"சகிப்புத்தன்மை அற்ற ஆட்சி பாஜக ஆட்சி"
சகிப்புத்தன்மைப் பற்றி பேச காங்கிரஸ்க்கு தகுதியில்லை என்று மோடி சொல்வதை வைத்து பார்க்கும்போது, சகிப்புத்தன்மை அற்ற நிலை தற்போது நிலவுகிறது என்பதை மோடி ஒத்துக் கொள்கிறார் என்பது புலனாகிறது.
அப்படியென்றால் மோடி ஆட்சி மக்கள் கூறுபோடும் ஆட்சி என்று இடதுசாரிகளும், அறிஞர்களும், கலைஞர்களும், விஞ்ஞானிகளும், படைப்பாளிகளும் "சகிப்புத்தன்மை அற்ற ஆட்சி பாஜக ஆட்சி" என்றது சரிதானே!
ஆக, சகிப்புத்தன்மையுடன் கூடிய ஆட்சியை இனியாவது தருவாரா? மக்கள் அச்சம் இன்றி வாழ வழி வகுப்பாரா? தகுதி யாருக்கு இருக்கிறது; யாருக்கு இல்லை என்பதை இனிமேலும் ஆராய்ச்சி செய்யாமல், இந்துத்துவா வெறியை இரும்புகரம் கொண்டு அடக்க முன்வருவாரா பிரதமர் மோடி?!
இன்று 2.11.15 PTTV மக்கள் மேடைக்கு!
----\\\
போங்கடா போங்கடா புண்ணாக்கு பயல்கலா..!?
"அது அது அதன் இயக்கத்தில் இயங்கிக் கொண்டிருக்கட்டும்; அரசியலில் மதத்தை கலக்காதே; சகிப்புத்தன்மையுடன் ஆட்சியை நடத்து; காங்கிரஸ்க்கு பதிலாக எதாவது உருப்படியாக மக்களுக்குச் செய்; சிறுபான்மை மக்களுக்கு எதிராக சீறிபாயதே; யாரையும் கீரிக் கொல்லாதே; கார்பரேட் கைக்கூலியாக செயல்படாதே..."
என்றெல்லாம் மக்கள் கேட்டால், சொன்னால், 'இவிங்க சகிப்புத்தன்மை குறித்து விவாதிக்கத் தயாராம்!'
ஆமா போய் சென்னையில ஒரு கல்யாண மண்டபம் புடிச்சி மோடிய நடுவரா போட்டு வெங்கய்யா ஒருபக்கமும், ஜெட்லி ஒருபக்கமும் பட்டிமன்றம் நடத்தி, அத டிவியில கார்பரேட் ஸ்பான்ர்ல போடுங்க...
தீபாவளி சிறப்பு பட்டிமன்றமா...!
போங்கடா போங்கடா புண்ணாக்கு பயல்கலா..!?
----\\\\
இன்று 3.11.15 தினமணியில் 2 பதிவு...!
1. வெறுப்புணர்வை தூண்டுவது காங்கிரஸும், கம்யூனிஸ்டுகளும்தான் என அருண்ஜேட்லி கூறியிருப்பது குறித்து 'மக்கள் கருத்து' ....
# அரசியல் 34%; # காழ்ப்புணர்வு 31%; # விவாதத்திற்குரியது 35%. ஆக 69% ஜெட்லி பேச்சு பித்தலாட்டம் என்பது அல்லவா? தினமணி வாசகர்களே அருண் ஜெட்லி பேசுவதை ஏற்கவில்லை என்பது தெரிகிறது.
2. மக்கள் நலக் கூட்டணி உதயமான செய்தி தர்மபுரி பதிப்பில் பதிவாகவில்லை. ஒருவேளை சென்னை பதிப்பில் 'மாவட்டம்' செய்தியில் பதிவாகி இருக்கிறதோ என்வோ? ஆக தினமணிக்கு இது ஒரு மாநில செய்தியாக தெரிவில்லை. ஏனென்றால் இதில் மதவாத-ஜாதியவாத கட்சிகளுக்கு குறிப்பாக பாஜகவுக்கு இதில் இடம் இல்லை என்பதே காரணம்.
இந்த லட்சணத்தில், "பத்திரிக்கைத் தர்மத்தைக் கடைப்பிடிப்பது தினமணிதான்" என்று பிஜேபி வைத்தியநான் (ஆசிரியர்) பீற்றியிருக்கிறார்.
----\\\
இது இயற்கையான கூட்டணி!
மார்க்சிய-பெரியாரிய-தலித்திய இந்த கூட்டணி இயற்கையான கூட்டணி; கடந்த 6 மாதங்களுக்கு மேலான கூட்டியக்கம் கண்ட கூட்டணி; இது மலர்ந்தது குறித்து மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்! இது நிச்சயம் தேர்தல் களத்திலும் வெற்றி வாகைச்சூடும் என்பது திண்ணம்.
