காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு!
மோடி அரசே தமிழகத்தை வஞ்சிக்காதே!
சேலத்தில் 18.10.16இல் நடந்த ரயில் மறியல் போது...
கண்மூடித்தனமாக தாக்கிய காவல் துறையை கண்டித்து...
26.10.16இல் ஆவேச ஆர்ப்பாட்டம்!
தலைமை: பி.தங்கவேலு
சிபிஐஎம் மாவட்டக்குழு செயலாளர்
கண்டன உரை: இரா.முத்தரசன்
சிபிஐ மாநிலச்செயலாளர், கே.ஜோதிலட்சுமி சிபிஎம் மாநிலக்குழு, ஆ. ஆனந்தராஜ் மதிமுக மாநகர மாவட்டச்செயலாளர், நாவரசு விசிக மண்டல அமைப்பு செயலாளர், கோ.மோகனசுந்தரம் சிபிஐஎம்எல் மாவட்ட செயலாளர், நன்றி உரை: எம். ராமன் சிபிஐ மாவட்ட பொருளாளர்.
மதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் ந.மகேந்திரவர்மன், விசிக மண்டல தேர்தல் பொறுப்பாளர் சௌ. பாவேந்தன், சேலம் மக்களவை தொகுதி பொறுப்பாளர் இமையவர்மன், மேற்கு மாவட்ட செயலாளர் செ. அய்யாவு, வடக்கு மாவட்டச்செயலாளர் அ.வசந்த், சிபிஎம் மாவட்ட செயற்குழு ஆர். வெங்கடபதி, சிபிஐ மாவட்ட துணைச்செயலாளர்கள் எம். முனுசாமி, டி.கண்ணன் உள்ளிட்ட 500 க்கும் மேலானோர் பங்கேற்றனர். ----\\\
மக்கள் நலக் கூட்டணி கடும் கண்டனம்!
சேலம் ஜங்ஷன் 2 மணி நேரம் ஸ்தம்பிப்பு!
போலீஸ் தடியடி! சிபிஐ மாவட்ட செயலாளர் ஏ. மோகன் கால்முறிவு!
##
சேலம் ஜங்ஷனில் 18.10.16 மக்கள் நலக் கூட்டணி சார்பில் ரயில் மறியல் நடைபெற்றது. சிபிஐஎம் மாவட்ட செயலாளர் பி. தங்கவேலு, சிபிஐ மாவட்ட செயலாளர் ஏ. மோகன், மதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆனந்தராஜ், மகேந்திரன், விசிக மாவட்ட செயலாளர்கள் ஜெயச்சந்திரன், அய்யாவு, வசந்த் உள்ளிட்ட சுமார் 1000 பேர்கள் கோவை ரயிலை மறியல் செய்ய திரண்டு சென்றனர்.
அப்பொழுது சேலம் சரக காவல் உதவி ஆணையர் விஜய் கார்த்திக் ராஜா, சேலம் மாநகர காவல் ஆவண காப்பக உதவி ஆணையர் கந்தசாமி, சேலம் மாநகர பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் பொன்ராஜ், பள்ளப்பட்டி உதவி ஆய்வாளர் தேவராஜ் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் மறியல் போராளிகளை தடுப்பு அமைத்து தடுத்தனர்.
அப்பொழுது உதவி ஆணையர் கந்தசாமி தோழர் மோகனை தாக்கியதால் அவரின் இடது கால் முறிவு ஏற்பட்டது. காவல் ஆய்வாளர் பொன்ராஜ் மாதர் சங்க மாவட்ட தலைவர் ஞானசௌந்தரியை நாகூசும் வகையில் ஆபாசமாக திட்டினார். ரயில்வே போலீஸ் தண்டவாளத்தில் அமர்ந்த போராளிகள் மீது லத்தி சார்ஜ் செய்தனர். இதனால் நிலைமை பதட்டமானது. 2 மணி நேரம் ரயில் நிலையம் போர்களம் ஆனது.
அராஜகமாக நடந்த, ஆபாசமாக பேசிய, தடியடி நடத்திய காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் மறியல் நடத்தது. மாநகர காவல் இணை ஆணையர் ஜார்ஜ் போராட்ட தலைவர்களுடன் பேசியதை தொடர்ந்து அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.
கடுமையாக பாதிக்கப்பட்ட தோழர் மோகன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
காவிரி உரிமைக்கு உயிர் துச்சமென போராடிவர்கள் மீது தடியடி நடத்தியதை, ஆபாசமாக பேசியதை போன்ற சேலம் மாநகரம் மற்றும் ரயில்வே காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்தை சேலம் மாவட்ட மக்கள் நலக் கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது.
அதோடு, தோழர் மோகன் உள்ளிட்ட தோழர்களை தாக்கிய ஆபாசமாக திட்டிய காவல் அதிகாரிகள் மீது தக்க சட்டப்படியான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் சேலம் மாவட்ட மக்கள் நலக் கூட்டணி கேட்டு கொள்கிறது.
மேலும் ரயில் மறியலின் போது aiyf மாவட்ட செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட 13 பேர் ரயில்வே போலீஸ் போட்ட வழக்கையும் வாபஸ் பெற கேட்டு கொள்கிறது.
[23:45, 18/10/2016] விமலாவித்யா: Pl give a written police complaint with actual words and unlawful actions of police mentioning all names..we have to do legally.
Then only JUSTICE will get..
... Vimalavidya
[00:01, 19/10/2016] +91 94865 96641: நன்றி தோழரே
[00:15, 19/10/2016] விமலாவித்யா: Our hearty congrats to Salem comrades brave struggle and sacrifice... Vimalavidya
[00:15, 19/10/2016] விமலாவித்யா: Tremendous struggle... fantastic ---\\\
மக்கள் நலக் கூட்டணி, சேலம் மாவட்டம்
2 வித்தியாலயா ரோடு, ராமகிருஷ்ணா பார்க், சேலம்-7.
------------------------------------------------20.10.16
பெறுநர்
உயர்திரு.மாநகரக்காவல்ஆணையர்
சேலம் மாநகரம்.
அய்யா, வணக்கம்.
பொருள்: ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு; மோடி அரசே தமிழகத்தை வஞ்சிக்காதே’ என 18.10.16 அன்று சேலம் ஜங்ஷனில் நடந்த மக்கள் நலக் கூட்டணி மறியல் போது அத்துமீறி போராளிகளை தாக்கிய காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோருதல் சம்மந்தமாக.
சேலம் ஜங்ஷனில் 18.10.16 அன்று மக்கள் நலக் கூட்டணி சார்பில், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு; மோடி அரசே தமிழகத்தை வஞ்சிக்காதே’ என்ற கோரிக்கையை முன் வைத்து, ரயில் மறியல் நடைபெற்றது. இதில் சிபிஐஎம் மாவட்ட செயலாளர்) பி.தங்கவேலு, சிபிஐ மாவட்ட செயலாளர் ஏ.மோகன், மதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆ.ஆனந்தராஜ் மாநகர மாவட்டம், நா.மகேந்திரவர்மன் மேற்கு மாவட்டம், விசிக மாவட்ட செயலாளர்கள் ஜி.ஜெயச்சந்திரன் மாநகர மாவட்டம், செ.அய்யாவு மேற்கு மாவட்டம்,
அ.வசந்த் வடக்கு மாவட்டம் உள்ளிட்ட சுமார் 1000 பேர்கள் கோவை எக்ஸ்பிரஸ் ரயிலை மறியல் செய்ய திரண்டு சென்றனர்.
