கருணாநிதி கேள்வி சரியானதே!
கருணாநிதி கேள்வி சரியானதே! ராம்தாஸ் அதிமுக திமுக வோடு கூட்டணி வைத்தப்போது மதுவிலக்கு வேண்டும் என்று எந்த நிபந்தனையும் விதித்ததாக தெரியவில்லை!
கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள் யாவும் தேர்தல் நேரத்தில் (கடந்த காலங்களில்) கொள்கை அடிப்படை எதுவும் கிடையாது! பதவிதான்!
திமுக காங்கிரஸ் கூட்டணியில் அமைச்சர் பதவிகளை பெற பட்டப்பாடு பாரறியும்! சின்ன கட்சிகள் என்பதற்காக பெரிய கட்சிகள் ஏன் இப்படி பேசுகின்றன என்று தெரியவில்லை!
இவர்கள் (பாமக, திமுக) நடத்தும் லாவணி கச்சேரியால் அரசியல் மேல் மக்களுக்கு மேலும் வெறுப்பைத்தான் ஏற்படுத்தும்!
இன்று PTTV 6.8.15 மக்கள் மேடையில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
================
சூப்பர் சுஷ்மாசுராஜ்ஜி!
எதிர்க்கட்சிகள் ஏற்கும் கட்டம் தாண்டிவிட்டது! சுஷ்மா சுராஜ் 'மடி'யில் கணமில்லை என்றால், பதவியில் 'மோகம்' ஏன்? பதவி விலகி எதிர் கொள்ள வேண்டியது தானே!
பாஜக எதிர்கட்சியாக இருக்கும்போது ஆளும் கட்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தால், பதவி வில வேண்டும்; மக்களைவை முடக்குவார்கள்! ஆனால் இவர்கள் ஆளும் கட்சியாகி விட்டால், பதவி விலக தேவையில்லை; எதிர்கட்சி எம்பிகளை சஸ்பெண்ட் செய்வார்கள்!
என்ன சார் நியாயம்? மோடிஜி! மாமியார் உடைத்தால் மண்சட்டி; மருமகள் உடைத்தால் பொன்சட்டி! சூப்பர் சுஷ்மாசுராஜ்ஜி!
இன்று 6.8.15 PTTV நேர்பட பேசுக்கு..!
======================
பாவம் பாமக!
பாவம் பாமக!
ரெண்டு வச்சிக்கிட்டு திரிஞ்சாங்க!
ரெண்டும் இப்ப போச்சிங்கோ போச்சி!
தலித் அல்லாத சாதிகளை சேக்கிறதில இப்ப பாஜக தலைவர் குஜராத் படுகொலை புகழ் அமித்ஷா நேற்று ஹஜாக் பண்ணிட்டாரு;
மதுவிலக்கு சசிபெருமாள் மரணத்திக்கு பிறகு வேறு பரிமாணத்திற்கு போயிருச்சி!
=====================
இதுதான் காங்கிரஸ் நிலைபாடா?
இன்று 8.8.15 PTTV அக்னி பரிட்சை யில்
காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு...
இலங்கை தமிழர் பிரச்சனையில் 'கருத்து சொல்ல முடியாது!' ஆனால் இலங்கை பிரச்சனை தொடர்புடைய வழக்கில் 'தூக்குத் தண்டனை' க்கு பதிலாக 'ஆயுள் தண்டனை'யாக மாற்றப்பட்டு உள்ள சூழலில், அதிலிருந்தும் விடுதலை கோரும் சூழலில்... குஷ்பு கூறுகிறார்...
'தூக்குத்தண்டனை' வேண்டுமா? வேண்டாமா? என்று கேட்டபோது, "வேண்டும்" என்று 2 கைகளையும் உயர்த்துகிறாரே... இதுதான் காங்கிரஸ் நிலைபாடா?
அப்படியென்றால் சோனியாஜி தூக்குத்தண்டனை வேண்டாமென்று அன்று நிலைபாடு எடுத்தாரே... அது காங்கிரஸ் நிலைபாடா?
எது?
ஆடு பகை; குட்டி உறவு..! மோடிஜி உள்ளிட்டு ஜெயலலிதாஜி வரை... தனிநபர்கள் எல்லாரும் நல்லவரே; கொள்கையில் 'அல்லவரே' என்கிறார்!
ஏனிந்த முரண்பாடு? எதற்கு இத்தனை முரண்பாடுகள் குஷ்புஜி க்கு வைத்த பரிட்சையில்!
தேர்தல் அரசியலே!
எது எப்படியோ தமிழ்நாடு சட்டபேரவை தேர்தல் வருவது உறுதி!
அது முன்பாக வந்தாலும், பின்பாக வந்தாலும் அரசியல் கட்சிகளுக்கு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆளுவதென்ற "அதிகாரம்" பெற்றிடும் உச்சபட்ச போராட்டம்!
இடதுசாரி கட்சிகள் என்றும் திருநாள் (போராட்டம்)! மற்ற கட்சிகளுக்கு கடைசி 6 மாதங்கள் மட்டுமே திருநாள் (போராட்டம்)!
மோடி ஓடோடி வந்து லேடியை சந்தித்ததும், உடல் நலமின்றி இருந்த லேடி விமானம் நிலையம் ஓடோடி சென்று மோடியை வரவேற்றதும், வீட்டிலே விருந்தளித்ததும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், தேர்தல் முன் 'கூட்டியே' வந்துவிடும் போல்தான் தெரிகிறது!
ஆம்! டாடி பேச்சைக்கேட்டு சசிபெருமாள் குடும்பத்திற்கு ரூ10லட்சம் சன் கொடுத்தது சாதாரணமா?
20 தமிழர்களை கொன்று குவித்தப்போது "பேச்சுமூச்சு" இன்றி இருந்த தமிழக அதிமுக அரசு லட்சங்களும் தருவதும், அரசு பணிகளுக்கு ஆர்டர் போடுவதும் அதிகபட்சம் தேர்தல் அரசியலே!
No comments:
Post a Comment