Saturday, 28 November 2015

இதிலே செல்ப்பி வேற..!
"பண்டிகைகள்தான் இந்தியாவின் பலம்" என மோடியார் மகுடி வாசித்துள்ளார்! எங்கே என்கிறீர்களா?


இந்திய பிரதமர் இந்தியாவில் உள்ள புதுதில்லியில் நேற்று 28.11.15இல் 900 செய்தியாளர்களை வைத்து "தீபாவளி" கொண்டாடி உள்ளார்! நமக்கு 10ந்தேதி; அவருக்கு 28ந்தேதி! 10ந்தேதி ஜப்பானில் இருந்தாராம்; அதனால் கொண்டாட முடியலையாம்! இதைவிட இப்படி சொன்னதுதான் அவரின் குதர்க்கமே அடங்கி இருக்கிறது
"நிருபர்களை சந்திக்க "கிறிஸ்துமஸ்" வரை காத்திருக்க வேண்டும்!" இப்படி அவரது பேச்சு போய் கொண்டிருக்கிறது.
இங்கே நமக்கு சந்தேகம் என்னவென்றால், இவரின் தற்போதைய நவீன "புனித நூல் (அரசியல் சாசணம்)" பிரதமரை இதுமாதிரி ஆயிரம் நிருபர்களை வைத்துத்தான் "பண்டிகை"களை கொண்டாட சொல்கிறதா? அல்லது சுதந்திர தினம், குடியரசு தினங்களை கொண்டாட சொல்கிறதா?
அதுசரி, கிறிஸ்துமஸ் வரை காத்திருந்து அதை கொண்டாடினால், இந்தியாவில் மக்களின் குடி முழுகிய போய்விடும்? இவரின் ஒவ்வொரு அசைவும் இந்துத்துவா வெறியை நோக்கியே காய் நகர்த்தப்பட்டு வருகிறது என்பதை காணாமல் இருக்க முடியவில்லையே...ஏன்? இதிலே செல்ப்பி வேற..!
----\\\\
பழிவாங்கலே..!
பாடகர் கோவன் விடயத்தில் தமிழக அரசின் கோபம் பழிவாங்கும் போக்கைத்தான் காட்டுகிறது. 

சகிப்புத்தன்மை தமிழக அரசுக்கு குறிப்பாக முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எள்ளளவும் கிடையாது என்பதையே காட்டுகிறது சுப்ரீம்கோர்ட்டுக்கு சென்று கோவனை போலீஸ் காவலில் விசாரிக்க கோரி மனு தாக்கல் செய்திருப்பது!
இது சட்ட ஒழுங்கு பிரச்சனை அல்ல; சகிப்புத்தன்மை சார்ந்தது; கருத்து உரிமை, சுதந்திரம் சார்ந்தது!
----\\\\
நகைமுரண்..!
வெங்கய்யா குற்றசாட்டு அர்த்தமற்றது! சகிப்பு இன்மை காங்கிரஸுக்கு இல்லை என இவரும் பாஜகவும் சொல்லுவது நகைமுரண்.
பிளவுப்படுத்தும் சக்திகளை ஊக்குவிப்பது இந்தியாவில் ஆர்எஸ்எஸ்; உலகத்தில் அமெரிக்கா! 
பிளவுவாத சக்திகள் ஆர்எஸ்எஸ், லக்ஷ்கரி தொய்பா உள்ளிட்ட அமைப்புகளும், அவர்களின் அரசியல் பிரிவுகளும்!
இன்று 21.11.15 News 7 ?கேள்வி நேரம் நிகழ்ச்சிக்கு!
----\\\\
திமுக, அதிமுக வின் ஏகபோகமா? தமிழகம்..!
இன்று 22.11.15 PTTV புதுப்புது அர்த்தங்களில் சமூக ஆர்வலர் பானுகோம்ஸ், சிபிஐ லெனின், நெறியாளர் கார்த்திகேயன்... 
மக்கள் நலக்கூட்டணி குறித்து நெறியாளர் கார்த்திகேயன்... (இவர் உள்ளிட்டு இன்று மட்டுமல்ல, ஆரம்பம் முதலே) "மீண்டும் மீண்டும் தேமுதிக, தமாக வை அழைப்பதேன்? நம்பிக்கை யின்மையா? முரண்பாடுகளே உங்களிடம் கிடையாதா? 10 ஆண்டுகள் பயணிப்பது சாத்தியமா? தேர்தல்வரை நீடிக்குமா? குறைந்தபட்ச திட்டங்களை அறிவித்துவிட்டு, மற்ற கட்சிகளை அழைப்பது சரியா?" என்பன போன்ற கேள்விகளை மீடியாக்கள் மீண்டும் மீண்டும் கேட்டு, "மடக்கிவிட்டதான" மன நிலையில் மகிழ்கின்றனவோ என்னவோ தெரியவில்லை! 
மக்கள் நல கூட்டணி யும் ஏன் மீண்டும் மீண்டும் அழைக்கின்றன என தெரியவில்லை; அதேபோல் ஆம் ஆத்மி உதாரணம் தேவையா? மேற்கு வங்கத்தில் 1977இல், தமிழகத்தில் 1967இல் என மாற்றங்களை சொல்வதுகூட சரியாக இருக்கும் அல்லவா?
இதிலிருந்து  தெரிவது... மீடியாக்களும் அதிமுக, திமுக வின் ஏகபோக அடிமை தேசமாக தமிழகம் இருக்கட்டும் என்றே நினைக்கின்றன போலும்! அல்லது இடதுசாரி அல்லாத பாஜக, காங்கிரஸ் போன்றவைகள் அமைத்தால், பானு கோம்ஸ் போன்றவர்கள் எதுவும் பேசுவதில்லை. 
(புதிதாக வந்த கட்சி ஆம்ஆத்மியோடு, பழைய கட்சிகளை புதிய அணியென்று ஒப்பிடக்கூடாதாம்! அதுதான் ஏனென்று தெரியவில்லை! மாற்றத்தை விரும்பும் மக்களின் சமீபத்திய நிகழ்வான இதை சொல்லுவது எடுப்பட்டுவிடும் என்ற பயமாக இருக்குமோ?)
----\\\
மதவெறி சகதியில்..!
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர முயன்றார்கள் என்கிற தகவலை கேட்கிறபோது, கவலைதான் கரைபுரண்டோடுகிறது! 
வேலையின்மையும், வறுமையும் இளைஞர்களை மதவெறி சகதியில் தள்ளிடும் கொடுமையின் ஒரு கூறுதானிது! 
இன்று 22.11.15 தற்போது News 7 ?கேள்வி நேரம் நிகழ்ச்சியில் இக்கருத்து முழுவதும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நன்றி!

-----\\\\
இன்று 22.11.15 News 7 ? கேள்வி நேரம் நிகழ்ச்சியில் முன்னாள் கர்னல் ஹரிஹரன், பத்திரிக்கையாளர் முராரி, ததேவிஇ தியாகு, மமக அப்துல்சமது, இவர்களுடன் நெறியாளர் விஜயன்...
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் தமிழக இளைஞர்கள் சேர்ந்ததாக வந்த தகவலே விவாதம்... இது குறித்த எனது பதிவு தனியாக இருக்கிறது. 
என்றாலும், விவாதத்தில் எதை எதையோ பேசினார்களே தவிர சமூக பாதுகாப்புடன் கூடிய வேலை வாய்ப்பை உருவாக்கிடாத இந்த சமுதாயத்தை... ஆம், இளைஞர்களின் ஆற்றலை, நாசப்படுத்தி வரும் நாத்தம் பிடித்த இந்த முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அரசையோ, அமைப்பையோ யாரும் சாடாததுதான் சங்கடமாக இருந்தது.

எந்த மதவாதமாக இருந்தாலும், அதை அனுமதிக்க முடியாதென அனைவரும் கூறினாலும், இந்துத்வா மதவாதம் மீது மென்மையான சாடல் முராரி, அரி ஆகியோரிடமும், முஸ்லீம் தீவிரவாதம் அப்துலிடமும் இருந்ததுபோல் ஒரு தோற்றம் இருந்ததும், தியாகுகூட இந்த மதவாதம் எந்த அரசையும் கவிழ்த்து விடப் போவதில்லை என்றதும் சிறு நெருடலையே தந்தது. 
என்றாலும் விஜயன் இரண்டும் சமமான தீங்கையே விளைவிக்கும் என்றது ஆறுதல்! அதுவும் தமிழக இளைஞர்கள் இதில் விழுந்திருப்பதன் கவலையை விஜயன் பகிர்ந்தது நியாயமானதே!
----\\\\
# மரவள்ளிக்கிழங்கு பாய்ண்டுக்கு 
ரூ260 முத்தரப்பு ஒப்பந்தப்படி வழங்கிடு! 
# மரவள்ளிக்கிழங்கு விவசாயத்தையும், ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு உற்பத்தியையும் பாதிக்காத வகையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலரின் நடவடிக்கையை முறைப்படுத்திடு!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் 
இன்று 23.11.15 சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்!
தலைமை: ஏ.பொன்னுசாமி மாவட்டத்தலைவர்; விளக்க உரை: பி.தங்கவேலு சிபிஐஎம் மாவட்டக்குழு செயலாளர், எஸ்பி.தங்கவேல் மாவட்டச்செயலாளார், தவிச; ஆர்.குழந்தைவேல் மாவட்டப் பொருளாளர். 

