Sunday, 27 September 2015

"ஸ்பேஸ்" அளித்த... 
ஜென்ராமுக்கும், துரைசாமிக்கும் நன்றி..! 

இன்று 27.9.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில்... மார்க்சிஸ்ட் கண்ணன், அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி இவர்களுடன் நெறியாளர் ஜென்ராம்!

திமுக ஸ்டாலினின் கடந்த காலம் தவறு நேர்ந்திருந்தால் மன்னிப்பு கோரும் பேச்சு.. (என்னா நடிப்பு!); பீகார் தேர்தலில் கிரிமினல்களுக்கு சீட் விற்கப்படுவதாகவும், அதனால் பாஜகவுக்கு கிரிமினல்களுக்கு  (மானக்கேடு) தருவதாக வடக்கே பாஜக தலைவரின் பேட்டி; தமிழருவி மணியன் பேட்டி என நீண்டது..!

மாணவர்கள் அரசியலால் பாதிப்பதும், அதனால் கட்சிக்கு முழுநேர ஊழியர்கள் கிடைப்பார்கள் அல்லவா? என்ற அர்த்தத்தில் ஜென்ராம் கொண்டு போனது... மிகுந்த வருத்தம்; இவரிடமிருந்து இப்படி பொதுவழியில் நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.

(தோழர் கண்ணனை நினைத்துகூட, அல்லது பெருமை சேர்க்கும் விதமாககூட, கையாண்டிருக்கலாம்; எப்படி இருந்தாலும் அது நெருடல்!)

என்றாலும் கண்ணன் விவாதத்தின் ஊடே இளைஞர்களுக்கு அரசியல் அவசியம் என்றும், மாவீரன் பகத்சிங் பிறந்த நாளில் இணைத்ததும் 'டாப்!' 

தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டியக்கம் குறித்து ரவீந்திரன் துரைசாமி எழுப்பிய அச்சம் நியாயமே; தமிழருவி மணியனுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கும் இந்த கூட்டியக்கம் மீது நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்திருக்கிறது;

ஆதாரம்: சில நாட்களுக்கு முன் தமிழ் இந்து கருத்து கணிப்பில் 31% வாக்களித்திருப்பது கவனிக்கத்தக்கது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் நலன் சார்ந்தே, அவ்வப்போது முடிவெடுத்து செயல்படுகிறதே ஒழிய, தனிநபர் அல்லது குடும்ப நலன் சார்ந்து எந்த காலத்திலும் முடிவெடுத்தில்லை; செயல்பட்டதுமில்லை என்பதை மிக சரியாக தனது சாமார்த்தியம் சார்ந்து தோழர் கண்ணன் பதில் அளித்ததும், அதற்கான "ஸ்பேஸ்" அளித்த ஜென்ராமுக்கும், துரைசாமிக்கும் நன்றி. 

நெறியாளர் மற்றும் ஆய்வாளர் இருவருமே மார்க்சிஸ்ட் கட்சி மீதும், அதன் மக்கள் சார்ந்த முடிவு மீதும் உரிய பொருத்தமான "இடம்" அளித்தது மகிழ்ச்சி! சறுக்கலற்ற அமைப்பு நாட்டில் ஏதுவும் இல்லை; ஆனால் அது யாருக்காக? மக்களிக்காகவா? தனி நபர், குடும்பம் சார்ந்தா? என்பதுதான் முக்கியம் அல்லவா?

----\\\\\

"நாட் ஒன்லி கம்யூனிஸ்ட்!"

வெள்ளத்துரை என்கிற  காவல்துறை அதிகாரி...

'போலீசைப் பற்றி எவனாது பேசினா, அவன தூக்கி 24 மணி நேரத்துல உள்ள போடு; நாட் ஒன்லி கம்யூனிஸ்ட்; யாரா இருந்தாலும் சரி; நம்ம அடி நெத்தியடியா இருக்கனும்!' என்று பேசி உள்ளார்.

இப்பொழுது இந்த வெள்ளதுரை என்கிற வெங்காயதொற ராமநாதபுரம் ADSP யாம்!  

இவருக்கு பணிந்து அனுப்புகிறோம்...

"காவல்துறை கருணாநிதியின் ஏவல்துறை"யாக உள்ளது!  

யாரு பேசியது? ஒரு க்குளு... 
'பேசி 4 வருசம் ஆகிறது!' 

இவரு யாருன்னு கண்டுப்பிடித்து இன்னும் 24 மணி நேரத்தில் உள்ளே போட்டு... 

"காவல்துறை ஜெயலலிதாவின் ஏவல் துறை அல்ல!" 

என நிருபித்து, 'ஜனாதிபதி விருது' பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்! 

----\\\\

சவுக்கால் அடிக்கலாமா? 

தமிழகத்தில் நடந்த   காங்கிரஸ் ஆட்சியையும் சேர்த்துத்தான் சொல்கிறாரா? 

அதுசரி, மத்திய அரசில் அன்புமணி ராம்தாஸ் அன்றைய ஆட்சியாளர்களின் தேர்தல் அறிக்கையை அல்லது அந்த தேர்தலில் வைத்த அறிக்கையை 100% அமலாக்கினார்களா? 

வரும் தேர்தலில் பாமக ஒருவேளை ஆட்சியை பிடித்து விட்டால், 100% அமலாக்கவில்லை என்றால், என்ன செய்து? 

மின்விளக்கு கம்பத்தில் தலைகீழாக தொங்கவிட்டு சவுக்கால் அடிக்கலாமா? (ஏற்கனவே அவர்தான் குடும்ப அரசியல் பாமக வில் மேற்படி செய்ய சொன்னார்!)

இன்று 23.9.15 PTTV மக்கள்மேடைக்கு!

----\\\\\

சபாநாயகர் கண்டு ரசிக்கிறார்!

தமிழ்நாடு அரசின் முதல் அமைச்சர்தான் சட்டசபை விதிமுறைகளை மீறுகிறார்! அதை சபாநாயகர் கண்டு ரசிக்கிறார்!

ஆனால் எதிர்கட்சிகளின் உரிமைகளை பறிக்கிறார்! ஒன்றிரண்டு எதிர்கட்சிகள் விதியை மீறியிருந்தால் அதற்கு பொறுப்பு ஆளும் முதல்வரும், அமைச்சரும், சபாநாயகரும்தான்! 

இன்று 23.9.15  PTTV நேர்படபேசுக்கு!

----\\\\

மக்கள் நலக் கூட்டியக்கம் 
ஆட்சியைப் பிடிப்பது சாத்தியமே! 
🌠🌠🌠🌠🌠🌌🌌🌌🌌🌌🎎🎎🎎🎎🎎🎆🎆🎆🎆🎆 

22.9.15 தமிழ் இந்துவில் ஒரு கேள்வி...!

"மக்கள் நல கூட்டியக்கம் மாற்றத்தை ஏற்படுத்துமா?" என்பது!

இதற்கு 23.9.15இல் பதில்... 

(இதற்கு இந்த கூட்டியக்கத்தைச் சார்ந்த நான் என் வாக்கைப் பதிவு செய்யவில்லை; என்னைப் போன்றுதான் இவ்வியக்கத்தைச் சேர்ந்த 99.9% பேர் இருந்திருப்பர்!)   

ஆக பதில் அளித்தவர்கள் முழுவதும் பொதுமக்களே என்றால்... அது மிகையன்று!

ஆம்! 

வாக்களித்தவர்களில் 31% (முழு பலன் தரும் 14%; ஓரளவு பலன் தரும் 17% ஆக 31%) பேர் ஆதரவு அளித்திருப்பதை காணுகிறபோது... 

"மக்கள் மாற்றத்தை வரவேற்க தயாரிக்கிவிட்டார்கள்" என தோழர் ஜிஆர் சொன்னது எவ்வளவு நிதர்சனமான உண்மை!

31% வாக்கால் ஆட்சி மாற்றம் வருமா?

வரும்! 

இது தற்போதைய நிலை! இன்னும் 8 மாத காலம் இருக்கு; இது இந்த கூட்டிக்கத்திற்கான "ஏறுமுக காலமே!"

ஆம்! 31% வாக்குப் பெற்று பாஜக மத்தியில் ஆட்சியை பிடிக்கிறபோது... 

இதுவும் (மக்கள் நலக் கூட்டியக்கம் ஆட்சியைப் பிடிப்பதும்) சாத்தியமே! 

