Thursday, 3 September 2015

வாழ்வா? வீழ்வா? 

திமுகவுக்கு இத்தேர்தல் வாழ்வா? வீழ்வா? என்கிற தேர்தல்! ஆகவே எந்த எல்லைக்கும் அது போகும்! 

இந்த முறை அது ஆட்சியை பிடிக்க முடியாமல் 'கோட்டை' விட்டுவிட்டால், திமுக இறுப்பே கேள்விக்குறி ஆகிவிடும்!

ஆதலால் அது கூட்டணி ஆட்சிக்கு ஒத்துப்போகாவிட்டால், அது ஆட்சி பிடிக்கும் கனவு கலைந்துபோய்விடும்! 

காரணம் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டு 5 கட்சிகளின், 'மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம்' மேலும் கூடுதலான கூட்டாளிகளும் திமுக அதிமுக க்கு மாற்றாக வரும் தேர்தலில் வலுவாக கால் ஊன்றி விடும்! 

இது அதிமுக வை விட திமுகவிற்குத்தான் எதிர்காலத்தில் பாதிப்பைத் தரும்! 

ஆகவே ஒரு கல்லில் இரு மாங்கனி அடிக்கவே கலைஞர் 'கணக்கு' போடுவார்! 

கணக்குப் போடுவதில் அவர் ஒன்றும் 'குமாரசாமி' அல்லர்!

இன்று 3.9.15 PTTV நேர்பட பேசு வில் இதன் ஒருபகுதி தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

-----\\\\\

விஜய்காந்த் சொல்லுவது தவறு! 

தமிழகம் கடந்த 4 ஆண்டுகளில் முன்னேற்றம் இருக்கிறது. 

குறிப்பாக டாஸ்மாக் குடிகாரர்கள் அதிகரித்து இருக்கிறார்கள்; லஞ்சம் ஊழலில் சிகரத்தை தொட்டிருக்கிறது; அதன்விளைவாக அரசு ஊழியர் முத்துக்குமாரசாமி ரயில் விழுந்து உயிரை மாய்த்திருக்கிறார்! 

ஜாதி வெறியர்களால் ஆணவக்கொலை; கொள்ளை, தீவைப்பு அதிகரித்திருக்கிறது; லாக்அப் மர்டர் அதிகரித்து இருக்கிறது;

எல்லாவற்றிக்கும் மேலாக பால் காவடி, புஷ்பகாவடி, பன்னீர் காவடி, மண்சோறு சாப்பிடுதல், ஏரோப்பிளான் அலகு உள்ளிட்டு நாக்கலவு, மூக்கலவு என ஆன்மீக பணிகளில் முன்னேற்றம் இருக்கிறது! 

எதிர்கட்சிகளில் இடதுசாரிகள் உள்ளிட்டு ஜனநாயக அமைப்புகள் நேற்று நடந்த ஸ்டிரைக் உள்ளிட்டு மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளுக்காக போராடி உள்ளார்கள்.

சென்ற மாதம் கூட கம்யூனிஸ்ட்கள், மதிமுக, விசிக, மமக கட்சிகளின் ஊழியர்களை முன்கைது உள்ளிட்டு, மறியலில் ஈடுப்பட்டவர்களை ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் அடைத்தது; அவர்களை பிணையில் விடுவித்தது எல்லாம் முன்னேற்றம் இல்லையா? 

விதி 110 ஐ சந்தி சிரிக்கும் அளவுக்கு பயன்படுத்தியது முன்னேற்றம் தானே! 

ஆகவே விஜய்காந்த் சொல்வதை ஏற்கமுடியாது! இப்படி "ஏராள முன்னேற்றம்" இருக்கிறது!

இன்று 3.9.15 PTTV மக்கள் மேடைக்கு..!

மதுவிலக்கு நிச்சயம் அரசியல் பிரச்சனையே! 

மதுவிலக்கு (ஒழிப்பு) போராட்டம் எப்பொழுது நின்றது? தொடர்ந்து " மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம்" மற்றும் சசிபெருமாள் குடும்பம் உள்ளிட்டு ஜனநாயக சக்திகளின் சார்பில் நடந்துக் கொண்டுதானிருக்கிறது! 

இது நிச்சயம் அரசியல் பிரச்சனையாக இருந்து வருகிறது!

ஊழல், சாதி-மதவாதம், விலைவாசி உயர்வு, தீண்டாமை கொடுமை உள்ளிட்டு இந்த அரசின் மக்கள் விரோதப் போக்குகளின்  பிரதான ஒன்றாக மாறிவிட்டது! 