ஏராளமான மரவள்ளி விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு பயிருடன் பங்கேற்றனர்; இதனால் பரப்பரப்பாக இருந்தது. மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் விண்ணப்பம் தந்து பேசினர்.
----\\\\
வரவேற்கத்தக்கது..!
சிறப்பு நீதி மன்றம் மற்றும் சிபிஐ விசாரணைக்கு ஜென்டில்மேன் சகாயம் பரிந்துரை வரவேற்கத் தக்கது. 
கிரனைட் கொள்ளை நாடு தழுவியது என்பதால், குறைந்தபட்சம் தமிழகம் தழுவியது என்பதால், அவற்றை முழுமையாக வெளியே கொண்டு வந்திட இந்த பரிந்துரை சாலப்பொருத்தம்!

நடவடிக்கை பாய்வதே நாட்டுக்கு நல்லது; விரிவடைந்தாலே ஒழிய வீணர்கள் அனைவரையும் வீதிக்கு கொண்டு வர முடியாது! இதை சென்னை உயர்நீதி மன்றம் செய்யும் என நம்புவோமாக!
----\\\\
வெங்கைய்யாவின் வித்தாரப்பேச்சு!
ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) மசோதா 7ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இது அறிமுகமானால் உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 1.5 - 2% உயரும். இது இந்தியாவுக்கு கிடைத்துள்ள மிக பெரிய வாய்ப்பு. இந்திய பொருளாதாரத்தை இதன்மூலம் வலுபடுத்த வேண்டும்!
அய்யா உங்களின் இந்த பேச்சும், முயற்சியும் சூப்பர்! உங்களின் மக்கள் மீதான அக்கரை கரைப்புரண்டு ஓடுவதைப் பார்த்து, உலக நாடுகள் 'நிவாரண உதவி' செய்தாலும் செய்யக்கூடும்.
ஆனால், ஒரு சின்ன டவுட்டு! இவ்வளவு நன்மை கொட்டிக்கிடக்கும் நன்மையை தாங்கி இருக்கும் இந்த மசோதா 7 வருடமாக விட்டத்தில் தொங்கவிட்டது யாருய்யா வெங்கய்யா? இது முன்னாடி இருந்த ஆட்சி இதை அறிமுகம் படுத்தியபோது "தீமை" யாக தெரிந்ததெல்லாம் இப்பொழுது உங்கள் ஆட்சியில் "நன்மை"யாக தெரியுதே... அது என்னய்யா? அதையும் சேர்த்து கொஞ்சம் சொல்லய்யா... அய்யா வெங்கய்யா..!
-----\\\\
செய்கூலி...!? போதுமா..?
👸🎊 
தற்போதைய  தமிழக புயல் மழை வெள்ள சேதாரம்... ரூ8,481 கோடி..!
செய்கூலி...!?
மாநில அரசு ரூ500 கோடி; மத்திய அரசு ரூ940 கோடி. 
மீதி ரூ7,041 கோடியை 
யார் கொடுப்பது..? 

லேடியும், மோடியும் சொல்வார்களா? கார்பரேட் எஜமான்கள் தருவார்களா?
இந்த சேதார அளவீடு கூட சரியாக இருக்காது; அதிகாரிகளின் 'ராஜ விசுவாசம்' காரணமாக  எவ்வளவு குறைத்து கணக்கு தரவேண்டுமோ அவ்வளவு குறைத்துத்தான் தந்திருப்பார்கள்! 
நிச்சயம் சேதாரம் இதுபோல் பன்மடங்கு இருக்கும்; அப்படித்தான் அதிகாரிகள் அளவிடுவார்கள் அல்லவா?
-----\\\\
பாஜக கெஞ்சவும் செய்யும், மிஞ்சவும் செய்யும்!
எதாவது ஒரு கூட்டணியில் அல்ல; இல.கணேசன் கூட்டணியில்தான் பாமக சேரும்; அதில் சந்தேகமே வேண்டாம்! டெல்லி கேஸ் ஒன்று அவர்களின் கழுத்துமீது தொங்கும் கத்தியல்லவா?
பாஜகவை மையப்புள்ளியாக வைத்து தமிழகத்தில் கூட்டணி வராது என்று கூறிட இயலாது; தங்களின் பலத்தைப் பலபிரயோகம் செய்து (மத்திய ஆட்சி, பணம்) கூட்டணி அமைக்கவே வாய்ப்பு இருக்கிறது; அதற்காக பாஜக கெஞ்சவும் செய்யும், மிஞ்சவும் செய்யும்!
உருவாகப்போகும் கூட்டணி நான்கு; மக்கள் நலக் கூட்டணி, அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, பாஜக கூட்டணி என வருவதற்கே வாய்ப்புகள் அதிகம்! ஒருவேளை பாஜக கூட்டணி அதிமுக அல்லது திமுக கூட்டணியில் ஏதாவது ஒன்றில் ஐக்கியம் ஆனாலும் ஆகலாம்! 

இன்று 24.11.15 PTTV மக்கள் மேடைக்கு!
விவாதத்தில்... திமுக ஜெயராஜ் பேசும்போது, "திமுகவை எதிர்க்க மற்ற கட்சிகளுக்கு என்ன தகுதி இருக்கிறது?" என்றார். உண்மைதான் ! திமுகவுக்கு இருக்கும் தகுதி 2ஜி அலைக்கற்றை யில் 1லட்சத்து 72 ஆயிரம் கோடி ரூ ஊழல் செய்த தகுதி தமிழகத்தில் தற்போதைய நிலையில் எந்த எதிர்கட்சிக்கும் இல்லை என்பது நூற்றுக்கு நூறுஉண்மை; ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்!
-----\\\\
கண்டிக்கத்தக்கது! 
தேவகோட்டையில் நியூஸ் 7 தமிழ் டிவி ஊடகவியாலரைத் திமுக பிரமுகர் தாக்கியச் செயல் கண்டிக்கத்தக்கது! 
திமுக சார்பு ஊடகங்களைவிட, தற்போதை புயல், கனமழையால் ஏற்பட்ட சேதாரங்களை, அதை எதிர்கொண்டு மக்களுக்கு ஆற்ற வேண்டிய பாதுகாப்பு பணிகளில் உள்ள குறைபாடுகளை அம்பலப் படுத்திவருவதே திமுகவின் இத்தாக்குதலுக்கு காரணம் என தோன்றுகிறது!  

நியாயமாக பார்த்தால் எதிர்கட்சி என்கிற முறையில் ஆளும் கட்சியை அம்பலபடுத்தினால், அதை பார்த்து சந்தோச படவேண்டும்! அது திமுகவுக்கு இல்லாதது, அதன் காழ்புணர்ச்சியையே காட்டுகிறது!
இன்று 24.11.15 News 7 ?கேள்வி நேரம் நிகழ்ச்சியில் இதன்ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
-----\\\
கைப்புண்ணுக்குக் கண்ணாடியா?
கனமழை குறித்தும், அரசுகளின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகள் குறித்தும், அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள் செயல்பாடுகள் குறித்தும் நிறைய பேசிவிட்டோம். 
இயற்கை இடர்பாடுகளில் இருந்து மக்களை காப்பதில் காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகளின்...

