"கண்டனம் முழங்குவோம்!"
அய்யகோ...!
இந்த ஆர்எஸ்எஸ் கொலைவெறி அடக்க வேண்டாமா?
ஆர்எஸ்எஸ் என்ற இந்துத்துவா வெறி... இஸ்ஸாம், கிருத்துவ, தலித் மற்றும் கம்யூனிஸ்ட் உயிரை குறிவைத்து குடிக்கும் கொலைவெறியை வேரறுப்போம்! மாண்புமிகு மனித உயிர்களை காப்போம்!
ஆம், இரண்டொரு நாட்களுக்கு முன் ராஜஸ்தானில் முஸ்லீம் சகோதரனை கொலைவெறியாட்டம் செய்தனர்.
கேரளத்தில் வெற்றி ஊர்வலத்தில் புகுந்து மார்க்சிஸ்ட் தோழரை வெட்டி உயிரை குடித்தனர்.
தற்சமயம்கூட காஷ்மீரில் ஆட்சியை முஸ்லீம் அமைப்புடன் சேர்ந்து பகிர்ந்து கொண்டு பொதுசிவில் சட்டம் பேசும் பாஜகவின் இந்த மனிதவேட்டை சாண்டவத்திற்கு கடிவாளம் இடுவோம்!
தினம், தினம் பாஜகவின், ஆர்எஸ்எஸ்சின் மதவெறி, கொலைவெறி அரசியலுக்கு வெஞ்சாமரம் வீசும் மத்திய மோடி அரசை அகற்றிடுவோம்! கண்டனம் முழங்குவோம்!
#அரியானா தலித் படுகொலைக்கு ஆதாரம்: Bakya Bakya, Mohamed Ismail's, Siva Kumar ஆகியோரின் FB பதிவிலிருந்து..!
#ராஜஸ்த்தான் கொலைவெறியாட்டத்திற்கு அந்த இமேஜ் இல் ஆங்கிலத்தில் பதிவு இருக்கு..!
----\\\
அருமை!
தொழிற்சங்கத்தின் மீதான குறைபாட்டைத் தவிர்த்து, தோழர் அச்சு பற்றிய ஒரு சர்சை தவிர்த்து பார்த்தால், இன்றைய 6.6.16 தினமணி தலையங்கம் அருமை! பாருங்கள்!
---\\\
எந்த பயனுமில்லை!
பாஜக வோடு யார் சேர்ந்தாலும் தமிழகத்திற்கு எந்த பயனுமில்லை! ஆனால் பாஜகவுக்கு பயனுண்டு! ஒன்றிரண்டு சீட்டு கிடைக்கும்! அதன்மூலம் தமிழகத்தில் மதவாதம் மேலும் தலைவிரித்தாடும்!
பாஜக வோடு யார் சேர்ந்தாலும் தமிழகத்திற்கு எந்த பயனுமில்லை! ஆனால் பாஜகவுக்கு பயனுண்டு! ஒன்றிரண்டு சீட்டு கிடைக்கும்! அதன்மூலம் தமிழகத்தில் மதவாதம் மேலும் தலைவிரித்தாடும்!
திமுக அதிமுக ஆகிய கட்சிகள் பாஜகவுடன் சேராமல் இருந்தாலே, தமிழகத்திற்கு பயனும், பலனுமுண்டு! சிறுபான்பாமை மற்றும் தலித் மக்களுக்கு மற்றும் உழைப்பாளிகளுக்கு அதுவே நிம்மதி!
----\\\
புதிய சட்டம் தேவை!
ஆணவக் கொலைகளைத் தடுக்கக் கட்டாயம் புதிய சட்டம் தேவை. நடைமுறையில் உள்ள சட்டம் போதுமானதாக இல்லாததால் தான் ஆணவக் கொலை அனுதினமும் நடந்து வருகிறது.
ஆணவக் கொலைகளைத் தடுக்கக் கட்டாயம் புதிய சட்டம் தேவை. நடைமுறையில் உள்ள சட்டம் போதுமானதாக இல்லாததால் தான் ஆணவக் கொலை அனுதினமும் நடந்து வருகிறது.