மக்கள் நலக் கூட்டியக்கத் தோழர்களே..! முன்னேறுவோம்..! வானம் தொட்டுவிடும் தூரம்தான்!

----\\\\
[9/24/2015, 11:21] +91 94899 25888: 31 சதம் ஓட் வாங்கிய bjp ஆட்சியை பிடித்தது. நாமும்...
---\\\\

[9/24/2015, 12:17] +91 94865 96641: 31% ஓட்டு உறுதியாக்கி விட்டோமென்றால், இன்றைய தமிழக சூழலில் ஆட்சி யை நாம் பிடிப்பதை யாராலும் தடுக்க முடியாது!

----\\\\

[9/24/2015, 12:49] +91 94453 33614: இப்போது இப்படி முடிவுக்கு போவது பொருத்தம் அல்ல ...ஆனால் மக்கள் மாற்று அரசியலைத் தேடுகிறார்கள் என்து உண்மை...அந்த மாற்றாக நாம் மக்கள் மனதில் நம்பிக்கையை உருவாக்குதுதான் நமது அரசியல் பணி,..அதை திறம்பட செய்வதுதான் நம்முன் உள்ளசவால்👏

---\\\

[9/24/2015, 12:54] +91 94899 25888: 💪💪💪💪💪

[9/24/2015, 13:10] +91 94865 96641: எப்படி முடிவுக்கு போகக்கூடாது? இடதுசாரிகளுக்கு மட்டுமேயான கருத்து கணிப்பல்ல இது! 5 கட்சி கூட்டியக்கத்தின் மீதான கருத்து கணிப்பு இது! இதொரு மிக சாதகமான சூழல்! குறைந்தபட்சம் இந்த 5 கட்சி கூட்டியக்கத்தை சிந்தாமல், சிதறாமல் கொண்டு போவதிலும், மேலும் சில ஜனநாயக கட்சிகளை இதில் இணைப்பதிலும் நமது கவனமும், காரியமும் இருத்தல் வேண்டும். இதில் வெற்றி என்றால்... அதிலும் வெற்றி உறுதியே!

----\\\\

இடதுசாரிகள் தவிர்த்து..! 

ஸ்டாலினின் 'நமக்கு நாமே' பிரச்சாரமோ? "தலைவர்களின் தேர்தல் நேர பயணத்தால் யாருக்கு லாபம்: மக்களுக்கா? அரசியல்வாதிக்கா?" என்றால்... அரசியல்வாதிகளும் மக்கள்தானே..! 

ஆட்சியை பிடிப்பவர்களும் அரசியல்வாதிகள் தான்; ஆட்சியைப் பிடிக்க முடியாதவர்களும் அரசியல்வாதிகள்தான்!

எனவே ஆட்சியைப் பிடித்த அரசியல் வாதிகளுக்கும் (இடதுசாரிகள் தவிர்த்து) மக்களுக்கும்தான் லாபம்!

ஆனால் ஆட்சியாளர்கள் பெரும்பான்மை மக்களுக்கான திட்டங்களை உருவாக்கி, செயலாக்கிட வேண்டும்; அப்பொழுதுதான் மக்களுக்கு லாபம்!

இன்று 24.9.15 PTTV மக்கள் மேடைக்கு!

----\\\\

இது இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் செயலே! 

ராஜஸ்தான் பாஜக அரசுதான் ஆர்எஸ்எஸ் க்கு குட்டி; இந்த குட்டியை வைத்துதான் ஆழம் பார்க்கும். அதுதான் இதுவும். 

சந்தேகமே வேண்டாம்; இது இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் செயலே! 
அனேகமாக விரைவில் எதிர்ப்பார்க்கலாம்...

"இது பார்ப்பனீய தேசம்; இதை ஏற்பவர்கள் இருக்கலாம்; ஏற்காதவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம்" என்ற அறிவிப்பை! 

குஜராத் பட்டேல் சமூக போராட்டத்தை ஆர்எஸ்எஸ் தூண்டுதல் துளியும் இல்லாமல்தான் 22 வயது இளைஞன் செய்துவிட்டாரா?  

குஜராத்தில் மழை பெய்தால், ராஜஸ்தானில் குடைப்பிடிப்பதும், ராஜஸ்தானில் இடி இடித்தால் மத்தியபிரதேசத்திலும், காஷ்மீரில் மழை பெய்வதும் ஆர்எஸ்எஸ் சின் சித்து விளையாடு அல்லவா?  இதற்கு பெயர் தான் மோடி ம(த)ந்திரம்..!

இன்று 24.9.15 PTTV நேர்படபேசுக்கு!

----\\\\

கொடியேற்றுவிழா-கட்சிநிதி அளிப்பு!

விழுப்புரம் தெற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டத்தில் 16 இடங்களில் சிபிஐஎம் கொடியேற்றுவிழா-கட்சிநிதி அளிப்பு! 25.9.15.

கட்சி மாநிலக்குழு உறுப்பினரும், சேலம் மாவட்டக்குழு செயலாளருமான பி.தங்கவேலு சிறுநாகலூரில் கொடியேற்றி உரையாற்றுகிறார். 

அருகில் கள்ளக்குறிச்சி வட்டச்செயலாளர் அ.ப.பெரியசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.செல்வராஜ் உள்ளிட்டோர்...

----\\\\

சுங்கச்சாவடி நீக்கம் என்பதுதான்..!

சரியாக சொன்னால் சுங்கச்சாவடி நீக்கம் என்பதுதான்; ஆனால் அது நடக்கப்போவதில்ல! 

ஆதலால் உணவு பொருட்கள் எடுத்துவரும் வாகணம், அரசு பேருந்து, மருந்து மற்றும் குடிநீர் போன்ற சேவை வாகணங்கள், மகிழ்வுந்து போன்றவற்றிக்காவது கட்டணங்கள் குறைக்கவேண்டும்.

இன்று 25.9.15 PTTV மக்கள் மேடைக்கு!

----\\\\

ரத்தக்காட்டேரி அமெரிக்கா..! 

காமன்வெல்த் விசாரனையும் நானறிந்த வகையில் சர்வதேச விசாரணைத்தான். 

அமெரிக்கா இந்த விசாரணைக்கு தலைமை தாங்குவதற்கு தகுதியற்ற நாடு. ஈராக், ஆப்கன் உள்ளிட்ட நாடுகளை தும்சம் செய்த ரத்தக்காட்டேரி அமெரிக்கா.

இலங்கை தமிழர் பிரச்சனையிலும் சந்தர்ப்பவாத நிலையெடுத்தது அமெரிக்கா. அமெரிக்கா என்ற ரத்தவெறி காட்டேரி அரசு, ஆம் , ஏகாதிபத்திய அரசு இருக்கும் வரை... 

இலங்கைதமிழர் மட்டுமல்ல உலகில் யாரும் நிம்மதியாக இருக்க முடியாது; எந்த பிரச்சனையும் அது தீரவிடாது! 

இன்று 25.9.15 இதன் ஒருபகுதி PTTV நேர்பட பேசுவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

----\\\

இது வேலை ஏய்ப்பு! 

இன்று 26.9.15இல் சேலம் மாவட்டம் எடப்பாடியில் வந்து குவிந்த இளைஞர்களுக்கு பொருந்தும்.

ஆம், அஇஅதிமுக சார்பில், "வேலைவாய்ப்பு முகாம்" நடத்தப்பட்டது. அதில் ஆயிரக்கணக்கில் கல்வி நிறுவங்களில் இருந்தும், அதிமுக விலிருந்தும் வாகணங்கள் மூலம் வாலிபர்கள் (ஆண், பெண்) இரு பாலரையும் திரட்டினர்.

எடப்பாடி ஒரு சிறிய நகராட்சி. ஆயிரக்கணக்கில் அது தாங்குவதற்கு ஏற்ற இடமே இல்லை. அதே எதிர்கட்சிகள் கேட்டிருந்தால், எடப்பாடி அருகில் இருக்கும் 'பாங்கரட்டில்'தான் அனுமதி கிடைத்திருக்கக்கூடும். சரி, அது ஒரு பக்கம். வந்தவர்களுக்கு தண்ணீர், கழிப்பிடம், உணவு வசதி ஏதுமில்லை. 

திருப்பூரில் இருந்து 2,3 பனியன் கம்பெனிகள், 2,3 மில் ஆலைகளை சார்ந்தவர்கள் என்று சிலர் ஆலைநிர்வாகம் தரப்பில் வந்துள்ளனர். அவ்வளவுதான். கூலி ரூ150, 200; இதைக் கேட்டவர்கள் பின்னங்கால் பிடறியில் அடித்து ஓடிவிட்டனர். 

