*மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட்கள் மீது,
மம்தா கட்சி ரவுடிகள்... கொலைவெறியாட்டம்!
சேலத்தில் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்!
#
*மார்க்சிஸ்ட் கட்சியினரின் வீடுகள், அலுவலகங்கள் குண்டு வீசி தகர்ப்பு;
தீ வைப்பு!
*பெண்கள், குழந்தைகள் நூற்றுக்கு மேலானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவனையில் அனுமதி!
*ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் குழித்தோண்டிப் புதைக்கும் காட்டுமிராண்டி மம்தா அரசு!
#
இன்று 4.6.16 சனி காலை 11 மணிக்கு சேலம் தலைமை தபால் நிலையம் முன் நடந்தது.
தலைமை: தோழர் பி.தங்கவேலு மாவட்டக்குழுச் செயலாளர் துவக்கி வைத்தல்: தோழர் பி.ராமமூர்த்தி மாவட்ட செயற்குழு... நிறைவு உரை: தோழர் கே.ஜோதிலட்சுமி மாநிலக்குழு...
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் எம்.சேதுமாதவன், ஆர்.குழந்தைவேல், விகே.வெங்கடாசலம், டி.உதயக்குமார், ஏ.ராமமூர்த்தி, எம்.குணசேகரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜி.கண்ணன், கேசி.கோபிக்குமார், என்.பிரவீண்குமார், ஆர்.வைரமணி, பி.அன்பு, வி.பழனிமுத்து, பி.சந்திரன், பி.அரியாக்கவுண்டர், எம்.ரத்தினவேல் மற்றும் சேலம் மாநகர மேற்கு செயலாளர் எம்.கனகராஜ், மாநகர வடக்கு செயலாளர் எம்.முருகேசன் உள்ளிட்டு 300 க்கும் மேற்பட்டோர் கண்டனம் முழங்கினர்...
----\\\\
எடப்பாடி..!
ஏழைகளின் வாழ்க்கையைப் பாடி...
தேமுதிக மக்கள் நலக் கூட்டணி தமாகா கூட்டணியால் சாதனை படைப்பது உறுதி!
கோடிகளை வீழ்த்திட... உழைப்பாளிகளின் நம்பிக்கை நட்சத்திரமாம்... "அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்" களம் இறங்குகிறது! களமாடுவோம்! வெற்றிக்கனியை பறிப்போம்! மே19 வெற்றி மாலை சூடுவோம்!
அதிமுக திமுக வை வீழ்த்தி மக்கள் நலக் கூட்டணி ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம்! வரலாறு படைப்போம்! ஆம், சேலம் மாவட்டம் தேமுதிக மக்கள் நலக் கூட்டணி தமாகா கோட்டை ஆக்குவோம்!
கோடி கைகளுக்கு முன் கோடிகள் மண்டியிட்டே தீரும்! வெல்வோம்!
#
----\\\\
இருமுனைதான்!
ஒன்று- "நாங்கள் தான் என்றும் ஆளனும்" என்கிற அதிமுக+திமுக! இன்னொன்று அதிமுக திமுக வை வீழ்த்த களம் இறங்கி உள்ள- "தேமுதிக+மக்கள் நலக் கூட்டணி+தமாகா மெகா கூட்டணி!"
தொண்டர்கள் விருப்பம் குழந்தை உள்ளம் போன்று! அதற்கு அனுபவம் குறைவு! எந்த தலைமையும் தொண்டர்களை காவு கொடுக்க விரும்பாது! சில சுயநலமிகள் விஷமத்தனம் செய்யலாம்! அவ்வளவே!
----\\\\
"அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்"
எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில் ஆதரிப்பீர்... "அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்" சின்னத்தை..! அடியேனின் அன்பு வேண்டுகோள்!
எமது முகநூல் தோழர்களே, நண்பர்களே! எடப்பாடி தொகுதி வாக்காளர்களே! வணக்கம்!
வரலாற்று திருப்புமுனையாக அமையப் போகும்- மே 16இல் நடைபெற உள்ள தேர்தலில், அடியேனும் தேமுதிக தமாகா மக்கள் நலக் கூட்டணியின் வேட்பாளர்களில் ஒருவனாக களத்தில் குதிக்கப் போகிறேன் உங்களில் ஒருவனாக!
ஆம், அரை நூற்றாண்டாக தமிழகத்தை சூறையாடிய அதிமுக திமுக கட்சிகளை இனியும், ஆட்சி கட்டிலில் அமரா வண்ணம் அமையப் போகிற இந்த தேர்தலில், களம் இறங்க ஓர் அரிய வாய்ப்பை நல்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு என்ற இதயம் கனிந்த நன்றியை உரித்தாக்குகிறேன்!
தேமுதிக தமாகா மக்கள் நலக் கூட்டணி சார்பில் வெற்றிக் கனியை ஈட்டிட... அனைவரும் ஆசீர்வதித்து, ஆதரவு நல்குவீர்!
எடப்பாடி தொகுதியில் கோடிகளை வென்று, உழைப்பாளிகளை வாழவைக்கும் மாற்று கொள்கைகளை நிலைநாட்டிட ஆதரிப்பீர்... "அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்" சின்னத்தை என இருகரம் கூப்பி, உங்கள் பொற்பாதங்களைத் தொட்டு வணங்கி, கேட்டுக் கொள்கிறேன்!
கோடிகளை வீழ்த்திட, முழுநேரமும்- கடந்த 38 ஆண்டுகளாக உழைப்பாளிகளின் வாழ்வு மேம்பட, போராடி வரும்
இந்த ஏழை எளியோனை உங்கள் கரங்களில் ஏந்துவீர்!
தேர்தல் முடியும் வரை தங்களோடு உரையாடுவதில் இருந்து சற்றே விடுப்பளிப்பீர்! நன்றி!
-----\\\\
நிதி நெருக்கடியையும் மீறி
துணிவுடன் களம் காணும் சிபிஐ, சிபிஐ (எம்) வேட்பாளர்கள்...
நிதி நெருக்கடியையும் வலுவான எதிராளிகளையும் பொருட்படுத்தாமல், சிபிஐ, சிபிஐ (எம்) வேட்பாளர்கள், சேலம் மாவட்டத்தின் வீரபாண்டி மற்றும் எடப்பாடி தொகுதிகளில் துணிவோடு களம் காண்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் P. தங்கவேல், எடப்பாடி தொகுதியில், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகத் துறையின் அமைச்சர் ‘எடப்பாடி’ பழனிச்சாமியை எதிர்த்து போட்டியிடுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் A. மோகன், திமுகவின் முன்னாள் அமைச்சர் ‘வீரபாண்டி’ S. ஆறுமுகம் அவர்களின் மகன் ‘வீரபாண்டி’ A. ராஜேந்திரனை எதிர்த்து வீரபாண்டி தொகுதியில் போட்டியிடுகிறார்.
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிளில் இருந்து இவ்விரு தொகுதிகளிலும் குவிந்துள்ள இடதுசாரி கட்சி தொண்டர்களின் குறையாக நிதிதான் இருக்கிறது. அன்றாட செலவுகளான உணவு, பெட்ரோல் ஆகியவற்றுக்கே நிதி தட்டுபாடு இருக்கும் போது பெரிய கட்சிகளின் இணையாக பகட்டு விளம்பரங்களை பற்றி நினைக்க முடியாது.
இடதுசாரி கட்சி தொண்டர்கள், தங்கும் செலவு, உணவு, இரு சக்கர வாகனத்திற்கான பெட்ரோல் போன்ற செலவுகளை, தங்களது சொந்த பணத்தில் இருந்துதான் செலவு செய்கிறார்கள். “ கட்சி தோழர்கள் எந்த முனுமுனுப்பும் இல்லாமல் காலையில் இருந்து இரவு வரை முழு ஈடுபாட்டோடு செயல்படுகிறார்கள்” என்கிறார் திரு. தங்கவேல்.