*நாகரீக சமுதாயத்தில் நடக்கும் ஆணவக் கொலைகள் மீண்டும் காட்டுமிராண்டித்தனத்தை நோக்கிய பணயமே!
*ஆணவக் கொலைகளை தடுத்தாக வேண்டும்; சாதி ஆதிக்க சக்திகளுக்கு சாவு மணி அடித்தே ஆக வேண்டும்!
----\\\\
"சொல்லவே இல்ல!"
கறுப்பு பணத்தை மீட்டு, வீட்டுக்கு ரூ15 லட்சம் தருவேன் என்றவர், கறுப்பு சிலைகளை மீட்டு இருக்கிறார்! நல்லா இருக்குது ஆட்சி! இதுதான் சொல்லாததும் செய்தேன் என்பதா? வீட்டுக்கொரு கருங்கல் சிலை தருவேன் என்று மோடி சொல்லவே இல்ல!
---\\\\
அடிமை என்றே அர்த்தம்!
ராணுவக்கூட்டாளி என்றாலே அடிமை என்றே அர்த்தம்! இதுதான் அமெரிக்காவின் பாலபாடம்!
ராணுவக்கூட்டாளி என்றாலே அடிமை என்றே அர்த்தம்! இதுதான் அமெரிக்காவின் பாலபாடம்!
*மோடி பயணத்தால், அமெரிக்காவிடம் இந்தியா 100% அடிமையானது! வேறென்ன சொல்ல? இதில் ஆச்சரியப்படவோ, அதிர்ச்சியடையவோ ஒன்றுமில்லை! இனம் இனத்தோடுதான் சேரும்!
*அமெரிக்காவின் அடிமை நாடாக 1991 இல் மன்மோகன்சிங், சிதம்பரம் போன்ற நிதி அமைச்சர்களால் தொடங்கி, மன்மோகன்சிங் என்ற பிரதமரால் வளர்ந்து, இன்று மோடி என்ற பிரதமரால் ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது அடிமை அத்தியாயம்! ஆனாலும் என்ன... "இந்தியாவை சகிப்புத்தன்மை இல்லாத நாடாக மாற்றி, பாஜக மோடி அரசு ஆட்சி செய்கிறது; இது இந்தியாவின் பன்முகத் தன்மை மற்றும் பொருளாதார முன்னேற்றம் போன்றவற்றை பாதிக்கும்" என அவ்வப்போது தனது திருவாய் மலர்ந்துக் கொண்டுமிருக்கும் அமெரிக்க என்ற ஏகாதிபத்திய வல்லூறு!

*எதை மக்கள் எதிர்க்கிறார்களோ... அதை ஆணவத்துடன் செய்வதே முதலாளியத்துவமும், ஏகாதிபத்தியமும்! அப்படித்தான் இந்த ஆறு அணுஉலைகள் அமைப்பதற்கான அமெரிக்காவுடனான ஒப்பந்தமும்!
*ஆம், இந்தியா இந்துத்துவா பாசிச தன்மை கொண்ட முதலாளித்துவ நாடு! அமெரிக்கா ஏகதேசத்தையும் (அண்டத்தையே) ஆட்டிப்படைக்க எத்தனிக்கும் ஏகாதிபத்திய நாடு!
----\\\\
"என்ன கொடும சார் இது!"
"உலக ஜனநாயகத்தின் கோயில் அமெரிக்கா..!"
-நம்மூர் ஜனநாயக சிற்பி மோடியின் அருள்வாக்கு!
"உலக ஜனநாயகத்தின் கோயில் அமெரிக்கா..!"
-நம்மூர் ஜனநாயக சிற்பி மோடியின் அருள்வாக்கு!
"என்ன கொடும சார் இது!"
----\\\\
*ராஜீவ் வழக்கா? ராஜீவ் படுகொலை வழக்கா?
*கால்நூற்றாண்டு கடந்தும் 'கரை' சேராததற்கு காரணம்... திமுக அதிமுக கட்சிகளும், அதன் தமிழக ஓட்டு வங்கிக்கு ஏற்றவாறு எடுத்த 'பச்சோந்தி' நிலைபாடும்!