இதுதான் அம்மாவின் ஆட்சியில் வேலை வாய்ப்பு முகாம் லட்சணம். அம்மா உலக முதலாளிகளை திரட்டி மாநாடு நடத்தி டூபாக்கூர் வேலை செய்தால் இரத்தத்தின் இரத்தங்கள் இதுமாதிரி அவர்கள் அளவுக்கு டூபாக்கூர் வேலை செய்ய வேண்டுமல்லவா? லட்சக்கணக்கில், இல்லை இல்லை எல்லாம் சேர்த்தால் கோடி வரும் என்கிறார்கள் இரத்தத்தின் இரத்தங்கள்.

அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டாத வேலையைச செய்து கட்சி பேரக் கெடுத்ததுதான் மிச்சம் என்று விபரம் அறிந்த ரத்தங்களும், அம்மாவின் நாடி நரம்புகளும் பேசியது நம் காதுகளில் தேவையில்லாமல் விழுந்தது. அனேகமாக இதுமாதிரி இதுமாதிரி டூபாக்கூர் எக்ஸ்பிரஸ் இனி இதர தொகுதி அல்லது மாவட்டங்களுக்கும் போகும் என்றும் பேசிக்கொண்டார்கள். 

இளைஞர்களே உஷார்! இது அல்ல வேலை வாய்ப்பு; இது வேலை ஏய்ப்பு! வேலையின்னமையும், வறுமையும் முதலாளித்துவத்தின் இரட்டைப் பிள்ளைகள் என்பார் மாமேதை காரல் மார்க்ஸ்.

----\\\\
ஈகோ தான்! 

வழக்குரைஞர் - நீதிபதிகள் மோதல்கள் நீடிப்பதற்கு காரணம் ஈகோ தான்! வேறென்ன? தேசப் பாதுகாப்பு பிரச்சனையா?

இப்பொழுது வெட்டிக் கொள்வார்கள்; அப்புறம் ஒட்டிக்கொள்வார்கள். வழக்குரைஞர் கேஸ் வெற்றபெறவில்லை எனில், பீஸ் திருப்பி தரவேண்டுமென தீர்ப்பு வழங்கிய, நீதிபதியார்... இவர் வழக்குரைஞராக இருந்தபோது, தோல்வியடைந்த (?!) கேஸ்களுக்கு பீஸை திருப்பி தந்து முன் மாதிரியாகட்டும்! சும்மா..!

இது வெத்துவேட்டு மிரட்டல் மட்டுமே!

இதன் ஒருபகுதி இன்று 26.9.15 PTTV நேர்பட பேசுவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
----\\\\

Tuesday, 22 September 2015


டிஎஸ்பி விஷ்ணுபிரியா சாவு மர்ம மர்ணமே!

டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மரணம் தற்கொலைதானா? என்ற சந்தேகம் இருக்கிறது. காரணம் அப்பகுதியில் ஆதிக்க ஜாதி அமைப்பினர் விஷ்ணுப்பிரியா இறப்புக்கு அஞ்சலி போஸ்டர் வெளியிட்டிருப்பதும், வாட்ஸ்அப் பில் மரணத்தின் காரணங்களை வெளியிடுவேன் என்று கோகுல்ராஜ் கொலையின் முதல் குற்றவாளி கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது!

ஆதிக்க ஜாதியின் கோரவடிவமே விஷ்ணுபிரியாவின் மர்ம மரணம்! அதுவும் தலித் மாணவன் கொலை வழக்கை விசாரிக்கும் தலித் பெண் அதிகாரி தூக்கில் தொங்குகிறார் என்றால்... 

அவர் எழுத்தப்பட்டதாக கூறப்படும் கடிதம் இரண்டில், ஒன்றில்... கையெழுத்து இட்டு முடிக்கப்படாத  அந்த ஒரு கடிதத்தின் மீதி பகுதி மக்களுக்கு கிடைத்தால் மட்டுமே அது தற்கொலையா?இல்லையா? என்று முடிவுக்கு வரமுடியும். அதுவரை இது மர்ம மரணமே! 

உயர்நீதி மன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரணையால் மட்டுமே உண்மையை இதில் வெளிவரும்; சிபிசிஐடி விசாரணை வெறும் கண்துடைப்பே!

அரசு அதிகாரிகள் தற்கொலைக்கு மேல் அதிகாரிகளின் அழுத்தமும், மிரட்டலும் எந்தளவுக்கு உண்மையோ, காரணமோ அந்தளவுக்கு சற்றும் குறையாமல் காரணமாக இருக்கிறார்கள் அரசியல் வாதிகளும், அமைச்சர்களும், சமூக விரோத கும்பல்களும், ஆதிக்க சாதி வெறியர்களும்!

காவல்துறையில் இதுபோன்ற மனஅழுத்தம்  மிரட்டல்களில் இருந்து தங்களை பாதுக்காத்துக் கொள்ள அதில் பணிபுரிவோருக்கும் ஜனநாயக உரிமைகள் வழங்கிடல் வேண்டும். 

மற்ற துறை அரசு ஊழியர்களுக்கு இருப்பது போன்ற சங்கம் அமைத்து செயல்படும் உரிமை காவல்துறைக்கும் வழங்கிடல் வேண்டும்!

இன்று 21.9.15 PTTV மக்கள் மேடைக்கு!

----\\\\

டிஎஸ்பி விஷ்ணுபிரியா சாவு மர்ம மர்ணமே! மேலதிகாரிகளின் மிரட்டல், அழுத்தம் மட்டுமல்ல, அரசியல்வாதிகள், அமைச்சர்கள், சமூகவிரோதிகள், சாதி-மதவெறியர்களின் அழுத்தமும், மிரட்டலும் முக்கிய காரணம் தலித் பெண் டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மரணத்திற்கு!

சிபிசிஐடி என்பதும் விஷ்ணுப்பிரியா பணியாற்றிய மாநில காவல்துறைதான்; இவரது மரணம் தமிழகஅரசுக்கும், காவல்துறைக்கும் அவமானம் என்று கருதும் மனநிலையில் தமிழக அரசு இருப்பதனால், இதன் விசாரணையில் உண்மை வெளிவராது! 

ஆகவே உயர்நீதி மன்றம் மேற்பார்வையில் மத்திய சிறப்பு புலனாய்வு (சிபிஐ) விசாரணைதான் வெளிகொணரும்; அதனால்தான் எதிர்கட்சிகள் சிபிஐ விசாரணை கோருகின்றன.

இதை பேச இன்று சட்டசபையில் அனுமதிக்காததில்இருந்தே தெரிகிறது எங்கிருந்தோ வந்த மிரட்டலால்தான் இந்த மரணம் நிகழ்ந்தது என்பது தெளிவாக தெரிகிறது. இதை சட்டமன்றத்தில் விவாதிக்க பயப்படுவதேன்?

சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மிகுந்த அர்த்தமுள்ளது; இதில் அரசியல் துளியும் கிடையாது! காவல்துறையை ஜனநாயகப் படுத்த வேண்டியது காலத்தின் கட்டயம்; இல்லையேல் நேர்மையான அரசு அதிகாரிகள் தமிழகத்தில் குறிப்பாக காவல்துறையில் இல்லாமல் போய்விடும்! 

ஆம், ஒன்று செத்துவிடுவார்கள்; அல்லது வெளியேறி விடுவார்கள்; இதைத்தான் இந்த அரசில் நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்! நேற்று முத்துகுமாரசாமி; இன்று விஷ்ணுப்பிரியா; நாளை..?!

இன்று 21.9.15  PTTV நேர்பட பேசுக்கு!

-----\\\\\

 "ஜாதிவெறி, மதவெறி, அதிகாரவெறி, ஆணவவெறி"யே காரணம்..!

இன்று 21.9.15 புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இரவு 8 மணி முதல் 10.30 மணி வரை நடந்த 'மக்கள் மேடை, நேர்படபேசு' ஆகிய இரு நிகழ்ச்சிகளிலும் இரண்டரை மணிநேரம் விவாதம்...

டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மரணம் குறித்தே இருந்தது; இந்த இரண்டிலும் பேஸ்ப்புக், வாட்ஸ்அப் மூலம் நான் என் கருத்தையும் பதிவு செய்திருந்தேன். அது பதிவேற்றம் ஓரிரு வார்த்தைகள் கூட செய்யப்படவில்லை என்பது ஒருபக்கம் இருக்கட்டும். அதை நான் எனது வலைதளத்தில் போட்டு உள்ளேன்!

