ஈஸ்வரனார் (ஜாதி)மது போதை'!
இன்று 10.8.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் தோழர் அருணன், கொமக ஈஸ்வரன், நெறியாளர் கார்த்திகேயன்...!
ஜாதிய ஒடுக்குமுறை குறித்து பேசும் போது ஈஸ்வரனின் பேசு விசித்திரமாக இருந்தது!
அதாவது கிராமத்தில் சொல்வார்கள்... "அவருக்கு கவுடு, சூது தவிர கெட்ட எண்ணம் எதுவும் கிடையாது " என்று!
"ஜாதிவிட்டு ஜாதி மாறிடுன்னா பிரச்சாரம் செய்கிறோம் மதம் மாற கோருவதைப்போல" என்கிறார் !
ஏன் அப்படி கூட பிரச்சாரம் செய்யலாமே... நல்லாத்தானே இருக்குது! "தலித்துகள் எல்லாம் தலித் அல்லாத ஜாதியில் சேருங்கள்; நாம் எல்லாம் ஒன்றாக இருக்கலாம்; கொடுக்கலாம் ; எடுக்கலாம்; இல்லாமையை, ஏற்றத்தாழ்வை போக்கலாம்! " என்று பிரச்சாரம் செய்யலாமே!
தாழ்ந்த ஜாதி, உயர்ந்த ஜாதி என்று சொல்லவதே அவர் காதில் ஈட்டியாக பாய்கிறதாம்! அதை வன்மையாக கண்டிக்கிறாராம்!
அடே அப்பா..!
அதற்கு அருணன் சொன்னார், "தாழ்த்தப்பட்ட"ஜாதியின்னுத்தான் சொன்னேன் என்றார்; ஈஸ்வரன் வாயே திறக்க வில்லை!
ஜாதி ஒழிப்பைத்தான்ய்யா காதல் செய்யுது; அதனாலத்தானய்யா அத எதுக்கிறீங்க! ஜாதிவிட்டு ஜாதி கலந்து சமத்துவத்தைத்தானய்யா அது வித்தைக்கிது!
ஈஸ்வரனார் எவ்வளவு விஷத்தை கழுத்தில் வைத்துக்கொண்டு பேசுகிறார் என்பதற்கு...
அமித்ஷாவின் 'தேசபக்த பணி' (மதுரையில் ஜாதிமாநாட்டில் கலந்ததைப்)யைப் பாராட்டியதில் இருந்தே... 'இவருண்ட (ஜாதி)மது போதை'யின் அளவு வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிட்டது!
------\
அராஜகமாக இருக்கிறது!
போராட்டத்தை அரசு எதிர்கொள்ளும் விதம் கேவலமாக, அராஜகமாக இருக்கிறது!
உதாரணமாக இன்று 10.8.15 இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவை "மது இல்லாத தமிழகம்" என்ற கோரிக்கையை வைத்து, 24 மணிநேரம் உண்ணாநிலை போராட்டம் அறிவித்து இருந்தனர்!
9.8.15 இரவு அலுவலகச் சுவற்றில் அனுமதியில்லை என துண்டு அறிக்கை ஒட்டிவிட்டு சென்று விட்டனர்.
10ந்தேதி உண்ணாநிலை போராட்டத்திற்கு சென்றால் அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்துவிட்டனர்! இதுதான் போராட்டத்தை அதிமுக அரசு எதிர்கொள்ளும் லட்சனம்!
போராட்டக்காரர்கள் கோரிக்கையை பரிசீலிக்காமல்,
அல்லது ஜனநாயக ரீதியாகநடக்கும் அறவழி போராட்டத்தை க்கூட அனுமதிக்காமல் அராஜகம் செய்வதையே தன் முழுநேர பணியாக கொண்டுள்ளது தமிழகஅரசு!
10.8.15 இதன் ஒருபகுதி PTTV நேர்பட பேசுவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நன்றி!
----\
இரண்டின் கொள்கைகளுமே வளர்ச்சிக்கு தடை!
பாரதிய ஜனதா குற்றச்சாட்டு உண்மையற்றது! வளர்ச்சிக்கு தடையாக இருப்பது இந்துத்துவா ஆதரவு மற்றும் ஜாதிய வாத சக்திகள்!
அது மட்டுமல்ல, பிஜபியின் பன்னாட்டு முதலாளிகள் குறிப்பாக 'கார்பரேட்' ஆதரவு கொள்கைகளும், உலகமய கொள்கைகளுமே! காங்கிரஸ் இதையேதான் அவர்களின் ஆட்சிபோது செய்தார்கள்!
ஆகவே பாஜக, காங்கிரஸ் இரண்டின் கொள்கைகளுமே வளர்ச்சிக்கு தடையே!
----\
கம்யூனிசம் விஷம் அல்ல; விஷமுறிவு!
ஆர்எஸ்எஸ் சின் இந்துமதமும், இந்துத்துவாவும், பாசிசமும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதா?
எதற்கு முராரி ராகம் முரளிஅவர்களே? வெளிநாட்டு இறக்குமதியை கம்யூனிஸ்ட்கள் எப்போது எதிர்த்தார்கள்? ஏன் எதிர்க்கிறார்கள்?
இந்தியாவின் ஆன்மாவை அழிக்கும் உலகமயத்தையே எதிர்க்கிறார்கள்!
இந்தியாவின் ஆன்மாவை அழிக்காமல், இந்தியா வாழ வழி வகுத்துக கொடுத்த சோசலிச சோவியத் யூனியனும், இன்று இந்தியாவை கபளீகரம் செய்யும் அமெரிக்க உள்ளிட்டு கார்ப்பரேட் ஏகாதிபதியமும் ஒன்றா?
கம்யூனிசம் விஷம் அல்ல; பாசிசம், ஏகாதிபத்தியம், கார்பரேட் என்கிற விஷங்களில் இருந்து பாதுக்காக்கும் விஷமுறிவு!
முகநூலில் முரளி என்பவர், கம்யூனிசம் விஷம் என பாடிய முராரி ராகத்திற்கு ஒரு மிக எளிய பதிவு; பதில் அல்ல!
பதிலை நீங்களும் பதியலாம்!
No comments:
Post a Comment