காமராஜர் பெருமை இப்போது எடுபடாது!
இன்று15.7.15 PTTV மக்கள் மேடைக்கு..! காமராஜை காங்கிரஸ் சொந்தம்
கொண்டாடுவதில் அர்த்தம் இருக்கிறது! பாஜக ஒருவேளை தற்போதைய மாநில தலைவரின் சமூகத்தை சார்ந்தவர் என்பதால் சொந்தம் கொண்டாடுவார்களோ?
பாஜக எதை தின்றால் பித்தம் தெளியும் (ஆட்சியை பிடிக்க முடியும்) என்று அலைந்துக் கொண்டிருப்பது மட்டும் நன்றாக தெரிகிறது! ஆனால் அது நடக்க போவதில்லை! காமராஜர் பெருமையை இப்போது பாடுவது எடுபடாது!
மதிய உணவு திட்டமும், எளிமையும், அவரின் இதர சிறப்பு அம்சங்களும் இன்றைய இளைஞர்களை கவரும் சூழலில் தமிழகம் தற்போது இல்லையே!
மக்கள் நலன் ஒன்றும் கிடையாது!
இன்று 15.7.15 PTTV நேர்பட பேசுவில் ஒருபகுதி பதிவேற்றம்
செய்யப்பட்டுள்ளது! நன்றி!
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அதிமுக ஆதரிப்பதிலும், எதிர்ப்பதிலும் மக்கள் நலன் எல்லாம் ஒன்றும் கிடையாது. எல்லாம் தன் நலன் சார்ந்தே அதன் நிலைபாடு இருக்கும்!
ஒருவேளை கர்னாடக காங்கிரஸ் "அப்பீல்" செய்திருப்பதனால், காங்கிரஸை 'தாஜா' செய்வதற்காக கூட, தற்போது "எதிர்ப்பு" அவதாரம் எடுத்துள்ளது என்றே தோன்றுகிறது! மற்றபடி மக்கள் நலனும் கிடையாது; மண்ணாங்கட்டியும் கிடையாது!
"நொந்து நூலாகி" கிடக்கிறது!
சந்தேகமே வேண்டாம் காழ்ப்புணர்ச்சி அரசியல்தான் தமிழகத்தில் உச்சத்தில் இருக்கிறது!
அது இன்று நேற்றல்ல கால காலமாக திமுக அதிமுக நடத்தும் லாவணி அரசியல் இது! இதனால் பாதிப்பு தமிழக மக்களும், அவர் தம் அறிவு பசியும் தேடலும்தான்!
நூலகம் எல்லாம் இன்று தமிழகத்தில் "நொந்து நூலாகி" கிடக்கிறது! ஆனால் டாஸ்மாக் கடை மட்டும் டாப் பில் போய்க்கொண்டிருக்கிறது!
இன்று 16.7.15 PTTV நேர்பட பேசுவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
மனதுக்கு இதமே!
இன்று 17.7.15., PTTV நேர்பட பேசு நிகழ்ச்சி பற்றிய...

திமுக அப்பாவு அதை ஆதரித்தும், கலைஞர் குடும்பம் மட்டுமல்ல, தோழர் சங்கரய்யா குடும்பம், மூதறிஞர் ராஜாஜி குடும்பம் மட்டுமல்ல... தமிழகமே "ஜாதி மறுப்பு" (கலப்பு திருமணம் என்று விவாதத்தில் வார்த்தைகள் விழுந்ததுதான் கொஞ்சம் நெருடல்!) குடும்பங்களாக மாற்ற வேண்டும்; அல்லது மலர வேண்டும் என விவாதம் சென்றது மனதுக்கு இதமே!
அதுவும் நம் கட்சி தீர்மாணம் விவாதப் பொருளாக்கிய நெறியாளர் ஜென்ராமுக்கு நன்றி!
சைத்தான் வேதம் ஓதுகிறது!