அதாவது ஆண்ட கட்சிகளும், அவர்களின் அவர்களை சார்ந்தவர்களின் சுயநலமே காரணம் என்பதை மறுக்க முடியாது என்பதற்கு, மேற்கண்ட கட்சிகள் ஒன்றை ஒன்று திட்டிக் கொள்வதில் இருந்தே தெரிந்துக் கொள்ளலாம்! 
கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை! 
இனியாவது வரும் அரசுகள் ஏரி, குளம், கண்மாய் மற்றும் வரத்து வாய்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றை பராமரித்தாலோடு, வானிலை அறிக்கைகளை "வேத வாக்கு" களாக மதித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து செயல்பட்டாலே போதும்... மக்களை கனமழை உள்ளிட்டு இயற்கை சீற்றத்தில் இருந்து பாதுகாக்கலாம்! 
இது நடந்தால் நன்று!
இன்று 24.11.15 PTTV நேர்படபேசுக்கு!
-----\\\\
சுமூகமாக நடக்குமா?
பாராளுமன்ற கூட்டத் தொடர் சுமூகமாக நடக்குமா? கூச்சல் குழப்பத்துடன் நடக்குமா? என்பது பாஜகவின் அணுகுமுறையை பொருத்துதான் இருக்கிறது. 
ஜிஎஸ்டி மற்றும் நில மசோதா நிறைவேற காங்கிரஸ் ஆதரவு தர வாய்ப்பு இருப்பதாகவே தோன்றுகிறது. ஏனெனில் அதற்காக அச்சாரம் பீகார்  தேர்தலுக்குப் பின் பாஜகவும், காங்கிரஸும் போட்டுவிட்டன என்றே தோன்றுகிறது!
இன்று 25.11.15 PTTV மக்கள் மேடைக்கு!
-----\\\\
அச்சம் நியாயமே!
நடிகர் அமீர்கான் அச்சம் நியாயமே! இதற்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்ததும் நியாயமே! 
சகிப்புமின்மை அதிகரிப்புக்கு காரணம் பாஜகவின் மதவெறி அரசியலே! 
சகிப்பு இன்மை அதிகரித்து வருவதை ஏற்க மறுப்பவர்கள் மூடர்களே! மட்டுமல்ல, மதவாத ஆதவாளர்கள் என்றால் மிகையல்ல! 
இன்று 25.11.15 News 7 ?கேள்வி நேரம் நிகழ்ச்சி...
-----\\\\
சகிப்பின்மையின் நிலைக்கண்ணாடி! 
அமீர்கான் அச்சமும், ரஹ்மான் ஆதரவும் நாட்டின் இன்றைய சகிப்பின்மையின் நிலைக்கண்ணாடி! 
சகிப்பின்மை அதிகரிப்பு பாஜகவின் மதவாத அரசியலே! 
இந்த ஆபத்தை அனைத்து மதசார்பற்ற கட்சிகளும், இடதுசாரி கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும் என்பதே காலம் இடும் கட்டளையாக இருக்கிறது. 
ஆகவே இசையமைப்பாளர் ரஹ்மான் அச்சம் மெய்யானதே; கடுகளவும் மிகையல்ல!  
இன்று 25.11.15 PTTV நேர்படபேசுக்கு!
----\\\\
என்ன தெரியலையா? 
இன்று 25.11.15 இல்... 
திருச்சியில் நடந்த மக்கள் நலக் கூட்டணி மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில், திருச்சி புறநகர் மாவட்டச்செயலாளர் சிபிஐ பேசியபோது... 
"ஸ்டாலின் நமக்கு நாமே  மீட்பு பயணத்தில், ஒரு கிழவியின் கையைப்பிடித்து, 'பாட்டி இந்த முறை திமுகவை ஆதரியுங்கள்' என்றாம்; அதற்கு அந்த பாட்டி, 'டேய் ஸ்டாலின் என்ன தெரியலையா?  நான் உங் கிளாஸ்மெட்டுட' என்றாராம்! (சிரிப்பு அலை)
இன்னொன்றும் கூறினார்... "மதுவிலக்கு குறித்த பேச்சில் ஜெயலலிதா உண்மையில், கோவனுக்குப் பதிலாக நத்தம் விஸ்வநாதனைதான் பிடித்து உள்ளே போட்டிருக்கணும்; அவர் சட்டமன்றத்தில் என்ன பேசினார் தெரியுமா? 'அம்மாவுக்கு தெரியாத மதுவா?' என்றாராம்! (மீண்டும் சிரிப்பலை!)
-----\\\\

பன்னாட்டு கம்பெனி நலன்..!
ஆக்கபூர்வம், அரசியல் இரண்டுமே ஏழை மக்களின் நலனை பேணுவதாக இருந்தால் நன்று! 
ஆனால் அவ்வண்ணம் அது அமைவதில்லை என்பதே உண்மை!  

அது இந்த தொடர் மட்டுமல்ல, எல்லா தொடரும் பன்னாட்டு கம்பெனி நலன் பேணும் விதமாகவே இதுவரை நாடும் மக்களும் கண்டு வருகிறோம்!
இன்று 26.11.15 News 7 ?கேள்வி நேரம் நிகழ்ச்சிக்கு!
----\\\\\
♦ 232 மாடுகள் 24 வாகணங்களில் சிறை; ♦ கண்ணுக்குட்டி ஒன்று இறப்பு!
♦ சேலம் சங்ககிரியில் பொதுமக்கள்மீது தடியடி! 
♦ மார்க்சிஸ்ட் தலைவர்கள் போலீஸ் காவலிருந்து சற்றுமுன் விடுவிப்பு!
😈😈😈😈😈😈😈
ஈரோட்டில் இருந்து ஆந்திராவுக்கு மாடுகளை விவசாயிகள் விவசாயத்திற்கு வாங்கி சென்றுள்ளனர். 
"புளூகிராஸ்" என்கிற பெயரில் இந்துத்வாதிகளின் நிர்பந்தத்திற்கு பணிந்து, சேலம் காவல்துறை இன்று 26.11.15 காலை 9 மணிமுதல் மாடுகளையும், ஓட்டுனர்களையும், வாகணங்களையும் "அரஸ்ட்" செய்து வைத்துள்ளது. 

மாடுகள் தீவணம் இன்றி வாடிஉள்ளது. கன்றுக்குட்டி இறந்துள்ளது. ஓட்டுனர்கள் மீது வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளது. 
இதற்கு எதிராக திரண்ட சங்ககிரி மக்கள் மீது தடியடி நடத்தி உள்ளது. 
இப்போராட்டத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமமூர்த்தி, நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பெருமாள் ஆகியோரை காவல்துறை காவல் நிலைய காவலில் வைத்துவிட்டு, பொதுமக்களை அடித்து விரட்டிவிட்டு, புதிய ஓட்டுனர்களை கொண்டு மாயவரம் கொண்டு செல்லப்படுவதாக சொல்கிறார்கள்! 
மதவெறி சக்திகளின் நிர்பந்தத்திற்கு துணை போய் உள்ள காவல்துறையின், தமிழக அரசின் இத்தகைய மாடுகள், மனிதர்கள் விரோதப் போக்கு கண்டிக்கத்தக்கது.
-----\\\\\
அந்த குழந்தையின் அழுகுரலால் சிலையோடியது!
இன்று 27.11.15 காலை 8 மணி அளவில் நான் ரத்த பரிசோதனை நிலையம் சென்றிருந்தேன். அங்கு 'மம்மி, மம்மி' என்று ஒரே அழுகையோ அழுகை... அந்த  MED LAB, அந்த குழந்தையின் அழுகுரலால் சிலையோடியது! நான், என்னை நானே வெட்கி தலைகுனிந்துக் கொண்டேன். 

அந்த 2, 3 வயது குழந்தை தனது ரத்தம் பரிசோதனைக்கான ரத்தம் எடுக்கையில்தான் இந்த 'மம்மி' 'மம்மி' என்ற குரல் ஒலித்தது! 'அம்மா' 'அம்மா' என்று அழவில்லையே... 
அதற்காக அக்குழந்தையின் தாய் தந்தையோ, லேப் சிப்பந்திகளோ, வந்திருந்த மற்ற  மற்றவர்களோ எந்தவித அசூசையும் கொள்ளவில்லை; அந்த குழந்தையை சுத்தி சுத்தி வந்தனரே தவிர, 'உங்களின் தாய் மொழி ஆங்கிலமா?' என கேட்கவில்லை; நானும்தான்!
என் சோதனையை முடித்துக் கொண்டு வெளியே வந்தேன். அந்த 'மெட்லேப்'க்கு மிக அருகில் இருந்த குப்பை தொட்டியில், தனக்கு வேண்டுமென்ற 'குப்பைப் பொருளைப்' பொறுக்கிக் கொண்டு, அதை சேகரித்த வைத்திருந்த குப்பைமூட்டை மீது அமர்ந்து கொண்டு, அவர் படித்த பழைய 'நியூஸ்' பேப்பர் "தமிழ் செய்தி தாள்!" அவரோடு அது போய்விடுமோ..? என்ற அச்சம் என் நெஞ்சத்தில் 'சூல்' கொண்டது; அது தவறாகுமா?
-----\\\\
'சத்தம்' போட்டு பேசி, அதை நம்ப வைக்க முடியும்...
"தாத்தா அந்த நடிகர் ஏன் சத்தம் போட்டு பேசுறாரு.." என்கிறார் பேரன் தாத்தாவிடம். "சத்தம் போட்டு பேசுவதால் அவர் பேசும் பொய் உண்மையாகிடும் என்று அவர் நம்புகிறார்" என்று தாத்தா பதிலளிக்கிறார்! அந்த அப்படியே போகிறது அந்த விளம்பரம்!
இது, இன்று 27.11.15 PTTV இல் காலை 9 மணி புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சி முடிந்ததும் வந்த விளம்பரங்களில் ஒன்று. ஆம், இந்த விளம்பரத்தில் வரும் அந்த வசனம் தான் குறிப்பிட விரும்புவது!

