மது உண்ட மிருகமாக மாறாதீர்! மாற்றாதீர்!
இதற்கு ஒரே முடிவுதான்..! ஊரை காலிப் பண்ணிக்கிட்டு, அமெரிக்காவுக்கு குடியேறிட வேண்டியதுதான்! இல்லையென்றால், சந்திர மண்டலத்திற்கோ சூரி மண்டலத்திற்கோ போய்விட வேண்டியதுதான்! அதுபோகட்டும்..!
"மநு" என்ற 'நீதி' உம்மை எந்த இடத்தில் வைத்திருக்கிறது தெரியுமா?
சூத்திரர்கள் 'இடம்' தந்துள்ளது; அதாவது காலில் பிறந்தவர்களே தாங்கள்! உங்களுக்குகே மேல் சத்தியர், வைசியர், பிராமணர் என 3 ஆண்டைகள் உள்ளனர்! இதை ஒழிக்க வழியை பாரும்!
அவாள் வீட்டில் கொட்டுமேளம் கொட்டிக் கொண்டுபோய் 'சம்மந்தம்' பேசி விடுவீரா? ஏன் வீணாக கதைக்கிறீர்!
ஏறுகிற விலைவாசியும், இறங்குகிற வாழ்க்கை தரமும் ஜாதி, மதம் பார்த்தா நடக்கிறது! அது அரசுகளின் கொள்கை! அதுவும் இன்றைய மோடி, லேடி அரசுகள் செய்யும் 'கேடி'த்தனத்தால் நாடு, பன்னாட்டு, இந்நாட்டு முதலாளிகளின் அடிமைகளாக நம்மை ஆக்கி வருகின்றனர்!
அவர்களிடத்தில் ஜாதி, மத பேதம் இல்லை! ஆம் இந்துத்துவா (இந்து மதம் வெறியூட்டல்) இங்கே மத்திய மாநில ஆட்சியாளர்கள் செய்தாலும், அங்கே இந்து மதம் அல்லாத உலக முதலாளிகளுடன் கொஞ்சி குலாவி கொண்டு, உன்னையும், என்னையும் (நம்மை கேட்காமலே) விற்றுக் கொண்டு இருக்கிறார்கள்!
இதை எதிர்த்து போராடுவதை விட்டுவிட்டு, மது உண்ட மிருகமாக மாறாதீர்! மாற்றாதீர்!
(கொங்கு அமைப்பு இளைஞர் ஒருவரின் முகநூல் ஜாதி வெறி பதிவுக்கு எதிர்வினை..!)
No comments:
Post a Comment