காவித்தினமணியை நினைந்துவிட்டால்..!
இன்று 5.9.16 தினமணியில் மதி யின் கெடுமதியான கார்டூன் என்கிற பெயரில் ஒரு கட்டுரையே எழுதியிருக்கிறார்! அதில் சிபிஐஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் எச்சூரி "பிரச்சனை அரசியல் ரீதியாக பேசி தீர்வு காணுங்கள்" என்றதை 'பாகிஸ்தான் யாருடன் பேசுவது?' என பட்டியலிட்டுள்ளார் மதி!
கேலிச்சித்திரம் வரைவது சம்மந்தப்பட்ட வர்களும் உணரும்படி, ரசிக்கும்படி இருப்பதுதான் அதன் நியதி! ஆனால் இந்த 'மதி'க்கு அதெல்லாம் கிடையாது!
'நெஞ்சு பொறுக்குதிலையே- இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்..!' என அரிவாள் சுத்தியல் படத்திலிருந்து ரத்தம் சொட்டுவது போலவும், சிதர்வது போலவும் போட்டு அகமகிழ்ந்து உள்ளார் மதிக்கெட்ட மதி!
அதை தினமணியும் வெளியிட்டு தன் ஆர்எஸ்எஸ் விசுவாசத்தைக் காட்டிக் கொண்டியிருக்கிறது! இது கேலி சித்திரம் என்கிற பெயரால் வெளியிட்டு இருக்கும் வக்கிரச்சித்திரம்! இது வன்மையாக கண்டிக்கத்தக்கது!
இந்தியாவிற்கும், இந்திய பாதுகாப்புக்கும் 'தேசபிதா'வையே கொன்றது முதல் இந்நாள் வரை 'கொலைகார அரசியல்' நடத்தி வரும் இந்த காவிக்கும்பலுக்கு என்ன யோகியதை இருக்கிறது கம்யூனிஸ்ட்களை தரமற்ற வகையில் விமர்ச்சிக்க!?
பேசாமல் தினமணி இன்று முதல் பாஜக பத்திரிக்கை என அறிவித்து விடுங்களே... தினமணி நிர்வாகமே! அது கட்சி பத்திரிக்கை அப்படித்தானிருக்கும் என மக்கள் கடந்து சென்றுவிடுவார்கள்!
பாஜக அரசு செய்வதை எல்லாம் கண்களை மூடிக்கொண்டு ஆதரித்தால்தான் தேசபற்றா? கேள்வியே கேட்கக்கூடாதா? இந்தியா அரசா? நடப்பது ஜனநாயக ஆட்சியா? அல்லது பாகிஸ்தான் போன்று ராணுவ ஆதிக்கம் கொண்ட சர்வாதிகார அரசா? அதற்கு பிரதமர் முதலில் விடை அளிப்பாரா? அல்லது மதியின் மதி பேசுமா?
"எவ்விதமான முறையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்பட்டது? அதனால் ஏற்பட்ட விளைவு என்ன?" போன்ற அறிக்கையை வெளியிட மறுப்பதையே மக்கள் சந்தேகிக்கிறார்கள்! இதிலே எங்கே தேசதுரோகமோ பாகிஸ்தான் ஆதரவோ இருக்கிறது?
பாகிஸ்தான் நாம் தாக்குதல் நடத்திய பகுதியில் சர்வதேச நிருபர்களை அழைத்துச் சென்று காண்பித்து, "அப்படி ஒரு தாக்குதலே நடத்தவில்லை என்கிறது'! புதுதில்லி முதல்வர் கெஜ்ரிவாலும், காங்கிரஸ் கூட தற்போது அது குறித்து கேள்வி எழுப்பி உள்ளதே!
பாகிஸ்தான் அரசை சீனா மட்டுமா ஆதரிக்கிறது? அமெரிக்கா ஆதரிக்கவில்லையா? மோடி அரசின் மதவாத போக்கை அமெரிக்கக் கண்டித்து தன் கருத்தை சொன்னதே இல்லையா?
சுதந்திரப்போரில் மக்களை தட்டி எழுப்பிய தினமணி எங்கே? மதவாத அரசியலுக்கு வெஞ்சாமரம் வீசும் இன்றைய தினமணி எங்கே? ஆம்! நெஞ்சு பொறுகுதில்லையே இந்த காவி பயங்கரவாதத்திற்கு வக்காலத்து வாங்கும் இந்ந இன்றைய காவிதினமணியை நினைந்துவிட்டால்..!?
"தேசபக்திக்கு யாரும் கம்யூனிஸ்ட்க ளுக்கு பாடம் எடுக்க தேவையில்லை" என நாட்டின் சுதந்திரத்திற்குக் தூக்குக்கயிற்றை முத்தமிட்ட பகத்சிங்கின் வாரிசுகளாகிய நாம் சொல்லி வைப்போம்! காலம் பதில் சொல்லும் காவிக்கும்பலின் போலி தேசபக்திக்கு!?
[11:12, 5/10/2016] +91 94899 25888: சாத்தான் வேதம் ஓதுகிறது
[11:12, 5/10/2016] +91 94899 25888: சாத்தான் தினமணி வேதம் ஓதுகிறது
---\\\
கோயாபல்ஸ் சூரர்கள்...
சொன்னதைச் சொல்லவில்லை என்பதும், ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி மெய் என நம்ப வைப்பதும் தான் "கோயாபல்ஸ்" பாணி வேலை என்பது! அதுதான் இந்துத்துவா பாசிசம்! இதற்கு இன்னொரு பெயர்தான் குஜராத் மாடல் என்பது! இதில் கைதேர்ந்தேர்ந்தவர்கள் பாஜக போர்வையில் இருக்கும் ஆர்எஸ்எஸ் விஹெச்பி சூரர்கள்!