இந்த நிகழ்ச்சியில்  மட்டுமல்ல, பாஜகவினரின் பேச்சு இப்படித்தான் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து இருக்கிறது பாராளுமன்றத்திற்கு உள்ளும் வெளியேயும்!  
இவர்களின் மதவாத, பாசிச வெறிப்பேச்சுகளை தொடர்ந்து 'சத்தம்' போட்டு பேசி, அதை நம்ப வைக்க முடியும்... அதாவது ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகி விடும்; அல்லது அதை உண்மை ஆக்கிவிடுதன் 'கோயாபல்ஸ்' வேலையை செய்து வருகிறார்கள்! 
இப்படிப்பட்ட அவர்களை பெரிதும் அச்சுறுத்தும் அல்லது அவர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் 2 வார்த்தைகள்... "மதச்சார்பின்மை" "சோசலிசம்"ஆகியவையே! அதைப் பற்றிய விவாதம்தான் இன்றும்! 
நேற்று மக்களவையில் ராஜ்நாத்சிங்.. எடுத்த வாந்தியையே ராமசுப்ரமணியனும் எடுத்தார். அதை பற்றி நமக்கு ஒன்றுமில்லை; சங் பரிவாரம் அப்படித்தான் பேசும்! 
நமக்கு இதில் நெருடல் என்னவென்றால்... நெறியாளர் ஜென்ராம் சொன்னதான்! "இங்கும், அங்குமாக நடக்கும் இந்துத்வா வெறி நடவடிக்கையால் நமது அரசியல் சாசணத்தின் அடித்தளத்தை அல்லது நமது மதசார்பின்மை அடித்தளத்தை அவைகள் அசைத்துவிடும் என்று என்மனம் ஒத்துக்கொள்ளவில்லை (கன்வின்ஸ் ஆகவில்லை) என்றதுதான்!"
----\\\\
ஆயிரம் முகம் கொண்டதுதான் ஆர்எஸ்எஸ்!
ஆயிரம் முகம் கொண்டதுதான் ஆர்எஸ்எஸ்; அதன் சேவகர்தான் ராஜ்நாத்சிங்; அதன் அரசியல் பிரிவுதான் பாஜக! 

இட ஒதுக்கீடு குறித்த ராஜ்நாத்சிங் கருத்து பாஜக கருத்தா? 
அவர்களின் அனைத்திந்திய 'பொதுக்குழு'வில் தீர்மாணம் போடுவார்களா? ஆர்எஸ்எஸ் தீர்மாணம் போடுமா? பட்டேல் சமூகத்தை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் பாஜகவா மன்டல் சிபாரிசை அமலாக்க போகிறது? அது சும்மா! 
இதன் வித்தாரப் பேச்சுகளில் இதுவும் ஒன்று என்பதே உண்மை!
இன்று 27.11.15 PTTV மக்கள் மேடைக்கு!
இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது!
-----\\\\
சர்வாதிகார-பாசிசப் போக்கு என்றால்...
சர்வாதிகார-பாசிசப் போக்கு என்றால்... "இந்தியா என்பது ஒரே மதம்; அரசியலமைப்பு அதன் புனித நூல்" என்பதே!  இந்த முத்துக்களை உதிர்த்திவர் யார்? எங்கே? இந்தியாவின் வெளிநாடு பிரதமர் மோடிதான்; இந்தியாவின் உள்நாட்டு பாராளுமன்றத்தில்தான்! இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ..!
-----\\\\
சிந்தாமல், சிதறாமல் இருந்தது! நன்று!
இன்று 28.11.15 PTTV புதுப்புது அர்த்தங்களில்பத்திரிக்கையாளர் வெங்கடேஷ், சிபிஐஎம் சிந்தன், இவர்களுடன் நெறியாளர் ஜென்ராம்..முதலில் நான் இந்த விவாதம் பயனுள்ளது என்றே பதிவு செய்கிறேன். 
இதில் 3 விசியம்... இந்து ராம் சொன்ன 'அனைத்து மதத்தையும் சமமாக பாவிப்பதே 'மதச்சார்பின்மை' என்பது; மோடியார் சோனியா-சிங் சந்திப்பு; மோடியாரின் 'அரசியல் சட்டமே புனித நூல்' என்ற பேச்சு!
சிந்தன் விவாதமே விவாதத்தை இழுத்து சென்றது நன்று. இந்து ராம் பேச்சு மேம்போக்கானது மட்டுமல்ல, ஆச்சரியம் தர தக்கதே! மோடியார் தங்களது 'உச்சநிலை'யில் இருந்து இறங்கி வந்தது.. 
ஜிஎஸ்டி வரி பில்லில் 'முதலாளிகள் நிர்ப்பந்தம்' என்பதை வெங்கடேஷ் லேசாக சொன்னதுதான் பிரதானம் என சிந்தன் அழுத்தம் தந்தது அருமை! அடுத்து மோடியாரின் 'வரலாற்று சிறப்புமிக்க' உரையை சிந்தன் நாடகம் என்றதுகூட மிக மென்மையே!  
புலி பசித்தால் புல்லைத் தின்னும் என்றால் ஏற்க முடியுமென்றால், மோடி உரைவீச்சையும் ஏற்கலாம்! ஜென்ராம் அவர்கள் சிபிஐஎம் இல் கூட வரம்பு மீறுபவர்கள் இருக்கத்தானே இருந்தார்கள் என பாஜகவிலும் இருக்கத்தானே இருப்பார்கள் என்றார்; அவர் ஒப்புக்காக சொன்னதாகவே வைத்துக் கொண்டாலும், பாஜக நிர்வாகிகள் மீது வரும் குற்றசாட்டுகள் தனிநபரோடு முடிந்துவிடும் ரூபாஅணா பிரச்சனையா? 
(அதுக்குசிபிஎம்நடவடிக்கை எடுத்துவிட்டது என்பதை சிந்தன் சரியாக சுட்டினார்)பாஜக சு.சாமி முதல் சாக்ஷி வரை பேச்சும் பேச்சால் நாடு திணறவில்லையா? சிறுபான்மை மக்கள் அச்ச உணர்வில்தானே அனுதினமும் இருக்கிறார்கள்; 
எத்தனைபிரச்சனைகள்..மாட்டுக்கறி முதல் பாக்கிஸ்தான் போ வரை கொஞ்சமா? நஞ்சமா? இதை எல்லாம் மோடியார் உரைவீச்சுகட்டுபடுத்துமா? அப்படியொரு மூட நம்பிக்கை ஜென்ராமுக்கும், வெங்கடேஷ்க்கும் தேவையில்லை என்றே தோன்றுகிறது! தோழர் சிந்தன் விவாதம் அளவோடு சிந்தாமல், சிதறாமல் இருந்தது! நன்று!
----\\\\
விஸ்வரூபம் எடுக்கும்!
தேர்தலில் மதுவிலக்கு பிரச்சனை நிச்சயமாக விஸ்வரூபம் எடுக்கும்! யார் கையில் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும்... 
மது ஒழிப்பு போராளி காந்தியவாதி சசிபெருமாளை தன் கையில் எடுத்து அடக்கம் செய்த 'மக்கள் நலக் கூட்டணி' யும், அதன் உறுப்புக்கட்சிகளான மதிமுக, சிபிஐஎம், விடுதலை சிறுத்தைக் கட்சி, சிபிஐ ஆகியவை கையில் எடுக்கும்! 
மதுவிலக்கு போராளிக்கு செலுத்தும் அஞ்சலியும் அதுவே! தமிழக தேர்தலில் மையப்பிரச்சனையாக மதுவிலக்கு மாறுவதை யாராலும் தடுக்க முடியாது!
இன்று 28.11.15 PTTV நேர்படபேசுக்கு!
-----\\\\
தமிழக அரசு எதிர்ப்பது கவனிக்கத்தக்கது..!
ஜிஎஸ்டி வரி பில்லை தமிழக அரசு எதிர்ப்பது கவனிக்கத்தக்கது. இது மாநில வருவாய்யை அரிப்பது; மத்திய வருவாய்யை அதிகரிப்பது; இந்நாட்டு அயல்நாடு (பாக்கிஸ்தான் உள்ளிட்டு) முதலாளிகளின் வருவாய்யை அபரிமிதமாக்குவது என்பதுதான் இதன் அம்சம்! 
இதில் காங்கிரஸ் 'கைதூக்குவதற்கான' வாய்ப்பே அதிகம் இருக்கிறது; பெரும் முதலாளிகளின் நிர்பந்தமே மோடியின் தேநீர் விருந்தும், சோனியா-மன்மோகன்சிங் பங்கேற்பும் நடந்திருக்கிறது என்றே தோன்றுகிறது! மாநில நலன்களைவிட பன்னாட்டு முதலாளிகள் நலனே பாஜகவுக்கும், காங்கிரஸ்க்கும் முக்கியம்!
இன்று 28.11.15 News 7 கேள்வி நேரம்..!
----\\\\

Saturday, 21 November 2015

அய்யோ அய்யோ..!