அப்பொழுது சேலம் சரக காவல் உதவி ஆணையர் திரு.விஜய் கார்த்திக் ராஜா, சேலம் மாநகர காவல் ஆவண காப்பக உதவி ஆணையர் திரு.கந்தசாமி, சேலம் மாநகர பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் திரு.பொன்ராஜ், பள்ளப்பட்டி உதவி ஆய்வாளர் திரு.தேவராஜ் ஆகியோர் உள்ளிட்டு 100க்கும் மேற்பட்ட போலீசார் மறியல் போராளிகளை தடுப்பு அமைத்து தடுத்தனர்.
அப்பொழுது உதவி ஆணையர் திரு.விஜய்கார்த்திக்ராஜா தோழர் ஏ.மோகனை தாக்கியதால் அவரின் இடது கால் முறிவு ஏற்பட்டது. காவல் ஆய்வாளர் திரு.பொன்ராஜ் மாதர் சங்க மாவட்ட தலைவர் ஞானசௌந்தரியை நாகூசும் வகையில் ஆபாசமாக திட்டினார். ரயில்வே போலீஸ் தண்டவாளத்தில் அமர்ந்த போராளிகள் மீது உதவி ஆணையர் திரு.கந்தசாமி, உதவி ஆய்வாளர் திரு.தேவராஜ் உள்ளிட்ட காவல் துறையினர் கண்மூடித்தனமாக லத்தி சார்ஜ் செய்தனர். இதனால் நிலைமை மிகவும் பதட்டமானது. 2 மணி நேரம் ரயில் நிலையத்தில் மறியலும், மறியலை ஒட்டி காவல்துறையின் அத்துமீறிய தாக்குதலும் நடந்துக் கொண்டே இருந்தது; தொடர மறியலும் நடந்துக் கொண்டிருந்தது.
‘அராஜகமாக நடந்து கொண்ட, ஆபாசமாக பேசிய, தடியடி நடத்திய காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மறியல் போது கோரிக்கை வைக்கப்பட்டது. மாநகர காவல் துணை ஆணையர் திரு. ஜோர்ஜி.ஜார்ஜ் (சட்டம்-ஒழுங்கு) அவர்கள் போராட்ட தலைவர்களுடன் ‘புகார் கொடுங்கள்; விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்’ என கூறியதைத் தொடர்ந்து, அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
கடுமையாக பாதிக்கப்பட்டு இடது கால் மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டு தோழர் ஏ.மோகன் சிபிஐ மாவட்டச்செயலாளர் தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
காவிரி உரிமையை நிலைநாட்டி, தமிழகத்தின் வாழ்வுரிமையை நிலைநிறுத்த வேண்டுமென தங்களின் இன்னுயிரையும் பொருட்படுத்தாது போராடிய மக்கள் நலக் கூட்டணி போராளிகள் மீது தடியடி நடத்தியது; பெண்களை ஆபாசமாக திட்டியது போன்ற அத்துமீறல்கள், அநாகரியக செயல்களில் ஈடுப்பட்ட சேலம் மாநகரம் மற்றும் சேலம் ரயில்வே காவல்துறையின் மனித நாகரிகமற்றச் செயலை சிபிஐ, சிபிஐஎம், மதிமுக, விசிக உள்ளிட்ட சேலம் மாவட்ட மக்கள் நலக் கூட்டணி வன்மையாகக் கண்டிக்கிறது.
அதோடு, தோழர் ஏ.மோகன் உள்ளிட்ட தோழர்களை தாக்கிய, பெண்களை ஆபாசமாக திட்டிய காவல் அதிகாரிகள் மீது தக்க சட்டப்படியான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும், ரயில் மறியலின் போது aiyf மாவட்ட செயலாளர் தோழர் ஆர்.ரமேஷ் உள்ளிட்ட 13 பேர் மீது ரயில்வே போலீஸ் போட்டுள்ள வழக்கையும் வாபஸ் பெற வேண்டும் என்றும் தங்களையும், தமிழ்நாடு அரசையும், சேலம் மாவட்ட வருவாய் நிர்வாகத்தையும் சேலம் மாவட்ட மக்கள் நலக் கூட்டணி சார்பில் கேட்டு கொள்கிறோம். நன்றி.
இப்படிக்கு,
ஏ.மோகன்,
சிபிஐ மாவட்டச்செயலாளர், ஜி.ஜெயச்சந்திரன்,
விசிக மாநகர மாவட்டச்செயலாளர், ஆ.ஆனந்தராஜ்,
மதிமுக மாநகர மாவட்டசெயலாளர், பி.தங்கவேலு,
சிபிஐஎம் மாவட்டச்செயலாளர்.
கண்டித்தும், தாக்குதல் நடத்திய போலீஸ் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் கோரி சேலம் மாநகர காவல் ஆணையரிடம் மக்கள் நலக் கூட்டணி நிர்வாகிகள் 21.10.16இல் விண்ணப்பம் கொடுத்தனர்.
---\\\
சூதும் சூழ்ச்சியும்!
இன்று 10.10.16 காலை 9 மணிக்கு PTTV பார்க்க நேர்ந்தது. பாஜக சேகர், விசிக ஷாநவாஸ் நெறியாளர் கார்த்திகேயன் பேசிக்கொண்டிருந்தனர்.
சு.சாமி தமிழகத்தில் கவர்னர் ஆட்சியை கொண்டு வர சொல்கிறாரே! இதுதான் கேள்வி.
இதற்கு சேகர் நேராக பேசவில்லை. அதற்கு 'வைகோ' அப்படி பேசினார். 'திருமா' இப்படி பேசினார் என சுத்த ஆரம்பித்து விட்டார்.
நான் நினைத்து பார்க்கிறேன். முதல்வர் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். சில நாட்கள் ஆகிறது. உண்மை நிலை தெரியவில்லை. இது அரசின் சிக்கல். இந்நிலையில் உண்மை நிலை கோரப் படுகிறது. அந்தச் சமயத்தில் ஆளுநர் விரைகிறார். பாஜக சூதும் சூழ்ச்சியும் அப்பொழுது யாருக்கும் புரியவில்லை. அப்புறம் சில நாள் கழித்து ராகுல் திடீர் என வருகிறார்.
அப்பொழுது தான் புரிகிறது. 'என்னமோ நடக்கிறது' என்று தமிழகத்தின் கட்சிகளுக்கு. அந்த சமயத்தில் தான் சு.சாமி என்ற குட்டியை விட்டு பாஜக என்ற குரங்கு ஆழம் பார்த்தது.
அதன்பின் கொள்ளைப்புற வழியில் காய் நகர்த்தும் பாஜகவின் சதியும் சூழ்ச்சியும் தெரிய வந்தது.
அதன்பின் உசாராகின தமிழக கட்சிகள்.
பாஜக பின் வாங்கியது. குப்புற கவிழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என சேகர் ஜால்ஜாப்பு பேசுகிறார். பாவம்.
இது ஒன்னும் அருணாசலப் பிரதேசமல்ல. தமிழகம் என்பதை தெரிந்ததும் தற்போது சீறுகிறார் போலும்.
தமிழக கட்சிகளும் மக்கள் நலக் கூட்டணியும் 'பல குரலில்' பேசுகின்றனவாம்.
அதற்கு தகுந்த பதிலைத் தந்தார் ஷாநவாஸ். என்றாலும் இன்னும் ஷாப்பாக தந்திருக்கலாம்.
பாஜக மிக பிரமாண்ட கட்சியாம். இப்படி சு. சாமி போல் பேசுவது சகஜமாம்.
பாஜகவே 'நேர்மை' உமக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை அல்லவா? ஆனால், 'அது' தான் உமது 'ஜீவிதம்' என்பதை தமிழகம் 'லேட்டாக'வாவது புரிந்து கொண்டதில் மகிழ்ச்சி!
[11:26, 10/10/2016] எஸ்ஏஆர் ஈரோடு: பி ஜே பி யின் கருத்துக்கள் செயற்கையானது கபடம் நிறைந்தது என்பதை சேகரின் பேச்சு உணர்த்தியது
---\\\
முதல்வரும் அதிமுகவும்!
