Tuesday, 10 November 2015

"இடதுப்பாதையே இருள் விலகும் பாதை!" 
👊  👊  👊
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு முழுமையான பாதை ... அது இடதுபாதையே! அதுவரை மக்கள் மூச்சுவிட இதுபோன்ற சில வழிகள்..! இதை கடந்தே இடதுபாதை வரும் இனி இந்தியாவில்..!

அதற்கான நம்பிக்கை வெளிச்சத்தில்... மே.வங்கம், திரிபுரா, கேரளா ... தொடர்ந்து தற்போது பீகார் அந்த அடியொட்டி வருகிறது..! அடுத்தடுத்து இதன் பட்டியல் நீளும் என்பது திண்ணம்!

( "பிகாரில் இடதுசாரிகள் தனிப்பாதை ஏன்? நிதிஷ்-லாலு வுடன் பயணித்திருக்கலாமே; மத வாதத்தை வீழ்த்துவதில் கூடுதல் பங்காற்றியிருக்கலாமே" என்போருக்கு தோழர் இரா.சிந்தன் அளித்த பதிவுக்கு என் பதிவிது!)

----\\\\

தீபாவளி வாழ்த்து சொல்பவர்களுக்கு
தீபாவளி வாழ்த்து சொல்பவர்களுக்கும், 
பட்டாசுகள் (மற்ற எந்த சமயங்களிலும்) வெடிப்போருக்கும்... 
சமர்ப்பணம்..!

----\\\\

கமலின்... "வியாபார காந்தம்?!"
👲👲👲         👲👲👲           👲👲👲
அனுபவம் கெர் டெல்லியில்... விருதுகளைத் திருப்பித் தரப்படுவதை எதிர்த்தும்,
நாட்டில் 'போதிய சகிப்புத்தன்மை இருக்கிறது' என்று பாஜகவுக்கு ஆதரவாக டெல்லியில் பேரணி நடத்தி,
குடியரசு தலைவரிடம் (இவர் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறதென்று குரல் கொடுத்தவர்) மகஜர் அளிக்கின்றனர்.

அதில்....
கமல்ஹாசனும் கையெழுத்திட்டு இருப்பதும்,
தேசநலனுக்கு எந்த கட்சியுடனும் குரல் கொடுப்பேன் என்பதும்,
பாக்கிஸ்தான் பிரித்து கொடுத்ததாக கூறுவதும் நாத்திகன் அல்ல பகுத்தறிவாளன் என்பதும்
எதனால்..? எதனால்..?
எல்லாம் "வியாபார காந்தம்?!" (பிஸ்னஸ் மேக்னட்) என்றால் மிகையா?
கமலின் அறிவார்ந்த அறிவுக்கு அடியேனின் அடக்கமுடியாத ஒரு கேள்வி...
அன்று காந்தி பெற்ற வழக்கறிஞர் பட்டமும்,  நம் நாட்டார் தாங்கள் உள்ளிட்டு நம் அரசுகளிடம் பெற்ற விருதுகளும் ஒன்றா?
எப்படி இப்படி 'மொட்டத் தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சு' போடுவது?
இருவித நடவடிக்கையில் ஒரு சாரார் நடவடிக்கையில் ஆதரவு தெரிவித்து கையெழுத்திடுவதுதான் நடுநிலையான அறிவுரையோ?
தாங்களின் பாஜக ஆதரவு நிலையை நாட்டு மக்களுக்கு எடுத்தியம்பியமைக்கு நன்றி கமல் நன்றி! மதசார்பற்ற மனம் படைத்த மக்களின் முகத்தில் "கரி(றி)" பூசி, காறி உமிழ்ந்தமைக்கு நன்றி கமல் நன்றி!
அதுவும் நாசரை அருகில் வைத்துக்கொண்டு உதிர்த்த அந்த முத்துக்களுக்கு நன்றி கமல் நன்றி!

----\\\\

அது ஒருவழி பாதை அல்லவே!

