ஜாதி வன்மக் கொலைக்கு..!
வெஞ்சாமரம் வீசும் இந்துத்துவா..!
சாதிய வன்கொடுமை தொடர வலுவற்ற சட்டங்கள் மட்டும் அல்ல; விருப்ப
வெறுப்போடு அதன் அமலாக்கம் தொடருவதும்தான்! அதோடு ஜாதிய வர்ணங்களை தூக்கிப் பிடிக்கும் "மநு"(அ)தர்மமும் "மநு"க்கு வக்காலத்து வாங்கும் நிலபிரபுத்துவ தத்துவமும் ஒரு காரணம்!
இவை எல்லாம் சேர்ந்து தான் தலித் மக்களுக்கு எதிரான ஜாதி வெறிப் பூதத்தைக் கிளப்பி விடுகிறது! இதற்கு வெஞ்சாமரம் வீசுகிறது இந்துத்துவா!
(ஜாதி வன்மக் கொலைக்கு காரணம் ஜாதி வெறியா? வலுவற்ற சட்டங்களா? என்ற PTTV நேர்பட பேசு (4.7.15) விவாதத்திற்கு அனுப்பிய கருத்து)
(இந்த நிகழ்ச்சியை பார்த்தப் பின் PTTV க்கு அனுப்பியது..!)
அப்பா; சாமி! உடல் அதிர்கிறது!
தோழரே வணக்கம். கொங்கு மக்கள் கட்சி கிருஷ்ணசாமி ஆரம்பத்தில் செந்திலுக்கும், கோகுல்ராஜ்கும் நேர்ந்த கதியை காட்டுமிராண்டித்தனம் என்று கூறிவிட்டு, அப்படியே பல்டி அடித்து, அவர் காட்டுமிராண்டித்தனமாக பேச ஆரம்பித்து விட்டார்!
ஆக ஆதிக்க ஜாதி அணித்திரட்டல், மைக்ரோ
லெவலில் அவர்களின் திட்டமிடல் இருக்கிறதை பார்க்க முடிகிறது! அவரவர் ஜாதியில், அவரவர் காதலிக்க வேண்டியதுதானே என்று எவ்வளவு ஜாதி வெறியிருந்தால், இப்படி கோடான கோடி மக்கள் பார்க்கும் காட்சி ஊடகத்தில் சொல்லுவார்? அப்பா சாமி உடல் அதிர்கிறது கிருஷ்ணசாமியின் வெறி பேச்சு கேட்டு!
இவரின் இந்த பேச்சே போதும் இவரை வன்கொடுமை சட்டத்தில் இவர் மீது நடவடிக்கை எடுக்க!
இதற்கெல்லாம் அன்றும், இன்றும் பிதாமகன் ராம்தாஸ்! வாழப்பாடியில் இவர்களது திருவிளையாடல் தற்போது காதல் ஜோடிகளை வைத்து நடத்திக் கொண்டுத்தானிருக்கிறார்கள். நீங்கள் வேறு (நெறியாளர் குணா) ராமதாஸ் பொதுவான பிரச்சனை மீது அறிக்கை விட்டு வருகிறார் என்று சர்ட்டிபிகேட் வேறு கொடுக்கிறீர்!
சிவகாமி IAS., சுபவீ., வாதமே அர்த்த மிக்கதாக, ஆழமிக்கதாக இருந்தது! "ஆளும் வர்க்கத்திற்கு உங்கள் குமுறல் கேட்கட்டும்!" என்ற தங்கள் வார்த்தை விண்ணை முட்டியது! சபாஷ்! (செந்தில் ஊர் பேர் தரமுடியுமா? தொடர்புக்கு வழி உண்டா?)
இன்று PTTV (5.7.15) புதுப்பது அர்த்தங்கள் நிகழ்ச்சியை ஒட்டி
PTTV க்கு அனுப்பியது..!
மல்லுக்கட்டும் மார்க்சிஸ்ட் கட்சி!
தோழரே வணக்கம்! இன்றைய புபுஅ நிகழ்ச்சியில் தங்களின் உடல் நிலையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் (இடது கை செயல் பாட்டில்) பார்த்தேன்! மகிழ்ச்சி!
'மாற்று'க்கான முயற்சியில் மார்க்சிஸ்ட் கட்சி மல்லுக்கட்டிக் கொண்டுதான் இருக்கிறது! தாங்கள் சொல்லுவது போல் எதாவது ஒன்று குறுக்கே வந்து 'கட்டை'யை போட்டு விடுகிறது இடது-தலித்-பெரியாரிய வாதிகளும், ஜனநாயக வாதிகளும் (திமுக அதிமுக தவிர) தமிழகத்தில் ஒன்றுபட்டு விடாமல் இருக்க!
இந்த முறை அது முடியும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது ஆர்கேநகர் தேர்தல் முடிவுகள்! அதை தான் தோழர்கள் பாக்கியமும், அய்யநாதன் அய்யா அவர்களும் பகிர்ந்தார்கள்! நன்று! நேற்று விழுப்புரம் செந்தில் நிலையை பார்த்து குலை நடுங்கிவிட்டது! 'நல்லவனை போல் இருப்பானாம் பரம சன்டாளன்' (இந்த வார்த்தையை பயன்படுத்த மன்னிக்க!) என்பது போல் கொமகட்சி கிருஷ்ணசாமி நேற்று ஜாதிவெறி கக்கி சென்றார்!
No comments:
Post a Comment