இன்று 21.11.15 PTTV புதுப்புது அர்த்தங்களில்... நெறியாளர் ஜென்ராமுடன் எழுத்தாளர் ஞானி, பத்திக்கையாளர் மணி...

நிதீஷ் முதல்வர் பதவி ஏற்பு பற்றியும், சுற்றியும் இருந்தது. விவாதத்தின் இறுதியில் விடைத் தெரியாமல், இவர்கள் திண்டாடிய ஒரு விடயம் பற்றியதுதான்... 

ஆம், பாஜகவே பங்கேற்றது; வாழ்த்து கூறியது; ஆனால் அண்ணா திமுக வாய் திறக்கவில்லையே என்றதுதான்... 

வேறொன்றும் இல்லை... 
காரணம் மிக எளிதானது... அதிமுகவை பொறுத்தவரை 'ஏகாதிபத்தியம்' திமுக; திமுகவை பொறுத்தவரையில் 'ஏகாதிபத்தியம்' அதிமுக; வேறென்ன "பொடலங்காய்" இருக்கு? 

ஸ்டாலின் சத்தமில்லாமல் போயிருந்த கூட பரவயில்லை;  நகைசுவை நடிகர் வடிவேல் மாதிரி...

'நான் பீகார் போறேன்; நான் போறேன்; மதசார்பற்ற மெகா கூட்டணி உருவாக்க போறேன்... போறேன்... போறேன்...' ன்னு அலகொட்டிக்கிட்டு போனாரே... அதுதான் காரணம் அதிமுக வாழ்த்து நிதீஷ் க்கு 'கெடைக்காமல்' போனது! 

வேறென்ன? இதுகூட உங்களுக்கு தெரியல... அய்யோ அய்யோ..!

----\\\\ 

திருமா பதில் 'நச்'

இன்று 15.11.15 இரவு 9-10 மணித்துளிகளில் PTTV இல் 'அக்னி பரிட்சை' நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. நிர்வாக ஆசிரியர் ஷண்முகநாதனின் அனைத்து கேள்விகளுக்கும் விசிக தலைவர் திருமாவளவன் 'டான்டான்' என்று பதிலளித்து அருமை. 

'சாதி-மதவெறி, ஊழல், மது இவற்றால் தமிழகம் அழிந்து வருவதற்கு இதுநாள் வரை ஆட்சி புரிந்த திமுக அதிமுக காரணம் இல்லையா?' என்ற எதிர் கேள்விக்கு விடைதான் "மக்கள் நலக் கூட்டணியும், அதன் குறைந்தபட்ச செயல்திட்டமுமே" என மிக ஆணித்தரமாக வாதிட்டார் என்பதே நிகழ்ச்சியின் முத்தாய்ப்பு என்றால் மிகயன்று! 

சாதிய அமைப்புகளின் கட்டமைப்பே சங் பரிவாரம் என்பதை அழுத்தம் திருத்தமாக கூறியது சிறப்பு; அதவிட சிறப்பு 'பாமக சாதி கட்சி என்றால் விசிக சாதி கட்சி இல்லையா?' என்ற கேள்விக்கு அளித்த பதில்தான்.  விசிக ஒரு போதும் சாதிகட்சியாக பிரகடனப் படுத்தவில்லை என்றார். 

ஆனால் பாமக தனது பரப்புரையில் 'வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை' என்றது; விசிக சொன்னதா?  பாமக கட்சி கொடியும், சாதி சங்க கொடியும் ஏற்றுதே... தமிழகத்தில் எந்த கட்சியாவது அப்படி செய்கிறாதா? என்ற கேள்விக்கு ஷண்முகநாதனிடம் பதிலில்லையே!  சங் பரிவாரம் தான் அனைத்து (தலித் அல்லாத) சாதி அமைப்புக்கும் ஆலோசகர்கள் என்று போட்டுடைத்தது சூப்பர் திருமா..! 

பிஜேபி க்கும் 2 கொடிதான் என்பதை திருமா சொல்ல மறந்து விட்டார்; ஆம், மதத்திற்கு காவி கொடி;  கட்சிக்கு ஒரு கொடி! "மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; கட்சி சாராதவர்கள் 60-70% பேர் இருக்கிறார்கள்; அவர்கள்மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது; அவர்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள்; நாங்கள் ஆட்சியை அமைப்போம்" என்று நறுக்குத் தெறிதாற்போல் அளித்த திருமா பதில் 'நச்' சென்றிருந்தது.

----\\\\

மீட்பு பணி போதுமானதல்ல!

மீட்பு பணி போதுமானதல்ல என்பதே நிதர்சனமான உண்மை! தேர்தல் மட்டும் சமீபத்தில் வரவில்லை எனில் இந்த நிவாரணமும் கிடையாது. 
மக்கள் நலக் கூட்டணி சார்பில்தான் இதை தேசிய பேரிடராக அறிவித்து போர் கால நிவாரணம் கோரியதோடு, களத்தில் துணை நிற்கிறார்கள். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்திற்கு நாடு முழுவதும் நிவாரண உதவி கேட்டு அறைகூவல் விடுத்து களப்பணி ஆற்றிடும் ஒரே அகில இந்திய கட்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று 16.11.15 PTTV மக்கள் மேடைக்கு! இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

-----\\\\
ஆமை வேகத்தில்!

அரசின் துயர் துடைக்கும் பணி ஆமை வேகத்தில்தான் நடக்கிறது. உதாரணமாக வெள்ளம் புகுந்து ஒரு வாரம் கழித்துத்தான் முதல் அமைச்சர் காரில் ஆய்வு செய்வதை குறிப்பிடலாம்! 

இனிமேல்தான் அமைச்சர் பெருமக்கள் இறங்கிட வாய்ப்பு ஏற்படக்கூடும். முதல்வரின் இந்த 5 நிமிட ஆய்வும் தேர்தல் வருவதால்தான்! ஆக, எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு சரியே! 

கனமழை மட்டுமல்ல நாளு தூத்தல் விழுந்தாலும் தாங்காத சென்னைதான் இன்றைய சென்னை. இதுவரை இருந்த மாநில அரசுகளின் தொலைநோக்கற்ற செயல்கள்தான் காரணம். 

அரசு செய்ய தவறியது, முறையான மழைநீர் வடிகால் கட்டமைப்பு இல்லாததேக் காரணம்!

இன்று 16.11.15 PTTV நேர்பட பேசுக்கு! இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

??????

வெள்ளம் புகுந்து ஒருவாரம் கழித்துதான் தமிழக முதல்வர் ஆமை வேகத்தில் ஆய்வு செய்ய அய்ந்து நிமிடம் ஒதுக்கி உள்ளார். அதுவும் சட்டமன்ற தேர்தல் வருவதால்தான்! இல்லையென்றால் அதுவும் இருந்திருக்காது.  

பாவம்! எதிர்கட்சிகள்தான் குறிப்பாக மக்கள் நலக் கூட்டணிதான் மழை பாதிக்கப்பட்ட மக்களோடு மல்லுக்கட்டிக் கொண்டு கிடக்கிறார்கள் என்றால்... அதுதான் உண்மை! 

இன்று 16.11.15 News 7 ? கேள்வி நேரம் நிகழ்ச்சிக்கு!

-----\\\\

தோழர் தாரைப்பிதா அவர்களின் கவனத்திற்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து மழையால் பாதிக்கப்பட்டமக்களுக்கு நவம்பர்  8 முதல் இன்றுவரை கடலூர் உட்பட பல மாவட்டங்களில்  தளத்தில் இருந்து உதவி வருவது  ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள். உண்மையில் கஸ்டப்படுபவர்களை ஒரு நிமிடமாவது பாராட்டுங்கள். உங்களைப் போன்றவர்கள் பாராட்டுவது உழேப்பாளிகளுக்கு கிடைக்கும் ஆறுதளாகும்.
----

தோழர் கிருஷ்ணசாமி அவர்களுக்கு... ஊரக வளர்ச்சித்துறை, மின்துறை உள்ளிட்டு அரசு சார் ஊழியர்களின், துயர் துடைப்பு பணி அளப்பரியது; மகத்தானது! அதை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை! 

ஆனால் இங்கே ஆளும் கட்சியும், அதன் பக்கவாத்தியங்களளும், அமைச்சர் துறைமார்களும் என்ன செய்தார்? இவர்களும் உயர் அதிகாரிகளும் கடந்த 50 ஆண்டுகளாக செய்த தொலைநோக்குத் திட்டங்களும் என்ன என்பதுதான் கேள்வி? அதேசமயத்தில் இடதுசாரிகளும், அவர்களது அமைப்புகளும் இதுபோன்ற காலங்களில் ஆற்றும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை அப்பணிப்புடன் யார் செய்கிறார்கள்? 

ஆகவே இவர்களை பாராட்டுகிறபோது, அப்பணிப்புடன் பணியாற்றும் அரசு சார் அனைத்து ஊழியர்களைக்கும் அந்த பாராட்டு தானாக போய்சேருகின்றது என்பதே உண்மை!

