடத்தி, தேர்தல் பணிகளை முழுவீச்சில் கொண்டு செல்வதென முடிவானது!
----\\\\
மக்கள் நலக் கூட்டணியின் சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு ஆகிய தொகுதிகளின் நிர்வாகிகள் கூட்டம் இன்று  20.2.16 சேலம் சிபிஐ அலுவலகத்தில்  விசிக மாநகர மாவட்ட பொருளாளர் சுஹைல் ரகுமான் தலைமையில் நடைபெற்றது!  

இதில் சிபிஎம் மாவட்ட குழுச்செயலாளர் பி.தங்கவேலு, சிபிஐ மாவட்டச் செயலாளர் எ.மோகன், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் கே.ஜோதிலட்சுமி உள்ளிட்டோர்... 

சேலம் வடக்கு 29.2.16; சேலம்  தெற்கு 1.3.16; சேலம் மேற்கு 3.3.16 தேதிகளில் தொகுதி செயல்வீர்கள் கூட்டம் நடத்தி, தேர்தல் பணிகளை முழுவீச்சில் முன்னெடுத்து செல்வதென முடிவானது!
மக்கள் நலக் கூட்டணி ஏற்காடு தொகுதி நிர்வாகிகள் கூட்டம் இன்று  21.2.16 அயோத்தியாப்பட்டிணம் சிபிஐ அலுவலகத்தில்  விசிக ஏற்காடு தொகுதி செயலாளர் ஆ.பாவளன் தலைமையில் நடைபெற்றது!  

இதில் சிபிஎம் மாவட்ட குழுச்செயலாளர் பி.தங்கவேலு, மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜோதிலட்சுமி, ஏற்காடு வட்டச்செயலாளர் டி.பழனிசாமி, வாழப்பாடி வட்டச் செயலாளர் வி.பழனிமுத்து, சிபிஐ மாவட்டச் துணைச் செயலாளர் எ.மோகன், சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுகம் மதிமுக ஒன்றிய செயலாளர் எம்.மாரப்பன் உள்ளிட்டோர் உரையாற்றினர்!

2.3.16ல் ஏற்காடு தொகுதி செயல்வீர்கள் கூட்டம் அயோத்தியாப்பட்டிணத்தில் நடத்தி, தேர்தல் பணிகளை முழுவீச்சில் முன்னெடுத்து செல்வதென முடிவானது!
----\\\\
சேலத்தில்...  
மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் எழுச்சி உரை ஆற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்! 25,000 பங்கேற்க முடிவு! 
##
2.3.16 மாலை 6 மணிக்கு சேலம் போஸ் மைதானத்தில் சிறப்பாக நடத்திடுவதென 25.2.16 மாலை நடந்த சேலம் மாவட்ட மக்கள் நலக் கூட்டணி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது

சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ.மோகன் தலைமையில், சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடந்தது. 

ஆலோசனை கூட்டத்தில் சிபிஎம் மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு, மதிமுக மாநகர மாவட்டச்செயலாளர் ஆ.ஆனந்தராஜ், மேற்கு மாவட்டச் செயலாளர் ந.மகேந்திரவர்மன், விசிக மாநகர மாவட்டச் செயலாளர் கோ.ஜெயச்சந்திரன், கிழக்கு மாவட்ட செயலாளர் சிக.முத்து, மேற்கு மாவட்ட செயலாளர் செ.அய்யாவு, வடக்கு மாவட்டச் செயலாளர் ஆ.வசந்த் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
----\\\\
" 'கிங்' கா? 'கிங்' மேக்கரா? என்றால்..." (!?) 
முதல்வரா? முதல்வரை உருவாக்குவரா? என்ற முழக்கம் உண்மையிலேயே உண்மை யதார்த்தம் என்றால்... 

அதற்கு ஒரே மாற்று... மாற்று அரசியலை முன் வைத்து எழுச்சி பயணம் மேற்கொண்டு வரும் "மக்கள் நலக் கூட்டணி" தான்! சேருமா அதில் தேமுதிக...? 

