நானும் நீயும் ஒன்னு
யே பாய்..!
உன்ன மாதிரி பணக்காரப் பாய்ங்க எங்க ஊருல வந்து பணத்த கொட்டு
அந்த பணத்துல 'மதம்கிதம்' எல்லாம் கெடையாது; தெரியுதா? 'இதம்' தான்!
ஆனா பரதேசி பாய்ங்களத்தா எங்க ஊருல கூண்டோடு கொளுத்துவோம்!
நீ தைரியமா வாய்யா... வா..! அட பயந்துக்காத வா..! சொன்னா கேளு..!
நானும் நீயும் ஒன்னு; ஜனங்க வாய்ல மண்ணு..! சரியா? பாய்ய்ய்ய்ய்...!
===\
எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்லக்கொள்ளி
எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்லக்கொள்ளி என்றால் என்ன சொல்வது?
ரணில் வெற்றி பெற்றாலும், பட்சே வெற்றி பெற்றாலும் இலங்கை தமிழர் இன்னல் ஒன்றும் தீரப்போவதில்லை!
இனவெறி, மதவெறிக்கு முற்றுப்புள்ளி வைத்து, அனைத்து மக்களுக்கும் சமமான உரிமை, வாழ்க்கை உறுதிபடுத்த வேண்டுமானால் ...
அதற்கு தீர்வு அனைத்து மக்களும் ஒருங்கிணைந்து "இடதுசாரி" பாதையே தீர்வாக அமையும்!
அதுதான் இலங்கைக்கும் பொருந்தும்!
இத்தேர்தல் கண்துடைப்பே!
தற்போது இன்று 17.08.15 PTTV நேர்பட பேசுவில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. நன்றி!
====\
அரசியல் ஆதாயமுமே
இன்று நேற்றல்ல; அன்றும் சரி; இன்றும் சரி; தமிழகத்தில் தொடரும் கலவரத்திற்கு...
குறிப்பாக தலித் மக்களுக்கு சரிநிகர் உரிமை வழங்காததற்கும், கலவரத்திற்கும் பிரதான காரணம் பாமகவின் சாதீய அரசியலும், தலித் மக்களுக்கு எதிரான அதன் நிலைபாடுகளும்தான்!
அதோடு அதனால் அதுக்கு கிடைத்த அரசியல் ஆதாயமுமே அது சாதி கலவரத்தை தூண்டிடக் காரணம்!
இதன் பரவல்தான் கொங்கு மண்டலத்திலும் விரவிகிடக்கிறது கோகுல்ராஜ் தண்டவாள கொலைகளாக!
இன்று 17.8.15 PTTV மக்கள் மேடைக்கு..!
===\
கடைகோடி மனிதனும் உயர்கல்வி பெறுவான்!
அன்று ஒரு அலகாபாத் (இந்திராவிற்கு எதிரான தீர்ப்பு) இன்று ஒரு அலகாபாத் தீர்ப்பு!
வரலாற்றில் இடம் பிடித்து விட்டது! மிக சரியான துல்லியமான தீர்ப்பு!
அரசு ஊழியர் ஆசிரியர் இவர்களோடு அரசியல் வாதி (எல்லா கட்சிகளும்தான்) தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் படிக்க வைத்தால், தானாக அரசு கல்வி நிறுவனங்களின் தரம் உயரும் !
தனியார் கல்வி கொள்ளை ஒழியும்! கடைகோடி மனிதனும் உயர்கல்வி பெறுவான்! நாடும் உயரும்!
இன்று 19.8.15 PTTV மக்கள் மேடைக்கு!
===\
மேடையில் அரசு ஊழியர் தரப்பில்... வாதிட்டவர், "அரசு ஊழியர்கள், சந்தர்ப்ப சூழ்நிலையால், தனியாரில் படிக்க வைக்கிறார்கள்; அதுவும் சிலர்! (ஆசிரியர்கள் உட்பட); அவர்கள் கடுமையாக கஷ்டப்படுகிறார்கள்; அவர்களை பாராட்டுங்கள்!" என்றார்.
கேள்வியை நேராக சந்திக்காமல், சுற்றிச்சுற்றி வந்து நழுவிவிட்டார் என்றே தோன்றுகிறது!
"விதை நெல்லைச் சாப்பிடும் பணியை செய்து வருகிறார்கள்" என்பதை என்று புரிந்துக் கொள்வார்களோ தெரியவில்லை! தோழர் தமிழ்ச்செல்வியின் வாதம் வருத்தத்தையே எனக்கு தந்தது!
==\
தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவு!
தேர்தலுக்கான ஒத்திகையோ இல்லையோ தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவு!
இதனால் ஒன்றும் தேர்தலில் பலாபலன் மாறிவிடப்போவதில்லை! அவரவர் எல்லையை அவரவர் மீறாமல் கண்ணியம் காக்கக் வேண்டும்! ஆளும் கட்சியான அதிமுகவுக்கு இதில் கூடுதல் பொறுப்பு இருக்கிறது!
"நாங்கள் (பிரதமர், முதல்வர்) அரசியல் நிலவரம் குறித்தோ, தமிழக அரசின் திட்டங்களுக்கு உதவி கேட்டோ, வரும் தேர்தலில் பிஜேபியோடு கூட்டணி வைத்தோ, வைக்காமலோ அல்லது தனித்தோ போட்டியிடுவோம்!" என்று அதிமுக தரப்பில் ஒரு அறிக்கை விட்டுவிட்டு பெருந்தன்மையாக போய் இருக்கலாம்!
வெண்னை திரண்டு வரும் நேரத்தில் பானையை உடைத்த கதையாக காங்கிரஸ் காரியத்தைக் கெடுத்துவிட்டது என்றே தோன்றுகிறது!
அதிமுக விரித்த வலையில் ஈவிகேஎஸ் விழுந்துவிட்டாரோ என நினைக்கும் அளவுக்கு அடுத்தடுத்து நடக்கும் நிகழ்ச்சி போக்குகள் உணர்த்துகிறது!
ஆம்! மது ஒழிப்பு இயக்கம் வலுவிழந்து போய்விட்டது! இது அதிமுக வுக்குக் கிடைத்த "லட்டு கண்ணா... லட்டு!"
இன்று 19.8.15 PTTV நேர்பட பேசுவில் இதன் ஒரு பகுதி தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது!
===\
வணக்கம்
இன்று 19.8.15 PTTV நேர்படபேசு விவாதத்தை நாகரிகமாக கொண்டு போக நினைத்த தாங்கள் (குணா-நெறியாளர் ) பரிதாபமாக தோற்று போனீர்!
இதை மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்!
திரு.வேலுசாமி எதுக்குத்தான் இத்தனை கூச்சலோ தெரிவில்லை; அப்படித்தான் திரு மனுஷ் ம்! நிதானம் நித்தியானந்தனிடமும் இல்லை; காசிநாதப்பாரதியிடமும் இல்லை; மொத்தத்தில் நிகழ்ச்சி இப்படியே போனால்... இழப்பு எல்லோருக்கும்தான்!
உணர்வார்களாக? இவர்கள்! பொன்னான நேரம் புண்ணாகுகிறது!
==\
No comments:
Post a Comment