Tuesday, 15 September 2015

நேர்மை..! நெகிழ்வு...!

இன்று 14.9.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் ஐஏஎஸ் ஓய்வு பாலச்சந்திரன், கண்ணதாசன் திமுக இவர்களுடன் நெறியாளர் ஜென்ராம்..!

'நேர்மை' பற்றிய விவாதம்...


இதிலே 2 தகவல் நெகிழ வைத்தது...
திரு பாலசந்திரன் தந்த தகவல்...

மறைந்த ஜோதிபாசு மனைவியார் புடவை துவைத்து உலர வைத்தபோது, அதன் நீர் கீழே சொட்டி பாதிப்பை ஏற்படுத்தியதாக ஒரு வழக்கு... அதற்கு ஜோதிபாசு சொன்னாராம், "அது நீ சம்மந்தப்பட்டது; நீயே பார்த்துக்கொள்" வழக்கு நடந்த 3 ஆண்டுகளில் ஜோதிபாசு முதல்வராம்! (இதோடு இவர் கூடுதலாக சொன்னது பொதுவுடமை இயக்கம் மே.வங்கத்தில் தலைமையில் நேர்மை குறையவில்லை; கீழேதான்; அதுதான் அங்கு ஏற்பட்ட நிகழ்வு!)

அடுத்து தியாகி வ உ சி க்கு உதவிய மாடசாமி.. அவர் பிரிட்டீஷ் அரசின் 'தேசவிரோத' வழக்கில், வெளிநாடு அனுப்பப்பட்டதும், 'நமது' இந்தியாவில் 'பிச்சைக்காரன்' வேடத்தில் வந்து மகனை பார்த்து சென்றுவிட்டதும்...நினைக்கவே எவ்வளவு பெருமையாக இருக்கிறது? 

இன்றைய நமது நாடு எங்கே இருக்கிறது? எதை சொல்லுவது  வருங்கால சந்ததிகளுக்கு? ஒரு சகாயம் போதுமா? ஆம்! 40-50% ஐஏஎஸ் அதிகாரி இன்றைய நிலையில்  உறுதியாக நேர்மையாக இருப்பார்கள் என்கிறார் பாலசந்திரன் அவர்கள்... நிஜமாகவா? 

ஆனால் அரசியல்வாதிகள்..? ஒரு மாடசாமி, ஒரு ஜோதிபாசு தாவது இருப்பார்களா? (என்னையும் சேர்த்தேதான்!) இருக்கிறோமா?

நெஞ்சை தொட்ட, சுட்ட விவாதம்..! ஏற்படுத்திய ஜென்ராம்க்கு நன்றி

----\\\\\

ஆனால் மனித எலும்பு வருதே!

மண்ணைத் தோண்டினால் கல்லுவரும்; கனிமம் வரும்! ஆனால் மனித எலும்பு வருதே! 

நடு நிசியிலும் சத்தியாகிரகம் செய்து நரபழியை நாடறிய வைத்த நாயகனே! சகாயமே நீ ஒரு சரித்திரம்! 

பெரியார் மண்ணில், பெரியாரின் வாரிசுகள் ஆட்சியில் தான் நர பழி நடந்து இருக்கிறதென்றால், 

பெரியாரின் வாரிசுகளே பெரியாரின் கொள்கைகளை 'நரப்பழி'க் கொடுத்துவிட்டார்கள் என்று புரிந்துக் கொண்டால் தவறில்லை; அல்லவா?

இன்று 14.9.15 PTTV நேர்படபேசுவில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

------\\\\\\\


மடிகணனி (லேப்டாப்) அன்பளிப்பு!

சேலம் மாவட்டம் தபால் தந்தி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றார் தோழர் டீ.நாகராஜன். இவர் தேசிய தபால் ஊழியர் சம்மேளணம் சேலம் மாவட்ட தலைவராகவும் செயலாற்றி வந்தார். 37 ஆண்டுகள் கட்சியிலும், சங்கத்திலும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர் பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து கட்சியின் சேலம் மாவட்டக்குழுவுக்கு ரூ22,000 விலையில் மடிக்கணனி (லேப்டாப்) அன்பளிப்பாக வழங்கி உள்ளார். அதோடு தீக்கதிர் வளர்ச்சி நிதியாக ரூ2,000 வழங்கி உள்ளார். இவருக்கு சிபிஐஎம் சேலம் மாவட்டக்குழு பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

சேலம் மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு விடம் லேப்டாப் வழங்குகிறார். அருகில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.சேதுமாதவன், சேலம் மாநகர வடக்கு செயலாளரும், மாவட்டக்குழு உறுப்பினருமான எம்.முருகேசன், அலுவலக செயலாளர் வி.சம்பத் உள்ளிட்டோர் உள்ளனர்.

-----\\\\

"மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம்"தான்!

