எல்லாம் ஆர்எஸ்எஸ்மயம்!
தோழர் யெச்சூரி சொன்னது மிகச்சரியே!
தோழர் யெச்சூரி யோகா பற்றி சொன்ன கருத்துக்களுக்கு டிட்டரில் கண்டனமாம்! தமிழ் இந்து செய்தி வெளியிட்டு உள்ளது இன்று (23.5.15).
அதில் 3 மும்மூர்த்திகள் கருத்தை எடுத்து போட்டுள்ளது. கேட்டால் பத்திரிக்கை தர்மம்; நடுநிலை என பேசுவார்கள்! இதை வெளியிட்டதிலேயே, அதன் "உள்ளத்தில்" உள்ளதை அறிய முடிகிறது!
அடுத்து சீனாவோடு ஒரு முடிச்சு... இடதுசாரிகள் உருப்புடாதென ஒரு சாபம்... இதெல்லாம் இருக்கட்டும்! அவர் எழுப்பிய அர்த்தமுள்ள கேள்விக்கு டிடுட்டரில் அந்த கோமான்கள் எதாவது பதில் தந்துள்ளார்களா? தெரியவில்லை!
உயிருள்ள ஜீவராசிகள் எல்லாமே அதுஅதுகள் தானாகவே யோகா தன் போக்கில் தானே செய்து கொள்கிறது; அதாவது மீன் குஞ்சுக்கு நீச்சல் கத்துத்தர வேண்டாம்... என்பதே தோழர் எச்சூரியின் கருத்து!
இவ்வளவு தான்! எல்லாரும் தினசரி தங்கள் வாழ்வில் பார்க்கும், பழகும் நன்றி உள்ள ஒரு ஜீவனை குறிப்பிட்டு உள்ளார்! இதுக்கு எதுக்கு சீனா போனா ன்னுக்கிட்டு!
இந்தியாவையே உலுக்கி எடுத்துக்கிட்டு இருந்த, "நிலம் கைகப்படுத்தும் ஆள்தூக்கி சட்டம்" யோகா வால் தற்போது விட்டத்தில் தூக்கி போட்டாச்சி அல்லவா?
எல்லாவற்றையும் விட இதில் என்ன விஷேசம் ஒன்று இருக்கு தெரியுமா? அதாவது... மோடியின் சித்தாள்கள் இந்துத்வா பரப்புரையில்... மாடு வெட்டாதே; 5 பிள்ளை பெற்றுக்கோ, கீதையை ஏற்காதவர் கடல்போய் விழுந்திடு; சமஸ்கிரத்தை படி; மார்க்சியம், அம்பேத்காரியம், பெரிஆரியம படிக்காதே; ஆரியம் படி என்றெல்லாம் சின்ன சின்ன படம் காட்டி வந்தனர்!
மோடி என்று ஒரு பெரும் மோடிஆளர் இருப்பது தெரியாமல் இருந்தது; அவர்கள் எல்லாம் குண்டுச்சட்டியில் (இந்தியாவில்) தான் குதிரை ஒட்டிக்கொண்டு இருந்தனர்! பார்த்தார்... மோடியார் "நம்ம லெவலுக்கு அகிலம்உம் பேசும் இந்துத்துவா எது?" என்று உலக யோகாதினம் ஆர்எஸ்எஸ் தலைவர் ஹெட்கோல்வால்கர் இறந்த தினத்தை தேர்வு செய்து, தான்தான் நெம்பர்ஒன் என்பதை காட்டிக்கொண்டார்.
ஒரு கல்லில் ரெண்டு மாங்காய்! அரசின் மக்கள் விரோதப் போக்கை பின்னுக்கு தள்ளுவது! இந்துத்துவா வெறியை வாழைப்ழத்தில் ஊசி போடுவதுபோல் லோகம் முழுதும் முன்னுக்கு கொண்டு போவது! இதை தவிர யோகாவில் என்ன இருக்கிறது? இதிலே தான்தான "முதல்வன்" என்பதையும் காட்டி விட்டார் அல்லவா? எல்லாம் ஆர்எஸ்எஸ்மயம்!
இதைத்தான் யெச்சூரி அவர்கள் "நாய் பொழைக்குமா? இந்த பொழைப்பு" என்று கூறி இருப்பாரோ என்று எனக்கு தோன்றுகிறது! எனக்கு தோன்றுவது தப்பாக கூட இருக்கலாம்! நீங்க என்னா நினைக்கிறீங்க? சொல்லுங்க! தோழர் யெச்சூரி சொன்னது மிகச்சரியே!
No comments:
Post a Comment