அதற்கு அதிமுகவின் அணுகுமுறையும் காரணமாக அமைந்துவிட்டது என்பதும் உண்மை! 

ஆம்! மதுக்கடையை மூடச்சொன்னால், மது தொழிற்சாலைகளை மூடச் சொல்லுங்கள் என்று அதிமுகவின் ஆதரவு கைகள் நீளுவதும் அரசின் தவறான அணுகுமுறையின் ஒரு அம்சமே! 

இது ஊழலை ஒழியுங்கள் என்றால், மக்களும் லஞ்ச-ஊழலுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்; ஆகவே மக்களை ஒழியுங்கள் என்பதுபோல் இருக்கிறது அல்லவா?

இன்று31.8.15 PTTV மக்கள் மேடைக்கு!

----\\\\. 

நிச்சயம் இந்த சட்டம் மீண்டும் வன்மத்துடன் எழும்!

நிலம் (கையகப்படுத்தும்) அபகரிக்கும் சட்டம் பின்வாங்கல்... ராஜதந்திரம் அல்ல!

தற்போதைக்கு அது " ச்சீசீ" இந்த பழம் புளிக்கும் என்ற கதைதான்! சரியான சூழலுக்காக தற்போது பதுங்கி உள்ளது! அது மீண்டும் பாயும்! புலி பசித்தாலும் புல்லைத் திங்காது! 

மோடி அரசு பன்னாட்டு முதலாளிகளின் அரசு! அது இந்திய உழைப்பாளிகளின் அரசல்ல! 

3 முறை படை எடுத்த மோடி 4 முறையோ, 5 முறையோ படை எடுக்க பயப்படக்கூடியவரல்ல!  

வேறு ஏதாவது சட்டச்சிக்கல்; மக்களவையில் பெரும்பான்மை சிக்கல்; ஜனாதிபதி மீண்டும் கையெழுத்து போடுவதில் சிக்கல்; மோடியின் சொந்த மாநிலத்தில் புறப்பட்டுள்ள பட்டேல்பூதச் சிக்கல்; பீகார் தேர்தல் சிக்கல்; 8 திருத்தம் ஏற்கப்பட்டு அந்த சட்டம் நொந்து நூலாகி, பன்னாட்டு முதலாளிகளுக்கு உதவாக்கரைச் சட்டமாக மாறிவிட்டதாக ஒரு சிக்கல்; எதிர்கட்சிகளுக்கு ஆதாயம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டிய சிக்கல் என பலவிதமான சிக்கலில் அச்சட்டம் சிக்கித் தவிக்கிறது! 

நிச்சயம் இந்த சட்டம் மீண்டும் வன்மத்துடன் எழும்! 

இதுவரை விவசாயிகளுக்கு நலன் தருவதாக இருந்த சட்டம், இன்றுமுதல் விவசாயிகளுக்கு எதிரான சட்டமாக மாறியதுதான் விந்தையிலும் விந்தை!                 
 இன்று 31.8.15 PTTV நேர்பட பேசுக்கு!

----\\\\ 

சரியே...! ஆனாலும்...!

மரண தண்டனை குறித்து சட்ட ஆணையத்தின் பரிந்துரை சரியாகவே தெரிகிறது!

ஆனால் பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை தரலாம் என்பது நெருடல் மட்டுமல்ல, ஓட்டையும்கூட!
இந்த ஓட்டை வழியே நிரபராதியும் பயங்கரவாதியென முத்திரை குத்தப்பட்டு, மரணத்தண்டனை தரப்படலாம்! 

உச்சபட்ச தண்டனை இறக்கும் வரை சிறையில் இருக்கும் தண்டனையாக இருக்கலாம்!        

இன்று 1.9.15 PTTV மக்கள் மேடையில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

----\\\\ 

இடதுசாரிகளே மாற்று..!

ஆக்கபூர்வமான விவாதம் நடைபெறாததற்கு ஆளும் அஇஅதிமுகதான் பொறுப்பு!

ஒரு யோசனை.. மக்களவையில் இருப்பது போன்று சபாநாயகர் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தி பிரச்சனையின் அடிப்படையில் முயற்சித்தால்...! 

அப்பவும் திமுக அதிமுக ஒத்து போகாது! 

இவர்களின் லாவணி கச்சேரி தமிழகத்திற்கு நல்லதல்ல! நிச்சயம் இடதுசாரிகள் உள்ளிட்ட ஜனநாயக மாற்றே இதற்கு  முற்றுப்புள்ளி! 

அரைபுள்ளி, கால்புள்ளி இனி தேவையில்லை!     

இன்று 1.9.15 PTTV நேர்பட பேசுக்கு!



No comments:

Post a Comment