நூற்றுக்கு நூறு உண்மை!
*ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருப்பதால்தான் ஆணையராக இருக்கிறார்!
*எதிர்கட்சிகள் புகார் நூற்றுக்கு நூறு உண்மை!
*மாநில தேர்தல் ஆணையர் இந்த ஆட்சியில் இருந்தாக வேண்டும்! எதிர்கட்சிகளுக்கோ அல்லது ஆளும் கட்சிக்கு எதிராகவோ அல்லது நியாயமாகவோ நடந்தால் அவருக்கு அவரின் பதவி அற்ப ஆயுசு ஆகிவிடும்!
*மத்திய தேர்தல் ஆணையமே இதையும் நடத்தினால் ஒருவேளை கொஞ்சம் நேர்மையாக நடக்கக்கூடும்!
*பரிசும், பணமும் வாக்காளர்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது!
*மக்கள் நலக் கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும்!
---\\\
ஆளுமையல்ல...
*ஆளுமையல்ல... மதவெறியும் அராஜகமும்!
*கோவையில் நடந்தது இந்து முன்னணியின் கொலைவெறி ஆட்டம்!
*கொலையைக் கண்டிப்பவர்கள் கொள்ளை அடிப்பதும், தீ வைத்து கொளுத்துவதும், சூறையாடுவதும் எதற்கு? ஏன்?
*ஓட்டு அரசியலை முன்நிறுத்தியே இந்துமத வெறியர்களின் இந்த கொலைவெறி கொள்ளைவெறி!
*இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
*இதிலே தமிழக அரசும் காவல்துறையும் வேடிக்கைப் பார்த்ததும், துணையாக நின்றதும் கேவலமும் கொடுமையும்!
*இடதுசாரிகள் (சிபிஎம் சிபிஐ) உள்ளிட்டு ஜனநாயக கட்சிகள் (திமுக, காங்கிரஸ், விசிக) உடனே களம் இறங்கி மதவெறிக்கு எதிராக குரல் கொடுத்தது ஆறுதல்.
*இன்று 26.9.16 சத்யம் டிவிக்கு!
அதிசயம்! ஆனால் உண்மை!
நேர்மையான முதல்வர்
இந்தியாவில் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களைக் கூட விட்டு விடுவோம்....
ஒரு வார்டு கவுன்சிலர் ஒரு முறை பதவியில் இருந்தால் குத்து மதிப்பாக எத்தனை லட்சங்கள், எத்தனை கோடிகள் சம்பாதிப்பார் என்பதையே நம்மால் கணக்கிட முடியாது. ஆனால் மூன்று முறை திரிபுரா மாநில முதலமைச்சராக இருந்த ஒருவரது மொத்த சொத்தின் மதிப்பு வெறும் 10,800 ரூபாய்தான் என்றால் நம்பமுடிகிறதா?!!!!?
அவருக்குச் சொந்தமாக வீடோ, வாகனமோ, செல்போனோ கிடையாது என்றால் நம்புவீர்களா? வேறொரு நாட்டில் இருக்கும் யாரோ ஒருவரைப் பற்றிச் சொல்லும் இன்டர்நெட் செய்தி இல்லை இது. நமது பாரத நாட்டின் வட உச்சியில் உட்கார்ந்திருக்கும் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் மாணிக் சர்க்கார்தான் அந்த உத்தமர்.
தற்போது 64 வயதாகும் மாணிக்சர்க்கார் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த முழு நேர ஊழியர். 1981 இடைத்தேர்தல் மூலம் எம்.எல்.ஏ ஆனவர். 1998ல் திரிபுராவின் முதல்வரானவர். மூன்று ஐந்தாண்டுகள் முதல்வராய் இருந்த அவர், சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று நான்காம் முறையாக முதல்வராகியுள்ளார்.
அதிலும் கடந்த தேர்தல்களைக் காட்டிலும் கூடுதல் சீட்டுகள் பெற்றும், அவரது தொகுதியில் கூடுதல் வாக்குகள் பெற்றும் முதல்வர் பதவியைத் தக்க வைத்திருக்கிறார். சமீபத்தில் நடந்த தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தபோது தனது சொத்துக் கணக்கை வெளியிட்டார்.
அவரின் மொத்த சொத்தின் மதிப்பே ரூ.10,800-தான். மனைவி, பிள்ளைகள் பேரில் சொத்தை குவித்திருப்பாரோ என்று குறுக்கே சிந்திக்க வேண்டாம்.
அரசு ஊழியராய் இருந்து ஓய்வுபெற்ற அவரது மனைவி பாஞ்சாலியின் மொத்த சேமிப்பு ரூ 46,000-தான்.
இந்தத் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. சொந்த வீடோ, வாகனமோ கிடையாது. சொந்த வேலையாக வெளியே போனால், ஆட்டோ ரிக்ஷா பயணம்தான்.
சர்க்காரின் அரசு காரில், சுழலும் சிவப்பு விளக்கும் கிடையாது. முதலமைச்சருக்கு என்று ஒரு சம்பளம் உண்டல்லவா?அதையும் கட்சிக்குக் கொடுத்து விடுகிறார் சர்க்கார். கட்சி பார்த்து அவருக்கு மாதச் சம்பளம் ரூ 5000 தருகிறது.'இந்த பணமும் எனது மனைவியின் பென்சனும் எங்கள் எளிய வாழ்க்கைக்குப் போதுமானது' என்கிறார் மாணிக் சர்க்கார்.
