Saturday, 13 June 2015

 "3 அறிவு சுரபிகள் அலசல்...!"
இன்று 14.6.15 புதிய தலைமுறையில் 3 அறிவு சுரபிகள் அலசல்... அருணன், சுபவீ ., ஜென்ராம்... உள்ளம் ரெண்டு ஒன்று; உருவம் மட்டும் வேறு...! என்பது போல் உரையாடல் சென்றது நன்றாக இருந்தது; அது இதமாகவும் சென்றது!

ஆர்எஸ்எஸ் தடை குறித்த கட்டுரையில் இணைந்த கைகள் ஆர்கேநகர் தொகுதியில் லேசான கடி... ஆம் பூனை தன் குட்டியை கவ்வுவதுபோல் அருணன் சுபவீ., க்குள் ஏற்பட்டது.

ஜென்ராமும் கூட திமுக அதிமுக வுக்கு மாற்றாக கம்யூனிஸ்ட்கள் இருக்க வேண்டும் என்பது போல் பல சமயங்களில் தர்க்கம் செய்ததைப் பார்த்திருக்கிறேன்; ஆனால் இன்று அனைத்து கட்சிகளின் குறிப்பாக திமுக ஆதரவையும் கேட்கலாமே; அதனால் என்ன பாதிப்பு? இந்த இறுக்கம் தேவையா? என்பது போன்ற அர்த்தம் தொணிக்கும் கருத்தோட்டத்தைக் காண முடிந்தது அவரிடம் இன்று!

ஆனாலும் தோழர் அருணனின் ஆணித்தரமானவாதம் அருமை!

சுபவீ., கூட தளி ராமசந்திரனை சுட்டியதன் மூலம் என்ன சொல்ல வந்தார்... வருகிறார் என்பது புதிராக இருந்தது; 'ஆணைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம்' என்கிறாரோ? 2ஜி அலைக் கற்றையும் இன்னும் பல வழக்குகளும்... ராமசந்திரன் மீதானதும் ஒன்றா? என்று நன்றாக மறுத்தார் அருணன்! சபாஷ்!

இறுதியாக சுபவீ.,  "நான் தவறாக சொல்ல வில்லை; எனது ஆதங்கம்... பதிவு செய்தேன்" என்றது (திமுகவிடம் ஆதரவு கோரல்) இதமான பதமே!

நேற்று அக்னி பரிட்சையில் வீணான நேரம்... இதில் சமன் செய்யப்பட்டு விட்டது!

No comments:

Post a Comment