ஆம், தங்களின் தமிழக அரசியல் ஆதாயத்திற்கு, காங்கிரஸ்சுடன் சேர்ந்தும், சேராமலும் ஏமாற்றி வரும் திமுக அதிமுக கட்சிகளே! காங்கிரஸ்சும் நாட்டின் பிரச்சனையாக பார்க்காமல், அது ராஜீவ் குடும்ப பிரச்சனையாக பாவித்து, அது எதிரெதிர் நிலைபாடுகளை எடுத்ததும் முக்கிய காரணம்!
நீதி பரிபாலணம், அரசியல் குடுவைக்குள் ஒளிந்து கொண்டதும் காரணமாக கருதவும் இடமிருக்கிறது! ஒரு கொலைக்கு இன்னொரு கொலை தீர்வல்ல!
*25 ஆண்டுகளாக மாநிலத்திலும், மத்தியிலும் ஆண்ட கட்சிகளே இதற்கு பொறுப்பு! ஆட்சியில் அமராத கட்சிகள் எப்படி பொறுப்பாக முடியும்? நீதி மன்றத்தின் ஜவ்விலுப்பும் இதற்கு பொறுப்பு!
----\\\
ஒரு புடலங்காய்யும் கிடையாது!
*சமஸ்கிரதம் திணிப்பே! மொழிப்பற்றும் கிடையாது; ஒரு புடலங்காய்யும் கிடையாது!
*சமஸ்கிரதம் திணிப்பே! மொழிப்பற்றும் கிடையாது; ஒரு புடலங்காய்யும் கிடையாது!
*ஒன்றை கலாச்சாரத்தை வலிய புகுத்தும் இந்துத்துவா வெறி! கருணாநிதியின் அச்சம் ஏற்கக்கூடியதே!
பாஜக வின் முகமூடி கொஞ்சம் கொஞ்சமாக கிழிந்து வந்ததைத் தாண்டி மோடி அரசு தற்போது புகுந்து விளையாடுகிறது! சமஸ்கிரத திணிப்பு உள்ளிட்டு நாட்டின் பன்முக கலாச்சாரத்தைக் காவிக்கொடியால் பறக்கவிடுகிறது பாஜக! *கருணாநிதி இதை எதிர்த்து, உக்ரமான போராட்டத்தில் தமிழக மக்களை இறக்கி விட வேண்டும்! செய்வாரா? அல்லது அறிக்கையோடு இருந்து விடுவாரா?
----\\\
மாநாடு சிறக்க, வென்றிட வாழ்த்துக்கள்!
சிஐடியூ வின் சேலம் மாவட்ட 11 வது மாவட்ட மாநாடு!
*2016 ஜுலை 2,3 தேதிகளில் சேலம் 5 ரோடு குஜராத்தி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. *25 க்கும் மேற்பட்ட சிஐடியூ வின் இணைப்பு சங்கங்களை சேர்ந்த 25,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் 500 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கூடுகிறார்கள்.
*கடந்த கால அனுபவங்களை விவாதித்து, எதிர்கால வியூபங்களை வகுக்க இருக்கிறார்கள்!
மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளுக்கு முடிவுகட்டிட, மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிகளை மேம்படுத்திட நடைபெறும் இம்மாநாடு சிறக்க, தீர்மாணங்கள் வென்றிட வாழ்த்துக்கள்!
----\\\\
எங்கே தமிழகத்தை உலுக்குகிறது?
#மீனவர் கைது; எழுவர் விடுதலை எங்கே தமிழகத்தை உலுக்குகிறது?ஊடகங்களை வேண்டுமானால் உலுக்கலாம்!
#மீனவர் கைது; எழுவர் விடுதலை எங்கே தமிழகத்தை உலுக்குகிறது?ஊடகங்களை வேண்டுமானால் உலுக்கலாம்!
#அப்படி உலுக்கி இருந்தால் அதிமுக தோல்வி அடைந்திருக்க வேண்டும்! சீமானும், வேல்முருகனும் ஆட்சியை பிடித்திருக்க வேண்டும்!
#மத்திய மாநில அரசுகள் எதை சொன்னாலும் செய்யாது! தேர்தல் நெருங்கினால், செய்வதுபோல் கொஞ்சம் பாவலா செய்யும்! அவ்வளவுதான்!