‘தினமும் காலை, அவர் உடுத்தும் உடைகளை அவரே துவைத்து போட்டு விட்டுத்தான் வெளியே கிளம்புவார்’ என்று தனது கணவர் பற்றி கூறுகிறார் பாஞ்சாலி...‘எனது வெட்டிச் செலவு என்று பார்த்தால் தினசரி ஒரு சிறிய மூக்குப் பொடி மட்டை, ஒரு சிகரெட்தான்’ என்று முன்பு ஒருமுறை வெள்ளந்தியாய் கூறிய சர்க்கார்: தற்போது அந்தப் பழக்கங்களையும் விட்டுவிட்டார்.
2009ல் சர்க்காரின் அம்மா மறைந்த போது, பூர்வீக வீடு ஒன்று அவருக்கு வந்து சேர்ந்தது. வாரிசு இல்லாத தனக்கு அந்த வீடு தேவையில்லை என்று கூறி, தனது தங்கைக்கு அந்த வீட்டைக் கொடுத்து விட்டார் சர்க்கார். சர்க்காரின் அப்பா ஒரு சாதாரண டெய்லர். ஆனாலும் 60களின் இறுதியிலேயே சர்க்காரை மேற்குவங்காள பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிக்க வைத்தார் அவர்.
சர்க்காரின் குடும்பத்தினர், உறவினர்கள் எல்லோருமே சராசரி நடுத்தர வர்க்கத்துக்கும் கொஞ்சம் கீழே உள்ள குடும்பங்கள்தான்.
நண்பர்களே... இந்த உத்தமர், நம் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வில்லையே!!!
பொறாமை கொள்ளுங்கள் நண்பர்களே... இவரைப் போல நம்மால் இருக்க முடியவில்லையே என்று!!!
(இது வலையில் படித்ததில் ''பிடி''த்தது!)
---\\\
நூறு சதவீதம் நேர்மையாக...
'மாறும் கூட்டணி கணக்குகள்' என்றால் அதிமுக திமுக கூட்டணி அமைக்கின்றனவா?
எந்த கூட்டணியும் நூறு சதவீதம் நேர்மையாக இருப்பதில்லை உள்ளாட்சி தேர்தலில்!
உள்ளூர் தாய்ப்பிள்ளை மாமன் மச்சான் சாதி அதுஇதுன்னுத்தான் போகுது! இது ஒரு கசப்பான உண்மை!
கட்சி சொந்தம் சாதி தாண்டி பணத்திற்கும் பரிசுக்கும் வாக்காளர்கள் அடிமையாகி வருவது சோகத்திலும் சோகம்!
ஒருநாள் கூத்தாக மக்கள் பார்ப்பது அகன்று அய்ந்தாண்டு எதிர்கால நல்வாழ்வு என பார்க்கப்படும் விழிப்புநிலை வரவேண்டும்!
ஓட்டுக்கு பரிசு பணம் தருவோரைப் பிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும்!
மக்களும் பரிசு பணத்தை நிராகரித்து உள்ளூர் அளவில் நல்லவர்களையும் மக்கள் நலக் கூட்டணியையும் ஆதரிக்க வேண்டும்!
நல்லவர்கள் தேர்தலில் குதிக்க வேண்டும்! பயம் கொள்ளல் ஆகாது! கூடாது! ---\\\
ஒருவேளை...
ஆளும், எதிர் கட்சிகளின் பலத்தை நிருபிக்க நியாயமான தேர்தல் நடத்தவேண்டும்! நடக்குமா? நடத்தப்படுமா? நடக்காது!?
ஒருவேளை விகிதாசார தேர்தல் முறை வந்தால் கட்சிகளின் பலத்தை நிருபிக்க வாய்ப்புள்ளது!
கடைக்கோடி மனிதர்களுக்கும் அரசின் திட்டங்கள் முழுமையாக கிடைக்க, மக்கள் நலக் கூட்டணியிடம் இத்தேர்தலில் அதிகாரம் போகவேண்டும்!
'கவுன்சிலர்கள்' என்கிற குறுநில மன்னர்களின் 'கொட்டம்' அடங்க வேண்டுமானால் தலைவர்களை மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும்!
இன்று 27.9.16 சத்தியம் (டிவி) சத்தியமே நிகழ்ச்சிக்கு!
---\\\
அறிவுகொழுந்தே ...
இன்று 29.9.16 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் உலகமகா அறிவுக்கொழுந்து 'காவிரி பிரச்சனையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து விட்டால் நீர் கிடைத்துவிடுமா? சம்மந்தப்பட்ட அரசின் கட்சிகளின் தலைவர்களை சில பல ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்காமல் செய்துவிட்டால் தீர்ந்து விடுமாம்!'
அறிவுகொழுந்தே ... அப்பொழுது மக்கள் கலகம் செய்ய மாட்டார்களா? நீரை திறக்கக்கூடாதென்று!?
காஷ்மீர் பிரச்சனைகளில் அரசியல் கட்சிகள் கையாளும் விதம் சரியில்லையாம்! இந்த அறிவுக்கொழுந் தை அனுப்பி வைத்தால் ஒரு நொடியில் தீர்த்து விடுவாரோ?! 'கலைஞர்களை விளையாட்டு வீரர்களை புறக்கணிப்பதும், மக்கள் அனைவரும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை ஏற்க இயலாது' என விசிக ரவிக்குமார் சொன்னதை இந்த அறிவுக்கொழுந்து காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை!
எல்லாவற்றையும் எல்லாரையும் குறைச்சொல்லிக் கொண்டு பாஜகவுக்கு ஆதரவாக வக்காலத்து போடுவதும் ஒருவிதமான பாசிச பாணிதானே!? ---\\\
போர் மேகம் தான்!
*பாஜக என்றாலே அக்போர்! அக்கம் பக்கம் போர் மேகம் தான்! அன்று கார்கில்! இன்று உரி ஆக மாறலாம்!
*பாகிஸ்தான் சிறுபான்மை மக்கள் இல்லையெனில் பாஜக இல்லை!
