"எளிமையே உன் பெயர்தான்... உ.வாசுகியா?"
இன்று 8.3.16 சர்வதேச பெண்கள் தினம். இதனை முன்னிட்டு... PTTV வில் காலை புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சி, இரவு நேர்படபேசு நிகழ்ச்சி ... இவை இரண்டிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி விவாதத்தில் பங்கேற்றார்! அதுசரி, அதில் என்ன செய்தி என்கிறீர்களா?
இன்றைக்கு ஒரு புகைப்படம் எடுக்கவே ஏராளமான அலங்காரம் பார்க்கிறோம்! அதுவும் உலகம் முழுவதும் நேரலை தொலைக்காட்சி என்றால் கேட்கவே வேண்டாம்! அந்தளவுக்கு தடபுடல் நிறைந்த உலகம் இது! இந்த உலகத்தில்தான் அதிலும் மகளிர் தினத்தில், காலையும், இரவும் ஒரே உடையை அணிந்து வந்த ஒரு தலைவரின் எளிமை எங்காவது நாடு கண்டிருக்கிறா? ஆம், இன்று நடந்தது! அதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வார்ப்பாம்... அதன் தலைவர்களில் ஒருவருமான உ.வாசுகி..! எளிமையே உன் பெயர்தான் வாசுகியா?
நேர்படபேசு விவாதத்தில் மதுவின் கொடுமையை, அதனால் ஏற்படும் பெண் விதவைகள் அதிகரிப்பதை தடுக்காததேன் என ஒரு தீ குச்சியை உரசிப்போட்டார் உ.வாசுகி பாருங்கள்... சூப்பர்! அதுபோல் நெறியாளர் பூங்குழலி நெறியாளுகை அருமை! சபாஷ்!
----\\\
"எமது மகளிர் தின வாழ்த்துகளும்!"
இன்று 8.3.16 PTTV புதுப்புது அர்த்தம் நிகழ்ச்சியில் சர்வதேச மகளிர் தினம் முன்னிட்டு மார்க்சிஸ்ட் வாசுகி, திமுக சல்மா, இவர்களுடன் நெறியாளர் ஜென்ராம்... PTTV வோடு எமது மகளிர் தின வாழ்த்துகளும்!
மேற்குவங்க இடதுமுன்னணி காங்கிரசுரன் புரிந்துணர்வோடு தேர்தலில் பணியாற்றுவது குறித்த விளக்கத்தை மிக தெளிவாக, சுருக்கமாக வாசுகி விளக்கியது அருமை! குறிப்பாக அங்கு ஒரு அசாதாரண நிலை... சிபிஎம் தோழர்கள் 275 பேர் படுகொலை; 5,00,000 பேர் அகதிகளாக; அலுவலகம் -வீடுகள் சூறை; ஜனநாயகம் படுகொலை என இருப்பதுபோல் இங்கில்லை என சல்மா வுக்கு மட்டுமல்ல... அது அனைவருக்குமான பதிலாக இருந்தது வாசுகி சரமாரியாக பட்டியலிட்டது!
உழைக்கும் பெண்கள் தினமாக 1910 இல் அது அனுசரிக்க துவங்கினாலும், ஒட்டு மொத்த மகளிர் ஒடுக்குமுறைக்கு எதிரான உரிமைகுரல் தினமாகவே அனுசரிக்கப்பட்டு வருகிறது என்பதை வாசுகி கடகடவென அடுக்கி தள்ளிவிட்டார் அவருக்கே உரித்தப்பாணியில் சபாஷ்! ஆம், சல்மா... வாசுகியின் பதிவு அனைத்தையும் மறுக்காமல் ஆதரித்தது... நல்ல புரிந்துணர்வே! என்றாலும் இதை முழுவதும் அதிமுக ஆட்சியின் அவலங்களோடு இணைக்க முயற்சித்ததையும் லேசாக பார்க்க முடிந்தது!