#தமிழக பாஜக தலைவர்கள் கூற்றை வைத்து பார்த்தால், இவ்விரு பிரச்சனைகளும் அவர்களுக்கு 'செவிடர் காதில் ஊதும் சங்குதான்!' #அதிமுக இனி அசைய அய்தாண்டு ஆகும். அதுவரை கடிதம் எழுதி, எழுதி பேனா மையும், பேப்பரும்தான் தீர்ந்து போகும்!
#சீமான் தோல்வியில் இருந்து வெளியே தலை காட்ட இந்த இரு பிரச்சனைகளும் கைகொடுக்கும்!
#சுயநல அரசியல் கட்சிகள் ஆட்சியில் இருக்கும் வரை இரண்டும் தீரா பிரச்சனைகளே!
----\\\\
மகிழ்ச்சியான ஒரு நிகழ்ச்சி..!
மக்கள் நலக் கூட்டணி மங்கி விடக்கூடாது; மனச்சோர்வை நீக்கி மக்கள் பிரச்சனையில், மாற்று சிந்தனையுடன் வீறு கொண்டு எழ வேண்டும்; இது தோல்வியே அல்ல..! என இன்று 12.6.16 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சி எதார்த்தமாக அமைந்தது! மகிழ்ச்சி!
நெறியாளர் ஜென்ராம், பதிப்பாளர் பத்ரி, சிபிஐ லெனின் ஆகியோருக்கு நன்றி!
ஆம், இன்று... நான், மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிட்ட எடப்பாடி தொகுதி மக்களுக்கு... வாக்களித்தவர்களுக்கு... உழைத்தவர்களுக்கு... நன்றி சொல்ல புறப்படும்போது இப்படியொரு டானிக்..! இது எதிர்ப்பார்க்காத ஒன்று! மகிழ்ச்சியான ஒரு நிகழ்ச்சி..!
[08:39, 12/6/2016] கிருஷ்ணசாமி திண்டுக்கல்: தங்கவேல் தோழருக்கு என் பணிவான வேண்டுகோள் உள்ளாட்சி தேர்தலுக்கு 4 மாதம் உள்ளது. கிராமங்களுக்கு பூத் வாரி சென்று மக்கள் தேவையை கண்டறிந்து அந்தந்த பகுதியில் போராட்டம் 2அல்லது 3 கட்டமாக நத்துங்கள். குறிப்பாக தண்ணீர் தெருவிளக்கு சுகாதாரம் 100 நாள் வேலை ரேசன் கடை நில அளவை பட்டா உட்பிரிவு சான்று என மக்களின் அன்றாட தேவையை கண்டு அதற்காக மட்டும் போராட்டம் நடத்தினால் வெற்றி நிச்சயம் ஆலோசனை சரியா தவறா தெரியவில்லை மனதில் பட்டதை கூறினேன்.
[08:55, 12/6/2016] +91 94865 96641: 🙆🙏🙆
[09:05, 12/6/2016] கிருஷ்ணசாமி திண்டுக்கல்: தங்கவேல் தோழர் உங்கள் படம் எனக்கு புரியலை
[09:48, 12/6/2016] +91 94865 96641: தங்கள் ஆலோசனை சரி! நன்றி! என்பதற்கான என புரிதலை அந்த படம்! சரிங்களா?
[09:49, 12/6/2016] கிருஷ்ணசாமி திண்டுக்கல்: நன்றி
----\\\
ஓங்கட்டும் மக்கள் நலக் கூட்டணி!
#பிரதான அரசியல் பணியின் நிறைவு இன்று 12.6.16 நிறைவேற்றிய மகிழ்ச்சி தருணமிது!
#ஆம், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணியின் சிபிஎம் வேட்பாளராக போட்டியிட்ட நான், இவ்வணிக்கு வாக்களித்தோர், உழைத்திட்டோர் யாவருக்கும் நன்றி அறிவிப்பு கூட்டம் எடப்பாடி சிபிஎம் அலுவலகத்தில் நடத்தப்பட்டது! வந்தவர் மகிழ்வுடன் சென்றனர். புதிய தொடர்புகள், நட்புகள் வட்டாரத்தில் இதொரு நெகிழ்வான நிகழ்வே! இனி, இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய பொறுப்புடனே இக்கூட்டம் நடந்தேறியது!
