Saturday, 4 July 2015

[7/3/2015, 20:30] Tharaipitha: 

பாவம் உழைப்பாளிகள்!

சந்தேகமே வேண்டாம் ஒடுக்கும்; நிச்சயம் பலன் தராது! 


கோர்ட் ஒன்று சொல்லி விட்டால், அது சும்மா சாமி ஆடுகிறவர் கையில் வேப்பன் தலையை கொடுத்த மாதிரி! 

ஏற்கனவே "அங்க செய்யாத; இங்க செய்யாத" ன்னு அட்டகாசம் செய்து கொண்டிருக்கும் தமிழக காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் இது போதும்!  

மண் சோறு திண்ணுக்கிட்டு போராடினால், பிரச்சனை இல்லை; மனிதன் சோறு திங்க போராடினால்தான் பிரச்சனை! பாவம் உழைப்பாளிகள்!  

இன்று 3.7.15 PTTV மக்கள் மேடை யில் பதிவேற்றம் ஒருபகுதி செய்யப்பட்டுள்ளது. நன்றி!


[7/3/2015, 21:13] Tharaipitha: 

"அம்மா" தர்பார்..!
உண்மை! கருணாநிதி சொல்வது உண்மையே! துக்ளக் தர்பார் விட, அதைவிட
பெரிய தர்ப்பார் இது!

இனி துக்ளக் தர்பார் என்பதைவிட, "அம்மா" தர்பார் என்று இனி வரலாறு அழைக்கவே செய்யும்! அந்தளவுக்கு 'கோமாளி தர்பார்' தமிழகம் கண்டதே! 

மண்சோறு துவங்கி மண்டியிடுதல் தமிழ் மண்ணின் மானம் சுயமரியாதையோடு, மக்களின் வாழ்க்கை தரமும் 'இந்தம்மா' ஆட்சியில் காற்றில் பறந்து போனதுதான் கண்ட பலன்!

இதன் ஒருபகுதி இன்று 3.7.15 PTTV நேர்பட பேசு வில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நன்றி!

No comments:

Post a Comment