Tuesday, 22 September 2015


டிஎஸ்பி விஷ்ணுபிரியா சாவு மர்ம மர்ணமே!

டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மரணம் தற்கொலைதானா? என்ற சந்தேகம் இருக்கிறது. காரணம் அப்பகுதியில் ஆதிக்க ஜாதி அமைப்பினர் விஷ்ணுப்பிரியா இறப்புக்கு அஞ்சலி போஸ்டர் வெளியிட்டிருப்பதும், வாட்ஸ்அப் பில் மரணத்தின் காரணங்களை வெளியிடுவேன் என்று கோகுல்ராஜ் கொலையின் முதல் குற்றவாளி கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது!

ஆதிக்க ஜாதியின் கோரவடிவமே விஷ்ணுபிரியாவின் மர்ம மரணம்! அதுவும் தலித் மாணவன் கொலை வழக்கை விசாரிக்கும் தலித் பெண் அதிகாரி தூக்கில் தொங்குகிறார் என்றால்... 

அவர் எழுத்தப்பட்டதாக கூறப்படும் கடிதம் இரண்டில், ஒன்றில்... கையெழுத்து இட்டு முடிக்கப்படாத  அந்த ஒரு கடிதத்தின் மீதி பகுதி மக்களுக்கு கிடைத்தால் மட்டுமே அது தற்கொலையா?இல்லையா? என்று முடிவுக்கு வரமுடியும். அதுவரை இது மர்ம மரணமே! 

உயர்நீதி மன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரணையால் மட்டுமே உண்மையை இதில் வெளிவரும்; சிபிசிஐடி விசாரணை வெறும் கண்துடைப்பே!

அரசு அதிகாரிகள் தற்கொலைக்கு மேல் அதிகாரிகளின் அழுத்தமும், மிரட்டலும் எந்தளவுக்கு உண்மையோ, காரணமோ அந்தளவுக்கு சற்றும் குறையாமல் காரணமாக இருக்கிறார்கள் அரசியல் வாதிகளும், அமைச்சர்களும், சமூக விரோத கும்பல்களும், ஆதிக்க சாதி வெறியர்களும்!

காவல்துறையில் இதுபோன்ற மனஅழுத்தம்  மிரட்டல்களில் இருந்து தங்களை பாதுக்காத்துக் கொள்ள அதில் பணிபுரிவோருக்கும் ஜனநாயக உரிமைகள் வழங்கிடல் வேண்டும். 

மற்ற துறை அரசு ஊழியர்களுக்கு இருப்பது போன்ற சங்கம் அமைத்து செயல்படும் உரிமை காவல்துறைக்கும் வழங்கிடல் வேண்டும்!

இன்று 21.9.15 PTTV மக்கள் மேடைக்கு!

----\\\\

டிஎஸ்பி விஷ்ணுபிரியா சாவு மர்ம மர்ணமே! மேலதிகாரிகளின் மிரட்டல், அழுத்தம் மட்டுமல்ல, அரசியல்வாதிகள், அமைச்சர்கள், சமூகவிரோதிகள், சாதி-மதவெறியர்களின் அழுத்தமும், மிரட்டலும் முக்கிய காரணம் தலித் பெண் டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மரணத்திற்கு!

சிபிசிஐடி என்பதும் விஷ்ணுப்பிரியா பணியாற்றிய மாநில காவல்துறைதான்; இவரது மரணம் தமிழகஅரசுக்கும், காவல்துறைக்கும் அவமானம் என்று கருதும் மனநிலையில் தமிழக அரசு இருப்பதனால், இதன் விசாரணையில் உண்மை வெளிவராது! 

ஆகவே உயர்நீதி மன்றம் மேற்பார்வையில் மத்திய சிறப்பு புலனாய்வு (சிபிஐ) விசாரணைதான் வெளிகொணரும்; அதனால்தான் எதிர்கட்சிகள் சிபிஐ விசாரணை கோருகின்றன.

இதை பேச இன்று சட்டசபையில் அனுமதிக்காததில்இருந்தே தெரிகிறது எங்கிருந்தோ வந்த மிரட்டலால்தான் இந்த மரணம் நிகழ்ந்தது என்பது தெளிவாக தெரிகிறது. இதை சட்டமன்றத்தில் விவாதிக்க பயப்படுவதேன்?

சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மிகுந்த அர்த்தமுள்ளது; இதில் அரசியல் துளியும் கிடையாது! காவல்துறையை ஜனநாயகப் படுத்த வேண்டியது காலத்தின் கட்டயம்; இல்லையேல் நேர்மையான அரசு அதிகாரிகள் தமிழகத்தில் குறிப்பாக காவல்துறையில் இல்லாமல் போய்விடும்! 

ஆம், ஒன்று செத்துவிடுவார்கள்; அல்லது வெளியேறி விடுவார்கள்; இதைத்தான் இந்த அரசில் நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்! நேற்று முத்துகுமாரசாமி; இன்று விஷ்ணுப்பிரியா; நாளை..?!

இன்று 21.9.15  PTTV நேர்பட பேசுக்கு!

-----\\\\\

 "ஜாதிவெறி, மதவெறி, அதிகாரவெறி, ஆணவவெறி"யே காரணம்..!

இன்று 21.9.15 புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இரவு 8 மணி முதல் 10.30 மணி வரை நடந்த 'மக்கள் மேடை, நேர்படபேசு' ஆகிய இரு நிகழ்ச்சிகளிலும் இரண்டரை மணிநேரம் விவாதம்...

டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மரணம் குறித்தே இருந்தது; இந்த இரண்டிலும் பேஸ்ப்புக், வாட்ஸ்அப் மூலம் நான் என் கருத்தையும் பதிவு செய்திருந்தேன். அது பதிவேற்றம் ஓரிரு வார்த்தைகள் கூட செய்யப்படவில்லை என்பது ஒருபக்கம் இருக்கட்டும். அதை நான் எனது வலைதளத்தில் போட்டு உள்ளேன்!

இந்த இரண்டு நிகழ்ச்சியிலும் என்னை போன்று ஓய்வு காவல் அதிகாரி சித்தண்ணன் என்பவர் இரண்டரை மணி நேரம் பார்த்தும், பேசியும் கொண்டிருந்தார். இவரை போன்று கருணாநிதி என்பவரும் வருவார். இவர்கள் இருவரும் நெம்பர் ஒன் 'ஜால்ரா' போலும். இவர்கள் தலைமீதுதான் இன்னும் காவல்துறை ஓடுகிறது போலும். அரசாங்கத்தின் ஊதுகுழல்.

இவர்களின் பணிவான கவனத்திற்கு... மேற்கு வங்கத்தில் காவல்துறைக்கு (பிகாரிலும்) சங்கம் இருக்கிறதே, அங்கு கட்டுப்பாட்டு வங்கக்கடலில் மிதந்துக் கொண்டு இருக்கிறதா? சங்கம் இருந்திருந்தால் நிச்சயம் விஷ்ணுப்பிரியா இறந்திருக்கவே மாட்டார். அவருக்கு ஒரு 'வடிகால்' கிடைத்திருக்கும். அதை ராஜேஸ்வரி டிஎஸ்பி குமுறலில் காணமுடியும்.

காவல்துறையில் புரையோடி கிடக்கும், "ஜாதிவெறி, மதவெறி, அதிகாரவெறி, ஆணவவெறி" என சமுதாயத்தில் நிலவும் அத்தனை வெறிகளை ஓய்வு ஐஜி திலகவதி மிக கவனமாக, கவலையுடன் பகிர்ந்தது தான் காலத்தின் உரைக்கல். இதை அரசு கண்டு கொள்ள தவறினால், தமிழகத்தின் ஒட்டுமொத்த நேர்மையான, திறமையான அதிகாரிகள் மட்டுமல்ல அனைவரின் வாழ்க்கையும் கேள்வி குறியாகி விடும்.

இந்த இரு நிகழ்ச்சியிலும் வந்தவர்களில், டிஎஸ்பி விஷ்ணுப்பிரியாவின் மரணத்தை நியாயப் படுத்திய இருவரை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது! 
ஒருவர் தணியரசு எம்எல்ஏ...