----\\\\

காலிலே செருப்புகூட இல்லாமல்..!

தோழர் கேபி., அவர்களுக்கு, வணக்கம். கடந்த 9ஆம் தேதி புயல் கடலூர் மாவட்டம் உள்ளிட்டு சென்னை வரை கடுமையாக தாக்கி புரட்டிப் போட்டுவிட்டது; 71 பேர் இறந்துள்ளனர் என்பதும், கோடிக்கணக்கான ரூபாய்  நாசம் என்பதும் வேதனையின் உச்சி! 

இந்நிலையில் மக்களின் தொண்டர் என்ற அடிப்படையிலும், சட்டமன்ற உறுப்பினர் என்கிற முறையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் சார்பு அமைப்புகள், மக்கள் நலக் கூட்டணி மற்றும் அதன் சார்பு அமைப்புகள் துணை கொண்டு தாங்கள் ஆற்றிவரும் பணி மகத்தானது; மெய் சிலிர்க்க வைக்கிறது!

காரிலே வந்து, நீரிலே கால் வைக்காமல் "களப்பணி" ஆற்றும் ஆட்சியாளர்களுக்கு மத்தியில், காலிலே செருப்புகூட இல்லாமல், சேற்றிலும், சகதியிலும், இடர்பாடு இடுக்குகளிலும் இருபத்து நான்கு மணி நேரமும், களத்தில் நின்று, துயர் துடைக்கும் பணியில், வேட்டியை மடித்துக்கட்டி ஆற்றிவரும் தங்களின், நம் தோழர்களின், மக்கள் நலக் கூட்டணியின் பணி மிகுந்த பாராட்டுக்குரியதே!

[11/17/2015, 08:27] +91 99942 46764: நன்றி தோழர்

பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை! 

இன்று 17.11.15 WhatsApp இல் நண்பர் ஒருவருக்கு கீழ்காணும் பதில் ஒன்றைப் பதிவு செய்தேன்.. 

"தோழர் கிருஷ்ணசாமி அவர்களுக்கு... ஊரக வளர்ச்சித்துறை, மின்துறை உள்ளிட்டு அரசு சார் ஊழியர்களின், துயர் துடைப்பு பணி அளப்பரியது; மகத்தானது! அதை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை! 

ஆனால் இங்கே ஆளும் கட்சியும், அதன் பக்கவாத்தியங்களளும், அமைச்சர்துறைமார்களும் என்ன செய்தார்? இவர்களும் உயர் அதிகாரிகளும் கடந்த 50 ஆண்டுகளாக செய்த தொலைநோக்குத் திட்டங்களும் என்ன என்பதுதான் கேள்வி? அதேசமயத்தில் இடதுசாரிகளும், அவர்களது அமைப்புகளும் இதுபோன்ற காலங்களில் ஆற்றும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை அப்பணிப்புடன் யார் செய்கிறார்கள்? 

ஆகவே இவர்களை பாராட்டுகிறபோது, அப்பணிப்புடன் பணியாற்றும் அரசு சார் அனைத்து ஊழியர்களைக்கும் அந்த பாராட்டு தானாக போய்சேருகின்றது என்பதே உண்மை!"

-----

இயற்கை கொடையை பேரிடர் என்பதா?

இதனை தொடர்ந்து  இன்று காலை 9 மணிக்கு PTTV புதுப்புது அர்த்தங்கள் பார்க்க நேர்ந்தது. அதில் விவாதித்த பத்திரிக்கையாளர்கள் வெங்கடேஷ், அய்யநாதன், கார்த்திகேயன்... ஆகியோர் கருத்துக்களும் அந்த நண்பருக்கு பதிலாக அமைந்ததுதான் ஆச்சரிய பொருத்தமாக இருந்தது.  இயற்கை கொடையை பேரிடர் என்பது வேதனையே என்ற பதிவு அருமை! 

பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளும், அமைச்சர்களும் ஆட்சியாளர்களும்... இதற்கென தொலைநோக்கின்றி செயல்பட்டதும், செயல்படுவதுமே காரணம் மட்டுமல்ல... இதற்கென்று ஒதுக்கப்பட்ட
தொகைகளை தங்களுக்குள் ஒதுக்கீடு செய்து "தின்றுத்தீர்த்து" விட்டதே.... இந்த தீராத துயரத்திற்கு காரணமென அய்யநாதன் 'அடித்து' விட்டார் பாருங்கள் அதுதானே உண்மை!

-----\\\\\

அரசியல் முத்திரை குத்துவது ஆளும் கட்சியே!

தேவையை உணர்ந்து பணியாற்றுவதில் இடதுசாரி கட்சிகளும், மக்கள் நலக் கூட்டணி கட்சிகளும் கௌரவம் பார்க்க மாட்டார்கள்; இணைந்து பணியாற்றுவதில் தயக்கம் காட்டுவதில்லை என்றுமே! 

ஆனால் மீட்பு பணிகளை  விரைந்து செய்யுங்கள் என்று அரசுகளை கேட்டாலே, அது அரசியல் என முத்திரை குத்தி அரசியல் நடத்துபவைகள் ஆளும் கட்சிகள்தான்! 

இன்றும் 17.11.15 நேற்றும் PTTV வில் மக்கள் மேடை நிகழ்ச்சி புதுவிதமாக அமைந்திருப்பது நன்று! ஆனாலும் மாநிலத்தில் சில முக்கிய நகரில் இதுவரை பங்கேற்றனர். இனி, சென்னை நேயர்களுக்கு மட்டும்தானா? தெரியவில்லை!

இன்று அதிமுக பாரதி, தோழர் பி.சண்முகம் சிபிஐஎம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், வழக்கம்போல் மேற்குவங்கத்திற்கு பயணம் ஆகிவிட்டார். அங்கு தற்போது மம்தா ஆட்சி இருப்பது தெரியவில்லை போலும். 

"அரசே நீர்நிலைகளை ஆக்கிரமித்து, கட்டிடங்கள் பேருந்து நிலையம் உருவாக்குகிறது; பயிர் சேதாரத்திற்கு நிவாரணம் தரவில்லை; சுனாமி, தானே புயலால் வந்த பாதிப்பில் இருந்து எந்த அனுபவம் பெறவில்லை" என கூறியதற்கு பாரதிக்கு பொத்துக்  கொண்டு வந்துவிட்டது கோபம். 

கோபம் வந்து என்ன பயன்... கடந்த ஒரு வாரமாக சிபிஐஎம் அதன் சார்பு அமைப்புகளும், நிவாரணப்பணி செய்து வருகிறார்களே... அதிமுக ரத்தத்தின் ரத்தங்களின் பணி எங்கே? அரசு தருவதும், செய்வதும் அதிமுக செய்வதில்லையே பாரதி!

-----\\\

லஞ்ச-ஊழலும் பிரதானக் காரணம்!


நீர்நிலை உடைப்பு ஏன் என்றால்... நீர்நிலை நிர்வாக குறைப்பாடு ஒருபுறம் என்றால், மறுபுறம் நீர்நிலை தேக்கம் உருவாக்கத்தில், அதாவது கட்டுமான பணியில் தலைவிரித்தாடும் லஞ்ச-ஊழலும் பிரதானக் காரணம். 

இயற்கை பேரிடரை சமாளிப்பதற்கு ஒரே வழி நேர்மையான, தூய்மையான முறையில், நாட்டின் நலனே முக்கியம் என செயல்படும் அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஆட்சியில் அமர்ந்தால் மட்டுமே அது சாத்தியம்!

இன்று 17.11.15 PTTV நேர்படபேசுக்கு!

-----\\\\\

பாக்கியம் விவாத நகர்த்தல் அருமை!

இன்று17.11.15 News 7 கேள்வி நேரம் நிகழ்ச்சி... சிபிஐஎம் பாக்கியம், சமூக ஆர்வலர் சுமன், பாஜக ராமசுப்ரமணியன், காங்கிரஸ் வேலுசாமி, நெறியாளர் செந்தில்...
சு.சாமி ராகுல் பற்றி பிரிட்டன் குடியுரிமை இருப்பதாக விவாதம்...

காங்கிரஸ் வேலுசாமி வேஸ்ட்; இது பாஜக வின் காமெடி என இவர் காமெடி செய்துவிட்டு சென்றுவிட்டார். 

பாக்கியம் தான் பாய்ண்டை பிடித்தார்... "அப்படியே இருந்தாலும் பாஜக எழுப்புவதில் அரசியல் நோக்கம் இருக்கிறதென்று, சுஸ்மா சுராஜ் பக்கம் பிரச்சனையை இழுத்து சென்று, பாஜக முகத்திரையை கிழித்தார்; ஆம், லலித்மோடியை போட்டு மூடிமறைத்த முகமூடியை கிழியோ கிழியென்று கிழித்தார். 