இந்த இரண்டு நிகழ்ச்சியிலும் என்னை போன்று ஓய்வு காவல் அதிகாரி சித்தண்ணன் என்பவர் இரண்டரை மணி நேரம் பார்த்தும், பேசியும் கொண்டிருந்தார். இவரை போன்று கருணாநிதி என்பவரும் வருவார். இவர்கள் இருவரும் நெம்பர் ஒன் 'ஜால்ரா' போலும். இவர்கள் தலைமீதுதான் இன்னும் காவல்துறை ஓடுகிறது போலும். அரசாங்கத்தின் ஊதுகுழல்.

இவர்களின் பணிவான கவனத்திற்கு... மேற்கு வங்கத்தில் காவல்துறைக்கு (பிகாரிலும்) சங்கம் இருக்கிறதே, அங்கு கட்டுப்பாட்டு வங்கக்கடலில் மிதந்துக் கொண்டு இருக்கிறதா? சங்கம் இருந்திருந்தால் நிச்சயம் விஷ்ணுப்பிரியா இறந்திருக்கவே மாட்டார். அவருக்கு ஒரு 'வடிகால்' கிடைத்திருக்கும். அதை ராஜேஸ்வரி டிஎஸ்பி குமுறலில் காணமுடியும்.

காவல்துறையில் புரையோடி கிடக்கும், "ஜாதிவெறி, மதவெறி, அதிகாரவெறி, ஆணவவெறி" என சமுதாயத்தில் நிலவும் அத்தனை வெறிகளை ஓய்வு ஐஜி திலகவதி மிக கவனமாக, கவலையுடன் பகிர்ந்தது தான் காலத்தின் உரைக்கல். இதை அரசு கண்டு கொள்ள தவறினால், தமிழகத்தின் ஒட்டுமொத்த நேர்மையான, திறமையான அதிகாரிகள் மட்டுமல்ல அனைவரின் வாழ்க்கையும் கேள்வி குறியாகி விடும்.

இந்த இரு நிகழ்ச்சியிலும் வந்தவர்களில், டிஎஸ்பி விஷ்ணுப்பிரியாவின் மரணத்தை நியாயப் படுத்திய இருவரை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது! 
ஒருவர் தணியரசு எம்எல்ஏ...

இவர் சொல்கிறார், "கோடிக்கணக்கானவர்களைக் கொன்ற இட்லர் தற்கொலை செய்து கொண்டார்" (நெறிஆளர் சரியாக தலையிட்டார்) அடுத்து சித்தண்ணன்... இவர் கூறினார், "சிபிசிஐடி, சிபிஐ....ன்னு போய் ஒபாமா கிட்டத்தான் கடைசியாக போகனும்" என்று சீறினார் பாரு... அடேயப்பா..! இப்படிப்பட்டவர்களின் தமிழகம் எப்படி இருக்குமோ? என்று எண்ணிப்பார்த்தால்...

'இடதுசாரி, ஜனநாயக, மதச்சார்பற்ற, ஆதிக்க ஜாதிவெறியை எதிர்க்கிற உள்ளிட்டு சமத்துவம் பேணுகிற சக்திகளுக்கு இன்னும் கூடுதல் "பொறுப்பை"  அதன் தோள்கள் மீது சுமத்தி உள்ளது என்றே தோன்றுகிறது.

----\\\\

"பிடிடிவி அடிமையோ நீ"

நிர்வாக மேலாளர் அவர்கள்,
புதிய தலைமுறை தொலைக்காட்சி, சென்னை.

அன்புடையீர், வணக்கம் .

தங்கள் தொலைக்காட்சி  ஆரம்பம் முதல் பார்த்து, ரசித்துவருபவர்களில் நானும் ஒருவன்.

குறிப்பாக புதுப்புது அர்த்தங்கள், நேர்படபேசு, மக்கள் மேடை நிகழ்ச்சிகளில் லைய்து விடுபவன்; இதனாலேயே அந்த நேரங்களில் வரும் தொலைகாட்சி விவாதல்களைக்கூட 'மிஸ்' பண்ணியவன்.

எனக்கு என் நண்பர், தோழர்கள் வட்டாரத்தில் "பிடிடிவி அடிமையோ நீ" என்ற பேரும் உண்டு.

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் தங்களது தொலைக்காட்சி ஒரு மைல்கல். அதற்காக ஓரிரு குறை இல்லாமலில்லை.


அந்த ஒரிரு குறைகளில் இன்று (21.9.15) எனக்கு மிகுந்த மன வருத்தத்தைத் தந்துவிட்டது. ஆம், மக்கள் மேடை, நேர்படபேசு நிகழ்ச்சிகளுக்கு வழக்கம் போல் என் கருத்தை அனுப்பி இருந்தேன்.

ஏறக்குறைய இரண்டிலும் ஒரே தலைப்புதான். இதொரு வரலாற்று சிறப்பு நிகழ்ச்சி; அதில் என் பதிவின் ஓரிரு வார்த்தைகளோ, வரிகளோ பதிவேற்றம் செய்யப்படாமல் போனது பெருத்த வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் தந்துவிட்டது.

நன்றி.                                                                                                                     -தாரைப்பிதா...

----\\\\

"வெட்டி திங்கிற வெறியில்" மனுஷ்புத்திரன்.!

இன்று 22.9.15 PTTV புதுப்புது அர்த்தம் நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கே.கனகராஜ், திமுக மனுஷ்புத்திரன் இவர்களுடன் நெறியாளர் ஜென்ராம்..

திமுக, அதிமுக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே... அல்லது இன்னொரு வார்த்தைகளில் சொன்னால், எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்றால், திமுக கொள்ளி நல்ல கொள்ளி என்கிறார் போலும்!

திமுக விமர்சனம் செய்தால், "வெட்டி திங்கிற வெறியில்" மனுஷ்புத்திரன் மட்டுமல்ல திமுக பேச்சாளர்கள் எல்லோருமே டிவியில் பொங்கி பிரவாகம் எடுக்கிறார்கள். அப்படித்தான் இன்றும் நடந்தது!

அதாவது அதிமுக கொள்ளி வேலி வேளாண் விஷக்கொள்ளியாம்; அதன் நெருப்பும், புகையும் ஆளை கொன்றுவிடுமாம்! திமுக சந்தன இல்லை இல்லை செம்மரக் கொள்ளியாம்; அதன் நெருப்பும், புகையும் மணக்குமாம்! 

அய்யா மனுஷ்களே... இன்றுமாதிரி கரட்டியாக கத்தினாலும், பிகாரில் எம்எல்ஏ சீட் கேட்டு ஒருவர், அவரது கட்சி தலைவர் முன் தரையில் விழுந்து புரண்டு புரண்டு அழுத்தாலும் தமிழக மக்கள் இனிமேல் திமுகவை நம்ப போவதில்லை; அது போலத்தான் அதிமுகவையும்! 

இனி தமிழகம் இடதுசாரி மற்றும் மக்கள்நல கூட்டியக்கம் பக்கம்தான்!

நெறியாளர் பாவம் மனுஷ்சை கடைசி வரை கட்டுப்படுத்தவே முடியவில்லை! தோழர் கே.கனகராஜ் எழுப்பிய நெத்தியடி கேள்விகளுக்கு எதற்குமே பதில்லை; கரடியாக முடியை விரித்துப்போட்டு ஒரே "கத்தல்மயத்"தில் குதித்துவிட்டது திமுகவின் புதிய உடன்பிறப்பு மனுஷ்!

----\\\\

திமுக ஜனநாயகத்தை விரும்பும் கட்சியா?

எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகனும்! அதாவது சமீப காலங்களில், குறிப்பாக 'மக்கள் நலக்கூட்டியம' உருவாகி, தவழ ஆரம்பித்ததில் இருந்து, தொலைக்காட்சி விவாதங்களின் வரும் உடன்பிறப்புகள் "ஓவராக" சீன் காட்டுகிறார்கள்? இடதுசாரிகளை சீன்டுகிறார்களே! ஏன்?

இடதுசாரிகள் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கு வரமுடியாது என்று முடிவுக்கு வந்து விட்டார்களோ?

ஒவ்வொரு டிவி யிலும் விவாதத்தை 'வெறி' யேற்றி 'வீண்' ணாக்குவது என்று முடிவெடுத்தான் செயல்படுகிறார்களோ? 