*அண்டை நாடுகளுடன் நட்பு வளர்ப்பு என்பது பாஜகவுக்குப் பிடிக்காத ஒன்று!
*பாகிஸ்தான் இந்தியா நாடுகளின் மக்கள் போரை விரும்பவில்லை! இவ்விரு அரசுகளும் தான் தாங்களின் மக்கள் விரோத செயல்களில் இருந்து திசைத்திருப்பவே போரைத் திணிக்கின்றன!
*போரினால் எந்த சிக்கலும் தீர்ந்ததாக வரலாறு இல்லை! தேவை பேச்சுவார்த்தை மூலம் அமைதி தீர்வு!
*போரின் வெற்றி தோல்வியால் சாதாரண மக்களுக்கு எந்த பயனும் இல்லை!
*சுரண்டும் வர்க்கத்தின் புகழிடம்தான் போர்!
*போரற்ற வாழ்வே மனித சமூகம் உய்ய ஒரே வழி! அதுபோல் சுரண்டல் ஒழிந்தாலே போர் மேகம் கலைந்துப் போகும்!
---\\\
ஏகபோகம் உடைபடுவதுதான்...
பலத்தை நிரூபிக்க மக்கள் நலக்கூட்டணி களமிறங்கி உள்ளது!
வேறு வழியின்றி பாஜக பாமக தேமுதிக தமாகா தனியே நிற்கிறது!
மக்கள் விருப்பம் என்று கூறுவதெல்லாம் 'சும்மா!'
அதிமுக திமுக ஏகபோகம் உடைபடுவதுதான் தமிழக மக்களுக்கும், தேர்தல் ஜனநாயகத்திற்கும் நல்லது!
---\\\
குறைவென்ன? அதிகமென்ன?
மது அருந்துவதில் குறைவென்ன? அதிகமென்ன?
குடும்பம்தான் சீரழிந்து போகும்!
மது அருந்தும் பழக்கம் ஏழை குடும்பத்தை கடனாளி ஆக்கி அழிக்கிறது!
இன்றும் 30.9.16 PTTV நேர்பட பேசு வில் உதய் பெயரில் எமது பதிவு பதிவேற்றம் ஆகி உள்ளது!
----\\\
எங்கே இருக்கிறது!?
தேர்தல் ஆணையமா? எங்கே இருக்கிறது!?
எந்த தேர்தல் விதி எதையும் பின்பற்றவில்லை!
பேசாமல் அதிமுக வே எல்லாவற்றையும் அறிவித்துவிட்டு போகலாமே!
பரிசு, பணம் போன்ற லஞ்ச - லாவண்யமும் கொடிக்கட்டி பறக்கிறது!
ஒருபக்கம் வாக்காளர்களுக்கு லஞ்சம்! இன்னொரு பக்கம் பதவிகள் ஏலம்! அடுத்து தேர்தலில் வெற்றி பெரும் கவுன்சிலர்கள் குதிரைபேரம்! கடத்தல்!
தமிழக தேர்தல் கமிசன் பணி சந்தி சிரிக்கிறது!
இன்று 1.9.16 PTTV நேர்படபேசுக்கு!
---\\\
யுவர் ஹனர்!
குறைவாக குடித்தால் குற்றமில்லை என்றீர் யுவர் ஹனர்! மகிழ்ச்சி!
இவரு மொத்தல்ல கொறைவாத்தான் குடிச்சிப்பாரு யுவர் ஹனர்! அப்படியே படிப்படியாக கொஞ்சம் ஓவரா போயிருச்சி போலிருக்கு யுவர் ஹனர்! குடி குடியைக் கெடுக்காது என்றீர் யுவர் ஹனர்! இப்ப இவருப் போன்றவர் குடியை யார் காப்பது யுவர் ஹனர்?
நேத்துத்தான் யுவர் ஹனர் கொஞ்சமா குடிங்கன்னு உத்தரவு போட்டீர் ஹனர்! ஆனா 24 மணிநேரம் கூட ஆகல நீங்க உத்தரவு போட்டு யுவர் ஹனர்! உங்க உத்தரவ அமலாக்காம சேலம் அஞ்சு ரோட்டுல சாய்ந்தரம் இப்பிடி கெடக்கிற இந்த குடிமகன் மீது யாரு யுவர் ஹனர் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு போடுறது யுவர் ஹனர்? சேலம் மாநகர காவல்துறையா? இல்ல டாஸ்மாக் துறையா?
இந்த மாதிரி பொறுப்பா கெடக்கும் குடிமகனையும் அவரது குடும்பத்தையும் யார் யுவர் ஹனர் காப்பாத்திறது? சொல்லுங்க யுவர் ஹனர்! குடியை காக்க நீதிமன்றமா? குடியைக் கெடுக்க நீதிமன்றமா? யுவர் ஹனர்!? ---\\\
நடிப்பு சுதேசிகளின் பசப்பு!
எமது தேசபிதாவே இன்று உமக்கு பிறந்த தினம்! உமது அருகே ஓரு கயிறுக்குக் கட்டிலிருக்கு! அது உம்மை அரவணைத்தக் கயிறாக இருந்துள்ளது! ஆனால் அது தற்போது எங்களுக்கு எமனின் பாசக்கயிறாக இருக்கிறது! உங்கள் கனவு நாயகர்களுக்குக் கிராம ராஜ்ஜியத்தில் அந்த கயிறுதான் தூக்குக்கயிறு!
உமது உடையும் மேலே ஒரு துண்டு!
கீழே ஒரு துண்டு! ஆனால் எங்கள் பிரதமருக்கோ ஒருமணி நேர உடைக்கு பத்து லட்சம்! அப்புறம் அது ஒரு கோடிக்கு ஏலம்! என்ன கேவலம் இது!
