"டாஸ்மாக் மூடு" என்பது தேசதுரோகமா?''
"டாஸ்மாக் மூடு" என்பது தேசதுரோகமா? தமிழக அரசின் இந்த நடவடிக்கை கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்கும் கொடூரமே! இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பெருமாள் முருகன் படைப்பின் மீது தாக்குதல் தொடுத்தது ஜாதீய பயங்கரவாதம் என்றால், பாடகர் கோவன் மீதான தாக்குதல் தொடுத்திருப்பது அரசு பயங்கரவாதமே!
கருத்துத் சுதந்திரத்தைக் காவுக் கொடுப்பதில் பாஜக மத்திய அரசோடு, தமிழக அதிமுக அரசு போட்டியாக களம் இறங்கிவிட்டதோ என்று தோன்றுகிறது. இது படைப்பாளிகள் பிரச்சனை அல்ல; தமிழக மக்களின் ஜனநாயக உரிமையை காக்கும் பிரச்சனையாக கருதி, ஜனநாயக சக்திகள் களமிறங்க வேண்டும்.
இன்று 31.10.15 PTTV நேர்படபேசுக்கு!
(விவாதத்தில்... சிவப்பு டிசர்ட் போட்டுக்கொண்டு வழக்குரைஞர் என்று கூறிக்கொண்டு, பேசுகிறார் ஒருவர் அந்த 'பிரகஸ்பதி' ராஜசேகரனாம்..! அவர் சொல்கிறார்; ஜெயலலிதா பெண்ணாம்; முதலவராம்; அவர் எங்கே? கோவன் எங்கே? என கூறுகிறார்...(இவர் அதிமுக இல்லையாம்) இந்த கைதை எதிர்த்த, பாடலை ஆதரித்து பேசிய, காங்கிரஸ் ஜோதிமணி முன்னிலையில் மட்டுமல்ல, கோடான கோடி மக்கள் முன்னிலையில் கூறினார்... "நல்ல குடும்பத்தின் பெண்" இந்த பாடலை ஆதரிக்க மாட்டார் என்று.
இது என்ன தேச நலன் சார்ந்த பேச்சு? இவரை (ராஜசேகரனை) எந்த செக்சனில் கைது செய்வது? எந்த நேரத்தில் கைது? கோடான கோடி பெண்களை கொச்சப்படுத்தி பேசியதற்கு?
இவர் வக்கில் என்ற திமிரில் எகிரி எகிரி பேசுவது மிகவும் கண்டிக்கத் தக்கது! மிரட்டலில் குதிக்கிறார்! அரசியல் கட்சியினரை ஏக தேசத்திற்குத் திட்டித் தீர்த்தார்; ஏன்? (மறு ஒளிபரப்பு, யூ ட்டியூப் இல் வக்கிலின் திமிரையும், நடராஜ் பேச்சையும் அவசியம் பாருங்க!)
----\\\\
படைப்பாளி தனக்குள்ளேயே...
ஒரு சுயக்காட்டு கொள்ள வேண்டும்!
இன்று 1.11.15 News 7 TV இல் 'கேள்வி நேரம்' இரவு 9-10 மணி... சிபிஐஎம் அ.குமரேசன், திமுக ஜெயராஜ், அதிமுக சரஸ்வதி, பாஜக.ராமநாதன் இவர்களுடன் நெறியாளர் விஜயன்...
தலைப்பு: கருத்து சுதந்திரம்... கோவன் சிறையில் அடைப்பு குறித்து இருந்தது.
அ.குமரேசன், "கோவன் சார்ந்த அமைப்போடு கருத்து வேறுபாடு உண்டு; என்றாலும் தமிழக அரசின் நடவடிக்கையை அனுமதிக்க முடியாது" என்றார். இதையே ஜெயராஜ் வேறொரு பாணியில் சொன்னார். சரஸ்வதியும், ராமநாதனும் தமிழக அரசை ஆதரித்தனர். ஆனால் அ.குமரேசனை தவிர மற்றவர்களின் சில கேள்விகளுக்கு பதில்லை.
"முதலில் கண்டித்த தமிழிசை பிறகு ஜகா வாங்கியதேன்? மோடியை விமர்சிப்பதால்தான் எதிர்க்கிறீர்களா? 5 நிமிடம் ஓடும் பாடலை பார்க்காமலா மாநில தலைவர் பேசினார்? காந்திக்குப் பதிலாக நேரு சுட்டிருக்க வேண்டும் என்றும், சூலாயுதம் ஏந்துவதும் தேச துரோக குற்றமல்லவா?" என்ற நெறியாளரின் கேள்விக்கு பரிதாபமாக காட்சி அளித்தார் பாஜக ராமநாதன்.