இனி மேல் இதர கட்சிகள் பாதுகாப்பு 'கவசம்' அணிந்துதான் செல்ல வேண்டுமோ? திமுகவை எதுவுமே  'சொல்லவே' கூடாதென குதியோ குதின்னு குதிக்கிறார்கள்!

திமுக ஜனநாயகத்தை விரும்பும் கட்சியா? ஜனநாயகயகத்தை விரும்பாதக் கட்சியா?

----\\\\

ஆதீனம்: ஆன்மீக வாதியா? அரசியல் வாதியா?

இன்று 20.9.15 இரவு PTTV அக்னிபரிட்சை நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம் என அறியப்பட்ட அதிமுக ஆதீனம், நெறியாளர் சண்முகசுந்தம்..!

தமிழில் இருந்து ஆரம்பித்தார்... தமிழ் வேறு ஆண்டவன் வேறு அல்லவாம்; இரண்டும் ஒன்றாம்!  புரட்சி தலைவி அம்மா என்பது பெண்மணி என்பதாலாம்! 

2016 இல் மீண்டும் அம்மாதான் முதல்வராம்! 

இலங்கை தமிழர் பிரச்சனையை பாஜக அரசு மெல்ல தீர்த்துவிடுமாம்! 

ஆன்மீக வாதியா? அரசியல் வாதியா? என்றால், ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லையாம்! 

திமுகவா?அதிமுகவா? எது பிடிக்கும் என்றால் எல்லாமே பிடிக்கும்மாம்! ஆனால் 1990 ஆம் முதல் 25 ஆண்டுகளாகவே அம்மா பக்தராம்! 

"காமடி பீஸ் தோற்றுவிடும்!" 

ஆனால் ஆன்மீகத்தை அரசியலில் கலப்பதென்பது ஆண்டவன் கட்டளை என கூறி ஆர்எஸ்எஸ் இந்துத்துவா க்கு அருமையாக அச்சாரம் போட்டார் கூச்சம் நாச்சமின்றி! 

நெறியாளரும், ' ஆதீனம் அதிமுக உறுப்பினர்தான்' என்பதை நன்றாக மடக்கி நாடறிய வைத்துவிட்டார்; அவருக்கு பாராட்டு!

----\\\\

Saturday, 19 September 2015

சாத்தியமே!

சாத்தியமே! சர்வதேச விசாரனையே இலங்கை தமிழர்களுக்கு நியாயம் வழங்கும்! இலங்கை விசாரனை அது திருடர் கையில் சாவி கொடுத்த மாதிரியே! அதேசமயத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆதிக்கம் இல்லாமல் இருக்கவேண்டும். 

இன்று 16.9.15 PTTV மக்கள் மேடையில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் 
செய்யப்பட்டுள்ளது
----\\\\

சர்வதேச விசாரனையே இலங்கை தமிழர்களுக்கு நியாயம் வழங்கும்! இலங்கை விசாரனை அது திருடர் கையில் சாவி கொடுத்த மாதிரியே! அதேசமயத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆதிக்கம் இல்லாமல் இருக்கவேண்டும். 

இதற்கு இந்திய அரசு தனது அழுத்தத்தை எதார்த்தமாக தரவேண்டும்! பிள்ளையையும் கிள்ளி விடுவது தொட்டிலையும் ஆட்டிவிடுவது என்ற இரண்டை நிலையை எடுக்காமல் இருப்பதே, தமிழக தீர்மாணத்திற்கு தரும் மரியாதை ஆகும்!

இன்று 16.9.15 PTTV நேர்படபேசுக்கு

----\\\\\

நேர்மை..! திறமை..!
நேர்மையற்ற, திறமையற்ற அதிகாரிகளை இடம் மாற்றம் செய்ய அதிகாரம் படைத்த அமைச்சர்கள், பிரதமர் ஆகியோரை யார் இடமாற்றம் செய்வது? 

இவர்கள்  நேர்மையாக, திறமையாக செயல்பட்டாலே போதும், அதிகாரிகளுக்கு நேர்மையும், திறமையும் தானாக வந்துவிடும்! 

60 வருடம் வரை அரசாங்க ஊழியராக இருப்பவரை, 5 ஆண்டு ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த முதலாளித்துவ அரசியல்வாதிகள், அடுத்த 5 ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்திடும் உத்தரவாதம் இல்லாத நிலையில்... 

கிடைந்த 5 வருடத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுருட்டிவிட வேண்டும் என்று அலையும் அந்த அமைச்சர், பிரதமர் ஆகியோரின் நேர்மையற்ற, திறமையற்ற நிர்வாகமே அரசு ஊழியர்கள் பலரை நேர்மையற்றவர்களாக, திறமைற்றவர்களாக ஆக்கிவிடுகிறது! 

இவர்கள்  (அரசியல்வாதிகள்) திருந்த வேண்டும்; அல்லது மக்கள் அவர்களை திருத்த வேண்டும்; 

நேர்மையான, திறமையானவர்களை (இடதுசாரிகளை) தேர்வு செய்ய வேண்டும்! 

அதை விடுத்து தலையணையை மாற்றினால், தலைவலி விட்டுவிடும் என்பதுபோல் இருக்கிறது அதிகாரிகளை இடம் மாற்றுவதும், நீக்குவதும்! 

அதுமட்டுமல்ல, இட ஒதுக்கீட்டால் வந்தவர்கள்தான் அவ்வாறு இருக்கிறார்கள் அதை எடுத்து விடுவோம் என்பதற்கான சதியும் இதில் ஒளிந்திருக்கிறது! இதுமாதிரி பந்தாடுவதற்கு ஜனநாயகத்தில் இடமில்லை; இது ஒரு சர்வாதிகாரத்தின் வெளிப்பாடு! 

மதவாத பாஜக ஆட்சியில் இதைத்தவிர வேறெதை அதாவது சனநாயகத்தையா எதிர்பார்க்க முடியும்? 

இன்று 17.9.15 PTTV மக்கள் மேடையில் இதன் ஒருபகுதி தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

-----\\\\

திமுக, அதிமுக வுக்கு சரியான மாற்று!

திமுக கூட்டணியை என்னை தவிர வேறு யாராலும் உடைக்க முடியாது; கூடாது என்கிறார் கருணாநிதி! 

ஆம்! இன்றைக்கும் அவருக்கு இருக்கும் முதல்வர் ஆசையும், கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை என்கிற இறுமாப்பும்தான் கூட்டணி உடைப்புக்குக் காரணம்!  

அல்லது அதிமுக, திமுக இடையே இருக்கும் ரகசிய எழுதப்படாத உடன்பாடு! அதாவது தமிழக ஆட்சிக்கட்டிலில் நம் இரு கட்சிகள் (திமுக, அதிமுக) அமர வேண்டும்; மற்ற கட்சிகள் அக்கட்டிலைச் சுமக்க வேண்டும் என்பதே அது! 

மக்கள் நலக்கூட்டியக்கம் நிச்சயம் விரிவுபடும்; அதுவே எதிர்கால தமிழகத்தின் நிழற்படம்; மக்களின் நிழற்கூடம்! இதை யாராலும் தடுக்க முடியாது என்பது மட்டுமல்ல, இதுதான் திமுக, அதிமுக வுக்கு சரியான மாற்று!

இன்று 17.9.15 PTTV நேர்படபேசுவில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தற்போது

-----\\\\

திமுகவின் தந்திரமல்ல; தரித்திரமிது!

மடைமாறுமல்ல; பச்சோந்தியாக மாறும் சில மதிமுக நிர்வாகிகள் என்பதே சரி! 

அடுத்து... திமுகவின் தந்திரமல்ல; தரித்திரமிது! பல்லைக்குத்தி ரத்தம் குடிக்கும் சதி! 

உண்மையிலேயே திமுக தந்திரம் என்றால், அது உடைக்க வேண்டியது அதிமுகவைதான்! அதற்கு யோக்கியதை இல்லை! 

மதிமுக அப்படியே திமுகவில் கரைந்தாலும் திமுக பாடு இந்த தேர்தலில்... "டன்டனக்கா... டன்டனக்காத்தான்!"

இன்று 18.9.15 PTTV மக்கள் மேடைக்கு!

----\\\\\


அரசாங்க பணிதான்! மதவாதிகளின் பணியல்ல! 

இறைச்சிக்குத் தடைவிதிக்க மறுத்துவிட்ட உயர்நீதிமன்ற உத்திரவு சரியானது! வரவேற்கத்தக்கது! 

