"குலை" நடுங்குகிறது!
ஒரே நாளில் 4 விவசாயிகள் தற்கொலை கர்னாடகாவில்! ஆம், ஒவ்வொரு 30
நிமிடங்களுக்கும் நமது பாரத தேசத்தில், ஒரு விவசாயி தற்கொலை செய்து, தனது விலைமதிப்பற்ற உயிரை, இனி கிடைக்கவே கிடைக்காத வாழ்க்கையை இழந்துக் கொண்டு இருக்கிறார்கள்!
இதுதான் இன்றைய பாஜக, முந்தைய காங்கிரஸ் ஆட்சியாளர்களின் கொள்கை! இதைத்தான் மாற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டு இடதுசாரி அமைப்புகள் போராடி வருகின்றன.
கடந்த ஜுன் 30ந்தேதிக்கூட தமிழகத்தில், மத்திய அரசின், 'நிலம் பறிப்பு சட்டம்
வேண்டாம்' என்று 5 கோடி கையெழுத்து க்களை மத்திய அரசுக்கு அனுப்பும் இயக்கம் நடந்தது.
ஒரு பக்கம் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தற்கொலை! மறுபக்கம் பன்னாட்டு கம்பெனிகளுக்காக நிலம் பறிப்பில் தீவிரம்! இந்த 'தீவிர சூழலை' சற்றே யோசித்து பாருங்கள்!? "குலை" நடுங்குகிறது!
தற்கொலையை விட, அடிமாட்டு விலைக்கு நிலத்தை விற்றுவிட்டு, "வாழ்ந்துவிட்டு சாவோம்" என்ற கையறுநிலைக்கு விவசாயிகளை தள்ளிவிடும் 'கொலையை'தானே ஆட்சியாளர்கள் செய்கிறார்கள்?
ஆனால் இதுவெல்லாம் ஊடகங்களுக்கு ஒரு'தேச பிரச்சனை'யாக தெரியவில்லை! 20-30% இருக்கும் நகரத்தாரின் ஹெல்மெட், மெட்ரோ தான் மிக பெரிய பிரச்சனை! விவாதங்கள், தலைப்பு செய்திகளாக தூள் பறக்கிறது!
திமுக அதிமுக வுக்கு வாக்கு வங்கிக்கு எது தேவையோ அது..! அதை
அலுங்காமல், குலுங்காமல் 'வடிவம்' அமைத்து கொடுப்பதே ஊடகங்களின் 'உத்தம' பணியோ? அதுசரி; ஊடகம் என்ன வானத்தில் இருந்தா குதித்தன?
அவைகளும், அவர்களின் கருவிதானே என்ற நீங்கள் கேட்பதும் என் காதில் விழாமலில்லை; விழவே செய்கிறது!
No comments:
Post a Comment