Friday, 31 July 2015

திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக அல்லாத..!

திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக அல்லாத புது அரசு வேண்டும். அந்த அரசு மார்க்சீய-அம்பேத்கரிய- பெரியாரிய கொள்கைகளைக் கொண்டதாக, மக்கள் ஒற்றுமையை விரும்புகிற அரசாக இருத்தல் வேண்டும்! ஜாதியத்தையும், தீண்டாமையையும், ஊழலையையும், மதவெறியையும்



வேறருக்கக்கூடிய அரசாக அது இருக்கவேண்டும்!
-------------------------------------------------------------------------------

அக்னிக்குஞ்சு ஒன்று..!
அக்னிக்குஞ்சு ஒன்று தமிழ் நெஞ்சங்களில் இருந்து மட்டுமல்ல... 

உலக மாந்தர்களின் நெஞ்சுகளில் இருந்தும் பிரியாவிடை பெற்றுக் கொண்டது! ஆழ்ந்த இரங்கலும்..! உறவுகளுக்கு ஆறுதலும்..!
------------------------------------------------------------------------

கலாம்... கொலை..!
இதிலே இன்னொருவிதமான ஆபத்தான செய்தி இருக்கிறது! மீண்டும் அப்பழுக்கற்றவர், முழுக்க, உழைப்பாளி மக்களுக்கு மட்டுமே போராடக்கூடியவர் என்று பூதக்கண்ணாடி போட்டு தேடுவதில் ஆக போகவதில்லை! 

பூனைக்கு பயந்து புலியிடம் சிக்கிவிடக்கூடாது! தற்போதைய இந்திய சூழலில் தனியொரு மனிதர் வர்க்க புரட்சி செய்துவிட முடியாது! கலாம் இடம் கற்றுக்கொள்ள எதுவுமில்லை என்று ஒதுக்கி தள்ளுவது ஒருதலைபட்சமே!

அப்துல் கனவுகளில் ஒன்று "தூக்கு" கூடாதென்று! இன்றைக்கு மத்திய அரசு அவரின் மறைவுக்கு 'ஓடி ஓடி' அஞ்சலி செலுத்துகிறது!

அவரின் நிறைவேறாக் கனவை நிறைவேற்றுவதே "இறந்தவருக்கு" செய்யும் ஆத்மார்த்தமான அஞ்சலியாக இருக்க முடியும்!

ஆனால் நேற்று


யாக்கூப் மேனனை தூக்கில் போடவேண்டும் என்று மோடி அரசு உச்சநீதி மன்றத்தில் வலுவாக வாதாடி, இந்த நேரம் அனேகமாக யாக்கூப் தூக்கிடப்பட்டு இருக்கலாம்!


தூக்கு வேண்டாமென்று கனவு கண்டவரின் உடலுக்கு மரியாதை செலுத்துவதில் தூள் பறக்கிறது ஒருபக்கம்! இன்னொரு பக்கம் அதே சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த ஒருவருக்கு தூக்கு! 

இதென்ன முரண்பாடு என்கிறீர்களா? அதுதான் ஆர்எஸ்எஸ்ம், பாஜகவும், நிறுவ நினைக்கிற "இந்துத்துவ பாசிசம்! "

பாசிசம் என்பது மத நல்லிணக்கத்திற்கும், மக்கள் ஒற்றுமைக்கும் வைக்கும் வேட்டு! மத மோதல்களை, ஜாதி மோதல்களை உருவாக்கி, தொழிலாளி வர்க்க புரட்சியை மழுங்கடிப்பது; பாசிசத்தின் பல கூறுகளில் இதுவும் ஒன்று!

ஆஹா ஓகோ என அஞ்சலி ஆராதனையோடு, சத்தமில்லாமல் தூக்கில் போடுவது வேதனையின் வேதனை; கொடுமையிலும் கொடுமை! இதை என்னவென்று சொல்வது? 

ஓ..! இதை எல்லாம் மனதில் கொண்டுதான் நம் நாடு எமர்ஜென்சி நோக்கி செல்கிறது என்றாரோ அத்வானிஜி! பாம்பின் கால் பாம்புதான் அறியும் என்பது இதுதானோ?  