#இரு பெரும் மாநில முதலாளித்துவ நலன் பேணும் கட்சிகளுடனும், சாதி ஆதிக்க சக்திகளுடன் மோதி, 5437 வாக்குகள் பெற்றது திருப்புமுனையே!
"இந்த அணி நீடிக்கும்பட்சத்தில், நிச்சயம் எதிர்காலம் நம் வசமே என வந்து சென்றோரும், வராமல் வாழ்த்து மழை பொழிந்தோரும் வெளிப்படுத்தும் மன ஓட்டமாக இருந்தது" மகிழ்வின் உச்சமே!
#விளிம்புநிலை மக்களுக்கான விடுதலை போராட்டத்தின் ஆரம்பமே இத்தேர்தல் போராட்டமாக இருந்தது! ஆம், முடிவல்ல, இது ஆரம்பமே! மக்களின் வாழ்க்கை பாடுகள் குறையாது; கூடும்! அதிலே தன்னலம் கருதாதது சங்கமிக்கிறபோது, நாம் புறக்கணிக்கிற சக்தியாக மாறுவோம் என்பது மட்டும் உறுதியிலும் உறுதியே! #ஓங்கட்டும் மக்கள் நலக் கூட்டணி! வீழட்டும் ஊழல்வாத, தாராள பொருளாதாரவாத, சாதிய-மதவாத பிணியான... அதிமுக திமுக பாஜக இ.காங்கிரஸ் பாமக அணி!

எடப்பாடி சட்டமன்ற தொகுதியில், நடந்து முடிந்த தேர்தலில், தேமுதிக-மநகூ-தமாக சார்பில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் தோழர் பி.தங்கவேலு க்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி அறிவிப்பு பேரவைக்கூட்டம் 12.06.2016 ஞாயிறு காலை 11 மணிக்கு எடப்பாடி சிபிஎம் ஆபீசுசில் சிபிஎம் வட்டச்செயலாளர் கே.லோகநாதன் தலைமையில் நடந்தது.
விசிக மேற்கு மாவட்டச் செயலாளர் அய்யாவு, சிபிஐ ஒன்றியக்குழு உறுப்பினர் சுப்ரமணி, சிபிஎம் ஒன்றிய செலாளர்கள் எஸ்பி.தங்கவேல், எஸ்.மோகன், சிபிஎம் மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு, மாநிலக் குழு உறுப்பினர் கே.ஜோதிலட்சுமி ஆகியோர் உரையாற்றினர்.

விசிக நகர செயலாளர் தனசாமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் விகே.வெங்கடாசலம், ஆர்.குழந்தைவேல், எம்.சேதுமாதவன், பி.ராமமூர்த்தி, எம்.குணசேகரன், ஏ.ராமமூர்த்தி மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜி.கணபதி, ஜெயலட்சுமி, பி.அரியாக்கவுண்டர் மாநகர மேற்கு செயலாளர் எம்.கனகராஜ், எடப்பாடி, கொங்கனாபுரம், நங்கவள்ளி சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மு.பெரியண்ணன், மூர்த்தி, வீரச்சாமி, நடராசன், கீதா, செல்வராஜ், சேகரி, கதிர்வேல் உள்ளிட்டு ஏராளமானோர் பங்கேற்றனர்.
----\\\\
அய்யோ... அய்யோ..!
அமெரிக்காவில் கேளிக்கை விடுதில் துப்பாக்கி சூடு! 50 பேர் சாவு! இது கண்டனத்திற்குரியதே! ஆனால், உலக தலைவர்கள் கண்டித்திருப்பதாகவும், அதில் ஒபாமா, மோடி உள்ளிட்டோர் இருப்பதும்தான் வேடிக்கை! ஆம், வினை விதைத்தால், தினையா முளைக்கும்? அய்யோ... அய்யோ..!

[09:55, 13/6/2016] Ganesh Samykannu: 👌👌
----\\\\
----\\\\
No comments:
Post a Comment