சுமன் அது தவறாக இருக்கும்; அப்படியே இருந்தாலும் இது அந்ந அரசுதான் நடவடிக்கை எடுக்கனும் என்றார்; அதோடு சுமிதாராணியின் வன்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றினார்; அதுபோல் மோடி மனைவி குறித்தும் நினைவுபடுத்தப் பட்டது. 

இன்று ராமசுப்ரமணியன் சுருதி, சுருதிராணி விசயத்தில் குறைந்துவிட்டது.  ஆனால் லலித்மோடி குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளி இல்லையென சப்பைக் கட்டி, சப்புக்கொட்டிச் பரிதாபமாக காட்சியளித்தார். 

தோழர் பாக்கியம் பாஜகவுக்கு எதிராக விவாதத்தை நகர்த்தினார் அருமையாக! ஆம், நெறியாளர் செந்திலும்தான்! சபாஷ்!

------\\\\\

"ஒரு சிவப்பு சலாம்!"

சென்னை தாம்பரத்தில்... 
மீட்பு பணியில் நம் ராணுவ வீரர்கள்...!
ராணுவ வீரர்களுக்கு... 
"ஒரு சிவப்பு சலாம்!"

----\\\\
வக்ரம்!


இது என்ன வக்ரம் பாருங்கள்! இன்று காலைக்கதிர் 18.11.15இல் வந்துள்ள கார்டூன்..! இதுதான் கேலிசித்திரமா? வாக்காள பெருமக்களே... என ஏசி காரில் ஓசி பயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்திடும் தமிழக முதல்வரை நோக்கி எந்த கேலியும், கிண்டலும், விமர்சனமும் இல்லை! 
அரசு செய்ய வேண்டிய வேலைகளை எதிர்கட்சிகள் ஆற்றி வரும் பணியை இப்படி நக்கல் அடிப்பதுதான் ஊடக சுதந்திரமா?

-----\\\\\

கூச்சலின்றி விவாதம்!

இன்று 18.11.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் சுருக்கம் காலை 9 மணிக்கு பார்க்க நேர்ந்தது. மார்க்சிஸ்ட் கே.கனகராஜ், திமுக கண்ணதாசன், நெறியாளர் கார்த்திகேயன்... 

நிதானமாக கூச்சலின்றி விவாதம் அமைந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று. கண்ணதாசன் அவர்கள் உணர்ச்சி வசப்படும்போது, அவருடன் சேர்ந்து தனக்கும் கூசால் போடும் வாய்ப்பு இருந்தும் கனகராஜ் அவர்கள் அதை தவிர்த்தது நல்ல முன் உதாரணம்.

மார்க்சிஸ்ட்கள் ஒருபோதும் யாரையும் கண்மூடித்தனமாக ஆதரிப்பதும், எதிர்ப்பதும் கிடையாது; உழைப்பாளிகள் நலன் சார்ந்தே தங்கள் நிலைபாடும், செயல்பாடும் இருந்தது என மிக அழுத்தமாக பதிவு செய்தார்.

திமுக மீதான விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாமல், குறிப்பாக பொதுதுறையை தனியாராக்கும் நிலைக்கு ஆதரவு தருகிறதே என்றால், அண்ணா பேருந்துகளை அரசுடமை ஆக்கியதென்கிறார்; இல்லையென்றால் அதிமுகவை விமர்சனம் செய்வதில்லையே என கூறுகிறார் கண்ணதாசன். மொதத்தில் கண்ணதாசன் கலையிழந்து போனார்; பாவம் அவரால் கனகராஜ் எழுப்பிய திமுகவின் செயல்-நிலை பாடுகள் குறித்த விமசர்த்திற்கு பழைய கால ஆட்சி உதாரணங்களையே சொல்லிக் கொண்டு இருந்தார்; இருக்கிறார்கள்! 

தமிழகத்தில் மாற்றுக்கு வாய்ப்பே இல்லையாம்! இப்படி பேசுவது மல்லாந்து படுத்துக் கொண்டு, எச்சில் உமிழ்வதுபோல்! ஆம், இப்படிபட்ட எண்ணம் கடந்த கால வரலாறுகளை மறக்கும், மறுக்கும் செயலே! ஆம், 1967 க்கு முன் திமுக இப்படி நினைத்திருந்தால், இன்று திமுகவே இல்லை; காங்கிரஸ்தான் இன்னும் தமிழகத்தில் ஆண்டுக் கொண்டு இருக்கனும் அல்லவா? 
(கண்ணதாசன் பழைய 'சாதனை'களையே பேசியதால், இந்த பழைய வரலாறு குறித்த பதிவு)

-----\\\\

News 7 tv இல் முதல் பதிவு..!

ஆரம்பிச்சிட்டாங்களா?  பாஜக கொண்டு வரும் கல்விக் கொள்கை என்பது காவிக் கொள்கையாகத் தான் இருக்கும்! முதலில் கல்வியில் காவிமய மாக்கி, பிஞ்சு நெஞ்சில் நஞ்சை ஊட்டும் அஜண்டாவின் வெளிப்பாடுதான் இது!

இன்று  18.11.15 News 7 tv கேள்வி நேரம் நிகழ்ச்சியில் இதன் ஒரு பகுதி (முதல்முறையாக) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நன்றி!

விவாதத்தில் விசிக ரவிக்குமார், முன்னாள்  துணைவேந்தர் விஸ்வநாதன், பாஜக ராஜலட்சுமி, கல்வியாளர் முருகய்யன், இவர்களுடன் நெறியாளர் செந்தில்...

பாஜக ராஜலட்சுமி "கல்வி துறையில் சீர்திருத்தம் மக்கள் நலன் கருதியே" வசனம் பேசினார். துணைவேந்தரும், கல்வியாளரும், எழுத்தாளரும்... நெறியாளரும் கூட, "இந்த கல்வி சீர்திருத்தம் இருப்பதை பறித்துவிடாமல், ஒற்றை கலாசாரம் பேசும், பழைய குலக்கல்வி முறை வந்து விடக்கூடாது" என தங்களின் அச்சத்தையும், அழுத்தத்தையும் பதிவு செய்தனர்.இரண்டு 

செய்தி: 1. ரவிக்குமார் அவர்கள் பேசும்போது, 'மாநில அரசுகள் கல்வியின் மாநில உரிமையை நிலைநாட்டுவதில், அக்கரை அற்ற போக்கில்தான் இருந்தன; இருக்கின்றன; அதற்கு இடதுசாரி அரசுகளும் விதிவிலக்கில்லை' என ஒரு போடு போட்டார். இந்தியாவிலேயே அதிக கல்வி பெற்ற மாநிலம் கேரளா என்பதையும், மாநில உரிமைகளுக்காக இடதுசாரி கட்சிகளைத் தவிர வேறெந்த கட்சியும் இல்லை என்பதை ஏன் பார்க்க தவறினார் என தெரியவில்லை!

2. அமெரிக்கா உள்ளிட்டு அயல்நாடுகளில் கல்லூரி வரையிலான வகுப்புகளிலும், ஓரிரு பாடங்கள் பெயில் மார்க் என்று மீண்டும் அதே வகுப்பில் விடுவதில்லை; மேல் வகுப்புக்கு சென்று பெயிலானத்தையும் படித்து பாஸ் பண்ணலாம் என்பதும், ஆந்திரா போன்ற மாநிலங்களில் +1, +2 மத்திய கல்லூரியாக இருக்கிறது என்பதும் புதிய பதிவாக, பின்பற்றக்கூடிய நல்ல பதிவாக இருந்தது! நன்று!

-----\\\\

ஏழைகள்தான் ஏமாளிகளா? 

தூய்மை இந்தியாவுக்கு ரயில் பயணிகள் தான் கிடைத்தார்களா? அதுவும் 2ஆம் வகுப்பு பாமரர்கள்தான் ஏமாளிகளா? 

அம்பானி, அதானிகளுக்கு தூய்மை இந்தியா இல்லையோ..! ?அவர்களுக்கு வரிப்போட்டால் தூய்மை இந்தியா தாங்காதோ..? 

"அந்த" கறுப்பு பணத்தை கொண்டு வந்து தலைக்கு ரூ15 லட்சம் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, தூய்மை இந்தியாவுக்கு பயன்படுத்தினாலே போதும்! 

ரூ10 கட்டணம் உயர்த்தாமல் அந்த கறுப்புப்பணத்தை வைத்து இந்தியாவை வெண்மை (தூய்மை) ஆக்கினால் "மோடிக்கு கோடி புண்ணியம்" கிடைக்கும்!

இன்று 18.11.15 PTTV மக்கள் மேடைக்கு!

----\\\\

பொதுநோக்கு இன்மையே!

மலைக்க வைக்கும் மழைச்சேதம்: பெரும்பாதிப்புக்கு காரணம் அரசாங்கம்-அரசியல்வாதி- மக்கள் இவர்களின் பொதுநோக்கு இன்மையே பிரதானக் காரணம்! 

