நல்ல தலைப்பு! அர்த்தமுள்ள விவாதம்!
நல்ல தலைப்பு! அர்த்தமுள்ள விவாதம்!
அதிமுக, திமுக வுக்கு மாற்று அணியாக கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மனித நேய மக்கள் கட்சி உருவாக்கி உள்ள "மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம்" உறுதியாக பரிணமிக்கும்!
இது காலத்தின் தேவையும், கட்டாயமும் ஆகும்! நிச்சயம் தமிழக மக்கள் ஆதரிப்பார்கள்!
மற்ற மற்ற ஜனநாயக மதசார்பற்ற சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் குரல் கொடுக்கும் கட்சிகளும், அமைப்புகளும், சிறு சிறு குழுக்களும், இது சார்ந்த அறிவார்ந்த பெருமக்களும் இதற்குள் இடம் பெற வேண்டும்!
மக்கள் எப்பொழுதும் மாற்றத்தை விரும்பக்கூடியவர்களே!
இதற்கு புதிய தலைமுறை போன்ற காட்சி மற்றும் அச்சு ஊடகங்களும் ஆதரித்திடல் அவசியமே!
இன்று 28.8.15 PTTV நேர்படபேசுவில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நன்றி.
===\\\\
இட ஒதுக்கீடு அவசியம்!
எல்லாருக்கும் (எல்லா ஜாதிக்கும்) எல்லா தேவைகளும் பூர்த்திச் செய்யப்படுவது உறுதிப்படுத்தப்படும் வரை (சட்டரீதியாக) ... இட ஒதுக்கீடு அவசியம்!
குறிப்பாக அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டைகளாக கிடக்கும் பழங்குடி மற்றும் தாழ்ப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு (ஜாதிக்கு) இட ஒதுக்கீடு என்பது அவசியம் தேவையே!
இதற்கு எதிரான போராட்டத்தை ஒருபோதும் ஏற்க இயலாது!
இந்த ஜாதி அடித்தளத்திற்கு ஆதாரமாக இருக்கும் ...
"இந்துத்வா" தகர்க்கப்படும் நாளும், பொருளாதார சுரண்டல் ஒழிக்கப்படும் நாளும் "ஒரு புள்ளி"யில் இணைந்து, வெடிக்கும் சமூக புரட்சியே (மக்கள் ஜனநாயக புரட்சியே) இதற்கான நிரந்தரத்தீர்வு!
இன்று 27.8.15 PTTV மக்கள் மேடைக்கு..!
====\\\\
சிரிப்பதா? சீறிப்பாய்வதா?
குமாரசாமி தீர்ப்புக்கு பிறகு தமிழக மக்கள் நீதிமன்றத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.
காங்கிரஸ் அலுவலகத்தில் எப்பவோ நடந்த ஒன்றுக்கு, இப்பொழுது கொடுத்த ஒரு புகார்மீது இவ்வளவு வேகத்தில் நீதிமன்றம் செயல்படுவது குறித்து சிரிப்பதா? சீறிப்பாய்வதா? என்று தெரியவில்லை!
ஆனால் ஒன்று தெரிகிறது இதில் ஆளும் கட்சியின் "கை" 'கை' கட்சிக்கு எதிராக இருப்பது! எல்லாம் அரசியல் மயம்!
நான் அடிப்போல் அடிக்கிறேன் நீ அழுவதுபோல் அழு என்கிற மாதிரிதான் அம்மா உத்தரவு இருக்கிறது!
இதை சட்டசபை கூட்டத்தொடர் முடியும்வரை அதிமுக தலைமைவிடாது; ஊதிக் கொண்டேதான் இருக்கும்! காங்கிரஸ்க்கும் தினம், தினம் மீடியா கவரேஜ் கிடைத்துக்கொண்டே இருக்கும் அல்லவா?
அகிலமே போற்றிடும் வகையில், இடதுசாரிகள் உள்ளிட்டு தேசபக்த சக்திகள் செப்டம்பர் 02ல் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதச் செயல்பாட்டை மாற்றிக்கொண்டு, 15 கோரிக்கைகள் அமலாக்கக் கோரும் அகில இந்திய வேலைநிறுத்தம்...
சுமார் 20 கோடி தொழிலாளர்கள் பங்கேற்கும் உழைக்கும் மக்கள் போராட்டம்...
அதன் வீச்சு மக்களை சென்றடையக் கூடாது என்பதில், ஆளும் வர்க்கம் தமிழகத்தில் கையாளும் சூழ்ச்சியின் ஒரு சூது தான், இந்த உப்பு, சப்பற்ற அதிமுக காங்கிரஸ் நடத்தும் இந்த கூத்து!
இன்று 27.8.15 PTTV நேர்படபேசுக்கு..!
No comments:
Post a Comment