இதுதான் தமிழக மக்களின் மில்லியன் டாலர் கேள்வி!?
----\\\\
"பகத்சிங் நினைவகம்" திறப்பு!
சிபிஎம் வாழப்பாடி வட்டக்குழு அலுவலகம் "பகத்சிங் நினைவகம்" இன்று 21.2.16 அயோத்தியாப்பட்டிணத்தில்... மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு திறந்து வைத்தார்.

சிபிஎம்  மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜோதிலட்சுமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.சேதுமாதவன், வட்டச் செயலாளர் வி.பழனிமுத்து, ராம்நகர் கிளை செயலாளர் நாகராஜ், DYFI  மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ், உள்ளிட்டோர் பங்கேற்பு...
----\\\\
 'எதற்கு இந்த தகிடுதத்தம்?' 
இன்று  22.2.16 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில்... முன்னாள் தேமுதிக எம்எல்ஏ பாஃபா பாண்டியன்... 

"அதிமுக எம்எல்ஏ க்களைவிட எதிர்கட்சி எம்எல்ஏகள்தான் அதிகமான சலுகைகளை பெற்றார்கள்" "தொகுதிக்கு நல்லது (?)செய்வதற்க்காகதான் எம்எல்ஏவை ராஜினாமா செய்யாமல் அதிமுகக்கு ஆதரவாக 8 எம்எல்ஏக்கள் இருந்தோம்" "தேமுதிகவில் போன ஒருவர் அப்பொழுதே எம்எல்ஏவை ராஜினாமா செய்தாரே" என்றதற்கு... 'அவருக்கு உடல்நிலை சரியில்லை' என கூசாமல் கூறுகிறார்!

பாண்டியரே... சிதம்பரம் தொகுதியில் தோழர் கே.பாலகிருஷ்ணன்... 'அண்ணாமலை பல்கலை அரசு ஏற்றது' உள்ளிட்டு செய்தார் என்றதற்கு நன்றி! அதை உங்க அம்மா அரசு சும்மா செய்யவில்லை; அதற்காக மாணவர்களும், மக்களும் கேபி எம்எல்ஏ தலைமையில் நடந்த போராட்டம் கொஞ்சமா? நஞ்சமா?

'இது முழுக்க முழுக்க அரசியலே' என ஷாநவாஸ் சரியாக பதிலடி கொடுத்தார் (தற்போது பதவி விலகல்)! 

அதுசரி... அப்படி என்றால், பாலகிருஷ்ணன் மக்களுக்கு செய்தததுபோல் நீங்களும் எதிர்கட்சி எம்எல்ஏவாக இருந்து, உங்கள் 8 தொகுதி மக்களுக்கு அதிமுகக்கு ஆதரவாக போகாமல், "செய்து" இருக்கலாம் அல்லவா? அல்லது அதிமுக எம்எல்ஏக்கள் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை; செய்யவில்லை என பழ.கருப்பையா சொன்னதையே வேறுவிதமாக சொல்கிறீர்களா? 

எது பாண்டியரே எது? எதற்கு இந்த தகிடுதத்தம்! தில்லாலங்கடி வேலை? மக்கள் எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்!
----\\\\
கெயில்... 
# கெயில்....நிறுவனத்திற்கு விவசாயிகளுக்கு விரோதமாக அனுமதி வழங்கிய உச்ச நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்தும்...
# விவசாயிகளுக்கு பாதகமில்லாமல், நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே வழியில் இத்திட்டத்தை அமலாக்க கோரி... 
# விவசாயிகளுக்கு விரோதமான PMP சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்திடவும்...
# தமிழக அரசு சீராய்வு மனு மீது திறமைவாய்ந்த வழக்குரைஞர் மூலம் வாதாடிடவும் கோரி...
# விவசாயிகளின் இந்த எதிர்ப்பையையும் மீறி எரிவாயு குழாய் பதித்தால் எந்த தியாகமும் செய்து தடுத்தே தீருவோம் என்றும்...
##
சேலம் தபால் அலுவலகம் முன்பு இன்று 23.2.16 கெயில் எரிவாயு திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்! 
##
தலைமை: பெ.சண்முகம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர், கண்டன உரை: எ.மோகன்,சிபிஐ விச தலைவர், மாணிக்கம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர், எஸ்பி.தங்கவேல் சிபிஎம் விச மாவட்டச்செயலாளர்....
----\\\\
மாணவர் மீது அபாண்டபழி!
#புதுதில்லி JNU மாணவர் மீது அபாண்டபழி!#ஆர்எஸ்எஸ் பாசிசத்தின் உச்சம்! 
#இடதுசாரி தலைவர்கள் மீது தேசதுரோக அவதூறு!
#AISF மாணவர் கண்ணய்யா குமார் தேசதுரோக வழக்கில் சிறையடைப்பு!
#கோர்ட் வளாகத்தில் கொலைவெறி தாக்குதல்!
#ஆர்எஸ்எஸ் பாசிசத்தை வேரறுப்போம்   
##
மக்கள் நலக் கூட்டணி 23.02.2016 செவ்வாய் மாலை சேலம் தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம்! நடந்தது!