அரசியல் காரணங்கள் இல்லையென ஒதுக்கிவிட முடியாது.
இந்நிலைக்குக் காரணம் முதல்வரும் அதிமுகவும்!
நிர்வாகம் செம்மையடைய வேண்டும் என்பதில் இரு கருத்தில்லை!
இச்சூழலைப் பயன்படுத்தி கொள்ளைபுறத்தில் குடியேறப் பார்க்கிறது பாஜக. இதை அனுமதிக்கக் கூடாது.
அதிமுக பலவீனம் ஆவதை திமுக பயன் படுத்தவே செய்யும்; அது புரிகிறது.
ஆனால் பாஜக சு.சாமி கவர்னர் ஆட்சி கோருவது- அதில் உள்ள சதியும், சூழ்ச்சியும் தெரிகிறது.
----\\\\
முத்தலாக்கும், விவாகரத்தும்!
மனிதன் வாழும் பூவுலகில் நீர் நிலம் நெருப்பு காற்று வானம் தவிர மற்ற யாவும் மனிதனால் படைக்கப்பெற்றதே.
'மதம் மக்களுக்கு அபின்; இதயமற்றவர்களின் இதயம்' என்பார் மாமேதை மார்க்ஸ்.
நான் மார்க்சியம் இம்மண்ணில் மனபரப்ப வேண்டும் என உழைத்து கொண்டு இருப்பவர்களில் ஒருவன்.
மனிதன் படைத்தவற்றில் நல்லவைகளும் உண்டு.
தீயவைகளும் உண்டு.
'மனித சமுகம்' தீயவைகளைப் புறம் தள்ளியே வந்துள்ளது.
அப்படிதான் மதம் சார்ந்த சடங்குகளும் சட்டங்களும்; அரசு சார்ந்த சட்டங்களும். மதம் சாதி இனம் மொழி பிரதேசம் என கடந்து வாழும் 'தேவை மிக்க உலகில்' வாழுகிறோம்.
இன்றைய விஞ்ஞான உலகில் 'மனிதனின் தேவை' விரிந்துக் கொண்டே வருகிறது.
இந்த 'தேவை'யை நிறைவு செய்து கொள்ள இதில் 'எது' குறுக்கே வந்து நின்றாலும், அதை எளிதில் கடந்து செல்லும் 'மனபக்குவம்' மனிதம் பெற வேண்டும் அல்லவா?
அதை இன்று மதங்களும், அரசுகளும் செய்கிறதா? இல்லை!
இதுதான் இன்றைய தொல்லை.
இந்த தொல்லையைக் கடந்திட மதம், அரசு சார்ந்த சட்டங்கள் தங்களை புனரமைத்துக் கொள்ள வேண்டும் என்பதே எமது கருத்தும், பதிவும்.
நன்றி.
#
(இது மிக சுருக்கப்பதிவு; முத்தலாக், விவாகரத்து குறித்த முகநூல் நண்பர் ஜெகபதீன் கத்தார்..! க்கு... அவரின் அந்த பதிவும் கீழே தரப்பட்டுள்ளது)
#
8.10.2016 நேர்படப்பேசு விவாதத்திற்கு அளித்த விளக்கம்:
தலாக், தலாக், தலாக் என்று சும்மா மூன்று முறை கூறானால், விவாக ரத்து ஆகாது. இது வீண் பழி. மனமுறிவு ஏற்பட்டால், விவாகரத்திற்கு படிப்படியாகத் தான் செல்ல முடியும்.
1.குடும்பத்தில் உள்ளவர்கள் சமாதானம் செய்வார்கள்.
சரியாகவில்லை என்றால்.
2.ஜமாத்தில்(ஊர் பெரியவர்களிடம்) முறையிடலாம். சமாதானத்திற்கு அவர்களும், திருமண சாட்சிகளும் முயல்வார்கள். இதிலும் சரியாகவில்லை என்றால், ஜமாத்தார்கள் முன்னிலையில் முதல் தலாக் கூறலாம்.
விரும்பினால் ஒரே வீட்டில் பேச்சு வார்த்தை இல்லாமல் வாழலாம். மூன்று மாத இடைவெளியில் இருவரில் ஒருவர் தனது தவறை உணர்ந்து இணைய விரும்பினால் சேர்ந்து வாழலாம். இன்னும் கால அவகாசம் கொடுக்க விரும்பினால், கொடுக்கலாம்.
சரிவர வில்லை என்றால், ஜமாத்தார்கள் முன்னியைில் இரண்டாவது தலாக் சொல்லி விட்டால் பிரிந்துதான் வாழ வேண்டும். அடுத்த மூன்று மாதத்திற்குள் ஒன்று சேர விரும்பினால், சேரலாம். சேர்ந்து பிரிய நேர்ந்தாலும் மூன்றாவது தலாக் மட்டுமே நிலுவையில் இருக்கும்.
3.எதுவும் சரியில்லாத பட்சத்தில் ஜமாத்தார்கள் முன்னிலையில் மூன்றாவது தலாக் கூறி நிரந்தரமாக பிரியவேண்டியதுதான்.
ஒரே நேரத்தில் மும்முறை 'தலாக்' கூறினாலும், போனில் கூறினாலும் அது, முதல் தலாக்காக மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். மீதி இரு தலாக் நிலுவையில் இருப்பதால் விவாகரத்து ஆகாது.
பிடிக்காத கணவனை, மனைவியும் விவாகரத்து செய்யலாம். தலாக் கோரும் உரிமை இஸ்லாத்தில் ஆண் பெண் இருவருக்கும் சமமாக வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், ஒரு சிறிய வித்தியாசம். ஆண் விவாகரத்தை கோரினால் கொடுத்த மகரை திரும்ப பெற முடியாது. முன்பே மகர் கொடுத்த படியால் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டியது இல்லை. பெண் கோரினால் வாங்கிய மகரை ஆணிடம் திருப்ப கொடுக்க வேண்டும். (தலாக் கூறிக் கூறி பல ஆண்களை ஏமாற்றாமல் இருக்க)
இறுதியாக, மூன்று தலாக் கூறி பிரிந்து விட்டலும் கூட சேர்ந்து வாழ சந்தர்ப்பம் உள்ளது. அந்த பெண் வேறு ஒருவரை மணந்து, அந்த கணவரிடம் (முன்பு போல) முத்தலாக் பெற்று பிரிய வேண்டும். அதன் பினபு தான் அந்த பெண்ணை திருமணம் செய்ய முடியும். கூடுமானவரை அநாவசியமாக விவாகரத்து நடக்காமல் இருக்க இப்படி ஒரு நிபந்தனை.
கூடுமானவரை இஸ்லாத்தின் திருமணம் மற்றும் விவாகரத்தை விபரமாக கூறிவிட்டேன் என்று, நினைக்கிறேன். அவசரத்தில் ஏதாவது விடுபட்டு இருக்கலாம். இதில் அரசு தலையீடு இல்லை என்பது கவனிக்க தக்கது.
தேவை இருந்தால், அனைவரையும் சமமாக, எல்லா விடயத்திலும் பராமரிக்க சக்தி இருந்தால் மட்டும், ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேல் நான்கு வரை திருமணம் செய்ய ஆண்களுக்கு மட்டும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. யாரும் செயல்படுத்துவதாக தெரியவில்லை.
தங்களுக்கு தெரிந்த இஸ்லாமியர்களில் எத்தனைப் பேர் தலாக் கூறி உள்ளார்கள், எத்தனைப் பேர் ஒரு மனைவிக்கு மேலாக திருமணம் முடித்துள்ளார்கள்? மனசாட்சியை தொட்டுப் பாருங்கள்.