மக்கள் திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக பாமக ஆகியவற்றை விரும்பாத ஊழலற்ற, ஜனநாயக எண்ணமுள்ளவர்களின் எதிர்ப்பார்ப்பை இன்று உதயமான "மக்கள் நலக் கூட்டியக்கம்" நிறைவேற்றும்; வைகோ அவர்கள் சொல்லுவதுபோல் எதிலும் சாரா 65% மக்களை கொண்டு வந்து சேர்ப்பதில், முனைப்புடன் செயலாற்றுவர்!
இதில் தமாக, தேமுதிக தங்களை இணைத்துக் கொண்டால் இது மேலும் பலம் பெறும் என்பதில் அய்யமில்லை!
இன்று 2.11.15 PTTV நேர்படபேசுக்கு!
----\\\\
எதிர்ப்பார்த்த விவாதமே!
இன்று 3.11.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சி சுருக்கம் காலை 9 மணிக்கு பார்த்தேன். சிபிஐஎம் ஆறுமுகநயனார், மூத்த பத்திரிக்கையாளர் மணி, நெறியாளர் ஜென்ராம்...!
எதிர்ப்பார்த்த விவாதமே! (இப்படி வருவதே பெரிய விசயம்தானே) மக்கள் நலக் கூட்டணி மலர்ந்தது குறித்ததுதான். தேர்தலில் வெல்லுமா? ஏன் வெல்லாது; டெல்லியில் ஆம் ஆத்மி வென்றதே! என்ற நயினாருக்கு, 1977 இல் மேற்கு வங்கத்தில் வென்றதேன்னு சொல்லவில்லையே என ஜென்ராம் கேட்டது எதார்த்தம். ஆனாலும் மாற்றம் தரமுடியுமென நம்பிக்கை இருக்கு என்று முடித்தது இதம்!
மணி அவர்களும் வரவேற்றார்; என்றாலும் முடியுமா? கேள்வியை எழுப்பி, ஒரு 'பிட்' டும் போட்டுவிட்டு போய்விட்டார். தலித்தான் முதல்வர் என்று அறிவிக்கலாமே என்றார். எது எப்படியிருப்பினும் தமிழகத்தில் மாற்றத்திற்கான "இயற்கையானமாற்று" உதயமாகிவிட்டது! இதை தமிழக உழைப்பாளிகளும், அதிமுக திமுக அராஜக, ஆணவ ஆட்சிகளை அகற்றிட அரிய வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது என்ற அர்த்தத்தில் நிகழ்ச்சி நிறைவு பெற்றது மகிழ்ச்சி!
----\\\\
சாதிக்கும் சறுக்காது!
சாதிக்கும் சறுக்காது!
தமிழக அரசியலில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும்!
இது மக்கள் விரோத கொள்கை கொண்ட கட்சிகளிடம் இருந்து மக்களை மீட்கும் 'மக்கள் நலக் கூட்டணியே'
இன்று 3.11.15 PTTV மக்கள் மேடைக்கு! இது பதிவேற்றமாகி உள்ளது.
-----\\\\
விலைவாசி உயர்வைக் கண்டித்து...
சேலத்தில் மக்கள் நலக் கூட்டணியின்
எழுர்ச்சிமிகு ஆர்ப்பாட்டம்!
*****************************
3.11.15 சேலம் ஆட்சியர் ஆபீசுமுன் பி.தங்கவேலு சிபிஎம் மாவட்டக்குழுச் செயலாளர் தலைமையில் சுமார் 1000 பேர் பங்கேற்ற எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் எம்.அப்பாதுரை முன்னாள் எம்பி., சிபிஐ; தமிழ்செல்வன் தலைவரின் தனிச்செயலாளர், இரா.நாவரசு புறநகர் மாவட்டச்செயலாளர் விசிக; மதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் பி.மகேந்திரவர்மன் (மேற்கு), வா.கோபால்ராஜ் (கிழக்கு), ஆ.ஆனந்தராஜ் (மாநகரம்); ஏ.மோகன் சிபிஐ மாவட்டச்செயலாளர்; கே.ஜோதிலட்சுமி சிபிஐஎம் மாநிலக்குழு உள்ளிட்டோர் பேசினர்.
-----\\\\
சசிகலா வேறு; ஜெயலலிதா வேறு அல்ல!
சசிகலா வேறு; ஜெயலலிதா வேறு அல்ல! இவரும் ஒன்றே என்று உலகுக்கேத் தெரியும்!
சென்னையில் 11 தியேட்டர் வாங்கியது சசிகலா என்றுச் சொல்லப்பட்டாலும், அதற்கு விளக்கம் தரவேண்டியது முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் தார்மீக கடமையே!
