கம்யூனிஸ்ட்களைத்தான் அரசு சேதாரப்படுத்தும்!
போராட்டங்கள் மீது பொது சொத்து சேதாரம் தமிழகம் முதலிடம் என்றால்... யாருடைய போராட்டத்தில் என்றும் பார்க்க வேண்டும்! அனேகமாக ஜெயலலிதா சிறைப்பட்ட போது இருக்கும்!
ஆளும் கட்சிகள் போராடும்போது, "ஆட்சி நமது; நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது!" என்ற இறுமாப்பில் அதிக சேதாரம் வர வாய்ப்பு உண்டு!
கம்யூனிஸ்ட்கள் போராடும்போது பொதுச்சொத்துக்கு சிறுதுளி அளவுகூட சேதாரம் இருக்காது! மாறாக கம்யூனிஸ்ட்களைத்தான் அரசு சேதாரப்படுத்தும்! இதுதான் தமிழகம் கண்டது!
இன்று 20.8.15 PTTV மக்கள் மேடைக்கு..!
குறிப்பு: வாச்சாத்தியில் பழங்குடி மக்கள் சூரையாடியதை எதிர்த்து 18 ஆண்டுகள் போராடியது கம்யூனிஸ்ட்கள் என்று ஒரு நேயர் சூப்பராக பதிவு செய்தார்! அவருக்கு பாராட்டு!
நிகழ்ச்சியாளர் கார்த்திகேயன் எல்லாக் கட்சிகளையும் சொல்லவில்லையே என்றார்! ஆனால் அந்த கருத்தையே நானும் பதிவு செய்தேன்!
ஆனால் அது பதிவேற்றம் செய்யப்படவில்லையே! ஏன்?
----\\
இது அங்கிருந்து வந்த, வருகிற குரலும்கூட..!
இலங்கை தேர்தல் முடிவால், கடந்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னால், இந்த இடைப்பட்டக் காலத்தில் என்ன நடந்ததோ... அதுதான் இனியும் நடக்கும்! எந்த மாறுதலும் நடந்துவிட போவதில்லை! கொஞ்சம் "மூச்சு" விட நேரம் கிடைத்திருக்கு!
தமிழக அரசியல் கட்சிகள் (கம்யூனிஸ்ட்களைத் தவிர) தங்களின் நலனுக்கு, இலங்கை தமிழர் நலனை "பணையம்" வைக்காமல் இருந்தால் போதும்! அது தமிழ் தீவிரவாதக் குழுக்களும்தான்! அவர்கள் வாழ்வை அவர்கள் அமைத்துக் கொள்வார்கள்!
இன்று 20.8.15 தற்போது PTTV நேர்பட பேசுவில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது! நன்றி!
குறிப்பு: கொழும்புவில் இருந்து நேரலையில் பேசிய அங்குள்ள பத்திரிக்கையாளர் திரு நில்சன் என்பவர்...
"ஈழம் என்பதை விடுத்து, வடக்கு, கிழக்கு மாகாணச்சபை" என்பதை இங்குள்ளவர்கள் (இந்தியாவில், தமிழகத்தில்) மற்றும் புலம் பெயர்ந்தவர்கள்" வலியுறுத்தினாலே போதும்!" என்றது எவ்வளவு அனுபவ பூர்வமானது; ஆக்கபூர்வமானது!
இதைத்தான் அன்று முதல் (1983 ) சிபிஐஎம் வலியுறுத்தி வருகிறதல்லவா?
----\\
சாதியை அரசியல் களத்திற்கு கடத்தியது பாமக..!
மிகச்சரியான தீர்ப்பு! ஆம்! அரசியல் களங்களாக சமீப காலங்களில் மாறி வருகின்றன.
அதுவும் சாதீயம் (மருத்துவர் ராமதாஸ் சார்ந்த) அமைப்புகள் தலைதூக்கியப்பின்தான் 'அரசியல் களமாகுவது' அதிகமாகிவிட்டது!
சமீபத்தில் சேலம் திருமலைகிரி பெருமாள் கோவில் கும்பாவிஷேசம் நடைபெறாமல் கடந்த அய்ந்தாறு மாதமாக இழுத்துக்கொண்டு, 144 தடைஉத்தரவு நீடித்துக்கொண்டே அனுமான் வால்போல் நீண்டுக்கொண்டே போய் கொண்டிருக்கிறது!
இந்த கோவில் பிரச்சனையை அரசியல் களத்திற்கு கடத்திச் சென்றது சாட்சாத் பாமக.
இதன் ஒருபகுதி தற்போது இன்று 21.8.15 PTTV மக்கள் மேடையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நன்றி!
தோழர் அருணன், "நடராசன் காலம் தொட்டு ஆயிரம் ஆண்டுகளாக தொடருவது கவலையானது! கொடுமையானது!" என்று துவக்கி வைத்தார்.
-----\\\\
கிராமபுற மக்களுக்கு கல்வி எட்டாக்கனியாகிவிடும்!
எட்டாம் வகுப்புக்கு பரிட்சை என்பது நிச்சயமாக கிராமபுற மக்களுக்கு கல்வி எட்டாக்கனியாகிவிடும் என்பதில் இருகருத்துக்கு இடமில்லை!
பாஜக அரசின் பாசிச தன்மை, கல்வியை காவிமயமாக்கும் தன்மையை இதிலிருந்து தெளிவாக காணமுடிகிறது! தற்போதைய உத்தேச மாற்றம் கல்வியை நிச்சயம் காவிமயம் ஆக்கும் என்பது திண்ணம்!
இன்று21.08.15 இதன் ஒருபகுதிPTTV நேர்பட பேசுவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி குறித்து உடன் கருத்து அனுப்பியது...
இன்று நல்ல பயனுள்ள விவாதம்! கல்விதான் கண்! அது கடை சரக்காக்கும் இந்த வியாபாரியிடம் (பெயர் மறந்துவிட்டது) இருந்தது.
ஆதி, பிரின்ஸ் சிறப்பு சேர்த்தனர்! நன்றி!
---\\\
என்னங்க கலைஞர் அவர்களே!
உள்நோக்கம் இருக்கிறதோ, இல்லையோ... திரு ராஜா வருமானத்திற்கு உள்பட்டுத்தான் சொத்து சேர்த்து வைத்துள்ளாரா? லஞ்சம்-ஊழலில் சொத்து சேர்க்கவே இல்லையா? அப்புறம் எதற்கு அமைச்சர் பதவி போனது; ஜெயிலில் அடைக்கப்பட்டது?
தற்போது தேர்தல் காலம் என்பதால் திமுக தரப்பில் "சத்தம்" ஓங்கி ஒலிக்கிறது! எதாவது இதில் ஆதாயம் தேட முடியுமா என்று ஒரு முயற்சி திமுக தரப்பில் தெரிகிறது!
இவர் வருமானத்திற்குள் சொத்து சேர்த்தவர் அல்லர் என்பதை அகிலமே அறியும்! எனவே தேர்தல் காலமோ, சும்மா காலமோ சட்டம் தன் கடமையை செய்ய விடட்டும் திமுக!
அதிமுகவுக்கு ஒரு நியாயம்; திமுகவுக்கு ஒரு நியாயமா?! என்னங்க கலைஞர் அவர்களே!
No comments:
Post a Comment