இவர் சொல்கிறார், "கோடிக்கணக்கானவர்களைக் கொன்ற இட்லர் தற்கொலை செய்து கொண்டார்" (நெறிஆளர் சரியாக தலையிட்டார்) அடுத்து சித்தண்ணன்... இவர் கூறினார், "சிபிசிஐடி, சிபிஐ....ன்னு போய் ஒபாமா கிட்டத்தான் கடைசியாக போகனும்" என்று சீறினார் பாரு... அடேயப்பா..! இப்படிப்பட்டவர்களின் தமிழகம் எப்படி இருக்குமோ? என்று எண்ணிப்பார்த்தால்...

'இடதுசாரி, ஜனநாயக, மதச்சார்பற்ற, ஆதிக்க ஜாதிவெறியை எதிர்க்கிற உள்ளிட்டு சமத்துவம் பேணுகிற சக்திகளுக்கு இன்னும் கூடுதல் "பொறுப்பை"  அதன் தோள்கள் மீது சுமத்தி உள்ளது என்றே தோன்றுகிறது.

----\\\\

"பிடிடிவி அடிமையோ நீ"

நிர்வாக மேலாளர் அவர்கள்,
புதிய தலைமுறை தொலைக்காட்சி, சென்னை.

அன்புடையீர், வணக்கம் .

தங்கள் தொலைக்காட்சி  ஆரம்பம் முதல் பார்த்து, ரசித்துவருபவர்களில் நானும் ஒருவன்.

குறிப்பாக புதுப்புது அர்த்தங்கள், நேர்படபேசு, மக்கள் மேடை நிகழ்ச்சிகளில் லைய்து விடுபவன்; இதனாலேயே அந்த நேரங்களில் வரும் தொலைகாட்சி விவாதல்களைக்கூட 'மிஸ்' பண்ணியவன்.

எனக்கு என் நண்பர், தோழர்கள் வட்டாரத்தில் "பிடிடிவி அடிமையோ நீ" என்ற பேரும் உண்டு.

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் தங்களது தொலைக்காட்சி ஒரு மைல்கல். அதற்காக ஓரிரு குறை இல்லாமலில்லை.


அந்த ஒரிரு குறைகளில் இன்று (21.9.15) எனக்கு மிகுந்த மன வருத்தத்தைத் தந்துவிட்டது. ஆம், மக்கள் மேடை, நேர்படபேசு நிகழ்ச்சிகளுக்கு வழக்கம் போல் என் கருத்தை அனுப்பி இருந்தேன்.

ஏறக்குறைய இரண்டிலும் ஒரே தலைப்புதான். இதொரு வரலாற்று சிறப்பு நிகழ்ச்சி; அதில் என் பதிவின் ஓரிரு வார்த்தைகளோ, வரிகளோ பதிவேற்றம் செய்யப்படாமல் போனது பெருத்த வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் தந்துவிட்டது.

நன்றி.                                                                                                                     -தாரைப்பிதா...

----\\\\

"வெட்டி திங்கிற வெறியில்" மனுஷ்புத்திரன்.!

இன்று 22.9.15 PTTV புதுப்புது அர்த்தம் நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கே.கனகராஜ், திமுக மனுஷ்புத்திரன் இவர்களுடன் நெறியாளர் ஜென்ராம்..

திமுக, அதிமுக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே... அல்லது இன்னொரு வார்த்தைகளில் சொன்னால், எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்றால், திமுக கொள்ளி நல்ல கொள்ளி என்கிறார் போலும்!

திமுக விமர்சனம் செய்தால், "வெட்டி திங்கிற வெறியில்" மனுஷ்புத்திரன் மட்டுமல்ல திமுக பேச்சாளர்கள் எல்லோருமே டிவியில் பொங்கி பிரவாகம் எடுக்கிறார்கள். அப்படித்தான் இன்றும் நடந்தது!

அதாவது அதிமுக கொள்ளி வேலி வேளாண் விஷக்கொள்ளியாம்; அதன் நெருப்பும், புகையும் ஆளை கொன்றுவிடுமாம்! திமுக சந்தன இல்லை இல்லை செம்மரக் கொள்ளியாம்; அதன் நெருப்பும், புகையும் மணக்குமாம்! 

