பீகார் தேர்தல் முடிவு திருப்புமுனையே!
பீகார் தேர்தல் முடிவு...
மூர்க்கத்தனமான இந்துத்துவாவின் அஜண்டாவுக்கு முற்றுபுள்ளி வைத்து, வாஜ்பாய் பாணிக்கு வித்திடக்கூடும். இருந்தாலும் "அசைக்கவே முடியாது மோடியை" என்ற மாயைக்கு முடிவு கட்டியுள்ளது.
நிச்சயம் அடுத்த பிரதமர் நித்தீஷ்குமார்! அதற்கான கதவு திறப்பட்டு விட்டது.
பாஜக ஆட்சிக்கு "கவுன்டன்" (இறங்குமுகம்) ஆரம்பம்! நுனலும் தன் வாயாற் கெடும் என்பதே இது! எந்த பிரதமராவது ஒரு மாநில தேர்தலில் 33 பரப்புரைக் கூட்டங்கள் நடத்தியதுண்டா? சுதந்திர இந்தியாவில் இதற்குமுன் யாராவது உண்டா? பிரதமர் நாக்கில்தான் 'சனி' அதுதான் அவருக்கு பலமும், பலவீனமும்! பேச வேண்டியதை (மக்கள் ஒற்றுமையை) பேசமாட்டார்; பேசக்கூடாததை (மத-ஜாதி மோதலுக்கு வித்திடுவதை) பேசுவார்!
எப்படியோ பாஜக தனக்குத்தானே குழிப்பறித்துக் கொண்டது.
ஆம்! ஊர் ஒன்றுப்பட்டு விட்டால், கூத்தாடி பாடுத் திண்டாட்டம்தான்! பீகார் தேர்தல் இந்த கூத்தாடி நிலைக்கு தள்ளிவிட்டு உள்ளது. வேறு வார்த்தையில் சொன்னால், ஆடுகள் எல்லாம் (மாடுகள் என்றுகூட வைத்துக் கொள்ளலாம்) ஒன்று சேர்ந்தால், சிங்கத்தின் கெதி அதோகெதி என உணர்த்தி உள்ளதே பீகார் தேர்தல் முடிவு சொல்லும் செய்தி!
இன்று 9.11.15 PTTV மக்கள் மேடைக்கு!
(விவாதத்தில் பாஜக நாராயணன் பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்க முறையில் இருந்தது. பாக்ஸ்தானில் பட்டாசு வெடிக்கிறார்களாம் பாஜக தோற்றதால்!
ஆகவே பாஜகவை தோற்க அடித்தது தேசவிரோதமாம்! பாக்ஸ்தான் எதிரி நாடாம்! ஆமா..! இப்படியே பேசுங்க... கணக்கு நேராகிவிடும்..!
ஊழலை பத்தி பேசறாங்க கார்கில் வீரர் சவபெட்டியில் ஊழல் செய்தவங்க!)
----\\\\
பீகார் தேர்தல் முடிவு திருப்புமுனையே! இயல்பானதல்ல! மோடியின் செல்வாக்கு இனி அதளபாதாளத்தில் போவதை அந்த "ஆண்டவனாலும்" இனி தடுக்க முடியாது!
நிதிஷ்-லாலு கூட்டணி மட்டுமல்ல, இதற்குள் ராகுல் கூட்டணியும் இருக்கிறது.
"அசைக்க முடியாதவர் மோடி" என்று ஊடகங்களால் ஊதி பெரிதாக்கப்பட்ட பிம்பம் உடைபட்டுப் போனது!
இந்துத்துவா சக்திகளுக்கு கடிவாளமும், மதச்சார்ப்பற்ற ஜனநாயக சக்திகளுக்கு களங்கரை விளக்கமாகவும் அமைந்துள்ளது இம் முடிவு என்றால் மிகையன்று!
இன்று 9.11.15 PTTV நேர்படபேசுக்கு!