நீதிமன்றத்தின் மாண்பு இன்னும் சாகவில்லை என்பதே இத்தீர்ப்பு! 

இன்று இறைச்சியைத் தொடர்ந்து, இறைவனுக்கு இசையமைத்த விவகாரம் வந்துவிட்டது! 

மதவாதிகள் மக்களை மதம் சார்ந்த சிக்கலில் சிக்கவைப்பதே அவர்களின் தலையாயப்பணியாக கொண்டுள்ளார்கள்; 

இவர்களுக்கு கார்ப்பரேட் சுரண்டல்களை பற்றி கவலையில்லை போலும்!உணவைத் தீர்மாணிப்பது அரசாங்கத்தின் பணிதான்! இது மதவாதிகளின் பணியல்ல! 

இந்த நாடு மதசார்ப்பற்ற ஜனநாயக குடியரசு; ஜீவகாருண்யம் பேசுவதற்கு மதவாத அரசல்ல! 

ஓ..! இதற்குதான் முதல் குடியரசுதின விளம்பரத்தில்  "மதசார்பற்ற, சோசலிச ஜனநாயகக் குடியரசு" என்ற வார்த்தைகள் விட்டுவிட்டதோ மோடி அரசு?!

இன்று 18.9.15 PTTV நேர்பட பேசுவில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

----\\\\

டுவிட்டர் நாயகனின் டூவீலர்..!


டுவிட்டர் நாயகனின் டூவீலர் வழங்கல்! 

ராமர்ஜென்ம பூமியில் இன்னும் சைக்கிள் ரிக் ஷா ஓட்டும் தரித்திர ராமர்கள்! காங்கிரஸ் மீது மட்டும் பழிப்போட்டு தப்பிக்க முடியாது டுவிட்டர் நாயகரே! 

உங்க கட்சியும்தான் உபி ஐ ஆண்டது!

-----\\\\

Tuesday, 15 September 2015

நேர்மை..! நெகிழ்வு...!

இன்று 14.9.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் ஐஏஎஸ் ஓய்வு பாலச்சந்திரன், கண்ணதாசன் திமுக இவர்களுடன் நெறியாளர் ஜென்ராம்..!

'நேர்மை' பற்றிய விவாதம்...


இதிலே 2 தகவல் நெகிழ வைத்தது...
திரு பாலசந்திரன் தந்த தகவல்...

மறைந்த ஜோதிபாசு மனைவியார் புடவை துவைத்து உலர வைத்தபோது, அதன் நீர் கீழே சொட்டி பாதிப்பை ஏற்படுத்தியதாக ஒரு வழக்கு... அதற்கு ஜோதிபாசு சொன்னாராம், "அது நீ சம்மந்தப்பட்டது; நீயே பார்த்துக்கொள்" வழக்கு நடந்த 3 ஆண்டுகளில் ஜோதிபாசு முதல்வராம்! (இதோடு இவர் கூடுதலாக சொன்னது பொதுவுடமை இயக்கம் மே.வங்கத்தில் தலைமையில் நேர்மை குறையவில்லை; கீழேதான்; அதுதான் அங்கு ஏற்பட்ட நிகழ்வு!)

அடுத்து தியாகி வ உ சி க்கு உதவிய மாடசாமி.. அவர் பிரிட்டீஷ் அரசின் 'தேசவிரோத' வழக்கில், வெளிநாடு அனுப்பப்பட்டதும், 'நமது' இந்தியாவில் 'பிச்சைக்காரன்' வேடத்தில் வந்து மகனை பார்த்து சென்றுவிட்டதும்...நினைக்கவே எவ்வளவு பெருமையாக இருக்கிறது? 

இன்றைய நமது நாடு எங்கே இருக்கிறது? எதை சொல்லுவது  வருங்கால சந்ததிகளுக்கு? ஒரு சகாயம் போதுமா? ஆம்! 40-50% ஐஏஎஸ் அதிகாரி இன்றைய நிலையில்  உறுதியாக நேர்மையாக இருப்பார்கள் என்கிறார் பாலசந்திரன் அவர்கள்... நிஜமாகவா? 

ஆனால் அரசியல்வாதிகள்..? ஒரு மாடசாமி, ஒரு ஜோதிபாசு தாவது இருப்பார்களா? (என்னையும் சேர்த்தேதான்!) இருக்கிறோமா?

நெஞ்சை தொட்ட, சுட்ட விவாதம்..! ஏற்படுத்திய ஜென்ராம்க்கு நன்றி

----\\\\\

ஆனால் மனித எலும்பு வருதே!

மண்ணைத் தோண்டினால் கல்லுவரும்; கனிமம் வரும்! ஆனால் மனித எலும்பு வருதே! 

நடு நிசியிலும் சத்தியாகிரகம் செய்து நரபழியை நாடறிய வைத்த நாயகனே! சகாயமே நீ ஒரு சரித்திரம்! 

பெரியார் மண்ணில், பெரியாரின் வாரிசுகள் ஆட்சியில் தான் நர பழி நடந்து இருக்கிறதென்றால், 

பெரியாரின் வாரிசுகளே பெரியாரின் கொள்கைகளை 'நரப்பழி'க் கொடுத்துவிட்டார்கள் என்று புரிந்துக் கொண்டால் தவறில்லை; அல்லவா?

இன்று 14.9.15 PTTV நேர்படபேசுவில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

------\\\\\\\


மடிகணனி (லேப்டாப்) அன்பளிப்பு!

சேலம் மாவட்டம் தபால் தந்தி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றார் தோழர் டீ.நாகராஜன். இவர் தேசிய தபால் ஊழியர் சம்மேளணம் சேலம் மாவட்ட தலைவராகவும் செயலாற்றி வந்தார். 37 ஆண்டுகள் கட்சியிலும், சங்கத்திலும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர் பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து கட்சியின் சேலம் மாவட்டக்குழுவுக்கு ரூ22,000 விலையில் மடிக்கணனி (லேப்டாப்) அன்பளிப்பாக வழங்கி உள்ளார். அதோடு தீக்கதிர் வளர்ச்சி நிதியாக ரூ2,000 வழங்கி உள்ளார். இவருக்கு சிபிஐஎம் சேலம் மாவட்டக்குழு பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

சேலம் மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு விடம் லேப்டாப் வழங்குகிறார். அருகில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.சேதுமாதவன், சேலம் மாநகர வடக்கு செயலாளரும், மாவட்டக்குழு உறுப்பினருமான எம்.முருகேசன், அலுவலக செயலாளர் வி.சம்பத் உள்ளிட்டோர் உள்ளனர்.

-----\\\\

"மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம்"தான்!

வார்டு வார்டாக மட்டுமல்ல, தெருத்தெருவாக "அலைய" வேண்டும் எவ்வளவு பெரிய மகாராணியாக, மகாராஜாவாக இருந்தாலும்; அதுதான் இந்திய ஜனநாயகத்தின் அசைக்க முடியாத வேர்! 

இந்த வேரில்தான் வென்னீர் ஊற்றிடத்தான் அவ்வப்போது முயற்சி நடக்கிறது; இருந்தாலும் இன்றுவரை சிலபல குறைகள் இருந்தாலும் இந்திய ஜனநாயகம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது!

அதிமுக ஐசியூ வில் இருப்பது உண்மைதான்; உலக முதலாளிகளையே திரட்டி வந்து "முதல்" உதவி செய்துள்ளார் மோடி! 

திமுகவும் திண்டாட்டத்தில் தானிருக்கிறது! 

பாமக கூட்டணி ஒபாமா கட்சி இசைவு தெரிவித்து விட்டதாக நம்ப தகுந்த வட்டாரத் தகவல்; ஆகவே இந்த முறை முதல் நாள் முதல் கையெழுத்து அமெரிக்காவில் மதுவிலக்கு அமலாவது உறுதி! 

வரும் தேர்தலில் சரியான பொருத்தமான மாற்று இடதுசாரிகள் உள்ளிட்டு மதசார்பற்ற ஜனநாயக சக்தியான "மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம்"தான்!

இன்று 12.9.15 PTTV நேர்படபேசுக்கு..!

-----\\\\\

இன்று... இறச்சி...!

இன்று... இறச்சி; 

நேற்று... இந்துக்கள் 5 பிள்ளைகள் பெற்று 2 பிள்ளைகளை ஆர்எஸ்எஸ் (நாட்டுக்கு) தந்திடுவது; முஸ்லீம் மக்கள் தொகை அதிகம் என பட்டியல் நீளுகிறது; 

நாளை..?! 