உலக மகளிர் தினத்தை உரிய முறையில் கொண்டாடும், முன்னுதரணமாக முடிந்தமட்டும்
நடைமுறையாக்கி வரும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கும் எமது வாழ்த்துக்கள்!
----\\\\
சேலத்தில்... 02.03.2016...
மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன்... இரவு 8.30 மணி முதல் 11.30 முடிய எழுச்சி உரை...
15 ஆயிரம்பேர் பங்கேற்ற மாற்று அரசியல்-தேர்தல் விளக்கப் மாபெரும் பொதுக்கூட்டம்!
##
விசிக மாநகர மாவட்டச் செயலாளர் கோ.ஜெயச்சந்திரன் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில்...
சிபிஎம் மாவட்டக்குழு செயலாளர்
பி.தங்கவேலு, சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ.மோகன், மதிமுக மாநகர மாவட்டச்செயலாளர் ஆ.ஆனந்தராஜ், மேற்கு மாவட்டச் செயலாளர் ந.மகேந்திரவர்மன், கிழக்கு மாவட்டச் செயலாளர் வ.கோபால்ராஜ், விசிக கிழக்கு மாவட்ட செயலாளர் சிக.முத்து, மேற்கு மாவட்ட செயலாளர் செ.அய்யாவு, வடக்கு மாவட்டச் செயலாளர் ஆ.வசந்த் ஆகியோர் உள்ளிட்டு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேலானோர் பங்கேற்றனர்!
பி.தங்கவேலு, சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ.மோகன், மதிமுக மாநகர மாவட்டச்செயலாளர் ஆ.ஆனந்தராஜ், மேற்கு மாவட்டச் செயலாளர் ந.மகேந்திரவர்மன், கிழக்கு மாவட்டச் செயலாளர் வ.கோபால்ராஜ், விசிக கிழக்கு மாவட்ட செயலாளர் சிக.முத்து, மேற்கு மாவட்ட செயலாளர் செ.அய்யாவு, வடக்கு மாவட்டச் செயலாளர் ஆ.வசந்த் ஆகியோர் உள்ளிட்டு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேலானோர் பங்கேற்றனர்!
முன்னதாக ஒரத்தநாடு கோபி குழுவின் இயக்கப்பாடல் இசைநிகழ்ச்சி... சாத்தப்பாடி பெருமாள் தப்பாட்டம்... மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி முடிய நடைபெற்றது!
---\\\
சுயநலமின்றி செயல்படும் ஒரே அணி!
ஏழு தமிழர் நலனைவிட இவர்களின் (அதிமுக, காங்கிரஸ், பாஜக, திமுக) சுய நல அரசியலே மேலோங்கி இருக்கிறது!
ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தும் சுய நல அரசியலில் இருந்து தமிழகம் விடுபட, 7 பேர் விடுதலை விவகாரத்தில், அரசியல் சுயநலமின்றி செயல்படும் ஒரே அணி, "மக்கள் நலக் கூட்டணி"யே!
----\\\
எது தேச பற்று..?
வாலிபர்-மாணவர்-எழுத்தாளர் கருத்தரங்கம்!சேலம்-03.03.2016.
சேலம் சாமிநாதபுரத்தில் கே.கிருஷ்ணன் தலைமையில் மாலை 7 மணிக்கு துவங்கி நடந்தது!
தீக்கதிர் முதன்மை மேலாளர் கே.கனகராஜ், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி பேராசிரியர் சி.லட்சுமணன், டிஒய்எப்ஐ மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, எஸ்எப்ஐ மாநிலத்துணைத் தலைவர் எம்.காமாட்சி, டிஒய்எப்ஐ மாவட்ட செயலாளர் என்.பிரவீண்குமார், மாவட்டப் பொருளாளர் வி.வெங்கடேஷ், தமுஎகச மாவட்ட கவுரவ தலைவர் இலா.வின்சென்ட், மாவட்ட தலைவர் மதுரபாரதி, மாவட்ட செயலாளர் நிறைமதி, மாவட்ட பொருளாளர் சேக்அப்துல்லா உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்!