"திமுக ஆட்சியில் சீமானை கைது செய்தது எந்த வழக்கில்? ஏன்?" இதற்கு ஜெயராஜ் இடம் பதிலில்லை. சரஸ்வதி "அம்மா பெண்; தனிப்பட்ட முறையில் தாக்கினால் அது சரியா?" என திரும்பத்திரும்ப பேசிக் கொண்டிருந்தார்.
அ.குமரேசன்தான், "பாடைப்பாளி தனக்குள்ளேயே ஒரு சுயக்காட்டு கொள்ள வேண்டும்; சில வார்த்தைகளிலு உடன்பாடில்லை; ஆனால் அதிமுக அரசி செய்திருப்பது கருத்து சுதந்திரத்தை காவுக்கேட்பதை ஏற்க முடியாது" என சரியாகவே சொன்னார்.
நெறியாளரும் திமுக, அதிமுக, பாஜக கட்சிகளை நன்றாக அம்பலப்படுத்தினார். நன்றி. நன்று!
-----\\\\
வயிறு குலுங்கிவிட்டது... சிரித்து சிரித்து..!
இன்று 2.11.15 PTTV கிச்சன் கேபினட் டில் 'இடி தாங்கி' பரப்புரை வயிறு குலுங்கிவிட்டது... சிரித்து சிரித்து..!
பருப்பை வைத்து அலசியது அருமை! இதோ... "இனி தமிழகத்தில் மது'பார்'போல் தெரு தெருவாக சாம்'பார்' திறக்கப்படும்! இன்று 'பருப்பு' ஸ்பெசல் போலும்! சபாஷ்!
அதுபோல் புதுப்புது அர்த்தங்கள்கூட கோவன் ஸ்பெஷல்! கருத்து சுதந்திரத்தை தமிழக அரசு 'ஏலம்' விடுவதை நன்றாக அம்பலப் படுத்தியது நன்று! இது ஊடகங்களின் நல்ல தீணியாக இது அமைந்துள்ளது; ஆம் எதிர்கட்சிக்களுக்கும்தான்!
ஆனால், கோவன் "விவகாரத்தில்" எல்லாரும் இருக்கையில் ஒரு முக்கிய "விவகாரம்" ஒய்யாரமாக ஓரம் கட்டிப் போய் கொண்டிருக்கிறது.
அதாகப்பட்டது...!
2 பேர் கொடுக்கல் வாங்கலில் சண்டைப் போட்டு கொண்டு இருந்தபோது, அந்த சண்டையை சமாதானம் செய்ய வந்த ஒருவர், ஒருவரிடம்... "உங்க சண்டையில எங்கிட்ட வாங்கின ஆயிரம் ரூபாய்ய மறந்திராதே" என்றாம்!
அதுமாதிரி... 'அம்மா' வின் பினாமி ஆயிரம் கோடிக்கு வாங்கின "மால்" 'மல்லாக்கா மறஞ்சிக் கிடக்கிறது' போங்க அனைவர் கண்களில் இருந்தும்..!
இது குறித்த சிபிஐஎம் மாநிலச் செயாலாளர் தோழர் ஜிஆர் அவர்களின் கருத்து... தீக்கதிர் செய்தி தாளில் மட்டுமே!
------\\\\\
மக்கள் நலக் கூட்டியக்கம் விஸ்பரூபம் எடுக்கும்
இன்று 26.10.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியின் சுருக்கம் காலை 9 மணிக்கு பார்க்க நேர்ந்தது. முத்த பத்திரிக்கையாளர் மணி, விசிக ஷானவாஸ், நெறியாளர் ஜென்ராம்..!
வைகோ அவர்களின் ஒரு கருத்தே விவாதம்... கட்சி சாரா 65% வாக்காளர்களே முடிவை தீர்மாணிக்கிறார்கள் என்றதே அது. அதன் விவாதப்போக்கு அப்படியே பயணம் செய்து, திமுக வின் 2ஜி வழக்கு, ஜெ வின் சொத்துக்குவிப்பு வழக்கு இரண்டும், தேர்தலுக்குள் வந்துவிட்டால், அவர்களின் குற்றங்கள் நிரூபிக்கப் பட்டுவிட்டால், அது "மக்கள்நலக் கூட்டியக்க"த்திற்கு நிச்சயம் சாதகமாக மாறும் என விவாதம் முற்றுப் பெற வைத்ததில் ஜென்ராம் சாதுரியம் அருமை!
