Saturday, 25 July 2015

புரிதலியின்மை என்பதே சரி!

புரிதலியின்மை என்பதே சரி! அதற்காக அறிவின்மை என்பது எப்படி சரியாகும்? அதாவது குடும்பத்தாரையே கடவுள் மறுப்புக்கு கொண்டு வர முடியாதவர்கள் எப்படி ஊரைக் கொண்டு வர முடியும் என்கிற விமர்சனத்தை எப்படி புறம் தள்ள முடியும்?  

குடும்ப சனநாயகம், திணித்தல் கூடாது என்றெல்லாம் பேசினாலும், மேற்படி விமர்சனத்தில் உள்ள அதாவது, "கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானத்தைப் பிளந்து வைகுண்டம் காட்டப் போரானாம்" என்கிற மாதிரி அல்லவா இருக்கிறது? எனக்கும் இந்த சிக்கல் இருக்கிறது. 

நான் எஸ்எஸ்எல்சி படிக்கும் வரை, பரிச்சை எழுதும்போது மட்டும் கடவுளை கும்பிடுபவனாக இருந்தேன்.  அதற்குமேல் ஐடிஐ மாதிரி 'ட்ரேடு அப்ரண்டீஸ்'  மூன்று வருடம்! இதிலே பரிட்சை இல்லை. அதனாலோ என்னவோ கடவுளை கும்பிடும் எண்ணற்ற அருகியது! அதன்பின் பொதுடைமை புத்தகங்கள் என்ன கடவுள் மறுப்பாளனாக மாற்றிற்று! 

திருமணத்தை சற்றே முற்போக்காக (ஆடி 13 மாலை 5 மணி, சிபிஐஎம் வட்ட
மாநாட்டின் கடைசி நிகழ்ச்சி, தாலி கட்டுவது என்ற ஒன்றைத் தவிர, அந்த தாலியிலும்கூட சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னம் பொறிக்கப்பட்டு இருக்கும், வேறெந்த சடங்கு இல்லாமல்) செய்ய இசைவு தந்த என் துணைவியாரை இன்றுவரை, என் குடும்ப உறுப்பினர்களை (ஏறக்குறைய 30 வருடங்களாக) கடவுள் மறுப்பாளராக மாற்ற முடியலையே!

ஆனால் பொதுவுடைமை கருத்துக்களை ஏற்கிறார்கள்; அது இம்மண்ணில் கோலோச்சணும் என்கிறார்கள்! என்ன வினோதம் இது! 

என் குடும்பம் மட்டுமல்ல, இப்படி பல்லாயிரவர் அவர்தம் குடும்பங்கள் இருக்கவே செய்கிறார்கள்! இதுதான் இந்திய நிலப்பிரபுத்துவ-முதலாளித்துவ-சனாதன-சாதிய வாதத்தின் கட்டுமானமும் பிடிமானமும்! 

ஆகவே "கணக்கு" நேர் செய்ய வேண்டியது இந்த கட்டுமானத்தையும், பிடிமானத்தையும்தான்! எப்படி வாதிட்டாலும் இந்த பணிக்கு முதல் கைக்கொடுக்கக் கூடியவர்களாக மிக அருகாமையில் இருப்பவர்கள் குடும்பம் அல்லவா?

ஒரு முகநூல் நண்பர் ஒருவருக்கு இன்று தந்த பதில் பதிவு..! (26.07.2015). குடும்ப உறுப்பினர்களை கடவுள் மறுப்பளராக இருக்க வேண்டும் என்பது அறிவின்மையும், புரிதல் இன்மையும் என்பதே அந்த நண்பரின் அழுத்தமான பதிவு. 

இதற்கு அந்த நண்பரின் பதிலில், "...இன்னும் நிறைய படிக்க வேண்டும்; சிந்திக்க வேண்டும்" என்றார். 

அதற்கு நான் 'நன்றி' என்று பதிவு செய்துவிட்டு, "அதற்கான புத்தங்களையும் சிபாரிசு செய்திட" கோரியுள்ளேன். 

வாய்ப்பிருந்தால் இதற்கு தாங்களும் உதவிடலாமே! நன்றி!

No comments:

Post a Comment