Friday, 3 July 2015

[7/2/2015, 07:27] Tharaipitha: 

அய்யா, சாமி..! செம கேடிய்யா... மோடி..!

ஒரு பக்கம் டிஜிட்டல்! இதில் 18 லட்சம் பேருக்கு வேலையாம்!?  இதற்கு 4.5
லட்சம் கோடி முதலீடாம்!  முதலீடு செய்பவர்கள் யார் தெரியுமா? அதானி, அம்பானி வகையறா..! போதுமா? யாரு சுருட்ட போறாங்கன்னு! அரசாங்கம் 'புரோக்கர்' வேலை செய்து, 'புரோக்கர் கமிசன்' பெற்றுக் கொண்டு இருப்பதே!

இன்னொரு பக்கம் இரண்டாம் பசுமை புரட்சியாம். இதன்மூலம் விவசாயிகளிடம் இருக்கும் நிலங்களை பிடுங்கி, அவர்களை ஓட்டாண்டியாக்கி, அவர்களின் நிலத்தை, இந்த 'அதானி, அம்பானி வகையறா'க்களுக்கு கொடுத்து,  தன் நிலத்தில் கண்ணியமாக வாழ்ந்து, அரைகுறை வயிரையாவது கழுவி வந்த விவசாயிகளை, அவர்களிடம் கையேந்தி விவசாயத்தொழிலாளியாக பிச்சை எடுக்க வைக்க போறாராம் மோடி!

அய்யா, சாமி..! செம கேடிய்யா... மோடி..! இந்த கேடிக்கு மகுடி ஊதுவதே இந்த 'லேடி'யின் பணியோ!



[7/2/2015, 08:16] Tharaipitha: 

வயிற்றோற்றத்திற்குக் காரணம்!

இன்று 2.7.15 தினமணி ஜெயலலிதா மீதான விசுவாசத்தை மிக அருமையாக 'தலையங்கம்' எழுதி 'தலைவணங்கி' உள்ளது!

இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை தான்! என்றாலும் அதற்காக எடுத்து கொண்ட ஆயுதம் தான் அயோக்கியத்தனமானது! ஆம்! ஆர்கேநகரில் போட்டி யிட்டது, "இடதுசாரிகள் செய்த தவறு" என்று நீட்டி முழங்கி இருப்பதுதான்!

எல்லா கட்சிகளும் ஒதுங்கிவிட்டப்பின் இவர்கள் மட்டும் ஏன் போட்டி யிடனும்?  இவர்கள் ஜனநாயகத்தை காக்கிறேன் என்று வலு வில்லாமல் குதித்து விட்டார்களாம்! அப்புறம் சம்மந்தம்  இல்லாமல் ஒரு விஷசத்தை கக்குகிறது... 'சங்க உறுப்பினர்கள் சந்தா தான் தருவார்களாம்; வாக்கு தர மாட்டார்களாம்! இப்பொழுது மற்ற கட்சிகளின் ஏளனத்திற்கும், கேலிக்கும் ஆளாகி விட்டதாம்; அது துரதிஷ்டமாம்!

என்னா கவலை! என்னா அக்கரை! தினமணி தலையங்கம் எழுதியவரு எப்பொழுது இடதுசாரி ஆனாரு? வாங்கிய வாக்கு 9710 (இதகூட சரியா போடல) தான் இவர்களின் (தினமணி உள்ளிட்டு சில எதிர்கட்சிகளுக்கு) வயிற் றெரிச்சலுக்குக் காரணம்! ஒரு 500 ரோ, 1000 மோ வாங்குவார்கள் என்றிருந்தனர்! டிரப்பிக்கையோ, நேட்டாவையோ "முந்த" மாட்டார்கள் என்று மனப்பால் குடித்துஃ கொண்டிருந்திருப்பார்கள்! அதிலே மண்ணைப் போட்டு விட்டார்கள் ஆர்கேநகர் தொகுதி உழைப்பாளிகள்! இதுதான் இன்றைய தினமணி வாயிலாக பலரின் வயிற்றோற்றத்திற்குக் காரணம்!

கம்யூனிஸ்ட்களுக்கு தொகுதிக்கு 10,000 ஓட்டுகள் இருக்கா? அதுவும் ஜெயலலிதாவை எதிர்த்தே இவ்வளவு ஓட்டு தனியாக நின்று வாங்கி விட்டார்களா? அடேய்சாமி! அப்ப இவங்கத்தான் சரியான எதிர்க்கட்சி என்று தமிழகம் முழுவதுமே பேச ஆரம்பித்து விட்டார்கள் மக்கள்!

இந்த பேச்சும், செய்தியும் பாஜக ஆதரவு தினமணி ஆசிரியர் திருவாளர் வைத்தியநாதரின் வயிற்றில் புளியை கரைத்திருக்க வேண்டும்; அதனால் இப்படி  அழுது புலம்பி உள்ளார்! நல்ல வைத்தியரைப் பார்க்கட்டும் வைதியநாதன்! 

எப்பொழுதெல்லாம் நீ.! தி(வெ)ட்டப் படுகிறாயோ அப்பொழுதெல்லாம் நீ.! வளர்கிறாய் என்று பொருள்! -மாவீரன் மாவோ!

No comments:

Post a Comment