எனக்கென்னமோ இது எதார்த்தமாக இருந்தது! அதே சமயத்தில் இன்று வைகோ அவர்கள், இன்னும் குறைந்தபட்சம் 10 ஆண்டு இவ்வியக்கம் தொடரும்; அது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், குறைந்தபட்ச செயல்திட்டம் வெளியான பின் இவ்வியக்கம் விரிவடைய வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியிருப்பதும், மக்கள் நலக் கூட்டியக்கம் விஸ்பரூபம் எடுக்கும் வாய்ப்பு கூடுதலாகவே இருக்கிறது என்பது பிரகாசமாகத் தெரிகிறது!
அந்த வழியில்தான் இந்த விவாதமும் இருந்ததெனலாம்! நன்று!
-----\\\\\
எதார்த்தமான உண்மையே!
ஆட்சியைத் தீர்மாணிப்பவர்கள் எந்த கட்சியும் சாராத மக்களே என வைகோ கூறுவதுதான் எதார்த்தமான உண்மையே!
ஆகவே மக்கள் விரும்பும் ஆட்சி மாற்றத்தை மக்கள் நலக் கூட்டியக்கம் மட்டுமே தர முடியும் என்பதுதான் இன்றைய கள நிலவரமும் சாத்தியமும்!
இன்று 26.10.15 PTTV மக்கள் மேடையில் இதன் முழுபகுதியும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நன்றி!
------\\\\\
குழப்பத்தில் அதிமுக, திமுக..!
தனித்து போட்டியிட்டு அதிமுக சாதித்தது எந்த காலத்திலும் இல்லை; வருங்காலத்திலும் சாத்தியமில்லை; தற்போதைய கள நிலைமையும் அவ்வாறு இல்லை;
மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று ஸ்டாலின் அவர்கள் சொல்லுவது உண்மை; ஆனால் அது அதிமுக, திமுக அல்லாத மாற்றத்தைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். தேமுதிக இருவித கருத்து சொல்லுவது அதன் குழப்ப மனநிலையைக் காட்டுகிறது;
அது குழப்பநிலையிலிருந்து விடுபட்டு, மக்கள் நலக் கூட்டியக்கத்துடன் இணைந்து பணியாற்றுவதே தமிழக மக்கள் நலனுக்கு உகந்ததாக தோன்றுகிறது!
-----\\\\
பண்பாடு-கலாச்சாரம்-நாகரீகம்-வகுப்புவாதம்!
🎎🎆💇🎾🏃🏁💀🎋💏🎃
"... காலனி ஆதிக்கம் பலாத்காரத்தோடு அதிகாரத்தைக் கைப்பற்றியது. உலகமயமாக்கல் இன்று பண்பாட்டின் ஊடாக நடந்தேறி வருகிறது. மின்னனு ஊடகங்களின் மூலமாகவும், தொலைக்காட்சி மூலமாகவும் இது ஊடுறவுகிறது..."
"... உலகமயமாக்கலும், வகுப்புவாதமும் உருவாக்கியுள்ள பொதுச் சிந்தனையை குலைக்க, பல ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளின் மூலம் ஒரு எதிர்கலாச்சாரத்தை உருவாக்குவதுதான் இன்றைய தேவை. இது எப்படி சாத்தியம்? நமக்கே உரித்தான பாரம்பரிய மூலங்களை ஆதாரமாக கொண்டு, இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு அவற்றை மாற்றி அமைப்பதும், அதேவேளையில் பிற்போக்கு வாதத்திற்கு ஆளாகி விடாமல் செயல்படுவதுதான் ஒரேவழி..."
