Tuesday, 21 June 2016

இந்துத்துவா

இந்துத்துவா..! 
எதிர்ப்போரை சுட்டுக் கொல்ல 15 ஆயிரம் பேர் கொண்ட
 'இந்து ராணுவ படை!?' 
"வாஜ்பேய் நல்லவர்; பாஜக கெட்டது! மோடி பாவம்; அவர் வளர்ச்சியின் நாயகன்; ஆர்எஸ்எஸ் மோசம்..." என இப்படி அளப்போருக்கு... 
இதோ... ஓர் பகீர் ஆதாரம்!

'சனாதன் சன்ஸ்தா' என்ற இந்துத்துவா அமைப்பைச் சார்ந்த வீரேந்திர தாவ்டே, அல்கோர் மற்றும் 30 பேர் கொண்ட கொலைவெறி கும்பல்தான் 2013இல் நரேந்திர தபோல்கர்; 2015இல் கோவிந்த் பன்சாரே, கல்புர்கி ஆகியோரை திட்டமிட்டு சுட்டு கொன்றுள்ளனர்.

இந்த அமைப்புக்கு 15,000 பேர் கொண்ட ராணுவப்படை உள்ளது என திடுக்கிடும் செய்தி வெளியாகி உள்ளது. 

இந்த 3 அறிவுமேதைகளும் இந்திய தேசத்தின் சமத்துவ-சமூகநீதி க்கு போராடிய சமூக விடுதலை போராளிகள். வேறு வகையில் சொன்னால், சமூக ஒடுக்குமுறை; இந்துத்துவா படிநிலையை எதிர்த்து, மக்களைக் களமிறக்கிய தேசபக்தர்கள்! 

இவர்களைத்தான் ஆர்எஸ்எஸ் ன் ஆயிரம் கைகளில், அல்லது ஆயிரம் முகங்களில் ஒன்றான சனாதன் சன்ஸ்தா... அகண்ட பாரதம் அமைக்க எதிர்ப்போரை போட்டுத் தள்ளுவது என்ற நரவேட்டை யை நடத்தி வருகிறது. அந்த வகையில்தான் மேற்காணும் 3 இடதுசாரி-முற்போக்கு ஆளுமைகளை நரவேட்டையாடி உள்ளனர்! 

ஏ..! 
இந்துத்வா நரவெறி கும்பல்களே... 
உங்களின் நரவெறி ஆட்டத்தைக் கருவறுக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை; நிச்சயம் உங்கள் கணக்கை இந்திய தேசம் தீர்க்கும்! ஆயிரமாயிரமாக தபோல்கர்கள்... பன்சாரேக்கள்... கல்புர்கிகள் வீறுகொண்டு வருவார்கள்... மாவீரன் பகத்சிங் வழித்தோன்றல்களாய்..!
---\\\
 "அட வேடதாரிகளே..!"

தலித் வீடுகளில் சாப்பிடுக என்ற பாஜக தலைவரின் உத்தரவை தமிழ்நாடு தலைவர் நேற்று சேலத்தில் அமலாகினார்! இனிமேல் வரிசையாக எச்.ராசா, இல.கணேசன் என்று அணிவகுப்பு தலித் வீடுகளை நோக்கி இருக்குமென எதிர்ப்பார்ப்போமாக!

இதிலிருந்து இவர்கள் ஒரு உண்மையை ஒத்துக் கொண்டதற்கு நன்றி அறிதலை உரித்தாக்குவோம்! அதாவது இதுவரை அவர்கள் தலித் வீடுகளில் கை நனைக்காமல் காரியமாற்றி வந்தனர் என்பதுதான்!  

ஆமாம்... மருத்துவர் தமிழிசை அவர்களே... விருந்து பலமா? பீப் பிரியாணி கிடைத்தா? அதுதான்... மாட்டுக்கறி உணவு பரிமாறப்பட்டதானுக் கேட்டேன்! அட வேடதாரிகளே..! பிள்ளையையும் கிள்ளி விடுவது; தொட்டிலையும் ஆட்டிவிடுவது என்பது இதுதானோ? பாஜகவே உன் பசப்புக்கு இந்த பாரினில் எல்லையே இல்லையா?
[08:36, 17/6/2016] SAP: அவன் ஒரு பாஜக
----\\\\
முதல்வரின் டெல்லி பயணம்
#ஈவிகேஎஸ் சொல்வது சரியே! முதல்வரின் டெல்லி பயணம் அவரின் சுயநலன் சார்ந்ததே! அவர் ஒருபோதும் தமிழக மக்கள் நலனுக்காக டெல்லி சென்றவர் கிடையாது; இந்த பயணமும் அப்படித்தான்!