உம்மை ஒரு குருவியைப்போல் சுட்டுக்கொன்ற கோட்சே வகையறாக்கள் கையில் இன்று உமதுதேசம்! அன்று உம்மை பதம் பார்த்த அந்த துப்பாக்கி குண்டுகள் இன்றும் முற்போக்காளர்கள் இடதுசாரிகள் போன்றவர்கள் மீது பாய்ந்துக் கொண்டுதான் இருக்கிறது!?
பிதாவே அவர்களும் ராமராஜ்ஜியம் தான் அமைக்கிறார்களாம் அன்னிய இந்திய பெரும் முதலாளிகளுடன் சேர்ந்துக் கொண்டு! ஆம்! உமது கனவை நனவாக்குகிறார்களாம் நடிப்பு சுதேசிகள்! ஆம்! விதேசிகளாக மாறிவிட்ட போலி சுதேசிகளின் பசப்பு வார்த்தைகளுக்கு நிச்சயம் முற்றுப்புள்ளி வைப்போம்!
---\\\
மக்கள் நலக் கூட்டணி சார்பில் ...
சேலம் மாவட்டத்தில் 30.9.16, 01.10.16 தேதிகளில் உள்ளாட்சியில் போட்டியிடும் சிபிஐஎம் வேட்பாளர்கள்...
சேலம் மாநகராட்சி வார்டுகள்... 24 எம்.கனகராஜ் மேற்கு மாநகர செயலாளர், 26 தேவி வடக்கு மாநகரக்குழு உறுப்பினர், 6 பரமசிவம் கிளைச் செயலாளர் வடக்கு,
எடப்பாடி நகராட்சி வார்டு 25 லதா,
ஊராட்சி ஒன்றிய வார்டு 9 நங்கவள்ளி கே.ராஜாத்தி மாவட்டக்குழு உறுப்பினர், வார்டு 3 பெத்தநாயக்கன்பாளையம் பொட்டி,
பேரூராட்சி வார்டுகள் அயோத்தியாப்பட்டிணம் 8 கந்தசாமி, கன்னங்குறிச்சி 2 தேவி,
சிற்றூராட்சி தலைவர்... பி.என்.பாளையம்
கல்வராயன்மலை கீழ்நாடு விஜயசாந்தி, கொளத்தூர் சித்திரப்பட்டி புதூர் பிரியா ஜாஸ்மின் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மற்றவர்கள் நாளை 3.10.16 தாக்கல் செய்திட உள்ளனர்! அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
----\\\\
சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் களத்தில் இருக்கும்
சிபிஐ(எம்) வேட்பாளர்கள்..!
1. சேலம் மாநகராட்சி வார்டுகள்:
வ எ வார்டு வேட்பாளர்
1 6 பரமசிவம்
2 9 சம்பத்குமார்
3 24 எம்.கனகராஜ்
4 26 தேவி
5 37 பச்சமுத்து
6 58 வடிவேல்
7 60 ஆர்.வைரமணி
2. நகராட்சிகள் வார்டுகள்:
வ எ வார்டு நகராட்சி வேட்பாளர்
1 25 எடப்பாடி லதா
3. பேரூராட்சி வார்டுகள்:
வ எ வார்டு பேரூராட்சி வேட்பாளர்
1 11 கன்னங்குறிச்சி பி.தேவி
2 6 வீரகனூர் கோவிந்தராஜ்
3 7 தம்மம்பட்டி வெங்கடாசலம்
4 8 அயோத்தியாபட்டிணம் கந்தசாம
5 6 சங்ககிரி என்.ஜெயலட்சும
6 2 பெத்தநாயக்கன்பாளையம் சரசு
7 1 ஜலகண்டாபுரம் எம்.வெங்கடேஷ்
8 2 மேச்சேரி (ஆதரவு சுயேட்சை) டி.ரங்கநாதன்
4. ஊராட்சி ஒன்றிய வார்டுகள்:
வ எ வார்டு ஒன்றியம் வேட்பாளர்
1 13 வீரப்பாண்டி அய்த்தம்மாள்
2 3 எடப்பாடி ஆராயி
3 4 எடப்பாடி நடராஜன்
4 5 சங்ககிரி மனோகரன்
5 14 சங்ககிரி விஜயா
6 6 கெங்கவல்லி பார்வதி
7 9 நங்கவள்ளி கே.ராஜாத்தி
8 3 பெத்தநாயக்கன்பாளையம் பொட்டி
5. சிற்றூராட்சி தலைவர்கள்:
வ எ ஒன்றியம் ஊராட்சி வேட்பாளர்
1 ஆத்தூர் புத்தரகவுண்டம்பாளையம் எம்.துளசி
2 பனமரத்துப்பட்டிச.ஆட்டையாம்பட்டி சாமியப்பன்
3 கொங்கனாபுரம் குறுவம்பட்டி எம்.சேகரி
4 அ.பட்டிணம் ஆச்சாங்குட்டப்பட்டி பெரியசாமி
5 பிஎன்பாளையம் க.மலை கீழ்நாடு விஜயசாந்தி
6 சங்ககிரி சன்னியாசிப்பட்டி எஸ்கே.சேகர்
7 கொளத்தூர் சித்திரப்பட்டிபுதூர் பிரியாஜாஸ்மின்
8 தாரமங்கலம் பணிக்கனூர் செல்வக்குமார்
குறிப்பு: மாவட்டம் முழுவதும் ஏராளமானோர் சிற்றூராட்சி வார்டுகளிலும் களத்தில் உள்ளனர்.
ஆதரிப்பீர்! வெற்றிபெறச் செய்வீர்! மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வாய்ப்பளிப்பீர்!
தோழன், பி.தங்கவேலு, சிபிஐஎம் மாவட்டக்குழுச்செயலாளர். சேலம். 4.10.16. ---\\\
அன்று பாபர் மசூதியை...