"... நாகரீகம் 4 கூறுகள் கொண்டது; 1. ஒரு குறிப்பிட்ட பகுதியில் பரவியிருந்தது; 2. மொழி; 3. சமயம்; 4. செவ்விய காலம்; இந்த நான்கும் தற்போது கேள்விக் குறியாக்கப்பட்டு உள்ளது..." ஆம்! நமது ஒரளவு பாதுகாப்பான வாழ்வு இன்று கேள்விகுறியில்தான்! நமது வாழ்வும் பண்பாடு-கலாச்சாரம்-நாகரீகம் மூன்றும் வேறுவேறல்ல; இவை உலகமய சூழலில் எப்படி ஆட்கொண்டு அரித்துக் கொண்டிருக்கின்றன என்பதை மிக அற்புதமாக அக்டோபர் மார்க்சிஸ்ட் அலசுகிறது; அவசியம் வாசியுங்கள் அனைவரும்! கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும்; ஒருமுறைக்கு இருமுறை வாசித்தால் இதயங்கள் தெளிவாகும். மார்க்சிஸ்ட் ஆசிரியர் குழுவுக்கு, வாசித்தப்பின் நீங்களும் பாராட்டைப் பதிவீர்கள்!
------\\\\\
மற்றதெல்லாம் இறக்குமதி ஆனாபோது!
சீனாவில் இருந்து...
பட்டு இறக்குமதி ஆகுகிறபோது...
செல்கள் இறக்குமதி ஆகுகிறபோது...
வெள்ளி கொலுசு இறக்குமதி ஆகுகிறபோது...
டெடிமேட் ஜவுளிகள் இறக்குமதி ஆகுகிறபோது...
எத்தனையோ பல்லாயிரக்கணக்கான பொருள்கள் இறக்குமதியாகி,
நமது சிறு குறு பாரம்பரிய தொழில்கள் பாதித்தப்போது...
பாரம்பரிய விவசாயம் பாதித்தப்போது...
வெடிக்காதவர்கள்...
தனிப்படை அமைத்து தேடாதவர்கள்...
பட்டாசு வில் மட்டும் வெடிப்பதும், கண்ணீர் வடிப்பதும் ஏன்?
இவர்கள் (பட்டாசு முதலாளிகள்) அனைத்துக்கட்சி, தொழிற்சங்க அமைப்புகளிலும், அரசியலிலும் வலுவாக ஆதிக்கம் செலுத்துவதாலா? எதனால்? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்..!?
-----\\\\\
வர்ணாசிரமே காரணம்!
சாதிய அரசியலுக்கு மாநில கட்சிகளோ, தேசிய கட்சிகளோ எந்தளவுக்கு காரணமோ,
அதைவிட ஆயிரம் மடங்கு வர்ணாசிரம பாகுபாடுகளும், நிலபிரபுத்துவ-முதலாளித்துவ சமுதாய அமைப்பு முறையும் காரணம்;
இந்த அடிப்படை கட்டமைப்பே ஜாதிய அரசியலுக்கும், மத அரசியலுக்கும் காரணம்!
இன்று 27.10.15 PTTV மக்கள் மேடைக்கு!
-----\\\\
காங்கிரஸ்-பாஜக இரண்டும் ஒன்றே!
மீனவர்கள் பிரச்சனையை கையாளுவதில் ஆர்வம் காட்டுவதில் காங்கிரஸ்சும் கிடையாது; பாஜகவும் கிடையாது!
மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம் யோசனையை (4 நாள் தமிழக மீனவர்; 3 நாள் இலங்கை மீனவர் மீன் பிடிப்பது) அமலாக்குவதே இப்போதைக்கு தீர்வு!
இதை வலியுறுத்தி, இரு தரப்பு மீனவர்களும் பேசி, அதற்கு இரு தரப்பு அரசுகளும் முயற்சி எடுத்தல் வேண்டும்! அதுவே சுமூக தீர்வுக்கு வழி!
இன்று 27.10.15 PTTV நேர்பட பேசு க்கு!
----\\\\
எதை தின்றால்... பித்தம் தெளியும்?
ஆம்! தாங்கள் சொல்வது மிக சரியானது.
ஜாதி-மத வெறி சக்திகள் முன்னெப்போதும் விட தற்போது, யாராவது ஒரு வரலாற்று ஆளுமைகள் அடையாளம் கிடைக்காதா?
அதை வைத்து அரசியல் அதிகாரம் பெற முடியாதா? என அலைகிறார்கள்.
அதில் தற்போது முன்னிலையில் இருப்பது பாஜக. அப்படியில்லை என்றால், மருது சகோதர்களுக்கும், முரளீதர ராவ் களுக்கும் என்ன சம்மந்தம்?
விடுதலை போரைக் காட்டிக் கொடுத்த அன்றைய பாஜகவான இந்து மகாசபை, ஜனசங்கத்திற்கும் என்ன சம்பந்தம்?
