Wednesday, 15 July 2015

இடதுசாரிகள் கொள்கை தான் 
பொருத்தமான மாற்று..!

திராவிட கட்சிகளால் தமிழகம் பின்தங்கிவிட்டது என்று அன்புமணி
கூறுவதற்கு அருகதை அற்றவர்.  பாமக ஒருவேளை ஆட்சியில் இருந்து இருந்தால் இதைவிட மோசமாகத் தான் தமிழகம் இருக்கும்!

திராவிட கட்சிகளை விட அன்புமணி கட்சி கொள்கை எந்த வகையில் சிறந்தது என்று விளக்குவாரா?  இவரின் கொள்கை வலதுசாரி மட்டுமல்ல, திராவிட கட்சிகளை விட மோசமான சாதிய வெறி கொண்ட படு பிற்போக்கு கொள்கை! 

இடதுசாரிகள் கொள்கை தான் பொருத்தமான மாற்று; இதன் மூலம் தான் தமிழகத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு போக முடியும்?

10.07.2015 அன்று PTTV க்கு..!


கொள்கை இரண்டு கட்சிக்கும் ஒன்றே!

பேரறிவாளன் விடுதலையா? பிஜேபி அரசிலா? வாய்ப்பே இல்லை! ஒருவேளை கந்தகார்க்கு யாரை யாவது கடத்திக்கிட்டு போனால், அவர் இந்துத்துவா ஆதரவாளராக இருந்தால், விடுதலை கிடைக்கலாம்! 

அதுவும் இல்லாமல் வெளியுறவு கொள்கையில் காங்கிரஸ்சும், பாஜகவும் வேறு வேறு என்று யாரு சொன்னது?  குரல் தான் வித்தியாசமாக ஒலிக்கும்; கொள்கை இரண்டு கட்சிக்கும் ஒன்றே!

11.07.2015 அன்று PTTV க்கு..!



நியாயமான பேச்சு!
மும்மொழித் திட்டம் வந்தால் புரட்சி வெடிக்குதோ இல்லையோ, வைகோ
அவர்களின் பேச்சு நியாயமான பேச்சு!

இலங்கையில் தமிழர்களில் பகுதியில் சிங்களவர்களை குடியேற்றுவது போல் (அங்கு அந்த அரசு அதை திட்டமிட்டு செய்கிறது; இங்கு அப்படி  செய்வதாக சொல்ல முடியாது; என்றாலும்) இங்கு தமிழகத்தில் தடுக்கி விழுந்தால், இந்தி பேசும் வட மாநில மக்கள் மீது தான் விழ வேண்டும்! 

வந்தவரெல்லாம் இங்கு குடியேறிவிட்டால், புரட்சிக்கு (வைகோ சொல்லும் புரட்சி) வேலையே இருக்காது! அந்தளவுக்கு நீக்கமற பரவி கிடக்கிறார்கள் வட இந்திய சகோதரர்கள்! இதுதான் இன்றைய கள நிலைமை!

இதன் ஒருபகுதி 13.07.2015 அன்று PTTV பதிவேற்றம் செய்துள்ளது!



இளைஞர் சமுதாயத்தைக் காக்க..!
கண்துடைப்பே! கிரிக்கெட் டாஸ்மாக் விட மோசமான போதை! முதலில்
இந்தியாவில் தடைசெய்ய வேண்டிய, இளைஞர் களை பாதுக்காக்க வேண்டுமானால் இந்த விளையாட்டை மன்னிக்கவும் சூதாட்டத்தை தடைசெய்தாலே ஒழிய இளைஞர் சமுதாயத்தைக் காக்கவே முடியாது!

இதன் ஒருபகுதி 14.07.2015 அன்று PTTV பதிவேற்றம் செய்துள்ளது!



பணியும், தேடலும் சிறக்கட்டும்!

தோழரே  (குணா) இரவு வணக்கம். அரசியல், பொருளாதாரம், சித்தாந்தம், கலை, இலக்கியம், விளையாட்டு யாவற்றிலும் புகுந்து துல்லியமாக 'விளையாடுகிறீர்' மிகுந்த அடக்கத்துடன்! மகிழ்ச்சி! பெருமையாக இருக்கிறது! 

இது முகஸ்துதியல்ல; உண்மை; யதார்த்தில் இருந்தே கூறுகிறேன்! தங்கள் பணியும், தேடலும் சிறக்கட்டும்! நன்றி!

14.07.2015 நிகழ்ச்சியை ஒட்டி, என் தனிப்பட்ட இந்த கருத்துக்கு நெறியாளர் தோழர் குணா...  
[7/15/2015, 14:41] Kuna PTTV: உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் இதய நன்றி



டாஸ்மாக்-குண்டுவீச்சு-ரெய்டு
------******-------********--------*****------

இன்று 15.7.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில்...
மதுக்கூர் ராமலிங்கம், ஆடிட்டர் பிரபாகர் இவர்களுடன் ஜென்ராம்!

மதுக்கூருடன் டாஸ்மாக் கருத்தில் ஒத்துப்போன பிரபாகர் பெட்ரோல் குண்டு வீச்சில் பாதி அளவுக்கு ஒத்துபோனவர், டீஸ்டா செகல்வாட்  தொண்டு நிறுவனமு மீது சிபிஐ ரெய்டு விசியத்தில்  ஒத்து போகவில்லை! அதில் ஒன்றும் வியப்பில்லைதான்! 


என்றாலும், "ஆர்எஸ்எஸ் சும் தொண்டு நிறுவனம் தானே; அவர்களும் வெளிநாட்டில், பெரிய பெரிய நிறுவனங்களில் துட்டு வாங்குகிறார்களே; அங்கு இந்த ரெய்டு நடக்குமா?" என்ற மதுக்கூர் கேள்வி பிரபாகர் காதில் விழவே இல்லை! பாவம் பிரபாகர் சிபிஐ 'அப்படியெல்லாம்' ரெய்டுபோய்விட முடியாதாம் ஆதாரமில்லாமல்!


ஜென்ராம் அவர்களுக்கு... 
ஏற்க முடியாத கருத்து என்று எச். ராஜா கருத்தை மயில் இறகுவில் தடவி
கொடுக்க முடியாது! மோடியார் ஆட்சிக்கு வந்தப்பின் பாஜக பரிவாரம் உள்ளிட்டு பெரும்பான்மை மத-ஜாதி களைச் சார்ந்தவர்களின் பேச்சு "ஆத்திரம் மூட்டும்" வகையில் தான் உள்ளது என்பதற்கு பெருமாள் முருகனின் துறவரமும், தண்டவாள மரணங்களுமே மிக சமீபத்திய சாட்சிகள் அல்லவா? 

ஆக ஆத்திர மூட்டும் பேச்சு இது இல்லை என்பதற்கு அடையாளம்... குறிப்பிட்ட பேச்சு மக்கள் ஒற்றுமையை  குலைக்காமல் இருக்க வேண்டும் அல்லவா? அதையா எச்.ராசா வகையறாக்கள் செய்து வருகிறார்கள்? இல்லையே!

No comments:

Post a Comment