Monday, 6 July 2015

 மனமிருந்தால் மார்க்கம் உண்டு

கேரளாவில் படிப்படியாக மதுவை குறைக்கும் போது தமிழ்நாட்டில் குறைக்க

முடியாத ஒன்றல்ல! மனமிருந்தால் மார்க்கம் உண்டு! 

ஆனால் இன்றைய ஆட்சியாளர்களுக்கும் (அஇஅதிமுக) முந்தைய ஆட்சியாளர்களுக்கும் (திமுக), நாளைய ஆட்சியாளர்களுக்கும் (இடதுசாரிகள் தவிர) அப்படிப்பட்ட எண்ணமே இல்லை என்பதுதான் தமிழகத்தின் சோகம்! 

இதை ஆதரிப்பவர்கள் "கள்ளச்சாராயம்" கரைபுரண்டோடும் என்கிறார்கள்! அத்தகைய வாதம் சட்டத்தின் ஆட்சியை கேள்விக்கு உள்ளாக்குவதைத் தவிர வேறென்ன? 

PTTV மக்கள் மேடையில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 6.7.15.



அரசியல் ஆதாயம் என்பதே முதல்பட்சம்

இரண்டும் தான்! என்றாலும் நீதியை நிலைநாட்டுவதென்பது இரண்டாம் பட்சம்தான்! அரசியல் ஆதாயம் என்பதே முதல்பட்சம்! 

வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கு அரசியல் வாதிகள் மீது போட்டால், உயர் அரசு அதிகாரிகள் மீது போட்டால், இடதுசாரிகளை தவிர வேறு யாரும் மிச்சம் இருக்க மாட்டார்கள்! 

இதுதான் இன்றைய முதலாளித்துவத்தின் பரிசு! வேறென்ன சொல்ல?

இன்று 6.7.15 PTTV நேர்பட பேசு வில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

No comments:

Post a Comment