#அவரின் சுபாவமே, அவரின் காலில் அனைவரையும் விழ வைப்பதுதான்! அவர் இன்னொருவரை தேடி செல்கிறார் என்றால்... 
அது... அது... அவரின் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்ப்புத் தீர்பை, தனக்கு சாதகமாக வரவழைப்பதெப்படி? என்பதை "ஆய்வு" செய்வதுதான்! 

#அவர்கள் (மோடி, ஜெட்லி, பிரசாத் என) இதற்குமுன் வந்தனர்; சென்றனர்! ஒரு மாறுதலாக தற்போது இவர் செல்கிறார்!அவ்வளவுதான்!
#எல்லாவற்றைக்கும் கடிதம்தான் எழுதுவார்! "இதற்கு" கடிதம் எழுத முடியுமா? 

#ஆனால் மக்கள் கண்களில் மண்ணைத் தூவ, பேரறிவாளன் உள்ளிட்டு 7 தமிழர் விடுதலை, மீனவர் பிரச்சனை, முல்லைபெரியாறு, காவிரி என பட்டியல் நீளும்! 

#அவ்வளவு ஏன் அன்னிய, இந்திய முதலாளிகளின் "உலக மாநாடு" மூலம் வரவேண்டிய மூலதனம் 4லட்சம் கோடியை கிடைத்திட உதவிடுங்கள் என்று சொன்னேன் என்றுகூட கூறுவார்! 

#மாட்டுக்கறி பிரச்சனை முதல் வீட்டுக்கு ரூ15லட்சம் தருவது வரை பேச சொல்லுங்கள் பார்க்கலாம்!  பாவம் தமிழக மக்கள்!
----\\\\
கேஸ்சை பூசி மெழுக!
#யாருக்கு தெரியும்? முதல்வர்தான் பகற வேண்டும்! 
#அந்த முதல் அல்லது முப்பதாவது கோரிக்கை என்ன? என்பதைத்தான் தமிழக மக்கள் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார்கள்! 
#தமிழ்நாட்டு கடைகோடி குடிமகன்கள் கூட பேசிக் கொள்கிறார்கள்-- 
அம்மா போனதே கேஸ்சை பூசி மெழுகத்தான் என்று!
#14.6.16 PTTV நேர்படபேசு க்கு!
----\\\\
விலையில்லா தக்காளி ஜுஸ்! 
நாளை முதல் தமிழத்தின் அனைத்து அம்மா உணவகத்திலும், அம்மா குடியகத்திலும் விலையில்லா தக்காளி ஜுஸ் வழங்கிடுவதென தற்சமயம் நடந்துவரும் அம்மா அமைச்சரவையில் முடிவெடுத்து வருவதாக நமது தலைமை செயலக செய்தியாழினி தெரிவிக்கிறார்!
----\\\\
பணமும், சாதியும்! 
உள்ளாட்சி தேர்தல் குறித்து கருணாநிதி கருத்து நியாயமானதே! ஏற்கப்பட வேண்டியதே! ஆனால் வெளிமாநில அதிகாரிகள் மட்டும் நியாயமாக நடப்பார்களா? அதற்கு என்ன உத்தரவாதம்? அதிலும் பணமும், சாதியும் புகுந்து விளையாடும்; அதை கட்டுப்படுத்த என்ன வழி? திமுக இவற்றில் விதிவிலக்காக இருக்குமா?
இன்று 15.6.16 PTTV நேர்பட பேசு க்கு
----\\\\
ஒரு கூத்து..!
இன்று..! 
16.6.16 PTTV காலை புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் ஒரு கூத்து... கூத்து நாயகன் சமூக ஆர்வலர் (எது வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்) சுமன் சி ராமன். 

இடதுசாரிகள் நல்லவர்கள்தானாம்!; ஆனால் இடதுசாரி சித்தாந்தம் சரியில்லையாம்; காலவதியாகி விட்டதாம்! (இது மாதிரி ஆயிரத்திற்கும் ஏன் லட்சத்திற்கும் மேலானவர்கள் சொல்லிவிட்டார்கள்) 

இது-- கூத்தல்ல;  சித்தாந்தம் இல்லாததாம் திமுகவும், அதிமுகவும்; அதனால்தான் ஒன்று ஆட்சிக்கு வந்ததாம்; இன்னொன்று பலமுள்ள  எதிர்கட்சி யானதாம்! 

சுவர் இல்லாமல் கூட சித்திரம் இருக்கலாம்;  ஆனால் சித்தாந்தம் இல்லாமல் ஒரு அமைப்பு இருக்க முடியுமா? அதையும் மீறி அவைகள் ஆட்சியை பிடிக்க முடியுமா? முடியுமாம் ராமன் சொல்கிறார்... 