சட்டத்தை மீறுபவர்கள் எல்லா மதத்திலும் இருப்பது போல இஸ்லாத்திலும் இருக்கலாம். மறுக்க வில்லை. அவர்களைத்தான் குறை சொல்ல வேண்டுமே தவிர, இஸ்லாத்தையோ, சட்டத்தையோ குறை சொல்வது என்ன நியாயம்?
ஆணுக்கோ பெண்ணுக்கோ அநீதியாக இதில் ஏதாவது இருந்தால் கூறுங்கள்.
நன்றி!
முறையாக தலாக் சொல்லப்பட வில்லை என்றால், நீதிமன்றம் குறுக்கிடலாம்.(ஹாஜா கனி அவர்கள் சுட்டி காட்டியது போல)
இதில் ஏதாவது முடத்தனம் இருந்தாலும் , தாராளமாக கூறலாம்.
#
----\\\\
அதிர்ச்சியே..!
#7 நொடிக்கு ஒரு பெண் குழந்தை திருமணம் என்பது நம்பும்படி இல்லாவிட்டாலும், அது அதிர்ச்சியே.
#குழந்தைத் திருமணம் நூறு சதவீதம் சொந்தத்தில், 'சொந்தம் விட்டு'ப் போகக் கூடாதென நடப்பதே.
#மரபின் தொடர்ச்சித்தான். மாற்றத்தின் உந்துதல் என்றால் குழந்தைத் திருமணம் நடக்காதே.
#பெண் குழந்தை பாதுகாப்பு தினம் விவாதம் பாராட்டுக்குரியது.
#இன்றும் 11. 10. 16 PTTV நேர்படபேசு பேசுவில் வீரா, சிலம்பரசன், சிவப்பிரகாஷ் பெயரில் எமது கருத்து பதிவேற்றம் ஆகியுள்ளது.
----\\\\
தலித் மக்கள் மயாணம் ஆக்கிரமிப்பு!
கொலை மிரட்டல்! வருவாய்துறை, காவல்துறை உடந்தை!
சிபிஐஎம் மற்றும் தநாதீஒமு, மாதர் சங்கம்
கடும் கண்டனம்!
சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கொளத்தூர் ஒன்றியம் கருங்கல்லூர் பெத்தான்வளவு என்கிற குக்கிராமம் உள்ளது. இதில் 50 ஆண்டுகளாக 25 க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இம் மக்கள் பயன்பாட்டில் இருந்த குழந்தைகள் மயானம் மற்றும் அனைத்து மக்கள் பயன்பாட்டில் இருந்த செம்மலை ஏரி வாய்க்கால் உள்ளிட்டு இருந்த அரசு நிலத்தை, ஆதிக்க சாதியை சார்ந்த குழந்தையப்பன் கும்பத்தினர் சமூக விரோதிகளை வைத்து அடாவடித்தனம் செய்து, தீண்டாமை கம்பி வேலி அமைத்து ஆக்கிரத்து உள்ளனர்.
குடிநீர் வசதி செய்திட போர்வெல் போட வந்த போவெல் போடும் வாகணத்தைக் கூட திருப்பி அனுப்பி விட்டனர். குடிநீர் தொட்டியையும் தகர்த்து விட்டனர்.
அரை நூற்றாண்டு காலமாக தங்களின் அனுபவத்தில் இருந்த (அருந்ததியர் மக்களின் குழந்தைகள் மயானம் உள்ளிட்டு) சுமார் 8 சென்ட் அரசு நிலத்தைக் கம்பிவேலி போட்டு ஆக்கிரமித்தப் போது, அதை எதிர்த்து நியாயத்தையும், உரிமையையும் கேட்ட அருந்ததியர் மக்கள் மீது அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் தாக்குதல் செய்துள்ளனர்.
இது குறித்து கொளத்தூர் காவல் நிலையத்தில் அக்கிராம மக்கள் புகார் கொடுத்தனர். எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை. இதனால் தற்போதும் இக் கிராம அருந்ததிய மக்கள் அனுதினமும் அச்சத்தின் பிடியிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் 27. 9. 2016 அன்று மேட்டூர் வட்டாட்சியரிமும் மனு கொடுத்து முறையிட்டனர்.
ஆனால் அரசின் வட்ட வருவாய்துறை, கொத்தூர் காவல்துறை உள்ளிட்டு மேட்டூர் வட்ட அரசு நிர்வாகம் தீண்டாமைக்குக் கொடுமைக்கு உடந்தையாகவும், அநீதிக்கு ஆதரவாகவும் இதுநாள் வரை இருந்து வருகின்றனர் என்றே தெரிகிறது.
காவல்துறை மற்றும் வருவாய் துறைகளின் இத்தகைய தலித் அருந்ததிய மக்கள் விரோதச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தகவல் அறிந்து, 11.10. 16 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் ஆர். குழந்தைவேல், மாவட்டத் தலைவர் ஏ.கலியபெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக்குழுச் செயலாளர் பி. தங்கவேலு, மேட்டூர்-கொத்தூர் ஒன்றியச் செயலாளர் லட்சுமிசிதம்பரம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் கே. ராஜாத்தி, மேட்டூர்-கொத்தூர் ஒன்றியச் செயலாளர் தேவி உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையில் உடனே தலையிட்டு, அருந்ததிய-தலித் மக்கள் ஆண்டாண்டு கால உரிமையை நிலை நிறுத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும்; தலித் குழந்தைகள் மயாணம் உள்ளிட்டு அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கொலை மிரட்டல் செய்து வரும் குழந்தையப்பன் குடும்பத்தார் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
---\\\
குடிபோதையில்...
#குடிநீர் லாரிகள் பெரும்பாலும் குப்பை அள்ளும் வண்டி போல் தான் இருக்கின்றது.
#'தண்ணி' லாரிகள் யாவும் 'கன்டிசனின்றி'தான் இருக்கின்றன.
#அரசியல் தலையீடின்றி எதுவும் நகருவதில்லை நம் நாட்டில்.
#குடிபோதையில் ஓட்டுவதும் விபத்துக்கு காரணம்.
#போக்குவரத்து விதிகள் 'தள்ளாடு'வதே 'தண்ணி'லாரிகள் கவிழ்வதும் மூழ்குவதுமாய் இருக்கின்றன.
#சாலைகள் மரண சாலைகளாகவே காணப்படுகிறது. சாலை பராமரிப்பு இல்லாததும் விபத்துக்கு காரணம்.
---\\\
இல்லா காலத்தில்...
தமிழக சமூக சூழலில் திரைப்படங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியே வந்துள்ளன. வருகின்றன.
சமூகத்தில் பிரதிபலிப்பல்ல திரைப்படம். திரைப்படத்தின் பிரதிபலிப்பே சமூகம். இதுதான் தமிழகம்.
திரைப்படங்களே சமூக சீரழிவுக்கு முக்கியக் காரணம்.
நிஜ வாழ்க்கையில் எங்கே பாட்டு பாடுகிறார்கள்? எங்கே திரைப்படத்தில் வருவதுபோல் சண்டை நடக்கிறது? இப்படி நிறைய சொல்லலாம்.
தமிழ் உள்ளிட்டு இந்திய திரைப்படங்கள் பெரும்பாலும் தடைச் செய்யப்பட வேண்டியவைகளே.
திரைப்படம் இல்லா காலத்தில் இத்தகைய சீர்கேடுகள் இருந்ததில்லை.
திரைப்படம் மட்டுமல்ல, அதன் மறுப்பதிப்பாக இருக்கும் தொலைக்காட்சிகளும் அதன் நிகழ்ச்சிகளும், தொடர்களும் முக்கிய காரணமாக இருக்கின்றன.
நடிகர்கள் நிஜ வாழ்விலும் நடிக்க ஆரம்பித்து அனேக வருடங்கள் ஆகிவிட்டன. தற்போது சிவகார்த்திகேயன்.