தீண்டாமையின் ஊற்றுக்கண்ணே நீங்கத்தான்..! ஆம்..! மோடியார் ஆர்எஸ்எஸ் என்கிற இந்துமத வெறி ஏற்றும் அமைப்பின் முழுநேர ஊழியர்..! இவர் போய் அரசியலில் தீண்டாமை வேண்டாம் என்று! சைத்தான் வேதம் ஓதுவது என்பது இதுதானோ..?
இந்த ஆட்சியின் லட்'சனம்!'
பாருங்க இந்த நாட்டுல எதுக்கெல்லாம் போராட வேண்டியிருக்கு..! ஏன்டா... பொணத்த எரிச்சி தர சாம்பலக்கூடவா ஃப்ராடு..! அட... ஃப்ராடு பசங்கள..! இதுதான் இந்த ஆட்சியின் லட்'சனம்!'
இதுதான் இன்றைய பாமக!
தோழரே வணக்கம்
இன்று விவாதம் அமைதியாக அர்த்தமுள்ள தாக இருந்தது!
அதுவும் விவசாயி வாழ்நிலை, அதன் இழிநிலை குறித்த விவாதமும், பாமகவின் பகல் கனவை பற்றிய விவாதமும் அவசியமானதாக இருந்தது! நன்று!
என்ன... புறம்போக்கு என்ற பொதுவுடமை கட்சிகளும் இருக்கு என்று (விமர்சித்தோ, ஆதரித்தோ) வருவதும் "அவர்களும் இருக்கிறார்கள்" என்பதை கோடான கோடி மக்களுக்கு போகுமல்லவா?
பாமகவுக்கும் தெரியும் அவர்களின் லெவல்; ஆனால் அமைச்சராக இருந்தபோது அடித்த "மூட்டை" முடைநாற்றம் எடுக்குமுன் 'இப்படி' ஊடங்களில், மக்களிடங்களில் "பேச" வைப்பதன் 'சித்து' வேலைதான் இது!
மயிரை கட்டி இழுப்போம்; வந்தால் மலை; போனால் மயிர்! இதுதான் இன்றைய பாமக! இது பேரத்திற்கும் என பேச்சும் இருக்கிறது!
இன்று காலை பொழுது கூச்சலின்றி போனது நன்று! மகிழ்ச்சி! 19.7.15., PTTV.
இருட்டை வென்றதாக இருந்தது!
இலாவி யின்...
இருட்டைத் தின்றவர்கள்
சிறுகதை அறிமுகம்-19.07.2015 சேலம்.
கூட்டம் குறைந்திருந்தாலும், குறையின்றி குதூகலத்துடன் அறிமுகம் செய்த முனைவர்
த.திலீப்குமார் துணைத்தலைவர், மொழித்துறைத்தலைவர், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி கோவை...
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஓய்வு) கோ.ராமகிருஷ்ணன் தலைமையில், தாரைப்பிதா, மதுரபாரதி, நிறைமதி, சேக்அப்துல்லா, லவ் ஓ நாகராஜ் சிலாகிக்க...
எழுத்தாளர் இல.வின்சென்ட் ஏற்புரை நிகழ்த்த, "இருட்டைத் தின்றவர்கள்" நூல் அறிமுக நிகழ்வு இருட்டை வென்றவர்களாக இருந்தார்கள்!
எல்லாம் கண்கொள்ளா காட்சி..!
இன்று 19.07.2015 புதிய தலைமுறை "ரௌத்ரம் பழகு" நிகழ்ச்சி யை தற்செயலாக இரவு 08.30 மணிக்கு பார்க்க நேர்ந்தது!
கள்ளக்குறிச்சி மற்றும் அரக்கோணம் பகுதியில் "பஞ்சமி மீட்பு போர்" களத்தை மிக உணர்வுபூர்வமாக பதிவு "பார் அதிரும்" போராக காட்டியதற்கு ஆயிரமாயிரம் நன்றிகள் உரித்தாக்குவோம்!