ஆம், சிறந்த நிர்வாகம் (குட் கவர்னஸி) ஒரு சித்தாந்தமாம்..! தலையை பிச்சிக் கொண்டது நான் மட்டுமல்ல... நெறியாளர் ஜென்ராமும், கூட இருந்த இன்னொருவரும் தான்! நீங்களும் வாய்ப்பிருந்தால் பார்த்து உங்களது தலையையும் பிச்சிக் கொள்ளுங்கள்! 
என் தமிழகமே..!
----\\\\
மூடநம்பிக்கை! 
அதே அரசு; அதே ஆளுனர்; அதே உரை! ஆம், வழக்கமான உரையே! நம்பிக்கை தரும் என்பதெல்லாம் மூடநம்பிக்கை! ஆம்! அதே கள்ளு; அதே மொந்தை! 
இன்று 16.6.16 PTTV நேர்படபேசுக்கு!
----\\\
மாறாதய்யா ...
அலுவல் ஆய்வு குழுக் கூட்டத்தில் இருந்து திமுக வெளிநடப்பு -செய்தி. வெளிநடப்பு என்ற நாற்றுநடவு ஆரம்பம்! 
*மாறாதய்யா மாறாது; 
மனமும் குணமும் மாறாது!*
----\\\
யார் பொறுப்பு?
#விண்ணை முட்டும் விலைவாசிகளுக்கு 2 அரசுகளும், வர்த்தகர்களும், பதுக்கல்பேர்வழிகளும் பொறுப்பு!
#அதோடு இதை எதிர்த்து வலுவாக மக்களைத் திரட்டி போராடாத பெரிய பெரிய ஆளும், ஆண்ட கட்சிகளும் பொறுப்பு! 
#மக்களின் விழிப்புணர்வின்மையும் பொறுப்பு! 
#எல்லாம் விதி பயனென, ஆளும் கட்சிகளின் சதியை எதிர்த்து வீதியில் கிளர்ந்தெழலாத மக்களும் பொறுப்பு! 
#போராடும் இடதுசாரிகள் உள்ளிட்டு சிறிய சிறிய மாற்று கொள்கை கொண்ட கட்சிகளை ஆதரிக்காத அறிவுஜீவிகள் உள்ளிட்டு மத்திய தர வாழ்க்கையில் மிதந்து போகும் மனநிலையும் பொறுப்பு! 
இப்படி ஆயிரம் பொறுப்பாளிகள் இந்த பூவுலகில் உலா வருகிறார்கள்!
----\\\\
போகாத ஊருக்கு வழிதடமா? 
*இன்று ஒரு தகவல்... 
கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்... அதாவது, கல்யாண வீடுன்னா பொண்ணு மாப்பிள்ளையா இருக்கணும்; எழவு வீடுன்னா பொணமா இருக்கணும்! 

*அது மாதிரி... தமிழக திமுக அதிமுக அரசியல் போய்கிட்டு இருக்குது. முதல் அமைச்சர்ன்னா இவங்களுக்கு குளுகுளுன்னு இருக்குது சட்டசபைக்கு போறத்துக்கு! இல்லீன்னா ஆயிரம் குற்றம் சொல்லிவிடுகிறார்கள். மூத்த தலைவர், மூத்த தலைவரின்னு சொன்னாங்க... மூத்த தலைவரு மாதிரி நடந்துக்குன்னுமில்ல! 

எதிர்கட்சி தலைவருக்கு முதல் வரிசையின்னா... கொடுத்தாச்சி! அப்புறம் மூத்த தலைவருக்கும் முதல் வரிசையில்லீன்னா... இது போகாத ஊருக்கு வழிதடமா? அவரு அமர மாதிரி ஏற்பாடு வேணுமின்னாங்க... கொடுத்தாச்சி... போய் உட்கார வேண்டியதுதானே! மூத்த தலைவரு முன்மாதிரியா இருக்குணுமில்ல! 

அப்படீன்னா, எதிர்கட்சி தலைவராகி முன்னால உட்கார வேண்டியதுதானே! நாட்டுல ஒரு சட்டத் திருத்தம் உடனே கொண்டாந்தா பரவால்ல. ஆமா, "இனி தமிழ்நாட்டுக்கு ரெண்டு முதல் அமைச்சரு... யாரு ஜெய்ச்சாலும், யார் தோத்தாலும்... 'கலைஞரும்', 'அம்மா'வும் சாகுவரை முதல்வரு... இவுங்க சாகும்போது, யாரை கைக்காட்டுகிறார்களோ அவங்க முதல்வரு... அவங்க கைக்காட்டுன்னா... அவங்க முதல்வருன்னு.." 