ஆம்! ராஜராஜசோழனுக்கும் பாஜகவுக்கும் என்ன சம்மந்தம்?
எதை தின்றால் பித்தம் தெளியும் என்று...
ஆம், எதை செய்தால், தமிழக மக்களுக்கு காவி உடுத்தி, காவடி தூக்கி, தின்னீர் தந்து, அவர்களது ஓட்டுக்களை திருடி, உட்கார முடியும் ஆட்சிக்கட்டிலில் என "அலையோ அலையென" அலைகிறது தமிழகத்தில் பாஜகவும், சங்பரிவாரமும்!
தமிழக மக்கள் ஏமாளிகளா என்ன?
(ஒரு முகநூல் தோழரின் பதிவுக்கு பதில் பதிவு!)
-----\\\\
ராம்தாஸ் கூற்று பாதி உண்மை; மீதி அரசியல்!
கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் முற்றிலும் விவசாயம் அழிந்துவிட்டது என்றுக்கூறிவிட முடியாது; தமிழ்நாடு தனித்தீவு அல்ல; இந்திய தேசத்தின் ஒரு மாநிலம்; இந்திய அரசின் காங்கிரஸ் மற்றும் பாஜக அரசுகளின் கொள்கைகளும், அதற்கு ஆதரவாக எவ்வித ஆட்சேபனையும் இன்றி திமுக, அதிமுக அரசுகள் அமலாக்கியதுமே, தமிழக விவாசாயம் இன்று சந்திக்கும் அனைத்துவித நெருக்கடிகளுக்கும் காரணம்!
ஆகவே ராம்தாஸ் சொல்வது பாதி உண்மை; மீதி அரசியலுக்கான அச்சாரம்!
தமிழக விவசாயத்தை அழிவில் இருந்து காக்க வேண்டுமானால், நிலமில்லாத குடும்பங்களுக்கு நிலங்களை சரிசமமாக பங்கிட்டு கொடுத்து, அவர்களின் இடுப்பொருட்களுக்கும், உற்பத்திப் பொருட்களுக்கும் நியாயவிலை உறுதிபடுத்தினால்தான் காக்க முடியும்; அத்தகைய கொள்கை ராம்தாஸ் அவர்களிடம் இல்லை; அத்தகைய கொள்கை கம்யூனிஸ்ட்களிடம் மட்டுமே இருக்கிறது!
இன்று 28.10.15 PTTV மக்கள் மேடைக்கு!
(விவாதத்தில் பாமக சார்பில் பேசியவரிடம், நெறியாளர் குறுக்கிட்டு, "சாதியைத் தவிர மற்றதெல்லாம் வளரல; அப்படித்தானே" என கேட்டது நெத்தியடி! ஆனால் அதற்கு பாமக பிரமுகர் பதிலே சொல்லல!)
----\\\\
அழகும் இல்லை; அர்த்தமும் இல்லை!
"அரை மணிநேர முதல் அமைச்சர்" என ஸ்டாலின் ஜெயலலிதா மீது கடும் குற்றச்சாட்டு வைத்திருப்பது ஆதாரமுள்ளதாகவே இருந்தாலும், அது அரசியலே!
ஸ்டாலின் குற்றச்சாட்டில், அரசியல் இல்லையென யாராலும் கூறமுடியாது; "அரை மணி, கால் மணி நேர முதல் அமைச்சர்" என்பதெல்லாம் அரசியல் தரமற்றது; அங்ககீனமானது;
ஒரு... முன்னாள் சென்னை மேயருக்கு, முன்னாள் துணை முதல்வருக்கு இப்படியான விமர்சனம் அழகும் இல்லை; அர்த்தமும் இல்லை!
இன்று 28.10.15 PTTV நேர்பட பேசுக்கு!
-----\\\\
அரசியல் குடுவையில் அடைக்காதே!
பிரபலங்கள் விருதுகளைத் திருப்பித் தருவது மெய்யானதுதான்; அரசியல் என்ற குடுவைக்குள் அடைக்க வேண்டாம்.
பாஜக ஆட்சிக்கு வந்தப்பின் சகிப்புத்தன்மை என்றால் என்ன விலையென கேட்குமளவுக்கு இந்துத்வா சக்திகள் வெறி கொண்டு அலைகின்றன.
