செல்போன் டவர்மீது ஏறி,
போராடுவதுதான் காந்தீயமா?
மத்திய மாநில அரசுகள் முடிந்தால் ஒரு இரங்கல் செய்தியை "பிரஸ் ரிலீஸ்" செய்துவிட்டு, ப்ரெஷ்சா சரக்கு வாங்கி விற்க போகிறது!
தமிழக அரசுக்கு தற்போதைய டாஸமாக் மது "பொன் முட்டையிடும் வாத்து!" அதை அவ்வளவு சீக்கிரத்தில் "அறுக்காது!"
ஆனால் இன்னும் பல பல ஆயிரம் தாய்மார்களின் "தாலியைத்தான் அறுக்கும்!" இன்றைய மத்திய அரசுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையே கிடையாது!
அதையும் மீறி எதாவது நிர்ப்பந்தம் செய்தால், "காதல் தோல்வியால்... ஆண்மை குறைவால் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை" செய்து கொண்டார் சசிபெருமாள் என்று மத்திய அமைச்சரின் அறிக்கை சுடச்சுட வரும்! அவ்வளவுதான்!
குடிப்பவர்களாகப் பார்த்து குடியை விட்டு விட்டால்தான் உண்டு!
வேறென்ன சொல்ல..?!
===
குடித்தவர்... குடிப்பவர்... சாகட்டும்..!மது குடிக்காதவர் ஏன் சாகணும்..????
இதனால் குடிப்போர் குடிப்பதை நிறுத்துவார்களா?
குடிமக்கள் சார்ந்த இந்த வினாவுக்கு விடை என்ன?
செல்போன் டவர்மீது ஏறி, போராடுவதுதான் காந்தீயமா?
இது மாதிரியான போராட்ட வடிவங்கள் சரியா? தேவையா?
அரசுகள் குடிமக்களை குடிகாரர்கள் ஆக்கும்
அதன் கொள்கைகளில், நடைமுறைகளில் மாற்றம் மிகமிக அவசியம்!
அது வேறு! அதற்காக இப்படியா..?!
========================================================================
'ராமர்'ராஜ்யத்தில் வேறு
எதை எதிர்ப்பார்க்க முடியும்!?
விவசாயிகளின் தற்கொலைக்கு விவசாயிகள்தான் காரணம் என்று ஒரு வாதத்திற்காக வைத்து கொண்டாலும், அரசும், அரசாங்கமும் எதற்கு? விவசாயிகளின் பிணத்தைப் புதைப்பதற்கா?
இல்லையென்றால் விவசாயி தற்கொலைக்கு காதல் தோல்வி என்றும், ஆண்மை குறைவால் அவமானம் தாங்காமலும் தற்கொலை செய்து கொண்டனர் (பெண்கள் பெண்மை குறைவாக இருக்குமோ) என்று கூறிவிட்டு, அந்த அமைச்சரும் இன்னும் அமைச்சராக இருப்பாரா? பிரதமரும் அதை இன்றுவரை ரசித்துக்கொண்டுதானே இருக்கிறார்!
உலகத்தில் வேறெந்த நாட்டிலாவது இப்படிப்பட்ட அமைச்சர்கள் நடமாட முடியுமா? இதுதான் இன்றைய கார்பரேட் இந்தியா?
காந்தி கண்ட ராமராஜ்யம் போய் சவர்கார் கண்ட 'ராமர்'ராஜ்யத்தில் வேறு எதை எதிர்ப்பார்க்க முடியும்!?
நாளை 02.08.15 காலை 10.30 மற்றும் இரவு 09 மணிக்கு புதிய தலைமுறை டிவி யில் வரும் "உரக்கச் சொல்லுங்கள்" நிகழ்ச்சி தலைப்பிற்கு..!
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் பெ.சண்முகம் இதில் நடுவர்களில் ஒருவராக பங்கேற்கிறார்!
========================================================================
ஒன்னுமே புரியல உச்சநீதி மன்றத்திலே..!
என்னமோ நடக்குது..!
மர்மமாக இருக்குது..!
ஒன்னுமே புரியல உச்சநீதி மன்றத்திலே..!
உச்சநீதி மன்ற பதிவாளர் ராஜினாமா ஏன்..?
யாக்கூப் மேனன் தூக்கில் மர்மம்..!
ராஜிவ் கொலை வழக்கில் சிபிஐ தியாகராசன் போல் விரைவில் வெடிக்க இருக்கும் சங்கதிகள்..! (தினமணி 02.08.2015)
No comments:
Post a Comment