Monday, 7 September 2015

இன்னும் எண்ணி ஏழு மாதத்தில் இந்த ஆட்சி இருக்கப்போறதில்லை!

இன்னும் எண்ணி ஏழு மாதத்தில் இந்த ஆட்சி இருக்கப்போறதில்லை! 

நாலரை வருசமா ஒரு கோடியை இழுக்காத இந்த அரசு இந்த ஆறு மாதத்திற்குள் அன்னிய மூலதனத்தை இழுக்குதாம்! 

கேப்பையில் நெய் வடியப்போகுதாம் அதை மக்கள் நம்பனுமாம்! 

இன்னும் என்னென்ன வானவேடிக்கை தமிழ்நாட்டில் இந்த அதிமுக அரசு நடத்த போகுதோ? தெரியல! 

ஆனால் ஒன்னு தெரியுது அதிமுகவுக்கு தோல்வி பயம் தொத்திக் கொண்டுவிட்டது என்பது! 

அதனால் தான் அந்த மாநாடு, இந்த மாநாடு என்று சீன் காட்டுகிறது!  போகுகிற போக்கில் பார்த்தால், மதுவிலக்குக்கூட வந்தாலும் வரலாம் என்றே தோன்றுகிறது! 

மாநாடுபோல் தடபுடல் ஏற்பாடுகள் நடக்கிறதென்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு மிகச்சரியானதே!

இன்று 7.9.15 PTTV நேர்பட பேசு..!

====\\\\

அதுசரி, அது என்ன ரூ15 லட்சம்? நல்ல தமாஷ்! 

வரி ஏய்ப்பாளர் யார் என்று தெரியாத வருமான வரிதுறை அறிவித்திருக்கும் ரூ15 லட்சம் பரிசு தொகையை நமது பிரதமரே சொல்லிவிட்டு, இதை முதல் பரிசாக பெற்றுக்கொள்ளலாம். 

ஆனால் இப்படி ஒரு ஏமாற்று ஆட்சியாளர்களை இதுவரை கண்டதில்லையடாச் சாமி! 


அதுசரி, அது என்ன ரூ15 லட்சம்? 

கறுப்புப்பணத்தை அரசாங்கம் பிடித்தாலும் ஒரு குடும்பத்திற்கு ரூ15 லட்சம்; மக்கள் பிடித்து அரசாங்கத்திற்குக் 'காட்டிக்' கொடுத்தாலும் ரூ15 லட்சம்! 

மொத்தத்தில் ஏமாற்றுவதற்கு இன்னொரு பெயர் ரூ15 லட்சம்..!

"ரெண்டும்" நடக்கப்போறதில்லை "கார்பரேட் நலன் பேணும்" மோடியார் ஆட்சியிலே என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது!

இன்று 7.9.15 PTTV மக்கள் மேடை..!


தமிழகத்தில் வளரவில்லை


ஆசிரியர் மாணவர் உறவு தமிழகத்தில் வளரவில்லை; மாறாக கவலையளிக்கும் விதத்தில் தேய்ந்துதான் வருகிறது! 

இதற்கு ஆசிரியர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்; அதற்கு ஆசிரியர் அமைப்புகள் முன்கையெடுத்து, ஆசிரியர்-மாணவர் உறவில் ஒரு ஜனநாயக செயல்பாட்டை அறுபதுகளில் இருந்ததைபோல் புனரமைத்தல் வேண்டும்.

இன்று 4.9.15 PTTV மக்கள் மேடையில் இதன் ஒரு பகுதி தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

====\\\\

நல்ல ஜனநாயக திருப்பம்!

38 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையில் ஒரு நல்ல ஜனநாயக திருப்பம்! 

நிச்சயம் இலங்கை தமிழர் நலனுக்கு இதொரு திருப்பு முனையாக அமையட்டும்! 

அமையும்! இதற்கு தமிழகமும், இந்தியாவும் உதவட்டும்!        இன்று 4.9.15 PTTV நேர்படபேசுக்கு..!

====\\\\

ஏற்க மாட்டார்கள் என்பதைவிட ஏற்ககூடாது..!

2016 தேர்தலில் அதிமுக, திமுக வை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதைவிட ஏற்ககூடாது என்பதே ஜனநாயக, மதசார்ப்பற்ற, இடதுசாரி சக்திகளின் முயற்சியும்கூட! 

அதற்காக சு.சாமி சொல்லுவதுபோல் பாஜக இருக்கும் அணியை (அது 3ஆவது அணியோ, 4ஆவது அணியோ) தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்; அதேசமயத்தில் பாஜக தமிழகத்தில் காலூன்ற எந்த எல்லைக்கும் அது போகும்! 

அது விரிக்கும் வலையில் விஜய்காந்த் போன்ற ஜனநாயக சக்திகள் விழுந்திடக்கூடாது என்பதே தமிழக மக்களின் விருப்பமும், அவசியமும்!

இதன் ஒருபகுதி இன்று 5.9.15 தற்போது PTTV நேர்பட பேசுவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

====\\\\


No comments:

Post a Comment