இப்படி சிறுபான்மை மக்களுக்கு எதிராக பெரும்பான்மை மக்களை உசுப்பி விடுவது; அதேசமயத்தில் காஷ்மீரில் கூட்டணி அரசில் பங்கேற்பது..! 

ஆட்சி அதிகாரத்தைச் சுவைப்பதே பாஜக ஆர்எஸ்எஸ் ன் சந்தர்ப்பவாத நிலை! 

மக்களை திசைத்திருப்பி தமது இந்துத்வா அஜண்டாவையும், கார்ப்ரேட் நிறுவனங்களின் நலனையும் பேணுவதே மோடியார் அரசின் பிறவிபயன்!

இன்று 14.9.15 PTTV மக்கள்மேடைக்கு!

----\\\\

நல்லுறவு வளர்க்கப்படுவது நன்றே!

நெருங்கி வரும் இந்தியா-இலங்கை உறவால் இரு நாடுகளின் பெரும் பெரும் முதலாளிகளுக்கும், பெரும் பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கும், கார்ப்பரேட் சுரண்டல் நிறுவனங்களுக்கும் லாபம்! 

இரு நாட்டு உழைப்பாளிகளுக்கு குறிப்பாக இலங்கை தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் பட்டை நாமம்! 

எது எப்படியோ அண்டை நாடுகளுடன் நல்லுறவு வளர்க்கப்படுவது நன்றே!

இன்று 15.9.15 PTTV நேர்பட பேசுக்கு!

-----\\\\

அண்ணாவின் கொள்கையை கடைப்பிடிக்கவில்லை!

அண்ணாவின் கொள்கைகளையும் சரி, பெரியாரின் கொள்கைகளையும் சரி ஆட்சியில் இருந்த திமுக அஇஅதிமுக (கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்) கடைப்பிடிக்கவில்லை!

அப்படி கடைப்பிடித்திருந்தால் நரபழி நடந்தேறியிருக்குமா? 

ஜெயலலிதாவிற்காக தமிழகமே மொட்டை போட்டிருக்குமா? அல்லது இவர்கள் அரசியலாக காங்கிரஸ், பாஜக வுடன் சேர்ந்து ஆட்சியை மத்தியில் பகிர்ந்திருப்பார்களா? 

அதற்குகூட இவர்கள் அண்ணாவை அழைக்கக்கூடும்..."மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுய ஆட்சி" என்று! ஆனால் யாருடன் கூட்டாட்சி? காங்கிரஸ் சோசலிசம் இனிக்காது என்றாரே... அந்த காங்கிரஸ் உடனா? 

மதவெறியை விசிறிவிட்டு, சிறுபான்மை மக்களை கொன்று குவிக்கும் ஆர்எஸ்எஸ் கூடாரத்தின் அரசியல் பிரிவான பாஜகவுடனா? 

பெரியாரை செருப்பால் அடிக்க வேண்டுமென்ற பாஜகவுடனா?

இன்று 15.9.15 இதன் ஒருபகுதி PTTV மக்கள்மேடை யில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது..!

Friday, 11 September 2015

கெட்டிக்காரியின் புளுகு ரெண்டு நாளைக்குத்தானோ?

உலக முதலீட்டாளர் (முதலாளி)கள் தமிழக மாநாட்டின் நாடகம் அம்பலம் ஆரம்பம்; தேர்தலுக்கான அதிமுகவின் 'அவசர அவசர'மான "உப்புமா!" என்பதற்கான ஆதாரம் இதோ..! 

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள்; கெட்டிக்காரியின் புளுகு ரெண்டு நாளைக்குத்தானோ?

98 நிறுவனங்கள் தொழில் துவங்க வேண்டுமானால், அவர்களுக்கு 3000 மெகாவாட் மின்சாரம் வேண்டுமாம்!

ஓரளவு வெளிச்சத்தில் இருக்கும் தமிழகம் மீண்டும் இருண்ட தமிழகமாகி விடுமோ? (நான் ஓரளவு என்பது வீட்டு உபயோகம்; விவசாயத்தையோ, சிறுத்தொழிகளையோ அல்ல! 


அவைகள் இன்னும், "ஒருநாள் வருவார்; ஒருநாள் போவார்; ஒவ்வொரு நாளும் துயரம்தான்!")

-----\\\\

தண்ணீர் மீது எழுதியமாதிரியே!

நத்தம் விஸ்வநான் கருத்து தண்ணீர் மீது எழுதியமாதிரியே! 
ஒரு புரட்சியும் நடக்கப்போறதில்லை! 

இந்த புரட்டல்காரர்களின் நாடகம் வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் நாறிட போவது உறுதி! 

மக்கள் சரியான பாடம் கற்ப்பிப்பார்கள்! வேடதாரிகளின் முகத்திரை கிழிப்பார்கள்! 

முதலில் மின்கட்டணத்தை இவரது ஆட்சியில் ஏற்றியதை இறக்கட்டும்! 
அப்புறம் தொழில் புரட்சி செய்யட்டும்!

இன்று  10.9.15 PTTV மக்கள் மேடைக்கு!

----\\\\

அதிமுகவின் தேர்தல் பிரச்சார மாநாடே!

சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இந்த உலக முதலீட்டாளர் மாநாடு அதிமுகவின் தேர்தல் பிரச்சார மாநாடே! 

இதில் ஊடகங்களுக்கு வேண்டுமானால் முதலீட்டாளர்கள் மாநாடுபோல் தோன்றும்! 

இது அதிமுக தேர்தல் மாநாடு என்பதற்கு, "2017இல் மீண்டும் நடக்கும் என்றும், 2 ஆண்டுக்கு ஒருமுறை இந்த மாநாடு நடக்கும் என்றும்" ஜெயலலிதா பேச்சே சாட்சி! 

அதுமட்டுமல்ல, ஜனநாயகத்தின் மீது எள்ளளவும் நம்பிக்கை இல்லாத சர்வாதிகாரப் பேச்சும்கூட! என்ன இறுமாப்பு பேச்சு இது! 

2016 தேர்தலில் அதிமுக தோற்றுப்போனாலும், இவர் இந்த மாநாட்டைக் கூட்டுவாரா? அல்லது எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் 2 வருடம் வந்துவிடுமோ?

இன்று 10.9.15 PTTV நேர்படபேசு க்கு!

----\\\\

உலக முதலாளிகள் என்று சொல்லலாமா?

உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்றால் அதற்கு இன்னொரு அர்த்தம் என்ன?
உலக முதலாளிகள் என்று சொல்லலாமா? 

சொல்லாம்!?

அப்படி என்றால் உள்ளூர் முதலாளிகள் தமிழக மக்களை தமிழக செல்வங்களை சுரண்டியது, கொள்ளையடித்து போதாது என்று உலக முதலாளிகளை விட்டு மொட்டை அடிக்கப் போகிறார்கள் என்று அர்த்தம் கொள்ளலாமா? 

கொள்ளலாம்!? 

இதுக்கு பெயர் தான் தொழில் புரட்சியா? 

ஆம்! இதுகூட தெரியலையா? மக்குகூ மக்கு..!

2லட்சத்து 42 ஆயிரம் கோடி வந்து குவியதாமே..! 

ஓ... அப்படியா?! 

இனிமே தமிழ்நாட்டில் எல்லாரும் கொடநாடு தோட்டம் மாதிரி கெடைக்க போவுது!

இம்ம்ம்....!? 

எத்தனைக்காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..! சொந்த நாட்டிலே..!

-----\\\\

400 பேர் விற்பார்கள்; அதை 40 பேர் பார்ப்பார்களா?

நாட்டின் செல்வாதாரங்களை 400 எம்பிகள் விற்பார்கள்; அதை 40 எம்பிகள் கைக்கட்டி, வாய்பொத்தி வேடிக்கைப் பார்க்க வேண்டும்; அல்லது 80 கைகளையும் உயர்த்தி ஆதரிக்க வேண்டும்! 

என்ன குணம் அய்யா இது? இதற்கு பெயர் தான் சர்வாதிகார அல்லது பாசிச குணம் என்பது! (அதாவது தான் நினைப்பதை செய்து முடிக்க வேண்டும் என்னவிலை கொடுத்தாவது) 


அதேசமயத்தில் காங்கிரஸ் ஒன்றும் ஜனநாயக சிற்பி அல்ல; இந்தியாவை ஏலம் கூறி விற்பதில்; நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காலில் போட்டு மிதிப்பதில், பாஜகவுக்கு ஒன்றும் சளைத்ததல்ல காங்கிரஸ்! இரண்டுமே இந்நாட்டு பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவைகளே! 