இதை கட்டுப்படுத்த வேண்டிய பாஜக அரசு எரியும் கொள்ளியில் எண்ணெனய் வார்கிறது; இதை எப்படி பார்த்து பார்த்துக்கொண்டிருப்பது?
அதனால்தான் பிரபலங்கள் களத்தில் இறங்கியுள்ளனர்; இதனை தொடர்ந்து ஜனநாயக சக்திகளும் களம் இறங்கி, மக்கள் ஒற்றுமைக்கும், உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு தந்திட பாஜக அரசை நிர்பந்திக்க வேண்டும்!
இதுதான் பிரபலங்களின் மெய்யான நோக்கம். இதில் அரசியல் ஏதும் இருப்பதாக தோன்றவில்லை!
இன்று 29.10.15 PTTV மக்கள் மேடைக்கு! இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
-----\\\\
வைரமுத்து நீதித்துறை குறித்த விமர்சனம் மிகச்சரி
கவிஞர் வைரமுத்து நீதித்துறை குறித்த விமர்சனம் மிகச்சரியானது. அவமதிப்பு ஒன்றும் கிடையாது.
பெங்களூரூ சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு அதிமுக கொடுத்த "மரியாதை"யை நாடே அறியும். அதையெல்லாம் என்னவென்பது?
நீதிபதிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்;
கீழவெண்மணியில் 1964இல் 44 தலித் மக்கள் தீயிட்டு கொன்ற வழக்கில் "அவர்கள் மேட்டுக்குடி மக்கள்; மேல்ஜாதியினர்; அவ்வாறு செய்யமாட்டார்கள்" என்று தீர்ப்பு வழங்கியவர்கள் நீதிபதிகள்!
சீசரின் மனைவியே சந்தேகத்திற்கு உரியவரென அந்த காலத்திலேயே வாதிடப்பட்டது.
நீதித்துறை ஆளும் வர்க்கத்தின் கேடயங்களில் ஒன்றுதான்; அதன் தீர்ப்பு என்றுமே 'ஒன்சைடு'தான்!
இன்று 29.10.15 PTTV நேர்பட பேசுக்கு! இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
-----\\\\
உச்சநீநி மன்றம் பரிந்துரை சரியல்ல!
உயர்கல்வியில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய உச்சநீதி மன்றம் பரிந்துரைத்திருப்பது... வன்மையாக கண்டிக்கத்தக்கது.
எக் காரணம் கொண்டும் அதை ஏற்க முடியாது. மதவாதம் ஆட்சிக்கு வந்தால், அது மதம் பிடித்த யானை போல்தான் செயல்படும் என்பதற்கு இதைவிட வேறு சாட்சியம் தேவையா?
கல்வியில் ஆரம்பித்து நீதுத்துறைவரை மதவாதம் ஊடுருவிவிட்டதோ என மக்கள் அச்சம் அடையுமளவுக்கு இந்த பரிந்துரை அமைந்துள்ளது என்றே தோன்றுகிறது.
இன்று 30.10.15 PTTV மக்கள்மேடைக்கு!
(இந்தியாவில் கவர்னர் முதல் எம்பி வரை பிராமணர்களின் ஆதிக்கம் இன்றும், அதாவது இத்தனை ஆண்டுகள் இட ஒதுக்கீடு இருந்தும் உயர் பதவியில் வரமுடியாத நிலையை கோவை நேயர் 'வல்லரசு' பாணியில் செம மாத்து மாத்தினார்; சபாஷ்!
பிராமணர் சங்க நாராயணன் வாய் அடைத்து போனார் பாவம்!)
----\\\\
மோடி அரசு மீதான மூடிஸ் விமர்சனம் சரியே!
மோடி அரசைப் பற்றி முடிஸ் கூறியிருப்பது அலட்சியப்படுத்தக் கூடியதல்ல; பொருட்படுத்திடல் வேண்டும்.
மதவெறி தலைவிரித்து ஆட ஆட இந்தியாவின் வளர்ச்சி மட்டுமல்ல, இதுவரை கட்டிக்காத்து வரும் ஜனநாயகமும் அரிக்கப்பட்டு, சர்வாதிகாரம் தலைத்தூக்கும்!
ஆகவே சர்வதேச பொருளாதார ஆய்வு அமைப்பு அறிக்கை மதிப்புமிக்கது; மதிக்கத்தக்கது!
இன்று 30.10.15 PTTV நேர்படபேசுக்கு!
-----\\\
No comments:
Post a Comment