Tuesday, 25 August 2015

அங்கே காவிபடை..!
இங்கே மஞ்சள்படை..!
,,,,?????,,,,  !!!!! ,,,,, ?????? ,,,, 

காங்கிரஸ்க்கும், பிஜேபிக்கும் மதம் சார்ந்த பிரச்சனையில் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது? நரசிம்மராவ் காலத்திற்கு பிறகு! அவர்தானே பாபர் மசூதியை இடிக்கச் சொல்லி பிரதமராக இருந்து வேடிக்கைப் பார்த்தார்! 

திராவிட கட்சிகள் தமிழகத்தில் சாதி பிரச்சனையில் (தலித் தலித் அல்லாதவர்) ஊசலாடுவதைப்போல் மதம்சார்ந்த பிரச்சனையில் அன்று முதல் இன்றுவரை ஆடிக்கொண்டுதான் இருக்கிறது! என்னா... பிஜேபி மாதிரி ரக்கைக்கட்டிக் கொண்டு ஆடுவதில்லை! அவ்வளவுதான்! 

பிரபல தமிழ் ஊடகங்கள் இந்த வெறியாட்டத்தை பகுரஞ்தள் (ஆர்எஸ்எஸ் ன் குரங்குபடை இது) என்றுகூட சொல்ல தயாராக இல்லையே!  இங்கே ஒரு சேசசமுத்திரம்... கோகுள்ராஜ்... இளவரசன்... அங்கே ஒரு மங்களூரு...! வேறென்ன சொல்ல..? 
====\\\\
பனமரத்துல புல்லு புடுங்கிகிட்டு இருகிறோம்..! 

பனமரத்துல புல்லு புடுங்கிகிட்டு இருகிறோம்..! 

தெரியல..! 

கோகுல்ராஜ் கொலையாளி யுவராஜை புடிக்க சொல்லாதவங்க..! இளவரசன் கொலையைக் கண்டிக்காதவங்க..! எழுத்தாளர் பெருமாள்முருகன கொன்றவங்க..! 

இப்பிடி பட்டவங்க இவங்க..! சேசசமுத்திரம் பிளான் போட்டு கொடுத்தவங்களே இவங்கத்தான்... எல்லாம் மநுதர்ம மர்மந்தான்! வேறென்ன? 

இவர்கள் (ஆர்எஸ்எஸ் ன் குரங்குப்படை, பஜ்ரங்தள்) மங்களூரில் இந்து பெண்ணை முஸ்லீம் பையன் காதலித்ததால், கட்டிப்போட்டு உதைக்கிறார்கள்! அங்கே காவிப்படை! இங்கே மஞ்சள்படை!

இதற்கெல்லாம் சாவுமணி அடிக்கும் காலம் விரைவில் வரத்தான் போகுது!

===\\\
முதல்வரின் மகாராணி தோரணை..!
தற்போது தமிழக சட்டசபை கூச்சல், குழப்பத்திற்கு மூவர் பொறுப்பு! 

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் எம்ஜிஆர்...  ஓய்வு பெற்ற கர்னாடக உயர்நீதி மன்ற நி(நீ)திபதி குமாரசாமி... 

மதுஒழிப்பு போராளி சசிபெருமாள்... ஆகியோரே ஆவர். 

இன்றைய முதல்வரின் மகாராணி தோரணை அதைத்தான் வெளிப்படுத்துகிறது!   

அப்படி இல்லை என்றால், இரங்கல் கூட்டத்தையே இந்திரலோக கூட்டமாக நடத்த அனுமதிப்பாரா? 

இப்படிப்பட்டவரை தமிழக அரசியல் அறிமுகம் செய்த எம்ஜிஆர்... இதற்கு பொறுப்பு இல்லையா? 

ஓட்டை கால்குலேட்டரை வைத்து, விடுதலை செய்த குமாரசாமி பொறுப்பு இல்லையா? 

தமிழக அரசையே தன் இறப்பால், கதி கலங்க வைத்த சசிபெருமாளும் பொறுப்பு! 

அதாவது தான் (முதல் அமைச்சர்) எள்ளளவும் பின்வாங்க விரும்பாத மதுவிலக்கு பிரச்சனையில்... 

இனி..! 

ஏதாவது பின் வாங்க நேர்ந்தால், அதற்கு சசிபெருமாள் சாவும், அதனால் தமிழகம் எழுந்ததும், அதனால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட நோவுமே கூச்சலுக்கும் குழப்பத்திற்கும் காரணம்!

இன்று 25.8.15 PTTV மக்கள் மேடைக்கு..!
,,,,,    ,,,,,,

110 விதியின் கீழ் 1110 அறிவிப்புகள்கூட வரும்! இதில்  ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை! 

எதிர்கட்சிகள் வெளிநடப்புக்கு 110கீழ் விதி உருவாக்கிக் கொடுத்தால், இன்னும் சந்தோசப்படுவார் முதல்வர்! 

பலதடவை சொல்லியாகிவிட்டது..."110 மூலம் 111" மட்டுமே கிடைக்கும் மக்களுக்கு  என்று! அதுதான் நடந்து வருகிறது!  

இன்று 25.8.15 PTTV நேர்பட பேசுக்கு!

No comments:

Post a Comment