----\\\\
கட்சிகளின் அடுத்த நகர்வு...!
விரும்பும் கூட்டணியை உருவாக்க அனைத்து பேரங்களும் வெட்கமின்றி அரங்கேறும்!
திமுக... அதிமுக... சிறிய கட்சிகளுக்கு "பெரிய" வலைவீசும்!
மக்கள் நலக் கூட்டணிதான் மக்களிடம் நேர்மை திறனுடன் செல்லும்! வெல்லும்!
-----\\\\
மகிழ்ச்சி! நடக்குமா?
பணபட்டுவாடாவை தடுத்துவிட்டால் ஆட்சி மக்கள் நலக் கூட்டணி கையில் தவழும் மிக எளிதாக!
அதிமுக திமுக பாமக வாக்காளர்களுக்கு பணமும், பரிசும் கொடுத்தே தீரும்!
பணம், பொருள் எல்லாம் திமுக, அதிமுக, பாமக கட்சிகள் பூத் அளவில்
தற்போதே தயார் நிலையில்!
வணிகர்கள் பொதுமக்கள் தான் இனி தேர்தல் கமிசன் சோதனையில் சிக்குவர்!
ஒருநாளில் 106 விதி மீறல் சுசுபி! போகபோக பாருங்கள் நிமிடத்திற்கு ஓராயிரம் விதிமீறல் வரும்!
---\\\
"பல் இல்லாத பாம்பா தேர்தல் கமிசன்?
இன்று 5.2.16 PTTV இல் நேர்பட பேசு... விவாதத்தில் முன்னாள் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி...
"3 மாதத்தில் தேர்தல் கமிசன் ஒன்றும் மாயமந்திரம் செய்திட முடியாது; தேர்தலுக்கு பலபல மாதங்களுக்கு முன்பே பணத்தைக் கொண்டு சென்று பதுக்கி வைத்துக் கொள்கிறார்கள்; மக்கள்தான் விரட்டி அடிக்க முடியும்; 100 பேரில் 99 பேரும் திருடும்போது ஒருவர் என்ன செய்ய முடியும்; கேரளாவில் அது நடக்காது; மக்கள் அப்படி நடந்தால் அங்கு விரட்டி அடிக்கிறார்கள்; நான் தமிழனாக இருப்பதில் தலைகுனிவாக இருக்கிறது" எனஅங்கலாய்த்தார்!
ஆனால் அவரிடம் இதை யாரும் எதிர் பார்த்திருக்க வாய்ப்பில்லை! ஆம்! நெறியாளர் குணாகூட அதிர்ந்து போனார்!
தேர்தல் ஜனநாயகத்தில் இருக்கும் மாபெரும் ஓட்டை! இதை அடைக்க என்னவழி என்றால்... அதை சொல்லாமல் அரசியல்வாதிகளை குறைகூறிவிட்டு என்.கோபால்சாமி... நழுவிவிட்டார்!
திமுக பரந்தாமன் அதிகாரிகள் மீது பழியைப் போட்டுவிட்டு பறந்துவிட்டார்; அதிமுக சமரசம் இந்த தேர்தலில் பணம் பட்டுவாடா இருக்காது என பதுங்கிக் கொண்டார்! பத்திரிக்கையாளர் கார்த்திகேயனும் முன்னாள் ஆணையர் கருத்தை ஆதரித்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார்!
அப்படி என்றால், தேர்தல் ஆணையம் பல்லைப்புடுங்கிய பாம்பா? நிச்சயமாக இல்லை! "முடியும்" என்பதற்கு இன்று நடந்த இரு நிகழ்வு... ஒன்று இதே டிவி விவாதத்தில் அனைவரின் பேச்சிலும் சென்சார் இருந்தது!