கட்சி தோழர்கள் தாமாகவே முன்வந்து நிதியளிக்கிறார்கள். அன்றாட கூலி வாங்கும் தோழர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல என்கிறார், எடப்பாடியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் R.வேங்கடபதி. 10 குவாரி தொழிலாளர்கள் ரூ.2000/- கொடுத்திருக்கிறார்கள். மேட்டூர் கல் குவாரி தொழிலாளர்கள் 100 பேர், தலா ரூ. 100/- தந்திருக்கிறார்கள் என பெருமையோடு பேசுகிறார்.
நாட்டில் நிலவக்கூடிய அரசியல் பிரச்சனைகளை தோலுரித்து காட்டும் வீதி நாடகங்கள்தான் இடதுசாரி தேர்தல் பிரச்சாரத்தின் மைய ஈர்ப்பாக அமையும். ஆனால் நிதி நெருக்கடியின் காரணமாக கடைசி இரண்டு நாட்கள் மட்டுமே கலைக் குழுக்களின் நிகழ்ச்சிகள் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேட்பு மனு தாக்கலின் போது இருவரும் சமர்ப்பித்துள்ள சொத்து கணக்குகளின் விபரங்களை வைத்து, இரண்டு வேட்பாளர்களின் பொருளாதார நிலையை அறிந்து கொள்ளலாம்.
திரு. மோகன் அவர்களிடம் ரூ. 2000/- மட்டுமே கையிருப்பாக உள்ளது. வங்கி கணக்கில் வெறும் ரூ. 500/- மட்டுமே கையிருப்பாக உள்ளது. அவரது பெயரிலோ, அவரது மனைவி மற்றும் மூன்று மகன்களின் பெயரிலோ எந்த சொத்தும் இல்லை. 48 வயது மோகன் வெள்ளி பட்டறையில் தின கூலியாக, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வேலை செய்தார். இப்போது முழு நேர கட்சி ஊழியரான மோகனுக்கு மாத அலெவன்சாக ரூ. 4000/- கட்சியில் இருந்து கொடுக்கப்படுகிறது.
திரு. தங்கவேல் அளித்துள்ள சொத்து விபரங்களின் படி, அவரின் பண கையிருப்பு வெறும் ரூ. 100/-, வங்கி கையிருப்பு ரூ. 5299/- மட்டும். அந்த வங்கி கையிருப்பும் கேஸ் சிலிண்டருக்கான மானியமாக வந்த தொகை என்கிறார் திரு. தங்கவேல்.
இருவருக்கும் எந்த வாகனமும் இல்லை. நன்றி : தி இந்து – ஆங்கி
----\\\
"ஆயிரமாயிரம் நன்றி!"
2016 மே 16 இல் நடந்து முடிந்த தமிழக சட்டபேரவைத் தேர்தலில்... கண் துஞ்சாது ஓய்வறியாது உழைத்த தேமுதிக மக்கள் நலக் கூட்டணி தமாகா தலைவர்களுக்கும், செயல்வீரர்களுக்கும், எனதருமை தோழர்களுக்கும்...
கரண்சி நோட்டுக்கு மனசை கரையவிடாமல், எடப்பாடி தொகுதியில் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகளைப் பதித்த வாக்காளர்களுக்கும்...
என் நெஞ்சம் நிறைந்த நன்றி!
என்னை வேட்பாளராக்கி,
என் சட்டைப் பையில் இருந்து ஒரு பைசாகூட செலவிடாமல் அனைத்தையும் செய்து, தாய்போல் அனுதினமும் பராமரித்து, அரவணைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும்.... தோழர்களுக்கும்....
ஆயிரமாயிரம்
நன்றி! நன்றி! நன்றி!
----\\\\
மூடநம்பிக்கை வேர்விட்டுள்ள சமூகத்தில் அறிவியல் பூர்வமான நம்பிக்கையை விதைப்பதும் வளர்ப்பதும் காப்பதும் அவ்வளவு சுலபமல்ல ; நூறு முறை தோற்க நேரிடலாம் ; ஆயினும் குறுக்கு வழியில்லை.
----\\\\
"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்;
தர்மம் மறுபடியும் வெல்லும்!"
2016 மே 16இல் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சுத்தியல் அரிவாள் நட்சத்திரம்சின்னத்தில் போட்டியிட்டேன்.
எனக்கு, தபால் வாக்கு 25 உள்ளிட்டு 309 வாக்குச்சாவடிகளில் இரண்டைத் தவிர 307 வாக்குச்சாவடியிலும் 5,437 வாக்குகளை வழங்கிய வாக்காளர்களுக்கும், அதற்காக உழைத்த தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணி (விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம்) தலைவர்களுக்கும், செயல்வீரர்களுக்கும் என் சார்பிலும், சிபிஎம் சேலம் மாவட்டக்குழு சார்பிலும் நன்றி! நன்றி!
களமிறங்கி ஆதரவு திரட்டிய சிபிஎம் சார்பான வர்க்க-வெகுஜன அமைப்புகளுக்கும் (சிஐடியூ, டிஒய்எப்ஐ, மாதர் சங்கம், ஓய்வூதியர் சங்கம், இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், தவிச, விதொச, மத்தியதர அரங்கங்கள் உள்ளிட்டு அனைத்திற்கும்)
நன்றி! நன்றி!
மொத்தத்தில்...
"ஜனநாயகம் வென்றிட வேண்டும்; பணநாயகம் வீழ்ந்திட வேண்டும்" என உழைத்த அனைவருக்கும் நன்றி! நன்றி!
'மக்கள் ஜனநாயக புரட்சி' க்கானப் பாதையில் இத்தேர்தல் ஓர் அனுபவ படிக்கட்டுகளே!
உழைப்பாளி வர்க்க நலன் சார்ந்த போராட்டங்களை ஒருங்கிணைந்து முன்னெப்பொழுதையும் விட மிகுந்த வீரியத்துடன் வலிமையுடன் தொய்வின்றி தொடர்வோம்!
ஆயிரம்முறை வீழ்வோம்! ஆனாலும் வெல்வோம்!
----\\\\
விகிதாசார தேர்தல்முறை!
தேவை விகிதாசார தேர்தல்முறை! அதுதான் ஜனநாயகம்! சட்டசபை ஜனநாயகம் என்று ஒன்று உள்ளதா? அதுவும் அதிமுக திமுகவிடமா? அத்தைக்கு மீசை முளைக்கட்டும்... அப்பொழுது சித்தப்பா என்றழைக்கலாம்!
இன்று 20.5.16 PTTV நேர்படபேசுக்கு!
----\\\\
"தியாகி ரவீந்திரன் புகழ் ஓங்குக!"
இன்று 23.5.16 காலை தி இந்து தமிழ், தினமணி, காலைக்கதிர் ஆகிய 3 நடுநிலை நாளேடுகளை படித்தேன். இந்த மூன்றும் முக்கி முக்கி செய்தி வெளியிட்டு இருக்கின்றன.
அதாவது கேரளாவில் மார்க்சிஸ்ட் வெற்றி ஊர்வலத்தின்போது, பாஜக தொண்டர் ஒருவரை வெட்டி கொன்று விட்டதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே டெல்லி சிபிஎம் ஆபீசு முன் ஆர்ப்பாட்டம் செய்ததாகவும், குடியரசு தலைவரிடம் புகார் கொடுத்துள்ளதாகவும் "நடுநிலை"யாக வாந்தி எடுத்துள்ளன. அனேகமாக மற்ற 'நடுநிலை' ஏடுகளும் இப்படித்தான் செய்தியை உற்பத்தி செய்து மக்களிடம் திணித்திருக்கும்.
ஆனால் 53 வயது மார்க்சிஸ்ட் தோழர் ரவீந்திரன் எப்படி மாண்டார்? தன்னைத்தானே குத்தி கொலை செய்து கொண்டாரா? இதெல்லாம் நடுநிலை ஊடக புலிகளுக்குத் தெரியாதா? தெரியும். அவரை பாஜக ஆர்எஸ்எஸ் காலிகள்தான் கொலை செய்தார்கள் என்று! இதற்கு டெல்லி பாஜக அலுவலம் முன் "ஆர்ப்பாட்டம்" என்கிற பெயரில் அராஜகம் செய்தால், ஒருவேளை தோழர் ரவீந்திரனை கொலை செய்த காவி காலிகளை அடையாளம் காட்டுவார்களா?