அத்திப் பூர்த்தாற்போல் ஒரிரு திரைப்படங்களும் நடிகர்களும் சமூக நலனுக்கு உதவிடும் வண்ணம் இருப்பதைப் பார்க்கவும் முடிகிறது. ---\\\
வீரம் விளைவிக்கும்...
வீரம் விளைவிக்கும்... சிலிர்த்தெழ செய்திடும்...
பாடல்! அருமை! பாருங்கள்! கேளுங்கள்!
---\\\
தமிழிசை அம்மாவுக்கு 48 மணி நேர ரயில் மறியல் எதற்கு எனவும், ரயில் பயணிகள் பாதிப்பு வராதா? என வினவி உள்ளார். யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கய்யா!
----\\\\
சுகாதார இன்மை!
மர்மக் காய்ச்சலுக்கு சுகாதார இன்மை!
உயிர் இழப்புக்கு சுகாதார துறை!
சுகாதார இன்மைக்கும், உயிர் இழப்புக்கும் பொறுப்பு தமிழக அரசும், மத்திய அரசும் அவற்றின் கொள்கைகளும்!
எல்லாவிதமான நோய்களுக்கும் அரசுகள் பொது சுகாதார த்தை பேணாமல் அதை தனியாருக்கு தாரை வார்த்ததே!
அரசு மருத்துவமனைகள் செயலிழக்கப்பட்டு, ராஷச தனியார் மருத்துவமனைகள் வானளாவ முளைத்ததே!
மிகப்பெரிய அரசு பொறுப்புகளை அலங்கரிப்போர் அரசு மருத்துவமனைகளை மதிக்காமல் நம்பாமல் தனியார் மருத்துவமனையில் தஞ்சம் அடைவதே!
----\\\
இலங்கை தமிழர் தடவழி...
இலங்கை தமிழர் தடவழியை உறுதி படுத்துக! உரிய பாதுகாப்பு தந்திடுக!
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் தாரமங்கலம் ஒன்றியம் சிக்கம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 1982இல் இலங்கை அகதிகள் மறுவாழ்வு சங்கத்தின் சார்பில் நிலம் வாங்கி கிரயம் செய்து சுமார் 50 குடியிருப்பு கள் கட்டி வாழ்ந்து வந்தனர்.
கடந்த ஒரு வருடமாக இவர்களின் தடவழி பாதையை அடைக்கலயம்மாள் வகையறாக்கள் தடுத்து தொடர்ந்து தகராறு செய்து வருகின்றனர். ஓமலூர் தாசில்தார் அலுவலகத்திலும் தாரமங்கலம் காவல் நிலையத்திலும் பலமுறை முறையிட்டும் தீரவில்லை. அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து வந்தது.
இந்நிலையில், நிலைமைகளை நேரில் ஆய்வு செய்ய சிபிஐஎம் சார்பில் தோழர்கள் சென்றனர். அவர்களை வழிமறித்து மேற்படி வகையறாக்கள் கவிதா, கண்ணன், செல்வி போன்றோர் அச்சில் ஏற்ற முடியா வார்த்தைகளில் திட்டி மிரட்டினர்.
அது குறித்து ஓமலூர் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் தாசில்தார் ஆகியோரிடம் புகார் மனு தரப்பட்டுள்ளது.
ஓமலூர் வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் உடனே தலையிட்டு சட்டப்படியான உரிமையை மீட்டுத் தந்திட வேண்டும் என சிபிஐஎம் சேலம் மாவட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
----\\\\
இடைத் தேர்தலில்....
தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல் ஆளும் கட்சிக்கு சவாலாக இருக்கும்.
எதிர்கட்சிகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரும்.
தேர்தலை பிரதான கட்சிகள் புறக்கணிக்க வாய்பில்லை.
மக்கள் இவ்விரு தொகுதிகளிலும் மக்கள் நலக் கூட்டணிக்கு வாய்ப்பு தர வேண்டும்.
அதிமுக திமுக வெற்றி பெறுவதால் தாக்கம் எதுவும் ஏற்படுத்தாது.
மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்றால் மட்டுமே தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
உள்ளாட்சி தேர்தலில் ஒரு வேளை தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் திமுக வெற்றி பெற்றால்! அவ்வளவே.
கணேஷ் தீஒமு கோவை: 👌👌👌
---\\\
எந்த முட்டாள் சொன்னது?
பாஜக ஆர்எஸ்எஸ் வேறு வேறு என்று எந்த முட்டாள் சொன்னது? இரண்டும் ஒன்றுதான்! நடப்பது ஆர்எஸ்எஸ் ஆட்சி தான் என்று அடித்துக் கூறி விட்டார் அருள்மிகு நாரவாய் நாராயணன் இன்று 18.10.16 காலை pttv புதுப் புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில்... டும் டும் டும்!
----\\\\
பாஜக இரட்டை வேடம்
மத்திய அரசின் வாதம் தமிழகத்திற்கு விரோதமானது. பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது.
பாஜக அரசு தமிழ் மக்கள் விரோத அரசு என்பதை இன்று உயர் நீதிமன்றத்தில் வாதிட்ட வாதத்தின் மூலம் நிருபித்து விட்டது.
கர்னாடக தேர்தலில் ஆதாயம் பெறவே காவிரியில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது.
இங்கே தண்ணீர் வேண்டும் என்பதும் அங்கே தண்ணீர் விடாதே என்பதும், உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்பதும் அப்பட்டமான தமிழகத்திற்கு பாஜக செய்யும் துரோகம்.
[21:28, 18/10/2016] விமலாவித்யா: CASE IS GOING ON IN SUPREME COURT. ----\\\\
பாஜக தான்!
கண்டிப்பாக மதச்சார்பற்றவராக பிரதமர் இருந்திட வேண்டும்.
இந்தியா மதச்சார்பற்ற நாடு அல்லவா?.
பிரதமர் மட்டும் மதச் சார்பாளராக எப்படி இருக்க முடியும்?
தேவையில்லாமல் அரசியல் ஆக்குவது பாஜக தான்!
பெயரை உச்சரிப்பதில் மதம் சார்பு இருப்பதாக அர்த்தப்படுத்துவதும் பாஜகவே.
---\\\
எப்பொழுது..?
ஆம், நீண்ட கால அஜண்டாவான ராமர் கோயில் கட்டுவதை தற்போது தீவிரமாக்கி உள்ளது.
உ. பி. தேர்தலில் பாஜக ஜெயித்தாக வேண்டும் என வெறி கொண்டு அலைகிறது பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும்.
எப்பொழுது ராமர் கோயில் கட்டுவதை கைவிட்டு இருந்தது பாஜக?
ராமர் கோயில் பிரச்னை கீரி பாம்பு சண்டை கதை போல்தான்.
அவ்வளவு சீக்கிரத்தில் அதை தீர்த்துக் கொள்ள விரும்பாது சங் பரிவார்.
அது அனுமான் வால் போல் நீண்டு கொண்டே போகும்.
----\\\\
பொதுத்துறையின் மகிமை!
இன்று 20.10.16 சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், "சேலம் இரும்பாலை யை பொதுறையிலேயே பராமரிக்க வேண்டும் தனியாருக்கு தாரை வார்த்ததே" என்ற தர்ணா போராட்டத்தை வாழ்த்தி உரையாற்றிவிட்டு திரும்பினோம்.
அப்பொழுது அலுவலகம் திரும்பும் போது முல்லுவாடி ரயில்வே கேட்டில்தான் இந்த அரிய காட்சியைக் கண்டோம்.
ரயில் வரும் போது பாதை தடுத்து போடப்படும் கேட் டின் ஒரு பகுதியில், 'தடுப்பு' மேலே உயர வெயிட் இருக்கும் கீழே இறங்குவதற்கு அல்லவா, அந்த வெயிட் டின் இரும்பிலான வட்ட வடிவ வெயிட் களை துண்டு துண்டாக இருப்பதை, கட்டு கம்பிகளைக் கொண்டு கட்டும் காட்சிதான் இது.