*சட்டத்தை மதிக்கும் கட்சியாக இருந்திருந்தால் அன்று பாபர் மசூதியை இடித்திருக்குமா?
*குஜராத் தில் சட்டத்தின் ஆட்சியை மிதித்துத்தானே மூன்றாயிரம் முஸ்லீம்களைக் கொன்று குவித்திருக்குமா?
*கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கும் சூழ்ச்சியும், நீதித்துறை மீதான அலட்சியமும் சேர்ந்து தமிழ்நாடு தானே என்ற ஏனோ தானோ மனநிலையும் தான் காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் நிலைக்கு காரணம்!
---\\\
சூழ்ச்சியே...
*கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கும் சூழ்ச்சியே மத்திய அரசின் இந்த நிலை!
*நீதித்துறை மீதான அலட்சியமே இது!
*காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் 'இரட்டை நாக்கு' வெளியே வந்துவிட்டது!
*தமிழர் சொத்துக்களை எரித்தபோது 2 மாநில மக்களும் அமைதியாக இருங்கள் என்றவர்தான் நம் பிரதமர்!?
*பாஜக என்றைக்கு சட்டத்தையும் நீதித்துறையையும் மதிக்காது;
மிதிக்கும்!
*சட்டத்தை மதிக்கும் கட்சியாக இருந்திருந்தால் அன்று பாபர் மசூதியை இடித்திருக்குமா?
*மோடி தலைமையிலான குஜராத் ஆட்சியில் மூன்றாயிரம் முஸ்லீம்களைக் கொன்றிருக்குமா?
*பாஜகவும் காங்கிரஸும் காவிரியில் 'இரட்டைப் பிள்ளைகளே!'
இங்கே நீர் விடு; அங்கே விடாதே என்பர்!
---\\\
எது போக்கிரித்தனம்?
அட நாரவாய் நாராயணா...
பெங்களுரு, கோவை ஆகிய இடங்களில் (அங்கு காவிரிநீர் தராதே என்றும்; இங்கு கொலையைக் கண்டிப்பதாக கூறியும்) தீ பற்ற வைத்தது; சொத்துக்களைக் கொள்ளை அடித்தது) என்ன பெயர்? போக்கிரித்தனமில்லையா?
ஆவடி குமார் பாஜக காவிரியில் போக்கிரித்தனம் செய்தது என்றதற்கு பொத்துக்கிட்டு வந்திருச்சி நாரவாயருக்கு! உண்மையை சொன்னால் ஏன் உதறல் எடுக்கவேண்டும்?
நாரவாயர் என ஏன் குறிப்பிடுகிறோம் என்றால்... ஆவடிகுமார்-- 'கர்னாடகாவில் காவிரி பிரச்சனையில் பாஜக செய்தது செய்வது போக்கிரித்தனம்' என்றார்! அதற்கு பாஜக நாராயணன் சமீபத்தில் கோவையைப் பற்ற வைத்து, கொள்ள அடித்த பாஜக கொடியோடு கலவரத்தில் ஈடுபட்டோர் உள்ளிட்டவர்களை 'போலீஸ் கைது செய்தது போக்கிரித்தனம்' என்கிறார்!
அவர் சொன்ன போக்கிரித்தனமும், இவர் சொன்ன போக்கிரித்தனமும் ஒன்றா? இதிலே நெறியாளர் கார்த்திகேயன் ஆவடி குமார் சொன்னதைக் 'கண்டிக்கிறேன்' என்கிறார்! உமது நடுநிலை வாழ்க!?
இன்று 4.10.16 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில்...
---\\\
வெடிகுண்டுக்கு சமம்!
*வேலையில்லா இளைஞன் வெடிகுண்டுக்கு சமம்! வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுத்தால் எந்த இளைஞ னும் எந்த அடிப்படைவாதத்திற்கும் ஆட்படமாட்டான்!
*தமிழக இளைஞன் ISIS க்கு ஆட்பட்டிருக்க வாய்ப்பில்லை! இது திசைத்திருப்பலும் அபாண்டமும் ஆகும்! அதே சமயத்தில் பெரும்பான்மை தீவிரவாதம்தான் சிறுபான்மை தீவிரவாதத்திற்கு அடிப்படை!
*இந்துத்துவா தீவிரவாதம் ஒழிந்தால், ஒழிக்கப்பட்டால் ISIS போன்ற முஸ்லீம் தீவிரவாதத்திற்கு வேலையில்லாமல் போகக்கூடும் அல்லவா?
*ஆர்எஸ்எஸ் விஎச்பி இந்து முன்னணி போன்றவை வெறிப்பிரச்சாரமே இளைஞர்களை தவறான பாதைக்கு இட்டு செல்கிறது!
*தீவிரவாதம்... பெரும்பான்மையோ சிறுபான்மையோ எந்த ரூபத்தில் அது இருந்தாலும் அதனால் எந்த பிரச்சனையையும் தீர்க்க முடியாது! ஜனநாயக ரீதியான போராட்டப் பாதையே தற்போதைக்கு உகந்தது! ---\\\
நல்லதல்ல!
*நீதிமன்றங்கள் தான் ஜனநாயக நாட்டில் ஆட்சி பரிபாலனம் செய்ய வேண்டிய நிலை என்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல!
*திமுக ஆட்சியில் சென்னை ரத்து; அதிமுக ஆட்சியில் தமிழகம் ரத்து!
*இதுதான் திமுக அதிமுகவின் ஜனநாயகத்தை மதிக்கும் மாண்பு!
ஆனாலும் ஆளும் கட்சியின் அராஜகத்திற்கு சரியான சாட்டை அடி!
*சிறிய கட்சிகளுக்கு பெரிய வருத்தம்! பெரிய கட்சிகளுக்கு சிறிய வருத்தம்!