தலைமை: ஏ.மோகன் சிபிஐ மாவட்டச்செயலாளர்

கண்டன உரை: பெ.சண்முகம் சிபிஎம் மாநிலசெயற்குழு, பி.தங்கவேலு சிபிஎம் மாவட்டக்குழு செயலாளர், விசிக சௌ.பாவேந்தன் முன்னாள் மாவட்டச்செயலாளர், சிபிஐ மாநகர செயலாளர் ராசேந்திரன், விஜயக்குமார் மதிமுக பொதுக்குழு ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்!
----\\\\
தேமுதிக வுக்கு பூஜ்யம் தான்...
மக்கள் நலக் கூட்டணிக்கு போனால் அரசியல் எதிர்காலம் தேமுதிக க்கு பிரகாசிக்கும்!

பாஜக விடம் போனால் அரசியல் எதிர்காலம் தேமுதிக க்கு சூன்யம் ஆகிவிடும்! 

"அவ்வளவு பெரிய மோடி அலை" அடித்தபோதே தேமுதிக வுக்கு பூஜ்யம் தான் கிடைத்தது!

தேமுதிக க்கு பாஜக திமுக காங்கிரஸ் பாமக பொருந்தா கூட்டணி! மக்கள் நலக் கூட்டணியே பொருந்தும்!

இன்று 23.2.16 PTTV நேர்படபேசு!
----\\\\
புயல் மக்களவையில்...
குடியரசு தலைவர் உரை எப்படி இருந்தாலும் ஜேஎன்யூ வில் பாஜகவின் திருகுதாளம் அம்பலம் ஆக்கப்படும்! பாஜகவின் போலி தேசப்பற்று துகில் உறிக்கப்படும்! 

கம்யூனிஸ்ட்களுக்கும், காங்கிரஸ்காரர்களுக்கும் தேசபற்று பற்றி வகுப்பெடுக்கும் தகுதி, தேசபிதாவை சுட்டு கொன்ற ஆர்எஸ்எஸ்சின் முகமூடி பாஜகவுக்கு இல்லை என்ற புயல் மக்களவையில் மையம் கொள்ளும்! 

இன்று 23.2.16 news 7 ?கேள்வி நேரம்!
----\\\\
போலி தேசபக்தர்கள், கோயாபல்ஸ் ஆரம்பம்..!
இன்று 24.2.16 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சி... மார்க்சிஸ்ட் அருணன், பாஜக சேகர், நெறியாளர் ஜென்ராம்... குடியரசு தலைவர் உரை, திமுக அதிமுக விளம்பரம் என சென்று ஜேஎன்யூ வை தொட்டது விவாதம்! எதிர்பார்த்ததைப் போல் காரசாரமாக வே இருந்தது! அருணனும், ஜென்ராமும் போட்ட கிடுக்கி பிடியில், கிறுக்கு பிடித்தவரைப் போல் சேகர் உளற... வெறிதனமாக கத்தோ கத்தென்னு கத்தினார். 

கம்யூனிஸ்ட்கள்  எங்கோ கோடிகணக்கானவர்களைக் கொன்று குவித்துவிட்டார்களாம்! இப்படி போகுற போக்கில் போட்டுவிட்டு போவதுதான் பாஜக ஆர்எஸ்எஸ்! தேசபற்றை குத்தகைக்கு எடுத்துள்ள இவர்கள்... இன்று பிரதமராக இருக்கும் மோடி ஆட்சியில் பல்லாயிர கணக்கில் முஸ்லீம்களை கொன்று குவித்தனர்..!