தோழர் ரவிக்குமார் அவர்களின் கருத்து நூற்றுக்கு நூறு சரியே! அது ஒருவழி பாதை அல்லவே!
அடிப்படைவாதிகளுக்கு எதிராக அடித்தட்டு மக்களை திரட்டி போராடுவதில் இடதுசாரிகளின் பணிகளில் பிரதானமான ஒன்றாக இருக்கிறது! கடந்த கால அனுபவம் ஏராளம்!

சோசலிஸ்ட் என்று அறியப்பட்டவர்கள்... ஜனதா பரிவார்கள், தலித்து அமைப்புகள், இடதுசாரிகள் ஒரு நேர்கோட்டில் பயணிக்க முடியவில்லையே! அதற்கான இடதுசாரிகள் முயற்சிகள் கொஞ்சமா? நஞ்சமா?ஆகவே மெகா கூட்டணிக்கு இடதுசாரிகள் என்றும் இன்றும் தயார்..! ஆனால் கள நிலைமை அவ்வாறு இருப்பதாக கருதமுடிகிறதா? இதே பிகாரில் முலயாம் வெளியேறி விட்டார்; வெளியேறியவர் இடதுசாரிகளுடன் வந்தாரா? அதுவும் இல்லை!

எந்த அணி அமைப்பதற்கும் சொந்த அணி பலம் அவசியம்! அதற்கான முயற்சியில்தான் தற்போது இடதுசாரிகள்!
சங் பரிவாரத்தின் 'ஓவர்' உதார்களும் ஜனதா பரிவாரத்திற்கு உதவி உள்ளதாக நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.

இந்த தீபாவளி...
இந்நாள் இடதுசாரிகளுக்கும், முன்னாள் சோசலிஸ்ட்களுக்கும் மதசார்பற்ற சக்திகளுக்கும் இதன் சார்ந்த அறிஞர் பெருமக்களுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் உரமூட்டும் வெற்றி! மத அடிப்படை வாதிகளுக்கு குறிப்பாக சங் பரிவாரத்திற்கு தக்கப்பதிலடி!
இடதுசாரிகள் நலன் காக்கும் போரில் அவர்களுக்கு எட்டிய அனுபவத்தில் இருந்து என்றும் தனிமைபட்டு இருந்ததில்லை; இருக்கப்போவதுமில்லை!

(விசிக பொதுச்செயலாளர் தோழர் ரவிக்குமார் அவர்கள்... "நாடு தழுவிய அளவில் தனிப்பட்டு விடாமல், பிகார் தேர்தல் முடிவு ஒளியில் மெகா கூட்டணியை 'அடிப்படைவாதிகளுக்கு' எதிராக கட்டமைக்க வேண்டும்" என்ற அவரின் பதிவுக்கு அடியேனின் பதிவு)

----\\\\

குடிக்க வைத்து ரசிப்பதே அதிமுக

கோவனை மனதில் கொண்டு தான் சொல்கிறீர்களா? பொறுப்பற்றதா? என்று!  இந்த அரசின் மீது எதில் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம் டாஸ்மாக் தவிர!
கோவனும், சசிபெருமாளும் தமிழகத்தின்  மது எதிர்ப்பின் குறியீடு ஆகிவிட்டனர்.
1. கண்டு கொள்ளாமல் "காலி" செய்வது; 2. கண்டு பிடித்து "தேசதுரோகி" ஆகி, வதைப்பது!  இதுவே இந்த அரசின் தாரகமந்திரம்.
ஆக எதில் இந்த அரசு "அலாட்" டாக இருக்கிறதோ, இல்லையோ "டாஸ்மாக்" அலாட்டாக இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
ஆம்! அனைவரையும் குடிக்க வைத்து ரசிப்பதே அதிமுக அரசின் அகமகிழ்வு!
இன்று 7.11.15 PTTV நேர்படபேசுக்கு!