வரலாறு காணாத வெற்றியை சகித்துக் கொள்ள முடியாத காவிக் கூட்டத்தின் "கொட்டம்" அடக்கப்படும் தூரம் வெகுதொலைவில் இல்லை என்பதை செங்கொடி மைந்தன் ரவீந்திரன் உயிர் தியாகத்தின் பேரால் சபதமேற்போம்! தியாகி ரவீந்திரன் புகழ் ஓங்குக! அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆறுதலை பகிர்வோம்!
----\\\
போதுமான நிதியில்லை;
சவால்கள் மிக்கதே!
---\\\
நியும் நானும் ஒன்னு; ஜனங்க வாயில் மண்ணு!
உலகமகா நடிப்பு சாமி இது!
இன்று 24.5.16 PTTV நேர்படபேசுக்கு!
----\\\
"தலித்மீதானஅறுவறுப்பு அரசியல்?!"
இன்று 25.5.16 PTTV புதுப்புது அர்த்தங்களில்... நெறியாளர் கார்த்திகேயன், சுபவீ., ஆளூர் ஷாநவாஸ்...
தலித் வெறுப்பு அரசியல் பாமக கக்குகிறது என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. அதில் சுபவீ ஷாநவாஸ் இருவரும் ஒத்து போகிறார்கள். ஓகே.
அதேசமயத்தில் இப்படிப்பட்ட வெறுப்பு அரசியல் மேற்கு மண்டலத்தில் கொங்கு, தெற்கு மண்டலத்தில் தேவர் என பட்டியல் நீளுவதை சுட்டிடாமல் போனது குறையே!
மேலும் திமுக அதிமுக விடம் அந்தளவுக்கு இல்லையென்றாலும், இருக்கிறது என்ற ஷாநவாஸ் வாதத்தை, முழு பூசணியை இலை சோற்றில் மறைக்க முயற்சித்ததோடு, தேமுதிக விடம் அது இல்லையா? என்று சுபவீ கேட்டது பரிதாப அரசியல்.
மேலும் அப்படிப்பட்ட வெறுப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் கம்யூனிஸ்ட்கள் என்பது பதிவாகாமல் போனது ஏன் என்ற கேள்வி நம்மை குடைகிறது!
----\\\
வாய்பே இல்லை
அனைத்து தரப்பு குரலும் சட்டமன்றத்தில் ஒலிக்க வாய்பே இல்லை. குறிப்பாக உழைப்பாளிகள், விளிம்புநிலை மக்கள் குரல் ஒலிக்கப் போவதில்லை!
இந்திய - அன்னிய - தமிழக முதலாளிகளின் குரல் மட்டுமே ஒலிக்கும் இனி தமிழக சட்டமன்றத்தில்! ஏனென்றால் திமுக அதிமுக பாமக பாஜக தேர்தல் பரப்புரை வடிவங்கள் முதல் இவர்களின் செய்பாடுகளை அனைத்தையும் தீர்மாணித்தவர்கள்... தீர்மாணிப்பவர்கள் இம் முதலாளிகளே!
-----\\\\
'திமுகவை அழிக்க நினைத்தவர்கள்
அழிந்து விட்டனர்'. -கருணாநிதி.
அதிமுக-- திமுக வை வளர்க்க வந்ததா? அல்லது திமுகவும், அதிமுகவும் ஒன்று என்கிறாரா? தேமுதிக தமாகா மக்கள் நலக் கூட்டணி திமுகவை மட்டும் எதிர்க்க வில்லை; அதிமுக வையும் எதிர்த்தது. அதை எதிர்க்கொண்டு ஆட்சிக்கு வந்த அதிமுககூட இவ்வாறு கருத்து கூற வில்லை.
ஜனநாயகத்தில் தேர்தல் போட்டியும், வெற்றியும் தோல்வியும் இயற்கை!
என்னமோ ஆளும் கட்சி மேலான கட்சி தான்தான் (திமுக) என்ற மமதையில் கருணாநிதி தற்போதும் வக்ரத்தைக் கக்குகிறார். வக்கிரமே உன் பெயர்தான் கருணாநிதியா?
அதுசரி, திமுகவை எதிர்க்கட்சிகள் ஏன் அழிக்கப் போகிறார்கள்... அந்த வேலையை அவரது குடும்ப உறுப்பினர்களுமே செய்து கொள்வார்கள்; அதை போக போக தமிழகம் பார்க்கத்தான் போகிறது.
இந்த வயதிலும் முதல்வருக்கும், எதிர்க்கட்சி தலைவருக்கும் ஆசைபடாதவரா இவர்? (தேர்தலுக்கு முன் முதல்வர், தேர்தலுக்கு பின் எதிர்கட்சி எதிர்கட்சி தலைவர் குறித்த இவரின் அறிக்கை பேராசையின் உச்சம்)
இவரின் இந்த (வக்ர)கருத்தில் இருந்தே அதிமுக, திமுக இரண்டும் ஒன்றென்று அறியாதவர்கள் இனியாவது அறிவார்களா?உணருவார்களா?
----\\\\
"மோடிஆட்சியின்சாதனைகளே... சர்சைகள்தான்!"
அயல் நாட்டு பயணம் தொட்டு அய்ந்து பிள்ளை பெற்று ஆர்எஸ்எஸ்க்கு இரண்டு பேரை தாரை வார்ப்பது வரை...
மாட்டுக்கறி துவங்கி பாக்கிஸ்தானுக்கு போய்விடுக என்பது வரை...
இடதுசாரி தேசபக்த அறிஞர்கள் கல்புரிக்கி, கோவிந்த் பன்சாரி, தலோல்கர் துவங்கி, மாட்டுகறி வைத்திருந்தான் என உபி யில் தாத்திரி முகமது அக்லாக் கொலைவெறியை அரங்கேற்றியது வரை...
உயர்கல்வி தலித் மாணவன் ரோகித் படுகொலை முதல் கன்னையா கொலைமுயற்சி வரை...
கல்வி அமைச்சரின் போலி சான்று முதல் சமஸ்கிரதம் திணிப்பு வரை...
ஜல்லிகட்டு முதல் இலங்கை ஈழ தமிழர்க்கு பட்டைநாமம் வரை...
முழுக்க முழுக்க ஏமாற்றங்களும், நாடகங்களும் கொலைவெறிகளும், தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் மற்றும் இடதுசாரி முற்போக்கு தேசபக்தர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களும் அரங்கேற்றிய சர்சைகளே கோலோச்சிய சாதனைகள் கொண்டதே மோடியின் ஈராண்டு ஆட்சி!
இன்று 26.5.16 PTTV நேர்படபேசுக்கு!
----\\\\
சென்றிருக்கிறது...
மக்கள் நலக் கூட்டணி மக்களிடம் செல்லாமல் இல்லை. சென்றிருக்கிறது. உதாரணமாக நான் பணியாற்றிய தொகுதியில் உள்ள 309 வாக்குச்சாவடிகளில் 307 வாக்குச்சாவடியில் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்கு விழுந்திருக்கிறது.
ஆனால் இது ஜெயிக்கும். இந்த அணி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையை உருக்காமல் போன குறைதான் முக்கியம். அது ஒரு தொகுதியில் மட்டும் உருவாக்கி விடுவதில்லை. இது ஒட்டு மொத்த தமிழகம் அளவில் உருவாக்க வேண்டிய ஆகப்பெரும் பணியை இனி இந்த மநகூ அணி உருவாக்கினால், மாற்று வெற்றி பெறும். அதற்கான செயல்த்திட்டமே தற்போதைய தேவை. இதில் இந்த அணி பெற்றால், அது தேர்தலில் வெற்றி பெறும் என்பது திண்ணம்!
----\\\\
மக்களுக்கு பயன் தரும்!
*வழக்கறிஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துதோ இல்லையோ மக்களுக்கு பயன் தரும்!
*போராட்டம் என்கிற பெயரில் நடக்கும் ரவுடிசம் ஒழியும்!
*போலீஸ்சும் பொதுமக்களுக்கும் நிம்மதி!
*சட்டத்திருத்தம் நரிக்கு நாட்டமை கொடுத்த மாதிரி அமைந்துவிடக் கூடாது!
*அடிப்படை உரிமைகள் பாதிக்காமல் இருத்தல் முக்கியம்!