பாவம் மோடி அரசும், அதன் ரயில்வே துறையும்! எவ்வளவு ஏழைகளாக இருக்கிறது என்பதை பார்த்தீர்களா? இரும்பு ஆலைகள் பொது துறையில் இருக்கும் போதே இவ்வளவு 'பஞ்சம்!?' என்றால், அது தனியாருக்கு போய்விட்டால், ரயில் வரும் போது பஸ் பயணிகள் இறங்கி சென்று அந்த தடுப்பை இனி தாங்களாகவே தூக்கி பிடிக்க வேண்டிய நிலை என்றால் அது மிகையாகுமா?!
பொதுத்துறையின் மகிமையை நமக்கு உணர்த்தும் பாடம் இதைவிட வேறு சாட்சியும் காட்சியும் வேண்டுமா?
----\\\\
தேர்தல் சீர்திருத்தம்
ஆன்மீகத்திற்கும் அரசியலுக்கும் என்ன சம்மந்தம்?
அரசியலில் ஆன்மீகம் கலப்பதும், ஆன்மீகத்தில் அரசியல் கலப்பதும் தான் நம் நாட்டின் சிக்கலே.
அரசியலும், ஆன்மீகமும் அதனதன் பாதையில் ஒன்றுடன் ஒன்று கலவாமல் பயணிப்பதே நாட்டுக்கு என்றும் நல்லது.
தேர்தல் சீர்திருத்தம் தேவைதான்.
அது சாமானியனும் நின்றிட வகை செய்திட வேண்டும்.
தமிழகத்தில் பணம், பரிசு, சாதி க்கு முடிவு கட்டும் சீர்திருத்தம் தேவை.
----\\\\
உணவுக்கு...
பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்களோ இல்லையோ விளைநிலங்கள் பாதுக்காக்கப்பட வேண்டும். அதற்கு இந்த உத்தரவு பயன்பட்டால் நன்று.
ரியல் எஸ்டேட் கொள்ளை கட்டாயம் தடுக்கப்பட்டே ஆகவேண்டும்.
விளைநிலங்கள் மனைநிலங்கள் ஆவது நாட்டுக்கு ஆபத்து. உணவுக்குக் கையேந்த வேண்டும்.
விளைநிலங்கள் மனைநிலங்கள் ஆவதே அரசுகளின் விவசாயிகள் விரோதக் கொள்கைகளே. இதுவும் மாறினால் தான் விளைநிலங்கள் பாதுகாக்கப்படும். விவசாயிகளும் பட்டினி சாவில் இருந்து பாதுக்கப்படுவர்.
இந்த சட்டம் அன்னிய நில திமிங்கலங்களுக்கு பயன்படா வண்ணம் அமைந்திடல் அவசியம்.
மக்களுக்கான வீட்டுமனை பயன் பாட்டுக்கு அரசு உரிய முறையில் விவசாயம் பாதிக்கா வண்ணம் வழிவகைகளை உருவாக்க வேண்டும்.
---\\\
ப்புல்பேன்ட் பாய்ஸ்?
*பசுமாடும், பாபரும், சேதும் எந்த நம்பிக்கையில் வருகிறது
ப்புல்பேன்ட் பாய்ஸ்?*
#
"தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்
தீண்டத்தகாதவர் என்பது என்னுடைய நம்பிக்கை என்று ஒருவர் கூறுவாரேயானால், அதனை தனிப்பட்ட சுதந்திரம் என விட்டுவிட முடியுமா? அதுபோலத்தான் 'தலாக்' விவகாரத்தையும் அணுக வேண்டும்"
என்கிறார் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். (தினமணி 21.10.16)
இதை கேட்கிறபோது பருத்தியே புடைவையாக காய்த்த மாதிரி ஒரு உணர்வு ஏற்படும்! மகிழ்ச்சி தவழும்!
நமக்கு ஒரு டவுட் வந்து தொலைக்கிறதே ப்புல்பேன்ட் பாய்ஸ்!
பசுமாடு தெய்வம் என போற்றப்படுதும், அதன் மாமிசத்தை சாப்பிட்ட தலித்களை அடித்து கொன்றதும் என்ன நம்பிக்கை?அது மதம் சார்ந்த நம்பிக்கை இல்லையா ப்புல்பேன்ட் பாய்ஸ்? அதெற்கெல்லாம் சட்டம் என்ன சொல்கிறது ப்புல்பேன்ட் பாய்ஸ்?
அப்புறம் ராமர் பாலமென சேது கால்வாய் திட்டத்தை கெடுத்ததும், ராமர் பிறந்த இடமென பாபர் மசூதியை இடித்ததும் எல்லாம் எந்த நம்பிக்கையில் பஃபுல்பேன்ட் பாய்ஸ்?
ஓ..!
பசுமாடும், பாபரும், சேதும் எழுந்து போய் சுப்ரீம் கோர்ட்டில் பெட்டிஷன் போடணுமா ப்புல்பேன்ட் பாய்ஸ்!?
---\\\
வங்கிதான்...
மக்கள் பணத்திற்கு வங்கிதான் பொறுப்பு!
டெபிட் கார்டுகளை திரும்ப பெறுவதல்ல முக்கியம். பணம் பாதுகாப்பு தான் முக்கியம்!
மின்னணு வாக்குப்பதிவுக்கு பதிலாக மீண்டும் வாக்கு சீட்டு கோருவதும் போல் தானியங்கி ஏடிஎம் களுக்கு பதில் மீண்டும் வங்கிகளில் சென்று பணம் பரிவர்த்தனை செய்ய வேண்டியதுதான்.
ஏடிஎம் டெபிட் கார்டு பாதுகாப்பு இல்லை எனில் பழைய முறைக்கு போக வேணடும்.
----\\\
நிலம் ஒரு பிரச்சினையாக இருக்காது. மாநில அரசின் மெத்தனமும் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனபோக்குமே இருக்கும்.
தனியார் கம்பெனிகளுக்கு நிலத்தை வாரி வாரி வழங்கும் மாநில அரசு இம்மருத்துவமனை அமைக்க நிலம் கையகப்படுத்தித் தராத மர்மம் புரியவில்லை.
AIIMS போன்ற தரமிக்க அரசு மருத்துவமனை அமைவதில் சென்னையில் உள்ள பகாசூர தனியார் மருத்துவமனைகளின் 'செல்வாக்கு' தமிழக அரசு மீது இருக்குமென்றே தோன்றுகிறது.
----\\\
இரண்டுமே
அரசியல் இன்றியோ அரசியல் நோக்கம் இன்றியோ எந்த அரசியல் கட்சியும் செயல்படாது.
கட்சிகளின் செயல்பாடுகள் நோக்கமுடையதே! அதில் கட்சி நலனும் இருக்கும். மக்கள் நலனும் இருக்கும்.
அதற்கு திமுக மட்டும் விதிவிலக்கா என்ன!?
ஒவ்வொரு கட்சியும், கூட்டணியும் அதனதன் முடிவுக்கும் ஏற்பவே செயல்படும்.
இவ்வளவு நாளும் பொறுமையாக இருந்த திமுக தற்போது அனைத்து கட்சி கூட்டம் நடத்துவது ஏன்?
ஜனநாயகத்தில் முரண்பாடு சகஜம்தானே! முரண்பாடு ஜனநாயகத்தில் ஏற்புடையது தானே!
ஒரு பிரச்சனையில் ஒரு கட்சியின் நிலைப்பாட்டை அனைத்து கட்சிகளும் ஏற்க வேண்டும் என்பது ஜனநாயகமா? சர்வாதிகாரமா?