வார்டு வார்டாக மட்டுமல்ல, தெருத்தெருவாக "அலைய" வேண்டும் எவ்வளவு பெரிய மகாராணியாக, மகாராஜாவாக இருந்தாலும்; அதுதான் இந்திய ஜனநாயகத்தின் அசைக்க முடியாத வேர்! 

இந்த வேரில்தான் வென்னீர் ஊற்றிடத்தான் அவ்வப்போது முயற்சி நடக்கிறது; இருந்தாலும் இன்றுவரை சிலபல குறைகள் இருந்தாலும் இந்திய ஜனநாயகம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது!

அதிமுக ஐசியூ வில் இருப்பது உண்மைதான்; உலக முதலாளிகளையே திரட்டி வந்து "முதல்" உதவி செய்துள்ளார் மோடி! 

திமுகவும் திண்டாட்டத்தில் தானிருக்கிறது! 

பாமக கூட்டணி ஒபாமா கட்சி இசைவு தெரிவித்து விட்டதாக நம்ப தகுந்த வட்டாரத் தகவல்; ஆகவே இந்த முறை முதல் நாள் முதல் கையெழுத்து அமெரிக்காவில் மதுவிலக்கு அமலாவது உறுதி! 

வரும் தேர்தலில் சரியான பொருத்தமான மாற்று இடதுசாரிகள் உள்ளிட்டு மதசார்பற்ற ஜனநாயக சக்தியான "மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம்"தான்!

இன்று 12.9.15 PTTV நேர்படபேசுக்கு..!

-----\\\\\

இன்று... இறச்சி...!

இன்று... இறச்சி; 

நேற்று... இந்துக்கள் 5 பிள்ளைகள் பெற்று 2 பிள்ளைகளை ஆர்எஸ்எஸ் (நாட்டுக்கு) தந்திடுவது; முஸ்லீம் மக்கள் தொகை அதிகம் என பட்டியல் நீளுகிறது; 

நாளை..?! 

இப்படி சிறுபான்மை மக்களுக்கு எதிராக பெரும்பான்மை மக்களை உசுப்பி விடுவது; அதேசமயத்தில் காஷ்மீரில் கூட்டணி அரசில் பங்கேற்பது..! 

ஆட்சி அதிகாரத்தைச் சுவைப்பதே பாஜக ஆர்எஸ்எஸ் ன் சந்தர்ப்பவாத நிலை! 

மக்களை திசைத்திருப்பி தமது இந்துத்வா அஜண்டாவையும், கார்ப்ரேட் நிறுவனங்களின் நலனையும் பேணுவதே மோடியார் அரசின் பிறவிபயன்!

இன்று 14.9.15 PTTV மக்கள்மேடைக்கு!

----\\\\

நல்லுறவு வளர்க்கப்படுவது நன்றே!

நெருங்கி வரும் இந்தியா-இலங்கை உறவால் இரு நாடுகளின் பெரும் பெரும் முதலாளிகளுக்கும், பெரும் பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கும், கார்ப்பரேட் சுரண்டல் நிறுவனங்களுக்கும் லாபம்! 

இரு நாட்டு உழைப்பாளிகளுக்கு குறிப்பாக இலங்கை தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் பட்டை நாமம்! 

எது எப்படியோ அண்டை நாடுகளுடன் நல்லுறவு வளர்க்கப்படுவது நன்றே!

இன்று 15.9.15 PTTV நேர்பட பேசுக்கு!

-----\\\\

அண்ணாவின் கொள்கையை கடைப்பிடிக்கவில்லை!

அண்ணாவின் கொள்கைகளையும் சரி, பெரியாரின் கொள்கைகளையும் சரி ஆட்சியில் இருந்த திமுக அஇஅதிமுக (கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்) கடைப்பிடிக்கவில்லை!

அப்படி கடைப்பிடித்திருந்தால் நரபழி நடந்தேறியிருக்குமா? 

ஜெயலலிதாவிற்காக தமிழகமே மொட்டை போட்டிருக்குமா? அல்லது இவர்கள் அரசியலாக காங்கிரஸ், பாஜக வுடன் சேர்ந்து ஆட்சியை மத்தியில் பகிர்ந்திருப்பார்களா? 

அதற்குகூட இவர்கள் அண்ணாவை அழைக்கக்கூடும்..."மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுய ஆட்சி" என்று! ஆனால் யாருடன் கூட்டாட்சி? காங்கிரஸ் சோசலிசம் இனிக்காது என்றாரே... அந்த காங்கிரஸ் உடனா? 

மதவெறியை விசிறிவிட்டு, சிறுபான்மை மக்களை கொன்று குவிக்கும் ஆர்எஸ்எஸ் கூடாரத்தின் அரசியல் பிரிவான பாஜகவுடனா? 

பெரியாரை செருப்பால் அடிக்க வேண்டுமென்ற பாஜகவுடனா?

இன்று 15.9.15 இதன் ஒருபகுதி PTTV மக்கள்மேடை யில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது..!


No comments:

Post a Comment