" 'தற்கொலை'யில் நில அபகரிப்பு சட்டமா?
அல்லது மீண்டும் மூர்க்கத்துடன் வருமா?"
இன்று 31.8.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியின் சுருக்கம் காலை 9 மணிக்கு பார்க்க நேர்ந்தது. மீண்டும் நெறியாளர் ஜென்ராம்... இவருடன் பத்திரிக்கையார்கள் மணி, சுந்தர் ஆகியோர்...
"நில அபகரிப்பு சட்டம் திரும்ப பெறப் பட்டது; பட்டேல் சாதி எழுச்சி!" ஆகியவையே விவாதம்... ஜென்ராம் வழக்கம்போல் சூப்பராக கிடுக்கிப்பிடி போட்டு, விவாதத்தைச் சூடாக்கினார்.
விவசாயிகள் நலனுக்கு என்றுகூறிய அச்சட்டம் வாபஸ்கூட பெறாமல் தானாக "தற்கொலை" போட விட்டது ஏன்? என்றதற்கு... பத்திரிக்கையாளர்கள் மணியும், சுந்தரும் இரு கோணத்தில் அம்பலப்படுத்தி, ஜென்ராம் விவாதத்திற்கு "ருசி"யை கூட்டியதுதான் திருப்பம்.
"நான்காவது முறையாக அவசரச் சட்டத்திற்கு குடியரசு தலைவர் 'ரப்பர் ஸ்டாம்ப்' குத்த மறுக்கக்கூடும்; பிகார் தேர்தல்; மக்களவையில்தற்போது பெரும்பான்மை பெறுவது எளிதல்ல என்று உணர்ந்ததால், தற்காலிகமாக பின் வாங்குகிறார்கள்; 'புலி பதுங்குவது பாய்ந்திடவே..! பயந்தல்ல; இவர்கள் ஒன்றும் ஜனநாயக வாதிகள் அல்ல; அவசரச்சட்டம் என்பதே ஜனநாயக விரோதச்செயல்" என்ற அர்த்தத்தில் மணியார் பெரும்போடு போட்டது 'நச்!'
"9 'முக்கிய' அம்சத்தில் 8 'முக்கிய' அம்சங்களைத் திரும்ப பெற்ற நிலையில், பல்லு புடுங்கிய பாம்பு இருந்தால் என்ன..! இல்லாவிட்டால் என்ன..! என்றும், இந்த நிலையில் அது நிறைவேறினால்.. அது காங்கிரஸ், இடதுசாரிகளுக்கும், எதிர்கட்சிகளுக்கும்தான் ஆதாயம் என்றும் 'விளங்கி' கொண்டதால், அதை 'விலக்கி'க் கொண்டார்கள்!" என்று மணி ஒரு பெரும்போடுப்போட்டார்!
சுந்தர் கூற்று விசித்திரமாக இருந்தது; அதாவது... "விவசாயிகள், மக்கள் எதிர்ப்புக்கு செவிசாய்த்து விட்டுவிட்டாராம் மோடி!" (சுந்தரின் விவாதம் திருத்தம் இல்லாத மோடி அரசு முன் மொழிந்தச் சட்டத்திற்கு ஆதரவு மாதிரி இருந்தது)
கடைசிவரை "விவசாயிகள் நலனுக்கு இந்த சட்டமின்னு 18 மாதமாக மூச்சுமுட்ட பேசிவிட்டு, தற்பொழுது இந்த சட்டத்தைத் "தற்கொலை" க்கு விட்டுவிட்டது.."விவசாயிகளுக்கு விரோதம் அல்லவா?" என்ற கேள்விக்கு 'பதில்' கிடைக்கவே இல்லை; ஆனால், "சட்டத்தைத் திருத்தம் செய்து, நீர்த்து போக செய்தது பன்னாட்டு முதலாளிகளுக்குப் பிடிக்கவில்லை" என்பதை சூசகமாக சொன்னார் சுந்தர் அவரையும் அறியாமலே!
பட்டேல் சாதி போராட்டத்தின்மூலம் தனது 'தாக்கத்தை' அல்லது 'தூக்கத்தை'க் கெடுத்தது யார்என்று மோடி கண்டுபிடித்து விட்டதாக 'முடிச்சை அவிழ்காமல் 'அவில்' கொடுத்து, 'மில்லச்சொல்லி' முடிந்தது நிகழ்ச்சி! தோழர் ஜென்ராமை மீண்டும் நிகழ்ச்சியில் பார்த்ததில் மகிழ்ச்சி!