இன்னொன்று, ஏற்கனவே அனுமதி பெற்றிருந்தும் கூட, தேர்தல் ஆணையத்தின் ஆன்லைன் அனுமதி இல்லாததால், சேலம் மாவட்டம் ஒரு கிராமம் பகுதியில் நடக்கவிருந்த சிஐடியு விசைத்தறி மாநாட்டு பொதுக்கூட்டம் நடத்த முடியவில்லை; மாநில தலைவரும் சிபிஎம் சட்டமன்ற குழு தலைவருமான ஏ.சௌந்திரராசன் எவ்வளவோ விளக்கம் கொடுத்தும் போலீஸ் ஏற்கவில்லை!
பணம் பட்டுவாடா நடக்கிறது என்பதை தெரிந்தும், தடுக்க முடியவில்லை என்பது கையறு நிலை அல்லவா? என குணா சரியாகவே தனது கவலையை பதித்தார்; நன்று!
ஒவ்வொரு வீட்டுக்கும் ஆள் போடவேண்டியதில்லை; பணம் பட்டுவாடாவை தடுக்க, ஒரு 10 தொகுதிகளில் குறி வைத்து ஆளும் கட்சி, எதிர் கட்சி என கணக்கிட்டு, கையும் களவுமாக பிடித்து, அதன்பின்-- "அந்த கட்சியின் தேர்தல் அங்கீகாரத்தை ரத்து செய்தால்... அந்த வேட்பாளர் இனி வாழ்நாள் முழுதும் தேர்தலில் நிற்க முடியாதென" தேர்தல் சட்ட சீர்திருத்தம் எவ்வளவோ செய்ய முடியும்! அதை விடுத்து "முடியாது என்பதை எப்படி ஏற்பது" என்.கோபால்சாமி அவர்களே! சொல்லுங்கள்? பல் இல்லாத பாம்பா தேர்தல் கமிசன்? சொல்லுங்கள்!
???
----\\\\
"வாய்கொழுப்பு"
"தேர்தல் வரை மக்கள் நலக் கூட்டணி இருக்காது"
(தினமணி: 6.3.16)
பாஜக மாநில (பறட்டை பன்னாடை 'தலை'வி) தமிழிசை சௌந்திரராஜன்.
----\\\\
பாஜகவின் தேசபக்தி"
!!!
என பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினர் குல்தீப் வார்ஷ்னே (இவர் பாரதிய ஜனதா யுவமோர்ச்சா (இளைஞர் அணி) உத்தப்பிரதேச மாநில தலைவர்) திருவாய் மலர்ந்து உள்ளார். (இந்து தமிழ்: 6.3.16)
இதுதான் பாஜகவின் தேசபக்தியும் பாரம்பரியமும்கூட!
ஆம்! நவீன இந்தியாவில் தேசபிதாவை கொன்றவர்கள் மட்டுமல்ல; புராதான இந்தியாவில் தனக்கு நிகராக வில் வித்தையை கற்று கொண்டதற்காக ஏகலையவனின் கட்டை விரலை காணிக்கையாக பெற்றவர்கள்தானே இவர்களின் முன்னோர்கள்!
அன்று கேட்டார்கள்; பெற்றார்கள்; இலவசமாக! இன்றும் அதே வேலையை செய்கிறார்கள்... இலவசமாக அல்ல... காசு தருகிறோம் என்கிறார்கள்!
குல்தீப் வர்ஷனே போன்ற கொலைவெறியனை பிடித்து உள்ளே போட நாதியில்லையா?
???
"மிஸ்ஸிங்" ஏன்?
மாவீரன் கண்ணய்யா உயிருக்கு விலை நிர்ணயம் (நாக்கு வெட்டி தந்தால் ரூ5 லட்சம்; தலையை வெட்டியோ... அல்லது ஆளை சுட்டோ தந்தால் ரூ11 லட்சம்) என தனது நரவேட்டை பாசிச வெறியை பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினர் குல்தீப் வார்ஷ்னே (இவர் பாரதிய ஜனதா யுவமோர்ச்சா (இளைஞர் அணி) உத்தப்பிரதேச மாநில தலைவர்) வெளியிட்டு இருந்தான்.