27.5.16 PTTV நேர்படபேசுக்கு!
----\\\\
"அம்மா பெரிச்சா? ஆட்டுக்குட்டி பெருச்சா?"
முதல் 5 கையெழுத்தில் ஒரு கையெழுத்து புட்டுக்கிச்சி..!
ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்றதும் போட்ட ஒரு கையெழுத்து ரூ5780 கோடி விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி. அது தற்போது அந்தரத்தில் தொங்குகிறது.
கூட்டுறவு வங்கிகள் ரூ2000 வரை தான் தள்ளுபடி செய்ய முடியும்; அதுவும் கஷ்டம்தான்; இருந்தாலும் 'அம்மா'வுக்காக முயற்சி செய்கிறோம்; மீதி ரூ3780 கோடி கோவிந்தா... கோவிந்தா...! அம்மாவோ இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில்!
அதுசரி, அம்மா பெரிச்சா? ஆட்டுக்குட்டி(சொசைட்டி) பெருச்சா? இன்னும் 4 கையெழுத்து 'கெதி' என்னாகுமோ! தெரிஞ்சவங்க சொல்லுங்கன்னே... சொல்லுங்க..!
----\\\\
*தேர்தலை ரத்து செய்தது மிகச்சரி!
*தேர்தலை ரத்து செய்தது மிகச்சரி! மறுத்தேர்தலே தீர்வு. தேர்தல் கமிசன் தன்னாட்சி நிறுவனம் என்பதை நிரூபித்துவிட்டது.
*நீதிமன்றம், ஆளுனர், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என ஆளாளுக்கு மிரட்டுவதற்கு சரியான பதிலடி தந்துள்ளது தேர்தல் கமிசன். சபாஷ்!
(எப்பவும் PTTV பேஸ்புக் கில் எனது கருத்தைத் தெரிவித்துவிட்டு, அது இரவு 9 மணி நேர்படபேசு வில் பதிவேற்றம் ஆகி இருக்கிறதா? என்று பார்த்துவிட்டுத்தான், என் fb மற்றும் வேறுசில வலைதளத்தில் post செய்வேன். இன்று கரண்ட் கட். அதனால் நிகழ்ச்சி பார்ப்பதும் கட்.)
இன்று 28.5.16 நேர்பட பேசுக்கு..! (இதில் ஒரு பகுதி பதிவாகியதாக தோழர்கள் பதிவில் பார்தேன்)
-----\\\\
முத்தமிழ் வித்தகர் எது பேசினாலும்...
"முத்தமிழ் வித்தகர்
எது பேசினாலும்... ஏதாவது பொடி, கிடி இருக்கும்!"
ஆயிரத்து தொல்லாயிரத்து எழுபத்தொன்றில் திமுக 184 சீட் பெற்றதும் சாதனையாம்; இப்ப 89 சீட்டு பெற்றதும் சாதனையாம்! 89 பெருசா? 184 பெருசா?
இவர் முதல் முதலாக எம்எல்ஏ ஆகும்போது எவ்வளவு செலவு செய்தாரு; இப்ப எவ்வளவு செய்தாரு; இதுல எது சாதனையின்னு கொஞ்சம் யாரது கேட்டு சொல்லுங்க சாமி!
இம்ம்... அடுத்த தேர்தலில் தோற்று போனக்கூட, 199999... தோற்றதும் சாதனை; இப்ப தோற்றதும் சாதனை ன்னு சொல்லுவாரு..! ஏனா... இவர் முத்தமிழ் வித்தகர்!
இவர் எது பேசினாலும் ஏதாவது பொடி, கிடி, தடி, வெடி, அடி.... இருக்கும். ஆமாம் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் 12 தான் வித்தியாசமாம்! இது வித்தகரின் அறிய கண்ணுறுத்தும் கண்டு பிடிப்பு! என்னாகுமோ தமிழகம் பார்ப்போம்! மக்கள் அதிமுக மலருமா?
----\\\\
"நல்ல உலறல்!
ஊருக்கும் உபதேசம்!"
தமிழருவி மணியனின் இன்று 29.5.16 PTTV அக்னி பரிட்சையில், அவர் கூறுகிறார்-- அவர் உடைத்தால் மண் குடமாம்... இடதுசாரிகள் உடைத்தால்... அது பொன்குடமாம்!
அவர் காங்கிரஸ்சை வீழ்த்த மதவாத பாஜக மோடியை ஆதரித்தால், அது தேசத்திற்கும், தமிழனுக்கும் நலமாம்; அப்பொழுது தேமுதிக விஜய்காந்த் குடும்ப பிடியில் இருப்பதாக தெரியவில்லையாம்! ஆனால் அதையே கம்யூனிஸ்ட்கள் செய்தால், ஆம்... அதிமுக திமுக வை வீழ்த்த, தேமுதிக வுடன் கைகோர்த்தால்... அது சந்தர்பவாதமாம்! என்னே கண்டுபிடிப்பு!
அப்புறம்- ஏன் மக்கள் நலக் கூட்டணியில் (அவரது வாதப்படி) ஆதரவு பெருகிய சூழலில் அதில் இருந்து ஆளுக்கும் முன் ஓட்டம் பிடித்தார்? (என்று நெறியாளர் கார்த்திகைச் செல்வன் கேள்வியை ஏன் முன் வைக்க வில்லை?)
அதுசரி- ஸ்ரீரங்கத்திலும், ஆர்கே நகரிலும் இடதுசாரிகளை மக்கள் ஏன் தேர்வு செய்யவில்லை? மணியன் அவர்கள் அதை வசதியாக மறந்து விட்டார் போலும். அந்த 2 தொகுதியிலும் இடதுசாரிகளை தேர்வு செய்திருந்தால் எதற்கு இவர் கூறும் நபர்களை தேடி போகிறார்கள்?
ஆம், காமாலைக் கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சள்போல், தேர்தல் போர்முனையை விட்டு புறமுதுகு காட்டி ஓடி ஒளியும் இவரிடம் வேறெதை எதிர்ப்பார்க்க முடியும்!? நல்ல உலறல்! ஊருக்கும் உபதேசம்!
----\\\\
நினைவுநாள் நிகழ்ச்சி..!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக்குழு உறுப்பினரும், சிறந்த எழுத்தாளரும், சிறந்த மொழிபெயர்பாளருமான மறைந்த அசோகன் முத்துசாமியின் 4 ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சி..!
இன்று 29.5.16 மாலை சேலம் சிறைத் தியாகிகள் நினைவகத்தில், தமுஎகச மாவட்டத் தலைவர் இலாவி தலைமையில் நடந்தது. எழுத்தாளர் தாரைப்பிதா, நிறைமதி, மதுரபாரதி, சேக்... எழுத்தாளர் சகஸ் 'ஊடகங்களின் அரசியல்' உரை... யோடு நினைவேந்தல்..!
----\\\
சபாஷ்!
இன்று 30.5.16 PTTV புதுப்புது அர்த்தங்களில் எழுத்தாளர் முத்துகிருஷ்ணன்(?) இடதுசாரிக்கும், தலித் அரசியல் விடுதலைக்கும், மதவாத பாஜக அட்டகாசங்களையும் மடைதிறந்த வெள்ளம் போல்... சரவெடியாக... நம்பிக்கை துளிர்! சபாஷ்! பத்திரிக்கையாளர் வெங்கடேஷ் கூட, மறுக்க முடியாத அளவுக்கு ஆணி அடித்தார் போல் முத்து முத்தாக ... முத்துகிருஷ்ணன். நெறியாளர் கார்த்திகேயனும் நன்றாகவே நூலெடுத்து கொடுத்தார்! நன்றி!
Ganesh Samykannu: பின்னாளில் இவரை வைத்தே நமக்கு எதிராகப் பேச வைப்பார்கள்... கூட்டிக் கழிச்சுப் பாத்தா, நமக்கு பூஜ்யம்...
94865 96641: அதற்காக ...? எல்லாவற்றையும் அவநம்பிக்கையாக பார்த்தால் எப்படி? இன்றைக்கு நமக்கும், நம் அணிக்கும் நம்பிக்கை கீற்று..!
