கருமலைக்கூடல் காவல் நிலையத்தில்...
அப்பாவி இளைஞன் அடித்து
கொலை!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
கடும் கண்டனம்!
கொலை செய்த காவல் அதிகாரிகளை...
கொலை வழக்கில் கைது செய்!
சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் கருமலைக்கூடலில்
05.07.15 மாலை ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளது.
அது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கருமலைக்கூடலில் குடியிருக்கும் நடேசன் மகன்
கோகுல்கண்ணன் (21) என்பவரை நேற்று இரவு 12 மணி அளவில் அவரது வீட்டில் சென்று பிடித்து
வந்துள்ளனர். கூடவே கோகுல்கண்ணின் அப்பாவும், அம்மாவும் வந்துள்ளனர். அவர்களை
காவல் நிலையத்திற்கு வெளியே நிற்க சொல்லிவிட்டு, கோகுலகண்ணை உள்ளே அழைத்து
சென்றுள்ளனர்.
சிறிது நேரத்தில் கோகுல்கண்ணின் அழுகுரல் கேட்டு,
வெளியே இருந்த அவரது பெற்றோர் உள்ளே சென்று, “எங்கள் மகனை அடிக்காதீர்கள்; அவன்
அப்படி பட்டவன் அல்ல” என்று போலீஸ்காரர்கள் காலில் விழுந்த கெஞ்சி கதறி உள்ளனர்.
அவர்களை, “நீங்கள் இங்கே வரக்கூடாது; உங்க பையனை அடிக்கவில்லை; கத்துபவன்
வேறொருவன்” என்று சொல்லி விரட்டியுள்ளனர். ஆனாலும் விடிய விடிய காவல் நிலையத்தின்
வெளியே ரோட்டில் கோகுல்கண்ணன் பெற்றோர் கிடந்துள்ளனர்.
இன்று 6.7.15 காலை 7 மணி அளவில், “உன் மகன்
செத்துவிட்டான்; பாடி சேலம் ஆஸ்பத்திரியில் இருக்கிறது; போய் வாங்கிக்கொள்” என்று கோகுல்கண்ணன்
அப்பா நடேசனிடம் கூறி உள்ளனர். அதன்பின் தகவல் அறிந்ததும் மக்கள் கூடி மறியல்
உள்ளிட்டு செய்தார்கள். சேலம், ஈரோடு, தர்மபுரி ஆகிய மாவட்டங்களின் காவல்
கண்காணிப்பாளர்கள் அங்கே முகாம் இட்டு, கட்டபஞ்சாய்த்து செய்து வருவதாக தெரிகிறது.
விசாரனைக்காக பிடித்து வந்த கோகுல்கண்ணன் என்ற
21 வயது இளைஞனை கருமலைக்கூடல் காவல் நிலையத்தில்
அடித்தே கொலைச் செய்துள்ள கருமலைக்கூடல் காவல்துறையின் காட்டுமிராண்டித் தனத்தை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் கோகுல்கண்ணை அடித்தே கொலை செய்த
கொலைகாரக் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் ஆகியோரை கொலை வழக்கில் கைது செய்திட
வேண்டும் என்றும், கோகுல்கண்ணன் குடும்பத்தாருக்கு ரூ50 லட்சம் நட்ட ஈடு வழங்கிட
வேண்டும் என்றும், கொலையை மறைக்க கட்ட பஞ்சாய்த்தில்
ஈடுப்பட்டுள்ள காவல்துறை உயர் அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றும் தமிழ்நாடு அரசைக் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மாவட்டக்குழு கேட்டுக்
கொள்கிறது
-பி.தங்கவேலு, சேலம்
மாவட்டக்குழுச்செயலாளர்.
No comments:
Post a Comment