*வாழ்க ஜனநாயகம்! 
வாழ்க மன்னர்-மன்னி ஆட்சி! த்தூத்தேரி..! 
இதுக்கு வேற ஒரு விவாதம்; இதையும் நாம பார்த்து தொலையணும்!
----\\\\
முரண்பாடு? 
ஆளுவதற்கு அவர்கள்...
அவர்களோட கொள்கை, கோட்பாடு, நடைமுறை 
போன்றவற்றை எதிர்த்திடுவதற்கு இவர்கள்..! 
ஏனிந்த முரண்பாடு? 
NLC யில் CITU வெற்றி..! 
அதுவும் ஒரு சில நாட்களில்..!
----\\\\
பாதையின் கற்களை...
பாதையின் கற்களை... இந்தியாவை பொறுத்த அளவில் உலகமயத்தை எதிர்த்தாலும், கம்யூனிஸ்ட்டுகளால் நாட்டின் வளர்ச்சிக்கான ஒரு திட்டவட்டமான மாற்று உத்தியை உருவாக்க முடியவில்லை. 
திட்டவட்டமான மாற்றுத் திட்டதெதோடு தாம் எதிர்நோக்கியிருக்கும் பாதையின் கற்களை கம்யூனிஸ்ட்கள் பார்க்கும்போது சூழல்கள் மாறும்!
(பேரா பிரபாத் பட்நாயக். இந்து தமிழ் 19.6.16.)
----\\\\
ஒரே குட்டையில்...
#அதெல்லாம் ஒன்றும் கிடையாது; மக்கள் ஏமாற்றும் நாடகம்! அதிமுக திமுக "இரவினில் ஆட்டம் பகலில் தூக்கம்" என்பது போலத்தான்! சட்டச்சபைக்குள் அனல் பறப்பதைப் போல் இருக்கும்; ஆனால் இருக்காது!

#கருணாநிதிக்கும், ஜெயலலிதாவிற்கும்... வேறு விதமாக சொன்னால்... திமுகவிற்கும், அதிமுகவிற்கும் என்ன வித்தியாசம்? ஒரே ஒரு வித்தியாசம்தான்! ஒரு கொடியில் 2 நிறம்; இன்னொரு கொடியில் 3 நிறம்; அவ்வளவே! அதே போலத்தான் அவர்கள் அணியும் வேட்டி மற்றும் புடவை கரையின் நிறத்திலும்! 

#ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும், கச்சுத்தீவை கருணாநிதி விட்டு கொடுத்திருந்தாலும், 1977 இல் துவங்கப்பட்ட அஇஅதிமுக இன்னும் ஏன் மீட்கவில்லை? இப்பொழுதாவது இத்தனை ஆண்டுக்குள் மீட்போம் என்று சொல்லி, அதிமுக மீட்க்குமா? 

#கீரியையும், பாம்பையும் சண்டை போட செய்யும் வித்தைத்தான்... கச்சுத்தீவு பிரச்சனை முதல் டீசல், பெட்ரோல் விலை உயர்வு பிரச்சனை வரை... இவர்களின் நாடகம் சொல்லி மாளாது! 
ஆம், திமுகவும் அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

#இவர்களின் கொள்கை, நடைமுறை போன்றவற்றில் வேறுபாடுகள் கண்டு பிடிப்பவர்களுக்கு பாரத ரத்ணா விருது (நோபல்பரிசு பெறும் தகுதியும் உண்டு; என்றாலும் உள்நாட்டு விருதையே சிபாரிசு செய்வோம்) தரலாம்!
----\\\\
அமளி துமளிக்கு... 
#அமளி துமளிக்கு இன்னொரு பெயர் திமுக அதிமுக இப்படிப்பட்ட அதிமுக திமுகவுக்கு மாற்றாக, மக்கள் பிரச்சனைகளை பேசி தீர்க்க  அல்லது தீர்வுக்கு வழிகாணத் தான்--
தேமுதிக மநகூ தமாகா வை ஆதரிக்க மக்களை வேண்டினர்! ஆனால்...?! 

#திமுக அதிமுக வும்-- 
இந்திய தேசத்தை விற்று, யோகா செய்வோரின் போக்கை எதிர்த்து இப்படி அமளி துமளி வந்திருந்தால் பரவாயில்லை; வரவேற்கலாம்! ஆனால்...?! 

#சட்டச்சபை சண்டைச்சபையாகத்தான் இனி இருக்கும்; 
அது-- உப்பு சப்பற்ற பிரச்சனையாகத்தான்  இருக்கும்!

#எரிகிறக் கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்லக்கொள்ளி..? 
விவாதத்தைத் திசைத்திருப்புவதில் இரண்டுமே கரைக்கண்ட கட்சிகளே!

#திமுகவும் அதிமுகவும் நாணயத்தின் இரு பக்கங்கள்... மக்களின் முக்கியப் பிரச்சனைகளைத் திசைத்திருப்புவதில்!
---\\\

No comments:

Post a Comment