அது-- தற்போது இந்தியா முழுவதும் விஸ்தரிக்கப் போவதன் அறிகுறிதான் இந்த ஒன்னரை ஆண்டுகளாக மோடி ஆட்சியின் லட்சணம்... அதன் முகமூடி கிழிந்து நன்றாக வெளியே வந்து உள்ளதை மிக அருமையாக ஆதாரமாக ஜென்ராமும், அருணனும் அடுக்கினர்! அருமை! சபாஷ்! 

பாஜகவினர் வழக்கமாக செய்வதை போல் சேகரும் துவக்கம் முதலே கத்தித்தீர்தார்! பொய்யர்கள், போலி தேசபக்தர்கள், கோயாபல்ஸ் இட்லர் வாரிசுகளிடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்!?
----\\\
"ப்பிலடி நான்சென்ஸ்!"
நேற்று 23.2.16 news 7 ?கேள்வி நேரம் நிகழ்ச்சியில்... தேசபக்தியின் இன்றைய ஹோல்சேல் டீலர்கள் போலி தேசபக்தர்களாம் பாஜகவின் ராகவன் பிரஸ்பதியிடம் மார்க்சிஸ்ட் கே.கனகராஜ் வளைத்து வளைத்து மீண்டும் மீண்டும் கேட்டார்..."அய்யா தேசபக்தர்களே... விடுதலை போரில் உயிர் நீத்த... அல்ல, பங்கேற்ற ஒரு ஆர்எஸ்எஸ் அல்லது பாஜக முன்னோடிகளை சொல்லுங்க" என்று!

"அப்ப இவங்க பொறக்கவே இல்லையாம்..!" ராகவனின் முத்துசிதறல்!

அடப்பாவிங்களா? தேசபிதாவை சுட்டு கொன்றானே... முஸ்லீம் போல் சுன்த் செய்து கொண்டு, இஸ்மாயில் என கையில் பச்சைக்குத்திக் கொண்டு... அவன் செய்த செயல் தேசபக்தியா? அவனுக்கு (நாதுராம் கோட்சே) சிலை வைப்பதும், அவனின் "தியாகத்திற்கு" சிலிர்த்து எழுவதும்தான் தேசபக்தியா? அவனின் அந்த தேசபக்த செயலை (தேசபிதாவை கொன்றதை) பாராட்டி கோர்ட்டு விடுதலை செய்ததா? அவனை நீங்கள் கொண்டாடுவது மட்டும் தேசபக்தியா? மூதேவிகளே... சொல்லுங்கள்! 

பத்து குழந்தை பெற்றவருக்கு மருத்துவச்சியாக போனாறாராம் தலைபிரசவகாரி..! அதுபோல்... தேசவிடுதலைக்கும், பெற்ற விடுதலையை பாதுகாக்கவும் இன்றளவும் தன் இன்னுயிரை ஈய்ந்து வரும் கம்யூனிஸ்ட்களைப் பார்த்து... விடுதலை போரை காட்டிக் கொடுத்தக் காவிக்கும்பல் விரல் சுட்டுவதற்கு என்ன யோகியதை இருக்கு? ப்பிலடி நான்சென்ஸ்!
----\\\\
திமுக அதிமுக விளம்பர சர்ச்சைகள்...
திமுக அதிமுக விளம்பர சர்ச்சைகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது! 

ஊடக விளம்பரங்கள் யாவும் திமுக அதிமுக வின் கறுப்பு பணத்தை வெள்ளை ஆக்கும் மோசடியே! உத்தியல்ல இது!

திமுக அதிமுக ஒன்றை ஒன்று குற்றம் சுமத்திக் கொள்வதில் அருகதை அற்றவைகளே!  

இன்னாள் (அதிமுக), முன்னாள் (திமுக) அரசுகள் செய்யாத மக்கள் நல காரியங்களை சுட்டிக்காட்டிட அருகதை உள்ள ஓரே அணி மக்கள் நலக் கூட்டணியே!