அய்யா மனுஷ்களே... இன்றுமாதிரி கரட்டியாக கத்தினாலும், பிகாரில் எம்எல்ஏ சீட் கேட்டு ஒருவர், அவரது கட்சி தலைவர் முன் தரையில் விழுந்து புரண்டு புரண்டு அழுத்தாலும் தமிழக மக்கள் இனிமேல் திமுகவை நம்ப போவதில்லை; அது போலத்தான் அதிமுகவையும்! 

இனி தமிழகம் இடதுசாரி மற்றும் மக்கள்நல கூட்டியக்கம் பக்கம்தான்!

நெறியாளர் பாவம் மனுஷ்சை கடைசி வரை கட்டுப்படுத்தவே முடியவில்லை! தோழர் கே.கனகராஜ் எழுப்பிய நெத்தியடி கேள்விகளுக்கு எதற்குமே பதில்லை; கரடியாக முடியை விரித்துப்போட்டு ஒரே "கத்தல்மயத்"தில் குதித்துவிட்டது திமுகவின் புதிய உடன்பிறப்பு மனுஷ்!

----\\\\

திமுக ஜனநாயகத்தை விரும்பும் கட்சியா?

எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகனும்! அதாவது சமீப காலங்களில், குறிப்பாக 'மக்கள் நலக்கூட்டியம' உருவாகி, தவழ ஆரம்பித்ததில் இருந்து, தொலைக்காட்சி விவாதங்களின் வரும் உடன்பிறப்புகள் "ஓவராக" சீன் காட்டுகிறார்கள்? இடதுசாரிகளை சீன்டுகிறார்களே! ஏன்?

இடதுசாரிகள் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கு வரமுடியாது என்று முடிவுக்கு வந்து விட்டார்களோ?

ஒவ்வொரு டிவி யிலும் விவாதத்தை 'வெறி' யேற்றி 'வீண்' ணாக்குவது என்று முடிவெடுத்தான் செயல்படுகிறார்களோ? 

இனி மேல் இதர கட்சிகள் பாதுகாப்பு 'கவசம்' அணிந்துதான் செல்ல வேண்டுமோ? திமுகவை எதுவுமே  'சொல்லவே' கூடாதென குதியோ குதின்னு குதிக்கிறார்கள்!

திமுக ஜனநாயகத்தை விரும்பும் கட்சியா? ஜனநாயகயகத்தை விரும்பாதக் கட்சியா?

----\\\\

ஆதீனம்: ஆன்மீக வாதியா? அரசியல் வாதியா?

இன்று 20.9.15 இரவு PTTV அக்னிபரிட்சை நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம் என அறியப்பட்ட அதிமுக ஆதீனம், நெறியாளர் சண்முகசுந்தம்..!

தமிழில் இருந்து ஆரம்பித்தார்... தமிழ் வேறு ஆண்டவன் வேறு அல்லவாம்; இரண்டும் ஒன்றாம்!  புரட்சி தலைவி அம்மா என்பது பெண்மணி என்பதாலாம்! 

2016 இல் மீண்டும் அம்மாதான் முதல்வராம்! 

இலங்கை தமிழர் பிரச்சனையை பாஜக அரசு மெல்ல தீர்த்துவிடுமாம்! 

ஆன்மீக வாதியா? அரசியல் வாதியா? என்றால், ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லையாம்! 

திமுகவா?அதிமுகவா? எது பிடிக்கும் என்றால் எல்லாமே பிடிக்கும்மாம்! ஆனால் 1990 ஆம் முதல் 25 ஆண்டுகளாகவே அம்மா பக்தராம்! 

"காமடி பீஸ் தோற்றுவிடும்!" 

ஆனால் ஆன்மீகத்தை அரசியலில் கலப்பதென்பது ஆண்டவன் கட்டளை என கூறி ஆர்எஸ்எஸ் இந்துத்துவா க்கு அருமையாக அச்சாரம் போட்டார் கூச்சம் நாச்சமின்றி! 

நெறியாளரும், ' ஆதீனம் அதிமுக உறுப்பினர்தான்' என்பதை நன்றாக மடக்கி நாடறிய வைத்துவிட்டார்; அவருக்கு பாராட்டு!

----\\\\

No comments:

Post a Comment