----\\\\

# முத்தரப்பு முடிவுபடி மரவள்ளிக்கிழங்கு பாய்ண்ட்க்கு ரூ260 இந்த பருவத்திற்கு தருக!
# இயற்கை சேகோ, ரசாயனம் சேகோ என சேகோ தொழிலையும், மரவள்ளி விவசாயத்தையும் அழித்துவிடாதே!
# சேகோ மற்றும் ஸ்டார்ச் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள தற்போதைய சிக்கலுக்கு சுமூக தீர்வு காண்க!
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்  நவ 17 சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன் மரவள்ளி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
********* ********* **********


தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சேலம் மாவட்டக்குழுக்கூட்டம் இன்று 7.11.15 சேலம் விபிசிந்தன் நினைவகத்தில் மாவட்டத்தலைவர் ஏ.பொன்னுசாமி தலைமையில் நடைப்பெற்றது.
மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், மாவட்டச்செயலாளர் எஸ்பி.தங்கவேல், மாவட்டப்பொருளாளர் ஆர்.குழந்தைவேல், மாவட்டத் துணைத்தலைவர் பி.தங்கவேலு உள்ளிட்டு மாவட்ட நிர்வாகிகளும், மாவட்டக்குழு உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.
அதில் மரவள்ளி மற்றும் சேகோ வை பாதுக்காக்கும் பொருட்டு மேற்காணும் 3 அம்சங்களில்  தமிழக அரசும்....
சேலம், நாமக்கல் உள்ளிட்டு மரவள்ளி பயிரிடப்படும் மாவட்ட ஆட்சித்தலைவர்களும்...
உடனடி கவனம் செலுத்திடல் வேண்டும் என்றும்,
இதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பொருட்டு நவ17 இல் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன் காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்திடுவதென்றும்,
இதில் மரவள்ளி சாகுபடி விவசாயிகளும், சிறு, குறு, நடுத்தர சேகோ உற்பத்தியாளர்களும் திரளாக கலந்து ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்கிட வேண்டும் என்றும் மாவட்டக்குழு ஓர் தீர்மாணம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளது.

----\\\

திமுகவின் ஏகபோக மனநிலை

கூட்டணியை ஆட்சியை மக்கள் ஏற்க மாட்டார்கள் என ஸ்டாலின் கூறுவது, திமுகவின் ஏகபோக மனநிலையையே உணர்த்துகிறது. 

நிச்சயம் இப்படி பேசுவதற்கான விலையை திமுக வரும் தேர்தலில் கொடுக்க நேரிடும்! இந்த பேச்சு ஒன்றே போதும் மக்கள் நலக் கூட்டணியை மக்கள் ஆதரிக்க..!

இன்று 6.11.15 PTTV நேர்படபேசுக்கு!

----\\\\

மதவாதிகளுக்கும் இதுக்கும் வித்தியாசமில்லையே!

இன்று 6.11.15 PTTV மக்கள் மேடையில் மே 17 இயக்க அருள் முருகன், தராசு ஷ்யாம், மூத்த பத்திரிக்கையாளர் ராதாகிருஷ்ணன், இவர்களுடன் நெறியாளர் வேங்கடப்பிரகாஷ்...!

எம்கே.நாராயணன் மீது 'இலங்கை அகதிகள் பிரச்சனை' குறித்த கருத்தரங்கில் செருப்பு வீசியது சரி என்று ஷ்யாம், அருள் முருகன் பேசியது சரியான வழிமுறையல்ல; வன்முறைக்கு வித்திடுவது மட்டுமல்ல தமிழகத்தை அமைதியின்மை மாநிலமாக ஆக்கும் ஆபத்து மிக்கதே!

ஆனால் நேயர்களில் 99% சதமான பேர் செருப்பு வீசியது சரியல்ல என்றே கருத்து பதிந்திருப்பதும், அதை நோக்கியே விவாதத்தைச் செலுத்தியதும் மிகுந்த பாராட்டுக்கு உரியது; அந்த வகையில் நெறியாளருக்குப் பாராட்டு!
 

அதேசமயத்தில் தராசு சியாம் வாதம் அப்பட்டமான அபத்தம்! அருள் முருகன் அப்படித்தான் பேசுவார்; அவரிடம் வேறெதும் எதிர்ப்பார்க்க முடியாது அல்லவா? கல் குடித்தவர் ஏப்பம் விட்டால் அதன் ஏப்பம் புளித்த நாற்றம்தான் வரும்! அதற்காக பகத்சிங்கை அழைப்பதும், செருப்பு வீச்சு புதிதல்ல என்பதும் சகிப்பு தன்மையை விரும்பாத மதவாத, ஜாதியவாத சக்திகளுக்குத்தான் உதவிசெய்யும் என்பது திண்ணம்.