Ganesh Samykannu: அவநம்பிக்கையல்ல... ஊடகத்தின் உத்தியை சுட்டிக்காட்டினேன்...
94865 96641: அதற்காக ...? எல்லாவற்றையும் அவநம்பிக்கையாக பார்த்தால் எப்படி? இன்றைக்கு நமக்கும், நம் அணிக்கும் தேவை நம்பிக்கை கீற்று..!
Ganesh Samykannu: புதுமையான உத்திகளோடு மக்களிடம் செல்வோம்...
94865 96641: இந்த ஓட்டை படகை வைத்துத்தான் ஆற்றைக் கடக்க வேண்டும்!
Ganesh Samykannu: நம்மிடம் உள்ள மனிதவளம் வேறு யாரிடம் உள்ளது..??
Ganesh Samykannu: படகில் ஓட்டை இல்லை... லாவகமாக ஓட்ட வேண்டும்...
94865 96641: புதுமையான உத்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இந்த ஊடங்களின் உதவி தேவை இல்லையா? நமது நொண்டி ஊடகங்களே போதுமா? நன்றி!
Ganesh Samykannu: தேவையில்லை என்று சொல்லவில்லையே... இது மட்டும் போதாது. மக்களிடம் செல்வதற்கான புதிய உத்திகளே காலத்தின் தேவை... 🙏
SAR: மிகச் சிறப்பாக வலிமையான தளத்தில் முத்துக்கிருஷ்ணன் பதிவு செய்தார்.இடதுசாரிகள் மட்டுமே மக்கள் பிரச்சனைகளை பேசுவதை அழுத்தமாகக் கூறினார்
Ganesh Samykannu: 👏👏
----\\\\
ராகுல் சொல்வது முற்றிலும் மெய்!
பன்னாட்டு இந்நாட்டு (கார்ப்பரேட்) முதலாளிகளின் ஊடகங்களுக்கு அள்ளிக்கொடுத்த ஈராண்டு சா(வே)தனை விளம்பரத் தொகையை, பட்டினியில் பரிதவிக்கும் விவசாயிக்கு தலா ஒரு லட்சம் வீதம் அய்யா மோடி கிள்ளி கொடுத்திருந்தால் (உதவி செய்திருந்தால் கூட) ஆயிரம் விவசாயிகளை, அவர்தம் குடும்பங்களை தற்கொலையில் இருந்து பாதுகாத்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் விவசாயிகளை காப்பது மெய் எனலாம்.
ரூ9000 கோடியோடு அயல் நாட்டில் தலைமறைவான மல்லைய்யாவை பிடிக்காததில் இருந்தே... மோடி அவர்களின் செயல்பாடு இந்நாட்டு, பன்னாட்டு முதலாளிகள் நலனுக்கு உழைப்பது என்பதே மெய்!
இதுமாதிரி ஆயிரம் மல்லய்யாகக்களின் அற்புதமான சேவகனே அய்யா மோடி! ஆம், ஆர்எஸ்எஸ் சேவகன் என்பதும் உண்மையே!
ஆக விவசாயி நலன் காக்கும் மோடி அரசு என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பே!
----\\\\
யாருக்கு என்ன லாபம்?
காங்கிரஸ் திமுக கூட்டணியை உடைப்பதால் யாருக்கு என்ன லாபம்? அதிமுகவுக்கு சதி செய்ய அவசியம் என்ன? புரளியை கிளப்புவதே கருணாநிதியின் வேலை போலும்!
திமுக காங்கிரஸ் உடைக்க சதி செய்வது திமுகவுக்குள் இருப்பவர்களா? அல்லது அதிமுகவா? என்பதையும் சேர்த்தே கருணாநிதி சொல்லி இருக்கலாமே!
----\\\
"தூக்கம் போச்சு..!"
திமுக காங்கிரஸ் கூட்டணியை உளவுதுறை உடைக்கிறதென கருணாநிதியின் அறிக்கையை ஆராய புறப்பட்ட இன்றைய 31.5.16 PTTV நேர்படபேசு வில்...
காங்கிரஸ் பீட்டர் விவாதப்போக்கில், அதிமுக வுக்கு, எதிரணி உடைபட வேண்டிய தேவை இருக்கு என்றார்.
அப்படி என்றால் கருணாநிதி சொல்வது சரியா? பீட்டர் சொல்வது சரியா? அதிமுகவின் தேவையை உளவு துறை செய்ய வேண்டியதன் அவசியம் என்பதற்கு அழுத்தமான ஆதாரம் இல்லையே!
பாஜகவின் மோடி அரசின் உளவுதுறையை பயன் படுத்தும் அளவுக்கு அதிமுக பலமிக்கது என பீட்டரின் வாதமா? பாவம் பீட்டரும், கருணாநிதியும்!
உங்கள் கூட்டணியை ஏழேழு ஜென்மத்திற்கும் உடையாமல் பார்த்துக் கொள்ளும் வல்லமை உங்களிடம் இல்லை என்ற ஒப்புதல் வாக்குமூலமே இது அல்லவா?
அதுசரி பாம்பில் கால் பாம்பு அறியும் என்பதுபோல், மக்கள் தேமுதிக வை உருவாக்கிய கருணாநிதிக்கு, வலுவான எதிர்கட்சியாக வந்தும்கூட தூக்கம் போச்சு என்றே தெரிகிறது! பாவம் திமுக காங்கிரஸ் கூட்டணி!
----\\\\
*வரி மேல் வரி...
*வரி மேல் வரி முதலாளிகள் வளர்ச்சிக்கு உதவும்; ஏழை எளியோர் இடுப்பை உடைக்கும்!
*டீசல், பெட்ரோல் விலை உயரும்போது தான் நள்ளிரவில் சுதந்திரம் பெற்றதே தெரிகிறது! ஆம், அந்த சுதந்திரம் யாருக்கு என்பதும் சேர்த்தேதான் தெரிகிறது!
*மக்கள் மீதான வரி மேல் வரி, விலை உயர்வு- மோடி அரசை நிறுவிய கார்ப்பரேட் முதலாளிகள் உயர்வுக்கு!
*மோடி அரசுக்கும், அவர் கட்சிக்கும் கோடிசுகம்!
----\\\
"புரட்சிகர பயணம் தொடரட்டும்..!"
ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன்பு விருதுநகரில் இருந்து புறப்பட்ட...
ஆம்- பழிவாங்கும் நடவடிக்கையாக சேலம் மாவட்டத்திற்கு பயணமான தோழர் எஸ்.செல்லசாமியின் பணி 31.5.16இல் நிறைவு பெற்றது.
அரசு ஊழியர்களை அணித்திரட்டுவதில், அயராது உழைத்தவரின் பயணம் சேலம் மாவட்டத்தில், சாதாரண ஊழியனாக துவங்கி, மாவட்டச் செயலாளர் அளவுக்கு அவரை உயர்த்தியதோடு, அரசு ஊழியர் வாழ்க்கைத் தரம் உயர்ந்திட அவரின் பணி அளப்பரியது.
ஆம், தானுண்டு தன் பணி உண்டு என்றில்லாமல், சமத்துவ சமுதாயத்திற்கும், விளிம்புநிலை மக்கள் விடுதலைக்கும் பாடுபட்டவரை வாழ்த்தி... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சேலம் மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, பி.ராமமூர்த்தி, எம்.குணசேகரன் உள்ளிட்டோர்... தங்களின் புரட்சிகர பயணம் தொடரட்டும்..!
----\\\\
*நேர்மையான தேர்தல் நடத்த...
*நேர்மையான தேர்தல் நடத்த, தேர்தல் ஆணைத்திற்கு போதுமான அதிகாரம் வேண்டும் என்பது சரி.
*தகுதி நீக்கம் அதிகாரம் உயர்நீதி மன்றம் சொல்வதுபோல் தேர்தல் ஆணையத்திற்கு தேவையே!
*மத்திய அரசு இதற்குரிய சட்டத்திருத்தம் அல்லது தேர்தல் சீர்திருத்தம் கொடுக்க வேண்டும்
*விகிதாசார தேர்தல் முறை அவசியமே!
----\\\\
"யாருக்கு இலவசம்? ஏனிந்த பரவசம்?"