எதிர்க்கட்சிகளின் விமர்சனம் நிச்சயம் ஆய்வுக்குரியதே தவிர அலச்சியப்படுத்தக் கூடியதல்ல!
ஆனால் அது நடக்குமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி எழுகிறது!
அது நடக்க வேண்டுமென்றால், இன்றைய சூழலில் 'மக்கள் நலக் கூட்டணி' 2016 தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே சாத்தியம்!
ஏனென்றால் கரைபடியாத இயக்கம் 'மக்கள் நலக் கூட்டியக்கம்!'
இன்று 3.11.15 PTTV நேர்பட பேசுக்கு!
(விவாதத்தில்...
சுமன் அரசியல் விமர்சகர்?! ஆதாரம் கேட்கிறார்; அதிமுக ஜால்ரா செகு.தமிழரசன் இது ஒன்றும் இல்லை; முதல்வர் பதில் சொல்ல வேண்டியதில்லை என்கிறார்.
ஆதாரம் இருக்கிறதோ இல்லையோ "மடியில் கனமில்லை எனில், வழியில் பயமேன்? அரசு இதற்கு பதில் சொன்னால் குடியா மூழ்கிபோகும்; இதில் எதற்கு கௌரவம்? என்று கேட்ட லெனின் (சிபிஐ), கண்ணதாசன் (திமுக) எழுப்பிய கேள்விக்கு பதிலில்லை.
அதிமுக ஜால்ராக்கள் சுமன், தமிழரசன் வெற்றுக்கூச்சல் போட்டார்களே தவிர பதிலில்லை!)
----\\\\
அரசியல் நலன் கருதியே!
இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு உயர்த்தப்படும் என்பதும், உருது கட்டாயப்பாடமாக்கப்படும் என்பதும்
இஸ்லாமியர் நலன் கருதியல்ல; அரசியல் நலன் கருதியே!
இது ஸ்டாலின் நாடகத்தின் உச்சக்கட்டம்!
இன்னும் என்னவெல்லாம் அள்ளி அள்ளி வீசப்போகிறாரோ? பாவம் தமிழக வாக்காள பெருமக்கள்!
இதன் ஒருபகுதி இன்று 4.11.15 PTTV மக்கள் மேடை யில் பதிவேற்றமாகி உள்ளது.
-----\\\\\
கருணாநிதியின் கனவு!
தேர்தல் நெருங்கும்போது கட்சிகளின் நிலைகளில் மாற்றம் வரும் என்பது கருணாநிதியின் கனவு! அது அவரின் உரிமை!
கூட்டணிக்காக அவர் அதிமுக தவிர அனைத்து கட்சிகளையும் (முடிந்தால் அதிமுக உடைந்தோ, உடைத்தோ வந்தாலும் அது உள்ளிட்டு) அவர் எதிர்ப்பார்க்கிறார்; ஏற்காடு இடைத்தேர்தல் போது திமுகவை ஆதரிக்க அனைத்துக் கட்சிகளையும் அழைத்தவர்தானே!
அதாவது புலிக்கு பயந்தவர்கள் எல்லாம் என்மீது படுத்துக் கொள்ளுங்கள் என்பதுதானே கருணாநிதி அவர்களின்'தேர்தல் உத்தி!'
கூட்டணி தொடர்பான கருணாநிதி நம்பிக்கை பலன் தருவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.
தேமுதிக கூட அதிமுக திமுக அல்லாத ஆட்சியே விரும்புவதாக பரப்புரை செய்கிறது.
தமாக வும், காங்கிரஸும்தான் வாய்மூடி மவுனியாக இருக்கிறது. போகுகிற போக்கைப்பார்த்தால் காங்கிரஸ் மேலும் உடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
இந்த சூழ்நிலையில் ஒருவேளை மக்கள் நலக்கூட்டணியின்மேல் உள்ள கோபத்தின் காரணத்தால், பாமக தனது முதல்வர் வேட்பாளரை திரும்ப பெற்று வந்தாலும் வரலாம்! திமுக பாஜக பாமக அணி ஆனாலும் ஆகலாம். சமீபத்தில் பாஜக மீதான சாய்மான 'சாயல்'கூடத் தெரிகிறது.
மற்றபடி மக்கள் நலக்கூட்டணி மீதுதான் இவரின் 'கண்' இருக்கிறது. அது நடக்காது. எது எப்படி இருப்பினும் திமுகவின் நம்பிக்கை மட்டுமல்ல, ஸ்டாலினின் ' விடியல் மீட்பு பயணம்'கூட வீண்தான்!
இதன் ஒருபகுதி இன்று 4.11.15 PTTV நேர்படபேசுவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
----\\\\
No comments:
Post a Comment