இந்த மாதிரியான விளம்பரம் கன்றாவியானதே! அசிங்கமான பாடல் வரிகள் இது! இதை பயன்படுத்து அசிங்கத்திலும் அசிங்கம்!
----\\\
 "நீதி பிழைக்குமா..?!"
தற்போது நடந்து வரும் ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் 2வது நாளாக நடந்த விசாரணையில் ஓரிடம்... 2 நீதிபதிகளில் ஒருவர் குறுக்கிட்டு கேட்கிறார்...

"1991-96 கால கட்டத்தில் ஜெயலலிதா வருமான வரி தாக்கல் செய்தாரா?" என்று.  

அதற்கு கர்னாடக அரசு வழக்குரைஞர் கூறுகிறார்... 

"சொத்து குவிப்பு வழக்கு தாக்கல் செய்த பிறகே, தாக்கல் செய்தார். வருமான வரிதுறை ஏற்றுக்கொண்டதாலே ஜெயலலிதாவின் வருமானம் சட்டப்பூர்வமானது என ஏற்க முடியாது..." என்று. (இந்துதமிழ்:25.2.16) 

தீர்ப்பு எப்படி வரும் என்பதற்கு இது ஒரு அறிகுறியாக இந்த தற்குறிக்கு தோன்றித் தொலைக்கிறதே! இது-- (இந்த தற்குறியின் சந்தேகம்) பொய்யானால் நீதி பிழைக்கும்!
----\\\\
சிபிஎம் கொடியேற்றுவிழா..!
சேலம் ஆத்தூர் தமையனூரில் சிபிஎம் கொடியேற்றுவிழா 25.2.16 இல் கிளை செயலாளர்  டி.அய்யனார் தலைமையில் நடைபெற்றது!

சேலம் மாவட்டக்குழுச் செயலாளர் பி.தங்கவேலு கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார். 

மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குழந்தைவேல், ஆத்தூர் தாலூக்கா செயலாளர் பிஆர்.மாதேஸ்வரன், வட்டக்குழு உறுப்பினர்கள்  இல.கலைமணி, எம்.ராமசாமி, என்.கிருஷ்ணமூர்த்தி, கே.பெருமா, கே.ஜெயராமன் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர். டி.பொன்ராமன் நன்றி கூறினார்...
----\\\\
கல்வராயன்மலையில் சிபிஎம் சிறப்பு பேரவை! 
25.2.16 மதியம் கருமந்துறை கட்சி அலுவலக நிலத்தில் இடைக்குழு உறுப்பினர் ஏ.ராமன் தலைமையில் நடைபெற்றது. 

இதில் மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.குழந்தைவேல், பிஆர்.மாதேஷ்வரன், கல்வராயன்மலை இடைக்குழு செயலாளர் ஏ.பொன்னுசாமி உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர். 

2.3.16 அன்று சேலத்தில் நடைபெற உள்ள மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் 500 மலைவாழ் மக்கள் கலந்திடுவதென முடிவெடுக்கப்பட்டது!
-----\\\\\
என்றுமே ஏமாற்றமே!
ரயில்வே பட்ஜெட் தமிழ்நாடுக்கு இன்றல்ல, என்றுமே ஏமாற்றமே!

தனியார்மய நடவடிக்கை தனியாருக்கு தித்திப்பு! மக்களுக்கு தீங்கு! 

கட்டணம் உயர்வில்லா ரயில்வே பட்ஜெட் என்பது கண்துடைப்பு! 

தனியாருக்கு தாரைவார்க்கும் ஏற்பாடே கட்டணமில்லா பட்ஜெட்!

# 25.2.16 PTTV நேர்படபேசு!
----\\\\
"குளோஸ்!"
தேமுதிக முடிவெடுக்கும் போது கூட்டணி குழப்பம் "குளோஸ்!"

என்ன முயற்சி செய்தாலும், பாஜக பாடு திண்டாட்டமே!  

பாஜவுடன் யார் சேர்ந்தாலும் தமிழக மக்கள் அந்த கூட்டணியை நிராகரித்திடுவர்!
---\\\