தொலைக்காட்சி வரலாற்றில...
தனிமுத்திரை பதித்து வருகிறீர்! வாழ்த்துக்கள்!
PTTV 5ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் ஆனந்தம்! அடியேனின் வாழ்த்துக்கள்! தொலைக்காட்சி வரலாற்றில் தனிமுத்திரை பதித்து வருகிறீர்!
நான் தற்செயலாக 2
நாட்களுக்கு முன் தோழர் ஜென்ராம் அவர்களுக்கு அனுப்பிய குறிப்பு இன்று 5 ஆம் ஆண்டு கொண்டாடும் வேளையில் சற்றே பொருந்தும் வண்ணம் இருக்கிறது அதுவருமாறு:
தோழரே, வணக்கம் !
இன்று 22.08.15 காலை தங்களோடு உரையாட நினைத்தேன். முடியவில்லை. கொஞ்சம் காலமாக தங்களை காணமுடியவில்லை. நலமா இருக்கிறீர்களா? நலம் அறிய விழைகிறேன். மீண்டும் தங்களை சின்னத்திரையில், வண்ணவண்ண வலுவான, மிக ஆழமான, நேர்த்தியான நேர்கனலை காண ஆவலாக இருக்கிறேன். அது நடக்குமா? தெரியவில்லை!
அடுத்து, தாங்கள் அருமையான வாரிகளை அல்லது திறமைச்சாலிகளை அடையாளம் காட்டியிருக்கிறீர்! சம்பளத்திற்காக அவர்கள் பணியிருந்தாலும்... தமிழ் தொலைக்காட்சி களை இடதுசாரி பாதையில் சற்றே நகர்த்திய பெருமை தங்களுக்கும், புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கும் வரலாற்றில் என்றென்றும் இருக்கும்.
தற்போது வரும் நெறியாளர்கள் குணா, செம்மல், கார்த்திகேயன், வேங்கடபிகாஷ், சண்முகசுந்தரம் (இவர்கள் திரையில் இருப்வர்கள்) உள்ளிட்டு திரையின் உள் இருப்போர் என பட்டியல் நீளக்கூடும்! அனைத்து தளங்களிலும் டிவியின் பங்களிப்பு அருமை! அபாரம்! காலையிலே கார்த்திகேயனின் "கீர்த்தி" டாப்! நன்றாக வருவார்! தாங்கள்கூட சில நேரங்களில் வேகப்பட்டு விடுவீர்! ஆனால் கார்த்தி மிக நேர்த்தி!
நான் மேலே குறிப்பிட்டுள்ளவர்கள் ஒவ்வொருவரும் ஒரே மொழிநடையில் ஒளிரும் மினிமினிகள்! என்னா....சில அதிமுக, திமுக, காங்கிரஸ் கார்கள் போடும் காட்டுக்கூச்சல்... காதை அடைத்தால் பரவாயில்லை; டிவியை அடைக்க வைத்துவிடுகிறது!
எது எப்படியோ மகிழ்ச்சி; நன்றி! மீண்டும் தங்கள் உடல் நலம் அறிய விரும்பும் ஒரு அன்பன்... தாரைபிதா என்கிற பி.தங்கவேலு., சேலம்.
[8/22/2015, 18:37] Janram: உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. விடுப்பில் இருக்கிறேன். உடல்நலம் தேறி வருகிறது.
[8/22/2015, 18:52] +91 94865 96641: மகிழ்ச்சி ..!
===\
150ஐ தாண்டி...
1500ஐ தாண்டி...
15,000ஐ தாண்டி...
தாண்டித் தாண்டி...
உழைப்பாளி மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் சேவையை இன்று போல் என்றும் செய்திட மனமார்ந்த வாழ்த்து!
இன்று 24.8.15 PTTV மக்கள் மேடையில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
===\\\
அப்படி நடக்க வேண்டுமென்றால் குதிரைக்குக் கொம்பு முளைக்க வேண்டும்!
110 ம் 111 ம் (பட்டை நாமம் மக்களுக்கு) இரண்டும் உறுதியாக நடக்கும்! வேறு அதிசயம் ஒன்றும் நடக்காது!
அப்படி நடந்தால் (மதுவிலக்கு அமல்; 110 பயன்படுத்தாமை) ஆனந்தமே!
இன்று 24.8.15 PTTV நேர்பட பேசுவில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது;
சிபிஐஎம் சார்பில் தோழர் கே.தங்கவேல் எம்எல்ஏ விவாதத்தில்...
ஆனால் செகு.தமிழரசன் ஆக்கிரமிப்பில் தான் போய்கொண்டிருக்கிறது; அதிமுக ஜால்ரா சத்தமே அதிகம்!
===\\
தெரியாது ..!
?????!!!!!!????
கட்சிதான் முடிவு செய்யும்... எங்கிட்ட வார்த்தைய புடுங்க பாக்கிறீங்க...
சரிங்க... மதுவிலக்கு பற்றி...
மது ஆகாதுங்க... ஒழிக்கணுக்கும்... அது எங்க கொள்கைங்க...!
மதுவ அமலாக்கும் அதிமுகவோடு கூட்டணி வப்பீங்களா..?
தெரியாது ..! கட்சிதான் முடிவு செய்யும்..!
எப்ப..?
ஜனவரியில..!
தேர்தல் டிசம்பர்ல வந்தா..?
நவம்பர்ல..!
இந்த தேர்தல எந்த கட்சிய எதிர்ப்பீங்க..?
பிஜேபி மதவாத கட்சி..? மதவாதம் எதிர்ப்பு எங்க கொள்கை..!
அப்பிடீன்னா... பிஜேபிய தேர்தல எதுப்பீங்களா..?
தெரியாது..! கட்சிதான் முடிவு பண்ணனும்..! எங்களுக்கு எல்லாரும் வேணும்..! எல்லா கட்சியும் வேணும்..!
இந்த நேர்காணல் யாரு? எங்கே? என்பது புரிகிறதா?
நேற்று 22.08.15 PTTV...
'அக்னி பரிட்சை' யில் தமாக துணைத்தலைவர் ஞானசேகரன் அவர்கள் கூறியது...
நெறியாளர் வேங்கடபிரகாஷ் அசந்தது போன மாதிரி...
நான் மட்டும் அல்ல, இதை பார்த்த அத்தனை பேர்களும் அசந்துப்போய் இருப்பார்கள் என்றே நினைக்கிறேன் !
இப்படி... ஏராளம் 'தெரியாதுகள்!'...
ஏராளம் 'கட்சி முடிவு செய்யும்ங்கள்'...
எல்லா கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளது...!
தாமக..!
===\\\
No comments:
Post a Comment