மாவீரன் கண்ணய்யா உயிருக்கு விலை நிர்ணயம் (நாக்கு வெட்டி தந்தால் ரூ5 லட்சம்; தலையை வெட்டியோ... அல்லது ஆளை சுட்டோ தந்தால் ரூ11 லட்சம்) என தனது நரவேட்டை பாசிச வெறியை பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினர் குல்தீப் வார்ஷ்னே (இவர் பாரதிய ஜனதா யுவமோர்ச்சா (இளைஞர் அணி) உத்தப்பிரதேச மாநில தலைவர்) வெளியிட்டு இருந்தான்.
அந்த செய்தியை இன்று (6.3.16) நம்மூர் செய்தி தாள்களில் வெளிட்டும், வெளியிடாமலும் இருக்கின்றன!
ஆனால்... தன்னை 'நடுநிலை நாளிதழ்' என தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தினமணியில் "மிஸ்ஸிங்" ஏன்? (தர்மபுரி பதிப்பு) ஒருவேளை நேற்றே வந்திருக்குமோ? அல்லது நாளை, நாளை மறுநாள் வருமோ? தமிழக பாஜகவின் ஊதுகுழல் ஆகிவிட்டதோ... தினமணி!
???
பிஞ்சு நெஞ்சில் சாதி நஞ்சா?
!?!?!?
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆதிவெறி சாதிகளின் சங்கமம் ஆகி வருகிறதோ? ஜாதி மறுப்பு போராளிகள் வாழ்ந்த தமிழ் மண்ணில் பிஞ்சு நெஞ்சில் சாதி நஞ்சு விதைக்கப்பட்டிருக்கும் அவலம் கண்டு மனம் பதைப்பதைப்பு நம்மை வாட்டி வதைக்கிறது!
திருசெங்கோடு கோழிக்கால்நத்தம் அரசு ஆரம்ப பள்ளியில் 4, 5 வது படிக்கும் மாணவர்கள் சூர்யா, ராமசந்திரன்; இவர்கள் தாய்-தந்தை பாப்பாத்தி-பழனிசாமி; அருந்ததியர் சமூகம்! இதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் லத்தீஸ், சஞ்சய்; இவர்கள் தலித் அல்லாத சமூகம்! இந்த மாணவர்களுக்கு இடையே பள்ளிக்கூடத்தில் தகராறு ஏற்பட்டு உள்ளது!
இது பிப் 29 அன்று மதியம் வகுப்பில் நடந்துள்ளது. தலித் மாணவர்களை சாதியை சொல்லி கடுமையாக அடித்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது வகுப்பு ஆசிரியரிடம் தலித் மாணவர்கள் புகார் சொல்லி உள்ளார்கள்! அந்த ஆசிரியை தலித் பசங்கத்தானே என்று அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது!
பள்ளியில் தொடங்கிய தாக்குதல் பள்ளி முடிந்த பின்னும் தொடர்ந்து உள்ளது; தலித் மாணவ சகோதர்கள் சூர்யா, ராமசந்திரன், விஸ்வநாதன் ஆகியோர் லத்தீஸ், சஞ்சய் ஆகிய மாணவர்களால் குச்சிக்கிழங்கு குச்சியின் வேர்பகுதியால் விரட்டி விரட்டி சாதி ஆதிக்க மனநிலையில் ஓட ஓட தலையின் பின்புறம் மீண்டும் மீண்டும் அடித்து உள்ளனர். (சூர்யா சகோதர்கள் தலையில் அடிப்பட்டதற்கான கட்டிகள் இன்னும் இருக்கிறது)
அடிப்பட்ட மாணவர்கள் வீட்டில் சொல்லியும் பெற்றோர் கவனிக்கவில்லை! 3 நாள்கள் கழித்து சூர்யா ரத்த வாத்தி எடுத்துள்ளான். அதன் திருசெங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளான். அங்கு முடியாதென்று சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி, அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டான் சூர்யா.