*தமிழகத்தில் தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியின் அடிமையாக இருக்கும் வரை தேர்தல் என்பது கேலிக்கூத்தாகத்தான் இருக்கும்!
*மத்திய அரசு காவிரி ஆணையம் அமைக்காமல் தமிழக மக்களை வஞ்சிக்கும் சதிக்கு தற்காலிக திசைத்திருப்பல்!
*எதிர்கட்சி (திமுக)க்குக் கொண்டாட்டம்! ஆளும் கட்சி (அதிமுக)க்குத் திண்டாட்டம்!
*அதிமுகவுக்கு மூக்கறுப்பு!
#என்ன நடக்கிறது முகநூலில்?
ஒன்றுமே தெரியவில்லை!
PTTV fbஇல்தான் நான் பதிவிடுகிறேன்! ஆனால் தொடர்ந்து என் பதிவு திருடப்படுகிறது!
இன்று கூட 4.9.16 நேர்படபேசு வாட்ஸ்-அப் இல் மோகன், சாபியா, சிவா ஆகிய மூவர் பெயரில் என் பதிவின் அச்சு அசல் மாறாமல் பதிவேற்றம் ஆகி உள்ளது!?
---\\
விலை நிர்ணயம்!
வங்கி அடாவடித்தனமாகட்டும், விவசாயிகளின் விழிப்புணர்வு இன்மையாகட்டும் இவ்விரண்டிற்கும் பொறுப்பு ஆட்சியாளர்களும், அவர்தம் கொள்கைகளும்தான்!
இக்கொள்கைகளில் மாற்றம் இல்லையேல் விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க முடியாது!
இந்திய அன்னிய பெரும் முதலாளிகளுக்கு அள்ளி அள்ளி கொடுப்பதும், விவசாயிகளுக்குக் கிள்ளிக் கிள்ளி கொடுப்பதும் சுதந்திர இந்தியாவின்-- மத்திய-மாநில அரசுகளின் வாடிக்கை ஆகிவிட்டது!
விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்றார்களே தவிர முதுகெலும்பையும் முறித்ததோடு, உயிரையும் பறித்து வருகிறார்கள்!
விவசாயிகள் தங்கள் உற்பத்தி செலவுகளுக்குமேல் 50 சதவீதம் கணக்கிட்டு அவரது உற்பத்திக்கு விலை நிர்ணயம் செய்து தந்தால் மட்டுமே தற்போதைக்கு தற்கொலையை தடுக்க முடியும்!
---\\\
பாஜக தோற்றால்...
முன்னாள் பிரதமர் உண்ணாவிரதம் இருந்தால் மட்டுமே, இந்நாள் பிரதமர் தலையிட்டு வாக்குறுதி கொடுப்பார்!
காவிரி மேலாண்மை வாரியம்... ஒருவேளை கர்னாடகா சட்டமன்ற தேர்தலுக்குப் பின், பாஜக தோற்றால் பிரதமர் அமைப்பார்!
காங்கிரஸ் தோற்றால் முன்னாள் காங்கிரஸ் பிரதமர் டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தாலும் இருப்பார்!
தமிழக மக்களின் கட்சி, சாதி, மதம், இனம், வேறுபாடு அற்ற ஒன்றுபட்ட உருக்குப் போன்ற போராட்டமே நமக்கான உரிமையை பெற்று தரும்!
பாஜக, காங்கிரஸ் இரட்டை வேடத்தை தமிழக மக்கள் புரிந்துக் கொண்டால் சரி!
தமிழக மக்கள் எதைத்தான் கவனிப்பார்கள்? முதல்வரின் உடல்நிலையையா? காவிரியையா? உள்ளாட்சி தேர்தலையா?
எல்லாம் ஒரே சமயத்தில் வந்தால் என்ன செய்வார்கள்!? ---\\\
மர்ம மாளிகை போல்!
அப்பல்லோ மருத்துவமனைக்கு "போதுமான" அமவுண்ட் வருவரை அங்கேயே இருப்பார் போலும்!
அன்று தலைமை செயலகம் மருத்துவமனை ஆனது; இன்று மருத்துவமனை தலைமை செயலகம் ஆனது! (இந்த வரி என் தோழன் இலமு வின் பதிவு)
அப்பல்லோ மருத்துவமனை மர்மகுகை போலாயிற்று!
முதல்வர் சேர்க்கப்பட்ட நாள்முதலாக உடல்நலம் தேறி வருகிறார் என்றே கூறிவருகிறது மர்ம மாளிகை போல்!
உயர்நீதி மன்றமே இன்றுக்குள் விபரம் கேட்டதில் இருந்து 'என்னமோ' நடக்கிறதென்று தெரிகிறது!
காய்ச்சல்... கவர்னரே பார்க்க முடியவில்லை என்றால்... மற்றவர்கள் அப்பல்லோ கிட்டவே போக முடியாது!
முதல்வரின் உடல்நலம் குறித்து தெரிந்து கொள்ள ஒவ்வொரு தமிழ்நாட்டு பிரஜைக்கும் உரிமை இருக்கிறது!
முதல்வரின் இல்லமும் உள்ளமும் தமிழகமா? அப்பல்லோ மருத்துவக்கூடமா? --\\
நடப்பது மக்களாட்சி..!
ராணுவம் ஆட்சி அல்ல இங்கு நடப்பது! நடப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி! அதன் பிரதமர் மோடி! அரசின் முடிவுதான் சர்ஜிக்கல் ஸ்டிரைக்!
அது ராணுவமாக தன்னிச்சையாக எடுத்தல்ல! ஆகவே அதுபற்றிய விமர்சனம் ராணுவம் மீதல்ல! விமர்சனம்! மோடி அரசுமீதுதான்!