ஒத்து போவதில் ஒத்து போகலாம், மாறுபாடு உள்ளதில் மாறுபடுவது தவறில்லையே!
காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் பாஜக இரண்டுமே குற்றவாளிகள்.
காங்கிரஸ், பாஜகவை வைத்து- மறைமுகமாகவோ நேரடியாகவோ பல சமயங்களில் அதிமுக திமுக காவிரி சிக்கலில் அனுசரித்து சென்றவைகளே!
[22:25, 24/10/2016] எஸ்ஏஆர் ஈரோடு: ஆகவே திமுக நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்வது எதிர்கால மாற்று அரசியலுக்கான நம்பிக்கையை வலுப்படுத்தாது..காவிரிப் பிரச்சனையை சிக்கலாக்கிய நால்வரில் ஒருவர் கூட்டும் கூட்டமிது..
[22:33, 24/10/2016] கணேஷ் தீஒமு கோவை: அப்படியானால் அரசு கூட்டியிருந்தாலும் கலந்து கொள்ள முடியாதே. ?? அதுவும் நால்வரில் ஒருவர் தலைமையில்தானே அமைந்திருக்கிறது..!!
[22:35, 24/10/2016] தாரைப்பிதா: மொத்தத்தில் இடியாப்பம் சிக்கலில் காவிரி சிக்கல் தமிழகத்தில்!
[22:37, 24/10/2016] கணேஷ் தீஒமு கோவை: உண்மைதான். அரசு அதைச் செய்யாத நிலையில் பிரதான எதிர்க்கட்சிதான் இத்தகைய வேலைகளைச் செய்ய வேண்டும். என்ன செய்வது.. திமுகதான் அந்த இடத்தில் இருக்கிறது..
[22:38, 24/10/2016] எஸ்ஏஆர் ஈரோடு: சரிதான்.ஆனால் அதிமுக நடத்தும் என்றில்லாமல் அரசாங்கம் நடத்துவதாக அமையும் தோழர். நால்வரில் ஒருவராக அதிமுக இருந்தாலும் அரசு நிர்வாக பொறுப்பில் இருப்பது அவர்களின் செயலுக்கு நியாயம் கற்பித்துவிடும்
[22:39, 24/10/2016] கணேஷ் தீஒமு கோவை: எதிர்க்கட்சித் தலைவர் அமைச்சர் அந்தஸ்து கொண்டவர்தானே..?
[22:41, 24/10/2016] எஸ்ஏஆர் ஈரோடு: இருக்கலாம் கூட்டத்திற்கான அழைப்பு திமுக விடமிருந்து நடக்கும் இடம் அறிவாலயம் தோழர்
[22:44, 24/10/2016] கணேஷ் தீஒமு கோவை: வேறெங்கு நடத்துவது..?
[22:45, 24/10/2016] எஸ்ஏஆர் ஈரோடு: எதிர் கட்சி தலைவர் அலுவலத்தில் நடத்தட்டும்
[22:47, 24/10/2016] தாரைப்பிதா: திமுக தற்போது நடத்துவதில் நோக்கம் இருக்கிறதா? இல்லையா? என்பதே மைய கேள்வி. மற்றப்படியான விவாதம் தனி.
[22:48, 24/10/2016] கணேஷ் தீஒமு கோவை: அப்படி நடத்தினால் பங்கேற்கலாமா.. அங்கு போதுமான இடம் இருக்கிறதா..?
[22:48, 24/10/2016] கணேஷ் தீஒமு கோவை: நோக்கம் இருக்கிறது..
[22:52, 24/10/2016] எஸ்ஏஆர் ஈரோடு: கண்டிப்பாக பொது நோக்கம் இருப்பதற்கான வாய்ப்பு குறைவுதான் இடைத் தேர்தல் வேட்பார்களை அறிவித்த கையோடு அழைப்பு விடுக்கிறார்கள். அனைத்து கட்சி கூட்டத்தை அரசாங்கம் நடத்த நிர்ப்பந்தம் உருவாக்க வேண்டும் தோழர்
[22:52, 24/10/2016] தாரைப்பிதா: தோழரே, அரசும் ஒரு கட்சியின் கருவிதான். என்றாலும் அதை கட்சி நடத்துவதாக பார்க்க முடியாது. ஆனால் எதிர் கட்சி நடத்துவது அரசின் அங்கமாக கொள்ள முடியாதல்லவா?
[22:54, 24/10/2016] எஸ்ஏஆர் ஈரோடு: PT சொல்வது சரி
[22:56, 24/10/2016] கணேஷ் தீஒமு கோவை: தனிமைப்படுவது அதிகரிக்கும்..
[23:00, 24/10/2016] எஸ்ஏஆர் ஈரோடு: அதனால் அரசு அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்ற முழக்கத்தை அனைத்து தரப்பினரின் குரலாக எதிரொலிக்க செய்ய வேண்டும்.காரம் இடியாப்ப சிக்கலை தீர்க்கும் வலிமை நமக்கில்லை.அதே சமயம் திமுக வின் தந்திர வலையில் நாம் சிக்கி கொள்ள வேண்டியதில்லை
[23:02, 24/10/2016] தாரைப்பிதா: அரசு நடத்தி புறக்கணித்தால் மட்டுமே தனிமை படுவதுபோல் தோன்றும். இதில் அப்படி வருவதற்கான வாய்பே இல்லை. இது முழுக்க முழுக்க அதிமுக திமுக பாலிடிக்ஸ் என்பதை மக்கள் அறிவர்.
[23:04, 24/10/2016] எஸ்ஏஆர் ஈரோடு: ஏற்கெனவே அப்படித்தான் இருக்கிறோம்.திமுக வோடு இணைந்து செயல்படுவதின் வாயிலாக தனிமை போய்விடாது தோழர்
[23:04, 24/10/2016] தாரைப்பிதா: பயனுள்ள விவாதம்.
பொறுத்திருந்து பார்ப்போம்.
[23:05, 24/10/2016] எஸ்ஏஆர் ஈரோடு: நன்றி தோழர் PT
[23:23, 24/10/2016] எஸ்ஏஆர் ஈரோடு: எதிர் கட்சித் தலைவரும் அரசாங்கம் அனைத்து கட்சி கூட்டம் நடத்த நிர்ப்பந்தம் செய்யட்டும்.
---\\\
அழுத்தம் தவறாது
திமுக கூட்டிய கூட்டம் மத்திய அரசுக்கும் அழுத்தம் தவறாது, மூன்று சட்டசபை இடைத்தேர்தலுக்கும் கை கொடுக்காது.
திமுகவிற்கு பொதுத்தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் கண் மக்கள் நலக் கூட்டணி மீதுதான்.
ஆளும்கட்சி எதிர்கட்சி கூட்டும் கூட்டத்தில் பங்கேற்கும்? இது எந்த உலகில் நடக்கும்.
ஆளும் கட்சி இல்லாத கூட்டம் எப்படி அனைத்து கட்சி கூட்டமாகும்.
அதிமுக போன்ற ஆளும்கட்சி அமெரிக்காவில் கூட கிடையாது. அவ்வளவுக்கு இறுமாப்பில் இருக்கிறது அதிமுக தமிழகத்தில்.
இடைத்தேர்தலில் ஆதாயம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் தான் திமுக இந்த கூட்டத்தைக் கூட்டியதே தவிர வேறு ஒன்றும் இல்லை.
காவிரிக்கு கண்ணீர் வடிப்பது போல் ஒரு தோற்றமே இது. தமிழ் சினிமாவில் வரும் போலீஸ் போன்றது இந்த கூட்டம்.
சுப்ரீம் கோர்ட்டில் பாஜக பல்டி அடித்த தருணத்தில் கூட்டி, தமிழகத்தை தட்டி எழுப்பி இருந்திருக்க வேண்டும்.