சூர்யா உயிருக்கு ஆபத்து என்ற சூழலில் லித்தீஸ், சஞ்சய் கைது செய்து, நீதிமன்ற ஜாமீனில் விட்டு உள்ளது; சூர்யா இறந்த பின் எப்ஐஆர் ஆல்ட்டர் செய்ததாக கூறப்படுகிறது. காவல் துறை சாமார்த்தியமாக சூர்யா அம்மா கையெழுத்து பெற்று பிரேத பரிசோதனை செய்துவிட்டது.
தகவல் அறிந்ததும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஆதிதமிழர் பேரவை, அருந்தமிழர் பேரவை, தலித் சேனா அமைப்பு சேலம் அரசு மருத்துவமனை சென்று, சூர்யா பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
அதோடு சூர்யா மரணத்திற்கு காரணமான பள்ளி ஆசிரியைகளையும் இவ்வழக்கில் சேர்த்திட வேண்டும்; இவ்வழக்கை வன்கொடுமை தடுப்பு வழக்கில் பந்திட வேண்டும்; சூர்யா குடும்பத்திற்கு உரிய நட்ட ஈடு வழங்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு தந்துள்ளனர்! அதுவரை சூர்யா பிரேதத்தை வாங்க மாட்டோம் என அறிவித்து உள்ளனர்!
கோழிக்கால் நத்தம் தலித் கிராமமே சோகத்திலும், பதட்டத்திலும் இருந்து வருகிறது! திருசெங்கோடு என்றாலே... அது ஜாதிவெறிகாடு என்றாகி வருகிறது!
கொலை செய்யப்பட்ட மாணவன் சூர்யா வின் தாய் பாப்பாத்தி, தம்பிகள் ராமசந்திரன், விஸ்வநாதன் ஆகியோர் புகைப்படம்...3:04
-----\\\\
அங்ககூட போலாமே!
காங்கிரஸ்தான் மாற்றுக் கருத்துக்கு இடம் தருகிறது!
காங்கிரஸ்தான் மாற்றுக் கருத்துக்கு இடம் தருகிறது!
-பழ.கருப்பையா.
பாஜகவில் சு.சாமியைவிடவா?
#அங்ககூட போலாமே!
----\\\\\
#சுயநலத்தின் உச்சமே வதந்தி!
#கூட்டணி குழப்ப முடிவு... வேட்புமனு திரும்ப பெரும் வினாடி!
#தேமுதிகவின் இறுதி முடிவே குழப்பத்திற்கு முடிவு!
#உலா வரும் ஊகங்கள் ஊடகங்களின் மெய்பாதி பொய்பாதி!
----\\\\
#தேமுதிக கூட்டணி வேட்புமனு திரும்ப பெறும் வரை முடிவாகாது!
#தேமுதிக விற்கு ஏன்தான் இந்த கிராக்கியோ?
#குழப்பத்தில் தேமுதிக தொண்டர்கள் மட்டுமல்ல தலைவர்களும்தான்!
#இன்று 7.3.16 news 7 ?கேள்வி நேரம்!
---\\\\
மகளிருக்காக இட ஒதுக்கீடு கோரும் கட்சிகளில்...
#மக்கள் நலக் கூட்டணி கட்சிகளும் உண்மையான அக்கறை கொண்டவைகளே!
#காங்கிரஸ், பாஜக, அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் நேற்றும், இன்றும் ஆட்சியில் இருந்தபோது இதற்காக ஒரு துரும்பும் அசைக்காதவைகளே!
மொத்தத்தில்...
#உண்மையான அக்கறை கொண்டவர்கள்-- கம்யூனிஸ்ட் கட்சிகள்; நாடகம் ஆடுபவர்கள்--முதலாளித்துவ கட்சிகள்!
#உண்மையான அக்கறை கொண்டவர்கள்-- கம்யூனிஸ்ட் கட்சிகள்; நாடகம் ஆடுபவர்கள்--முதலாளித்துவ கட்சிகள்!