குனிய குனிய குட்டுவனும் முட்டாள்! குட்டக் குட்ட குனிபவனும் முட்டாள்!
நூறு யூனிட் மின்சாரம் யாருக்கு பயன்?
ஜீரோ வாட்ஸ் பல்ப் லைட் வைத்திருக்கும் வீட்டுக்கு பயன்; அல்லது அம்மாவின் கிரைண்டர், மிக்ஸி, ஃபேன் இருந்தும் ஓடாமல் இடுப்பு ஒடிந்து கிடக்கும் வீடுகளுக்கு பயன்!
2 டியூப் லைட் மற்றும் "அம்மா" கொடுத்தவைகள் (கிரைண்டர், மிக்ஸி, ஃபேன்) ஓடினால் போதும் 200 யூனிட் கண்ணை மூடிக் கொண்டு தாண்டும்! அப்படியால்...
யார் இங்கே முட்டாள்..?
பழைய கணக்கு:
1-100 யூனிட் ரூ1 வீதம் ரூ100.
101-200 யூனிட் ரூ2 வீதம் ரூ200.
மொத்தம் ரூ300.
தற்போது கணக்கு:
1-100 சும்மா...!?
101-200 ரூ3.25 வீதம் ரூ325.
இப்படியே இன்னு ஏறிக்கிட்டு போகுது!
சாதாரணமாக எந்த வீட்டிலும் 200-300 யூனிட் குறையாது!
எங்கே இலவசம்?
யாருக்கு இலவசம்?
எதற்கு இந்த பரவசம்?
யார் முட்டாள்?
"மக்களா?"
மக்களால் ஆட்சியில் அமர்ந்த "அம்மாவா?"
----\\\\
'பேச்சு'க்கு 'அச்சு'...
*இருவரின் இந்த 'பேச்சு'க்கு 'அச்சு' தமிழக வாக்காளர்களே!
*ஜனநாயகத்தில் மக்களே எஜமான்!
*அதிமுக அடக்கி வாசிப்பதற்கு, திமுக பலமே!
ஆரோக்கியமாக நடப்பதும், நடக்காததும் 'அம்மா' கையில்..! சம்பரதாயப் பேச்சா? வெற்று பேச்சா? என்பது போக போக தெரியும்.
*முதல்வர், எதிர்கட்சி தலைவர் இருவரின் பேச்சு காதில் 'தேனாக' பாய்கிறது! பார்க்கலாம்!
இன்று 3.6.16 PTTV நேர்படபேசு க்கு!
----\\\\
அரசியலன்றி வேறென்ன?
அரசியலன்றி வேறென்ன? பாஜக வுக்கும் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இருக்கும் உறவை நாடே அறியும். தமிழக மக்கள் நன்கு அறிவர்.
ஒருவேளை கருணாநிதிக்கு வாழ்த்து சொல்லியிருந்தால்... ஊடக கருத்து க(தி)ணிப்பை வைத்து... என்ன செய்திருப்பார்?
தமிழகத்தில் பிரதான கட்சிகள் தனியாக நிற்கும்போது, அதிமுக ஏற்கனவே 42% மக்களவை தேர்தலில் வாக்கு வாங்கியதை வைத்துக்கூட வாழ்த்து சொல்லி இருக்கலாம்!
பாஜகவுக்கோ, மோடிக்கோ வாக்காலத்து அல்ல இது! பாஜக தீண்ட தகாத கட்சியல்ல; ரைட் மேன்; ராங் பார்ட்டி என வாஜ்பாயை வாயார புகழ்ந்து அன்று மத்திய ஆட்சியில் மாறி மாறி பாஜகவுடனும், காங்கிரஸ்சுடனும் கைகோர்த்த கொள்கை குன்றுதான் கருணாநிதியும், திமுகவும். நாளைக்கே திமுக பாஜகவுக்கு ஆதரவு கரம் நீட்டும்!
எப்படியாது, எதையாவது சொல்லி, பாஜக வுடன் உறவுக்கான ஓலமே இது!
---\\\
கலாச்சாரத்தின் அடிப்படை!
தரக்குறைவாக பேசுவது திராவிட கலாச்சாரத்தின் அடிப்படை!
எதற்கு பேச வேண்டும்; பிறகு மன்னிப்பு கேட்க வேண்டும்? வெட்டிபுட்டு கட்டிப்புடிச்சி அழுவது வீண்!
தனிநபர் விமர்சனம் தமிழகத்தில் இன்று நேற்றல்ல; 50ஆண்டுகளாகவே!
தரம் இருந்தால்தானே தாழ்ந்து போவதற்கு!?
போதையில் இருப்பவர் யேசினால்- ஒதுங்கி போவதும், வயதானவரை யேசினால்- பச்சாதாபம் கொள்வதும் சமூகத்தின் பலவீனம்!
கம்யூனிஸ்ட்கள் எங்காவது யாரையாவது இவ்வாறு பேசி இருக்கிறார்களா? நமக்கு தேவை கம்யூனிச கலாசாரமே! அதாவது சமத்துவக் கலாசாரம்!
---\\\
இதுநாள் வரை-
இதுநாள் வரை- இடதுசாரி கட்சிகளை தவிர மற்ற வளரும் கட்சிகள் சீட்டுக்காகவே பெரிய கட்சிகளுடன் கூட்டு சேருகின்றன!
இந்த தேர்தலில் தான்- முதல் முறையாக வளரும் ஜனநாயக கட்சிகளும் (விசிக, மதிமுக), இடதுசாரி கட்சிகளும் (சிபிஎம், சிபிஐ) கொள்கை அடிப்படை மக்கள் நலக் கூட்டணி உருவாகி உள்ளது!
ஆம்! சிறிய கட்சிகளை திமுக அதிமுக கருவேப்பிலையாகத்தான் பயன்படுத்துகின்றன!
இன்று 7.4.16 news 7 ?கேள்வி நேரம்!
---\\\
"நன்றி..! ராமுக்கும் ஞாநிக்கும்..!"
#
* பாவம் மனுஷ்..! திருமா தெளிவாக சொன்னார்- 'கூட்டணி' என்றால், திமுகவை ஆதரிக்க தயக்கமில்லை என ஆயிரம் தடவை சொல்லியும், திமுக ஏற்காததால் தான் "மக்கள் நலக் கூட்டணி" உருவாகி, அடிப்படை வர்க்கங்களான தலித்துகளும், மார்க்சிஸ்ட்களும் கைகோர்க்கிற நிலை தமிழகத்தில் உருவானது! அதற்காக திமுகவுக்கு நன்றி கூறுவோம்!
* 'இடதுசாரிகள் அதிமுகவையோ, திமுகவையோ ஆதரித்தால் கொள்கை சார்ந்தது; அதை எதிர்த்தால் ஆதாயம் சார்ந்ததா?' என ஜென்ராம், ஞாநி கேள்விக்கு மனுஷ் பதில் தராமல் போய் விட்டார்! ஆம், இடதுசாரிகள் ஆதாய அரசியல் செய்பவர்களே! 'உழைப்பாளி மக்களுக்கு என்ன ஆதாயம்' என்று பார்க்கும் சுயநலம் அன்றும் இன்றும் என்றும் இருக்கும்! திமுக அதிமுக வைபோல் உழைப்பாளிகளை சுரண்டும் கும்பலுக்கும் (அதோடு தனக்கும், தன்னை சார்ந்தோருக்கும்) என்ன ஆதாயம் அரசியல் ஒருபோதும் இருக்காது!
வேறு வார்த்தையில் சொன்னால், 'சுட்டு' போட்டாலும் அரசியல் காய் களை நகர்த்தாது; அதற்காக சாதிய மதவாத அமைப்புகளோடும் சமரசம்- திமுக அதிமுக வைபோல் செய்யாது!
* இதற்கு அழகாக ஜென்ராமும், ஞானியும் சொன்னார்கள்- 'தமிழகத்தில் காங்கிரஸ், பாஜக ஆதரவு நிலையை பொறுத்தே இடதுசாரிகள் நிலை இருந்தது என்று ஜென்ராமும், மேற்கு வங்கத்தில் பாஜக வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவே தற்போது இடதுசாரிகளின் நிலை இருக்கிறது என்று ஞாநி யும் ஆணி அடித்தார் போல் மனுஷ் க்கு பதிலடி கொடுத்தது அருமை!