இன்றைய தேவை தேசபக்திமிக்க இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளே! 

இன்று 11.9.15 PTTV மக்கள்மேடையில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

----\\\\

இது கார்ப்ரேட் (ஆதரவு) வாதம்!

இந்தி மொழி மாநாட்டில் "பிரதமர்" மோடி பேசியதுதான் பிரச்சனை! "பிரதர்" மோடி பேசியிருந்தால் யாரும் கண்டு கொள்ள போவதில்லை! 

பாஜக ஆட்சிக்கு வரக்கூடாதென்று கம்யூனிஸ்ட்கள் கரடியாக கத்தினார்கள்! யார் கேட்டார்கள்? 

மதவெறி-இனவெறி-மொழிவெறி-பிரதேசவெறி ஆகியவற்றின் மறுஉருவமே பாஜக!தமிழை நீச மொழி என்றவர்கள்தான் மோடியின் மூலவர்களாம் ஆர்எஸ்எஸ்! 

இனி இவர்கள் கையில் இந்தி, சமஸ்கிதம் தவிர மற்ற மொழிகளின் எதிர்காலம் பிரதமர் வகையறாக்கள் கையில் பாதுகாப்பற்ற நிலையில்தான் இருக்கும்! 

ஆகவே பாஜக ஆட்சிக்கு முடிவு வந்தாலே ஒழிய, இந்த மாதிரியான ஆபத்துகளும், அச்சுறுத்தல்களும் அனுதினமும் இருந்துக் கொண்டுதான் இருக்கும்! 

கார்ப்பரேட் சுரண்டல்களை மறைக்க இப்படிப்பட்ட பிரச்சனைகளை அவ்வப்போது கிளப்பிவிட்டு, திசைத்திருப்பிக் கொண்டே இருப்பார்கள்! 

பாஜக இரு முனை கொண்ட ஆயுதம்; ஒருமுனை மதவாதம்; இன்னொரு முனை கார்ப்ரேட் (ஆதரவு) வாதம்!

இன்று 11.9.15 PTTV நேர்பட பேசுவில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

Wednesday, 9 September 2015

பாஜக அதிமுக தேர்தல் கூத்து ஆரம்பம்..!

இன்று 10.9.15 PTTV  புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் ஞானி, தொழில் முனைவர் (பெயர் மறந்துவிட்டேன் மன்னிக்க) நெறியாளர் ஜென்ராம்..!

உலக முதலீட்டாளர் மாநாடு எப்படிப்பட்ட வாணவேடிக்கை நிறைந்த இந்த ஆண்டின் அதிமுக கொண்டாடிய "தீபாவளி!" என்பதை மிக அருமையாக அம்பலப்படுத்தினர் மூவரும் சேர்ந்து அவரவர் கோணத்தில்! அந்த 'மூன்று' பேருக்கும் நன்றி!

பாஜக அதிமுக தேர்தல் கூட்டணியின் கூத்து ஆரம்பம் என்று சொல்லாமல் சொன்னார்கள் மூவரும்!

குஜராத்தில் 25 லட்சம் கோடி வந்துவிட்டதென (இங்கு நேற்று 1 லட்சம் கோடி வந்துவிட்டது என்றார்களே அதுபோல்) சொல்லி, ஆண்டுகள் பல கடந்தப்பின் "வெறும் 21 ஆயிரம் (ஒரு வருட நம்மூர் டாஸ்மாக் வருமானம்) வந்ததாம்! 

மோடி குஜராத்திலேயே இந்த நிலைமையென்றால், இந்த லேடி தமிழ்நாட்டில்... 1 ஆயிரம் கோடி பல ஆண்டுகள் கழித்து உறுதி!

டாஸ்மாக் வாடிக்கையாளர்களே தயதுசெய்து காரித்துப்பாதீர்கள்! நீங்கள் 'சாக்கனாங்கடையில்' வாங்கி நக்கும் ஊறுகாய் முதலீட்டை தமிழகத்திற்கு நம்ம லேடியும், அந்த மோடியும் கொண்டு வந்திருக்காங்க..!

அதனால.. சகலபகுதி வாக்களர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் இந்த மாநாட்டால் அனைவருக்கும் டாஸ்மாக் வாடிக்கையார்கள் உள்ளிட்டு ஊறுகாய் இலவசமாக அனைவர் வீட்டுக்கும் அனுப்பி வைக்கப்படும்! 

அதை அனைவரும் நக்கிக்கொண்டு மீண்டும் அதிமுகவுக்கும், அதன் அடிமைகளுக்கும் வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கனும்கோ....! 

டும்...டும்...டும்..!

இப்படிக்கு, 
உலக முதலீட்டாளர்கள் புரட்சி தலைவி அம்மா அகில உலக பேரவை, போயஸ் தோட்டம் அல்லது ஹதராபாத் திரட்சை தோட்டம் அல்லது கொடைநாடு கொள்ளைத்தோட்டம், தமிழ்நாடு.


குறிப்பு: 
நாங்கள சுற்றி சுற்றி ஆய்வு செய்ததில், நாங்கள் கொள்ளை அடிப்பதற்கு எதையும் அதிமுக அம்மா பேரவை விட்டுவைக்காதால், "வந்த மச்சான்கள் எல்லாம் திரும்பி போகிறோம் ஊழல் மனத்தோடு!" வாழ்க அகில உலக புரட்சி தலைவி அம்மா முதலீட்டாளர்கள் பேரவை..!

----\\\\

"சந்தோசம்!"

ஒரு லட்சம் கோடி மேல் முதலீடு வந்துள்ளது என முதல்வர் கூறியிருப்பது "சந்தோசம்!" 

இனி வேலையில்லாத திண்டாட்டம் தமிழகத்தை விட்டு ஆந்திராவிற்கு " கொள்ளையர்கள்"  எல்லாம் ஓடினமாதிரி "ஓடிவிடும்!" என்று நம்புவோமாக..!

இன்று 9.9.15 PTTV மக்கள் மேடையில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

----\\\\

சுரண்டலுக்கு பச்சைக்கொடி..!

ரூ1 லட்சம் கோடிக்கு மேல் தமிழகத்தில் உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளின் பணம் வந்து குவிந்திருப்பது... மறைமுகமாக உழைப்பு சுரண்டலுக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுவிட்டது என்று அர்த்தம்! 

மத்திய அரசு மட்டுமல்ல, புதிய பொருளாதார கொள்கையை ஆதரிக்கிற, குறிப்பாக  பன்னாட்டு முதலாளிகளின் சுரண்டலை ஆதரிக்கும் கட்சிகள் அனைத்தும் இதற்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

அனேகமாக தமிழக சட்டமன்ற தேர்தலுக்குள் முதலாளிகளின் முதலீடு இங்கு இறங்குதோ, இல்லையோ,  முதலாளிகள் ஆதரவு கட்சிகளுக்கு கமிஷன் வந்து இறங்கிவிடும்!

இன்று 9.9.15 PTTV நேர்பட பேசுக்கு..!

-----\\\\\

தமிழகத்திற்குத்தானே பெருமை!

மதுவிலக்கு  வேண்டி மகளிர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் வரவேற்க வேண்டிய ஒன்றே! 

அதிமுக மகளிர் அணி அல்லது இளம் பெண்கள் பாசறை போராடினால்கூட வரவேற்கலாம்! 

யார் போராடுகிறார்கள் என்பதல்ல முக்கியம்; கோரிக்கைதான் முக்கியம்! 

மதுவிலக்கு அமலானால் அனைவருக்கும் தமிழகத்திற்குத்தானே பெருமை!

இன்று 8.9.15 PTTV மக்கள் மேடையில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தற்போது!

-----\\\\

திமுக அதிமுக இருக்கும் வரை சிக்கல் தீராது!

உலகத்தில் வேறெங்காவது இருக்கிறதா இதுபோன்று நடிகர் சங்கத்தில் "கச்சைக்கட்டி"க் கொண்டு ஆடுவது? தெரியவில்லை!  

திமுக அதிமுக என்ற கட்சிகள் இருக்கும் வரை இந்த நடிகர் சங்க சிக்கல், கோஷ்டி ஓயப்போவதில்லை!

இன்று 8.9.15 PTTV நேர்பட பேசுவில் தற்போது இதன் ஒரு பகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

------\\\\\