# (இன்று 8.3.16 PTTV நேர்படபேசு... பெண்கள் தினத்தை முன்னிட்டு நெறியாளர் பூங்குழலி மு.ச., மார்க்சிஸ்ட் உ.வாசுகி, திமுக சல்மா, அதிமுக சிஆர்.சரஸ்வதி, பாஜக லட்சுமி சுரேஷ்... மகளிர்களே அமர்ந்து விவாதம் பாராட்டுக்குரியது! நன்று!)
----\\\\
"ஒரு சிறு" சிராவைகூட...!
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களின் கெயில் நிறுவனம்... விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிப்பதில் இருந்து... பாதுகாக்க தவறிய, மாநில -மத்திய அரசுகளின் விவசாயி விரோத போக்கை அம்பலப்படுத்தி...
தமிழக அரசின் சீராய்வு மனு-- "ஒரு சிறு" சிராவைகூட சுப்ரீம் கோர்ட்டில் செய்யாத அவலத்தை... விளக்கி குமுறுகிறார்... தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட துணைத்தலைவர் பி.தங்கவேலு... அருகில் மாவட்டப் பொருளாளர் ஆர்.குழந்தைவேல்... (8.3.16 12.30 PM Sun News)0:27
----\\\\
"காதுல பூ..!" ?!
#திமுக வேட்பாளர் நேர்காணலில்...
ஸ்டாலினிடம் துரைமுருகன் கேள்வி கேள்வி கேட்டாராம்! துரைமுருகனிடம் ஸ்டாலின் கேள்வி கேட்டாராம்!
#அதுசரி... அவரிடம் (?) யார் கேள்வி கேட்டாங்கய்யா? ஸ்டாலினா? துரைமுருகனா? கனிமொழியா? அன்பழகனா? ராஜாவா? பாலா? யார்... யார்... யார்...?
ஸ்டாலினிடம் துரைமுருகன் கேள்வி கேள்வி கேட்டாராம்! துரைமுருகனிடம் ஸ்டாலின் கேள்வி கேட்டாராம்!
#அதுசரி... அவரிடம் (?) யார் கேள்வி கேட்டாங்கய்யா? ஸ்டாலினா? துரைமுருகனா? கனிமொழியா? அன்பழகனா? ராஜாவா? பாலா? யார்... யார்... யார்...?
#இல்ல... அவரு நிக்கமாட்டாரா..? அன்பு மகனுக்கு விட்டு கொடுத்து விடுவாரா?
#ஆடேய் சாமி உலகமகா நடிப்புப்புடா சாமி..! #தமிழ்நாடு வாக்களர்கள் காதுகளில் டன் கணக்கில் பூ..!
----\\\\
வறட்டு கூச்சல்!
"போதும் மனுஷ்...
போதும் மனுஷ்..!"
நானல்ல..!
நெறியாளர் ஜென்ராம்!
இன்று 9.3.16 PTTV புதுப்புது அர்த்தங்களில் மனுஷ்...
#வறட்டு கூச்சல்!
---\\\
#நாடு கண்ட அரசுகள் யாவுமே செல்வந்தர்களின் செல்லப்பிள்ளைகளே! #எளியவர்கள் மீது புலிபோல் பாய்வதுதான் இந்திய அரசுகள்!
#வரி வசூலிக்க தவறியதும், மல்லய்யா தப்பிக்க உடந்தையும் மோடி அரசே! #9000 கோடி ஏப்பம்
விடுவது மிக எளிது! எளியவர் கரண்ட் பில் கட்டாமல் தப்பிப்பது எளிதல்ல!
விடுவது மிக எளிது! எளியவர் கரண்ட் பில் கட்டாமல் தப்பிப்பது எளிதல்ல!
----\\\
#சாதிக்கும்! சறுக்கும்!
தேமுதிக மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்தால் சாதிக்கும்! தனியாக நின்றாலோ, பாஜகவோடு இணைந்து நின்றாலோ சறுக்கும்! இன்று 10.3.16 PTTV நேர்படபேசு!
No comments:
Post a Comment