கலாமுக்கு செலுத்தும் இதய அஞ்சலியா இது? மோடி அவதாரத்தில் எத்தனை எத்தனை வஞ்சகங்கள் பார்த்தீர்களா?
---------------------------------------------------------------------------------------------------------
"இடதுசாரிகள்" பாதையே!

யாகூப் க்கு தந்த மரண தண்டனையை ஆதரிப்பது மனிதாபிமான மற்றது! எய்தவனிருக்க அம்பை நோவதேன் என்பதுபோல், யாக்கூப்புக்களை உருவாக்கு இந்த சமுதாய அமைப்பைத் தூக்கில் போடுவதே இன்றைய தேவை! அதற்கான பாதை "இடதுசாரிகள்" பாதையே!

இதன் ஒருபகுதி இன்று 30.07.15 PTTV நேர்பட பேசுவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------
"அரைப்பாசிசம்" 
இன்று 31.07.15 PTTV புதுப்புது அர்த்தங்களில் பத்திரிக்கையாளர்கள் அய்யநாதன், வெங்கடேஷ்... இவர்களுடன் நெறியாளர் கார்த்திகேயன்...
சாந்தமான நெறியாளுக்கைக்கு சொந்தக்காரர் கார்த்திகேயன் போலும்..!
நன்று!

இறுதியாக விவாதிக்கப்பட்டது... யாக்கூப் தூக்குப் பற்றி... வெங்கடேஷ் சொன்னார்... அப்படியே அப்பாவிபோல்... 1993ல் நடந்த குண்டு வெடிப்பு அதில் ஏற்பட்ட உயிரிழப்பு எல்லாம் நாடு மறந்துவிட்டது; அதுதான் "அரைச்சிக்கல்" என்றார்.

அது என்னய்யா பெருமகனாரே அரைச்சிக்கல்... அப்புறம் முழுச்சிக்கல்? உமது பாணியில் சொன்னால்... இதற்கு யார்? எது? காரணம்..? அந்த "சிக்கலின் சீமான்" யார்? அத்துவானியும், ஆர்எஸ்எஸ் கும்பலும் அல்லவா? 

அன்று பாபர் மசூதியை இடித்தது, ராமருக்கு கோவில் கட்டவா? ஒரு சுக்கும் கிடையாது; ஆர்எஸ்எஸ் இந்த நாட்டை ஆள வேண்டும்; அதற்கு சிறுபான்மை மக்களுக்கு எதிராக பெரும்பான்மை மக்களை திருப்பி விட வேண்டும்! இதுதான் பாசிச இட்லரின் தத்துவம்; அதன் இந்திய வாரிகள்தான் பாஜகவும், ஆர்எஸ்எஸ்ம்!

அந்த சூழ்ச்சியின் வெற்றி தான் வெங்கடேஷ் சொல்லும் 'அரைச்சிக்கல்'. இதை சரியாக எடுத்து 'உடைத்து' வைத்தார் அய்யநான்; ஆனால் வெங்கடேஷ் வாய் யை இதற்கு திறக்கவே இல்லை! காரணம் அவர் வாயில் பாஜக "கொளுக்கட்டை!"

நேற்று இந்த இந்துத்வாவாதிகளின் ஹாலிவுட் சூப்பர் நடிப்பை பார்த்ததே நாடு! ஒருபக்கம் கலாமுக்கு கலோபர அஞ்சலி! இன்னொரு பக்கம் கலாமின் கனவுக்கு தூக்கு! என்ன கொடுமை இது?  

இத்தனை ஆண்டு கெடந்தது... அப்டி என்ன அதிகாலை விசாரணை... வெங்காயம்... தீர்ப்பு... தூக்கு... அதுவும் பிறந்த நாளில்... நாடு இனி கலாமை நினைவு கூறும் போது... யாக்கூப்பையும் நினைவுகூறும்..! இதன் மூலம் ஆர்எஸ்எஸ் கூற விரும்பும் குறியீடு என்னவேன்று புரிகிறதா? இதுதான் வெங்கடேஷ் அவர்களே "அரைப்பாசிசம்" என்பது! 

ஆட்சியில் இருப்பதால் எவ்வளவு விரைவாக தங்களது பாசிச நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிக்  கொள்ள முடிகிறது பார்த்தீர்களா? ஜனநாயக சக்திகள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த இரு நிகழ்வே சாட்சி அல்லவா?

No comments:

Post a Comment