பாஜக அதிமுக தேர்தல் கூத்து ஆரம்பம்..!
இன்று 10.9.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் ஞானி, தொழில் முனைவர் (பெயர் மறந்துவிட்டேன் மன்னிக்க) நெறியாளர் ஜென்ராம்..!
உலக முதலீட்டாளர் மாநாடு எப்படிப்பட்ட வாணவேடிக்கை நிறைந்த இந்த ஆண்டின் அதிமுக கொண்டாடிய "தீபாவளி!" என்பதை மிக அருமையாக அம்பலப்படுத்தினர் மூவரும் சேர்ந்து அவரவர் கோணத்தில்! அந்த 'மூன்று' பேருக்கும் நன்றி!
பாஜக அதிமுக தேர்தல் கூட்டணியின் கூத்து ஆரம்பம் என்று சொல்லாமல் சொன்னார்கள் மூவரும்!
குஜராத்தில் 25 லட்சம் கோடி வந்துவிட்டதென (இங்கு நேற்று 1 லட்சம் கோடி வந்துவிட்டது என்றார்களே அதுபோல்) சொல்லி, ஆண்டுகள் பல கடந்தப்பின் "வெறும் 21 ஆயிரம் (ஒரு வருட நம்மூர் டாஸ்மாக் வருமானம்) வந்ததாம்!
மோடி குஜராத்திலேயே இந்த நிலைமையென்றால், இந்த லேடி தமிழ்நாட்டில்... 1 ஆயிரம் கோடி பல ஆண்டுகள் கழித்து உறுதி!
டாஸ்மாக் வாடிக்கையாளர்களே தயதுசெய்து காரித்துப்பாதீர்கள்! நீங்கள் 'சாக்கனாங்கடையில்' வாங்கி நக்கும் ஊறுகாய் முதலீட்டை தமிழகத்திற்கு நம்ம லேடியும், அந்த மோடியும் கொண்டு வந்திருக்காங்க..!
அதனால.. சகலபகுதி வாக்களர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் இந்த மாநாட்டால் அனைவருக்கும் டாஸ்மாக் வாடிக்கையார்கள் உள்ளிட்டு ஊறுகாய் இலவசமாக அனைவர் வீட்டுக்கும் அனுப்பி வைக்கப்படும்!
அதை அனைவரும் நக்கிக்கொண்டு மீண்டும் அதிமுகவுக்கும், அதன் அடிமைகளுக்கும் வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கனும்கோ....!
டும்...டும்...டும்..!
இப்படிக்கு,
உலக முதலீட்டாளர்கள் புரட்சி தலைவி அம்மா அகில உலக பேரவை, போயஸ் தோட்டம் அல்லது ஹதராபாத் திரட்சை தோட்டம் அல்லது கொடைநாடு கொள்ளைத்தோட்டம், தமிழ்நாடு.
குறிப்பு:
நாங்கள சுற்றி சுற்றி ஆய்வு செய்ததில், நாங்கள் கொள்ளை அடிப்பதற்கு எதையும் அதிமுக அம்மா பேரவை விட்டுவைக்காதால், "வந்த மச்சான்கள் எல்லாம் திரும்பி போகிறோம் ஊழல் மனத்தோடு!" வாழ்க அகில உலக புரட்சி தலைவி அம்மா முதலீட்டாளர்கள் பேரவை..!
----\\\\
"சந்தோசம்!"
இனி வேலையில்லாத திண்டாட்டம் தமிழகத்தை விட்டு ஆந்திராவிற்கு " கொள்ளையர்கள்" எல்லாம் ஓடினமாதிரி "ஓடிவிடும்!" என்று நம்புவோமாக..!
இன்று 9.9.15 PTTV மக்கள் மேடையில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
----\\\\
சுரண்டலுக்கு பச்சைக்கொடி..!
ரூ1 லட்சம் கோடிக்கு மேல் தமிழகத்தில் உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளின் பணம் வந்து குவிந்திருப்பது... மறைமுகமாக உழைப்பு சுரண்டலுக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுவிட்டது என்று அர்த்தம்!
மத்திய அரசு மட்டுமல்ல, புதிய பொருளாதார கொள்கையை ஆதரிக்கிற, குறிப்பாக பன்னாட்டு முதலாளிகளின் சுரண்டலை ஆதரிக்கும் கட்சிகள் அனைத்தும் இதற்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம்!
அனேகமாக தமிழக சட்டமன்ற தேர்தலுக்குள் முதலாளிகளின் முதலீடு இங்கு இறங்குதோ, இல்லையோ, முதலாளிகள் ஆதரவு கட்சிகளுக்கு கமிஷன் வந்து இறங்கிவிடும்!
இன்று 9.9.15 PTTV நேர்பட பேசுக்கு..!
-----\\\\\
தமிழகத்திற்குத்தானே பெருமை!
மதுவிலக்கு வேண்டி மகளிர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் வரவேற்க வேண்டிய ஒன்றே!
அதிமுக மகளிர் அணி அல்லது இளம் பெண்கள் பாசறை போராடினால்கூட வரவேற்கலாம்!
யார் போராடுகிறார்கள் என்பதல்ல முக்கியம்; கோரிக்கைதான் முக்கியம்!
மதுவிலக்கு அமலானால் அனைவருக்கும் தமிழகத்திற்குத்தானே பெருமை!
இன்று 8.9.15 PTTV மக்கள் மேடையில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தற்போது!
-----\\\\
திமுக அதிமுக இருக்கும் வரை சிக்கல் தீராது!
உலகத்தில் வேறெங்காவது இருக்கிறதா இதுபோன்று நடிகர் சங்கத்தில் "கச்சைக்கட்டி"க் கொண்டு ஆடுவது? தெரியவில்லை!
திமுக அதிமுக என்ற கட்சிகள் இருக்கும் வரை இந்த நடிகர் சங்க சிக்கல், கோஷ்டி ஓயப்போவதில்லை!
இன்று 8.9.15 PTTV நேர்பட பேசுவில் தற்போது இதன் ஒரு பகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
------\\\\\
No comments:
Post a Comment