இது காலம் கடந்த நடவடிக்கை. இதனால் காவிரில் நீர் வரப்போவதில்லை.
----\\\
உண்மை இருக்கவே...
ஸ்டாலின் பேச்சில் மேலோட்டமான உண்மை இருக்கவே செய்கிறது.
ஆம், 3 சட்டமன்ற இடைத்தேர்தல் சில கட்சிகளை இன்றைய கூட்டத்தில் பங்கேற்க செய்யாமல் செய்திருக்கிறது.
அதிமுகவும் 18ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் அதிசயம் நிகழும் என எதிர்ப்பார்த்து ஏமாந்த அதிர்ச்சியில் இருக்கிறது.
இதில் இருந்து மீள்வதற்குள், மத்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்து, திசையைத் திருப்பிவிட்டு விட்டது.
பாஜக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், தமிழ் மக்களை ஏமாற்றியதை, இழைத்த துரோகத்தை இடைத்தேர்தல் அறிவிப்பால், தற்காலிகமாக மக்கள் கண்களில் மண் துவியுள்ளது.
இடைத்தேர்தலுக்குப்பின் நிச்சயம் காவிரிப் பிரச்சினையில் தமிழகம் முழ்கவேச் செய்யும்.
ஆளும் அதிமுக முன்கை எடுக்காமல் இனிமேலும் சட்டத்தை நம்பி இருந்தால், அது தமிழ் மக்களுக்கு செய்யும் நம்பிக்கை துரோகம்.
அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைப்பதை அதிமுகவும் தமிழக அரசும் இனியும் செய்யத் தவறினால், வெற்றிடத்தைக் காற்று (திமுக) நிரப்பவே செய்யும்.
அதிமுக கூட்டணிக்கும், திமுக கூட்டணிக்கும் மக்கள் ஆதரவு 1% மட்டுமே வித்தியாசம் என்பதை அதிமுக உணர வேண்டும்.
இன்று பங்கேற்காத கட்சிகள் காவிரி பிரச்சனையில் நாளையும் பங்கேற்காமல் இப்படியே இருக்கும் என்று உறுதியாக கூறமுடியாது.
ஏனெனில் இது தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சனை.
[21:57, 25/10/2016] விமலாவித்யா: Very practical assessment and approach... correct... Vimalavidya
[22:00, 25/10/2016] +91 94865 96641: நன்றி! தோழரே?
[22:01, 25/10/2016] விமலாவித்யா: PEOPLES welfare front has to strengthen it's presence and strength...
---\\\
பல்நோக்கிலும்
பல்கலை கழகம் என்றாலே பல்நோக்கிலும் கட்டணம் வசூலித்து கொள்ளலாமென அர்த்தம் தான்.
இதில் பொய் சொல்வதற்கு அவசியமென்ன இருக்கிறது?
அரசும் சரி, தனியாரும் சரி கட்டணக் கொள்ளையில் சளைத்தவர்கள் அல்ல.
தமிழக அரசு இதை எல்லாம் கண்டு கொள்ளவோ கட்டு படுத்தவோ ஏது நேரம்?
அமைச்சர்களுக்கு அலகு குத்த, மண்சோறு சாப்பிட, பன்னீர் கடும், பால்குடம் புஷ்ப காவடி எடுக்கவே நேரம் கிடையாது.
இந்த அன்னக்காவடிகளின் பிரச்னையை கவனிப்பதா அரசின் பணி?
என்று தீருமோ இந்த அடிமை மோகம்?!
மாணவர்களின் போராட்டம் இன்னும் வலுவாகி, அரசு செவிப்பறையை கிழித்தால் ஒழிய கட்டணக் கொள்ளையை தடுக்க முடியாது.
----\\\\
கண்டிக்கத்தக்கது
யாழ் பல்கலை மாணவர் சுட்டுக்கொலை வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பட்டக்காலே படும், கெட்டக் குடியே கெடும் என்பது இதுதானோ?
இலங்கை அரசின் கொலைவெறி இன்னும் அடங்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.
இந்திய அரசு இதை கண்டித்து அறிக்கை வெளியிட வேண்டும். செய்யுமா?
அறிக்கை வெளியிட்டால் தமக்கு வம்பு வந்து சேருமென விட்டுவிடுமா?
இலங்கை தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பை மத்திய அரசு தனது ராஜிய உறவை பயன்படுத்தி உறுதிப்படுத்திட வேண்டும்.
----\\\
அநீதிகள்...
அரசுக்கு தெரிந்தேதான் அநீதிகள் நடக்கிறது. ஆம்னி பஸ் கட்டண கொள்ளையும் அப்படித்தான்!
ஆம்னி பஸ் முதலாளிகளின் அரசுதானே இது.
அரசு கட்டண விகிதம் வெளியிட்டது வெறும் கண்துடைப்பு.
அரசு பஸ் அதிகமாக விடாது. அப்படி விட ஆம்னி பஸ் ஓனர்ஸ் அனுமதிக்க மாட்டார்கள்.
அரசுகள் சமூக நலன் சார்ந்தவற்றில் இருந்து விலகி ரொம்ப தூரம் சென்றுவிட்டன.
அதிகாரிகள் அமைச்சர்களை விஞ்சி வெகுதூரம் சென்றுவிட்டனர் ஊழலில்!
அமைச்சர்கள்+அதிகாரிகள்=கூட்டுக்கொள்ளையே>தமிழகம். அதனால் ஆம்னி என்ன... அம்மிகூட லஞ்சமின்றி அசையாது தமிழகத்தில்!
பேருந்துகளை அதிகரிப்பதும், கட்டணங்களை முறைப்படுத்துவதும் தமிழக அரசு செய்தால், அது அதிசயம்!
----\\\\
ஆட்சேபிக்கத் தக்கது
ஆதார் அட்டை பெறும் பேஜார் அட்டையாக மாறிவிட்டது.
அரசு வேண்டும் என்கிறது, கோர்ட்டு வேண்டாம் என்கிறது, நமக்குதான் தலை சுற்றுகிறது.
ஆதாரில் தனியார் நுழைந்து விளையாடி வருகிறார்கள்.
தற்போது தனியார் நிறுவனங்கள் தான் அங்கம் மச்சம் அடையாளங்களை, கண் காது, மூக்கு தொண்டை களை அதன் ரேகைகளை ஸ்கேன் செய்து அனுப்பி வருகிறது.
தனிநபர் ரகசியங்கள் திருடப் படுகின்றன பகிரங்கமாக என்பது தான் உண்மை!
அரசின் செயல்பாடு அச்சம் தருகிறது. ஆட்சேபிக்கத் தக்கது.
அதார் பற்றிய முன்பின் தகவல் வருகின்றன.
அரசும் மவுனம் காப்பதுபோல் பாவலா செய்து கொண்டு, ரேஷன் கடைகளில் ஆதாரை கட்டாயம் ஆகிவிட்டது.
ஆதாரு இல்லை என்றால் அரிசி இல்லை ரேசன் கடைகளில்!
---\\\
கரியாக்குவதே...
மகிழ்ச்சியின் வெளிப்பாடுக்கு எவ்வளவோ இருக்கிறது. இது காசைக் கரியாக்குவதே.
பட்டாசு வெடிப்பது தேவையற்றது. வீண். இதன் தொழிலும், இதை வெடிப்பதும் ஆபத்து மிக்கது.
இதை தடைச்செய்வது எம்மைப் பொருத்தவரையில் நன்று. மகிழ்ச்சி.
இத்தொழிலில் ஈடுபடுவோருக்கு மாற்று ஏற்பாடுகளைக் கண்டறிந்திடல் அவசியம்.
இது தமிழர் பண்பாட்டு விழாவே அல்ல. தமிழர் மீது திணிக்கப்பட்ட விழாக்களில் இதுவும் ஒன்று.

No comments:
Post a Comment