(விவாதத்தில் பாஜக சேகர் கூட்டல் பெருக்கல் கணக்கில் பெற்றி பெற்றுவிட்டனர் என்றார். ஆழி.செந்தில்நாதனும், சுமனும் அப்படி யென்றால் நீங்கள் முன் வைத்த மாடுக்கறி முதல் மற்றவற்றை மக்கள் புறந்தள்ளி உங்களை பாஜக வை தோற்கடித்து விட்டார்கள்தானே என்றனர். அப்படி இல்லையாம்! குப்புற கவுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையாம்!)
----\\\\
பீகார் தேர்தல் முடிவு...
தமிழகத்தில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்!
ஆம்! மக்கள் நலக் கூட்டணியை மக்கள் ஆதரித்து ஆட்சியில் அமர்த்துவார்கள்!
மேலும் தேசிய அளவிலும் தாக்கத்தை ஏற்ப்படுத்தும்!
ஒன்று இனி அசுர வேக இந்துத்துவா அஜண்டா நிறைவேறாது. இரண்டு பாஜக ஆட்சி அடுத்த நேர்தலில் அப்புறப்படுத்தப்படும் என்பது உறுதியாகிவிட்டது.
ஆம் மோடி ஆட்சி அசைக்க முடியாத பாறை என்ற எண்ணத்தில், பிகார் தேர்தல் வெடிப்பை ஏற்படுத்திவிட்டது!
பீகார் மக்களுக்கும் நித்தீஷ்-லாலு உள்ளிட்ட ஜனதா பரிவாருக்கு நன்றி! வாழ்த்துக்கள்!
இன்று 9.11.15 News 7 கேள்விக்குப் பதில் நிகழ்ச்சிக்கு!
(விவாதத்தில் பாஜக ராமசுப்ரமணியன் வந்தார் இவரும் கூட்டல், பெருக்கல் கணக்கு சொல்லிவிட்டு, தோல்விக்கு மோடி, அமிஷா பொறுப்பில்லை என்று கூறிவிட்டார். தேர்தலுக்கு போய் இருந்தாராம்; சாதாரண மக்களிடம் கேட்டாராம்; நிதிஷ் நல்லருன்னாங்களாம்; அதை இப்ப என்னாத்துக்கு சொல்றீங்கய்யா?
எங்க அந்த ஆசீர்வாதம் ஆசாரிய கூப்பிடுங்க..! அன்றைக்கு நிதிஷ்-லாலு கெமிஸ்டிரி ஒத்து வராதுன்னார்; இப்ப இவங்க ஆட்கள் எல்லாம் மேக்ஸ் ஒத்து வந்திருக்கு என்கிறார்!
மொத்தத்தில் உங்க மதவெறி பிரச்சார ஹிஸ்ட்ரி ஒத்து வரல; தெரியுதா? தெரிஞ்சிக்கிங்க!)
----\\\\
தமிழகத்தில்...
மக்கள் நலக் கூட்டணி ஆட்சியை பிடிக்கும்
இன்று 10.11.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் சிபிஎம் கனராஜ், காங்கிரஸ் கோபண்ணா, நெறியாளர் ஜென்ராம்...!
கருபொருள் பீகார் போல் மஹா கூட்டணி அமைத்து தமிழகத்தில் அதிமுகவை வீழ்த்த வேண்டுமென்ற இவிகேஎஸ். இளங்கோவன் அறிக்கை குறித்து இருந்தது. தோழர் கனகராஜ் நன்றாக அய்யம் தெளிவுற கூறிவிட்டார்,
"அதிமுக வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை; ஆனால் பாஜகவும் அதிமுகவும் ஒன்றல்ல; மதவாத ஆபத்தோடு சிற்சில சமயங்களில் சமரசம் செய்வதில் அதிமுக மட்டுமல்ல நிதீஷ் உள்ளிட்டு மாநில கட்சிகள் எதுவும் விதிவிலக்கல்ல" என்று.
மக்கள் நலக் கூட்டணி அதிமுகவுக்குத் தான் பலம் சேர்க்கும் என கோபண்ணா இன்று சற்று மென்மையாக கூறினார்; இதற்குமுன் இப்படி கூறியவர் அல்ல; காரணம் பாமக போல் தற்போது காங்கிரஸும் 'எங்கள ஏன் விடுறிங்க' என்பதுபோல் இருந்தது. இது தனி விவாதம்.
மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டம் தமிழகத்திற்கானது; அதில் உடன்பாடு உள்ள கட்சிகள் வரலாம் என்பதே இன்றைய நிலை. அதாவது திமுக அதிமுக வுக்கு மாற்றாக... காங்கிரஸ், பாஜக, பாமக தவிர. இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
தமிழகத்தில் மஹா கூட்டணி அமைக்க கலைஞர் லாலுபோல் நடந்து கொள்வார? இது எனது தனிப்பட்ட கேள்வி. குறிப்பாக நிதீஷ், லாலு 101, 101 என சீட்டுகளை சமமாக பிரித்துக்கொண்டு, இதர சீட்டுகளை காங்கிரஸ் தந்தனர். அதுமாதிரி ஒரு கட்சிக்கு கலைஞர் தருவாரா?
மகா கூட்டணி என்று வாயில் பேசினால் மட்டும் போதாது! ஆகவே தமிழகமும் பீகாரும் ஒன்றல்ல! திரு கோபண்ணா அவர்களே நிச்சயம் தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டணி ஆட்சியை பிடிக்கும். மக்கள மாற்றத்தையே விரும்புகின்றனர். மொத்தத்தில் இன்று மக்கள் நலக் கூட்டணிக்கு உதவும் வண்ணம் விவாதங்கள் இருந்தது. நன்று.
---\\\
அவரின் பாங்கு எனக்கு பிடித்திருக்கு!
மகத்தான மக்கள் தலைவர், மார்ச்சீய மேதை, மாசு மருவற்றவர் மறைந்த ஜோதிபாசு வை நினைவு கூர்ந்த சத்ருகன் சின்ஹா க்கு நன்றி!
ஜோதிபாசு அளவுக்கு நிதீஷ் இருப்பாரா? எனக்கு தெரியாது! இருந்தால் மகிழ்ச்சி!
பாஜக எம்பிஆக இருந்தாலும் அவரின் பாங்கு எனக்கு பிடித்திருக்கு!
----\\\\
பீகார் முயற்சி இங்கும் நடக்கும் !
தோழர் ஜெயராம் பொன்னுசாமி அவர்களுக்கு... ஒரு தகவலை பரிமாறிக் கொள்கிறேன். மயக்கமும் தயக்கமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
நானிருக்கும் மாவட்டத்தில் விசிக உள்ளிட்டு, அதாவது சிபிஐ, சிபிஐஎம், சிபிஐஎம்எல் லி, எஸ்யூசிஐ க என ஒரு இயக்கத்திற்கு திட்டமிட்டோம். விசிக இருந்தால், நாங்கள் வருவதில் சிரமம் என்று கூறிவிட்டனர்.
ஆனால் 'லெப்ட்' இணைந்து செயல்படுவோம் என்கின்றனர். இதுதான் கள நிலவரம்.
சிபிஐஎம் தனது 'இடதுசாரி ஜனநாயகத் திட்ட'த்தில் இணைக்கும் பணிகளில் தமிழகத்திலும் ஈடுப்பட்டு வருகிறது. எதற்கும் காலமும் கனிய வேண்டுமல்லவா?
தாங்கள் "அவர் இங்க போய்விடுவார்; இவர் அங்க போய்விடுவார்" என்றெல்லாம் இந்த நேரத்தில் கூறுவது பொருத்தமாக தெரியவில்லை. தங்களின் ஆதங்கம் நியாயமே! பீகார் முயற்சிஇங்கும் நடக்கும் !
மார்க்சிய-பெரியாரிய-தலித்திய அணிவகுப்பும், ஒடுக்கப்பட்டவர்களின் பொருளாதார விடுதலைக்கான அணிவகுப்பும் இணைந்திடும் காலம் தமிழகத்தில் கனிந்துக் கொண்டிருக்கிறது! அது தேர்தல் அணிவகுப்போடு நின்றுவிடுவதில்லை!
(முகநூலில், "தயக்கமா? மயக்கமா? என அதாவது மக்கள் நலக் கூட்டணியில் சிபிஐஎம்எல் லி ஐ சேர்ப்பதில்" என பதிவு செய்த பதிலாக.!)
No comments:
Post a Comment