ஆகவே மோடி அரசின் முடிவு மீதான விமர்சனத்தை ராணுவத்தின் மீது போட்டு தப்பிக்கும் மோசடியே இது!
இது முழுக்க உபி தேர்தலை மனதில் கொண்டு எடுத்த நடவடிக்கையாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள்!
அதற்கு பதில் சொல்லுவதற்கு பதிலாக ராணுவத்தை சந்தேகம் பிரச்சனையாக மாற்றுவதிலும் 'அரசியல் ஆதாயம்'தான் அடங்கி இருக்கிறது என்றால் அது மிகை இல்லை!
பாதுகாப்பைச் சந்தேகப்படும் பிரச்சனையே இதில் இல்லையே!
#
இந்த விவாதத்தில் பாஜக நாரவாய் நாராயணன், 'காங்கிரஸ்சும் கம்யூனிஸ்ட்டும் ராணுவத்தை கொச்சை படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லையெனில் தக்கப் பதிலடி கொடுப்போம்' என மிரட்டல் விடுத்தார்!
கொச்சை படுத்தியது யார்? "அனுமான் போல் பலம் தெரியாமல் இருந்த ராணுவத்தை அதன் பலம் தெரிய வைத்தவர் பிரதமர்" என சொன்னது பாஜகவா? காங்கிரசா? கம்யூனிஸ்ட்டா?
ராணுவத்தை அனுமானுடன் இணைத்து காவிமயமாக்கும் முயற்சியை அம்பலப்படுத்தி கண்டித்தாரே கர்னல் சுந்தர் இதே விவாதத்தில் நாரவாயர் அனுமான் போல் உட்கார்ந்து இருந்தாரே ஏன்?
நாரவாயரே இந்த சலசலப்புக்கெல்லாம் கம்யூனிஸ்ட்கள் பயப்பட மாட்டார்கள்! ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனை கடித்த கதையாக "ராணுவத்தையும் காவிமயமாக்கும் சதி" அம்பலமானதால், அலறுவது தெரிகிறது!
மீண்டும் சொல்வோம் தேசபக்தி குறித்து பாடம் எடுப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்! காலம் பதில் சொல்லத்தான் போகிறது!
---\\\
என்னமோ நடக்குது!
உடல்நிலை சரியில்லாமல் இருப்பவரை பார்க்க வருவதை எல்லாம் என்ன அரசியல் இருக்க போகிறது!
அதுசரி ராகுலாவது முதல்வரை நேரில் பார்த்திருப்பாரா? பிரதமர் வந்தாலாவது செல்பி எடுப்பார்!
அப்பொழுதாவது முதல்வரின் உடல்நலம் நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளச் செய்வார்!
ராகுல் வந்ததில் அரசியல் என்றால் கவர்னர் சென்றது என்ன இயல்?
#
இன்று 7.10.16 PTTV நேர்படபேசுக்கு!
விவாதத்தில் கவர்னரை அமைச்சர்கள், தலைமைச் செயலர் சந்திக்க அதிகாரமில்லை என ஒரு ரீல் ஓடுச்சி!
அடுத்து ராகுல் திமுக தலைவரை சந்திக்காமல் போனது ஏன் என ஒரு ரீல் ஓடுச்சி!
என்னமோ நடக்குது! மர்மமாக இருக்குது! ---\\\
துரும்பும், தலாக்கும்!
#இப்பவும் தமிழகத்தின் பல கிராமங்களில் "துரும்பு" வாங்கும் முறை உள்ளதே! (இந்து மத சடங்கு விவாகரத்து)
#முஸ்லீம் மத சடங்கான 'தலாக்' மட்டும் ஏன் கூடாது?
#மத்திய அரசின் முஸ்லிம் விரோதமே இதில் உள்ளீடாக உள்ளது!
#தனிக்குடித்தனம் கோரும் மனைவியை 'விவாகரத்து' செய்யலாம் என்பது விஞ்ஞான பூர்வமற்றது!
#இந்துத்துவா பழைமைவாதம் அதில் ஒளிந்து இருக்கின்றது!
#அனைத்து மத, சாதி, இன குடும்பங்களையும் சிதைப்பது நுகர்வு கலாச்சாரமும், உலகமய கொள்கைகளும்!
#மத்திய அரசு பார்வையிலும், உச்சநீதிமன்றம் பார்வையிலும் 'பழைமைவாதம்' தெரிகிறது!
#தனிக்குடித்தனம் கோரும் மனைவியை விவாகரத்து செய்யலாம் என்பது ஆணாதிக்க சிந்தனையே!
#
இன்றும் 8.10.16 PTTV நேர்படபேசு வில் 6 பேர் எமது கருத்துக்களை களவாடி உள்ளனர்! அதுகூட தொலையட்டும்!
"தனிக்குடித்தனம் கோரும் மனைவியை 'விவாகரத்து' செய்யலாம் என்பது விஞ்ஞான பூர்வமற்றது". இதை 'தேவி' என்பவர் "விஞ்ஞான பூர்வமற்றது" என்பதை மறைத்து, அர்த்தத்தையே மாற்றிவிட்டார். திருடப்படுகிறா? தொலைக்காட்சி நிர்வாகமே இவ்வண்ணம் வேறு பெயர்களில் வெளியிடுகிறாதா? தெரியவில்லை!
இறுதியாக நெறியாளர் தியாகச்செம்மல் கூறியது போல் தலாக் கோ, விவாகரத்தோ அது மதம் சார்ந்து இருக்கும் பத்தாம் பசலித்தனமான போக்கில் இருந்து சட்டமும் பெண்களுக்கு பாதுகாப்பு தரணும் சட்டமும் மூடத்தனத்திற்கு துணை போயிடலாகாது!
---\\\
No comments:
Post a Comment