குறிப்பாக நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் மனபோக்கும் இந்த மூவர் மட்டத்திலும் புரையோடி கிடக்கிறதென்பதை யாரும் மறுக்க முடியாது.  

ஒவ்வொருக்கும் பொதுநோக்கை வளர்ப்பதும், அது மீறப்படுகிறபோது சட்டம் தயவுதாட்சன்யமின்றி தன் கடமையை ஆற்றுவதுமே இன்றைய அவசர தேவை!

இன்று 18.11.15 PTTV நேர்படபேசுக்கு!

----\\\\

ஊசலாட்டத்தில் திமுக!

திமுக மட்டும் மதசார்பற்ற கட்சியல்ல;  இன்னும் நிறைய கட்சிகள் இருக்கிறது. ஆனால் திமுகவும் மதம் சம்மந்தப்பட்ட விடயத்தில் தற்சமயம் ஊசலாட்டம் செய்கிறது; 

அதற்கு இரு சாட்சி; 1. கலைஞரின்  இராமனுஜம் தொடர்; 2. ஸ்டாலினின் 90% திமுகவினர் இந்துக்கள் என்றது! மதசார்ப்பற்ற கட்சிகளின் மகா கூட்டணி "மக்கள் நலக் கூட்டணி"யால்தான் தமிழகத்தில் அமைக்க முடியும் என்றே தோன்றுகிறது; திமுகவால் அது சாத்தியப்படாது என்றுதான் தெரிகிறது! 

நிதீஷ் பதவி ஏற்பு விழாவுக்கு போவதால் எதோ ஸ்டாலின் கூறுகிறார். அவ்வளவுதான்! அதை பெரிதாக எடுக்ககொள்ள தேவையில்லை!

இன்று 19.11.15 PTTV நேர்பட பேசுக்கு!

விவாதத்தில் சிபிஐஎம் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், எழுத்தாளர் ஞானி, திமுக இளங்கோவன், பாஜக வானதி... இவர்களுடன் நெறியாளர் கார்த்திகைச்செல்வன்..!

திமுக சொல்வதுபோல் வரும் தேர்தலில், "மதச்சார்பின்மை என்பது மட்டுமல்ல தமிழக தேர்தலில்... ஊழல், பொருளாதார கொள்கை, தீண்டாமை கொடுமை உள்ளிட்டு பலது இருக்கிறது; ஆனாலும் மதச்சார்பின்மை பேசுவதில் திமுகவின் சமீபத்திய நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது; மக்கள் நலக் கூட்டணி குறைந்தபட்ச செயல்திட்டம்தான் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க போகிறது" என்றார் தோழர் ஜிஆர் நச்சென்று! 

இளங்கோவன்  எதோ சமாளித்துப் பார்த்தார். சாரம் இல்லை. வானதி தமிழகத் தேர்தலில் பீகார் முடிவு பாதிக்காது; பீகாரில் இப்பவும் நாங்கத்தான் பெரிய கட்சி என்று ஒரேமாதிரி  பாஜகவினர் பேசுகின்றனர்! ஞானி பாஜகவுக்கும், மக்கள் நலக்கூட்டணிக்கும் அடுத்த தேர்தல்தான் இலக்கு என்றதுதான் கொஞ்சம் நெருடலாக இருந்தது.

-----\\\\

மக்களின் மனநிலை!

ஆம்! பீகார் போல் தமிழகத்தில் மெகா கூட்டணி அமையும்; அது "மக்கள் நலக் கூட்டணி"யால்தான் முடியும்! திமுக அதிமுக நிச்சயம் தோல்வியை தழுவும்! இதுதான் தமிழக மக்களின் மனநிலையும்!

இன்று 19.11.15 News 7 tv ?கேள்வி நேரம் நிகழ்ச்சிக்கு!  

விவாதத்தில் நெறியாளர் செந்தில்... இவருடன் திமுக கண்ணதாசன், பாமக ராவணன்,  அரசியல் விமர்சகர் ரவீந்திரன்... 

பாமக நம்பக தன்மை குறித்து கண்ணதான் கூறியபோது, திமுக மட்டுமென்ன பாஜகவை ஆக்டோபஸ் என்று வரணித்துவிட்டு, சேரவில்லையா? என கண்ணதான் கண்ணாமுழி பிதுங்கி வெளியே வருமளவு போட்டுவிட்டார். 

ரவீந்திரன் பேசியதும் நெருடலே! மக்கள் நலக் கூட்டியக்கம் எல்லாம் சும்மா என் சப்புக்கொட்டுவதேன்?  ஏன் முடியாது என்பதற்கு காரணம்  தேடி சொல்லுவதற்கு பதிலாக ஊடகவியாளர்கள் வர வேண்டிய அவசியத்தை, தேவையை சொன்னால், அது ஒரு எதார்த்தமாக, தமிழக மக்களுக்கு நல்லது செய்யக் கூடிய செயலாக இருக்கும்!

------\\\\\

எங்களுக்கு நல்ல தெரியுதுங்க...! 

'திசை தெரியாமல் செல்கிறது இந்தியப் பொருளாதாரக் கொள்கை' என்கிறார் மன்மோகனார். 

உங்களுக்கு எதாவது திசை தெரியுதுங்களா? சிங் க்குத் தெரியலையாம்! 

அய்யா சிங் கனாரே... 
எங்களுக்கு நல்ல தெரியுதுங்க...! நீங்க போட்டு வச்சிட்டு வந்த அதே ரூட்ல தான் மோடியார் போய்கிட்டு இருக்கிறார். அதாவது கார்ப்ரேட் கம்பெனிகளின், பன்னாட்டு இந்நாட்டு முதலாளிகளின் தொப்பைகளை நிரப்பும் அதே எல்ஜிபி கொள்கை திசைவழியில் தெளிவாக போய்க் கொண்டு இருக்கிறார்! 

இன்னும் சொல்லப்போனால், உங்களைவிட படுவேகமாக போய்கிட்டு இருக்கிறார். உங்களுக்கு அது தெரியவில்லை என்றால்... உங்க கண்கண்ணாடியை  (அதானி ஆதரவு இல்லாத கண்ணாடியை) மாத்துங்கத் தெரியும்! சரிங்களா?

----\\\\\

ஒரு வாரம் கழித்தே முதல்வர் வந்தார்!

மழையால் பாதிப்புக்கு அரசு போர்கால மீட்பு பணிகளை செய்திருக்க வேண்டும்; அவ்வாறு செய்யவில்லை என்பதே உண்மை. 
குறிப்பாக மழைப்பாதிப்பு பகுதிகளில் முதல் அமைச்சரே ஒரு வாரம் கழித்துத்தான் பார்வையிட வந்தார் என்பது வருத்தமிக்கது. 

இந்த அரசு ரூ500 கோடி ஒதுக்கி இருப்பதுகூட தேர்தலை மனதில் கொண்டுதான்! அப்படி இல்லை என்றால் இன்னும் ஒரிரு நாட்களில் இந்த ரூ500 கோடியை இழப்பீடாக தந்துவிடுமா? 

இன்னுமா இழப்பீடு கணக்கு அரசுக்கு கிடைக்கவில்லை?

இன்று 20.11.15 இதன் ஒருபகுதி News 7 ?கேள்வி நேரம் நிகழ்ச்சியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
----\\\\

ஊதியம் இனாம் அல்ல!

ஊழியர் திறன் மேம்படாமலா நாட்டு இந்தளவுக்கு 'வளர்ச்சி' அடைந்திருக்கிறது? 

1 லட்சம் கோடி என்பது உழைப்புக்கு தரும் சம்பளம். சம்ளம் இல்லாமல் உழைக்க முடியுமா? 

அரசுக்கு இதை தாங்கும் சக்தி இருக்கிற காரணத்தினாலும், இன்றைய விலைவாசி உயர்வுக்கு ஏற்றமுறையில் தங்களது வாழ்க்கையை "ஓட்ட" வேண்டிய நிலையில் இருப்பதாலும், ஊழியர்களின் ஒன்றுப்பட்ட போராட்டத்தாலும் கிடைத்த ஊதிய உயர்வு!  

ஆம்! இது உழைப்புக்கு கிடைத்த ஊதியம்; இனாம் அல்ல! 

இன்று 20.11.15 PTTV மக்கள் மேடைக்கு!

-----\\\\

மிகமிக நல்லது! 

பீகாரில் குவியும் தலைவர்கள்... 

மோடிக்கு எதிராக அணி சேர்ந்தால் நல்லதுதான்! 

அந்த அணி பாஜக மதவாதத்திற்கு எதிராகவும், கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிராகவும், இந்திய இறையாண்மையை பாதுகாக்கக் கூடியதாகவும் அமைந்தால்... மிகமிக நல்லது! 

அவ்வண்ணம் நடக்குமா? அவ்வாறு நடக்க வாய்ப்பு என்பது குறைவே என்று தோன்றுகிறது! இன்று 

20.11.15 PTTV நேர்படபேசுக்கு!