பாரதி அண்ணா முதல் லதா வரையிலான தோழர்களின் பதிவு மற்றும் பஞ்சமி நிலச் சொந்தக்காரர்களின் பதிவு, அதிலும் பெண்கள் மீது தான் பட்டா தரவேண்டும் என்ற பதிவு...
ஒரு இளம் பெண்ணின் விவசாயம் செய்ய வேண்டமென்ற "வாழ்நாள் ஆசை" நிறைவேற போகுகிறதென்ற கனவைக் கண்களில் தேக்கி வைத்து, மடைத்திறந்த வெள்ளமாக கரைபுரண்டு ஓடியது...
ஓடோடி சென்று செங்கொடியை நட்டது... நட்டிருந்த குட்டுக் கல்லை எட்டி உதைத்தது... அண்டா போட்டு சமைத்து உண்டது...
தனது உருங்கி போன முகத்தில் "வாட்டம் நீங்கி வளம்" காண போகிறோமென்ற ஆனந்தத்தில் அந்த முதியவர்களின் முக மலர்ச்சி... எல்லாம் கண்கொள்ளா காட்சி..!
அய்யா..! புதிய தலைமுறை காட்சி ஊடகமே...! மீண்டும் உமக்கொரு நன்றி!
"உயிரைக் குடிக்கும் "விஷ அட்டைகள்!"
இந்த ஆய்வு அறிக்கை சரியானதா என்று தெரியவில்லை;
அதாவது ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் ஒரு விவசாயி தற்கொலை (ஆண், பெண்) என்பதுதான் சரியான புள்ளி விபரமாக இருக்க வேண்டும்.
அப்படி பார்த்தால் 365 நாட்களுக்கு ஒரு நாளுக்கு 48 வீதம் 17520 விவசாயிகள் தற்கொலைக்கு ஆளாகி வருகிறார்கள் என்பதே சரியான புள்ளி விபரம்.
விவசாயிகள் நலன் காப்பதில் பாஜகவும், காங்கிரஸ்சும்... காமராஜர் மொழியில் சொன்னால் "ஒரே குட்டையில் ஊறிய இரு மட்டைகள்" மட்டுமல்ல, விவசாயிகளின் உயிரைக் குடிக்கும் "விஷ அட்டைகள்!"
மதுவை ஆதரிப்பதாக அர்த்தமல்ல!
இன்று 20.7.15 PTTV மக்கள் மேடைக்கு!
மதுவிலக்கு ஒரு பிரச்சனைதான்! ஆனால் அது மட்டுமே பிரச்சனை அல்ல! மதுவிலக்கு பிரச்சனையில் இவ்வளவு வரிந்துக் கட்டும் பாமக உள்ளிட்ட கட்சிகள்... லஞ்ச-ஊழல், விலைவாசி, சட்டம்-ஒழுங்கு, அன்னிய இந்திய முதலாளிகளுக்கு ஆதரவு, கவுர கொலைகள், தீண்டாமை போன்ற கொள்கை சார்ந்த பிரச்சனையில் தூங்கி வழிகிறார்களே...ஏன்?
ஏனென்றால், இதில் எல்லாம் இவர்களுக்கு இடதுசாரி கட்சிகளை தவிர ஒரே கொள்கைதான்! முதலில் பாமக புதுச்சேரியில் ஆட்சியை பிடித்து நடத்திக் காட்டட்டும்! இப்படி சொல்வதனால் மதுவை ஆதரிப்பதாக அர்த்தமல்ல!
நத்தம் விஸ்வநாதன் அதிமுக கட்சிக்கும், சொத்துகுவிப்பு வழக்கு தவிர மற்றவற்றில் மக்கள் கவனம் மாறினால் நல்லதுதானே! அதானியிடம் ரூ7.01 இங்கும், வேற்று மாநிலத்தில் ரூ 5, 6 என மின்சாரம் விற்கப்படுகிறதே ஏன் என்றால்... அதற்கு பதில்லை! மதுவுக்கு மட்டும் வக்காலத்து போடுவதன் முடிச்சு இப்பொழுது புரிகிறதா?
No comments:
Post a Comment