* அதைவிட ஒரு செக் 'டாப்'- ஆதாயம் என்பது எது? பணமா? பெற்றது யார்? சிபிஐயா? சிபிஎம்மா? யார்?யார்? யார்? என கேள்வி கனைகள் உயரவே 'என்னை கார்னர் பன்னாதீங்க' என திணறியது பரிதாபம்! ஆம், மனுஷ் சின் வேடம் களைந்தது! அம்பலம் ஆனது!மனுஷ்சின் நாடகமும்தான்!
* ஆயிரம் நன்றிகள் ராமுக்கும் ஞாநிக்கும்!
----\\\\
நடத்தினால் நன்று!
நியாயமான தேர்தல் தமிழகத்தில் நடந்தால், நடத்தினால் நன்று!
பணபட்டுவாடாவைத் தடுப்பது தேர்தல் கமிசனுக்கு சவால் மிக்கது!
பணபட்டுவாடாவைத் துணிவுடன் தடுத்தால், 'மக்கள் நல அரசு' அமைவது உறுதியிலும் உறுதி!
#this time 4 mnk dmdk
----\\\
"எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக..!"
#
முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபால்சாமி... "தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது உள்ளிட்டு, தேர்தல் விதிமுறைகளை காலில் போட்டு மிதிக்கப்படுவதற்கு, திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே காரணம்; இங்குபோல் நாட்டில் வேறெங்கும் இல்லை; திருமங்கலம் பார்முலா என கூறப்படுவதே இதற்கு காரணம்!" என இன்று 8.4.16 புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தில் நெத்தியடி கொடுத்தார்!
திமுக கண்ணதாசனும், அதிமுக சமரசமும் 'திருடனுக்கு தேள் கொட்டியதைப்போல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்! 'உங்க சண்டையில் எங்கிட்ட வாங்குன ஆயிரம் ரூபாய மறந்திடாதிங்கப்பா' என்பதுபோல் பாமக பாலு யோக்கிய சிகாமணி தனக்குத்தானே புகழாரம் சூட்டிக் கொண்டார்! பாமக பென்னாகரம் இடைத்தேர்தல் பவுன் கொடுத்ததும், கொடுக்க முடியாமல் தவித்ததும் பென்னாகரம் வாக்காளர்கள் அறிவார்கள்!
மார்க்சிஸ்ட் பாக்யம் 'திருடனாய் பார்த்து திருந்தால் விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்பதுபோல் துவங்கினாலும், தேர்தல் கமிஷனர் லக்கானி கருத்துக்குப் பின், '30% இளம் வாக்காளர்கள் பணபட்டுவாடாவை தடுக்க வேண்டுமென' நறுக்கு தரித்தாற்போல் கூறினார். நெறியாளர் தியாகச்செம்மல் '30% இளைஞர்களை கட்சிகள் வாக்காளர்களாக பார்த்தாலும், தேர்தல் கமிஷனர் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கிறார்' என முடித்தது சிறப்பு!
#this time 4 mnk dmdk
----\\\\
"இதுதான் நாகரிகமா?"
"இதுதான் நாகரிகமா? தேர்தல் கமிஷனும், காவல்துறையும் இருக்கிறதா?"
ஜனநாயக ரீதியாக ஆர்ப்பாட்டம் கூட அனுமதி மறுத்து, வழக்கு போடும் போலீஸ், போராட்டத்திற்கு தேர்தல் கமிஷனில் (ஆர்ஓ விடம்) அனுமதி வாங்க வேண்டுமென உரும்புகிறது காவல்துறை!
தற்போது வைகோ, உருவபொம்மையை எரிப்பதும், செருப்பால் அடிப்பதும் போன்ற 'தேசபக்த' பணியை, 'மிக நாகரிகமான' முறையில் வெறிகொண்டு, திமுக தமிழகம் முழுவதும்... அரங்கேற்றி... செயலாற்றி... வருகிறதே என்ன செய்து கொண்டிருக்கிறது காவல் துறையும், தமிழக அரசும்?
எல்லாவற்றிக்கும் மேலாக 'வானளாவ அதிகாரம்' படைத்திருக்கும் தேர்தல் கமிஷன் கைக்கட்டி... வாய்பொத்தி... வேடிக்கை பார்க்கிறதே நியாயமா?
#this time 4 mnk dmdk
----\\\
"நெருடலே!"
#
காங்கிரஸ் அதிருப்தி ஜோதிமணி, தேமுதிக அதிருப்தி சந்திரக்குமார் போன்றோருக்கு ஊடகங்கள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? குறிப்பாக புதிய தலைமுறை டிவியில் இன்று 9.4.16 ஜோதிமணி குறித்து, புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில்... சந்திரக்குமாரிடம் அக்னிபரிட்சை நிகழ்ச்சியில்...
அலசல் நெருடலே!
#thistimeformnkdmdk
-----\\\\\
வெற்றிக்கனியைப் பறிப்போம்!
#
தேமுதிக மக்கள் நலக்கூட்டணியுடன் தமாகா இணைந்தது! தேமுதிக 104; மதிமுக 29; தமாகா 26; சிபிஎம் 25; சிபிஐ 25; விசிக 25 என அதிகாரப்பூர்வ பங்கீடு சற்று முன் அறிவிப்பு! வெற்றி கூட்டணி அமைந்தது! வெற்றிக் கனியை பறிக்க களபணியை ஆற்றுவோம் கண் துஞ்சாது!
#this time 4 mnk
-----\\\\
"கூட்டணி கனவு நனவானது!
இதுபோல்- கூட்டணி ஆட்சி கனவும் நனவாகும்!"
-திருமா
#this time 4 mnk
----\\\\
அம்மா தாயே...
"முதலில் மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும்; கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும்; பின்னர் பார்கள் மூடப்படும்!"
அம்மா தாயே... இதத்தான அன்னிக்கு கேட்டோம்! என்னா வெங்காயத்திற்கு சசிபெருமாள் உயிரை குடிச்சே! எங்க உயிரை வதச்சே! சொல்லு தாயி..! சொல்லு..!
இந்த வேடதாரியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியை ஆட்சியில் அமர்த்தினால் மட்டுமே தமிழகம் தலை நிமிர்ந்து, தல்லாட்டம் இல்லாமல் நடைபோடும்!
#this time 4 mnk
----\\\\
"ஓட்டு போட்டாச்சி..!"
தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி ஜெயிச்சாச்சி..!
#
ஆம்,
தமாகா...
தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது... வெற்றியை கட்டியம் கூறிய வரலாற்று நிகழ்வு..! அல்லவா?! அந்நாளில் ஓட்டு போட்டாச்சி; யாருக்கு போட்டேன் என்பதையும் பாத்தாச்சி..! தேமுதிக மக்கள் நலக் கூட்டணி ஜெயிச்சாச்சி..!
இதுமாதிரி...
தமிழகத்தில் 25 சட்டமன்ற தொகுதிகளில் ஓட்டுப் போடும் இயந்திரங்கள் வைக்கப் படுகிறது!
நேற்று 9.4.16 அன்று...
சேலம் வடக்கு தொகுதியில்...
ஓட்டு போடும் செய்முறை பயிற்சியில், சிபிஎம் சேலம் மாவட்டக்குழுச் செயலாளர் பி.தங்கவேலு மற்றும் தோழர்களும்... பொதுமக்களும்... சேலம் ராகிருஷ்ணாபார்க்..!
#this time 4 mnk
----\\\
"வரலாறு படைப்போம்!"
#
இன்று 11.4.16 இரண்டு முக்கிய நாளேடுகளில் தினமணி, இந்து தமிழ் வந்துள்ள மக்கள் கருத்து... தேமுதிக தமாக மக்கள் நலக் கூட்டணியின் வெற்றியை, அந்த அணிதான் ஆட்சியை கைப்பற்றப் போகிறது என்பதை பறைச்சாற்றுகிறது!
ஆம், மாமண்டூர் மட்டுமல்ல; ஒட்டு மொத்த தமிழகமும் ஏகோபித்த ஆதரவு தருகிறது என்பதற்கு இதோ...