அன்றொரு நாளில் ஞானி மீது மை வீசுவேன் என்று சிவசேனா காரர் சொன்னதற்கு, இன்று ஷ்யாம் செருப்பு வீசியது, வீசுவது தப்பில்லை என்றதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை! இவர் பத்திரிக்கையாளராக இருந்து பேசுவதுதான் துரதிஷ்டம்!

எதிர்ப்பைக் காட்டும் முறை ஏற்க தக்கதல்ல! மதவாதிகளுக்கும் இதுக்கும் வித்தியாசமில்லையே!
இன்று 6.11.15 PTTV மக்கள் மேடைக்கு! இது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது


----\\

தமிழக மக்களுக்கு நன்று!

வாசனும் விஜய்காந்தும் வாய் திறந்தால் நன்று என்றுதான் தோன்றுகிறது.
இதற்குமேல் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் இவர்கள்மீது தேவையின்றி வதந்திகள் விழுந்துக் கொண்டே இருக்கும்.

இதனாலும் இக்கட்சிகளின் இமேஜ் பாதிக்கவே செய்யும்;
இது மக்களவை தேர்தல் அல்ல; கடைசி நிமிடத்தில் முடிவெடுக்க..!

சட்டமன்ற தேர்தலில் கீழ் அணிகள் இணைத்து இணக்கமாக செயல்பட உரிய அவகாசம் தேவைப்படுகிறது.
இக்கட்சிகளின் தலைமை உணர்ந்தால், தமிழக மக்களுக்கு நன்று!

இன்று 5.11.15 PTTV மக்கள் மேடைக்கு!

----\\\\

ஒரு சிறு கடிவாளமிட்ட மாதிரியிருக்கும்!

பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குச் சாதகமாக இருந்தால், இந்துத்துவா சக்திகளுக்கு 'சும்மா ஆடுபவர் கையில் வேப்பிலை கொடுத்து, உடுக்கு அடித்தால், எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்!' 

பாஜக தோற்றால், மதசார்ப்பற்ற சக்திகளுக்கு ஊக்கம் கிடைக்கும்!
இதுவரை நடந்துக் கொண்டிருக்கும் சகிப்புதன்மையற்ற கொடுமைகளுக்கு ஒரு சிறு கடிவாளமிட்ட மாதிரியிருக்கும்!

இருந்தாலும் இந்துத்துவா சக்திகளின் அராஜகம் மோடி பிரதமராக இருக்கும் இருந்துக் கொண்டே இருக்கும்!
இன்று 5.11.15 PTTV நேர்பட பேசுக்கு!

-----
(விவாதத்தில் ஞானி, பீட்டர் அல்போன்ஸ், பத்ரி, ஆசீர்வாத ஆசாரி பாஜக, நெறியாளர் கார்த்திகைச்செல்வன்...
ஒரு கட்டத்தில் ஆசாரி கத்தினார் பாருங்கள்... வெறிபிடித்த மிருகம் போல், "முஸ்லீம் உள்ளம் எல்லாம் இருப்பது பாக்கிஸ்தான்" என்று.
நெறியாளர் இப்படி எல்லாம் ஆதாரமில்லாமல் பேசக்கூடாதென்று சொல்லிப் பார்த்தார்; முடியவில்லை; பத்ரி, ஞானி எல்லாம் திகைத்துப்போனார்கள்; அப்புரம் என்ன?
வழக்கம்போல் விளம்பர இடைவேளை; முடிந்து வரும்போது...
"நான் எல்லா முஸ்லீம்களையும் சொல்லவில்லை; மதவாதிகளை சொன்னேன்" என்றார் ஆசாரி. 
"எந்த மதவாதிகளை?" என்றார் நெறியாளர். 
"முஸ்லீம்" என்றார் ஆசாரி. "அப்படி என்றால் அது உங்களுக்கும் பொருந்தும் அல்லவா?" என்ற
கேள்வியோடு நெறியாளர் நிகழ்ச்சியை முடித்து சிறு ஆறுதல்!)
----\\\\

No comments:

Post a Comment