அதாவது...
தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியில், தமாகா இணைந்ததற்கு தினமணி ஆதரவு 92%; இந்து தமிழ் 65%. இதைவிட வேறென்ன வேண்டும்..? அதிமுகவை வீழ்த்தவும், திமுக வை ஆட்சியில் அமராமல் தடுக்கவும்!
முன்னேறுவோம்!
வரலாறு படைப்போம்!
'தனிகட்சி ஆட்சி'யை தகர்போம்! 'கூட்டாட்சி'யை நிறுவுவோம்!
#this time 4 mnk
----\\\\
ஈர்ப்பது-தேர்தல் அறிக்கை...
வாக்காளர்களை ஈர்ப்பது-தேர்தல் அறிக்கை, பரப்புரை இவற்றோடு- கட்சியின் செல்வாக்கும்!
அதிமுக திமுக தேர்தல் அறிக்கைகள் மக்களை ஏமாற்றவே!
அதிமுக திமுக ஆட்சியில் இருந்தபோது, தற்போது சொல்வதை ஏன் செய்யவில்லை?
தேமுதிக தமாகா மக்கள் நலக் கூட்டணி தேர்தல் களத்தில் புதியவை; இந்த அணியை நம்பி வாக்களிக்கலாம்!
#this time 4 mnk
----\\\\
உண்மை..! உண்மை..!
"நான் சொன்னதையும் செய்தேன் சொல்லாததையும் செய்தேன்!". -ஜெயலலிதா.
உண்மை..! உண்மை..!
நீங்கள் உரிய நேரத்தில் ஏரிகளை திறக்காமல், தீடீரென திறந்து இரவோடு இரவாக சென்னை, செங்கல்பட்டு மக்களை வெள்ளத்தில் மூழ்கடித்து சாதனை புரிந்தது... நீங்கள் சொல்லாததுதான் ஒத்துக்கிறோம்!
மது வேண்டாம் என்று போராடிய, பாடிய வர்களை தேச துரோக வழக்கு போட்டு சிறையில் போட்டது.... மது ஒழிப்பு போராளி, காந்தியவாதி சசிபெருமாள் உயிரை எடுத்தது... ஏறக்குறைய ஒன்னரை லட்சம் தமிழச்சிகளின் தாலியை அறுத்துவிட்டு, தாலிக்கு தங்கம் கொடுத்தது... நீங்கள் சொல்லாததுதான் ஒத்துக்கிறோம்!
சாராய உற்பத்தியாளர்களை அவர்கள் திமுக காரர்களாக இருந்தாலும் காப்பேன் என விடாபிடியாக செயல்பட்டதும் நீங்கள் சொல்லாததுதான் ஒத்துக்கிறோம்!
லஞ்ச ஊழலுக்கு உடன்பட மறுத்தால் அரசு ஊழியர் முத்துகுமாரசாமி போல் 'தற்கொலை'க்கு அனைவரையும் தள்ளுவோம்... என்றதும் நீங்கள் சொல்லாததுதான் ஒத்துக்கிறோம்!
தற்போது செய்துவரும் பரப்புரை நிகழ்ச்சி உள்ளிட்டு கட்சியில் உள்ளவர்கள் அனைவரையும் உதிர்ந்த முடியைப்போல், அடிமைகளாக நடத்தும், உலக சர்வாதிகாரிகள் பட்டியலில் முதலிடத்தில் வந்துக்காட்டுவேன் என ஹிட்லர், முசோளனி களையே மிஞ்சி நிற்பது... நீங்கள் சொல்லாததுதான் ஒத்துக்கிறோம்!
#this time 4 mnk
----\\\\
'செல்வம்'
அவர்- கொடுத்தார்!
இவர்- குவித்தார்!
'செல்வம்'
#this time 4 mnk
----\\\\
என்ன பொருள்?
பீட்டர் அல்போன்ஸ் சந்திரக்குமார் வகையறா க்கு அன்றும் இன்றும் சுயநலமே! மீண்டும் காங்கிரஸ் இல் சேருவதற்கு என்ன பொருள்?
தேர்தல் நேரத்தில் கட்சிகள் பிரிவதும், சேர்வதும் சுயநலமே! கொள்கையல்ல என்பதை தற்போது நாடு கண்டு கொண்டுத்தான் இருக்கிறது!
கொள்கை நிலைபாட்டில் இணைந்திருப்பது மக்கள் நலக் கூட்டணி+தேமுதிக+ தமாகா அணி மட்டுமே!
அதிமுக திமுக கூட்டுக் கொள்கையை வீழ்த்திடும் கொள்கை கொண்ட வலுவான மெகா கூட்டணி!
அதிமுக திமுக ஆதிக்கம் தமிழகத்தில் வீழ்த்தப்பட்டாலே இங்கு ஜனநாயகம் தழைக்கும்!
அதிமுக திமுக இரண்டையும் வீழ்த்துவது கொள்கையா? இவற்றில் ஒன்றுக்கு மறுபடியும் மறுபடியும் உயிர் கொடுப்பது கொள்கையா?
இன்று 12.4.16 PTTV நேர்படபேசு!
---\\\
த்தூ...த்தூ..!
தேமுதிக ன்னு ஒன்னு திமுக கூட்டணியில் இல்லை என்றால் திமுக இந்த முறை ஆட்சியை பிடிக்க முடியாதென கருணாநிதியின் முடிவோ? மூடநம்பிக்கையோ? எதுக்கு இந்த ஈனப்பொழப்பு..?
த்தூ...த்தூ..!
#this time 4 mnk4:41
----\\\\
"தமிழகத்தைவிடுவிப்போம் கொள்ளையர்களிடமிருந்து!"
அ(னைத்து) தி(ருட்டு) முன்னேற்றக் கழகம் (அதிமுக)...
தி(ருட்டு) முன்னேற்றக் கழகம் அல்லது தி(ல்லுமுல்லு) முன்னேற்றக் கழகம் (திமுக) ...
அன்று- அந்த கொள்ளையர்களை எதிர்த்து போராடி விடுதலை பெற்றோம்!
இன்று- இந்த கொள்ளையர்களை எதிர்த்து போராடி தமிழகத்தை விடுவித்தாக வேண்டும்!
தேமுதி+மக்கள் நலக் கூட்டணி+தமாகா கூட்டணியின்
முதல்வர் வேட்பாளர் கேப்டன் விஜய்காந்த்..!
#this time 4 mnk
----\\\\
இருமுனை போட்டி!
அதிமுக # தேமுதிக+மக்கள் நலக் கூட்டணி+தமாக கூட்டணிக்கு இடையே இருமுனை போட்டி! இது தேர்தல் நெருங்க நெருங்க தெரியும்!
அதிமுக திமுக அகற்றப்பட வேண்டியவைகளே! அந்த இடத்தை தேமுதிக மநகூ தமாகா தான் பூர்த்தி செய்ய முடியும்!
உப்பைத் தின்ற ஜெயலலிதாவும், கருணாநிதியும் தான் தண்ணீர் குடிக்க (கடும் விமர்சனங்களை சந்திக்க) வேண்டும்! அவர்கள் தானே ஆட்சியில் இருந்தவர்கள்..? கட்சிகள்..?
-----\\\\
சாதி, மதம் தலைதூக்காது
சில சமயங்களில் சில தொகுதிகளில் கடந்த காலங்களில் சாதி, மதம் தனது செல்வாக்கைச் செலுத்தி உள்ளதை மறுக்க இயலாது! ஆனால் இந்த தேர்தலில் சாதி, மதம் தலைதூக்காது!
பெரும்பாலான மக்கள் எப்பொழுதுமே அரசியலாக பார்த்து தான் வாக்களிக்கின்றனர் பொதுத் தேர்தல்களில்! இளம் வாக்காளர்கள் மாற்றத்தையே விரும்புகிறார்கள்.
அதிமுக திமுக வுக்கு மாற்றாக தேமுதிக + மக்கள் நலக் கூட்டணி + தமாகா கூட்டணியையே நம்புகிறார்கள். தமிழகம் இந்த தேர்தலில் வரலாறு படைக்கும்!
இன்று 13.4.16 news 7 ?கேள்வி நேரம்!
-----\\\\